3 months 1 week ago
பறிச்சதே விற்கத் தானே....😂
3 months 1 week ago
3 months 1 week ago
3 months 1 week ago
Class is permanent, Form is temporary என்று தெரியாமலா சொன்னார்கள்! அவரது கப்டன் சுமையே அவரை தடுமாற வைத்தது! அதுவும் இங்கிலாந்து பேப்பர்காரங்களை தெரியும்தானே!
3 months 1 week ago
தர்மத்தின் தலைவன் படம் என்று நினைக்கிறேன் ......... !
3 months 1 week ago
பாவிக்காத புது ஜட்டிகள்…. நல்ல வாசனையாக இருக்கும். 😁😂🤣 பேராசிரியர் ரஜனி கதை நான் கேள்விப்படவில்லையே. சுவராசியமாக இருக்கும் போலுள்ளது. நமக்கும் சொல்லுறது. 😂
3 months 1 week ago
ஐயகோ .....ஒருக்கால் வடிவாய் பாருங்கோ . ...... ஒருவேளை ஜட்டி அணியாமல் வீதியில் இறங்கப் போறீங்கள் பேராசிரியர் ரஜினி மாதிரி . ....... ! 😂
3 months 1 week ago
சில கொலைகளை மோட்டார் சைக்கிள் தலைக் கவசத்துடன் வந்து துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிப் போவதால் அடையாளம் காண்பதில் சிக்கலாக உள்ளதாம்.
3 months 2 weeks ago
அப்ப இனி கன பேக்கு சிக்கல்.
3 months 2 weeks ago
அதென்ன முகக்கவசமா?அதாலை ஏன் முகத்தை மூடுகிறீர்கள்?
3 months 2 weeks ago
இந்த வடகிழக்கு அரசியல்வாதிகள், மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை, செய்யபோவதுமில்லை. மக்களை பிரதேசவாதத்தால் பிரித்து, தம்மை தலைவர்களாக்கி, இனத்தையும் நிலத்தையும் விற்பவர்கள். உண்மையான குற்றவாளிகளில் நேரடியாக இப்போ கைவைக்க முடியாது. ஒன்று, அரசியல் பழிவாங்கல் என்கிற குற்றச்சாட்டு, அடுத்து காவற்துறையோ, இராணுவமோ அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பின்னடிப்பு. தென்னக்கோனை கைது செய்யும் விடையத்தில் அது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே முதல்ல எடுபிடிகளை கைது செய்யும் போது, இவர்கள் அடையும் பரபரப்பு, காட்டும் அவசரம், அவர்களை விடுவிக்க எடுக்கும் முயற்சி, அவர்களுக்கு அளிக்கும் முன்னுரிமை, முடியாதவிடத்து முந்திக்கொண்டு விடும் அறிக்கை, நடக்கும் கொலை, யார் சூத்திரதாரிகள் என்பதை காட்டுகின்றன. சிவநேசதுரை சந்திரகாந்தனோ, வியாழேந்திரனோ மக்களுக்காக செய்த நன்மைக்காக கைது செய்யப்படவில்லையே. அவர்கள் ஏன், யாருக்காக கைது செய்யப்படார்கள்? அவர்கள் பின்னணி என்ன, ஏன் அவர்களின் கைதுக்காக நாம் வருந்தவேண்டும்? எம் இனத்தையே எதிரிக்கு காட்டிக்கொடுத்து அழித்தவர்களல்லவா இவர்கள்? இவர்களின் கைதுகளுக்காக ஏன் சிங்களம் முன்னுரிமை கொடுக்கிறது? இனத்தை காட்டிக்கொடுக்கும் கௌதாரியை, மீனை அழிக்கிறார்கள். அதற்காக நாம் வருந்த வேண்டியதில்லை. நான் புலிகளை காட்டிக்கொடுத்து இராணுவத்துக்கு உதவியதாலா எனக்கு இந்த தண்டனை? என்னை உபயோகித்து விட்டு இப்போ கைவிட்டு விட்டார்கள் என்று சிறையிலிருந்து புலம்புகிறாராம். துரோகத்துக்கு பலன் துரோகந்தானே!
3 months 2 weeks ago
25 APR, 2025 | 11:19 AM தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) ஏற்பாட்டில், இலங்கைக்கான ஆஸ்திரேலியா உயர்ஸ்தானியராலயத்தின் நிதி அனுசரணையுடன் பங்குபற்றல், பரிந்துரைத்தல், குரல் கொடுத்தல், வலுவூட்டல் (PAVE) எனும் தொனிப்பொருளில், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் இயலாமைகளைக் கொண்ட நபர்களுக்கான அணுகல் வசதி தொடர்பான ஆய்வு அறிக்கை வெளியீடு புதன்கிழமை (23) யாழ்ப்பாண நகர்ப்பகுதியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இச் செயற்பாடு PAVE செயற்திட்ட இளைஞர் குழுவின் ஒர் சமூக பரிந்துரை முன்னெடுப்பு முயற்சியாகும். ஆய்வறிக்கையின் முதற்பிரதியினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பெற்றுக்கொண்டு உரையாற்றுகையில், யாழ். மாவட்டத்தில் தேர்தல்களின் போது இயலாமைகளைக் கொண்ட நபர்களுக்கான விசேட ஆயத்தங்கள் துறை சார் திணைக்களங்கினால் மேற்கொள்ளப்பட்டு வருவதனையும், மேலும் எவ்வாறு மாற்றுத்திறனாளிகளின் சமூக பொருளாதார உள்ளடக்கம் பற்றியும் கருத்துக்களை வழங்கியிருந்தார். விசேட தேவையுடைய நபர்களுக்கான உள்ளடங்கலான தேர்தல் வசதிப்பாடுகளின் முன்னேற்றம் குறித்து பங்குதாரர்களால் கலந்துரையாடப்பட்டது. மேலும் ஆய்வின் முக்கிய பரிந்துரைகள் துறை சார் அதிகாரிகளிடம் இளைஞர் குழுவினால் முன்வைக்கப்பட்டு அதற்கான தீர்வுகள் சாத்தியக்கூறுகள் பற்றியும் ஆராயப்பட்டன. இந் நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதியின் வட பிராந்திய அலுவலகத்தின் கள ஒருங்கிணைப்பு அலுவலர், யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர், யாழ் மாவட்ட தேர்தல் ஆணைக்குழுவின் உதவி ஆணையாளர், இயலாமைகளை கொண்ட நபர்களுக்காக பணிபுரியும் அமைப்புக்கள், IFES நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட அலுவலர் துறைசார் அரச அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/212878
3 months 2 weeks ago
சிவநேசதுரை சந்திரகாந்தன் நாட்டின் தேசிய வீரன், டான் பிரியஸாத் சமூக சேவகர், கஜ்ஜா குறிப்பிடப்படவில்லை. இந்த சந்திர காந்தன் பிணையில் வந்தால், அவரும் மேலே அனுப்பிவைக்கப்படுவார். இன்னும் ஒரு சிங்களப்பாடகரையும் குறிப்பிடுகிறார்கள். ஒரு வேலையாளை ஒழித்துக்கட்ட இன்னொரு வேலையாள் அமர்த்தப்படுகிறார். அமர்த்துபவர்கள் ஒழியுமட்டும் இது தொடர்ந்து கொண்டே இருக்கும்.
3 months 2 weeks ago
- ஐ.வி.மகாசேனன்- உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் போட்டி கொதிநிலையை நோக்கி நகர்ந்துள்ளது. அரசியல் செய்தியிடல்களில் குட்டித் தேர்தல் என்றவாறு அழைக்கப்படுகின்றது. எனினும் தேர்தல்கள் யாவுமே மக்கள் எண்ணங்களை நாடிபிடித்து பார்க்கும் செயற்பாடாக அமைவதனால், அதன் பெறுமதிகள் உயர்வானதாகவே அமைகின்றது. அதனடிப்படையிலேயே ஆளும் தரப்பாகிய தேசிய மக்கள் சக்தியினர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் என அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் யாவரும் தீவு முழுமையாக சூறாவளி பிரசார செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றார்கள். தமிழர் தாயகப்பகுதியிலும் தேசிய மக்கள் சக்தி தமது வெற்றியை பாதுகாத்துக் கொள்ள அதீத அக்கறை செலுத்தி வருகின்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் முழுமையாக வடக்கில் தீவிர பிரசார செயற்பாட்டில் உள்ளார். இதனைவிட இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் என இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் தொடர்ச்சியாக வடக்கு – கிழக்கில் முகாமிட்டு பிரசார செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளார்கள். மறுமுனையில் தமிழ் அரசியல் கட்சிகள் தமது இருப்பை உறுதி செய்ய உள்ளூராட்சி சபை தேர்தலில் போராட வேண்டி உள்ளது. எனினும் அதற்குரிய வியூகங்களை களத்தில் காணமுடியவில்லை என்ற குற்றச்சாட்டை அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இக்கட்டுரை உள்ளூராட்சி சபை தேர்தல் களத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் வியூகத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழரசியலில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரதான வகிபாகத்தை பெறுகின்றது. நடந்து முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளுக்கு பெரும் நெடிக்கடியை உருவாக்கி இருந்தது. வடக்கில் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளிடையே வாக்கு சிதறலால் பாராளுமன்ற ஆசனங்கள் குறைவடைந்திருந்தது. குறிப்பாக தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தலா ஒரு ஆசனங்களையே யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் பெற்றுக் கொண்டனர். எனினும் தென்னிலங்கை கட்சியான தேசிய மக்கள் சக்தி போனஸ் ஆசனம் உட்பட மூன்று ஆசனங்களை பெற்றிருந்தது. வன்னி தேர்தல் மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி ஆசனங்களை பெற்றிருந்தது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமே தமிழரசுக்கட்சி செல்வாக்கு செலுத்தியிருந்தது. இப்பின்னணியில் தமிழ்த் தேசியத்தின் இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டது. சர்வதேச களங்களிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வடக்கில் உறுதியான பலத்தைப் பெற்றுள்ளமையை சுட்டிக்காட்டி வருகின்றனர். தமிழ்த்தேசியம் வெறுமனவே தமிழ்க்கட்சிகளிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளமையால், தமிழ்த்தேசிய இருப்பை காட்சிப்படுத்த, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளின் வெற்றி அவசியமாகின்றது.எனினும் இப்புரிதலை தமிழ் கட்சிகள் கொண்டுள்ளனவா என்பதில் சந்தேகமே காணப்படுகின்றது. இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளின் ஆசனங்களில் ஏற்பட்ட வீழ்ச்சி, வாக்குச் சிதறல்களே பிரதான காரணம் என்பதை பல அரசியல் அவதானிகளும் சுட்டிக்காட்டியிருந்தனர். வீழ்ச்சியின் பின்னரும் தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளிடையே வினைத்திறனான மாற்றத்தை உள்ளூராட்சி சபைத் தேர்தல் முன்முயற்சிகளில் இனங்காண முடியவில்லை. பொது எதிரியாக தேசிய மக்கள் சக்தியை பிரசாரம் செய்கின்ற போதிலும், தமக்குள் பொதுக்கூட்டையோ அல்லது பொது ஒத்துழைப்பையோ நிறுவ தவறியுள்ளார்கள். தமிழரசு கட்சியில் ஆதிக்கம் செலுத்தும் அதன் பதில் செயலாளர், தமது தோல்வியை ஏற்றுக்கொள்ளாதவராகவும், தமிழரசுக் கட்சியை தொடர்ச்சியாக தமிழ்ப் பரப்பின் பிரதான சக்தியாக வலியுறுத்தும் நிலைமைகளே காணப்படுகின்றது. இக்கருத்தை பின்பற்றியே தமிழரசுக்கட்சியின் பதில் தலைவரும் கூட்டு முயற்சிக்கு விட்டுக்கொடுப்புடன் இணங்க தவறியிருந்தார். ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடுகையில் தமிழரசுக் கட்சியிடம் காணப்படும் பரவலான கட்டமைப்பு மற்றும் வடக்கு – கிழக்கு முகமே ஓரளவு கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் அரசியல் இருப்பை பாதுகாத்தது. எனினும் தமிழரசுக்கட்சி வீட்டுச்சின்னத்தின் ஏகபிரதிநிதித்துவம் பலவீனப்பட்டுள்ளது என்ற எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள தவறுகின்றனர். மாறாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் குறிப்பிடத்தக்க மாறுதல்களை அவதானிக்க கூடியதாகவும் வரவேற்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. பொதுத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பாராளுமன்ற செயற்பாட்டு தளத்தில் கூட்டுக்கான முன்முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். தமிழரசுக் கட்சியின் ‘பெரியவர்’ எண்ணங்களால் அம்முயற்சி பலவீனப்பட்டது. எனினும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு சிறு கூட்டு முயற்சியை சாத்தியப்படுத்தி உள்ளது. எவ்வாறாயினும் வாக்கு சிதறல்களை கட்டுப்படுத்தக்கூடிய முழுமையான கூட்டணி அல்லது தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீளுருவாக்கம் சாத்தியப்படவில்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளிடையே பிரதானமாக மும்முனைப் போட்டிகள் காணப்படுகின்றது. குறிப்பாக வீட்டு சின்னத்தில் தமிழரசு கட்சியும் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசிய பேரவையாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான கூட்டணியினரும் மற்றும் சங்கு சின்னத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியினரும் வடக்கு – கிழக்கு முழுமையாக போட்டியிடுகின்றனர். மேலும், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் கணிசமான சபைகளில் மீன் சின்னத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினரும் போட்டியாளர்களாக காணப்படுகின்றனர். அரசியல் கொள்கை சார்ந்த கூட்டுகள் மற்றும் குறுகிய இலக்குகள் சார்ந்த கூட்டுகள் தொடர்பான அரசியல் அணுகுமுறைகளை தமிழ் அரசியல் கட்சிகள் உள்வாங்க தவறியுள்ளார்கள். இரண்டாம் உலகப்போர் காலப்பகுதியில் பிரதான கொள்கை எதிர் சக்திகளான சோவியத் ஒன்றியம் – அமெரிக்க, பிரிட்டன் நேசநாட்டு கூட்டணியுடன் இணைந்து செயற்பட்டிருந்தது. ஹிட்லர் தலைமையிலான நாசிசத்தை எதிர்த்து போரிட இருமுனை கொள்கை நிலைப்பாட்டினர் ஒன்றிணைந்தார்கள். போர் வெற்றியின் பின்னர் தமது கொள்கை சார்ந்து முரண்பட்டு கொண்டார்கள். அவ்வாறே இந்திய தேர்தலை பொறுத்த வரை கூட்டணியாக செயற்படுவதனூடாகவே சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற வெற்றிகளை பெற முடியும். ஆசனங்களை மையப்படுத்தியே கூட்டணிகளும் உருவாக்கப்படுகின்றன. தேர்தல் வெற்றியின் பின்னர் தமது கொள்கைவழி செயற்படும் நிலைமைகள் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக அகில இந்திய காங்கிரஸ் தலைமையிலான இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணியில் தி.மு.க, வி.சி.க மற்றும் ம.தி.மு.க போன்ற தமிழக கட்சிகள் காணப்படுகின்றன. ம.தி.மு.க பொதுச்செயலாளர் இக்கூட்டணியினூடாக மாநிலங்களவை ஆசனத்தை பெற்றிருந்தார். பின்னர் மாநிலங்களவையில் ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலையில் காங்கிரஸின் தொடர்பு பற்றி கண்டித்திருந்தார். தற்போது 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை மையப்படுத்தி பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) மற்றும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அ.தி.மு.க) இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள கூட்டணியும் கொள்கைக்கு வெளியே பொது எதிரியாக திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க) ஆட்சி மாற்றத்திற்கானதாகவே பிரசாரம் செய்யப்படுகின்றது. இப்பின்னணியில் அரசியலில் கூட்டணி உருவாக்கங்கள் ஒருவகையிலான அணுகுமுறையாகவே அமைகின்றது. எனினும் தமிழ் கட்சிகளிடையே காணப்பட்ட பெரியவர் எண்ணங்களும் அவநம்பிக்கைகளும் அரசியல் அறிவின்மைகளும் கூட்டணிக்கான வாய்ப்புக்களை இல்லாமல் செய்து விட்டது. இது பொது எதிரிக்கு வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் அரசியல் களத்தையே உருவாக்கியுள்ளது. கூட்டணிக்கான வாய்ப்புகள் இல்லாமல் போயுள்ள சூழலிலும், தமிழ் அரசியல் கட்சிகள் தந்திரோபாயமாக பொது எதிரியை கையாளுவதற்கான வாய்ப்புகள் இன்னும் தமிழ் அரசியல் கட்சிகளின் கைகளில் காணப்படவே செய்கின்றது. ஈழத் தமிழரசியலின் மூத்த அரசியல் வரலாற்று ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் அண்மையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், ‘போட்டி இல்லா ஒப்பந்தம்’ தொடர்பில் உரையாடியிருந்தார். 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை கையாள்வது தொடர்பிலும் மு.திருநாவுக்கரசு அவர்கள் தமிழ்ப் பொது வேட்பாளர் கருத்தை பரிந்துரைத்திருந்தார். தமிழ் அரசியல் களம் அதனை புரிந்து கொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் ஒரு தசாப்த காலம் தேவைப்பட்டிருந்தது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலேயே சிவில் அமைப்புகள் மற்றும் கட்சிகள் ஒன்றிணைந்த பொது கட்டமைப்பினூடாக தமிழ்ப் பொது வேட்பாளர் அரசியலில் சாத்தியப்படுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான அனுபவங்களில், பொது எதிரியை கையாள்வதற்கான ‘போட்டி இல்லா ஒப்பந்தம்’ பற்றிய கருத்தை சுயநல அரசியலுக்குள் பயணிக்கும் அரசியல் கட்சிகள் எந்த அளவு புரிந்து கொள்வார்கள் என்பது சந்தேகமாகவே காணப்படுகின்றது. ‘போட்டி இல்லா ஒப்பந்த’ அணுகுமுறை என்பதில் மு.திருநாவுக்கரசு அவர்கள், ‘தமிழ் அரசியல் கட்சிகள் தமக்கிடையே போட்டியிடுவதை தவிர்த்து, பொது எதிரியான தேசிய மக்கள் சக்தியை தோற்கடிப்பதை இலக்காக கொண்டு செயற்படுவதையே’ விபரித்துள்ளார். குறிப்பாக தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் வடக்கு – கிழக்கு உள்ளூராட்சி சபைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். தமது பலம் பலவீனங்களை சுயபரிசோதனைக்குட்படுத்தி சபைகளை ஒதுக்கிக் கொள்ளலாம். உதாரணமாக வல்வெட்டித்துறை நகரசபைக்கு எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலான தமிழ்த் தேசிய பேரவை கூட்டணியினர் பொருத்தமானவர்கள். ஏனைய தமிழ்க் கட்சிகள் போட்டியை தவிர்த்து கொள்ளலாம். அவ்வாறே கிளிநொச்சி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை மையப்படுத்தி தமிழரசுக்கட்சி பலமானதாகும். மன்னார் நகர சபையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை மையப்படுத்தி ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி போட்டியிட ஏனைய தமிழ்க் கட்சிகள் போட்டியிலிருந்து விலகலாம். நல்லூர் பிரதேச சபையில் முன்னாள் தவிசாளர் தலைமையிலான பத்மநாதன் மயூரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி பலமான கட்சியாகும். இவ்வாறு வடக்கு – கிழக்கு உள்ளூராட்சி சபைகளை தமிழ்க் கட்சிகள் பகிர்ந்து கொள்ளலாம். இவ்வாறானதொரு விட்டுக்கொடுப்பினூடாக பொது எதிரியை தோற்கடிப்பதை இலக்காக கொண்டு செயற்படக்கூடிய அணுகுமுறை தற்போது வரை தமிழ்க் கட்சிகளிடம் காணப்படுவதை ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஏற்படுத்தக்கூடிய தடைகளுக்கு எதிராக இதய சுத்தியுடன் தமிழ் அரசியல் கட்சிகள் செயற்பட விரும்பின், ஆசிரியரின் அணுகுமுறை பொருத்தமானதாகும். தமிழ் அரசியல் கட்சிகள் பிரசாரங்கள் மற்றும் செய்தி அறிக்கைகளில் தேசிய மக்கள் சக்தியை, தமிழ் மக்களுக்கு ஆபத்தான எதிரிகளாக, விளிக்கின்ற போதிலும், தொடர்ச்சியாக தமக்குள் மோதிக் கொள்ளும் நிலையிலேயே காணப்படுகின்றார்கள். ஒரு நிமிடம் தேசிய மக்கள் சக்தியை விமர்சிப்பார்களாயின், இரு நிமிடங்கள் தமிழ் கட்சிகளை விமர்சிக்க நேரம் ஒதுக்கும் நிலைமைகளே காணப்படுகின்றது. இதனடிப்படையில் தமக்குள் சண்டையிடவே தமிழ் அரசியல் கட்சிகள் அதிக நேரத்தை ஒதுக்கீடு செய்கின்றன. இது பொது எதிரிக்கு சாதகமான பிரசாரமாகவே அமைகின்றது. பொது எதிரியின் பிரசாரத்தையும் இணைத்தே தமிழ் அரசியல் கட்சிகள் மேற்கொள்கின்றன. சமூக வலைத்தளங்களில் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான விமர்சனங்களுக்கு சமாந்தரமாகவே வீடு எதிர் சைக்கிள் எதிர் சங்கு விமர்சனங்களும் உயர்வாகவே காணப்படுகின்றது. தமிழ் கட்சிகள் போட்டியிடுவதாயினும், குறைந்தபட்சம் தமக்குள் வாய்த்தகராற்றில் ஈடுபடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தி தமிழ் அரசியல் பரப்புக்கு எத்தகைய பாதகமானது என்பதையே தமிழ் மக்களிடம் முன்னிறுத்த வேண்டும். மேலும் தத்தமது செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்களுக்கு எடுத்துரைக்கலாம். மாறாக தமிழ்க் கட்சிகள் தமக்குள் வசைபாடுவது ஆபத்தானதாகும். தமிழ் மக்களிடையே தமிழ்க் கட்சிகள் தொடர்பில் சலிப்பையே உருவாக்கும். எனவே, 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபை தேர்தல் என்பது தமிழ் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை பொது எதிரியான தேசிய மக்கள் சக்தியை தோற்கடிப்பதை இலக்காகக் கொண்டதாக அமைதலே தமிழ் அரசியலுக்கு பொருத்தமானதாகும். எனினும் தமிழ் அரசியல் கட்சிகளிடம் இத்தகைய தூய எண்ணம் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் தமிழ் மக்களிடமும் சிவில் தரப்பிடமும் சந்தேகங்களே காணப்படுகின்றது. இதன் பின்னணியிலேயே கடந்த தேர்தல் காலங்களில் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பதில் முன்னணியில் செயற்பட்டிருந்த சிவில் சமூகங்களும் செயற்பாட்டாளர்களும் உள்ளுராட்சி சபை தேர்தலில் பெரிய அக்கறையின்றி காணப்படுகின்றார்கள். இறுதி வாய்ப்பாக மு.திருநாவுக்கரசு அவர்கள் தமிழ் அரசியல் இருப்பு சார்ந்த பற்றுறுதியில் தன்னார்வமாக ‘போட்டி இல்லா ஒப்பந்தம்’ அணுகுமுறையை பரிந்துரைத்துள்ளார். இதனை இறுகப்பற்றி தமிழ் அரசியல் கட்சிகள் தமது அரசியல் இருப்பையும் தமிழ் மக்களின் அரசியல் இருப்பையும் பாதுகாப்பார்களாயின் பயனுடையதாகும். https://thinakkural.lk/article/317169
3 months 2 weeks ago
சொந்த மண்ணில் ஆர்சிபிக்கு முதல் வெற்றி - ராஜஸ்தானின் வெற்றியை ஒரே ஓவரில் பறித்த ஹேசல்வுட் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பெங்களூருவில் நேற்று (ஏப்ரல் 24) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. 206 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்து 11 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று 3வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. ஆனாலும், ஆர்சிபியின் நிகர ரன்ரேட் 0.482 என மும்பையைவிட குறைவாகவே இருக்கிறது. மும்பை அணி அடுத்து ஓர் ஆட்டத்தில் வென்றால் 2வது இடத்திற்கே நகர்ந்துவிடும் அளவுக்கு நிகர ரன்ரேட்டை வலுவாக வைத்துள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடிய 9 போட்டிகளில் தொடர்ந்து சந்திக்கும் 5வது தோல்வி இது. 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று 8வது இடத்தில் நீடிக்கிறது. ஆர்சிபி அணி இந்த சீசனில் இதுவரை சொந்த மைதானத்தில் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்த நிலையில் பெங்களூருவில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஆட்டத்தை மாற்றிய ஒரே ஓவர் இந்த ஆட்டத்தில் சேஸிங்கின் தொடக்கத்தில் இருந்து ஆட்டம் ராஜஸ்தான் பக்கம்தான் இருந்தது. அந்த அணிதான் வெல்லும் என்று ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் நினைத்திருப்பார்கள். ஆனால், அனைத்தும் புவனேஷ்வர்குமார் வீசிய 18வது ஓவர் வரைதான். ஹேசல்வுட் வீசிய 19வது ஓவர்தான் ஆட்டத்தைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டது. கடைசி இரண்டு ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. ஹேசல்வுட் வீசிய 19வது ஓவரில் அணியை வெற்றியை நோக்கி நகர்த்தி ஆடி வந்த துருவ் ஜூரெல்(47) ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ஜோப்ரா ஆர்ச்சரும் ஆட்டமிழக்கவே, ஹேசல்வுட் ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இந்த ஓவர்தான் வெற்றியை ராஜஸ்தான் கரங்களில் இருந்து ஆர்சிபி பறித்தது. கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. யஷ் தயால் வீசிய ஓவரில் ஷுபம் துபே, ஹசரங்கா ஆட்டமிழந்து, 5 ரன்கள் மட்டுமே சேர்த்ததால் அந்த அணி தோல்வி அடைந்தது. பெற்றோருக்கான ஓட்டப் பந்தயத்தில் கலக்கிய முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை24 ஏப்ரல் 2025 சிஎஸ்கே அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேற உள்ள ஒரே வழி என்ன?21 ஏப்ரல் 2025 தொடர்ந்து 3வது முறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது இந்த சீசனில் தொடர்ந்து 3வது முறையாக சேஸிங்ஸில் வெற்றிக்கு அருகே வந்து தோல்வியைச் சந்தித்துள்ளது ராஜஸ்தான் அணி. இதற்கு முன் லக்னெள அணிக்கு எதிராகவும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராகவும் கடைசி ஓவரில் 9 ரன்களை எடுக்க முடியாமல் ராஜஸ்தான் அணி தோற்றது. இந்தப் போட்டியில் வெற்றிக்கு அருகே வந்து கடைசி ஓவரில் 17 ரன்களை எடுக்க முடியாமல் ராஜஸ்தான் தோற்றது. ஆர்சிபி வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரின் பந்துவீச்சையும் ராஜஸ்தான் பேட்டர்கள் வெளுத்துவிட்டனர். ஓவருக்கு 11 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஆனால் நடுப்பகுதியில் குர்னல் பாண்டியா, சூயஸ் ஷர்மா இருவரும் ராஜஸ்தான் ரன்ரேட்டுக்கு பிரேக் போட்டனர். இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 62 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தானுக்கு நெருக்கடியை அதிகப்படுத்தினர். குறிப்பாக கேப்டன் ரியான் பராக், நிதிஷ் ராணா ஆகிய பெரிய விக்கெட்டுகளை குர்னல் பாண்டியா வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தி பவர்ப்ளேவில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் சேர்க்க உதவினர். அடுத்த 14 ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 134 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 8.1 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 100 ரன்களை எட்டியது. 15வது ஓவரில் 150 ரன்களை எட்டிய நிலையில் அதன் பிறகு ஆட்டத்தில் மந்தநிலை ஏற்பட்டது. இருப்பினும் புவனேஷ்வர்குமார் வீசிய 18வது ஓவரில் துருவ் ஜூரெல் 22 ரன்களை விளாச, ஆட்டம் ராஜஸ்தான் பக்கம் திரும்பியது. கடைசி 2 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே வெற்றிக்குத் தேவைப்பட்டது. ஹேசல்வுட் வீசிய 19வது ஓவரில் செட்டில் பேட்டர் துருவ் ஜூரெல், ஆர்ச்சர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஒரு ரன் சேர்த்தனர். கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 5 ரன்கள் மட்டுமே சேர்த்து ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது. ஐபிஎல்: ஒவ்வொரு வீரரின் பேட்டையும் களத்திலேயே நடுவர்கள் பரிசோதிப்பது ஏன்? விதிகள் கூறுவது என்ன?16 ஏப்ரல் 2025 வட கொரியாவில் மாரத்தான் ஓடிய வெளிநாட்டவர் அந்நாட்டு மக்கள் குறித்து கூறுவது என்ன?16 ஏப்ரல் 2025 திருப்புமுனையான ஹேசல்வுட்டின் 2 ஓவர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹேசல்வுட் வீசிய 19வது ஓவரில் செட்டில் பேட்டர் துருவ் ஜூரெல், ஆர்ச்சர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் ஹேசல்வுட் வீசிய 17வது மற்றும் 19வது ஓவர்தான் ஆட்டத்தை ஆர்சிபி பக்கம் கொண்டு வந்தது. செட்டில் பேட்டர் ஷிம்ரன் ஹெட்மயரை(11) தனது 17வது ஓவரில் ஹேசல்வுட் ஆட்டமிழக்கச் செய்தார். ராஜஸ்தான் அணிக்கு எந்த நேரத்திலும் பெரிய ஷாட்களை ஆடக்கூடிய ஹெட்மயரை வீழ்த்தி ஹேசல்வுட் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அடுத்ததாகத் தனது 19வது ஓவரில் மற்றொரு செட்டில் பேட்டர் துருவ் ஜூரெல் விக்கெட்டுக்கு ஹேசல்வுட் குறிவைத்தார். ஏனென்றால் புவனேஷ்வர் வீசிய 18வது ஓவரில் ஜூரெல் 22 ரன்கள் சேர்த்ததால், ஹேசல்வுட் ஓவரை அடித்து துவம்சம் செய்யப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துருவ் ஜூரெலுக்கு துல்லியமான யார்க்கரை ஹேசல்வுட் வீசினார். யார்க்கரில் இருந்து தப்பிக்க ஜூரேல் பேட்டால் தடுக்கவே பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது. 3வது நடுவரிடம் அப்பீல் செய்யவே, பந்து துருவ் ஜூரெல் பேட்டில் பட்டுச் சென்றது தெரிய வந்தது. விக்கெட் உறுதியானதால் பெரிய விக்கெட்டை வீழ்த்திய நிம்மதி ஆர்சிபிக்கு கிடைத்தது. அடுத்து களமிறங்கிய ஆர்ச்சருக்கு டெஸ்ட் லென்த் பந்தை வீசிவே வேறுவழியின்றி கேட்ச் கொடுத்து ஆர்ச்சர் ஆட்டமிழந்தார். இந்த ஒரு ஓவரில் 2 விக்கெட்டுகளை ஹேசல்வுட் வீழ்த்தினார். ஹேசல்வுட் 4 ஓவர்களை வீசி 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். ஜெய்ஸ்வால் இருக்கும் வரை ஹேசல்வுட் ஓவரை குறிவைத்து ஹாட்ரிக் பவுண்டரி, சிக்ஸர் என விளாசித் தள்ளினார். ஆனால் ஜெய்ஸ்வால் விக்கெட்டை ஹேசல்வுட் வீழ்த்திய பிறகு மற்ற பேட்டர்களுக்கு ஹேசல்வுட் சிம்ம சொப்பனமாக மாறினார். பஹல்காம் தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வி காரணமா? பாதுகாப்பு நிபுணர்கள் விளக்கம்4 மணி நேரங்களுக்கு முன்னர் '3 ஆண்டுகள் பாலியல் துன்புறுத்தல்' – கோவை ஈஷா பள்ளி முன்னாள் மாணவருக்கு என்ன நேர்ந்தது?24 ஏப்ரல் 2025 ராஜஸ்தானுக்கு நெருக்கடியளித்த குர்னல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துருவ் ஜூரெல் 18வது ஓவரில் ஜூரெல் 22 ரன்கள் சேர்த்தால், ஹேசல்வுட் ஓவரை அடித்து துவம்சம் செய்யப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது ராஜஸ்தான் சேஸிங்கை தொடங்கியதில் இருந்து ராக்கெட் வேகத்தில் ரன்ரேட்டை கொண்டு சென்றது. ஜெய்ஸ்வால், 14 வயது வைபவ் சூர்யவன்ஷி(16ரன்கள்) இருவரும் சிக்ஸர், பவுண்டரி என ஆர்சிபி பந்துவீச்சை விளாசித் தள்ளினர். ராஜஸ்தான், 4.4 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது. ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து தனது கடமையைச் செய்துவிட்டுச் சென்றார். 8 ஓவர்களில் 100 ரன்களை எட்டி ராஜஸ்தான் வலுவாக இருந்தது. ஆனால், குர்னல் பாண்டியா, சூயஸ் ஷர்மா இருவரும் வீசிய 8 ஓவர்களுக்கு ராஜஸ்தான் ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தனர். குறிப்பாக கேப்டன் ரியான் பராக்(22) விக்கெட்டை 10வது ஓவரில் குர்னல் பாண்டியா வீழ்த்தி ராஜஸ்தானை லேசாக தடுமாறச் செய்தார். ஆனால் நிதிஷ் ராணா களத்தில் இருக்கிறாரே என்ற துணிச்சல் இருந்தது. ஆனால், நிதிஷ் ராணா(28) விக்கெட்டையும் 14வது ஓவரில் குர்னல் பாண்டியா எடுக்கவே ராஜஸ்தானுக்கு முதல் சறுக்கல் ஏற்பட்டது. அதன் பிறகு, சூயஸ் ஷர்மா, குர்னல் இருவரும் ராஜஸ்தான் பேட்டர்களை ரன் சேர்க்கவிடாமல் நெருக்கடி கொடுத்துப் பந்துவீசினர். தோனி மீண்டும் சிஎஸ்கே கேப்டன் ஆனது ஏன்? ருதுராஜின் நிலை என்ன?11 ஏப்ரல் 2025 மதுரை சிறுமி 7 வயதிலேயே டேக்வாண்டோ பயிற்சியாளராகி கின்னஸ் சாதனை9 ஏப்ரல் 2025 கோலி, படிக்கல் அரைசதம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கேப்டன் ரியான் பராக்(22) விக்கெட்டை 10வது ஓவரில் குர்னல் பாண்டியா வீழ்த்தி ராஜஸ்தானை லேசாக தடுமாறச் செய்தார் ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட்(26) பவர்ப்ளே முடிந்ததும் ஆட்டமிழந்தார். பவர் ப்ளேவில் கோலி, சால்ட் இருவரும் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு கூட்டணி சேர்ந்த படிக்கல், கோலி ஜோடி ஸ்கோரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. 2வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். விராட் கோலி 32 பந்துகளில் அரைசதம் அடித்து அடுத்த 10 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து 70 ரன்களில் ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கோலியின் கணக்கில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடங்கும். படிக்கல் தனக்கு இருமுறை கேட்ச் நழுவவிட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி 26 பந்துகளில் அரைசதம் அடித்து 50 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பட்டிதாரும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். டிம் டேவிட், ஜிதேஷ் சர்மா கூட்டணி 19 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து ஸ்கோரை 200 ரன்கள் கடக்க உதவினர். இரவில் வாயை ஒட்டி வைத்துக்கொண்டு தூங்கினால் ஆழ்ந்து உறங்க முடியுமா? எப்படி?24 ஏப்ரல் 2025 இறந்து 38 ஆண்டு கழித்தும் பிரிட்டிஷ், ஜெர்மன் பத்திரிகைகளை முட்டாளாக்கிய 'ஹிட்லர்'23 ஏப்ரல் 2025 முதல் 10 ஓவர் வரை நம்பிக்கையில்லை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விராட் கோலி 32 பந்துகளில் அரைசதம் அடித்து அடுத்த 10 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து 70 ரன்களில் ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் வெற்றிக்குப் பிறகு ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் கூறுகையில் "எங்களுக்கு மிகவும் தேவைப்பட்ட வெற்றியாகப் பார்க்கிறோம். இன்றைய ஆட்டத்தில் ஆடுகளம் முற்றிலும் வித்தியாசமாக, எதிர்பார்த்தது போல் இருந்தது. பத்தாவது ஓவருக்கு பிறகுதான் ஆட்டம் எங்கள் பக்கம் திரும்பியது. இதற்கு பந்துவீச்சாளர்கள்தான் காரணம். ஆட்டத்தை திருப்பி வெற்றிக்கு இழுத்து வந்த பந்துவீச்சாளர்களின் துணிச்சல் அபாரமானது. ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கை தொடக்கத்தில் பார்த்து நம்பிக்கையிழந்தேன்," என்று கூறினார். மேலும், "ஆட்டம் நெருக்கடியாகச் செல்லும் என்று முதலில் கணித்தேன். ஆனால், 10வது ஓவருக்கு பின் விக்கெட்டுகளை எடுத்த பிறகு, என் கணிப்பு மாறியது. விக்கெட் எடுத்தால்தான் ரன்களை தடுக்க முடியும் என்று நினைத்தேன் அதற்கேற்றார்போல் திட்டமிட்டோம்," எனத் தெரிவித்தார். ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு எப்போது? மௌனம் கலைத்தார் தோனி8 ஏப்ரல் 2025 சன்ரைசர்ஸ் கண்டெடுத்த முத்து: டெல்லியை மிரட்டிய 23 வயது இளம் வீரர் அனிகேத் வர்மா யார்?31 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"ஆட்டத்தைத் திசை திருப்பி வெற்றிக்கு இழுத்து வந்த பந்துவீச்சாளர்கள் துணிச்சல் அபாரமானது" என்றார் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் அடுத்து வரவுள்ள முக்கிய ஆட்டங்கள் இன்றைய ஆட்டம் சிஎஸ்கே vs சன்ரைசர்ஸ் இடம்: சென்னை நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் நாள் - ஏப்ரல் 30 இடம் – சென்னை நேரம்- இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் நாள் - ஏப்ரல் 27 இடம் – மும்பை நேரம்- மாலை 3.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs டெல்லி கேபிடல்ஸ் நாள் - ஏப்ரல் 27 இடம் – டெல்லி நேரம்- இரவு 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-417 ரன்கள் (8 போட்டிகள்) விராட் கோலி(ஆர்சிபி)392 ரன்கள்(9 போட்டிகள்) நிகோலஸ் பூரன்(லக்னெள)-377 ரன்கள்(9 போட்டிகள்) நீலத் தொப்பி பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 16 விக்கெட்டுகள்(8 போட்டிகள்) ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 16 விக்கெட்டுகள்(9 போட்டிகள்) குல்தீப் யாதவ்(டெல்லி) 12 விக்கெட்டுகள்(8 போட்டிகள்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c1wd43xrj1go
3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 2 25 APR, 2025 | 10:18 AM கொடிகாமம் சந்தைக்கு அருகாமையில் உள்ள மரத்தை வெட்டியதால் வியாபாரிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். புதன்கிழமை (23) இரவு வந்த சாவகச்சேரி பிரதேச சபையினர் இந்த நாசகார வேலையை செய்ததாக வியாபாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். தற்போது வெப்பமானது மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. ஆகையால் மரங்கள் நிற்பதன் மூலம்தான் ஓரளவேனும் வெப்பத்தின் தாக்கம் குறைவாக உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் மக்களின் கருத்தையும் மீறி மரத்தை வெட்டியதாக அவர்கள் குற்றம் சாட்டினர். சந்தையில் உள்ள மலசல கூடங்களும் பயன்படுத்த முடியாமல் மிகவும் அசுத்தமான முறையில் காணப்படுகின்றதாகவும் அவற்றினை சாவகச்சேரி பிரதேச சபையினர் சுத்தம் செய்வதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அத்துடன் சந்தையில் சேருகின்ற கழிவுப் பொருட்களை உரிய முறையில் பிரதேச சபையினர் அகற்றுவதில்லை என்றும் குற்றம்சாட்டினர். மக்களுக்கு சரியான முறையில் சேவைகளை வழங்காத உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் கூறியுள்ளார். எமது இந்த பிரச்சினைக்கு அவர் எடுக்கப்போகின்ற நடவடிக்கை என்ன என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி இல்லாத நிலையில் இவ்வாறான விரும்பத்தகாத விடயங்கள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/212873
3 months 2 weeks ago
றிஷாத் பதியுதீனையா சொல்கிறார் இவர்?
3 months 2 weeks ago
மேல் மாகாணத்தில் சிக்குன்குன்யா நோய் தீவிரம் Published By: DIGITAL DESK 3 25 APR, 2025 | 10:03 AM நாட்டில் அதிகளவான சிக்குன்குன்யா நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். நாடளாவி ரீதியில் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 16,544 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் மேல் மாகாணத்தில் மட்டும் 7,611 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் அதிகளவாக 2,709 பேரும், கம்பஹாவில் 2,453 பேரும், களுத்துறையில் 567 பேரும் பதிவாகியுள்ளனர். இது தொடர்பில் மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப், நும்புகளால் பரவும் சிக்குன்குன்யா நோயை தடுப்பதற்கு விரைவான நடவடிக்கை எடுத்து வருகின்றோம். எனது உத்தரவின் கீழ் கொழும்பு பிராந்திய சுகாதார அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து ட்ரோன்களைப் பயன்படுத்தி புகை விசுறுதல் போன்ற அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன. அத்துடன், இம் மாதத்தில் 18 சிக்குன்குன்யா நோய் தடுப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/212867
3 months 2 weeks ago
24 APR, 2025 | 09:56 PM (இராஜதுரை ஹஷான்) ஊழல் மோசடியால் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய ராஜபக்ஷர்கள் இன்று ஊழலற்ற வகையில் நாட்டை எவ்வாறு நிர்வகிப்பது என்று எமக்கு குறிப்பிடுகிறார்கள். ஊழல் மோசடியான அரச நிர்வாகத்தை நாங்கள் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். மீண்டும் அவ்வாறான முறையற்ற நிர்வாகத்தை மக்கள் தோற்றுவிக்கமாட்டார்கள் என கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். தங்காலை பகுதியில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சர்கள் எளிமையாக இருப்பதையும் எதிர்கட்சியினர் இன்று விமர்சிக்கிறார்கள். கடந்த கால ஆட்சியாளர்கள் மற்றும் அரசாங்கங்கள் சுகபோகமாக செயற்பட்ட காரணத்தால் தான் இந்த நாடு வங்குரோத்து நிலையடைந்தது, ஊழல் மோசடியால் பாதிக்கப்பட்டது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஜனாதிபதி மாளிகையிலோ, அலரிமாளிகையிலோ வசிப்பதில்லை. ஏனெனில் இவற்றை பராமரிப்பதற்கு பல மில்லியன் ரூபா மாதாந்தம் செலவாகும். நாடு வங்குரோத்து நிலையடைந்து மக்கள் கடினமான நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் சுகபோகமாக வாழவில்லை. ஊழல் மோசடியால் நாட்டை வங்குரோத்துக்கு தள்ளிய ராஜபக்ஷர்கள் இன்று ஊழலற்ற வகையில் அரச நிர்வாகத்தை முன்னெடுப்பது குறித்து எமக்கு குறிப்பிடுகிறார்கள். நாமல் ராஜபக்ஷ ஊழலற்ற வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார். இது நகைப்புக்குரியது. இவர்கள் கடந்த காலங்களில் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். சுகபோகம் மற்றும் ஊழல் மிகுந்த அரசியல் கட்டமைப்பை மக்கள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்கள். ஆகவே முறையற்ற அந்த நிர்வாக கட்டமைப்பை மீண்டும் தோற்றுவிக்கமாட்டார்கள். அரச செலவுகளை குறைத்துக் கொண்டு நாட்டை நிர்வகிக்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/212854
3 months 2 weeks ago
நாடளாவிய ரீதியில் ஆயுர்வேத, சித்த என்ற ரீதியில் இலங்கையில் சுதேச மருத்துவம் இருக்கின்றது. இந்த கற்கை நெறியை நிறைவுசெய்து தமிழ், சிங்களம், முஸ்லிம் என 1700 பட்டதாரிகள் வேலைக்காக காத்திருக்கின்றனர். இதைவிட 600 பேர் இறுதிப் பயிற்சி நிலையில் இருக்கின்றனர். அதைவிட ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏறத்தாள 1600 இற்கும் அதிகமானோர் இருக்கும் போது வெறும் 350 இற்கும் குறைவானவர்களையே நியமனத்தில் உள்வாங்க அரசு முனைகின்றனர். ஆனால் எம்மை கிராமங்கள் தோறும் சமூக நல வைத்திய அதிகாரிகளாக கூட எம்மை பயன்படுத்த முடியும்.
Checked
Sat, 08/09/2025 - 06:53
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed