புதிய பதிவுகள்2

ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.

3 months 2 weeks ago
யாழ்ப்பாணத்தில் சுதுமலை என்ற பெயரில் மலையிருப்பினும், உண்மையான மலை அங்கு இல்லை. எனவே நான் ஆட்சிக்கு வந்தால் ஒரு புதிய மலையை உருவாக்குவேன் என்று சஜித் சொன்னாலும் சொல்வார். கொழும்பில் இவரை 'பிஸ்ஸக்' என்று கூப்பிடத் தொடங்கியுள்ளனர்.

பாரா ஒலிம்பிக் போட்டியில்... ஈழத்தை பூர்வீகமாக கொண்ட இத்தாலிய தமிழர், தங்கம் வென்று மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார்.

3 months 2 weeks ago
வாழ்த்துகள் ரிஜிவன்! பிழையான சொல்லைப் பாவித்துள்ளனர்?

தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!

3 months 2 weeks ago
தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை பற்றி தெளிவாக பேசப்பட்டுள்ளது. சில இடங்களில் சொற்பதங்கள் தெளிவு இல்லை. மலையக மக்கள் தேசிய இனம் என்று கூறியிருந்தால் சிறப்பு.

ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு

3 months 2 weeks ago
, சிங்களமும் இந்தியாவும் அன்றும் இன்றும் என்றும் தமிழர்களுக்கு எதிராக தோளோடு தோள் நின்று செயற்பட்டார்கள், செயற்படுகிறார்கள். ஜே வி பியை அடக்க கூட இந்திய ராணுவம் அழைக்கப்பட்டது.

மனைவியுடன் இணைத்து வைக்குமாறு கோரி கணவன் மரத்தில் ஏறி போராட்டம்!

3 months 2 weeks ago
இந்தாளுக்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்த தெரியவில்லை. எவ்வளவு பேர் ஏங்கி தவிக்கிறார்கள் இந்த தவத்திற்காக....😜

போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!

3 months 2 weeks ago
ஸ்டார்லைனரில் கேட்கும் வினோதமான சத்தங்கள்- நாசா விடுத்திருக்கும் எச்சரிக்கை நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஆகஸ்ட் 1, 2024 இல் செயல்படாத ஸ்டார்லைனர் கேப்ஸ்யூலில் இருந்து வரும் “வினோதமான சத்தங்கள்” குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது மூத்த விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) வசிப்பவர்கள், ராப் டேல் என்ற வானிலை நிபுணரால் முதலில் பகிர்ந்து கொள்ளப்பட்ட பதிவின் படி, ‘கிட்டத்தட்ட ஒரு சோனார் பிங் போன்ற துடிப்பு சத்தத்தை’ எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. முதல் முறையாக சத்தம் தெளிவாக இல்லாததால், வில்மோர் மீண்டும் முயற்சிப்பதாகக் கூறினார், அதனால் என்ன தவறு என்பதைக் கண்டறிய குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இன்னொரு தடவை நான் அதைச் செய்வேன், நீங்கள் அனைவரும் உங்கள் தலையை சொறிந்துவிட்டு என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்க்கிறேன்” என்று விண்வெளியில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர் சொல்வதைக் கேட்க முடிவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. https://thinakkural.lk/article/308884

போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்ட இஸ்ரேல் - ஹமாஸ்: இதுதான் காரணம்

3 months 2 weeks ago
காசா பகுதியில் 640,000 குழந்தைகளுக்கு தடுப்பூசி ஐக்கிய நாடுகள் சபை, பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை காசா பகுதியில் 640,000 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலும் ஹமாஸும் தங்கள் 11 மாதப் போரில் சிறு இடைநிறுத்தம் செய்து பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்ல ஒப்புக்கொண்டுள்ளன. உலக சுகாதார அமைப்பு கடந்த மாதம் ஒரு குழந்தை டைப் 2 போலியோ வைரஸால் பகுதியளவு முடங்கிவிட்டதை உறுதிப்படுத்தியது. கடந்த 25 ஆண்டுகளில் இது முதல் தடவை எனவும் சுட்டிகாட்டப்பட்டது. மத்திய காசாவின் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிரச்சாரம், வரும் நாட்களில் மற்ற பகுதிகளுக்கும் நகரும். தொடர்ந்து மூன்று நாட்களில் குறைந்தது எட்டு மணிநேரம் போர் நிறுத்தப்படும். இடைநிறுத்தங்கள் நான்காவது நாளுக்கு நீட்டிக்க வேண்டியிருக்கும் என்றும், முதல் சுற்று தடுப்பூசிகள் இரண்டு வாரங்களுக்குள் எடுக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியது. குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களால் அழைத்துச் செல்லப்பட்டு, மத்திய காஸா நகரமான டெய்ர் அல்-பாலாவில் உள்ள ஐ.நா-வால் நடத்தப்படும் மருத்துவ முகாமில் தடுப்பூசிகளை போட்டுக்கொள்வர். மருத்துவ ஊழியர்கள் சொட்டு மருந்து பெற்ற குழந்தைகளை விரல்களில் பேனாவைக் கொண்டு குறித்துக்கொண்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது. https://thinakkural.lk/article/308742

மனைவியுடன் இணைத்து வைக்குமாறு கோரி கணவன் மரத்தில் ஏறி போராட்டம்!

3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 03 SEP, 2024 | 03:37 PM பிரிந்து சென்ற தனது மனைவியை மீண்டும் தன்னுடன் இணைத்துத்தருமாறு கோரி நபர் ஒருவர் மரத்தில் ஏறி போராட்டம் மேற்கொண்டமையால் வவுனியா நகரில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்றையதினம் காலை வவுனியா தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் கீழே இறங்கமால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இது தொடர்பாக அவரிடம் விசாரித்த போது தனது மனைவி தன்னைவிட்டு பிரிந்துசென்றுள்ளதாகவும் அவரை தன்னுடன் மீண்டும் இணைத்துவைக்குமாறு தெரிவித்துள்ளார். நீண்டநேரமாக மரத்தில் இருந்து இறங்காமல் இருந்தமையால் குறித்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்ப்பட்டது. பின்னர் பொலிஸார் மற்றும் ஏனைய தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க போராட்டத்தில் ஈடுபட்ட நபர் மரத்தில் இருந்து கீழே இறங்கியமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/192754

தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!

3 months 2 weeks ago
செல்வம், சித்தார்த்தனை காணவில்லை ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞான வெளியீட்டில் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இவ்விரு தலைவர்கள் ஏற்கனவே தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/308928

இஸ்ரேல்: பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு எதிராக ஆயிரக்கணக்கில் திரண்டு மக்கள் போராட்டம் - அவர்கள் கோருவது என்ன?

3 months 2 weeks ago
ஹமாஸின் புதிய எச்சரிக்கை - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மன்னிப்பு கோரியது ஏன்? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, எதிர்ப்பு நிலைப்பாட்டிலேயே தொடர்கிறார் கட்டுரை தகவல் எழுதியவர், ஜாக் பர்கெஸ் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ''போர் நிறுத்தம் எட்டப்படாத பட்சத்தில் இன்னும் பலர் பிணங்களாகதான் நாடு திரும்புவார்கள்’’ என ஹமாஸ் எச்சரித்திருக்கும் நிலையில், சனிக்கிழமை அன்று காஸாவில் சடலமான மீட்கப்பட்ட ஆறு பணயக் கைதிகளை மீட்கத் தவறியதற்காக இஸ்ரேல் மக்களிடம் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மன்னிப்பு கோரியுள்ளார். ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி அக்டோபர் 7ம் தேதி தாக்குதலின் போது பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதிகளை மீட்க முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டி நாடெங்கும் போராட்டங்கள் இரண்டாம் நாளாக தொடர்ந்த நிலையில், நெதன்யாகு மன்னிப்பு கோரியுள்ளார் இந்தநிலையில் உபகரணங்கள் பயன்பாட்டில் சர்வதேச சட்டத்தை மீறும் ஆபத்து இருப்பதாக காரணம் காட்டி, இஸ்ரேலுக்கு சில ஆயுத விற்பனையை பிரிட்டன் நிறுத்தியதால் சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்துள்ளது. ஆனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, எதிர்ப்பு நிலைப்பாட்டிலேயே தொடர்கிறார். இஸ்ரேல் துருப்புக்கள் காஸாவின் பிலடெல்பி பாதையை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். பிலடெல்பி பாதை எகிப்துடனான காஸாவின் எல்லையில் உள்ளது. உத்தி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பகுதியான பிலடெல்பி பாதை, ஹமாஸ் உடனான அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டமுடியாத அம்சங்களில் ஒன்றாக உள்ளது. ஏறக்குறைய 11 மாதங்கள் ஆகியும் தங்கள் அன்புக்குரியவர்களை சொந்த நாட்டிற்கு மீட்டு வர தவறிய நெதன்யாகு மீது கோபத்தை வெளிப்படுத்த பணயக் கைதிகளின் குடும்பங்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில், இந்த போராட்டங்களில் திங்களன்று ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் கலந்து கொண்டனர். ஜெருசலேமில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு வெளியே நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து தள்ளி கடுமையாக நடந்து கொண்டனர் என்று தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி கூறுகிறது. காவல்துறை அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆப் இஸ்ரேல் நிருபரின் கழுத்தை பிடித்து நெருக்கியதாகவும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராடினர். இதனைத் தொடர்ந்து புதிய போராட்டங்கள் ஆங்காங்கே வெடித்தது. சில ஆர்ப்பாட்டக்காரர்கள் டெல் அவிவில் ஒரு முக்கிய நெடுஞ்சாலையை முடக்கினர். பலர் இஸ்ரேலிய கொடிகளை அணிந்து கொண்டு மஞ்சள் நிற ரிப்பன்களை வைத்து கொண்டிருந்தனர். இவை மக்கள் பணயக் கைதிகளின் குடும்பங்களுடன் நிற்பதை பிரதிபலித்தன. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸால் கடத்தப்பட்ட பின்னர் 97 பணயக்கைதிகளின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லாமல் உள்ளது. அச்சுறுத்தும் ஹமாஸ் இஸ்ரேலின் ராணுவ அழுத்தம் தொடர்ந்தால் பணயக்கைதிகள் "சவப்பெட்டிகளில்" திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று திங்களன்று கூறிய ஹமாஸ், பணயக் கைதிகளை மீட்க இஸ்ரேலிய துருப்புக்கள் அணுகினால் அவர்களை கையாள பாதுகாவலர்களுக்கு "புதிய அறிவுறுத்தல்கள்" வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளது. "பேச்சுவார்த்தைகளுக்கு பதிலாக, ராணுவ அழுத்தத்தின் மூலம் பணயக் கைதிகளை விடுவிக்க நெதன்யாகு வலியுறுத்துவது என்பது அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு சடலமான திருப்பி அனுப்பப்படுவதை ஊக்குவிப்பதாகும். அவர்கள் இறக்க வேண்டுமா அல்லது உயிருடன் இருக்க வேண்டுமா என்பதை அவர்களது குடும்பத்தினர் முடிவு செய்ய வேண்டும்," என்று ஹமாஸ் குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறினார். என்ன புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்பதை அவர் விவரிக்கவில்லை. முன்னதாக திங்களன்று, இஸ்ரேலின் மிகப்பெரிய தொழிற்சங்கம், காஸா போர் நிறுத்தம் மற்றும் ஹமாஸுடன் பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ள அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க அழைக்கப்பட்ட ஒரு பொது வேலை நிறுத்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இணைந்ததாகக் கூறியது. இருந்தபோதிலும் பல இடங்களில் இயல்பு நிலை நீடித்தது. டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் குறைந்த அளவிலான சில தடங்கல் ஏற்பட்டது. மேலும் ஏராளமான உணவகங்கள் மற்றும் ஹோட்டல் சேவைகள் வழக்கமாக இயங்கின. தீவிர வலதுசாரி நிதி அமைச்சரான பெசலெல் ஸ்மோட்ரிச், இஸ்ரேலியர்கள் பலர் வேலைக்குச் சென்றுவிட்டதாகவும், அரசியல் தேவைகளுக்கு தாங்கள் இனி அடிமைகள் இல்லை என்பதை நிரூபித்ததாகவும் கூறினார். அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன? ''இறுதியானது'' என்று குறிப்பிட்டு ஒரு புதிய ஒப்பந்தம் இஸ்ரேலிய பிரதமருக்கு அனுப்பப்படும் என்று சில செய்திகள் கூறும் நிலையில், போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை மீட்கும் ஒப்பந்தத்தை மேற்கொள்ள நெதன்யாகு போதுமான அளவு செயல்படவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். மற்றொருபுறம் ஹமாஸ் அழிக்கப்படுவதற்கு முன் நிரந்தர போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டால், கூட்டணி அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாக நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டணி கட்சிகள் அச்சுறுத்தியுள்ளன. எனவே, நெதன்யாகு தனது சொந்த அரசியல் வாழ்வுக்கு முன்னுரிமை அளித்து, அமைதி ஒப்பந்தத்தைத் தடுப்பதாக பலர் குற்றம் சாட்டுகின்றனர். இதனை அவர் நிராகரித்தார். இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக, இறந்துவிட்டதாக கருதப்படும் 33 பேர் உட்பட, இன்னும் பிடியில் உள்ள 97 இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்ற ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் மத்தியஸ்தர்கள் முயற்சி செய்து வருகின்றனர். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,இஸ்ரேலுக்கு சில ஆயுத விற்பனையை பிரிட்டன் நிறுத்தியதால் சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்துள்ளது. பிரிட்டனின் புதிய நடவடிக்கை பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி திங்களன்று, இஸ்ரேலுக்கான 350 ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் 30 ஐ பிரிட்டன் இடைநிறுத்தி உள்ளது என்று கூறினார். சர்வதேச சட்டத்தை மீற இந்த உபகரணங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற ஆபத்து இருப்பதாக அவர் மேற்கோள்காட்டினார். இடைநிறுத்தப்பட்ட உபகரணங்களில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களுக்கான பாகங்கள் அடங்கும். தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான இஸ்ரேலின் உரிமையை பிரிட்டன் தொடர்ந்து ஆதரித்து வருவதாகவும், இது முழு ஆயுதத் தடையல்ல என்றும் லாமி கூறினார். இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோகவ் கேலன்ட் எக்ஸ் தளத்தில், இந்த நடவடிக்கையால் தான் மனமுடைந்து இருப்பதாக பதிவிட்டுள்ளார். பணயக் கைதிகளின் இறுதிச் சடங்கு இதற்கிடையில், சனிக்கிழமை கொல்லப்பட்ட பணயக்கைதிகள் சிலரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 31) இஸ்ரேலால் மீட்கப்பட்ட பணயக் கைதிகளில் ஒருவரான ஹெர்ஷ் கோல்ட்பர்க்-போலின் தாய், அவரது இறுதிச் சடங்கில் பேசிய போது, பல மாதங்களாக அவரைப் பற்றி நினைத்து பெரும் வேதனையில் இருப்பதாகக் கூறினார். ஜெருசலேமின் தெருக்களில் துக்கம் அனுசரிக்கப்பட்டது மற்றும் இஸ்ரேலின் அதிபர் ஐசக் ஹெர்சாக் இறுதிச் சடங்கில் உறவினர்களுடன் பேசினார். அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீதான முன் அறிவிப்பில்லாத தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸை அழிக்க இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இஸ்ரேல் மீதான இந்த தாக்குதலின் போது போது சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக் கைதிகளாக பிடிபட்டனர். இஸ்ரேலின் பதில் தாக்குதலில் காஸாவில் 40,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/c86ld8l1j67o

சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவருக்கு பதவி உயர்வு!

3 months 2 weeks ago
03 SEP, 2024 | 11:49 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். கலைப்பீடத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை கடந்த சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் கடந்த 30 ஆம் திகதி, சனிக்கிழமை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமையத் திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த ஆங்கில மொழி கற்பித்தல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே. ஶ்ரீகணேசனின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் அன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றின்ஆடிப்படையில், ஆங்கில மொழி கற்பித்தல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே. ஶ்ரீகணேசன் ஆங்கில மொழி கற்பித்தலில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/192715

ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்

3 months 2 weeks ago
பொது மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாது முன்னுதாரணமான அரசாட்சி ஒன்றை கட்டி எழுப்புவோம்; சஜித் பிரேமதாச! 03 SEP, 2024 | 11:34 AM அதிகாரத்திற்கு வந்த பிறகு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை தன்னிச்சையாக பயன்படுத்துவதில்லை. இது பதவி அல்ல. மக்களின் வரத்தின் ஊடாக மக்கள் சேவகனாக நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவேன். நிறைவேற்று ஜனாதிபதி என்பது வரி செலுத்துகின்ற மக்களிடத்தில் தங்கி இருக்கின்ற ஒருவராகும். அதனால் அதில் சார்ந்திருப்பதிலிருந்து விலகி நிற்பேன் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் மிஹிந்தலை பிரகடனம் வெளியீட்டு வைபவம் நேற்று திங்கட்கிழமை (02) மிஹிந்தலை ரஜ மஹா விஹாராதிபதி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மகா சங்கரத்தினருக்கு மத்தியில் மிஹிந்தலை நகரில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றிய சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவிக்கையில், நான் அதிகாரத்திற்கு வந்த பிறகு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை தன்னிச்சையாக பயன்படுத்துவதில்லை. இது பதவி அல்ல. மக்களின் வரத்தின் ஊடாக மக்கள் சேவகனாக நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவேன். நிறைவேற்று ஜனாதிபதி என்பது வரி செலுத்துகின்ற மக்களிடத்தில் தங்கி இருக்கின்ற ஒருவராகும். அதனால் அதில் சார்ந்திருப்பதிலிருந்து விலகி நிற்பேன். அந்த வட்டத்துக்குள் இருந்து வெளியேறி, புதிய சிந்தனையோடு வங்குரோத்தடைந்த நாட்டை வங்குரோத்து நிலைமையிலிருந்து கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பேன். நாட்டுக்கு சாதகமான விடயங்களுக்காக அந்த அதிகாரத்தை பயன்படுத்துவேன். அதன் ஊடாக நாட்டுக்கு தேவையான வளங்களையும் சுபீட்சத்தையும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பேன். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்த விதத்திலும் மக்களுக்கு சுமையாக இருக்காது. ஒரு முன்னுதாரணமான அரசாட்சி ஒன்று நடத்தப்படும். மக்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுவதற்கு முன்னர் தலைவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். தசராஜ தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு முன்மாதிரியான பணிவான செவிசாய்க்கக்கூடிய அரசாட்சி ஒன்று எமது நாட்டுக்குத் தேவை. அதற்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். எமது நாட்டில் அனைவருக்கும் கிடைக்கின்ற வகையில் சுபிட்சமான, அனைவரும் அனுபவிக்க கூடிய பொருளாதார அபிவிருத்தியோடு, புத்த தர்மத்தை கேந்திரமாகக் கொண்டு ஏனைய மதங்களுக்கும் பலத்தை கொடுக்கும் வகையில் ஒழுக்கமான, நியாயமான, பண்புள்ள, நாகரீகமான விழுமியங்களை பேணக்கூடிய, சமாதான விருத்தியைக் கொண்ட, வளமான நாடொன்றை கட்டியெழுப்ப கூடிய யுகத்தை உருவாக்குவோம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலோடு மக்களின் ஆசீர்வாதத்தோடு தற்காலிக பொறுப்பை வரையறுக்கப்பட்ட காலத்திற்கு பொறுப்பேற்று, அந்தக் காலத்தில் கௌரவத்திற்குரிய மகா சங்கத்தினருக்கு வழங்கிய பிரேரணைகளுக்கு அமைய செயற்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டு மக்கள் வீழ்ந்துள்ள பாதாளத்திலிருந்து மீட்டெடுப்போம். எமது நாடு வர்த்தக ரீதியில் மிகவும் உயர்ந்த இடத்தில் இருந்துள்ளது. அனைவருக்கும் அபிவிருத்தியையும் சுபீட்சத்தையும் கொண்டு வருகின்ற நீர்ப்பாசன கலாச்சாரத்தின் ஊடாக, செழிப்பான வயல் நிலங்களுடன் கூடிய மகிழ்ச்சிகரமான வாழ்க்கை ஒன்றை எதிர்பார்க்கும் பிரகடனம் இந்த மிஹிந்தலை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. துன்பத்தில் இருக்கின்ற மக்களை துன்பத்திலிருந்து மீட்டெடுத்து சுபீட்சத்தை நோக்கி செல்வோம். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் மூலமாக உருவாகின்ற ஒற்றுமையின் ஊடாக நாட்டை வெற்றியின் பக்கம் எடுத்துச் செல்வது எமது நோக்கமாகும். மதங்களுக்கான புனித ஸ்தலங்களை அபிவிருத்தி செய்து, நீதியும் நற்பண்புகளும் நிறைந்த பரம்பரை ஒன்றை உருவாக்கும் தேசியக் கொள்கையை நடைமுறைப்படுத்துவோம். அதன் ஊடாக வெளிப்படுகின்ற நற்பண்புகள் சமூகத்திற்கான அறநெறி விழுமியங்களை வெளிப்படுத்தி, அந்தந்த மதங்களையும் கலாச்சாரங்களையும் மதிக்கின்ற நாட்டை கட்டியெழுப்பும் வேலை திட்டத்திற்கான அடித்தளத்தை முன்னெடுப்போம். மதத் தலைவர்களுடைய எச்சரிக்கைகள், ஆலோசனைகள், பிரேரணைகள், விமர்சனங்கள், என்பனவற்றுக்கு செவி சாய்த்து சிறந்த மனோநிலையுடன் அந்த பிரேரணைகளை நாட்டின் அபிவிருத்திக்காக நடைமுறைப்படுத்துவோம். பல்வேறுபட்ட மக்கள் பல மதங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் ஆதிவாசிகள் உட்பட அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு பலத்தை உருவாக்குவோம். பல்லின மக்கள் வாழ்கின்ற எமது நாட்டின் அபிவிருத்திக்கான பிரதான அடித்தளமான இந்த ஒற்றுமையின் ஊடாக உருவெடுக்கின்ற மிகப்பெரிய சக்தியின் மூலம் வீழ்ச்சி அடைந்துள்ள இந்த நாட்டை கட்டி எழுப்ப நடவடிக்கை எடுப்போம். விகாரைகள், தேவாலயங்கள் என அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு பெரும்பான்மையானோரின் கருத்துக்கமைய இந்த விடயங்கள் முன்னெடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/192712
Checked
Sun, 12/22/2024 - 22:04
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed