1 day 12 hours ago
19 DEC, 2024 | 07:22 AM
(நெவில் அன்தனி)
கத்தார் தேசத்தின் தலைநகர் தோஹாவில் நேற்று இரவு நடைபெற்ற சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளன (FIFA) விருது விழாவில் அதி உயரிய விருதுகைளை வினிசியஸ் Jr, ஆய்ட்டான பொன்மாட்டி வென்றெடுத்தனர்.
பிரேஸில் முன்கள வீரர் வினிசியஸ் Jr. வருடத்தின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரராகவும் ஸ்பெய்ன் மத்திய கள வீராங்கனை ஆய்ட்டானா பொன்மாட்டி, வருடத்தின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையாகவும் தெரிவாகினர்.
அற்புதமான கால்பந்தாட்ட ஆற்றலைக் கொண்டுள்ள பிரேஸில் தேசிய அணி வீரரும், ரியல் மெட்றிட் கழக விரருமான வினிசியஸ் ஜூனியர் (Jr.) முதல் தடவையாக வருடத்தின் அதிசிறந்த வீரருக்கான பீபா விருதை வென்றெடுத்தார்.
ரியல் மெட்றிட் கழகத்தின் நட்சத்திர வீரரான வினிசியஸ் Jr., உள்ளூர் கால்பந்தாட்டப் போட்டிகளிலும் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளிலும் கழகத்தின் வெற்றிகளில் பெரும் பங்காற்றி இருந்தார்.
வினிசியஸ் ஜூனியரின் கால்பந்தாட்ட வாழ்க்கையில் 2023-24 மிகச்சிறந்த பருவகாலமாக பதிவானது. இந்த பருவகாலத்தில் ரியல் மெட்றிட் கழகத்திற்காக 39 போட்டிகளில் விளையாடிய வினிசியஸ் 24 கோல்களைப் புகுத்தியிருந்தார்.
பொருசியா டோர்ட்மண்ட் அணிக்கு எதிரான ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி வெற்றியில் ரியல் மெட்றிட் சார்பாக ஒரு கோலை புகுத்திய வினிசியஸ், சுப்பகோப்பா டி எஸ்பானா இறுதிப் போட்டியில் பார்சிலோனாவுக்கு எதிராக ஹெட்-ட்ரிக் முறையில் கோல்களைப் போட்டு அசத்தியிருந்தார்.
பிபாவின் அதிசிறந்த வீரருக்கான விருதை 2007க்குப் பின்னர் வென்றெடுத்த முதலாவது பிரேஸில் வீரர் என்ற பெருமையை வினிசியஸ் Jr. பெற்றுள்ளார்.
ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் மற்றும் லா லிகா ஆகிய இரண்டு சம்பியன் பட்டங்களை வென்றெடுத்த வினிசியஸ் ஜூனியர், அதிசிறந்த 2023 - 24 சம்பயின்ஸ் லீக் வீரர் என்ற விருதையும் தனதாக்கிக்கொண்டிருந்தார்.
அதிசிறந்த வீராங்கனை பொன்மாட்டி
வருடத்தின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீராங்கனைக்கான பீபா வீருதை இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக ஸ்பெய்ன் மற்றும் பார்சிலோனாவின் சுப்பஸ்டார் ஆய்ட்டானா பொன்மாட்டி வென்றெடுத்து பலத்த பாராட்டைப் பெற்றார்.
தேசிய அணியிலும் கழக அணியிலும் அவர் வெளிப்படுத்திய அதிசிறந்த மற்றும் வெற்றிகரமான ஆற்றல்களுக்காகவே இந்த விருதை அவர் வென்றெடுத்துள்ளார்.
இந்த விருதை ஒரு தடவைக்கு மேல் வென்றெடுத்த வீராங்கனைகள் வரிசையில் மியா ஹாம், கார்லி லொய்ட், மார்த்தா, பேர்ஜிட் பிறின்ஸ், அலெக்சியா பியூட்டெல்லாஸ் ஆகியோருடன் இப்போது ஆய்ட்டானா பொன்மாட்டி இணைந்துகொண்டுள்ளார்.
2023 - 24 பருவகாலத்தில் நடைபெற்ற ஐரோப்பிய மகளிர் நேஷன் லீக் கால்பந்தாட்டத்தில் சம்பியனான ஸ்பெய்ன் அணியிலும் ஐரோப்பிய மகளிர் சம்பியன்ஸ் லீக் ககால்பந்தாட்டத்தில் சம்பியனான பார்சிலோனா அணியிலும் முக்கிய பங்காற்றிய வீராங்கனைகளில் பொன்மாட்டியும் ஒருவராவார்.
ஐரொப்பிய மகளிர் சம்பியன்ஸ் லீக் பருவகாலத்தில் அதிசிறந்த வீராங்கனையாக 26 வயதுடைய பொன்மாட்டி தெரிவாகி விருது வழங்கப்பட்டது.
அத்துடன் நேஷன்ஸ் லீக் இறுதி ஆட்ட நாயகி, சம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்ட நாயகி ஆகிய விருதுகளையும் வென்றெடுத்த பொன்மாட்டி, கோப்பா டி லா ரெய்னா விருது, சுப்பகோப்பா டி எஸ்பானா ஃபெமினினா விருது ஆகியவற்றையும் தனதாக்கிக்கொண்டார்.
ஏனைய விருதுகள்
அதிசிறந்த ஆடவர் அணி பயிற்றுநர்: கார்லோஸ் அன்சிலோட்டி (ரியல் மெட்றிட்). முதல் தடவையாக இந்த விருதை வென்றெடுத்துள்ளார்.
ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக், லா லிகா, சுப்பகோப்பா டி எஸ்பானா ஆகிய மூன்று சம்பியன் பட்டங்களை ரியல் மெட்றிட் கழகத்திற்கு வென்கொடுத்த பயிற்றுநர்.
அதிசிறந்த மகளிர் அணி பயிற்றுநர்: எமா ஹெய்ன்ஸ் (செல்சி மற்றும் ஐக்கிய அமெரிக்கா). இந்த விருதை இரண்டாவது தடவையாக எமா வென்றெடுத்துள்ளார்.
மகளிர் சுப்ப லீக்கில் செல்சியை சம்பியனாக வழிநடத்திய எமா, பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா மகளிர் கால்பந்தாட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற ஐக்கிய அமெரிக்க அணியின் பயிற்றுநராகவும் செயற்பட்டிருந்தார்.
ஆண்களில் அதிசிறந்த கோல்காப்பாளர்: எமிலியானோ மார்ட்டினெஸ் (ஆர்ஜன்டீனா)
பெண்களில் அதிசிறந்த கோல்காப்பாளர்: அலிசா நோயர் (ஐக்கிய அமெரிக்கா)
ஆண்களில் அதிசிறந்த கோலுக்கான புஸ்காஸ் விருது: அலெஜாண்ட்ரோ கானாச்சோ (மென்செஸ்டர் யுனைட்டட்).
எவட்டன் கழகத்திற்கு எதிரான கால்பந்தாட்டப் போட்டியில் தலைக்கு மெலாக வந்த பந்தை நோக்கி உயரே தாவி அந்தரத்தில் இருந்தவாறு கானாச்சோ வலதுகாலால் பின்னோக்கி உதைத்து போட்ட கோல் அதிசிறந்த கோலாக தேர்வுசெய்யப்பட்டது.
பெண்களில் அதிசிறந்த கோலுக்கான அங்குரார்ப்பண மார்த்தா விருது: பிரேஸில் முன்கள வீராங்கனை மார்த்தா வியரா டா சில்வா முதலாவது வீராங்கனையாக மகளிர் கால்பந்தாட்டத்தில் அதிசிறந்த கோலுக்கான விருதை வென்றெடுத்தார். இதில் ஒரு விசேடம் என்னவென்றால் தனது சொந்த பெயரில் அறிமுகமான விருதை அவரே வென்றெடுத்ததாகும்.
ஜெமெய்க்காவுக்கு எதிரான போட்டியில் எதிரணி வீராங்கனையால் நகர்த்தப்பட்ட பந்தை பெற்றுக்கொண்ட மார்த்தா, அதனைத் தனியாக முன்னோக்கி நகர்த்திச் சென்று இடதுகாலால் உதைத்து போட்ட கோல் அதிசிறந்த கோலாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
https://www.virakesari.lk/article/201611
1 day 12 hours ago
ஜேர்மனியில் கிறிஸ்மஸ் சந்தையில் பொதுமக்கள் மீது வாகனத்தால் மோதிய நபர் – சவுதிமருத்துவர்- தனித்து செயற்பட்டுள்ளார்
21 DEC, 2024 | 08:15 AM
ஜேர்மனியில் கிறிஸ்மஸ் சந்தையில் பொதுமக்கள் மீது காரை செலுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்திய நபர் தனியாக செயற்பட்டுள்ளார் என சம்பவம் இடம்பெற்ற சக்சனி அல்ஹாட் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது மாநிலத்திற்கும் அதன் தலைநகரிற்கும் துயரமான நாள்,இருவர் உயிரிழந்துள்ளனர் பலர் காயமடைந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளி கைதுசெய்யப்பட்டுள்ளார் இவர் சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயது நபர்,2006 இல் ஜேர்மனிக்கு வந்த இவர் நிரந்தர வதிவிட ஆவணத்தை பெற்றவர் என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இவர் மக்டர்பேர்க்கிலிருந்து 35 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பேர்ன்பேர்க்கில் மருத்துவராக பணிபுரிந்திருந்தார்.
எங்களிற்கு கிடைத்த தகவலின்படி அவர் தனியாக இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளார்,வேறு எவரும் இணைந்து செயற்பட்டதாக தகவல் இல்லை,என சம்பவம் இடம்பெற்ற மாநிலத்தின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
https://www.virakesari.lk/article/201779
1 day 12 hours ago
பல ஆண்டுகாலமாக அரசியலில் செல்வாக்கு செலுத்தும் அரசியல்வாதிகளுக்கு கோடிக்கணக்கில் எவ்வாறு நிதியளிக்க முடியும் - ஜாமுனி காமந்த துஷார
Published By: DIGITAL DESK 2 21 DEC, 2024 | 09:57 AM
(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நன்கொடை அல்லது நிதியுதவி பெற வேண்டுமாயின் குடும்ப உறுப்பினர்களின் மாத வருமானம் 1 இலட்சத்துக்கும் குறைவானதாக காணப்பட வேண்டும் என்ற நிபந்தனை காணப்படுகின்ற நிலையில் பல ஆண்டுகாலமாக அரசியலில் செல்வாக்கு செலுத்திய அரசியல்வாதிகளுக்கு எவ்வாறு கோடிக்கணக்கில் நிதியளிக்க முடியும்.
முறையற்ற இந்த செயற்பாடு குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு வழங்கிய நிதியை மீளப்பெற வேண்டும் என இலஞ்ச, ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷார தெரிவித்தார்.
2005 முதல் 2024 வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 10 இலட்சம் முதல் கோடி கணக்கில் நிதி பெற்றுக்கொண்ட அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் வெளியிட்டார். இவ்விடயம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (20) முறைப்பாடளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
வறுமை நிலையில் உள்ள மக்களின் நலன்புரி தேவைகள் மற்றும் வாழ்வியல் மேம்பாட்டுக்காகவே ஜனாதிபதி நிதியம் 1978 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.
1978 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க ஜனாதிபதி நிதியச் சட்டத்தில் நன்கொடை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டிய தரப்பினர் தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், கல்வி மற்றும் புலமை தேர்ச்சி, மத மேம்பாடு, தேசியத்துக்காக சேவையாற்றியவர்களுக்கான நன்கொடை மற்றும் ஜனாதிபதி அல்லது நிதிய சபையின் தீர்மானத்துக்கு அமைய என்ற அடிப்படையில் நன்கொடை வழங்கப்பட வேண்டும்.
சாதாரண மக்கள் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நன்கொடையை பெற்றுக்கொள்வது இலகுவானதொன்றல்ல, நிதியத்தில் இருந்து நிதி பெறுவதற்கு எதிர்பார்க்கும் நபரின் குடும்ப உறுப்பினர்களின் மாத வருமானம் 1 இலட்சத்துக்கு குறைவானதாக காணப்பட வேண்டும், சிகிச்சைக்கு நிதி பெறுவதாயின் சிகிச்சையின் 50 சதவீதத்தை பிறிதொரு தரப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பல நிபந்தனைகள் விதிக்கப்படும். கடந்த காலங்களில் தகுதி உள்ளவர்களில் பலருக்கு நிதியத்தில் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கப் பெறவில்லை.
2005 முதல் 2024 ஆம் ஆண்டு வரை பல ஆண்டுகாலம் அமைச்சு, இராஜாங்க அமைச்சு உட்பட அரசாங்கத்தின் உயர் பதவி வகித்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி நிதிய சபையின் தலைவர்களாக பதவி வகித்த முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமக்கு இணக்கமானவர்களுக்கு மாத்திரம் நிதி வழங்கியுள்ளார்கள்.
பல ஆண்டுகாலமாக அரசியலில் செல்வாக்கு செலுத்தும் அரசியல்வாதிகளுக்கு கோடிக்கணக்கில் எவ்வாறு நிதியளிக்க முடியும்.
முறையற்ற இந்த செயற்பாடு குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு வழங்கிய நிதியை மீளப்பெற வேண்டும்.கடந்த கால ஆட்சியாளர்கள் தமது அரசியல் இருப்புக்காக இவ்வாறு முறையற்ற வகையில் செயற்பட்டுள்ளார்கள் . நாட்டு மக்களும் இவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும் என்றார்.
https://www.virakesari.lk/article/201751
1 day 12 hours ago
அவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் குற்றஞ்சாட்டப்பட்ட இராஜதந்திரி ஹிமாலி அருணதிலக தவறிழைக்கவில்லை - வெளிவிவகார அமைச்சர் விளக்கம்
Published By: DIGITAL DESK 7 21 DEC, 2024 | 09:15 AM
(நா.தனுஜா)
வெளிநாடுகளில் பணியாற்றும் இராஜதந்திரிகளால் இலங்கையிலிருந்து அழைத்துச்செல்லப்படும் பணியாட்களுக்கான சம்பளத்தை அரசாங்கமே வழங்கும் என்றும், அச்சம்பளம் இலங்கையில் நடைமுறையிலிருக்கும் சம்பள நிர்ணய விதிகளுக்கு அமைவாகவே தீர்மானிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், அதனடிப்படையில் நோக்குகையில் அண்மையில் சர்ச்சைக்குள்ளான ஹிமாலி அருணதிலகவினால் எவ்வித தவறும் இழைக்கப்படவில்லை என விளக்கமளித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயத்தின்போது ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை (20) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு தற்போது ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாகப் பதவி வகித்துவரும் ஹிமாலி அருணதிலகவுக்கு எதிராக அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு குறித்தும், இவ்விடயத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் விஜித்த ஹேரத், இராஜதந்திரிகள் வெளிநாடுகளில் பதவிகளை வகிக்கும்போது, அவர்கள் தமக்கான வீட்டுப்பணியாட்களை இலங்கையிலிருந்து அழைத்துச்செல்லமுடியும் எனவும், அப்பணியாளர்களுக்கான சம்பளம் அரசாங்கத்தினால் வழங்கப்படுமே தவிர, குறித்த இராஜதந்திரியினால் வழங்கப்படமாட்டாது எனவும் விளக்கமளித்தார்.
அத்தோடு மேற்குறிப்பிட்டவாறு அரசாங்கத்தினால் பணியாட்களுக்கு வழங்கப்படும் ஊதியமானது இலங்கையின் சம்பள நிர்ணயங்களுக்கு அமைவாகவே வழங்கப்படும் என்றும், இருப்பினும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சம்பள அளவுகோல்களுடன் ஒப்பிடுகையில் அது மிகக்குறைவான தொகையாக இருக்கக்கூடும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
'எனவே இராஜதந்திரி ஹிமாலி அருணதிலகவுடன் தொடர்புடைய பிரச்சினை இதனடிப்படையிலேயே தோற்றம் பெற்றிருக்கிறது. மாறாக அவர் அரசாங்கத்திடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதனை பணியாளுக்கு வழங்காமல் இருக்கவில்லை. உண்மையில் இது நாட்டின் கொள்கை சார்ந்த பிரச்சினையாகும். ஆனால் ஹிமாலி அருணதிலகவுக்கு எதிராக ஊடகங்களால் மிகமோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றினால் அவர் தனிப்பட்ட ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்' என்றும் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.
மேலும் இந்த சம்பள நிர்ணய விடயத்தில் அரசாங்கம் கொள்கை ரீதியிலான தீர்மானத்தை எடுக்கவேண்டிய அவசியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாகத் தற்போது பதவி வகித்துவரும் ஹிமாலி அருணதிலக, 2015 - 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராகப் பணியாற்றியபோது அவரது கன்பரா இல்லத்தில் வீட்டுப்பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த இலங்கையைச்சேர்ந்த பிரியங்கா தனரத்ன என்பவருக்கு உரியவாறு ஊதியத்தைச் செலுத்தவில்லை என்றும், ஆகையினால் அவர் பிரியங்காவுக்கு 543,000 டொலர்களைச் செலுத்தவேண்டும் என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
அதனைத்தொடர்ந்து அண்மையில் இவ்வழக்கில் மேற்கொள்ளப்பட்ட இறுதி சமர்ப்பணத்தை அடுத்து, இராஜதந்திரிகள் எதிர்வருங்காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கிலும், இவ்வழக்கு தொடர்பான நீதிமன்ற செயன்முறையில் ஹிமாலி அருணதிலக உரியவாறு பங்கேற்காததன் காரணமாகவும் அவர் மேலும் 117,000 டொலரை பிரியங்கா தனரத்னவுக்குச் செலுத்தவேண்டும் என அந்நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தமை குறிப்பித்தக்கது.
https://www.virakesari.lk/article/201752
1 day 12 hours ago
21 DEC, 2024 | 08:53 AM
(இராஜதுரை ஹஷான்)
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஊடாக உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். சுட்டிக்காட்டப்பட்டுள்ள சட்ட சிக்கலுக்கு தீர்வு பெற்றுக் கொடுத்தால் மாகாண சபைத் தேர்தலை தாராளமாக நடத்தலாம்.
காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் எவ்வித சட்ட சிக்கலும் கிடையாது.
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்து மீண்டும் வேட்புமனுக்களை கோருமாறு அரசியல் கட்சிகள் வலியுறுத்துகின்றன.
வேட்புமனுக்களை இரத்துச் செய்வதாயின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும். ஆகவே சட்டத்திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரிய தீர்மானத்தை எடுத்தால் வெகுவரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தலாம்.
மாகாண சபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஊடாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தியுள்ளோம்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த காலங்களிலும் பல பரிந்துரைகளை பாராளுமன்ற தெரிவுக் குழுக்களிடம் முன்வைத்துள்ளது.
காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.
ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல் சிறந்த முறையில் நடத்தப்பட்டது. தேர்தல் சட்டத் திட்டங்களை பின்பற்றும் நிலையில் மக்கள் உள்ளார்கள்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்து எதிர்வரும் காலங்களில் அரசியல் கட்சித் தலைவர்களுடனும், செயலாளர்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.
தேர்தலை நடத்துவதற்கான சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தினதும், அரசியல் தரப்பினரினதும் பொறுப்பாகும் என்றார்.
https://www.virakesari.lk/article/201740
1 day 12 hours ago
Published By: VISHNU
21 DEC, 2024 | 01:59 AM
இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நோர்வே தூதுவரை H.E. May-Elin Stener, 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை சந்தித்து எமது மக்களின் பல முக்கிய விடயங்கள் மற்றும் சமகால அரசியல் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ம. சுமந்திரனுடன் சந்தித்து கலந்துரையாடினர்.
https://www.virakesari.lk/article/201775
1 day 12 hours ago
ஜனாதிபதி நிதியத்திடமிருந்து உதவித்தொகைப் பெறுவது குற்றமா? - நளிந்த ஜயதிஸ்ஸவிடம் தயாசிறி கேள்வி
20 DEC, 2024 | 05:01 PM
(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி நிதியத்திடமிருந்து மருத்துவ தேவைக்காக உதவித்தொகையைப் பெறுவது சட்டத்துக்கு முரணானதோ அல்லது கொள்ளை குற்றமோ அல்ல.
பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி நிதியத்திடமிருந்து உதவி பெறக் கூடாது என்றால் அதற்குரிய யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறும், தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் ஒருபோதும் இதிலிருந்து உதவியைப் பெறப்போவதில்லை என்று உறுதிமொழியெடுக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.
இன்று வெள்ளிக்கிழமை (20) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இதய சத்திர சிகிச்சைக்காக ஜனாதிபதி நிதியத்திடமிருந்து பெற்றுக் கொண்ட நிதி தொடர்பில் கடந்த பாராளுமன்ற அமர்வில் நான் இல்லாத சந்தர்ப்பத்தில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி நிதியத்திடமிருந்து மருத்துவ தேவைகளுக்காக பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு எவ்வித சட்ட ரீதியான தடைகளும் கிடையாது. அதேபோன்று அங்கிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்வது கொள்ளைக் குற்றமும் கிடையாது.
நாட்டிலுள்ள எந்தவொரு பிரஜைக்கும் கோரிக்கை விடுத்து ஒரு தொகை நிதியைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் சுமார் 100 இலட்சத்துக்கும் அதிக நிதி பெற்றுக் கொள்ளப்பட்டமை தொடர்பில் பிரச்சினையுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கின்றோம்.
எனினும் இந்த பட்டியலில் சகல அரசியல்வாதிகளதும் பெயர்களை வெளியிட்டதன் ஊடாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எதிர்பார்ப்பது என்ன?
நிதியை விடுவிப்பது குறித்த தீர்மானமெடுக்கும் நிர்வாகசபையில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர், ஜனாதிபதி செயலாளர் மற்றும் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் மேலும் இருவர் உள்ளடங்குகின்றனர்.
ஜனாதிபதி நிதிய சட்டத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ள காரணிகளுக்காக நிதியை விடுவிக்கும் அதிகாரம் இந்த நிர்வாகசபைக்கு உண்டு. அதற்கமையவே அரசியல்வாதிகள் உள்ளிட்டோருக்கு நிதிகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்தோடு கணக்காய்வாளர் நாயகத்தின் பரிசீலனைக்கு உட்பட்டது என்றும் அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு கணக்காய்வாளர் அறிக்கையில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்வைத்த காரணிகள் தொடர்பில் எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை.
அரசியல்வாதிகளுக்கு அந்த நிதியை விடுவித்தமை தவறு என்றும் எங்கும் குறிப்பிடப்படவுமில்லை. 2019ஆம் ஆண்டு அரச அங்கீகாரம் பெற்ற தனியார் வைத்தியசாலையான ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையிலேயே எனக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
வைத்தியர் எனக் குறிப்பிடப்படும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இவ்வாறு செயற்படுவது பொறுத்தமற்றது. எனது சத்திர சிகிச்சைக்கு 8 இலட்சத்து 65 000 ரூபா செலவாகியுள்ளது.
இந்த மொத்த தொகையில் ஒரு பகுதியை மாத்திரமே நான் ஜனாதிபதி நிதியத்திடமிருந்து பெற்றிருக்கின்றேன். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மனிதாபிமான அடிப்படையில் எனக்கு அந்த உதவியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.
அரசியல்வாதிகள் என்பதற்காக 100 - 300 இலட்சம் வரை பெற்றிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அதேவேளை ஏனையோர் குறிப்பிட்டவொரு தொகையைப் பெற்றிருப்பது தவறு என்றும் கூற முடியாது.
மாறாக அது தவறு என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுவாரெனில் ஜனாதிபதி நிதிய சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கோருகின்றோம்.
அவ்வாறில்லை என்றால் எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் 159 எம்.பி.க்களும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதியைப் பெறப்போவதில்லை என்று உறுதிமொழியெடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.
அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதில் உதவியைத் தொகையைப் பெற முடியாது என்ற யோசனையை முன்வைத்து அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
https://www.virakesari.lk/article/201739
1 day 13 hours ago
என்னசொல்லி ஆசி வழங்கியிருப்பார்கள்? அதன் பலன் இன்னும் சில ஆண்டுகளில் தெரிந்துவிடும். இவர்கள் முன்னையவர்களுக்கும் இவ்வாறுதானே செய்தார்கள்? ஆசி பெறப்போகிறார்களோ, இவர்களை குளிர்விக்க போகிறார்களோ?
1 day 13 hours ago
அவர்களை உலகமெல்லாம் இழுத்து விட்டது அமெரிக்காதான்!
1 day 14 hours ago
இதைத்தான் சொல்லுறது, ஒருவருக்காவது தெரிவித்து வைத்திருக்க வேண்டுமென்று!
1 day 14 hours ago
1 day 14 hours ago
1 day 15 hours ago
சொப்பிங் கடை பரிதாபங்கள்..
1 day 15 hours ago
கொழும்பு சோன்ஸ் வீதி 1880'S
1 day 15 hours ago
1 day 15 hours ago
ஆப்பு பின்பக்கமாக சொருகியிருந்தால் கொஞ்சம் கஸ்டமா தான் இருக்கும்....என்ன இருந்தாலும் நம்ம தோழர் சுழிச்சு வெட்டி ஓடுவார் என நினைக்கின்றேன்..அமெரிக்கா தென்னை ஆராச்சியில் உளவு பார்க்க ...இந்தியா கப்பலில் உளவு பார்க்கப்போயினம் போல......போனகிழமை அதானிக்கு ஆப்பு ,வெளியேற்றுவேன்,சகல திட்டங்களும் மீள்பரிசீலனை என்றார்கள் இந்த கிழமை அதாணிக்கு அப்பம் கொடுத்து வரவேற்கின்றனர்
1 day 15 hours ago
உடனடியாக விண்ணப்பிக்குக..
1 day 15 hours ago
1 day 15 hours ago
பனை மரத்தையும் இப்படி மாற்றிவிட்டால் எவ்வளவு வசதி .?
1 day 15 hours ago
நீங்களும் முயற்சித்து பாருங்களேன்..
Checked
Sun, 12/22/2024 - 16:01
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed