புதிய பதிவுகள்2

வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்

3 months 2 weeks ago
சீமான் சில விடயங்களில் மிகவும் ஆணித்தரமாக இருக்கிறார் 1 - கூட்டு இல்லை என்பது 2- இரட்டை இலைக்கும் சூரியனுக்கும் மாற்று இல்லை என்று இனி சொல்ல வாய்ப்பில்லை 3- ஆரம்பத்தில் இருந்த விஜய் இன்று இல்லை (ஆடம்பரம் மற்றும் வெற்றியை தேடிய கோடி கொடுப்பனவுகளால் பத்தோடு பதினொன்றியாகியாச்சு.) எனவே நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு வேறு இது வேறு. 4- தமிழ் தேசியம் என்பது கட்சி ரீதியாக கட்டி எழுப்பி இளம் தலைமுறை எழுந்தாச்சு. இதை இனி சீமானாலும் கட்டுப்படுத்த முடியாது. 5- இரட்டை இலைக்கும் சூரியனுக்குமான வாக்குகள் தேய்மானமும் இளம் தலைமுறை நாம் தமிழர் வாக்குகள் வளர்பிறை தன்மையும் கொண்டவை.

ஜம்மு - காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: கர்நாடகா, ஒடிசா சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலி

3 months 2 weeks ago
பொட்டுவைத்திருந்தால் போதும் அடி விழும்...இன்று பொட்டு,விபூதி,குல்லா போட்டவன் எல்லாம் சிறிலங்கன்ஸ் என அடிச்சு துவசம் பணிணைனவையளே கூவிக்கொண்டு திரியினம் ... மோடி ஜீ இது கிரிக்கட் விளையாட்டு அல்ல.... பங்காளதேஷ் மீண்டும் பாகிஸ்தானுடன் இணையப்போகின்றதாம் என முஸ்லீம் ஆய்வாளர்கள் கருத்து சொல்லுயினம்...மோடி ஜீ தடுப்பாரா?உங்களுக்கு உதவிகள் தேவை என்றால் டோழர் அனுராவிடம் கேளுங்கோ...

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
ராஜஸ்தான் மிக இலகுவாக வெல்லவேண்டிய மூன்று போட்டிகளை தோற்றதற்கு காரணம் நல்ல பினிஷெர்ஸ் இல்லாததே! பராக், ஜுரேல்,ஹெட்மேயருக்கும், பட்லருக்கும் அதுதான் வித்தியாசம்! கோலிக்கு அடுத்தபடியாக பெஸ்ட் சேசர் படலர்தான்!! ஜுரேலை ஏலத்தில் குறைந்த விலைக்கே எடுத்திருக்கலாம்! ஜுரேல் ஆரம்பத்தில் மெதுவாக ஆடியதும் தோல்விக்கு ஒரு காரணம்! 34 பந்துகளில் 13 பந்துகளுக்கு ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை! KKR வெங்கடேஷை 23 கோடிக்கு எடுத்து பில் சோல்ட்ட கோட்டை விட்ட மாதிரி!

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
அந்தக் கருமத்த மட்டும்தான் பாக்கேல. ஆனால் மற்ற எல்லா கிரிக்கட் போட்டியும் பார்ப்பேன். இந்தவாரம நடந்த பங்களேதேஷ் சிம்பாப்வே போட்டி கூட ஒவ்வொருநாளும் தொடரந்தனான். சிம்பாப்வே வென்றதில் மிக்க மகழ்ச்சி. அனேகமா, ஜபில் இல் உள்ள எல்லா வீரர்களைப் பற்றியும் தெரியும். இந்த வருசம், அந்தக் கருமத்தையும் பார்க்க வைத்த சாபம் உங்களைத்தான் சாரும். போதையேறிக் கிடக்கு. விட முடியேல. இங்கே எழுதுவதற்காகவே பார்க்கிறன். வாசிக்கிறன். தேடுறேன். எனக்கு என்னதான் ஆச்சு.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
GMT நேரப்படி நாளை வெள்ளி 25 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 43) வெள்ளி 25 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் CSK எதிர் SRH 19 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் நான்கு பேர் மாத்திரம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் பிரபா வாதவூரான் ஏராளன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் செம்பாட்டான் கந்தப்பு ரசோதரன் நந்தன் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?

யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவத்துவ பீடக்கற்கை நெறியின் தமிழ் மொழி மூல கற்பித்தலை மாற்றம் செய்யக் கூடாது - ஆறு.திருமுருகன் வேண்டுகோள்

3 months 2 weeks ago
இதுக்கு எங்கடை 3 ..எம்பிமாரும் ....ஆமாபோட்டிருப்பினம் ...அவைக்கு தலை கால் தெரியாதுதானே

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
அட ..அல்வாயான் 5 ம் இடத்துக்கு வந்துவிட்டார்...மாந்திரீகம்...ஊரில் இருந்தே வேலை செய்யுது... செம்பாட்டான் என்னை நம்பி ...இந்த மாந்திரிகரை பிடியுங்கோ...இன்னுமொரு 5 படிதான் உங்களுக்கு இருக்கு

மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு : நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா? -நாமல் கேள்வி

3 months 2 weeks ago
கொலைகாரனே வெளியில் நின்று அரசிடம் நீதி கேட்கும் நிலை சிரிலங்காவில்

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 42வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் விராட் கோலியும் டேவ்தட் படிக்கலும் வேகமாக அடித்தாடி எடுத்த அரைச் சதங்களுடனும் பிற வீரர்களின் கமியோ ஆட்டங்களுடனும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் புயல்வேகத்தில் 49 ஓட்டங்களை எடுத்து சவாலான வெற்றி இலக்கை அடையக் கூடிய சாத்தியத்தை ஏற்படுத்தினர். பின்னர் வந்த வீரர்களின் விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 18 ஓவர்கள் முடிவில் வெற்றிபெற 18 ஓட்டங்களே தேவைப்பட்டிருந்தது. எனினும் 19வது ஓவரில் ஜொஷ் ஹேஸல்வூட் இரு விக்கெட்டுகளையும், 20 ஓவரில் யஷ் தயால் ஒரு விக்கெட்டையும், இன்னொரு விக்கெட்டை ரண் அவுட் மூலமாகவும் அதிக ஓட்டங்களைக் கொடுக்காது எடுத்ததனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிவாய்ப்பு கைநழுவியது. இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களையே எடுத்தது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 11 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 07 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: அப்ப @செம்பாட்டான் வருடாவருடம் ஐபிஎல் போட்டிகளைப் பார்க்கின்றவராக்கும்! இந்த வருஷம்தான் பார்க்க ஆரம்பித்தேன் என்று சொன்னமாதிரி இருந்தது 🤪

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் ஒரே சட்டம்! -ஜனாதிபதி உறுதி

3 months 2 weeks ago
உந்த லோக்கல் தேர்தலுக்கு சனாதிபதிமுதல் ஆமைச்சர்கள் வரை ..கடும் பிரச்சாரம் செய்வது ...திகைக்க வைக்கிறது...இங்கு கனடாவில் மத்திய தெர்தல் 28 திகதி நடக்கப்போகுது...முத்தம் வழிய வீட்டுக்கரரின் அனுமதி பெற்றே..பதாகை வைப்ப்னம் ..மற்றும்படி எதுவும் கிடையாது..துண்டுபிரசுரத்தை ..கதவி ல் தொங்கவிட்டுப் போய் விடுவினம் .. இதென்னடாவென்றால் கக்கூசு வண்டில் ஓடுவதற்கும் ...சயிக்கிள் நம்பர் பிளேட்டும் கொடுப்பதற்கு இருக்கும் இடத்துக்கு சனாதிபதி வரவேண்டிக்கிடக்கு

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
அந்த முடிவு சரியென்றே நினைக்கிறேன். பட்லர் இந்த வருசம் புதுசா விளையாடுறார். போன வருசம் முழுக்க அவற்ற சுதப்பல் பார்க்கேலையோ. இங்கிலாந்து அணி வாங்காத அடியா. அவர் தலைமைப் பொறுப்பிலும் இருந்து விலகிவிட்டார். அது எல்லாவற்றையும் வைத்துத்தான் ராஜஸ்தான் அந்த முடிவை எடுத்திருப்பினம் இல்லையா. ஜுரல் நல்ல தெரிவுதான். இளம்பெடியன் வேற. 24 வயதுதான். இன்றைக்கு அவன் காட்டின காட்டு பார்த்தனீங்கள்தானே. நம்ம சிம்ரன என்ன என்று சொல்லத் தெரியேல. மேற்கிந்தியதீவு வீரர்கள் இந்தமுறை நன்றாகவே இல்லை. அவர்கள் உலகம் முழுக்க விளையாடுற T20 போட்டிகளினால் இருக்கலாம். அங்கிருந்து வரும் வீரர்கள் அடித்துத் துவைக்கும் காலம் மலையேறிவிட்டது. கனகாலத்துக்கு காட்டடி அடிக்க முடியாது. உடல் பலம் மட்டும் போதாது. அதுவும் இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொருவருக்கும் ஒரு கணக்கு இருக்கும். இப்பிடிப் போடு எப்பிடிப் போறார் என்று பார்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
இப்போதுதான் ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லரின் அருமை புரியும்! அவரை தக்க வைக்காமல் ஹெட்மேயரையும் ஜூரோலையும் 11 கோடிக்கும் 14 கோடிக்கும் தக்க வச்சவை! அதை ராகுல் டிராவிட் சரியென்று வேற சொன்னவர்! டிராவிட் டெஸ்ட் டீமை கோச் பண்ணிறமாதிரி T20 டீமை கோச் பண்ணலாமென்று நினைக்கிறார்!

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
உண்மையிலேயே இன்று இரு அணிகளிலும் ஒருவரையும் குறை சொல்ல முடியாது. சின்னச் சின்ன கணங்கள் போட்டியின் போக்கை மாற்றிவிட்டது. இரு அணிகளிலும் நன்றாக முயற்சித்தார்கள். RCB ஒரு அடி முன்னுக்குப் போய்விட்டது. அவ்வளவுதான்.

பிள்ளையான் ‍- பிரதேசவாதத்திற்குள் மறைந்திருந்த மனித குல எதிரி

3 months 2 weeks ago
சுரண்டல் எனும் வார்த்தையினை பாவித்ததால் இடது சாரி சித்தாந்தம் என எனது கருத்தை வரையறை செய்கிறீர்கள் என கருதுகிறேன், எனக்கு அந்த அரசியல் எதுவும் தெரியாது, எமது செயல்களினால் ஏற்படும் பாதிப்பு பற்றி கூறினேன் அவ்வளவுதான் (சுரண்டல் எனும் வார்த்தை பாவித்ததன் காரணம் வேறொருவருக்கு சொந்தமானதை அவரது அனுமதியின் எடுப்பதற்கு உள்ள வார்த்தையினை பொதுவாக யாரும் விரும்புவதில்லை). இது உபதேசம் அல்ல, சில விடயங்கள் நடக்கும் போது எமக்கு ஏன் தான் இப்படி நடக்கிறது என நினைப்போம் காரணம் தீதும் நன்றும் பிறர் தர வராது.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
விளையாட்டு அருமை................. எங்கே ராஜஸ்தான் வென்றிடுமோ, எனக்கு அதிர்ஷ்டம் எக்கச்சக்கமாக வேலை செய்யுதோ என்று ஒரு நினைப்பு இடையில் வந்தது.............. அப்படி ஒன்றும் கிடையாது என்று கடைசியில் தலையில் ஒரு குட்டு விழுந்தது...............
Checked
Sat, 08/09/2025 - 03:52
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed