3 months 1 week ago
•ஒரு டவுட்! இலங்கையில் எப்போது எத்தனை மணிக்கு ஈஸ்டர் குண்டு வெடிக்கப்போகிறது என்பதை துல்லியமாக கண்டறிந்து கூறிய இந்திய புலனாய்வு அமைப்புகளால், தங்கள் சொந்த நாட்டில் எல்லை தாண்டி வந்து கொல்லப் போகின்றனர் என்பதை எப்படி கண்டறியாமல் போனது? தோழர் பாலன் தற்போது 26 பேர் கொல்லப்பட்டபோது இந்திய அரசுக்கு வரும் இந்தக் கோவம், 657 தமிழக மீனவர்கள் கொல்லப்படும்போது ஏன் வரவில்லை? தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா? அல்லது இந்துக்கள் இல்லையா? தோழர் பாலன்
3 months 1 week ago
SRH chose to field தொடக்கமே அபசகுணமாக இருக்கே.
3 months 1 week ago
அதுதான் புரியாத புதிர். என்னமோ போங்க. "பணம் வரும் என்றா பிணமும் வாய் திறக்கும்" என்று சும்மாவா சொன்னார்கள் (சும்மா பகிடி இது).
3 months 1 week ago
உலக கோப்பை போட்டியில் இந்தியா வெல்லும் என்று போட்டிருந்தாலும் விளையாடும் போது இந்திய தோல்வியை ரசிக்க மனம் துடிக்கும். இலங்கை அணியும் இப்படியே. அதுசரி தூக்கிறதுக்கு நான்கு பேர் தேவைதானே. மிகுதிப் பேர் நால்வரும் தூக்கப் போகிறீர்கள். உங்களில் ஒராள் இப்பவே எங்கள் ஆதரவாளர்களாகி விட்டார். கிளி பறந்தபடியால் இன்னுமொராளும் எங்கபக்கம் வரலாம்.
3 months 2 weeks ago
இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் கவலையளிக்கின்றது! -ஐ.நா ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதல் சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மிகவும் கவலையளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் இரு நாடுகளும் போர் பதற்றத்தை தனித்து, பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். https://athavannews.com/2025/1429484
3 months 2 weeks ago
இந்தியா, பாகிஸ்தான் இடையே ஆரம்பித்துள்ள, இந்த துப்பாக்கிச் சண்டை வளர்ந்து... விமான குண்டு வீச்சு வரை, விரிவடைய வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
3 months 2 weeks ago
25 APR, 2025 | 05:15 PM முல்லைத்தீவில் அமைச்சர் சந்திரசேகரனின் ஆதரவாளர்கள் மீன்பிடிதொழிலாளர் சங்கத்தின் தலைவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நேற்றைய தினம் வடமாகாணத்தில் கடந்த 15 வருடங்களாக வேருன்றியுள்ள வடமாகாணத்தை சாரத ஒரு அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகரன் தேர்தல் பிரச்சார வேலையில் ஈடுபடுவதற்கு முல்லைத்தீவிற்கு சென்றிருந்தார். முல்லைத்தீவிலே கேப்பாபிலவிற்கு சென்று கடற்தொழில் அமைச்சர் என்ற வகையிலே மீன்பிடி அமைச்சர் என்ற வகையிலே, அவர் அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளை வெளியில் கொண்டுவருவதற்கான முயற்சியை மேற்கொள்ள விரும்பினார். அவர் கேப்பாபிலவிற்கு சென்று நந்திக்கடலை அடைவதற்கான பாதையில் சென்றுகொண்டிருந்த ஒரு தருணத்திலே, அவர் அங்குள்ள மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மக்களை சந்தித்துள்ளார். அங்குள்ள மீனவர்கள் நந்திக்கடலில்தான் தொழிலில் ஈடுபடுபவர்கள், உங்களிற்கு தெரியும், நந்திக்கடலில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுகின்ற மக்கள் மிகவும் கஷ்டப்பட்ட ஒரு நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர் அங்கு சென்று அங்குள்ள மீன்பிடிசங்க தலைவரை சந்திக்க சென்று அவருடைய வீட்டிற்கு வெளியே நின்று அவரை கூப்பிட்டிருக்கின்றார். அப்போது அவர் செபஸ்தியாம்பிள்ளை சுகிர்ந்தன் வீட்டிற்கு வெளியே வந்து, அவருடைய ஏமாற்றத்தை, பொதுவாக இன்றைக்கு இருக்கக்கூடிய தங்களுடைய மக்களின் எதிர்பார்ப்புகள் முற்றுமுழுதாக கைவிடப்பட்டு, அவர்கள் அனாதைகளாக இருக்கின்ற சூழலிலே அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார். இதற்கு முதலும் டக்ளஸ், ராஜிதசேனரட்ண உட்பட பலர் வந்தார்கள், வந்து போவினம் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்திருக்கின்றார். எத்தனையோ தடவை நாங்கள் சொல்லியும் எதுவும் நடைபெறவில்லை, உங்களுடைய வருகையும் அந்த அடிப்படையில்தான் இருக்கும் என அவர் தெரிவித்திருக்கின்றார். எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று தன்னுடைய மனதிற்குள் இருக்கின்ற ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார். தொடர்ந்தும் அமைச்சர் சந்திரசேகரன் கதைத்துக்கொண்டிருக்கவே சுகிந்தன் நந்திக்கடலிற்கு சென்று நிலைமைகளை பார்ப்போம் அப்போதுதான் உங்களிற்கு விளங்கும் என தெரிவித்து அவர்களை நந்திக்கடலை நோக்கி கூட்டிச்செல்ல வெளிக்கிட்டிருக்கின்றார். அந்த பாதை மிகவும் மோசமான நிலையில் உள்ளது அதனைதான் அவர் அவர்களிற்கு சுட்டிக்காட்ட விரும்பினவர். வாகனம் செல்ல முடியாது இதனால்தான் சந்திரசேகரன் வாகனத்தை விட்டு இறங்கி, சென்று அவரை சந்திக்கவேண்டிய நிலைமை உருவானது. நாங்கள் தொழில் செய்வதற்கு ஒவ்வொரு நாளும் இந்த வீதிவழியாகத்தான் செல்லவேண்டும், இந்த வீதியை திருத்தி தருமாறு நாங்கள் எத்தனையோ முறை கேட்டிருக்கின்றோம். ஆனால் செய்து தரவில்லை என ஆதங்கப்பட்டிருக்கின்றார். இந்த நிலையில் இராமலிங்கம் சந்திரசேகரனின் கையாட்கள் அவரை தாக்கியுள்ளனர், மோசமாக தாக்கியுள்ளனர். அவர் இன்றும் அச்சமடைந்த நிலையில் காணப்படுகின்றார், பொலிஸாருக்கு தெரிவிப்பதோ இல்லையோ என்ற அச்சத்தில் இருக்கின்றார். நேற்று அவர்கள் நடந்துகொண்ட விதத்தினால் அவர் பயந்துபோயுள்ளார். நாங்கள் இது குறித்து அறிந்ததும் அவருடன் தொடர்புகொண்டு இந்த விடயங்களை உறுதிப்படுத்தியுள்ளோம். இதனை நீங்கள் வெளிக்கொண்டுவந்தே ஆகவேண்டும் என நாங்கள் அவருக்கு தெளிவாக தெரிவித்திருக்கின்றோம். ஏனென்றால் இதனை வெளியில் கொண்டுவருவதன் மூலம்தான் உங்களின் பாதுகாப்பை நீங்கள் உறுதிப்படுத்தலாம் என தெரிவித்தோம், எந்தளவிற்கு இது மக்களிடம் போய்சேருதோ எந்தளவிற்கு இது சர்வதேச சமூகத்திடம் போய்சேருகின்றதோ, எந்தளவிற்கு இது மனித உரிமைகளை ஆய்வு செய்கின்ற தரப்புகளிடம் போய்சேருகின்றதோ அந்தளவிற்கு பாதுகாப்பாகயிருக்குமே தவிர அமைதியாக இருந்தால் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம் என கருதவேண்டாம் என தெரிவித்தோம். https://www.virakesari.lk/article/212933
3 months 2 weeks ago
அமெரிக்காவுக்காகவும், பிரிட்டனுக்காகவும் கடந்த 30 ஆண்டுகளாக தீவிரவாதிகளுக்கு உதவுகிறோம் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் அதிர்ச்சி பதிலை கொடுத்துள்ளார். மேற்கு நாடுகளுக்காகவே பாகிஸ்தான் இந்த வேலையை செய்து வருவதாகவும், தீவிரவாதிகளுக்கு அளித்த செயல்தான் தற்போது பாகிஸ்தானையே மோசமான நிலைக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 22 ஆம் திகதி ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில், தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பைசாரன் பள்ளத்தாக்கில் செவ்வாய்க்கிழமை இயற்கை காட்சிகளை ரசித்தபடி இருந்த அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது, திடீரென அங்கு வந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். மேலும், ஆண்களை குறிவைத்து மட்டுமே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த பயங்கர சம்பவத்தில் மொத்தம் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தான், தற்போது உலக நாடுகளையே உலுக்கியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அதில், “நாங்கள் சுமார் 3 தசாப்தங்களாக அமெரிக்காவுக்கும், பிரிட்டன் உட்பட மேற்கு நாடுகளுக்கும் இந்த மோசமான வேலையைச் செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளார். “அது ஒரு தவறு. அதற்காக நாங்கள் துன்பப்பட்டோம். அதனால்தான் நீங்கள் இதை என்னிடம் சொல்கிறீர்கள்” எனத் தெரிவித்தார். https://thinakkural.lk/article/317317
3 months 2 weeks ago
இம்முறையாவது ஆபிரிக்க இனத்தவருக்கு பாப்பாண்டவர் பதவியை கொடுப்பதே முறை. நெடுகவும் வெள்ளைத் தோல் உடையவர்களே இப்பதவியில் இருப்பது அழகல்ல.
3 months 2 weeks ago
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 2,623 முறைப்பாடுகள் பதிவு! 25 APR, 2025 | 03:57 PM 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி) 2,623 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 13 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 2,421 முறைப்பாடுகளும் ஏனைய விடங்கள் தொடர்பில் 189 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/212924
3 months 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த 2013ஆம் ஆண்டு போப் பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டபோது கானாவைச் சேர்ந்த கார்டினல் பீட்டர் டர்க்சன் ஒரு முக்கியப் போட்டியாளராகக் கருதப்பட்டார். கட்டுரை தகவல் எழுதியவர், லெபோ டிசெகோ பதவி, சர்வதேச மத நிருபர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் கத்தோலிக்க திருச்சபையின் வளர்ச்சி மட்டுமே அடுத்த போப் எங்கிருந்து வருவார் என்பதைக் கணிக்கக்கூடிய ஒரே காரணி என்றால், அடுத்த போப் ஆப்பிரிக்கராக இருப்பார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது எனச் சொல்லலாம். ஆப்பிரிக்கா, உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் கத்தோலிக்க மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. 2022 மற்றும் 2023ஐ உள்ளடக்கிய இரண்டு ஆண்டு காலத்தில் இது 3.31% அதிகரித்துள்ளது. வாடிகனின் சமீபத்திய புள்ளிவிவரங்கள், உலகின் கத்தோலிக்கர்களில் 20% பேர் ஆப்பிரிக்க கண்டத்தில் வாழ்வதாகக் காட்டுகின்றன. இதற்கு நேர்மாறாக, ஐரோப்பா அதே காலகட்டத்தில் 0.2% என்ற மிகக் குறைந்த வளர்ச்சியைக் கண்டது. மேலும் 1910 மற்றும் 2010க்கு இடையில், கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 63%க்கும் அதிகமாகக் குறைந்துள்ளதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பியூ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஒரு காலத்தில் கிறிஸ்தவத்தின் மையப் பகுதியாகக் கருதப்பட்ட இந்தப் பகுதி, உலகின் மதச்சார்பற்ற நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. கத்தோலிக்க திருச்சபை இன்னும் லத்தீன் அமெரிக்காவில் செல்வாக்கு மிக்கதாக இருந்தாலும், அங்குள்ள பல நாடுகளில் இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவத்திற்கு எதிராகத் தனது வலிமையை அது இழந்து வருகிறது. கடந்த 2022இல், இந்தப் பிராந்தியத்தில் உள்ள 18 நாடுகளில் லத்தீனோபரோமெட்ரோ எனும் அமைப்பு நடத்திய ஆய்வில், கத்தோலிக்கர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை 2010இல் 70 சதவிகிதமாக இருந்தது. ஆனால், அதுவே 2020இல் 57% ஆகக் குறைந்துள்ளது கண்டறியப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆப்பிரிக்கா, உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் கத்தோலிக்க மக்கள்தொகையைக் கொண்டுள்ளது எனவே, அடுத்த போப்பை தேர்ந்தெடுக்க கார்டினல்கள் வாடிகனில் கூடும்போது, 'வேட்பாளர்' எங்கிருந்து வருகிறார் என்பதும் அடுத்த போப்பை தீர்மானிக்கும் அவர்களது முடிவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா? நைஜீரிய கத்தோலிக்கப் பாதிரியாரும் டீபால் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியருமான பாதிரியார் ஸ்டான் சூ இலோ அப்படித்தான் நினைக்கிறார். "ஒரு ஆப்பிரிக்க போப் இருப்பது சிறப்பாக இருக்குமென நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறுகிறார். திருச்சபையின் தலைமை, உலகளாவிய சபையின் அமைப்பைச் சிறப்பாகப் பிரதிபலிக்க வேண்டும் என்றும் அவர் வாதிடுகிறார். போப் பிரான்சிஸ் 2013இல் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, 9% ஆக இருந்த துணை-சஹாரா ஆப்பிரிக்க பகுதிகளைச் சேர்ந்த கார்டினல்களின் விகிதத்தை 2022இல் 12% ஆக உயர்த்தினார். இப்போது அந்த கார்டினல்களும் வாக்களிக்க உள்ளார்கள். "அதற்காக அவர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவருக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று அர்த்தமல்ல" என்கிறார் பாதிரியார் சூ இலோ. "கார்டினல்கள் மிகவும் பிரபலமான ஒருவரைத்தான் தேர்வு செய்வார்கள். அதாவது தேர்வு செய்யப்படும் நபர் ஏற்கெனவே செல்வாக்கு மிக்க நபராக இருப்பார்" என்று அவர் கூறுகிறார். "இன்று வாடிகனில், மூத்த ஆப்பிரிக்க மதகுருமார்களில் எவரும் எந்த முக்கியப் பதவியையும் வகிக்கவில்லை என்பதுதான் சவால். அது ஒரு முக்கிய சிக்கல். போப் பதவிக்கு வரக்கூடிய ஆப்பிரிக்க கார்டினல்களை பற்றி நீங்கள் சிந்தித்தால், இன்றைய சூழலில் உலகளாவிய கத்தோலிக்க மதத்தில் யார் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அப்படி யாரும் இல்லை என்பதே நிதர்சனம்" என்கிறார் பாதிரியார் சூ இலோ. போப் பிரான்சிஸ் மறைவு: புதிய போப் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்?22 ஏப்ரல் 2025 போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்; பிரதமர் மோதி கூறியதென்ன?21 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த 2023ஆம் ஆண்டு காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் தெற்கு சூடானுக்கு போப் பிரான்சிஸ் சென்றபோது, ஆயிரக்கணக்கானோர் அவரைப் பார்க்க வந்தனர். இந்த நிலை, 2013ஆம் ஆண்டு கானாவை சேர்ந்த கார்டினல் பீட்டர் டர்க்சன் போப் பதவிக்கு ஒரு வலுவான போட்டியாளராக இருந்ததற்கும், 2005ஆம் ஆண்டு நைஜீரிய கார்டினல் பிரான்சிஸ் அரின்ஸ், போப் பெனடிக்ட் XVI தேர்வு செய்யப்படுவதற்கு வழிவகுத்த மாநாட்டில் ஒரு சாத்தியமான வேட்பாளராக இருந்ததற்கும் நேர்மாறாக உள்ளது என்று பாதிரியார் சூ இலோ கூறுகிறார். "ஆப்பிரிக்கா தொடர்பான போப் பிரான்சிஸின் வெளிப்படையான மனப்பான்மையைக் கருத்தில் கொண்டால், ஆப்பிரிக்க கண்டத்திற்கும் கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது என்பது நம்மில் பலரை இன்னும் ஆச்சரியப்படுத்தும் ஒன்று" என்று பாதிரியார் சூ இலு கூறுகிறார். ஆப்பிரிக்காவில் இருந்து மூன்று போப்கள் ஆப்பிரிக்காவில் இருந்து இதுவரை மூன்று போப்கள் வந்திருந்தாலும்கூட, அதில் கடைசி போப் ஆணவடரான - போப் கெலாசியஸ் I - 1,500 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனவே இன்னொரு ஆப்பிரிக்க போப் வருவதற்கு இதுவே சரியான நேரம் என்று பலர் வாதிடுகின்றனர். ஆனால் சில ஆப்பிரிக்க கத்தோலிக்கர்கள், அடுத்த போப் எங்கிருந்து வரக்கூடும் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக நினைக்கிறார்கள். நோட்டர் டேம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் நைஜீரியாவில் பிறந்த கத்தோலிக்க பாதிரியாருமான பவுலினஸ் இகெச்சுக்வு ஒடோசோரும் அப்படித்தான் கருதுகிறார். "ஒருவர் ஆப்பிரிக்காவில் இருந்து வருவதால் அல்லது ஐரோப்பாவில் இருந்து வருவதால், அவர்தான் பிரதான வேட்பாளர் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை," என்று அவர் கூறுகிறார். "நீங்கள் எங்கிருந்து வந்தாலும், நீங்கள் தேர்வு செய்யப்பட்டவுடன், அனைவரின் பிரச்னைகளும் உங்கள் பிரச்னையாக மாறும். மக்கள் எங்கிருந்தாலும், அவர்கள் எத்தனை பேர் இருந்தாலும், எந்தச் சூழலில் இருந்தாலும், கிறிஸ்துவ சமூகத்தைக் கட்டிக்காப்பதே உங்களுக்கு இருக்கும் ஒரே கவலையாக இருக்கும்" என்கிறார். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், போப் தேவாலயத்தின் தலைமை இறையியலாளராக இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். போப் என்பவர் பாரம்பரியத்தை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும், அதைப் பயன்படுத்தி மக்களுக்கு வழிகாட்டக் கூடியவராகவும் இருக்க வேண்டும் என்று பவுலினஸ் நினைக்கிறார். பாகிஸ்தான் பல லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்றுவது ஏன்? தாலிபன் கூறுவது என்ன?22 ஏப்ரல் 2025 மோதி - ஜே.டி. வான்ஸ் சந்திப்பு - வரி விதிப்பு நடவடிக்கைகள் குறித்து பேசியது என்ன?21 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த 2023ஆம் ஆண்டு போப் பிரான்சிஸ் காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு பயணம் செய்தபோது அவர் நடத்திய திறந்தவெளி திருப்பலி கூட்டத்தில் 10 லட்சம் மக்கள் கலந்து கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த போப் ஆப்பிரிக்காவை சேர்ந்தவராக இருக்க வேண்டுமா என்று கேட்கப்படுவது விரக்தியை ஏற்படுத்துவதாக பாதிரியார் ஒடோசோர் கூறுகிறர். பன்மைத்துவத்தின் அடையாளமாக மட்டுமே ஒரு ஆப்பிரிக்க போப் பார்க்கப்படுவதை அவர் விரும்பவில்லை. இந்தப் பார்வை, "சரி, ஆப்பிரிக்க கத்தோலிக்கர்கள் எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறார்கள். எனவே நாம் அவர்களுக்கு ஏன் ஒரு போப்பை வழங்கக் கூடாது' என்று மக்கள் சொல்வது போல் இருக்கிறது" என்கிறார் அவர். அவரது பார்வையில், ஆப்பிரிக்காவில் உள்ள விசுவாசிகளைப் பாதிக்கும் விஷயங்களை வாடிகனில் அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் தீவிரமாக எடுத்துக் கொள்வதை உறுதி செய்ய இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும். "சில நேரங்களில், ஆப்பிரிக்கர்கள் முக்கியமற்றவர்கள் என்பது போல அல்லது அவர்களுடைய நம்பிக்கை ஏதோவொரு வகையில் தாழ்ந்ததாகவோ அல்லது போலியாகவோ பார்க்கப்படுவது போல மற்றும் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படக் கூடாது என்பது போன்ற ஒரு சூழல் நிலவுகிறதோ எனத் தோன்றுகிறது" என்று அவர் கூறுகிறார். "ஆப்பிரிக்கர்கள் தங்கள் பிரச்னைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் காதுகளுக்குச் செல்லவில்லை என்று உணரும்போது, அவர்கள் கேள்வி கேட்கத் தொடங்குவார்கள். சரி, ஒருவேளை நம்மில் இருந்து ஒருவர் அங்கு இருந்தால் மட்டுமே நமது குரல் ஒலிக்கும் என்ற எண்ணமும் தோன்றும்" என்கிறார் பாதிரியார் ஒடோசோர். வாடிகனில் இனவெறியா? ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து கார்டினல்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், அவர்களுக்கு திருச்சபையில் உண்மையான அதிகாரம் இல்லை என்று பாதிரியார் சூ இலோ கருதுகிறார். பாதிரியார் ஒடோசோரின் கருத்தும் அதுவே. "போப் பிரான்சிஸ் நியமிக்கும் கார்டினல்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை," என்று அவர் விளக்குகிறார். ஆனால், "நீங்கள் அவர்களை நியமிக்கும்போது, அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கிறீர்களா? நீங்கள் நியமிக்கும் இந்த மக்களுக்கு அதிகாரத்தைக் கொடுங்கள், வேலையில் அவர்களை நம்புங்கள், அதை அவர்கள் சுதந்திரமாகச் செய்யட்டும்" என்று அவர் கூறுகிறார். திருச்சபையின் தலைமை, அதன் உறுப்பினர்களை அதிகம் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் மேற்கொண்ட முயற்சிகளைத் தடுக்கக்கூடிய ஒரு பிரச்னையை, பாதிரியார் சூ இலோ மற்றும் பாதிரியார் ஒடோசோர் சுட்டிக்காட்டுகின்றனர். "திருச்சபையில் இனவெறி பற்றிய கேள்வி இன்னும் உள்ளது. நாம் ஒருபோதும் அதைப் பற்றிப் பேசியதில்லை" என்று பாதிரியார் ஒடோசோர் கூறுகிறார். "அது ஒருவரை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும், அவர் போப் அல்லது கத்தோலிக்க தேவாலயத்திற்கு எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும் சரி, அவர் என்ன செய்தாலும் சரி, அவர் ஒரு ஆப்பிரிக்க போப்பாக மட்டுமே பார்க்கப்படுவார்." "மீறப்படும் ஈஸ்டர் சண்டை நிறுத்தம்" - ரஷ்யாவின் தாக்குதல் தொடர்வதாக குற்றம் சாட்டும் யுக்ரேன்20 ஏப்ரல் 2025 அமெரிக்கா - சீனா வரிக்குவரி யுத்தத்தால் இந்தியாவுக்கு புதிய சவால்20 ஏப்ரல் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,திருச்சபையின் தலைமை, அதன் உறுப்பினர்களை அதிகம் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் நினைத்தார் அடுத்த போப்பை நியமிக்கும் கார்டினல்களில், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு கார்டினல்களை, 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் போப் பிரான்சிஸ் தேர்ந்தெடுத்திருந்தார். இது ஒரு புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைவிட சற்று குறைவு. அதாவது, யார் புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டாலும், ஏழைகள் மற்றும் உரிமை மறுக்கப்பட்டவர்களைச் சென்றடைவதில் போப் பிரான்சிஸ் காட்டும் முக்கியத்துவத்தை அவர்களும் பகிர்ந்து கொள்வதற்கான நல்ல வாய்ப்பு உள்ளது. இந்த அணுகுமுறையை 'ஏழைகளுக்கு முன்னுரிமை' என்று அழைக்கிறார் பாதிரியார் சூ இலோ. இது, 'அவர்களது குரல்களைக் கேட்கும் ஒரு தேவாலயம், மிகவும் முற்போக்கான தேவாலயம், மிகவும் எளிமையான தேவாலயம்' என்பதில் கவனம் செலுத்துகிறது. அடுத்ததாக திருச்சபையை வழிநடத்தப் போகும் எவரிடமும் அவர் காண விரும்பும் ஒன்று இதுதான். ஆச்சரியமான முடிவு ஆனால் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதைக் கணிப்பது மிகவும் கடினம். அதற்கு மற்றொரு முக்கியக் காரணி உள்ளது என்று பாதிரியார் சூ இலோ கூறுகிறார். "கடவுள், பரிசுத்த ஆவி, திருச்சபையின் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க உதவுகிறார் என்று கத்தோலிக்கர்கள் நம்புகிறார்கள்," என்று அவர் கூறுகிறார். அதாவது, 2013இல் போப் பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டதைப் போல, ஓர் ஆச்சரியமான முடிவாக இருக்கலாம். "அவர் வருவார் என யாரும் கணிக்கவில்லை" என்று பாதிரியார் சூ இலோ கூறுகிறார். "அடுத்த போப், திருச்சபை விவகாரங்களில் தனக்கு முன்பிருந்த போப் கொண்டிருந்த அதே பார்வையைக் கொண்டிருப்பது முக்கியமா, அல்லது அவர் ஆப்பிரிக்காவை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது முக்கியமா?" என பாதிரியார் சூ இலோவிடம் கேள்வி எழுப்பினோம். "நான் ஒரு நல்ல பாதிரியாரைப் போல பதிலளிப்பேன்," என்று அவர் சிரித்துக் கொண்டே தொடர்ந்து பேசினார். "பிரான்சிஸின் கண்ணோட்டத்தைத் தொடரும் ஒரு போப்பை கடவுள் நமக்குத் தருவார் என்று நான் பிரார்த்தனை செய்வேன். அத்தகைய நபர் ஆப்பிரிக்காவில் இருந்து வருவார் என்று நான் பிரார்த்தனை செய்வேன்." என்றார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm24x8pg182o
3 months 2 weeks ago
அஸ்வினுடன் தொடர்பு கொண்டால் அவர் தோனிக்கு மொழிபெயர்த்து சொல்லுவார்.
3 months 2 weeks ago
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (25) முற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றார். முதலில் மல்வத்து மகா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி, மல்வத்து மகாநாயக்க வண, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரைச் சந்தித்து, ‘சிறி தலதா வழிபாடு’ மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார். பின்னர், அஸ்கிரி மகா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க வண, வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரைச் சந்தித்து, சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார். அஸ்கிரி பீடத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக கடமையாற்றும் வண,உருளேவத்த தம்மரக்கித நாயக்க தேரரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டதுடன், கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். https://thinakkural.lk/article/317312 மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தார் ஜனாதிபதி! Published By: DIGITAL DESK 2 25 APR, 2025 | 02:32 PM ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெள்ளிக்கிழமை (25) பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றார். முதலில் மல்வத்து மகா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி, மல்வத்து மகாநாயக்க வண, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரைச் சந்தித்து, "ஸ்ரீ தலதா வழிபாடு" மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார். பின்னர், அஸ்கிரி மகா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க வண, வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரைச் சந்தித்து, சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார். அஸ்கிரி பீடத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக கடமையாற்றும் வண,உருளேவத்த தம்மரக்கித நாயக்க தேரரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டதுடன், கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/212907
3 months 2 weeks ago
25 APR, 2025 | 03:55 PM மொஸ்கோவில் இடம்பெற்ற கார்க்குண்டுவெடிப்பில் இராணுவத்தின் உயர்அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். ரஸ்ய இராணுவத்தின் பிரதான செயற்பாட்டு அலுவலகத்தின் துணை தலைவரான யரோஸ்லாவ் மொஸ்காலிக் ரஸ்ய தலைநகரின் நெஸ்டேரோவ் பவுல்வார்ட்டில் இடம்பெற்ற கார்க்குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளார். காரின் எரிவாயு சிலிண்டருக்கு அருகில் பொருத்தப்பட்டடிருந்த வெடிபொருள் தொலைவிலிருந்து இயக்கப்படும் கருவி மூலம் வெடிக்கவைக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்மாடிகளிற்கு அருகில் கார் தீப்பற்றி எரிவதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலிற்கு யார் காரணம் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. உக்ரைனின் புலனாய்வு பிரிவினர் ரஸய இராணுவத்தின் உயர் அதிகாரிகளை ரஸ்யாவிற்குள் இலக்குவைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/212922
3 months 2 weeks ago
பணம் சார்ந்த உலகமாகிவிட்டது.
3 months 2 weeks ago
எமது மருத்துவம் பிற மொழி மாணவர்களை சென்றடைவதில் மகிழ்ச்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சிங்களவன்.... சில வருடங்களில் எமது மருத்துவத்தை, தனது மருத்துவம் என்று உரிமை கோரக் கூடிய சுபாவம் உள்ளவன். எமது ஊர்களை திருடி சிங்களப் பெயர் வைக்கின்றவன், கதிர்காமக் கந்தனை திருடி வைத்திருப்பவன், இராவணனை... உரிமை கோருபவனிடம்... நம்பி எதனையும் கொடுக்க யோசிக்க வேண்டி உள்ளது.
3 months 2 weeks ago
அதே... தான். சில நாட்களுக்கு முன்பு நடந்த டன் பிரசாத் கொலையில் கூட, கொலையாளி முகக் கவசம் அணிந்த படி... டன் பிரசாத் வசித்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு இரவு ஒன்பது மணியளவில், மக்கள் நடமாட்டம் உள்ள நேரம் தயக்கமில்லாமல் வந்து சுட்டு விட்டு சென்று இருக்கின்றார்கள்.
3 months 2 weeks ago
மும்பாயிற்கு எதிரான சென்ற போட்டிகளில் 8 ஆறுகள் சென்னை அணியினால் அடிக்கப்பட்டது. அதில் 4 சிவம் டுபெய், தலா 2 ஜடேஜா, ஆயுஷ் ம்ஹாத்ரேயினால் அடிக்கப்பட்டது.தோனி ஒரு ஆறும் அடிக்கவில்லை.
3 months 2 weeks ago
மஹிந்தவின் புதல்வர்களின் திருமணத்திற்கு செலவாகிய பணம் யாருடையது? ஒவ்வொரு புத்த சங்கத்திலுள்ள குடும்பத்தினருக்கும் பணம் கொடுத்து வடக்கிற்கு அனுப்பி, தாங்கள் கைப்பற்றிய இடங்களை, புனரமைத்த விகாரைகளை பார்வையிடவும் தரிசனம் செய்யவும் கொடுத்த பணம் யாருடையது? சிவநேசதுரை சந்திரகாந்தன், விநாயகமூர்த்தி முரளிதரன் காட்டிக்கொடுத்து, உலகநாடுகளின் உதவியுடன் முடிவுக்கு கொண்டுவந்த போரை, தாம் வெற்றி கொண்டதாக வெற்றி விழா கொண்டாடிய பணம் யாருடையது? கோத்தாவின் மகனின் திருமணத்திற்காக வெளிநாடொன்றிலிருந்து விமானம் மூலம் பூக்களை கொண்டுவந்த பணம் யாருடையது? இவற்றை மறந்து மற்றவர்களுக்கு போதிக்கிறார் பொடி மாத்தையா.
3 months 2 weeks ago
தமிழரசுக்கட்சி உதிரிகளுக்கு தெரியும் தங்களது தோல்வி. பாராளுமன்றத்தேர்தலில் தோல்வி, இப்போ கட்சி இரண்டுபட்டு ஒன்றுக்கெதிராக குழிபறித்து எல்லோராலும் விமர்சனத்துக்குள்ளாகி ஓரங்கட்டப்பட்டு நிற்கிறது. சத்தியலிங்கம் விடும் அறிக்கை எப்படியாவது அரசுடன் சேர்ந்து கொள்வதே. தாங்கள் அரசுடன் இணைந்து இயங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இவர்கள் எப்போதும் ஆட்சியில் இருக்கும் கட்சியுடன் சேர்ந்து கூத்தடிப்பவர்கள் தான். விழுந்தும் மீசையில் மண் ஒடவில்லை என்பதுபோல் சுமந்திரன் அனுராவுக்கு வாழ்த்துச்சொல்ல போயிருந்தார், எடுபடவில்லை. எடுத்ததற்கெல்லாம் சவால் விட்டுப்பார்த்தார், யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்போ இணைந்து செயற்படப்போகிறார்களாம். இவர்களை இணைப்பது யார்? இல்லையென்றால், இவர்களுக்கும் பயம் வந்து விட்டதா என எண்ணத்தோன்றுகிறது.
Checked
Sat, 08/09/2025 - 09:53
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed