புதிய பதிவுகள்2

இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் துப்பாக்கிச் சண்டை

3 months 2 weeks ago
25 APR, 2025 | 10:11 AM புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு மத்தியில் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் -இ-தொய்பா ஆதரவு அமைப்பான டிஆர்எப் பொறுப்பேற்றது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் 2 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இரு தரப்பிலும் பரஸ்பரம் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீரை வழங்கும் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய நீர்வளத்துறை செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜி, பாகிஸ்தானின் நீர்வளத்துறை செயலாளர் சையத் அலி முர்தாசாவுக்கு எழுதிய கடிதத்தில், ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை மீறியதால் சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக நிறுத்தி வைக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரை குறிவைத்து பாகிஸ்தானால் தொடர்ந்து நடத்தப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் உரிமைகளைத் தடுக்கிறது. நல்ல நம்பிக்கையுடன் ஒரு ஒப்பந்தத்தை மதிக்க வேண்டிய கடமை ஒரு ஒப்பந்தத்திற்கு அடிப்படையானது. அதற்கு பதிலாக நாங்கள் கண்டது இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரை குறிவைத்து பாகிஸ்தானால் தொடர்ந்து நடத்தப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இடம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிதர்களுக்கான அமைப்பான பனுன் காஷ்மீர், காஷ்மீருக்கான பயண ஆலோசனையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும். பள்ளத்தாக்கில் நிலைமை "இயல்பிலிருந்து வெகு தொலைவில்" உள்ளது. சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக இந்துக்கள் கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது. இந்த பின்னணியில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு நிலைமையை ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இன்று ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக அவர் ஸ்ரீநகர் மற்றும் உதம்பூருக்குச் செல்வார் என்றும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிறுத்தப்பட்டுள்ள மூத்த ராணுவத் தளபதிகள் மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்களின் அதிகாரிகளை அவர் சந்திக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/212874

டக்ளஸ் தொடர்பில் சகல விடயங்களும் விசாரிக்கப்படும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

3 months 2 weeks ago
டக்ளஸ் தொடர்பில் சகல விடயங்களும் விசாரிக்கப்படும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க April 25, 2025 ‘ஷொப்பிங் பையுடன்’ புத்தளத்துக்கு வந்தவர்கள் இன்று பத்துக் கப்பல்களை வாங்கும் நிலைக்கு வந்துள்ளனர். டக்ளஸ் தேவானந்தா அனைத்து அரசாங்கத்திலும் அமைச்சராக இருந்தார். நாங்கள் எவரையும் பாரபட்சம் பார்க்கமாட்டோம். அனைத்து விடயங்களையும் விசாரிப்போம் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரையொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து எமது பிரச்சனைக்கு தீர்வு காண்பதே உண்மையான அரசியல். உங்களுக்குத் தெரியும் இலங்கையில் சட்டமும் ஒழுங்கும் அதிகாரம் படைத்த சிலருக்கு விதிவிலக்காக இருந்தன. அது சாதாரண மக்களுக்காகவே இருந்தது. ஆனால், இன்று அந்த நிலை இல்லை. அனைத்தையும் மாற்றியுள்ளோம். உங்களின் வாக்குகளால் அனைத்து விடயங்களும் மாற்றப்பட்டுள்ளன. லஞ்சத்திலும் ஊழலிலும் ஈடுபட்ட பெரும் பணமுதலைகளைப் பிடித்து, அவர்களைத் தண்டிக்கும் வேலைத்திட்டங்கள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. முன்னொரு காலத்தில், அமைச்சர்களைக் கண்டு பொலிஸார் ஓடியொழிந்தார்கள். இன்று பொலிஸாருக்குப் பயந்து அமைச்சர்கள் ஓடியொளிகின்றனர். ராஜபக்சவே பெரிய முதலை ‘வடமாகாணத்தில் இருக்கின்ற கள்வர்களை நீங்கள் பிடிக்கமாட்டீர்களா? என்று கிளிநொச்சியில் வைத்து ஒருவர் என்னிடம் கேட்டார். நிச்சயமாகப் பிடிப்போம். கள்வர்களைப் பிடிப்பதில் வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற வேறுபாடு எமக்கில்லை. இங்கும் மன்னாரில் இருந்து புத்தளத்துக்குச் சொப்பின் பையுடன் வந்தவர்கள் இருக்கின்றனர். இப்போது அவர்களது சொத்துக்கள் மூலம் பத்து கப்பல்களை வாங்க முடியும். டக்ளஸ் எல்லா அரசாங்கத்திலும் அமைச்சராக இருந்தார். நாங்கள் யாரையும் பாரபட்சம் பாக்கமாட்டோம். பொதுமக்களின் பணத்தை ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். பெரிய முதலைகள் கொழும்பிலே தான் இருக்கிறார்கள். ராஜபக்ச மிகப்பெரிய முதலை. நாமல், யோஷித ஆகியோருக்கு எதிராகப் பொதுமக்களின் பணத்தை சூறையாடியதற்காக வழக்குகள் பதிவுசெய்துள்ளோம். எனவே உங்கள் வாக்குகள் மூலம் நாட்டின் சட்டமும் ஒழுங்கும் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது என்று பெருமைகொள்ளுங்கள். நாட்டின் பாதாளக் குழுக்களை உருவாக்கியது ராஜபக்சக்களும், விக்கிரமசிங்கக்களும், பிரேமதாஸக்களுமே. பொட்டுவைத்தாலும் சோதனை முன்பு சோதனைச் சாவடிகளில் பெண்கள் பொட்டு வைத்துச்சென்றால் இருமுறை சோதனை செய்வார்கள். பொட்டு இல்லாவிடில் ஒருதரம் செய்வார்கள், முஸ்லிம் மக்கள் என்றால் மூன்றுதரம் சோதனை செய்வார்கள், அதை மாற்றும் செயற்பாட்டை நாம் முன்னெடுத்துள்ளோம். நாங்கள் இந்த அரசை பொறுப்பெடுத்து 5 மாதங்களே ஆகின்றது. ஓட்டோவை வேகமாகத் திருப்பலாம் பேருந்தையும் கப்பலையும் வேகமாகத் திருப்புவது கடினமே. பிழையான வழியில் சென்ற தேசத்தையே திருப்ப நாம் முற்பட்டுள்ளோம். உங்களுக்கும் எனக்கும் கிடைத்தது சொர்க்கமான பூமி அல்ல. வங்குரோத்தான ஒரு நாடு. ரணில் இந்த நாட்டை ஆண்டபோது டொலரின் பெறுமதி காலை ஒரு விலையிலும் மாலை ஒரு விலையிலும் (?) இருந்தது. இன்று அதில் ஒரு உறுதித்தன்மை காணப்படுகின்றது. உங்கள் பொருளாதார பிரச்சனைகள் தீர்வதற்குக் கொஞ்சகாலம் எடுக்கும். ஆனால், நிச்சயம் தீர்த்துவைப்போம். கம்பன்பில ராஜபக்சவின் கோளையாள் தெற்கின் கம்மன்பில போன்றோர் வடக்கிலும் உள்ளனர். அரசியல் அநாதைகளாக அவர்கள் மாறியுள்ளனர். அவர்கள் இனவாதத்தை விதைக்கிறார்கள். ஈஸ்ரர் தாக்குதலில் சந்தேகத்தின் பெயரில்தான் பிள்ளையானைக் கைதுசெய்திருக்கிறோம். அவரைக் கைதுசெய்தவுடன் அவருடன் தொலைபேசி அழைப்பில் கதைக்கவேண்டும் என முதலாவதாக முற்பட்டவர் யார் என்று தெரியுமா? பிள்ளையானின் மனைவி அல்ல. ரணில் விக்கிரமசிங்க. அவர்கள் இருவரும் நண்பர்களா? ஒருபோதும் இல்லை. கம்மன்பில பிள்ளையானின் சட்டத்தரணியாக ஏன் மாறுகிறார்? அவர் ராயபக்சவின் கோளையாள். உயிர்த்தஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை கண்டறிய விசாரணை நடத்தப்படும்போது ராஜபக்ச, ரணில், சஜித் அனைவரும் குழப்பம் அடைந்துள்ளனர். நாட்டை வளப்படுத்த முற்படும்போது கள்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்-என்றார். https://www.ilakku.org/டக்ளஸ்-தொடர்பில்-சகல-விட/

செம்மணிப் படுகொலை நினைவு முற்றம் - தமிழ் தேசியப் பேரவை திட்டம்

3 months 2 weeks ago
செம்மணிப் படுகொலை நினைவு முற்றம் - தமிழ் தேசியப் பேரவை திட்டம் தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை, எதிர்காலச் சந்ததியினருக்குக் கடத்தும் வகையில் செம்மணிப் படுகொலை நினைவு முற்றம் உருவாக்கப்படும். அத்துடன், தமிழின வரலாற்றுடன் தொடர்புடைய விடயங்கள் புனரமைக்கப்படும் என்று தமிழ் தேசியப் பேரவை தெரிவித்துள்ளது. உள்ளுராட்சித் தேர்தலை முன்னிட்டு தமிழ்த்தேசியப் பேரவை யாழ்.மாநகர சபைக்கான முன்மொழிவுகளை உள்ளிடக்கிய செயற்றிட்ட ஆவணத்தை நேற்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் வெளியிட்டது. அந்த அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், ந.ஸ்ரீகாந்தா ஆகியோரும் முன்னாள் வடமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன், தென்மராட்சி சிவில் சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன், வேலணை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் க.நாவலன், யாழ் மாநகர சபை வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். https://newuthayan.com/article/செம்மணிப்_படுகொலை_நினைவு_முற்றம்_-_தமிழ்_தேசியப்_பேரவை_திட்டம்

துப்பாக்கிச் சூட்டில் தந்தை, மகள் உயிரிழப்பு; மகன் படுகாயம்!

3 months 2 weeks ago
மித்தெனிய முக்கொலைச் சம்பவம் – மற்றுமொரு நபர் கைது! மித்தெனிய முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் மித்தெனிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கஜ்ஜா எனப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படும் சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். … இதேவேளை கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவிநுவர ஶ்ரீ விஷ்ணு கோயிலின் தெற்கு வாயிலுக்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி, குற்றச் செயலானது கடந்த மார்ச் 21ஆம் திகதி இடம்பெற்றிருந்ததுடன் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட துப்பாக்கிதாரிகளை வாகனத்தில் அழைத்துச் சென்றதோடு, துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு சதித்திட்டம் தீட்டி அவர்களுக்கு உதவியமைக்காக குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தலல்ல தெற்கு, கந்தர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. https://athavannews.com/2025/1429472

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாகப் பகிரப்படும் போலிச்செய்தி!

3 months 2 weeks ago
அடுத்தவர்.... ஆபிரிக்க, கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வந்தால் நன்றாக இருக்கும். 👍 கிழக்கு ஆசியா... எனும் போது... பான் கீ மூன் போன்ற ஆட்கள் அல்ல. இந்திய, ஸ்ரீலங்கா போன்ற ஆட்கள்... இதற்கு சரிப்பட்டு வர மாட்டார்கள். எனது வாக்கு.... ஆபிரிக்கருக்கே. 🙂

பாகிஸ்தான் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் அறிவிப்பு!

3 months 2 weeks ago
பாகிஸ்தான் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் அறிவிப்பு! இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் இன்று உத்தியோகபூர்வாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்திய விமானங்கள் தமது வான் வெளியை பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் இன்று தடை விதித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உடனான இராஜதந்திர உறவுகளை இந்தியா நிறுத்திக்கொண்டுள்ள நிலையில் பாகிஸ்தானும் இந்தியாவிற்கு எதிரான தீர்மானங்களை அறிவித்து வருகின்றது. இதேவேளை பிரபல சமூக ஊடக தளமான எக்ஸ் இல், இந்திய மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கமைய, பாகிஸ்தான் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அனந்த்நாக்கில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. …………………………………….. பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ள நிலையில் தனது நாட்டு வான்வெளியில் இந்திய விமானங்கள் நுழைய பாகிஸ்தான் இன்று தடை விதித்தது. அத்துடன் கராச்சி கடலோரப் பகுதியில் இன்றும் நாளையும் தரையில் இருந்து இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நடத்துவதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக ANI நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கை எதிராக இன்று மாலை பாகிஸ்தான் எதிர்வினையாற்றும் என பாகிஸ்தான் பிரதமர், வெளியுறவு அமைச்சர் இசாக் தர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் முதலாவதாக தனது நாட்டு வான்வெளியில் இந்திய விமானங்கள் நுழைய பாகிஸ்தான் தடை விதித்துள்ளதுடன் மேலும் பல தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429433

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானுடன் விளையாடப் போவதில்லை- பி.சி.சி.ஐ. உறுதி

3 months 2 weeks ago
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானுடன் விளையாடப் போவதில்லை- பி.சி.சி.ஐ. உறுதி. பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாடப் போவதில்லை என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை (BCCI ) அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இத் தாக்குதலுக்கு விளையாட்டுப் பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதன் எதிரொலியாக இனி வரும் காலங்களில் பாகிஸ்தானுடன் இரு தரப்பு தொடர்களில் விளையாடப் போவதில்லை என பி.சி.சி.ஐ. உறுதி அளித்துள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா கருத்துத் தெரிவிக்கையில் ‘இனி வரும் நாட்களிலும் இருதரப்பு போட்டிகளில் பாகிஸ்தானுடன் கண்டிப்பாக விளையாட மாட்டோம். பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் இருக்கிறோம். எங்கள் அரசாங்கம் என்ன சொன்னாலும், நாங்கள் செய்வோம். அரசாங்கத்தின் நிலைப்பாடு காரணமாக இருதரப்பு போட்டிகளில் பாகிஸ்தானுடன் விளையாடுவதில்லை. இனி வரும் காலங்களிலும் இருதரப்பு போட்டிகளில் பாகிஸ்தானுடன் விளையாட மாட்டோம். ஆனால் ஐ.சி.சி. போட்டிகளை பொறுத்தவரை, ICC வற்புறுத்தலின் காரணமாக நாங்கள் விளையாடுகிறோம்‘ இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் ICC தொடர்களில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம் என ஐ.சி.சி.-க்கு பி.சி.சி.ஐ. கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு தரப்பு தொடர்களில் விளையாடவில்லை. ஐ.சி.சி. தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429463

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
இனி என்ன கீழ இருக்குற நாலு அணியும் அடுத்த பருவகாலத்துக்கு இப்பவே தயார் படுத்தத் தொடங்கலாம். அதே அணியையே அடுத்த வருசமும் இறக்கிற என்று தோனி சொல்லியிருக்கிறார் போல. வடிவேலு பகிடி மாதிரி, மாத்தி மாத்தி விளையாடலாம். சரியான அணியைக் கட்டமைக்க முயிற்சிக்கலாம். என்ன தேவை என்று அடையாளப்படுத்தலாம். மினி ஏலத்தில விடுபட்ட காய்களை வாங்கலாம். முக்கியமா, இங்க யாழ்களத்தில சேர்ந்தினம் என்றால், அவர்களுக்கு எல்லாம் விளங்கும். யாரை கலைக்க வேண்டும் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் பிரிச்சு மேயாத மேய்ச்சலா. கிருபன்தான் ஆவன செய்ய வேண்டும். 😁

வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்

3 months 2 weeks ago
யாழ்கள் சட்ட மன்ற தேர்தல் போட்டியில் கலந்து கொள்வதற்கு இந்த திரியில் மூழ்கி எழுந்தால் போதும் போல இருக்கிறது. எனக்கு சட்ட மன்ற தேர்தலுக்கு மற்ற தேர்தலுக்குமே (பெயர் தெரியவில்லை நாடுளுமன்ற தேர்தல்?) வித்தியாசம் தெரியவில்லை. பையன் யாழ்கள போட்டிக்காக நேரடியாக இந்தியாவிற்கு சென்று களநிலவரங்களை அவதானித்து வருகிறாரோ? தேர்தல் எப்போது?

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
அவருடைய ஓட்டத்தினை விட அதிகமான பந்துகளை அதிகமாக எடுத்துக்கொண்ட ஒரே வீரராக அவர் இருந்திருந்தார், கடந்த போட்டிகளின் தோல்வியின் போது ராஜஸ்தான ரசிகர்கள் அவரில் கொஞ்சம் மனஸ்தாபத்தில் இருந்தார்கள், இந்த போட்டியின் பிறகு கொலைவெறியில் இருப்பாகள்.🤣 குருணலின் பந்து வீச்சிற்கு ஒற்றை ஓட்டம் எடுக்கமுடியவில்லை🤣, அவர் தேவையில்லாமல் ஏற்படுத்திகொண்ட அழுத்ததினை பார்த்து கேசல்வூட்டின் ஓவரை இறுதி ஓவருக்கு சேமித்து வைத்தார்கள் (அப்போது 2 ஓவர்கள் அவரிடம் இருந்தது), அதனால் பின் பகுதியில் அவர்கள் நிலமையினை கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது. சரி உங்களுக்காக இந்த ஒரு முறை மன்னிச்சு விட்டிருக்கு என்பதனை ஜுரலிடம் கூறுங்கள்.😂

மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பரம்பரைப் படிமங்கள்

3 months 2 weeks ago
அமரர் ஆனந்தீஸ்வரி சூரியப்பிரகாசம் (ஆனந்தி), பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தியாளர், அவர்களை தமிழீழ தேசியத் தலைவர் சந்தித்த போது துவாரகாவுடன் கதைவளிப்படுகிறார் 03.1993/ 04.1995
Checked
Sat, 08/09/2025 - 06:53
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed