3 months 2 weeks ago
03 SEP, 2024 | 06:48 PM
தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அசாதாரண வரிச்சூத்திரத்தை மாற்ற நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வவுனியா யங் ஸ்டார் விளையாட்டரங்கில் இடம்பெற்ற 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் 31 ஆவது மக்கள் வெற்றிப் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய சஜித் பிரேமதாச,
எமது நாட்டின் அரச கொள்கைகளை செயல்படுத்துவது அரச ஊழியர்கள் ஆகும்.
தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கின்ற சந்தர்ப்பத்தில், அரச ஊழியர்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், திடீர் திடீரென்று சம்பளத்தை அதிகரிப்போம் என்று பொய் வாக்குறுதிகளை வழங்குகின்ற இந்த நிலையில், ஒட்டுமொத்த அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை 24% ஆல் அதிகரிப்பதோடு, வாழ்க்கைச் செலவு கொடுப்பணவை 17800 ரூபாயிலிருந்து 25,000 ரூபா வரை அதிகரித்து, அடிப்படைச் சம்பளத்தை 57 500 ரூபா வரை அதிகரிப்போம்.
தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அசாதாரண வரிச்சூத்திரத்தை மாற்ற நடவடிக்கை எடுப்போம்.
6 - 36% ஆக காணப்படுகின்ற வரிச்சூத்திரத்தை 1-24% வரை குறைத்து, அரச ஊழியர்களையும் நடுத்தர வகுப்பினர்களையும் வலுப்படுத்துவோம்.
சுமார் 7 இலட்சம் அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், ஐக்கிய மக்கள் சக்திக்கு உங்களுடைய வாக்கை அளிக்குமாறு கோருகின்றோம்.
அத்தோடு அரச ஊழியர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வதோடு அவர்களுக்கான சம்பள அதிகரிப்பையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.
முகாமைத்துவ, அபிவிருத்தி துறை, கிராம உத்தியோகத்தர், விவசாய துறை, கல்வித்துறை, மற்றும் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரச ஊழியர்களும் இந்நாட்டின் வளங்களாகும்.
அரச ஊழியர்கள் இந்நாட்டின் சுமை என்று இந்த அரசாங்கம் கருதியது. அரச சேவை துறை இந்த நாட்டை பாதிக்கின்றது என்று மாற்று அரசியல் சக்திகள் கூறியது.
அரச சேவையை பாதுகாத்து, புதிய பயிற்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தி, திறமைகளையும் ஆளுமைகளையும் தொழில்நுட்பத்தின் ஊடாக விருத்தி செய்து அதனை முன்னெடுத்துச் செல்வது ஐக்கிய மக்கள் சக்தியே.
பொலிஸாருக்கு வழங்கிய மூன்று மாதங்களுக்கான மேலதிக கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குவதோடு, பதவி உயர்வுகளையும் மீள பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.
முப்படைகளில் வன் ரேங்க் ஒன் பே திட்டத்தை செயல்படுத்துவதோடு, சிவில் பாதுகாப்பு அதிகாரிகளையும் பாதுகாத்து எமது நாட்டின் அரச சேவையை நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுப்போம். அத்தோடு அரச சேவையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் பயிற்சிகளும் வழங்கப்படும்.
அத்தோடு கோட்டாபயவின் அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்ட வீடமைப்பு திட்டத்தை மீண்டும் ஆரம்பித்து, கம்உதாவ யுகத்தை உருவாக்குவோம்.
அன்று மக்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை வழங்கியிருந்தால் இன்று அந்த வீடுகள் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.
கோட்டாபயவை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கான மூலோபாயத்தின் சூத்திரதாரி ரணில் விக்ரமசிங்க ஆகும். அவர் கோட்டாபயவை வெற்றி பெறச் செய்வதற்கான தந்திரங்களையும் மேற்கொண்டார்.
வறுமையை போக்குவதற்கான புதிய வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படும். நுகர்வு, முதலீடு, சேமிப்பு, உற்பத்தி, மற்றும் ஏற்றுமதி ஆகிய ஐந்து துறைகளை மையமாகக் கொண்டு வறுமையை ஒழிப்பதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
மாதம் ஒன்றுக்கு 20,000 ரூபா வீதம் 24 மாதங்களுக்கு நிவாரணங்களை வழங்கி, வறுமையை ஒழிக்கும் சிறந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கடந்த ஜனாதிபதிகளாலும் தற்போதைய ஜனாதிபதிக்கும் கூட கூட்ட முடியாமல் போயிருக்கின்றது.
அவர்களின் இயலாமை மற்றும் இனவாத கொள்கை என்பனவற்றினாலே இந்த மாநாட்டை கூட்டமுடியாதுள்ளனர்.
எனவே ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக இரண்டு மாகாணங்களையும் மையமாகக் கொண்டு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டி, அதனுடாக முழு நாட்டுக்கும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என்றார்.
https://www.virakesari.lk/article/192767
3 months 2 weeks ago
பிரித்தானியாவின் கருத்துக்கு இஸ்ரேல் கடும் அதிருப்தி: வலுக்கும் கண்டனம்
இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்தும் பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவை அந்நாட்டு பிரதமர் அலுவலகம் கடுமையாக சாடியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தின் வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி நேற்று, இஸ்ரேலுக்கான 350 ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் 30 ஐ இடைநிறுத்துவதாக தெரிவித்திருந்தார்.
சர்வதேச ஆபத்து
சர்வதேச சட்டத்தை மீற இந்த உபகரணங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற ஆபத்து இருப்பதாக அவர் மேற்கோள்காட்டி இந்த அறிவிப்பை வெளிப்படத்தினார்.
இடைநிறுத்தப்பட்ட உபகரணங்களில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களுக்கான பாகங்கள் அடங்கும் என அவர் கூறியிறுந்தார்.
மேலும், இது முழு ஆயுதத் தடையல்ல என்றும் லாமி கூறியுள்ளார்.
இந்நிலையில் இதற்கு பதில் வழங்கியுள்ள இஸ்ரேல்,
"மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிராக தன்னைக் காத்துக் கொள்ளும் ஜனநாயக நாடான இஸ்ரேலுடன் நிற்பதற்குப் பதிலாக, பிரித்தானியா மேற்கொண்டுள்ள தவறான முடிவு ஹமாஸைத் தைரியப்படுத்தும்.
நியாயமான வழி
இஸ்ரேல் நியாயமான வழிகளில் ஒரு நியாயமான போரைத் தொடர்கிறது. நாஜிகளுக்கு எதிரான வீரமிக்க நிலைப்பாடு இன்று நமது பொதுவான நாகரீகத்தைப் பாதுகாப்பதில் இன்றியமையாததாகக் காணப்படுவது போல, ஹமாஸ் மற்றும் ஈரானின் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான இஸ்ரேலின் நிலைப்பாட்டை வரலாறு தீர்மானிக்கும்” என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை மீட்கும் ஒப்பந்தத்தை மேற்கொள்ள நெதன்யாகு போதுமான அளவு செயல்படவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
மேலும், ஹமாஸ் அழிக்கப்படுவதற்கு முன் நிரந்தர போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டால், கூட்டணி அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாக நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டணி கட்சிகள் அச்சுறுத்தியுள்ளன.
சொந்த அரசியல் வாழ்வு
எனவே, நெதன்யாகு தனது சொந்த அரசியல் வாழ்வுக்கு முன்னுரிமை அளித்து, அமைதி ஒப்பந்தத்தைத் தடுப்பதாக பலர் குற்றம் சாட்டுகின்றனர்.
இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக, இறந்துவிட்டதாக கருதப்படும் 33 பேர் உட்பட, இன்னும் பிடியில் உள்ள 97 இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்ற ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் மத்தியஸ்தர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
இவ்வாறான பின்னணியில் பிரித்தானியாவின் அறிவிப்புக்கு இஸ்ரேல் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
https://tamilwin.com/article/britain-withdraws-support-for-israel-1725359301
3 months 2 weeks ago
தமிழ் அரசியல் பரப்பின் சித்து விளையாட்டின் கனவான்கள், மிதவாதிகள் , சந்தர்ப்பவாதிகள், குழப்பவாதிகள் யாரென்று அடையாளப்படுத்தி ஆணிகளை இறுக்கி கொஞ்சமாவது ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டுவந்தால் சிறப்பு.
3 months 2 weeks ago
மக்கள் கடவுச்சீட்டுக்காக வரிசையில் நிற்பதற்கு ஜனாதிபதியின் பிழையான முகாமைத்துவமே காரணம் - முஜிபுர்
Published By: DIGITAL DESK 7 03 SEP, 2024 | 04:45 PM
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
கடவுச்சீட்டு விநியோகிக்கும் அதிகாரத்தை எந்த நிறுவனத்துக்கு வழங்குவது என ஜனாதிபதிக்கும் அவரது செயலாளருக்கும் இடையில் இருந்துவந்த முரண்பாடு காரணமாகவே கடவுச்சீட்டு விநியோகிக்கும் நடவடிக்கை பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறனர். ஜனாதிபதியின் முகாமைத்துவத்தை இதன் மூலம் மக்களுக்கு அறிந்துகொள்ள முடியும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற வெளிநாட்டு தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வேலையாளர்களின் தேசிய குறைந்ததபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் ஆகியன மீது இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு முன்னால் கடந்த சில தினங்களாக மக்கள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள இரவு பகலாக வரிசையில் இருந்து வருகின்றனர். பிழையான முகாமைத்துவம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 2019இலும் இதுவே இடம்பெற்றது. பிழையான நபரை அதிகாரத்துக்கு காெண்டுவந்து, தவறான தீர்மானங்களை எடுத்ததால் நாடு வீழ்ச்சியடைந்தது.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கடந்த காலங்களில் நாள் ஒன்றுக்கு 2ஆயிரம் வரை கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டு வந்தது. ஒருநாள் சேவை மூலம் வரையறை இல்லாமல் கடவுச்சீட்டு விநியோகிக்கப்பட்டு வந்தது. கடவுச்சீட்டுகளின் காலாவதியாகும் திகதி குடிவரவு குடியகல்வு திணைக்கள ஆணையாளருக்கும் தெரியும்.
அப்படி இருந்தும் இதனை விநியோகிக்க ஏன் தாமதித்தார்கள். கையிருப்பில் ஒருதொகை கடவுச்சீட்டு இருக்கும்போதே இதனை விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது.
அத்துடன் கடவுச்சீட்டு விநியோகம் தாமதமடைய பிரதான காரணமாக அமைந்திருப்பது, இதனை எந்த நிறுவனத்துக்கு வழக்குவதென்று, ஜனாதிபதிக்கும் அவரின் செயலாளருக்கும் இடையில் இடம்பெற்ற முரண்பாடாகும்.
இவர்களின் இழுபறியால் சாதாரண மக்களை பாதிக்கப்பட்டு, இரவு பகலாக வரிசையில் இருந்து வருகின்றனர். ஜனாதிபதியுன் முகாமைத்துவத்தை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
அதனால் கடவுச்சீட்டுகளை சரியான முறையில் விநியோகிக்க முடியாத ஆட்சியாளர்களை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவர மக்கள் ஒருபோதும் தீர்மானிக்கப்போவதில்லை என்றார்.
https://www.virakesari.lk/article/192763
3 months 2 weeks ago
யாழ். நல்லூர் ஆலய சூழலில் இளைஞர்கள் குத்தாட்டம்: மாநகர சபை பராமுகம்
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலய சூழலில் துள்ளல் இசை பாடல்கள் ஒலிக்க இளையோர் குத்தாட்டம் போடுவது தொடர்பில் யாழ்.மாநகர சபைக்கு பல தரப்பினர் பல்வேறு தடவைகள் அறிவித்தும், எவ்விதமான நடவடிக்கைகளையும் மாநகர சபை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நல்லூர் திருவிழா காலங்களில் ஆலய சூழலில் மாநகர சபையினால் கடைகள் குத்தகைக்கு வழங்கப்படும் போது, "பக்தி கீதங்கள் மட்டுமே ஒலிபரப்பு செய்யமுடியும்" எனும் நிபந்தனையுடனையே கடைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கடைகளை குத்தகைக்கு எடுத்தவர்கள் நிபந்தனைகளைமீறும் பட்சத்தில், மாநகர சபையினால் எச்சரிக்கையுடன் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதோடு, அதனையும் மீறினால் ஒலிபரப்பு சாதனங்களை பறிமுதல் செய்யப்படும்.
மக்களுக்கு இடையூறு
இந்த நிலையில், இம்முறை மாநகர சபையினர் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையிலும் குறித்த ஒரு கடைக்கு எதிராக மாத்திரம் நடவடிக்கை எடுக்காது இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக கடைக்கான இடத்தினை மாநகர சபையிடம் குத்தகைக்கு பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் திருவிழா காலங்களில் இரவு வேளைகளில் கடையில் பெரிய திரையில் (8 X 10 LCD) திரையில் துள்ளல் இசை பாடல்களை ஒளி ஒலிபரப்பு செய்வதனால் , அவ்விடத்தில் கூடும் இளையோர் அதற்கு குத்தாட்டம் ஆடி , அவ்வழியாக செல்லும் ஏனையோருக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கோரிக்கை
இதன் படி, சம்பவம் தொடர்பில் தியாக தீபத்தின் நினைவிடம் மற்றும் ஆலய சூழலில் களியாட்ட நிகழ்வுகள் போன்று இவ்வாறான செயற்பாடு நடைபெறுவது தொடர்பில் மாநகர சபையினருக்கு பல தடவைகள் முறைப்பாடுகள் செய்த போதிலும் மாநகர சபையினர் எவ்விதமான நடவடிக்கையும் குறித்த நபர்கள் மீது எடுக்கவில்லை என்றே குறிப்பிடப்படுகிறது.
நல்லூர் ஆலய பூங்காவன உற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலையும் நாளைய தினம் புதன்கிழமை வைரவர் சாந்தி உற்சவமும் நடைபெறவுள்ள நிலையில், பெருமளவான மக்கள் ஆலயத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதனால் , பின் வீதியில் துள்ளல் இசை பாடல்களை போடும் குறித்த நபர்களுக்கு எதிராக மாநகர சபையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
https://ibctamil.com/article/municipal-council-did-not-take-any-action-jaffna-1725356308
3 months 2 weeks ago
உக்ரைனின் பொல்டவா நகரின் மீது ரஸ்யா தாக்குதல் - 40 பேர் பலி
03 SEP, 2024 | 05:37 PM
உக்ரைனிய நகரமான பொல்டவா மீது ரஸ்யா மேற்கொண்ட தாக்குதலில் 40க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைன் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் ஏவுகணை தாக்குதல் காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் 180 பேர் காயமடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு கல்வி நிலையங்களும் மருத்துவமனையொன்றும் தாக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
https://www.virakesari.lk/article/192773
3 months 2 weeks ago
பிள்ளைகளும் தேடமாட்டார்கள் போல இருக்கிறது!
3 months 2 weeks ago
பொதுக்கட்டமைப்பு தனியே பொதுவேட்பாளருடன் நிற்காமல்
அடுத்தடுத்த தேர்தல்களில் எல்லோரையும் இணைத்து களம்காண வேண்டும்.
அதற்கேற்ற நடவடிக்கைகளை இப்போதிருந்தே எடுக்க வேண்டும்.
3 months 2 weeks ago
அப்ப கொழும்பு தான் நீங்க வரவேணும் அண்ணை.
ஒரு காலத்தில ஓடுபாதையை நீட்டி விரிவாக்கி பெரிய விமானங்கள் வந்தால் தான் பொதிகளின் எடை கூடும்.
3 months 2 weeks ago
இங்கிருந்து
23 கிலோ (50 றாத்தல்) 2 பொதி.
ஒரு சிறியபொதி 15 றாத்தல்
புத்தகபை முதுகில் அளவில்லை.
3 months 2 weeks ago
பாகிஸ்தானை சகல துறைகளிலும் விஞ்சி 2ஆவது டெஸ்டில் வெற்றியீட்டிய பங்களாதேஷ் தொடரையும் முழுமையாக கைப்பற்றியது
03 SEP, 2024 | 04:35 PM
(நெவில் அன்தனி)
பாகிஸ்தானுக்கு எதிராக ராவல்பிண்டியில் கடைசி நாளான இன்று (03) நிறைவுக்கு வந்த 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 விக்டெக்களால் வெற்றியீட்டிய பங்களாதேஷ், 2 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாகக் கைப்பற்றி வரலாறு படைத்தது.
டெஸ்ட் தொடர் ஒன்றில் பாகிஸ்தானை பங்களாதேஷ் வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும்.
இதே மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்களால் வெற்றியீட்டிய பங்களாதேஷ், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை சகலதுறைகளிலும் விஞ்சும் வகையில் விளையாடி வெற்றியை சுவைத்தது.
இப் போட்டியில் 185 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தனது இரண்டாவது இன்னிங்ஸை 4ஆம் நாளனான நேற்று மாலை தொடங்கிய பாகிஸ்தான், ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போட்டியின் கடைசி நாளான இன்று காலை தனது 2ஆவது இன்னிங்ஸை பங்களாதேஷ் தொடர்ந்தபோது, ஆரம்ப வீரர்களான ஸக்கிர் ஹசன் (40), ஷத்மான் இஸ்லாம் (24) ஆகிய இருவரும் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (70 - 2 விக்.)
எனினும் அணித் தலைவர் நஜ்முல் ஹசன் ஷன்டோ (38), மொமினுள் ஹக் (34), முஷ்பிக்குர் ரஹிம் (22 ஆ.இ.), ஷக்கிப் அல் ஹசன் (21 ஆ.இ.) ஆகியோர் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி பங்களாதேஷின் வெற்றியை உறுதி செய்தனர்.
பாகிஸ்தானின் இரண்டாவது இன்னிங்ஸில் பங்களாதேஷின் வேகப்பந்துவீச்சாளர்கள் பத்து விக்கெட்களையும் பகிர்ந்தது விசேட அம்சமாகும். பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இன்னிங்ஸில் 10 விக்கெட்களையும் வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தியது இதுவே முதல் தடவையாகும்.
தனது 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய 24 வயதான ஹசன் மஹ்முத் முதல் தடவையாக 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார்.
எண்ணிக்கை சுருக்கம்
பாகிஸ்தான் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 274 (சய்ம் அயூப் 58, ஷான் மசூத் 57, சல்மான் அகா 54, மெஹிதி ஹசன் மிராஸ் 61 - 5 விக்., தஸ்கின் அஹ்மத் 57 - 3 விக்.)
பங்களாதேஷ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 262 (லிட்டன் தாஸ் 138, மெஹிதி ஹசன் மிராஸ் 78, குரம் ஷாஹ்ஸாத் 90 - 6 விக்., சல்மான் அகா 13 - 2 விக்., மிர் ஹம்ஸா 50 - 2 விக்.)
பாகிஸ்தான் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 172 (சல்மான் அகா 47 ஆ.இ., மொஹம்மத் ரிஸ்வான் 43, ஹசன் மஹ்முத் 43 - 5 விக்., நஹித் ரானா 44 - 4 விக்.)
பங்களாதேஷ் 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 185 ஓட்டங்கள்) 185 - 4 விக். (ஸக்கிர் ஹசன் 40, நஜ்முல் ஹசன் ஷன்டோ 34)
ஆட்டநாயகன்: லிட்டன் தாஸ்: தொடர்நாயகன்: மெஹிதி ஹசன் மிராஸ்.
https://www.virakesari.lk/article/192762
3 months 2 weeks ago
தமிழ் பொது வேட்பாளருக்கு முதலாவது வாக்கை செலுத்தி இரண்டாவது வாக்கை சஜித் பிரேமதாசவிற்கு செலுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் கூறியதாக யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர் யாழ்.வணிகர் கழக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தமிழ் பொது வேட்பாளருக்கு ஏன் ஆதரவு வழங்கியுள்ளது என்பது தொடர்பாக வருகைதந்தவர்களுக்கு தெளிவுபடுத்தியதாக யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார்.
அதற்கு பதில் வழங்கிய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நீங்கள் விரும்பியது போன்று தமிழ் பொது வேட்பாளருக்கு உங்களுடைய முதலாவது வாக்கை செலுத்தி இரண்டாவது வாக்கை சஜித் பிரேமதாசவிற்கு செலுத்துங்கள் என்று கூறியதாக இ.ஜெயசேகரம் மேலும் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன, பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, யாழ்ப்பாண வணிகர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
https://thinakkural.lk/article/308937
3 months 2 weeks ago
15kg, 7kg hand luggage தான் கொண்டு போகலாமண்ணை.
3 months 2 weeks ago
கந்தையர் கடுப்பேத்துறார் மை லாட் 🤣
3 months 2 weeks ago
என் வீட்டிலே எனக்குத் தெரியாமல் Dr.T.கோபிசங்கர் கமரா மாட்டி இருக்கிறாரா என்று சந்தேகமாக இருக்கிறது.
கடைசி வரிகளை வாசிக்கும் போது ‘ பார் மகளே பார்’ படத்தில் இடம்பெற்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.
தந்தை வாழ்வு முடிந்து போனால்
தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை
தாயின் வாழ்வு மறைந்து போனால்
தந்தைக்கென்று யாருமில்லை
ஒருவராக வாழுகின்றோம்
பிரிவதற்கோ இதயமில்லை
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
பெருமாள் எனக்கும் இந்தியா போய்போக ஆசை தான்.
ஆனாலும் இரண்டு பிரச்சனை.
நேரடியாக விமானசீட்டு வாங்கணும்.
2 பொதிகளையும் கொண்டுபோக விடணும்.
3 months 2 weeks ago
ரிஜீவன் கணேசமூர்த்திக்கு பாராட்டுக்கள்.
சக்கர நாற்காலியில் இருக்க வேண்டிய தம்பி
இப்படி சாதனை படைத்திருப்பதே ஒரு சாதனை.
பாராட்டுக்கள்.
3 months 2 weeks ago
தமிழ் மீம்ஸ்கள் சயித்துக்கு எதிராக மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன.
ரணிலை கழுவி ஊத்தவில்லை?
3 months 2 weeks ago
லட்சகணக்கிலை புலம்பெயர் தமிழர் களின் வயதுகள் கிழ வயதாகிறது நல்ல பென்சன் சேமிப்பு இவற்றை கறக்க இரண்டு அரசுகளும் பொறி வைக்கின்றனர் .போற போக்கிலை இரண்டென்ன ஒரு நாளைக்கு நான்கு விமானம் பறந்தாலும் ஆச்சரிய பட தேவையில்லை .
Checked
Sun, 12/22/2024 - 22:04
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed