1 day 20 hours ago
தமிழக ஊடகமொன்றில் இத்திரைப்படம் பற்றி நான் எழுதிய கருத்துக்கள் (சிறு மாற்றங்களுடன்)
ஒடுக்கப்பட்ட இனங்களின் போராட்டத்தையும் அரச பயங்கரவாதத்தினை அழகாக படம் பிடித்திருக்கிறார் வெற்றிமாறன். சிறந்த இயக்குனரில் ஒருவர் என்று மறுபடியும் நிரூபித்துருக்கிறார். வாத்தியாராக வாழ்ந்திருக்கிறார் விஜய்சேதுபதி. கிஷோர் கே.கேயாக வாழ்ந்திருக்கிறார். இளையராஜாவின் பின்னணி இசை அருமை.
1 day 20 hours ago
கேடு கெட்ட மனிதாபிமானம் இல்லாதவர்கள்
1 day 20 hours ago
ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.
ஒரு குழந்தை மரணமானதாகவும் 15 பேர்வரை படுகாயமடைந்ததாகவும் 68 பேர்வரை காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு டாக்ரர் என சந்தேகிக்கப்படுகிறது.
https://www.cnn.com/world/live-news/magdeburg-germany-christmas-market-deaths-12-20-24/index.html
1 day 20 hours ago
ஜேர்மனியில் இன்று நத்தார் கொண்டாட்ட சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடத்தில் சவூதி அரேபியாவை பிறப்பிடமாக கொண்ட ஒரு வைத்தியர் கார் மூலம் மக்களை கொலை செய்தும் படுகாயப்படுத்தியும் உள்ளார்.😡
1 day 21 hours ago
1 day 22 hours ago
முப்பட்டைக் கண்ணாடியினூடாக-4
jeyamohanDecember 20, 2024
( 6 )
இரா.முருகன் அவருடைய அந்த உலகியல் தன்மையை எழுதிச் செல்லும்போக்கில் இரண்டு பேசுபொருட்கள் கூர்மை கொள்கின்றன. ஒன்று பாலியல் இன்னொன்று சமையல் அல்லது சாப்பாடு. முருகனின் பாலியல் சித்தரிப்புகள் தமிழில் இதுவரைக்கும் முன்வைக்கப்பட்ட பாலியல் சித்தரிப்புகள் அனைத்திலிருந்தும் தீவிரமான வேறுபாடொன்றைக் கொண்டிருக்கின்றன. பாலியலின் களிப்பு, உணர்ச்சிகரம், அழகியல் மூன்றுமே அவர் புனைவுலகில் இல்லை. இதற்குமுன் பாலியலை எழுதியவர்கள் அதை பெரும்பாலும் உணர்ச்சித்தீவிரத்துடனே எழுதியிருக்கிறார்கள். சிறந்த உதாரணம் தி.ஜானகிராமன். அல்லது களிப்பும் துய்ப்புமென அதைச் சித்தரித்திருக்கிறார்கள், முன்னோடியான உதாரணமாகச் சொல்லத்தக்கவர் தஞ்சை பிரகாஷ். பாலியலை வெறும் புற உலக அனுபவமாக மட்டுமே பார்க்கும் முருகனின் புனைவுலகம் அவருடைய இயல்பான கேலியும் அங்கதமும் கலந்துகொள்ளவே ஒருவகையான அபத்த நாடகமாகவே அதை மாற்றுகிறது. உலகியலில் அன்றாடத்தில் இருந்துகொண்டே இருக்கும் சலிப்புக்கு மாற்றாக மனிதர்கள் செய்துகொள்ளும் விந்தையான ஒரு செயல்பாடாக, ஒருவகை கோணலாக மட்டுமே முருகனின் பாலியல் சித்தரிப்புகள் உள்ளன.
முன்பொருமுறை ஒரு பேட்டியில் அமெரிக்க இயக்குநர் ஃப்ரான்ஸிஸ் போர்டு கப்போலா ஒரு பாலியல் சித்தரிப்பை அதிலுள்ள பெண்ணை நீக்கிவிட்டு அல்லது ஆணை நீக்கிவிட்டு மட்டுமே சித்தரித்தால் அது வெடித்துச் சிரிக்கத்தக்க கோமாளித்தனமாக தோன்ற ஆரம்பித்துவிடும் என்று சொல்லியிருந்தார். அதோடு இணைவது அமெரிக்க திரை இயக்குநரும் எழுத்தாளருமான வூடி ஆலன் சொன்னது. ‘பாலியல் உறவென்பது நான் சிரிக்காமல் ஈடுபடும் ஒரே கேளிக்கை’. .
இரா.முருகன் எழுதும் பாலியல் சித்தரிப்புகள் எதுவும் எவ்வகையிலும் பாலியல் தூண்டலை அளிப்பதில்லை. அவை அவையில் ஒருவர் ஏப்பமோ குசுவோ வெளியிடுவது போன்ற ஒரு ஒவ்வாமையையும் சிரிப்பையும் மட்டுமே உருவாக்குகின்றன. அவர் படைப்புலகம் முழுக்க நிறைந்திருக்கும் பாலியல் பெரும்பாலும் தமிழ் பொதுச்சொல்லாட்சியில் வக்கிரம் என்று சொல்லத்தக்கது. இயலபான அல்லது கவித்துவமான பாலியல் தருணம் ஒன்றையாவது இத்தனை பக்கங்களில் அவர் எழுதியிருக்கிறாரா என்று தொடர்ந்து புரட்டிப்பார்த்தேன். முருகனில் ஈடுபட்டு வாசிக்கும் நண்பர் ஒருவரிடம் அதைக்கேட்கவும் செய்தேன். அப்படியெதுவும் இல்லை என்பதே கிடைத்த பதிலாக இருந்தது.
தமிழில் உணவின் சுவை இலக்கியத்தில் ஒரு முக்கியமான பேசுபொருளாக இருந்துகொண்டிருக்கிறது. லா.ச.ராமிருதத்தின் படைப்புகளில் சுவை என்பது ஒரு நுண்ணிய பகுதியாக வந்துகொண்டே இருக்கிறது. கி.ராஜநாராயணில் சுவைச் சித்தரிப்பு உண்டு. தமிழில் அதன் உச்சம் என்பது நாஞ்சில் நாடன். உணவு ஒரு களியாட்டாக, இந்தப் பொருள்வயப் பிரபஞ்சத்துடனான ஓர் உறவாக ,மனித உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் குறியீடாக, இன்னும் எவ்வளவோ வகையில் தமிழ்புனைவுலகில் வந்திருக்கிறது. முருகனின் புனைவுகளில் உணவு என்பது முற்றிலும் உலகியல் தன்மை கொண்டது. உலகியலுக்கு அப்பால் அதில் ஏற்றப்படும் எந்தக்கூறும் அற்றது. அது தின்பது மட்டுமே, சுவைப்பது மட்டுமே, நாக்கு மட்டுமே, அதற்கப்பால் ஏதுமில்லை. அந்த உலகியல் தன்மை எவ்வகையிலேனும் பிறிதொன்றாக ஆகிவிடக்கூடாதென்ற எச்சரிக்கை ஆசிரியருக்கு இருப்பது போன்றே தோன்றுவது. உணவுடன் ஒவ்வொருமுறையும் செரிமானத்தையும் மலங்கழிப்பதையும் கீழ்வாயு வெளியாவதையும் அவர் இணைத்துக்கொள்ளும் விதம் கவனிக்கத்தது.
முருகன், அவருடைய முன்னோர் சமையற்காரர்கள் என்று ஒரு பேட்டியில் கூறுகிறார். பேட்டியில் ஆசிரியர் கூறும் வரிகளை பலவகையிலும் புனைவுகளை விளக்குவதற்கு பயன்படுத்துவதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இந்த ஒரு வரி எனக்குத் தோன்றுவதுண்டு. உணவின் மேல் தேர்ச்சியும் விலக்கமும் ஒருங்கே சமையற்காரர்களிடம் இருக்கும். விருந்துகளை சுவைத்துண்ணும் சமையற்காரர்கள் மிகக்குறைவு. பெரும்பாலும் உணவின் மீது ஒரு விலக்கம், கூடவே தொழில் ரீதியான ஈடுபாடு இரண்டும் அவர்களிடம் திகழ்கிறது. முருகனின் இந்த கதைகளில் உள்ளது சமையற்காரரின் பார்வை என்று தோன்றுகிறது. ஜடப்பிரபஞ்சத்தின் வெவ்வேறு பொருட்களை இணைத்து உருவாக்கும் ஒரு புதிய சாத்தியம் மட்டும் தான் அந்த சுவை. அதில் கேளிக்கையோ அதற்கப்பால் அனுபவ விரிவோ எதுவுமில்லை. அது பொருள் மட்டும்தான். அதில் உள்ளம் இல்லை. உள்ளம் கடந்த ஏதுமில்லை
முருகன் சித்தரித்துச்செல்லும் காமமும் உணவும் எவ்வகையிலேனும் ஒன்றையொன்று அர்த்தப்படுத்திக் கொள்கின்றனவா. தமிழில் உணவுச்சுவை காமத்துடனும் காமச்சுவை உணவுடனும் இணைந்துகொள்வதென்பது பல புனைவுலகங்களில் காணக்கிடைப்பது, குறிப்பாக லா.சா.ராமிருதத்தில்.
தமிழில் இசையைப்பற்றிய எல்லா உரையாடல்களிலும் உணவு கலந்து கொள்வதென்பது ஒரு மரபாகவே இசை விமர்சனத்திலும் உண்டு உணவைப் பிறிதொன்றுடன் இணைத்து அதை பெரிதுபடுத்திக்கொள்வதென்பது மனிதனின் இன்றியமையாத தேவைகளில் ஒன்று ஒரு சுவையை இசையுடனோ இலக்கியத்துடனோ இணைத்து அதை நாக்கிலிருந்து சித்தத்திற்கு விரித்துக்கொள்ளவேண்டிய தேவை மனிதனுக்கு உண்டு. ஆனால் முருகனுடைய கதைகளில் எதிலும் பாலியல் உணவுடனோ உணவு பாலியலுடனோ இணைக்கப்படவில்லை. அவை இரண்டும் இரண்டு உலகியல் புலன்வழி அனுபவங்களாக மட்டுமே நிலைகொள்கின்றன. அவற்றுக்கு உலகியலுக்கு அப்பால் எந்த விரிவாக்கமும் நிகழ்ந்துவிடக்கூடாதென்ற ஆசிரியனின் அவரே அறியாத எச்சரிக்கை உணர்வுதான் அதற்கு காரணமா என்று யோசிக்கத்தோன்றுகிறது.
( 7 )
முருகன் உலகியலை சித்தரிக்கையில் உணவும் பாலியலும் இரண்டு வகை விடுதலைகளாக திகழ்கின்றன. அவ்விடுதலைக்கு அடியில் மாறாத பெரும் விரிவாக நின்றிருப்பது சலிப்புதான். முருகனின் கதைகளில் வரலாற்றின் மிகக்கொந்தளிப்பான காலகட்டத்திலேயே நிலக்கிழார்கள் தங்கள் ஆசைநாயகிகள் குளிப்பதைப் பார்ப்பதற்காக கிளம்பிச் செல்கிறார்கள். அரசி குளிப்பதை அமைச்சர் எட்டிப்பார்க்கிறார். சோற்றைப்பற்றியே சிந்தனைசெய்துகொண்டிருக்கிறார்கள் பெரும்பாலானவர்கள். திரும்பத் திரும்ப சலிப்பு எனும் அன்றாடச் சித்திரத்தை சலிப்பையே விளையாட்டென்றும் அங்கதமென்றும் ஆக்கிக்கொண்ட ஒரு மொழியில் இரா.முருகன் சொல்லி செல்கிறார்.
ஒருவகையில் அன்றாடச்சலிப்பை எழுதுவதே இலக்கியத்தின் மிகப்பெரிய அறைகூவலென்று எனக்குத் தோன்றியதுண்டு. ஏனெனில் இலக்கியம் என்பதே அன்றாடச் சலிப்புக்கு எதிரான ஒரு செயல்பாடுதான். மழைக்காலத்தில் செய்வதற்கொன்றுமில்லாமல் குகைகளில் கூடிய மனிதர்கள் சொல்லித் தொடங்கியதுதான் கதை எனும் வடிவமாக இருக்கக்கூடும். எல்லாக்கதைகளுமே சலிப்புக்கு எதிரான சமர்கள் தான். அந்நிலையில் கதைக்குள்ளேயே சலிப்பு சொல்லப்படுவதென்பது ஒரு முரண்பாடு. சலிப்பு என்பதை அதன் வண்ண வேறுபாடுகளை நுணுக்கமாக விரிப்பதனூடாக இலக்கியத்துக்குள் கொண்டு வந்தவர் என்று டால்ஸ்டாயைச் சொல்லலாம். குறிப்பாக போரும் அமைதியும் சலிப்பின் நுண்ணிய சித்திரங்களின் விரிவு கொண்டது என்று கூறலாம்.
சலிப்பை சலிப்பெனவே எழுதுவதென்பது ஒரு வகையில் இலக்கியத்துக்கு உகக்காத ஒன்று. சலிப்பை சுவாரசியப்படுத்துவது என்பது தான் இலக்கியத்தின் அறைகூவல். ஏனெனில் இலக்கியம் என்பது சுவாரசியத்தை உருவாக்க வேண்டிய ஒன்றுதான் முருகன் அச்சலிப்பில் ஒவ்வொருவரும் என்னென்ன செய்கிறார்கள் என்பதை நுணுக்கமாகவும் வேடிக்கையாகச் சொல்வதனூடாக சலிப்பின் சித்திரத்தை சொல்கிறார். சலித்துப்போய் அமர்ந்திருக்கும் ஒரு குரங்கு சொறிந்துகொள்கிறது, தனக்குத்தானே பேன் பார்த்துக்கொள்கிறது, இளித்துக்கொள்கிறது, கண்களைச் சிமிட்டிக்கொள்கிறது. அதனூடாக அதனூடாக அது நம்மை சிரிக்க வைக்கலாம். தன் சலிப்பையும் உணர்த்திவிடுகிறது. முருகனின் புனைவுலகத்தினூடாக பெருகிச்செல்லும் அன்றாடத்தின் சலிப்பு வரலாறெங்கும் அச்சலிப்பே நிறைந்திருக்கும் சித்திரத்தை நமக்களிக்கிறது.
இந்திய நிலத்தில் பெரும் போர்களும் பூசல்களும் நிகழ்ந்த காலகட்டத்தினூடாக முருகனின் புனைவுலகம் செல்கிறது. பாண்டிச்சேரி நிலத்தை தக்கவைத்துக்கொள்ள பிரிட்டிஷாருடன் தொடர் பூசலில் இருந்த ஒரு காலகட்டத்தினூடாக செல்கிறது ராமோஜியம். மிளகு இந்தியாவின் காலனி நாடுகளின் மேல் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சிக்கலான காலகட்டத்தின் சித்தரிப்பு. ஆனால் இக்காலகட்டத்தைப்பற்றி எழுதிய நாவல்களில் கூட போர்கள் ராஜதந்திர சூழ்ச்சிகள் எழுச்சிகள் வீழ்ச்சிகளுக்கு மாற்றாக அன்றைய சலிப்பூட்டும் அன்றாடமே கேலி கலந்த மொழியியல் ஆசிரியரால் முன்வைக்கப்படுகிறது. முருகனின் தலைசிறந்த படைப்பு என்று சொல்லத்தக்க மிளகு நாவலில் கூட மிளகு ராணியின் சலிப்பூட்டும் அன்றாட நாள் தொடங்குவதனூடாகவே நாவல் விரியத்தொடங்குகிறது.
முருகன் சொல்லும் இந்த அன்றாடம் ஏன் அத்தனை சலிப்புடனிருக்கிறது எனில் அன்றாடத்தின் சலிப்பை வெல்லும்பொருட்டு மானுடன் உருவாக்கிக்கொண்ட ஒவ்வொன்றையும் முன்னரே அவர் வெட்டிவிட்டிருக்கிறார் என்பதனால் தான். நேற்றைய வரலாறு குறித்த பெருமிதங்களும், அப்பெருமிதங்களின் வெளிப்பாடான தொன்மங்களும் மனிதன் தன் நிகழ்காலத்தின் சலிப்பிலிருந்து வெல்லும்பொருட்டு உருவாக்கிக்கொண்டவை. எதிர்காலம் பற்றிய கனவுகளும் லட்சியங்களும் அதற்கான நடைமுறைத்திட்டங்களும் அவ்வாறே அன்றாட சலிப்பின்மீதான மனிதனின் எதிர்வினைகள் தான். வரலாற்றுவாதங்களும் கொள்கைகளும் அனைத்தும் அதன் பொருட்டே.
சலிப்பை வெல்ல மானுடன் உருவாக்கிக்கொண்ட ஒவ்வொன்றையுமே முற்றிலும் தன் புனைவுலகிலிருந்து விலக்கிக்கொண்ட பின்னால் அச்சலிப்பை மட்டுமே எழுத முடிகிறது அவ்வாறு எழுதுகையில் அது எப்படி இந்த சுவாரசியத்தை அடைகிறது எனில் இவற்றை எல்லாம் விலக்கியதனால் உருவாகும் அர்த்தமின்மை சட்டென்று ஒவ்வொரு செயல்பாட்டிலும் நிகழ்த்தும் மெல்லிய கோமாளித்தனத்தினால் தான். லட்சியத்தின் இன்மை உருவாக்கும் அபத்தமே முருகனின் மொத்த படைப்புலகையுமே இயல்பான அங்கதம் கொண்டதாக்குகிறது.
அர்த்தமின்மைக்காக முருகன் முயல்வதில்லை. அதனூடாக ஓர் அங்கதத்தை உருவாக்க வேண்டிய தேவையும் அவருக்கில்லை. அர்த்தமென சொல்லப்பட்ட அனைத்தையுமே எழுதுவதற்கு முன்பே வெளியே நிறுத்திவிட்டு அன்றாடத்தை மட்டுமே எழுதத்தொடங்கும்போதே அவையெல்லாம் நிகழ்ந்துவிடுகிறது. இப்பொழுது இங்கிருந்து நான் கிளம்பிச்சென்று பார்வதிபுரம் சந்திப்பில் நின்றுகொண்டு அங்கு நிகழ்வன ஒவ்வொன்றையும் அவற்றுக்கு எந்த உள்தொடர்ச்சியையும் பொருளையும் அளிக்காமல் அப்படியே பதிவு செய்தேன் எனில் வாய்விட்டு சிரிக்க தக்க ஒரு பெருஞ்சித்திரமே எனக்கு அமையும். திரும்ப திரும்ப தரையில் துப்பிக்கொண்டே இருக்கிறார் ஒருவர். கையில் அரைடம்ளர் டீயுடன் வெறித்துப் பார்த்துக்கொண்டே நின்றிருக்கிறார் ஒருவர். எங்கோ எதையோ பார்த்துத் தலையசைக்கிறார் ஒருவர். ஒருவர் திரும்பத் திரும்ப ஒரு கைப்பையை குடைகிறார். ஒன்றுக்கும் ஒரு பொருளும் இல்லை. எல்லாமே கோமாளித்தனங்கள்
பொருளிலிருந்து விடுதலை என்பது ஒருவகையில் sanity என்னும் பித்தின்மையிலிருந்து விடுதலைதான் அது insane எனும் பைத்தியப்பெருவெளியொன்றை உருவாக்குகிறது. அவ்வாறு தன்னியல்பாக விரித்து விரித்து நினைவுகளிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் தன் குடும்பச்சூழலிருந்தும் புனைந்து பெருக்கிக்கொண்ட ஒரு பரப்பென்று முருகனின் கதைகளைச் சொல்ல முடியும். அவ்வகையில் முருகனின் கதையுலகுடன் அணுக்கமான கதைசொல்லி என எவரும் தமிழில் இல்லை. ஆனால் மலையாளத்தில் இருவரைச் சொல்லலாம். ஒருவர் வி.கே.என். இன்னொருவர் என்.எஸ். மாதவன். (என்.எஸ்.மாதவனின் ‘லண்டன் பத்தேரியிலே லுத்தீனியகள்’ என்னும் நாவலை முருகன் பீரங்கிப்பாடல்கள் என்ற பேரில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்)
வி.கே.என் மலையாளத்தின் முதன்மையான அங்கத எழுத்தாளர் என அறியப்பட்டிருக்கிறார். முருகனுக்கு அவரை அணுக்கமாக ஆக்கும் கூறுகள் மூன்று. ஒன்று, வரலாற்றை பகடிக்களமாக ஆக்கிக்கொள்ளும் பார்வை. இரண்டு, பல்வேறு மொழிநடைகளைப் பயன்படுத்திக்கொள்ளும் கதைசொல்லித் தன்மை. மூன்று, முழுமையான உலகியல்தன்மை. வி.கே.என் உலகிலும் காமமும் உணவுமே மையப்பேசுபொருட்கள். அவற்றின் மேல் எந்தவகையான ’அழகியலும்’ செயல்படுவதில்லை. எந்த மெல்லுணர்ச்சிகளுமில்லை. அவை முழுமையான அன்றாடத்தன்மையுடன், பொருள்வயத்தன்மையுடன் வெளிப்பட்டு அதன்விளைவான பகடியை சென்றடைகின்றன.
வி.கே.என் போலவே இரா முருகனும் தொல்வரலாற்றையும் சமகால வரலாற்றையும் மறு ஆக்கம் செய்திருக்கிறார். இருவருமே வரலாற்றை துண்டுகளாக சிதறடித்து ஓர் அபத்தப்பரப்பை கட்டமைக்கிறார்கள். இரா.முருகனின் புனைவுலகுக்கு மிக அணுக்கமான இருபடைப்புகள் வி.கே.என் எழுதிய பிதாமகன் என்னும் பகடி நாவலும் என்.எஸ்.மாதவனின் பீரங்கிப்பாடல்களும்.
( 8 )
ஒரு புனைவுக்கலைஞராக முருகனைப் பற்றி தனித்தனிப் படைப்புகள் சார்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் அவருக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படுவதை ஒட்டி தொகுக்கப்பட்டன. அவரை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொள்ளும் ஒரு கட்டுரை தேவை என்பதனால் இந்த அவதானிப்புகளை முன்வைக்கிறேன். இவை முடிவுகளல்ல, மேற்கொண்டு ஒட்டியும் வெட்டியும் நிகழவேண்டிய விவாதங்களுக்கான முன்வரைவுகளே.
முருகனின் படைப்புலகம் ஒட்டுமொத்தமாக அளிக்கும் இலக்கியக்கொடை என்ன? முதன்மையாக அவர் உருவாக்கும் வரலாற்றின் சிதைவுச்சித்திரம்தான். வரலாறு அதற்குள் செயல்படும் எளிய அன்றாடத்தால், தற்செயல்களின் தர்க்கமின்மையால் அபத்தமாக ஆவதை அவர் சித்தரிக்கிறார். வரலாற்றில் வாழும் எளிய மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றின் பெருஞ்சித்திரத்தால் அபத்தமாக ஆகிறது, எளிய மனிதர்களால் வரலாறும் அபத்தத்தை அடைகிறது. முருகன் நெருக்கடிநிலை பற்றி அப்பாவிக் குமாஸ்தாக்களினூடாகச் சித்தரிக்கும் இடம், அல்லது பாண்டிச்சேரியின் வரலாற்றை சில்லறை ஐயன்கள் வழியாக விவரிக்கும் பாணி அதற்குச் சிறந்த உதாரணம்.
ஒருங்கிணைந்த வரலாற்றின் பெருங்கதையாடலின் மாபெரும் எடை தூக்கி வைக்கப்பட்ட ஒரு சமூகம் நாம். பறக்கமுடியாதபடி வரலாற்றின் அடியில் சிக்கிக்கொண்டவர்கள். வரலாற்றின்மீதான மிகையுணர்வு என்பது நமக்கு ஒரு வகையான நரம்புச்சிக்கலாகவே ஆகிவிட்டிருக்கிறது. அதிலிருந்து விடுதலை என முருகன் முன்வைக்கும் இந்த வரலாற்றுச் சித்திரத்தைச் சொல்லலாம். வரலாற்றை எடையற்றதாக ஆக்கிவிடுகிறது இந்தப்புனைவுலகம்.
இரண்டாவதாக, முருகன் முன்வைக்கும் நுணுக்கமான பகடிகள் சுவையான வாசிப்பனுபவமாக ஆகின்றன என்பதைச் சொல்லவேண்டும். பின்நவீனத்துவப் புனைவு என்றால் ஒருவகையான புதிர்விளையாட்டு என்னும் சோர்வூட்டும் நிலையை கடந்து எல்லாப் பக்கங்களையும் சிரித்தபடி, புன்னகைத்தபடி வாசிக்கச் செய்வது இரா.முருகனின் புனைவுலகம். பகடிகளுக்குரிய தனித்தன்மை, எதிர்மறைத்தன்மை என்றும் சொல்லலாம், அவை தொடர்ச்சியற்று உதிரிவேடிக்கைகளாக நின்றுவிடுபவை என்பது. வி.கே.என்னும் இன்று தனிவேடிக்கைத்துணுக்குகளாகவே நினைவுகூரப்படுகிறார். இரா.முருகனும் அந்த விதியிலிருந்து தப்பமுடியாது.
பகடியின் இன்னொரு எதிர்மறை அம்சம், எது பகடி செய்யப்படுகிறதோ அதை வாசகன் முன்னர் அறிந்திருக்கவேண்டும் என்னும் நிபந்தனை. பகடியில் பயன்படுத்தப்படும் நுணுக்கமான வரலாற்றுச்செய்திகள், நூல்குறிப்புகள், மொழிக்குறிப்புகள் வாசகனின் நினைவில் கிளரவேண்டும். கேரளவாசகர்களிடம் அரசியல் சார்ந்த வாசிப்பும் நினைவும் மிகுதி என்பதனால் வி.கே.என் மற்றும் என்.எஸ்.மாதவனின் நுண்குறிப்புகள் அத்தளத்தில் வாசகநினைவைச் சீண்டி பகடியை உருவாக்குவதில் வெற்றிபெறுகின்றன. ஆனால் வி.கே.என் உருவாக்கும் மரபுக்கலைகள், மரபான விவசாயம் சார்ந்த பகடிகள் அடுத்த தலைமுறையிடம் வேலைசெய்யவில்லை என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இரா.முருகனின் படைப்புகளின் மிகப்பெரிய பலவீனமே அவர் எதிர்கொள்ளும் தமிழ் வாசகர்கள்தான். அவர்களில் வரலாறு, அரசியல், இதழியல் மற்றும் உயர்தொழிற்ச்சூழல் என முருகன் தொட்டுச்செல்லும் ஊடுபிரதித்தன்மையை சற்றேனும் அறிந்தவர்கள் மிகமிக அரிது. தமிழ் எழுத்தாளர்களிலேயே வரலாறு, பண்பாடு சார்ந்த வாசிப்பறிவுடையோர் மிகக்குறைவானவர்கள். பெரும்பாலானவர்கள் சொந்தவாழ்க்கை சார்ந்து மட்டுமே தகவலறிவு கொண்டவர்கள். அதற்கு அப்பால் எதையும் அறிவதற்கான ஆர்வமும் அற்றவர்கள். ஆகவேதான் பாலியல், எளிய சமகாலச் செய்திகள் சார்ந்து மட்டுமே இங்கே படைப்புகள் உருவாகின்றன. இச்சூழலில் முருகன் உருவாக்கும் பகடிகள் பெரும்பாலும் சென்றடைவதில்லை. முருகனின் பகடிகளில் பலவும் நுணுக்கமான சாதிய, வட்டார பண்பாட்டுக் குறிப்புகள் கொண்டவையும்கூட.
முருகனின் இலக்கியப் பங்களிப்புகளில் இறுதியானது அவர் உருவாக்கும் கலவை நடை. அவர் கதைசொல்லியாக திகழும் நடை நினைவுகளும் குறிப்புகளுமாக பகடியுடன் தாவிச்செல்வது. ஊடே பல்வேறு மொழிநடைகளை அவர் திறம்பட நகல்செய்து கலந்துவிடுகிறார். பத்தொன்பதாம்நூற்றாண்டின் கடிதங்களின் மொழிநடை, பழைய ஆவணங்களின் நடை, பத்தொன்பதாம்நூற்றாண்டு இதழ்களிலுள்ள செய்திநடை, அக்காலநூல்களின் நடை ஆகியவை ஒரு கலைடாஸ்கோப் தன்மையுடன் அவர் புனைவுலகில் புரண்டுபுரண்டு வண்ண வேறுபாடுகளை உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன.
பின்நவீனத்துவ எழுத்தில் கலவைமொழி என்பது ஒரு முக்கியமான அம்சமாக உலகமெங்கும் உள்ளது. சீரான, நேர்த்தியாகச் செம்மைசெய்யப்பட்ட ஒற்றையோட்ட மொழிநடையை நவீனத்துவம் தன் அடையாளமாக முன்வைத்தது. அது ஆசிரியரின் உணர்ச்சிநிலை, சிந்தனை ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்பட்டது. நவீனத்துவகால விமர்சனங்கள் அனைத்திலுமே நேர்த்தியான மொழிக்கான பாராட்டு இருப்பதைக் காணலாம். கலவை மொழி அல்லது சிதறுமொழி என்பது அதற்கு மாற்றாக பின்நவீனத்துவம் உருவாக்கிக்கொண்ட ஒன்று. நேர்த்தியான ஒற்றை மொழி வாசகன் மேல் ஆசிரியனின் செல்வாக்கை செலுத்துகிறது என்று எண்ணிய பின்நவீனத்துவர் நடை என்பது வாசகனும் ஆசிரியனும் கொள்ளும் விளையாட்டாகவோ உரையாடலாகவோ இருக்கவேண்டும் என எண்ணினர்.ஆகவே உரைநடையை அவ்வாறு பன்முகத்தன்மை கொண்டதாக ஆக்கினர்.
ஆனால் பின்நவீனத்துவ புனைவு வடிவங்களை எளிமையாக நகல்செய்தவர்கள் பலர் அப்புனைவுகளுக்குள், எந்த நோக்கமும் இல்லாமல் செயற்கையாக சிக்கலான சொற்றொடர்கள் அல்லது சிதைவுண்ட சொற்றொடர்கள் வழியாக கலவைமொழியையோ சிதைவுமொழியையோ உருவாக்க முயன்றிருப்பதைக் காணலாம். அவை எந்தவகையான புனைவுத்திறனும் இல்லாத மொழிக்குதறல்களே. மாறாக முருகன் உருவாக்கும் கலவை மொழி வாசகனின் நினைவுமுனைகளை வெவ்வேறு வகைகளில் தொட்டுச் சீண்டி ஓர் இனிய விளையாட்டுக்கு அழைக்கிறது.
அந்த கலவைமொழியின் வசீகரம் முருகனின் இலக்கியப் பங்களிப்புகளில் முக்கியமானது. ஆனால், அந்த மொழிகளை ஏற்கனவே அறிந்து, அவற்றை முருகன் ‘எடுத்துவிளையாடும்’ விதத்தை புரிந்துகொள்பவர்களாலேயே அவை ரசிக்கப்படக்கூடும். எஞ்சியோருக்கு அவை வெறும் மொழிவிளையாட்டாகவோ, அல்லது அன்னியமானதோ புரிந்துகொள்ள முடியாததோ ஆன மொழிப்பரப்பாகவோ தோன்றக்கூடும்.
முருகனின் புனைவுலகம் ஒரு முப்பட்டைக் கண்ணாடி போல நாம் வாழும் ஒற்றைப்படையான யதார்த்தத்தை சிதறடித்து வண்ணப்பட்டைகளாக விரித்துக்காட்டுகிறது. அந்த புனைவாடலே முதன்மையாக அவரை தமிழின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராக நிலைநிறுத்துகிறது.
I
https://www.jeyamohan.in/209064/
1 day 22 hours ago
மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.
முதலில் மல்வத்து விகாரைக்கு சென்ற ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து அவரிடம் நலம் விசாரித்ததுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அதனையடுத்து மல்வத்து மகாநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர்.
அதனையடுத்து அஸ்கிரிய விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் ஆணமடுவே தம்மதஸ்ஸி தேரர், பிரதி பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர்,முதியங்கன ரஜமகா விகாரையின் விகாராதிபதி முருத்தெனியே தம்மரத்தன தேரர் உள்ளிட்டோர் இதன்போது வருகை தந்திருந்ததுடன் அவர்கள் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியின் எதிர்கால பணிகளுக்கு ஆசி வழங்கினர்.
போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர்.
https://www.hirunews.lk/tamil/391359/மல்வத்து-மற்றும்-அஸ்கிரிய-மகாநாயக்க-தேரர்களை-சந்தித்து-ஆசி-பெற்றார்-ஜனாதிபதி
1 day 22 hours ago
ஒரு வருசம் காணாம போக வேணும் எண்டால், உடான்ஸ் சாமியார் பக்தன் ஆகீவிடுங்கள். போன வருசம் பார்ட்டி போக முன்னம் ஒரு ஜடியா கேட்டன்....
ஜடியாவை தந்து போட்டு, சோகப்பாட்டு போடுறார்.
இதுககுப் பிறகும் வராட்டா, ஜயரோட வந்து, திவசம் எண்டுவார் எண்டு தான்.... தலயக் காட்டுவம் எண்டு... 😎
1 day 22 hours ago
நவம்பரில் இருந்து வார இறுதிகளில் ஒரே பார்ட்டி! புது வருஷத்தில் இருந்து “ஓம் சரவணபவ” பக்தனாகப் போகின்றேன்🤪
1 day 22 hours ago
நீண்ட காலத்தின் பின் கண்டது சந்தோசம்.
1 day 22 hours ago
உக்ரைனில் உள்ள ஆறு இராஜதந்திர நிலையங்கள் சேதம்!
உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா இன்று காலை நடத்திய தாக்குதல் காரணமாக ஆறு இராஜதந்திர நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது
அல்பேனியா, அர்ஜென்டினா, வட மெசிடோனியா, பலஸ்தீன், போர்த்துக்கல் மற்றும் மொன்டெனெக்ரின் ஆகிய நாடுகளின் இராஜதந்திர நிலையங்களே இவ்வாறு பாதிப்படைந்துள்ளன
உக்ரைன் தலைநகரைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய இந்த ஏவுகணைத் தாக்குதல்களில் உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் படி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்
இந்தத் தாக்குதலில் மேலும் எழுவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
இதன் காரணமாக கட்டடங்கள் இடிபாடுகளுக்கு உள்ளாகியுள்ளதுடன், பல வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக உக்ரைன் முழுவதும் வான்வழி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
https://www.hirunews.lk/tamil/391363/உக்ரைனில்-உள்ள-ஆறு-இராஜதந்திர-நிலையங்கள்-சேதம்
1 day 22 hours ago
எம்.எச்.370 விமானத்தின் மர்மம் நீங்குமா ? 10 ஆண்டுகளின் பின் மீண்டும் விமானத்தை தேடும் பணி
விமான வரலாற்றில் மிகப் பெரிய மர்மங்களில் ஒன்றான 10 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பயணிகள் விமானத்தைத் தேடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு மலேஷிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி மலேசியன் விமான சேவைக்கு சொந்தமான எம்.எச்.370 என்ற விமானம் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் பயணித்த வேளை மர்மமான முறையில் காணாமல் போனது.
பயணத்தை ஆரம்பித்து ஒரு மணி நேரத்துக்குள் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பு இழந்ததுடன், விமானம் வழமையான பாதையில் இருந்து விலகி சென்றமை பதிவாகி இருந்தது.
கடந்த பல ஆண்டுகளாக காணாமல் போன விமானத்தைத் தேடும் பணி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரை வெற்றி கிட்டவில்லை.
இந்த நிலையில், விமானத்தினை மீண்டும் தேடும் பணிகளுக்காக அமெரிக்காவைச் சேர்ந்த கடல் ஆய்வு நிறுவனமான ஓஷன் இன்பினிட்டீசுடன் 7 கோடி டொலருக்கான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக, இன்று மலேசியாவின் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
புதிய தேடுதல் நடவடிக்கைகள் இந்து சமுத்திரத்தின் தெற்கு பிராந்தியத்தில் அடையாளம் காணப்பட்ட 15 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
https://www.hirunews.lk/tamil/391364/எம்-எச்-370-விமானத்தின்-மர்மம்-நீங்குமா-10-ஆண்டுகளின்-பின்-மீண்டும்-விமானத்தை-தேடும்-பணி
1 day 22 hours ago
சாமீயாரிண்ட, வேலா, வேலா, அந்த லேடீயும், டீலும் பிடிச்சுது! 😜.
தளமும், மட்டுகளும் சுகம் தானா? நம்ம கோசனும், கீபோட்டும் சுகம் தானா?
1 day 22 hours ago
எனது பெயரை பயன்படுத்தி மோசடி செய்த அலுவலர் - முன்னாள் எம்.பி திலீபன்
December 20, 2024 04:29 pm
எனது பெயரை பயன்படுத்தி எனது அலுவலகத்தில் இருந்தவர் செய்த மோசடிக்காக நான் நீதிமன்றம் செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளதாக என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் பணமோசடி செய்ததாகவும், கைது செய்யப்பட்டதாகவும் பல சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. நான் அபிவிருத்திக் குழுத் தலைவராக இருந்த போது எனது அலுவலகத்திற்கு பலர் பல தேவைகள் கருதி வருவது வழமை. இதன்போது சில அரசாங்க அதிகாரிகளுக்கு அதனை பரிந்துரை செய்து அனுப்புவது வழமை. ஆனால் முகவர்களாக சிலர் செயற்பட்டு எனது பெயரைப் பயன்படுத்தி பணம் பெற்றுள்ளனர். அவ்வாறானதொரு சம்பவமே நடந்தது. எனது அவலுகத்தில் இச் சம்பவம் இடம்பெற்றதால் நான் அதற்கு பொறுப்பு சொல்ல வேண்டியிருந்தது. இதனால் நீதிமன்றம் சென்று எனது தரப்பு நியாயங்களை நான் முன்வைத்துள்ளேன்.
அந்தப் பணம் எனது வங்கி இலக்கத்திற்கு வரவுமில்லை. நானும் கை நீட்டி வாங்கவும் இல்லை. அரசியல் காழ்புணர்ச்சி கொண்டவர்கள் இதனை வைத்து பல கட்டுக் கதைகளை கட்டுகிறார்கள். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது நான் காணி மாஃபியா வேலை செய்யவில்லை. மாறாக அரச காணிகளை மக்களுக்கு வழங்கியுள்ளேன்.
அதுவும் அடிமட்ட மக்களுக்கே அதனை வழங்கியுள்ளேன். காணி மாஃபியாக்களுக்கு எதிராக நானும் வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன். அரச காணிகளை பிடித்து திருட்டுத்தனமாக உறுதிகளை எழுதி வைத்துள்ளார்கள். அதனை மீட்டு நான் மக்களுக்கு வழங்கினேன். அப்படியான பலர் குழுவாக எனக்கு எதிராக சதி செய்து வருகிறார்கள். நான் சொத்து சேர்ந்துள்ளதாகவும் பல கதைகளை சொல்கிறார்கள். அவை அனைத்தும் பொய்.
முகநூலில் வீரம் பேசுபர்களுக்கு எதிராகவும் நிகழ்நிலை சட்டத்தை மையமாக கொண்டு வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன். இளைஞர்கள், அரச உத்தியோகத்தர்கள், மக்கள் என இணைந்து நாம் வன்னியில் புதிய சக்தியாக எழுச்சி பெறவுள்ள நிலையில், அதனை முடக்குவதற்காக இந்த வேலைகள் இடம்பெறுகிறது.
எனது அலுவலகத்தில் இருந்த ஒருவர் செய்த மோசடிக்காக, அந்த அலுவலகத்திற்கு பொறுப்பானவர் நான் என்ற அடிப்படையில் தான் நீதிமன்றம் போக வேண்டி ஏற்பட்டது. நான் அவ்வாறு செய்திருந்தால் அல்லது சொத்து குவித்திருந்தால் நிரூபிக்க வேண்டும். நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து ஒதுங்குவேன். எனக்கு கிடைத்தது 3,000 வாக்குகள். ஆனால் எனது பெயரைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கானோர் மோசடி செய்துள்ளனர். தற்போது ஒரு வழக்கு வந்துள்ளது. இனி எத்தனை வருகிறதோ தெரியாது. அதனை நீதிமன்றம் ஊடாக அணுக தயாராகவே உள்ளேன் எனத் தெரிவித்தார்.
https://tamil.adaderana.lk/news.php?nid=197585
1 day 23 hours ago
மீண்டும் யாழில் கண்டதில் மகிழ்ச்சி @Nathamuni😀
எவருடைய அன்புக்கட்டளையை மீறமுடியாமல் அஞ்ஞாதவாசம் முடித்து திரும்பினீர்கள்?
1 day 23 hours ago
உக்ரேனுடன் சமரசமா, சண்டையா, பேச்சுவார்த்தையா என்பதை விட, புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டோம் என்று ஒரு இனிய செய்தியை சொல்லியிருக்கின்றார் புடின்......... உலகத்துக்கு ஒரு கிறிஸ்மஸ் பரிசு கொடுத்திருக்கின்றார்............
தடுப்பூசிக்கு பெயர் இன்னமும் வைக்கவில்லை என்று நினைக்கின்றேன், ஆனால் 'ஸ்புட்னிக் .....' என்று மீண்டும் ஆரம்பிப்பதற்கு சாத்தியம் இருக்கின்றது.
யாரில் முதல் சோதிக்கப் போகின்றார்கள் என்கிறீர்கள்............... அந்த வடகொரியத் தோழர்களுக்கு தான் அதிர்ஷ்டம் போல...............
1 day 23 hours ago
நன்றாக இருக்கின்றது. வாழ்த்துகள் தியா!
1 day 23 hours ago
தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்வதற்கு வயது வரம்பு இல்லை, நியாயம்.
இலங்கையில் இளையோர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று எல்லா அரசுப் பணிகளுக்கும் இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டது என்று நினைக்கின்றேன்.
பல நாடுகளில் இப்படி ஒரு வரம்பு இல்லை. அமெரிக்காவில் 67 என்பது ஒரு மைல்கல் போன்றது. விரும்பினால் அல்லது வீட்டில் இருப்பது தொல்லை அதிகம் என்றாலும், வேலைக்கு அதன் பின்னரும் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கலாம்.
போன வாரம் ஒரு மருத்துவரை இங்கு சந்தித்தேன். அவருக்கு 80 வயதுகள் இருக்கும். அவருடைய அலுவலக மேசையிலேயே விழுந்து அவரின் உயிர் போகும் என்று சொன்னார்.........
1 day 23 hours ago
இந்த வாரம்தானே சீன மருத்துவ ஆராச்சிக்கப்பல் வருவதாக இருந்தது...இந்தியாவில் சொருகின ஆப்பு ஸ்ரங்கானதா?
1 day 23 hours ago
🤣............
அடுத்த மாதத்திலிருந்து எங்களின் தலைநகரில் முன்னுக்கு மடிப்புக் கலையாத, ஆனால் பின்பக்கம் தாறுமாறாகக் கிழிந்த சட்டைகளுடன் நிற்கப் போகின்றார்கள் இந்த இருவரும், இன்னும் சிலரும்.............
ஒரு நாலு வருடங்கள் இவர்களின் கண்களில் படாமல் அப்படியே மேசைக்கு கீழேயே குனிந்து இருக்கவேண்டும்...............🤣.
Checked
Sun, 12/22/2024 - 16:01
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed