புதிய பதிவுகள்2

தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!

3 months 2 weeks ago
போராட்டம் அழிந்தாலும் பிரச்சனை இல்லை பிரபாகரனின் கையில் அதிகாரத்தைக் கொடுக்கக்கூடாது என்று கங்கணம் கட்டி, போராட்டத்தையும் பொதுமக்களையும் திட்டம் போட்டு தொலைத்தது புலிகளின் ஆதரவாளர்கள் என்று கூறித் திரிந்த புலம்பெயர் காவாலிகள் என்பதையும், அவர்கள் யார் யார் என்பதை உலகமே அறியும் விசுகர். உங்களுக்கும் தெரியும் அவர்களில் யார் யார் முக்கியமானவர்களென்று, ஆனாலும் உங்கள் கைதான் சுத்தமாச்சே. ... நீங்கள் ஒருவரையும் கைகாட்ட மாட்டீர்கள் . ஆனாலும் ஊருக்கு வகுப்பெடுக்க வருவீர்கள்...,. 😏 அரியநேந்திரன் என்ன செய்வார்? என்ன செய்யமாட்டார்? ஒன்றை உங்களால் கூறமுடியுமா? ஏன் இந்தப் புடுங்குப்பாடு என்று இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை? ☹️ இலங்கையில் நிலைமை ஸ்திரமடைந்தால் யாருக்கு நட்டம்?

ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.

3 months 2 weeks ago
முடியாது நாலு வருடங்கள். 100 ரூபாய் சம்பள உயர்வுக்கு காத்திருக்க முடியாது அந்த நேரம் பொருள்களில் விலையேற்றம் 200 அல்லது 300 ரூபாய்கள். கூடி இருக்கும் 🤣 🙏

பாரா ஒலிம்பிக் போட்டியில்... ஈழத்தை பூர்வீகமாக கொண்ட இத்தாலிய தமிழர், தங்கம் வென்று மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார்.

3 months 2 weeks ago
மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி, ஒலிம்பிக் போட்டி நடந்த அதே பாரிஸ் நகரில் இப்போது நடந்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியா எட்டுப் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தியிருக்கிறது. இது இந்தியா 2024ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வென்ற மொத்தப் பதக்கங்களை விட அதிகம். அது மட்டுமல்ல, இப்போது பதக்கப் பட்டியலில் பதினைந்தாவது இடத்தையும் பிடித்திருக்கிறது. இது இன்னும் முன்னேறலாம். இந்தியா தனது 2024 ஒலிம்பிக்கை 71வது இடத்தில் நிறைவு செய்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். நமது பிள்ளைகளை ஒலிம்பிக் போட்டிகளைப் பார்க்கிறார்களோ இல்லையோ இந்தப் பாராலிம்பிக் போட்டிகளைப் பார்க்க நாம் ஊக்குவிக்க வேண்டும். அங்கே வலிக்கிறது, இங்கே வலிக்கிறது என்று சொல்லிவிட்டு சாதாரண உடற்பயிற்சிகளைக் கூட செய்யாமல் இருப்பவர்களுக்கு பாராலிம்பிக் வீரர்கள் மண்டையில் ஓங்கி ஒரு குட்டு வைத்து சொல்லித் தருகிறார்கள். ஏதேதோ பிரச்னைகள், அழுத்தங்கள் என்ற மனநிலையோடுதான் கால்களை மட்டுமே பயன்படுத்தி அம்பு எய்யும் ஷீத்தல் தேவியின் வீடியோ ஒன்றைப் பார்த்தேன். சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு இரண்டு கைகளையும் பயன்படுத்தி அம்பு எய்பவர்களோடு சரி சமமாகப் போட்டி போடும் ஷீத்தலின் வயது வெறும் பதினேழுதான். ஆனால் 10, 9 என்ற புள்ளிகளை விட குறைவாக ஒரு அம்பு கூட செல்லவில்லை. பாராலிம்பிக் இருபாலருக்குமான அம்பு எய்தும் போட்டியில் ஷீத்தல் வெண்கலம் வென்றாள். அந்த அறிவிப்பு வந்தபோது அனைவரும் மகிழ்ந்து கொண்டாட அவள் கண்கள் கலங்குகின்றன. துடைத்துக் கொள்ள நீளும் கைகள் இல்லை அவளுக்கு. கலங்கத் தொடங்கிவிட்ட என் கண்களை துடைத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். நானெல்லாம் பிரச்னை என்று சொல்லிக் கொள்ளவே தகுதியற்றவன் என்பதை ஷீத்தல் மட்டுமல்ல பாராலிம்பிக்கில் போட்டியிடும் ஒவ்வொரு வீரனும் வீராங்கனையும் எனக்கு உணர்த்தி விட்டார்கள். வீரம் என்பது முதலில் நம்மை வெல்வது. நம் மனம், உடல் தரும் தடங்கலைத் தாண்டி போட்டிக்கு வந்து நிற்பது. அதற்குப் பிறகுதான் வெற்றி தோல்வி எல்லாம். பாராலிம்பிக் ஜியோ சினிமாவில் ஒளிபரப்பாகிறது. தவறாமல் பாருங்கள். Shan Karuppusamy 03-09-24

தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!

3 months 2 weeks ago
2009 க்கு பின்னர் எந்த ஒரு அசைவும் அற்ற இனமாக எம் இனம் இருப்பதற்கு காரணம் புலிகள் இல்லாத இந்த இடைவெளியை அவர்கள் எப்பொழுது தொலைவார்கள் என்று காத்திருந்து அதற்காக அல்லும் பகலும் உழைத்து காத்திருந்த காவாலிகள் அந்த இடங்களில் புகுந்து விட்டது தான். 😡 தாயகத்தில் மட்டும் அல்ல புலம்பெயர் தேசங்களிலும் அதே நிலை தான்.

பாரா ஒலிம்பிக் போட்டியில்... ஈழத்தை பூர்வீகமாக கொண்ட இத்தாலிய தமிழர், தங்கம் வென்று மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார்.

3 months 2 weeks ago
https://www.ilmessaggero.it/AMP/en/rigivan_ganeshamoorthy_from_world_records_to_social_media_stardom-8329777.html

பாரா ஒலிம்பிக் போட்டியில்... ஈழத்தை பூர்வீகமாக கொண்ட இத்தாலிய தமிழர், தங்கம் வென்று மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார்.

3 months 2 weeks ago
மனமுவந்த பாராட்டுக்கள் ரிஜீவன் கணேசமூர்த்திக்கு . ........! 💐

ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.

3 months 2 weeks ago
சரி சம்பளத்துடன் இந்த வருடம் ஒரு இனிப்பு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இனிப்பாக கூட்டிக் கொண்டே போகலாம். 50 இனிப்பு சேர்ந்த பின் 100 ரூபாவாக கொடுக்கலாம்.

பாரா ஒலிம்பிக் போட்டியில்... ஈழத்தை பூர்வீகமாக கொண்ட இத்தாலிய தமிழர், தங்கம் வென்று மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார்.

3 months 2 weeks ago
இது சரியான தகவல்களா. ??. 16 வயதில் திருமணம் செய்தாரா. ?? கணேஷாமூர்த்திக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். 🙏

தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!

3 months 2 weeks ago
விசுகு... சரியாக சொன்னீர்கள். நாங்கள் செய்யவும் மாட்டம், செய்யுறவனையும்.. கேலியும், நையாண்டியும் சொல்லிக் கொண்டு இருப்பம்.

பாரிஸ் 2024 பரா ஒலிம்பிக்

3 months 2 weeks ago
பாரிஸ் பாரா ஒலிம்பிக் Badminton போட்டியில்... தமிழ் நாட்டை சேர்ந்த நித்திய ஸ்ரீ வெண்கலப் பதக்கம் வென்றார். ஏற்கெனவே நடந்த Badminton போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த துளசிமதி வெள்ளியும், மணிஷா வெண்கலமும் வென்றுள்ளனர். இம்முறை நடக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியில்... பதக்கங்களை அள்ளிக் குவிக்கும் தமிழர்களுக்கு பாராட்டுக்கள். 🙂

ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.

3 months 2 weeks ago
இரண்டு ரூபாய் புழக்கத்தில் இல்லை அதாவது பழக்கத்தில் இல்லை இனிப்பு தான் கொடுக்கிறார்கள் முன்பு பத்து சதம். ஐம்பது சதம். . இப்படி படிப்படியாக உயர்ந்துள்ளது இரண்டு ஐந்து பத்து ரூபாய் மிச்சம் கேட்க வெக்கமாக இருக்கிறது .. ஆனாலும் இனிப்புகளை தருவார்கள் 😂🤣

இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை நிறுத்தம். - பிரித்தானியா!

3 months 2 weeks ago
அட... இஸ்ரேலுக்கு கோவம் வந்திட்டுது. 😂 பிரித்தானியாவின் உள்நாட்டு அலுவலில் தலையிடும் அளவுக்கு, இஸ்ரேல் செல்லப் பிள்ளை எண்டால் பாருங்கோவன். 🤣 எல்லாம்... ஸ்ரீலங்காவிடம் பழகின பழக்கமாக இருக்கும். 😃

பாரா ஒலிம்பிக் போட்டியில்... ஈழத்தை பூர்வீகமாக கொண்ட இத்தாலிய தமிழர், தங்கம் வென்று மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார்.

3 months 2 weeks ago
தமிழ் கார்டியன்... tribute என்ற சொல்லை ஏன் பாவித்தது என்று தெரியவில்லை. இத்தாலிய மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்யும் போது ஏற்பட்ட தவறாகவும் இருக்கலாம். நமக்கு... குழம்பு ருசியாக இருந்தால், சரிதானே.... 😂 🤣

ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.

3 months 2 weeks ago
இந்த மீம்ஸை தயாரிப்பவர்கள்... முஸ்லீம்கள். நான் பார்த்த அளவில், அவர்களில் பெரும்பாலானோர்... ரணிலையும், அனுரவையும் ஆதரிக்கின்றார்கள். சஜித்தை ஆதரித்து வந்த மீம்ஸ் ஒன்றையும் இதுவரை காணவில்லை. நம்ம @தனிக்காட்டு ராஜாவும் (முனிவர்) மீம்ஸ் தயாரிக்கின்றார். மேலுள்ளது தனிக்காட்டு ராஜா தயாரித்தது.
Checked
Sun, 12/22/2024 - 22:04
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed