புதிய பதிவுகள்2

வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!

2 days ago
மேற்குலகில் உணவு,அன்றாட பாவனை பொருட்கள் எனும் விடயங்களில் கற்காலத்தை நோக்கியே போகின்றார்கள். பிளாஸ்ரிக் பொருட்களுக்கு தடை.இரசாயனம் கலந்த உணவுகளுக்கு தடை விதிக்கப்போகின்றார்கள். நீங்கள் குறிப்பிடும் காலம் கற்காலமல்ல.நற்காலம். அந்த கோப்பயை கழுவ பயன்படுத்தப்படும் இரசாயன அழுக்கு நீக்கியின் பக்க விளைவுகள்,எதிர் வினைகள் பற்றி ஏதாவது தெரியுமா?பெரிய ஹொட்டல்களில் கோப்பை கழுவப்படும் அல்லது பாத்திரங்கள் கழுவ பயன்படுத்தப்படும் அந்த கெமிக்கல் மருந்துகள் கையில் பட்டாலே எரிக்கும் தன்மை கொண்டவை. எப்படி கழுவினாலும் அந்த கெமிக்கல்கள் பாத்திரங்களை விட்டு அகலாது.எல்லாம் சாப்பாடுடன் சேர்ந்து எமது வயிற்றுக்குள் தான் போகும். ஊர்களில் ஒரு குடும்பத்தில் பத்து பேர் இருந்தாலும் அவரவற்கு என சொந்த கோப்பை இருக்கும். அதில் அண்ணன் தம்பியானாலும் சரி அக்கா தங்கச்சியானாலும் சரி ஒருவர் கோப்பைய மற்றவர் தொடமாட்டார்.அவ்வளவிற்கு சுத்த பத்தம். கோப்பைய சாம்பல் போட்டு கழுவினாலும் பழப்புளி போட்டு மினுக்கினாலும் சொந்தக்கோப்பை சொந்த கோப்பை தான் அதை யாருக்கும் விட்டுக்குடுக்க மாட்டம்.😂

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

2 days ago
"பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம-ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே!" நல்லவர்களைக் காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன். என்பது கிஸ்ணன் வாக்கு. உண்மையை தெளிவூட்டவும், தரவுகளை நிலைநாட்டவும், நான் திரிகள் தோறும் அவதரிக்கிறேன் என்பது ஜஸ்டின் வாக்கு 😂. #ஆதாரபுருஷர்❤️ நன்றி 🙏

ஜெனீவா எமக்கு கடவுளோ அல்லது பேயோ அல்ல மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு கோருவது ஒரு பயனற்ற செயல் - விஜித்த ஹேரத்

2 days ago
உள்ளக மட்டத்தில் ஒரு ஆட்சியலகாகத் தோற்றம் பெற்றதும் எந்த நேரமும் கலைத்துவிடக்கூடியதுமான வட-கிழக்கு இணைந்த மாகாண அலகை வழக்குப்போட்டுப் பிரித்தமை... சுனாமிக் கட்டமைப்பை நடைமுறைப்பட்டுத்தவிடாது தடுத்தமையெனத் தமிழருக்கு எதிரான விடம் கக்கும் வேலைகளை செய்த அணியினது முக்கியமான பெரும்புள்ளி இப்போது இப்படிக் கொக்கரிக்கிறார். அவரே ஐ.நா விலிருந்து தமிழரது பிரச்சினையை வெளியே எடுப்பதுதான் தமதரசின் நோக்கமென்று சொல்லியுள்ளார். இதைவிட வேறென்ன விளத்தம் தேவை. எந்த சிங்கள அரசாயினும் அவை இனவாத அரசுகளே. தமிழரை அழிப்பதும், தமிழரென்று ஒரு இனமே இல்லையென்று நிறுவுவதும் முழு ஈழத்தீவையும் ஈற்றில் சிங்கள மயமாக்குதலே அவர்களது இலக்கு. யே.வி.பி யின் மறுவடிவான என்.பி.பி வாக்களித்த தமிழர்களின் மயக்கம் இந்த இனவாத முழக்கங்களைக் கண்டாவது தெளியுமா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

2 days 1 hour ago
புலவர் உங்கள் தலைவர் சீமான் போல நீங்களும் தரக்குறைவான வார்த்தைகளை சக கள உறவுகள் மீது பாவித்து அதன் மூலம் உங்கள் தரத்தை நீங்களே குறைத்து கொள்வதை பார்க்க கவலையாக இருக்கிறது. ஒரு எழுத்தை மாத்தி போட்டு - உங்களை இன்னொரு “விடியாத” கருத்தாளர் என எழுத எனக்கு எவ்வளவு நேரம் ஆகும் என நினைக்கிறீர்கள்? ஆனால் நான் சீமானின் தம்பி அல்ல. ஆகவே நான் அப்படி செய்ய போவதில்லை. நாதக சமூகவலை உலகில் முன்னெடுக்கும் அவமரியாதை கலாச்சாரத்தை தயவு செய்து யாழுக்கு எடுத்து வர வேண்டாம். சகலதுக்கும் ஒரு எல்லை உண்டு. நான் கிண்டலும் கேலியுமாக எழுதினாலும் அந்த எல்லையை அநேகம் மீறுவதில்லை. அரிதாக மீறிய சந்தர்பங்களில் மன்னிப்பும் கேட்டுள்ளேன், பகிரங்கமாக. எனவே கொஞ்சம் கஸ்டப்பட்டாவது நா-நயம் பேணுவீர்கள் என நினைக்கிறேன். யாழ்களத்தில் இருவரை அவர்களின் நடத்தை காரணமாக இக்னோர் லிஸ்டில் போட்டு இரெண்டு வருடமளவு ஆகிறது. அதில் ஒருவர் நீங்கள் இப்போ என்னை திராவிட ஊடகவியளாலர் என ஆதாரம் அற்று அவதூறு சொல்வது போல, ஏதோ ஒரு வெறிகுட்டியை பப்பில் கண்டு பேசி விட்டு அதுநாந்தான் என தினமும் யாழில் என் உயிரை வாங்கினார். உங்களுடனான எனது சம்பாசணைகளும் அதே வழியில்தான் போக வேண்டும் என்பது விதி என்றால் அப்படியே ஆகட்டும். உங்களுக்கு ஜஸ்டின் அண்ணா கொடுத்த பதில்தான் எனது பதிலும். சீமான் சென்னை ஹைகோர்ட்டில் போய் என்ன கேட்டார் என்பது ஒன்றும் ஹைதர் கால வரலாறு அல்ல. மிக அண்மையில் நடந்தவை. அதற்கான முழு ஆதாரமும் இதே தமிழக செய்தி பகுதியில் கொஞ்சம் கீழே போனால் உள்ளது. நான் சொன்னதுதான் உண்மையான வரலாற்று தரவு. பொலிசை என் மீது வழக்கு போட சொல்லுங்கள் என சென்னை கோர்ட்டை கேட்கும் அளவுக்கு சீமான் என்ன முழு லூசா? அவர் சென்னை கோர்ட்டை கேட்டது - முன்பே வாபஸ் வாங்கிய புகாரின் அடிப்படையில் வழக்கை தூசு தட்டுகிறார்கள். இந்த விசாரணையை தடுத்து, வழக்கை, விசாரணையை ரத்து செய்யுங்கள் என. ஆனால் சென்னை ஹைகோர்ட் அப்படி இல்லை - வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என பொலிஸுக்கு உத்தரவிட்டது. இதுதான் தரவுகளின் அடிப்படையிலான வரலாறு. மிக முக்கியமான விடயம்… நீங்களும், விசுகு அண்ணையும் சொல்வது போல் - சீமான் சென்னை கோர்ட்டை தன்னை விசாரிக்கும்படி கேட்டார் என்பது உண்மை எனில்…. சென்னை ஹைகோர்ட் அப்படி ஒரு உத்தரவை கொடுத்த பின்… ஏன் டெல்லி கோர்ட்டுக்கு ஓடி.. அந்த சென்னை கோர்ட் உத்தரவுக்கு தடை வாங்கினார்? லொஜிக் மண்டையை பொத்தி அறைகிறதா புலவர் ஜி?🤣 சும்மா முட்டு கொடுக்க வேண்டும் என்பதால் வாயில் வருவதை எல்லாம் சொன்னால் இப்படித்தான் ஆகும். யாழ்களம் ஒன்றும் இராவணன் குடிலோ, தூஷண துரையின் சேனலோ அல்ல, இங்கே தலையால் சிந்திப்போர் அதிகம். லொஜிக் இல்லாமல் ஆமை, முயல் கதையள் சொன்னால்…. பேர்….ரிப்பேர் ஆகிவிடும்.

ஜெனீவா எமக்கு கடவுளோ அல்லது பேயோ அல்ல மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு கோருவது ஒரு பயனற்ற செயல் - விஜித்த ஹேரத்

2 days 1 hour ago
சொந்தம், இறையாண்மை என்று சொல்லிக்கொண்டு, சர்வதேசத்தை கூட்டி வைத்து நீங்கள் ஆடிய ஊழிக்கூத்து மறந்து, மறைத்து பேசுகிறார். அலுவகங்களை திறப்பதாலோ, ஆணையகங்களை நிறுவுவதாலோ, உறுதிப்பாடுகளை அளிப்பதாலோ, ஆளையாள் மாறி மாறி குற்றஞ்சாட்டுவதாலோ நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை. ஏதாவது ஒரு அரசாங்கம், எதிர்க்கட்சி பொறுப்பு எடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. எல்லோரும் பங்காளிகளாகவே இருந்து ஒரு இனத்தை போட்டிப்போட்டு அழித்தீர்கள். நீங்கள் அவர்களை தடுத்தீர்கள், அவர்கள் உங்களை தடுப்பார்கள். நல்லிணக்கத்தை இலங்கையில் உங்கள் யாராலும் ஏற்படுத்த முடியாது, வீர வசனம் மட்டுமே பேச முடியும். அப்படி நல்லிணக்கத்தை ஏற்படுத்த நினைத்தால் அது யாராய் இருந்தாலென்ன நிறைவேற்ற அனுமதி கொடுக்க வேண்டும். நாம் செய்வோம் என கூறி பதினாறு ஆண்டுகள் கடந்துவிட்டன, இனியா நிறைவேற்ற போகிறீர்கள்? போரின் கதா நாயகர்களை, கொலைகாரர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படையுங்கள். அவர்களே சொல்கிறார்கள்; எங்களுக்கு மின்சாரக்கதிரையே தண்டனை என்று. இதைவிட வேறு ஆதாரம் தேவையென்ன? அந்த நடவடிக்கைகள் என்னவென்று விளக்கினால்; புரிந்து கொள்ள முடியும். முந்தைய ஆட்சியாளர்களும் இவ்வாறு சுற்றியவர்கள் தான். ஆனால் இன்றும் ஒரு இம்மியளவு கூட நகரவில்லை, நகரப்போவதுமில்லை. இந்த ஏமாற்றும் தந்திரம், பிடிவாதம் நாட்டையும் இனத்தையும் அழிப்பதோடு சாபமும் சூழும்.

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

2 days 2 hours ago
புலவர், கோசான் சொல்லியிருக்கும் "சொ.செ.சூனியம்" என்ன என்று புரியவில்லையா? 2025 இல் சென்னை உயர் நீதிமன்று வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று வழக்கைத் துவக்கி, அது சீமானுக்குத் தான் ஆப்பானது. 12 வாரங்களுக்குள் விசாரிக்க வேண்டும், தள்ளுபடி செய்ய முடியாதென சென்னை கோர்ட் சொன்னது. இதை மறுக்கிறீர்களா? ஆதாரங்கள் பல உண்டே? அதன் பிறகு தானே வடக்கில் பிரபலமான வக்கீலைப் பிடித்து உச்ச நீதி மன்றம் போனார்? இதையும் மறுக்கிறீர்களா? ஏன்?

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

2 days 2 hours ago
யாழ்கள திராவிடியா ஊடாக செய்தியாளர்கள் இப்படித்தான் எழுதுவார்கள். கோர்ட் உத்ததரவுப்படி இது சம்பந்தமாக திராவிடியா ஊடகங்களுக்கும் ஓசிச்சோறுகளுக்கும் வாய்ப்ப்பூட்டுப்பட்டுள்ளதால் அவர்களின் ஆதரவாளர்கள் இப்படியான தளங்களில் எழுதுவதை பொருட்படுத்தத் தேவையில்லை. தேர்தல் நேரத்தில் இந்தத் உத்தரவு சீமானுக்கு வெற்றி. திராவிடியா ஊடகங்களுக்கும் ஓசிச்சோறுகளுக்கும் தோல்வி.

'தூக்கமின்மை' பிரச்னை உங்களுக்கும் இருக்கிறதா? அறிகுறிகளும் தீர்வுகளும்

2 days 2 hours ago
நாம் சில சமயங்களில் கேள்விப் படும் இளவயது மட்ட மாரடைப்பு மரணங்களோடு சில கதைகளும் சேர்ந்து கேள்விப் படுவோம்: ஆள் ஓடியாடித் திரிந்தவர், சாப்பாட்டில் கவனம், அவ்வளவு குடி இல்லை..இப்படியான நல்ல விடயங்கள் சொல்வார்கள். ஆனால், இறந்தவரின் வாழ்க்கையை உற்றுக் கவனித்தால் மனப் பதற்றம் (stress) அதிகரித்த வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்பது தெரியவரும். இந்த மனப்பதகளிப்பு இதய குருதிக் கலன் நோய்களுக்கு மூன்றாவது முக்கியமான காரணி (முதல் இரண்டும் ஆரோக்கியமற்ற உணவு, உடல்பயிற்சியின்மை என்பன). சுவாரசியமான விடயம், தூக்கக் குறைவும் மனப்பதகளிப்பும் உடலில் ஒரே மாதிரியான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. எனவே, தூக்கம் ஒழுங்காக இல்லாதோரில் இதய குருதிக் கலன் நோய்கள் உருவாகும் வாய்ப்பு அதிகமாக இருப்பது ஆச்சரியமில்லை. எனவே, தூக்கத்தை முறையாகக் கையாள்வதின் மூலமும் இதய குருதிக் கலன் நோய்கள் வராமல் சிறிது தடுக்கலாம். இதன் நரம்பியலைப் புரிந்து கொண்டால் தூக்கத்தை குழப்பாமல், உரியமுறையில் கையாளுவது இலகுவாக இருக்கக் கூடும். எங்கள் உடலில் பதகளிப்பிற்குக் காரணமாக இருக்கும் நரம்புத் தொகுதி பரிவு (sympathetic) நரம்புத் தொகுதி. இது தூண்டப் பட்டால் இதயம் வேகமாகத் துடித்தல், சுவாசக் குழாய்கள் விரிவடைதல், அதிக விழிப்பு நிலை போன்ற மாற்றங்கள் ஏற்படும். நாம் அறியாமலே, ஒரு ஆபத்தும் எங்களை நோக்கி வராத போது கூட உணர்வுகளால் மூளை இந்த பரிவு நரம்புத் தொகுதியைத் தூண்டி இந்த மாற்றங்களைத் தூண்டும். உதாரணமாக ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் தூங்குவதற்கு முதல் வீட்டில் சி.என்.என் செய்தியைப் பார்த்தால், என் பரிவு நரம்புத் தொகுதி உச்சமாக தூண்டப் படுவது நான் அவதானித்த ஒன்று😂. இந்த பரிவு நரம்புத் தொகுதிக்கு எதிராக வேலை செய்யும் இன்னொரு நரம்புப் பிரிவு, பரபரிவு (parasympathetic) நரம்புத் தொகுதி எனப் படுகிறது. நாம் ஓய்வாக இருக்கும் போது, இந்த நரம்புத் தொகுதி வேலை செய்து, இதயத் துடிப்பைக் குறைத்து, இரத்த நாளங்களை விரிவடையச் செய்து (இதனால் தான் தூங்கும் போது ஒரு கட்டத்தில் ஆண் குறி தானாகவே எழுச்சி நிலையை அடைவது நடக்கிறது), கண்ணைச் சுழட்ட வைக்கும். எனவே, மன-உடல் ஓய்வு நிலையை எந்த வழியிலாவது தூண்டுவதால் பரபரிவு நரம்புத் தொகுதியைத் தூண்டினால் தூக்கம் வருவதற்கு ஏதுவான நிலை ஏற்படும். தம்பதிகளாக இருப்போர் உடலுறவில் ஈடுபடும் போதும் இதே பரபரிவு நரம்புத் தொகுதி தூண்டப் படுவதால், அதுவே கூட தூக்கத்திற்கு ஏதுவான நிலையை உருவாக்கும் (@பிழம்பர் இப்ப நிமிர்ந்து உக்கார்ந்திருப்பார் என நினைக்கிறன்! 😂)

போர் பிரச்சாரம்: ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவுடன் போருக்கு தயாராகி வருகிறது.

2 days 2 hours ago
ஆரம்பத்தில் ஐரோப்பாவில் தங்கு தடையற்ற வர்த்தகம் என தொடங்கி தற்போது தனக்கென ஒரு ஆட்சி அலகுடன் இருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தனக்கான ஒரு இராணுவத்தினையும் பெற்றுவிட்டால் அதன் எதேச்சாதிகாரத்திற்கு ஐரோப்பா அகப்பட்டு கொள்ளும், உண்மையில் ஐரோப்பாவிற்கு இரஸ்சியா அச்சுறுத்தல் என கூறிக்கொண்டு ஒரு புதிய ஆக்கிரமிப்பினை ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்குகிறதோ என தோன்றுகிறது, ஐரோப்பாவிற்கு ஐரோப்பிய ஒன்றியமே அச்சுருத்தலாக இருக்க முடியும் என கருதுகிறேன்.

போர் பிரச்சாரம்: ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவுடன் போருக்கு தயாராகி வருகிறது.

2 days 2 hours ago
போர் பிரச்சாரம்: ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவுடன் போருக்கு தயாராகி வருகிறது. © EPA/IDA MARIE ODGARD | 02 அக்டோபர் 2025, டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடந்த ஐரோப்பிய அரசியல் சமூகத்தின் (EPC) 7வது கூட்டத்தில், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (எல்) உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வாழ்த்தினார். கிரெம்ளின் ஆதரவு பிரச்சாரத்தின்படி, ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து இராணுவமயமாக்கப்பட்டு வருகிறது, உக்ரேனில் ஆயுத மோதலை அதிகரிப்பதன் மூலம் ரஷ்யாவுடன் நேரடிப் போருக்குத் தயாராகி வருகிறது. செய்தி: ரஷ்யாவுடன் ஒரு இராணுவ மோதலுக்கு ஐரோப்பா தயாராகி வருவதாக ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் க்ருஷ்கோ கூறினார். "ரஷ்யாவுடன் இராணுவ மோதலின் வெளிப்படையான வரிசை உள்ளது, பொதுவாக, அங்கு மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் திட்டமிடலின் தன்மையைப் பார்த்தால், ரஷ்யாவுடன் ஒரு இராணுவ மோதலுக்கான தயாரிப்பு உள்ளது" என்று தூதர் சுட்டிக்காட்டினார். ரஷ்யாவின் எல்லைகளில் நேட்டோ பயிற்சிகள் பெருகிய முறையில் ஆக்ரோஷமாகி வருவதாகவும் குருஷ்கோ கூறினார். அவரைப் பொறுத்தவரை, ஐரோப்பா உக்ரைனுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு நீண்ட தூர ஆயுதங்களை வழங்குவதன் மூலம் தீவிரப் பாதையைப் பின்பற்றுகிறது. ரஷ்ய-உக்ரைன் மோதல் அதிகரிக்கும் அபாயங்கள் மிக அதிகம் என்று தூதர் வலியுறுத்தினார். கதைகள்: 1. ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு எதிரான போருக்குத் தயாராகி வருகிறது. 2. ஐரோப்பா இராஜதந்திர உரையாடலின் பாதையைக் கைவிட்டு இராணுவமயமாக்கலின் சுழற்சியில் நுழைந்துள்ளது. 3. நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரைனில் மோதலை அதிகரித்து நேரடியாகப் போரில் ஈடுபட முயல்கின்றன. நோக்கம்: ரஷ்ய கூட்டமைப்பின் விரிவாக்கக் கொள்கையை நியாயப்படுத்துதல். மேற்கத்திய சமூகங்களுக்குள் "சமாதான ஆதரவாளர்கள்" மற்றும் "போர் ஆதரவாளர்கள்" இடையே பிளவுகளைத் தூண்டுதல். உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்புக்கான பொறுப்பை ரஷ்யாவிலிருந்து மேற்கு நாடுகளுக்கு மாற்றுதல். உண்மை: ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய ஆக்கிரமிப்பு ஏற்படக்கூடும் என்று அஞ்சுகிறது, மேலும் அதற்கு சொந்தமாக இராணுவம் இல்லாததால் அதன் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துகிறது. கதைசொல்லிகள் ஏன் பொய்யானவை: ரஷ்ய தூதரக அதிகாரியின் அறிக்கைகள், கிரெம்ளின் தனது பாத்திரங்களை மாற்றியமைக்க முயலும் ஒரு தவறான தகவல் பொறிமுறையை மீண்டும் கூறுகின்றன: ஆக்கிரமிப்பாளர் பலியாகிறார், அதே நேரத்தில் படையெடுக்கப்பட்ட நாட்டிற்கான ஆதரவு அச்சுறுத்தலாக சித்தரிக்கப்படுகிறது. உண்மையில், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய கூட்டமைப்புடன் இராணுவ மோதலைத் திட்டமிடவில்லை, ஏனெனில் அதற்கு அதன் சொந்த இராணுவம் இல்லை. ஐரோப்பாவின் பாதுகாப்பு நேட்டோ மற்றும் தேசியப் படைகளின் பொறுப்பாகும், மேலும் எந்தவொரு கூட்டு தற்காப்பு நடவடிக்கையும் தேசிய அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஐரோப்பிய மற்றும் நேட்டோ தலைவர்களின் சமீபத்திய அறிக்கைகள் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான தங்கள் உறுதிப்பாட்டை தொடர்ந்து நிரூபிக்கின்றன. உக்ரைனுக்கு வழங்கப்படும் இராணுவ ஆதரவு - ஆயுதங்கள், பயிற்சி மற்றும் நிதி - போருக்கான தயாரிப்பு அல்ல, மாறாக தற்காப்பு நடவடிக்கைக்கான ஆதரவு, இது ஐ.நா. சாசனத்தின் பிரிவு 51 இன் படி , ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் நாடுகளின் உரிமையை உறுதி செய்கிறது. உக்ரைனில் போர் மேற்கு நாடுகளால் தூண்டப்படவில்லை, ஆனால் ஐ.நா. பொதுச் சபையால் கண்டிக்கப்பட்ட ஒரு தூண்டுதலற்ற படையெடுப்பின் மூலம் ரஷ்யாவால் தொடங்கப்பட்டது, இது ரஷ்யாவின் ஆக்கிரமிப்பாளர் என்ற நிலையை உறுதிப்படுத்தியது மற்றும் அதன் துருப்புக்களை உடனடியாக திரும்பப் பெறக் கோரியது. எனவே, உக்ரைனுக்கு சர்வதேச ஆதரவை "இராணுவ மோதலுக்கான தயாரிப்பு" என்று முன்வைப்பது ஒரு சூழ்ச்சிச் செயலாகும். 2014–2015 ஆம் ஆண்டில் டான்பாஸ் போருக்கு பிரெஞ்சு-ஜெர்மன் மத்தியஸ்தம் மூலம் தொடங்கி, மோதலுக்கு அமைதியான தீர்வுகளையும் இராஜதந்திர தீர்வையும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து ஆதரித்து வருகிறது. அந்தத் தலையீட்டின் காரணமாக, போரின் சூடான கட்டம் தற்காலிகமாக முடக்கப்பட்டது. ரஷ்யாவிற்கு எதிரான தடைகளை அறிமுகப்படுத்தியதன் மூலமும், உக்ரைனுக்கு ஆதரவை வழங்கியதன் மூலமும், ஐரோப்பிய ஒன்றியம் மாஸ்கோவின் போர் இயந்திரத்தை பலவீனப்படுத்த முயன்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் ஏராளமான தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு தடை விதித்துள்ளது மற்றும் அத்தியாவசிய தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தைகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து, ஐரோப்பிய ஒன்றியம் கியேவுக்கு மொத்தம் 88 பில்லியன் யூரோக்களுக்கு மேல் பொருளாதார, மனிதாபிமான மற்றும் இராணுவ உதவிகளை வழங்கியுள்ளது. இது 2024 மற்றும் 2027 க்கு இடையில் நிலையான நிலையான ஆதரவில் 50 பில்லியன் யூரோக்கள் வரை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய உக்ரைன் வசதியையும் நிறுவியுள்ளது . இந்த உறுதிப்பாடு, மோதலை நிலைநிறுத்துவதற்கு அல்ல, பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கத்தை நிரூபிக்கிறது. படையெடுப்பிற்கு முன்னதாக, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உட்பட பல ஐரோப்பிய தலைவர்கள், பேச்சுவார்த்தையின் அவசியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர் மற்றும் பெரிய அளவிலான போரைத் தொடங்குவதைத் தவிர்க்க விளாடிமிர் புடினை வலியுறுத்தினர். ஆயினும்கூட, கிரெம்ளின் இராஜதந்திர முறையீடுகளை நிராகரித்தது மற்றும் வேண்டுமென்றே உக்ரைனுக்கு எதிராக பிராந்திய விரிவாக்கம் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பு பாதையைத் தேர்ந்தெடுத்தது. அதே நேரத்தில், ஐரோப்பாவின் "இராணுவமயமாக்கல்" அல்லது "விரிவாக்கத்தின் சுழல்" பற்றிய சொல்லாட்சி அரசியல் சூழலைப் புறக்கணிக்கிறது. அலெக்சாண்டர் க்ருஷ்கோ குறிப்பிட்டுள்ள நேட்டோ இராணுவப் பயிற்சிகள் கண்டிப்பாக தற்காப்பு இயல்புடையவை. வியன்னா ஆவணத்தின்படி , அவை பகிரங்கமாக அறிவிக்கப்படுகின்றன, OSCE க்கு தெரிவிக்கப்படுகின்றன, மேலும் ரஷ்ய கூட்டமைப்பிற்கு கூட அறிவிக்கப்படுகின்றன , இது பங்கேற்கும் நாடுகளை அத்தகைய இராணுவ நடவடிக்கைகள் குறித்து மற்றவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க கட்டாயப்படுத்துகிறது. நேட்டோ பயிற்சிகளைப் போலல்லாமல், சபாட் பயிற்சி போன்ற ரஷ்ய சூழ்ச்சிகளில் பெலாரஷ்ய துருப்புக்கள் சம்பந்தப்பட்ட மத்திய ஐரோப்பாவை இலக்காகக் கொண்ட தாக்குதல் சூழ்நிலைகள் அடங்கும். மேலும், ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு வலுப்படுத்தலில் EU கவனம் செலுத்துவது சாத்தியமான ரஷ்ய தாக்குதலின் அச்சங்களை பிரதிபலிக்கிறது. நேட்டோவின் கிழக்குப் பகுதியை இராணுவப் பயிற்சிகள் மற்றும் வலுப்படுத்துவது, ரஷ்யா மீதான தாக்குதலுக்குத் தயாரிப்பதற்காக அல்ல, உறுப்பு நாடுகளின் பிரதேசங்களுக்கு எதிரான சாத்தியமான ஆக்கிரமிப்பைத் தடுக்கும் நோக்கம் கொண்டது. மாஸ்கோ ஐ.நா., துருக்கி, வத்திக்கான் அல்லது சீனாவின் அனைத்து மத்தியஸ்த முயற்சிகளையும் நிராகரித்து, உக்ரைன் பிரதேசங்களின் சட்டவிரோத இணைப்புகளை அங்கீகரிப்பது மற்றும் கியேவின் உண்மையான சரணடைதல் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தவொரு பேச்சுவார்த்தைகளையும் நிபந்தனைக்கு உட்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, ஐரோப்பிய ஒன்றியம் அமைதி முயற்சிகளை ஆதரித்துள்ளது. ஜூன் 2024 இல் லூசெர்ன் உச்சிமாநாட்டில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு சமாதான தீர்வை எட்டுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின. ஜூன் 2025 இல் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரகடனத்தில் , உக்ரைனுக்கான ஆதரவு கூட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று நேச நாடுகள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன. அதே காலகட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐரோப்பிய கவுன்சில் ஆவணங்கள், ஐரோப்பா அதன் சொந்த பாதுகாப்பிற்கு அதிக பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதையும், கூட்டாளிகளுக்கு இராணுவ ஆதரவு என்பது விதிகள் சார்ந்த சர்வதேச ஒழுங்கைக் கடைப்பிடிப்பதன் ஒரு அங்கமாகும் என்பதையும் குறிப்பிடுகின்றன. பின்னணி : உக்ரைனுக்கு ஐரோப்பிய ஆதரவு அதிகரித்ததன் பின்னணியில், புதிய பொருளாதாரத் தடைகளை ஏற்றுக்கொண்டதன் பின்னணியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கியேவை கைவிட வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்ததன் பின்னணியில் அலெக்சாண்டர் க்ருஷ்கோவின் அறிக்கைகள் வந்துள்ளன. சமீபத்திய வாரங்களில், ஆர்ஐஏ நோவோஸ்டி மற்றும் லென்டா உள்ளிட்ட ரஷ்ய பிரச்சார சேனல்கள், "ஐரோப்பிய ஒன்றியம் போரை விரும்புகிறது", "மேற்கு நாடுகள் உக்ரைனை தற்கொலைக்குத் தள்ளுகின்றன" அல்லது "நேட்டோ ரஷ்யாவைத் தாக்கும்" போன்ற ஒத்த செய்திகளை விளம்பரப்படுத்தியுள்ளன. இதற்கு நேர்மாறாக, ரஷ்ய ஆக்கிரமிப்பை நிறுத்தி உக்ரைனின் இறையாண்மையை மீட்டெடுப்பதன் மூலம் மட்டுமே அமைதியை அடைய முடியும் என்று ஐரோப்பிய தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரைன் மூலம் ரஷ்யா மீது "உண்மையான போரை" அறிவித்துள்ளதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஐ.நா.விடம் தெரிவித்தார் https://www.veridica.ro/en/fake-news-disinformation-propaganda/war-propaganda-the-eu-is-preparing-for-a-war-with-russia

மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் இந்தியா….

2 days 3 hours ago
பனிப்போர் கால இரு துருவ கொள்கையின் பின்னணியில் வளர்ந்த போராட்டங்கள், அதே இடதுசாரி கொள்கை உடைய நாடுகளால் வளர்த்தெடுக்கப்பட்டது, இந்தியா, இந்திராவின் ஆட்சி காலத்தில் இடது சாரி கொள்கை கொண்ட ஒரு நாடாக இருந்தது, அவரருக்கு பின்னரான காலத்தில் இந்திய அரசியல், பொருளாதார மாற்றத்தினால் ஏற்பட்ட கொள்கை மாற்றமா அல்லது வேறு ஏதாவது ஒரு காரணியா ஒன்றுபட்ட இலங்கை தீர்வு நோக்கிய இந்திய அணுகுமுறை ஏற்பட்டது என தெரியவில்லை, சோவியத் யூனியன் உடைவு ஏற்பட்டது 91 இல் ஆனால் இலங்கை இந்திய ஒப்பந்தம் 87 நிகழ்த்தப்பட்டது. அதன் பின் இரட்டை கோபுர தாக்குதல் பின்னணியில் போராட்டங்கள் பயங்கரவாதமாக முத்திரை குத்தி அதனை முழு முனைப்போடு அழிக்கும் நிலை உருவாகின அதற்கு ஏற்ப சில நிகழ்வுகளும் குறித்த தரப்புகளினால் கடந்த காலத்தில் நிகழ்த்தப்பட்டிருந்தது அதற்கு வாய்ப்பாக இருந்தது. தற்போது உலக நிகழ்வு சில நாடுகளை முன்பு பயன்படுத்திய அதே பயங்கரவாதம் எனும் பதத்தினை போன்றதோர் ஒரு புதிய உத்தியினை பயன்படுத்தி சில நாடுகளை அழிக்க முனைகிறார்கள். Hybrid war என்பதே அதன் வடிவமாகும் இதன் மூலம் நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டுக்களை (உதாரணமாக இணைய தாக்குதல் அல்லது குற்றம் கூறலாம்) ஆதாரமாக வைத்து ஐ நா இன் 51 சாசனத்தினடிப்படையில் சில நாடுகளை கட்டம் கட்ட ஆரம்பித்துள்ளது நேட்டோ நாடுகள். தற்போது சீனா, இரஸ்சியா, ஈரான் ஆகிய 3 நாடுகளை முதற்கட்டமாக கட்டம் கட்டி உள்ளார்கள், இரண்டாவது அணியில் இந்தியா உள்ளதாக உணருகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்). NATO Library: Hybrid Warfare: WelcomeNATO Library: Hybrid Warfare: Welcomeபுதிதாக உருவாகியுள்ள பிறிக்ஸினை கூட இந்த சாசனத்தினடிப்படையில் ஒரு Hybrid war ஆக உருவகிக்க முடியும், அதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் ஆரம்பமாகி விட்டது. இந்தியாவில் சில அரசியல் மாற்றங்களை ஒரு குறிப்பிட்ட தரப்பு விரும்புவதாக ஆழும் கட்சி குற்றம் சாட்டி வருகின்றது, அது உண்மையானால் அவ்வாறான ஒரு மாற்றம் நிகழாவிட்டால் இந்தியாவினையும் இந்த Hybrid war விட்டு வைக்காது என கருதுகிறேன்🤣.

இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.

2 days 3 hours ago
தேர்தல் நேரம் சொல்லியது போல்…. ஆட்சிக்கு வந்து ஒரு வாரத்தில் ரஸ்ய - உக்ரேன் போரை டிரம்ப் நிறுத்தியமைக்கு நோபல் பரிசு கொடுக்க முடியாது🤣…. ஆனால் காசாவில் யுத்த தவிர்ப்பு, ஹமாஸ் ஆயுத களைவு, இடைக்கால நிர்வாகசபை, காசாவின் பாதுகாப்பு அரேபிய அமைதிபடைகளிடம், பணய கைதிகள் விடுவிப்பு - இத்தனையையும் அண்மைய டிரம்பின் அமைதி முயற்சிகள் சாதித்தால் அவருக்கு நூறு நோபல் பரிசு கொடுத்தாலும் தகும். அடுத்த வருடம் வாய்ப்புள்ளது. எல்லாம் ஹமாஸ், நெந்தன்யாகு கையில்தான் உண்டு. ஆனால் ஒரு நிரந்தர ஒப்பந்தம் கைச்சாத்தாகும் வரை பரிசை கொடுத்தல் ஆகாது. டிரம்ப் இதில பழியா கிடந்து மெனகெடுவதே பரிசை குறி வைத்துத்தான். ஒண்டும் செய்யாமல் ஒபாமாவுக்கு கொடுத்தவங்கள்… நான் என்ன தக்காளி தொக்கா என தலை கேட்பதிலும் ஒரு நியாயம் இல்லாமல் இல்லை🤣

இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.

2 days 3 hours ago
இதை இன்றுதான் கேள்விப்படுகிறேன். சாவச்சேரி பக்கம் குடுக்கிறவையோ🤣. அமைதிக்கான நோபல் பரிசு சுவீடனில் இருந்து அல்ல, நோர்வேயில் இருந்து என நினைக்கிறேன்.

மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் இந்தியா….

2 days 4 hours ago
நேராக உரையாட முடிந்தால்😎 இந்தக் கேள்விக்கு "ஓம்/இல்லை" என்று மட்டும் பதில் தாருங்கள்: "விடுதலைக்கு ஆயுதவழி மட்டுமே சரி என்ற இந்தியாவின் மூளைச்சலவையினால் தான் புலிகள் அமைப்பு போராட்டத்தைக் கையில் எடுத்ததா?"
Checked
Sat, 10/11/2025 - 20:53
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed