1 day 23 hours ago
இந்த அறுபத்து மூன்று வயது எல்லை என்பது இலங்கை அரச மருத்துவமனைகளில் சேவையாற்றுவதற்கான கட்டுப்பாடா? இந்த வயது எல்லையின் பின்னரும் தனியார் மருத்துவமனைகளில் வேலையாற்றலாமா?
அறுபத்து ஐந்து வயது ஏன் அறுபதாக குறைக்கப்பட்டது?
மற்றைய நாடுகளில் வயது எல்லை என்ன?
1 day 23 hours ago
என்னப்பா, டயட் கோக்கில ஐஸ் போட்டு அடியுங்கோ எண்டுபோட்டு, அடிச்சுப்போட்டு வந்து பார்த்தா, எங்கிருந்தாலும் வாழ்க பாட்டு போட்டு சோகமா இருக்கிறியள்.
நம்ம பாட்டு இதுதான்,
அது சரி கண பேர் என்னை சந்திச்ச விசயம் சொல்லி இருந்தினம். உண்மைதான்.
1 day 23 hours ago
இங்கே நடக்கும் சம்பாசனைகளுக்கும் தலையங்கத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை.
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறை என்பதற்கு பதிலாக புலிகளின் என்று போட்டால் சரி.
1 day 23 hours ago
1 day 23 hours ago
2 days ago
2 days ago
சஜித்தின் இந்தக் கூற்று ஏற்கனவே பார் அநுமதிப் பத்திரத்துக்கு சிபாரிசு செய்த சமூகவிரோதிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தமாதிரி இருக்கின்றது. போரினால் பாதிக்கப்பட்ட பிந்தங்கிய மாவட்டமாகிய கிளிநொச்சியில் 16 பார்களுக்கு சமுகவிரோதிகள் சிலர் சிபாரிசு செய்துள்ளமை சகலதரப்பாலும் கண்டிக்கப்படவேண்டியது!
2 days ago
சீமான் செய்யும் அரசியல் அவருக்கானது. ஈழத்தமிழர்களுக்கு அதனால் பலன் ஏதும் இல்லையென்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. சர்வ வல்லமை பொருந்திய எம் ஜி ஆரே முதலமைச்சராக இருந்த காலத்தில் செய்ய முடியாததை இதுவரை தேர்தலில் ஒரு ஆசனத்தைத்தன்னும் வெல்லக் கஸ்ட்டப்படும் சீமான் செய்வார் என்று எதனை வைத்து எதிர்பார்க்க முடியும், ஆகவே அவரைக் கடந்து சென்று விடலாம்.
ஆனால், சீமானை எதிர்க்கிறோம் என்கிற கொள்கையில் இருந்துகொண்டு கருனாநிதியை ஆதரிக்கின்ற சிலர் அவர் ஈழத்தமிழர் தொடர்பாக நடந்துகொண்ட முறையினைச் சரியென்று ஏற்றுக்கொள்கிறார்களா?எம் ஜி ஆரிற்குப் போட்டியாகவே அரசியல் செய்துவந்த கருனாநிதி புலிகள் உட்பட ஏனைய போராளிகளை ஆதரித்ததோ அல்லது அவ்வாறு நடந்துகொண்டதோ தனது அரசியல் ஆதாயத்திற்காகவே என்பதை ஏற்றுக்கொள்கிறார்களா? சகோதர யுத்தம் சகோதர யுத்தம் என்று தொடர்ச்சியாக பேசிவந்த கருனாநிதி இறுதிப் போர்க்காலத்தில் நடந்துகொண்ட முறையினைச் சரியென்று ஏற்றுக்கொள்கிறார்களா? தமிழ்நாட்டில் மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டங்களை நசுக்கியமை, பாடசாலைகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை கொடுத்து மாணவர் விடுதிகளை மூடியமை, பாசாங்கு உண்ணாவிரதம் இருந்து தமிழர்களை ஏமாற்றியமை, இறுதி நாட்களில் தில்லியில் கூடாரமடித்து தனது குடும்ப உறவுகளுக்கு பாராளுமன்ற பதவிகளை உறுதிப்படுத்திக்கொண்டமை, இனக்கொலை அகோரமாக நடந்துகொண்டிருக்கும்போது யுத்தநிறுத்தம் வந்துவிட்டதாக பொய்கூறி பின்னர் மழை விட்டாலும் தூவானம் விடாது பெய்வதில்லையா அதுபோலத்தான் என்று சப்பைக் கட்டுக் கட்டியமை.................என்று பல விடயங்களைச் செய்திருந்தாரே? அவற்றைச் சரியென்று இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?
2015 ஆம் ஆண்டில் அன்றைய வெளிவிவகார அமைச்சர் சிவ்சங்கர் மேனன் தெரிவுகள் எனும் புத்தகத்தை எழுதினார். அதில் இறுதிப்போரை நடத்த முன்னர் தமிழ்நாட்டு அரசியல்த் தலைவர்களைச் சந்தித்து போரிற்கெதிரான அவர்களின் நிலைப்பாட்டை நாடிபிடித்தறிந்து, அதனைத் தணிக்கும் காரியங்களில் ஈடுபடுமாறு தன்னையும், பிரணாப் முகர்ஜியையும் சோனியா தமிழ்நாட்டிற்கு அடிக்கடி அனுப்பி வந்ததாகக் கூறியிருந்தார். அந்தப் பயணங்களின்போது தானே அதிசயித்துப் போகும் வண்ணம் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்த் தலைவர்கள் புலிகளை அழிக்கும் போரிற்கெதிராக தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்பெதனையும் கொண்டிருக்கவில்லை என்று அவர் கூறுகிறார். வெளியில் மேடைகளில் போரை எதிர்ப்பதாகக் கூறும் அதே தலைவர்கள் தனிப்பட்ட ரீதியில் புலிகள் அழிக்கப்படுவதை விரும்பினார்கள் என்று கூறுகிறார். கருனாநிதி ஒரு படி மேலே சென்று தனது தனிப்பட்ட பாதுகாப்பிற்குப் புலிகளால் ஆபத்து வரும் என்று தன்னிடம் கூறியதாகவும் அவர் கூறுகிறார். இந்த அரசியல்வாதிகளில் ஜெயலலிதா கூட விதிவிலக்கல்ல.
சீமானை எதிருங்கள், அதில் தவறில்லை. அதற்காக கருனாநிதியை தியாகியாகக் காட்டுவதை நிறுத்துங்கள்.
2 days ago
இந்த வரிசையில்
அமெரிக்காவிலிருந்தும்
எலான் மாஸ்கையும் ராமசாமியையும் சேர்க்க வேண்டுகிறேன்.
வாலி சம்பந்தமில்லாத அனுராவை கேட்பதைவிட
ரணிலிடமே நேரடியாக கேட்கலாமே?
சுமந்திரனுக்கும் ரணிலுக்கும் தான் நல்ல உறவு உள்ளதே.
2 days ago
இவ்வாறான சந்தேகம் மக்கள் மத்தியில் வலுவாக இருக்கின்றது. பின் தங்கிய மாவட்டமாகிய கிளிநெச்சியில் சில சமூகவிரோதிகளின் சிபாரிசின் அடிப்படையில் 16 பார் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சமூகவிரோதிகள் மக்களுக்கு அடையாளம் காட்டப்படவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இச் சமுகவிரோதிகளை அநுர அரசு காப்பாற்ற முனைந்தால் தமிழ் மக்களின் ஆதரவை இழக்கவேண்டியிருக்கும். தம்மைப் பாதுகாக்கும் நோக்கில் ஒருசில அரசியல்வாதிகள் அநுர அதிபரான மறுநாளே விழுந்தடித்துக்கொண்டு ஓடிப்போய் காலில் விழாக்குறையகச் சந்தித்தது இங்கு குறிப்பிடப்படவேண்டியது அவசியமாகின்றது!
2 days ago
நல்ல சிந்தனை.
ஆனால் பிழையான ஆட்களுக்கு சொல்லப்படுகிறதே?
2 days ago
ஒரு சிறப்பான பதிவு . .......! 🙏
2 days ago
2 days 1 hour ago
தேனடி மீனடி மானடி நீயடி செவ்வாய் மின்னும் சித்திரத் தங்கம் வா வா . ..........! 😍
2 days 1 hour ago
கண்றாவி!
2 days 1 hour ago
வணக்கம் வாத்தியார் . ...........!
பெண் : சில்லென்ற தீப்பொறி
ஒன்று சிலு சிலு சிலுவென
குளு குளு குளுவென சர சர
சர வென பரவுது நெஞ்சில்
பார்த்தாயா
பெண் : இதோ உன் காதலன்
என்று விறு விறு விறுவென
கல கல கலவென அடி மன
வெளிகளில் ஒரு நொடி நகருது
கேட்டாயா
பெண் : உன் மெத்தை
மேல் தலை சாய்கிறேன்
உயிர் என்னையே தின்னுதே
உன் ஆடைகள் நான் சூடினேன்
என்னென்னவோ பண்ணுதே
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே
பெண் : கண்ணா உன் காலணி
உள்ளே என் கால்கள் நான்
சேர்ப்பதும் கண்மூடி நான்
சாய்வதும் கனவோடு நான்
தொய்வதும் கண்ணா உன்
கால் உறை உள்ளே என் கைகள்
நான் தொய்ப்பதும் உள்ளுற தேன்
பாய்வதும் உயிரோடு நான் தேய்வதும்
பெண் : முத்து பையன் தேநீர்
உண்டு மிச்சம் வைத்த
கோப்பைகளும் தங்க கைகள்
உண்ணும் போது தட்டில் பட்ட
ரேகைகளும் மூக்கின் மேலே
முகாமிடும் கோபங்களும் ஓஓஓ…
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே
பெண் : அன்பே உன் புன்னகை
கண்டு எனக்காக தான் என்று
இரவோடு நான் எரிவதும்
பகலோடு நான் உறைவதும்
நீ வாழும் அரை தனில் நின்று
உன் வாசம் நாசியில் உண்டு
நுரை ஈரல் பூ மலர்வதும்
நோய் கொண்டு நான் அழுவதும்
பெண் : அக்கம் பக்கம் நோட்டம்
விட்டு ஆளை தின்னும் பார்வைகளும்
நேரில் கண்டு உண்மை சொல்ல
நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்
மார்பை சுடும் தூரங்களில்
சுவாசங்களும் ஓஓஓ…
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே.......!
--- தித்திக்குதே தித்திக்குதே ---
2 days 1 hour ago
விமர்சனத்துக்கு நன்றி கிருபன் . .........!
2 days 1 hour ago
20 DEC, 2024 | 04:54 PM
(எம்.மனோசித்ரா)
சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதாக கூறிக் கொண்டு அரசியல்வாதிகளுக்கு மதுபான உரிமப் பத்திரங்களை வழங்கிய காலமொன்று இருந்தது. இந்த கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இலங்கை மது ஒழிப்பு பேரவையின் புதிய அலுவலக திறப்பு விழாவில் இன்று வெள்ளிக்கிழமை (20) கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதாக கூறிக் கொண்டு அரசியல்வாதிகளுக்கு மதுபான உரிமப் பத்திரங்களை வழங்கிய காலமொன்று இருந்தது. இந்த கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டும்.
நாட்டின் சமூக ஒழுங்கு குறித்து உண்மையான யதார்த்தமான புரிதலை நாம் கொண்டிருக்க வேண்டும். இதை விடுத்து வெறுமனே பேசக் கூடாது. நாட்டில் டொலருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அடுத்த ஆண்டு முதல் வட்டியில் ஒரு பகுதியை செலுத்த வேண்டும்.
பிற வெளிநாட்டு கடன்களையும் செலுத்த வேண்டியுள்ளன. இதை அடைவதற்காக நமது நாட்டின் அந்நிய செலாவனி கையிருப்புக்களை உயர் மட்டத்தில் வெற்றிகரமாக பேண வேண்டும்.
இதன் பொருட்டு, சுற்றுலாத் துறையானது அந்நியச் செலாவணியை ஈட்டும் முக்கிய ஏற்றுமதி வணிகங்களில் ஒன்றாகப் பெயரிடப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் அதேவேளை, அதனால் சமூகத்தில் ஏற்படும் சமூக பாதிப்புகளைக் குறைப்பதற்கும், தடுப்பதற்கும் சமச்சீரான வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளாக மதுபானசாலை உரிமைப் பத்திரங்கள் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக அல்லாமல் அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்காக வழங்கப்பட்டன.
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதாக கூறிக் கொண்டு, அரசியல்வாதிகளை பலப்படுத்தவும், கட்சி தாவும் நடவடிக்கையையும் மேற்கொள்வுமே இவை வழங்கப்பட்டு வந்தன. இந்தக் கலாசாரத்திலிருந்து விலகி நல்லொழுக்கமுள்ள நாகரீகமான சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும்.
முறையான கொள்கை உருவாக்கத்துடன், கட்டளைச் சட்டங்கள் மற்றும் வரைவுச் சட்டங்கள் மூலம் மது இல்லாத சிந்தனை மற்றும் கருத்து உருவாக்கப்பட வேண்டும்.
அதன் மூலம் அவை செயல்படுத்தப்பட்டு, பின்பற்றப்பட்டு, கண்காணிக்கப்படவும் வேண்டும். இந்த இலக்குகளை நிறைவு செய்யும் செயற்பாட்டை வெற்றியடையச் செய்வதன் மூலம் அனைவரது அபிலாஷைகளையும் வெற்றிகொள்ள முடியும் என்றார்.
https://www.virakesari.lk/article/201750
2 days 1 hour ago
பாலின ஈர்ப்புகளில் என்னென்ன வகைகள் உள்ளன? பொம்மைகள் மீதும் காதல் வருமா?
20 டிசம்பர் 2024, 10:59 GMT
@akihikokondosk
அகிஹிகோ கோண்டோ தன்னை ஒரு ஃபிக்டோசெக்ஷூவல் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அகிஹிகோ கோண்டோ, கடந்த 2018ஆம் ஆண்டில், தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தார் எதிர்ப்பையும் மீறி காதலி 'ஹட்சுனே மிக்குவை' கரம்பிடித்தபோது, அந்தத் திருமணம் உலகம் முழுவதும் பேசுபொருளானது.
சமீபத்தில், அவர் தனது மனைவியுடன் ஆறாவது திருமண நாளைக் கொண்டாடியதும் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்தது.
ஜப்பானை சேர்ந்த ஒருவர் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்வதிலோ அல்லது தனது திருமண நாளைக் கொண்டாடுவதிலோ என்ன இருக்கிறது, இது ஏன் செய்திகளில் இடம்பிடித்தது என்று நீங்கள் நினைக்கலாம்.
அதற்குக் காரணம், அவரது மனைவி ஹட்சுனே மிக்கு, ஒரு அனிமே கதாபாத்திரம். இன்னும் சொல்லப்போனால் அவர் திருமணம் செய்தது, மிக்குவின் முழு உருவ பொம்மையைக்கூட அல்ல, ஒரு முப்பரிமாண ஹோலோகிராம் பிம்பம் மட்டுமே.
மென்பொருளின் உதவியோடு அந்த பிம்பம் அவருடன் பேசியது. அதாவது அமேசானின் அலெக்ஸா (Alexa) அல்லது ஆப்பிள் நிறுவனத்தின் சிரி (Siri) போல, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் ஹட்சுனே மிக்குவுடன் உரையாடி, அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தார் அகிஹிகோ கோண்டோ.
ஜப்பானை சேர்ந்த 'கேட்பாக்ஸ் (Gatebox)' என்ற நிறுவனம்தான் இந்த ஹோலோகிராமை தயாரித்திருந்தது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, அந்நிறுவனம் 'ஹட்சுனே மிக்கு'வுக்கான மென்பொருளை கைவிட்டது.
முன்னர் போல, மிக்குவுடன் பேச முடியவில்லை என்றாலும்கூட அந்தக் கதாபாத்திரத்தின் பொம்மைகளுடன் கோண்டோ வாழ்ந்து வருகிறார். கோண்டோ தன்னை ஒரு 'ஃபிக்டோசெக்ஷூவல்'(Fictosexual) என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார். அதாவது கற்பனை கதாபாத்திரங்கள் (Fictional characters) மீது ஈர்ப்பு கொள்பவர்கள்.
தன்னுடைய இந்த வாழ்க்கை முறை காரணமாகப் பலரும் தன்னை வெறுத்ததாகவும், குடும்பத்தினர்கூட இதுவொரு 'உளவியல் கோளாறு' என நினைத்ததாகவும் ஊடக நேர்காணல்களில் கோண்டோ தெரிவித்திருந்தார். அதேநேரம் இத்தகைய பாலின ஈர்ப்பு, நிச்சயமாக ஒரு 'உளவியல் கோளாறு' அல்ல.
'உளவியல் சார்ந்தது அல்ல'
@akihikokondosk
மிக்குவுடன் பேச முடியவில்லை என்றாலும்கூட அந்த கதாபாத்திரத்தின் பொம்மைகளுடன் கோண்டோ வாழ்ந்து வருகிறார்
அமெரிக்க மனநல சங்கத்தின் (American Psychiatric Association- ஏபிஏ) உளவியல் கோளாறுகளை வகைப்படுத்துவதற்கான கையேட்டில் 'ஃபிக்டோசெக்ஷூவல்' மனநோயாக வகைப்படுத்தப்படவில்லை.
ஏபிஏ என்பது அமெரிக்காவில் உளவியலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முன்னணி அறிவியல் மற்றும் தொழில்முறை அமைப்பாகும். 132 ஆண்டுகள் பழமையான இந்த அமைப்பில், 157,000க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், ஆலோசகர்கள் மற்றும் மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
தன்பாலின ஈர்ப்பு (Lesbian, Gay), இருபாலின ஈர்ப்பு (Bisexual), பாலின ஈர்ப்பு இல்லாமை (Asexual) எனப் பல்வேறு வகையான பாலின ஈர்ப்புகள் உள்ளன. அவற்றையும் அமெரிக்க மனநல சங்கம் எந்தவித உளவியல் பிரச்னையாகவும் அடையாளப்படுத்தவில்லை. அவை மனிதர்களின் இயல்பான குணங்கள்தான் என ஏபிஏ கூறுகிறது.
பாலின ஈர்ப்பு என்றால் என்ன?
Getty Images
பாலின ஈர்ப்பு (Sexual orientation) என்பது ஒருவரின் உணர்ச்சி, காதல் அல்லது பாலியல் நோக்கிலான ஈர்ப்புகளின் நீடித்த வடிவத்தைக் குறிப்பதாக அமெரிக்க மனநல சங்கம் கூறுகிறது.
எளிமையாகச் சொன்னால், குயர் சென்னை கிரானிக்கிள்ஸ் கையேட்டின்படி, ஒரு நபர், எந்த நபர்கள் அல்லது பாலினங்களுடன் உடல்ரீதியாக, உணர்வு ரீதியாக அல்லது காதல் சார்ந்து ஈர்க்கப்படுகிறார் என்பதே பாலின ஈர்ப்பு.
பாலின ஈர்ப்பும் பாலின அடையாளமும் (Gender identity) ஒன்றல்ல. பிறப்பின்போது வழங்கப்படுகிற பாலினத்தைச் சார்ந்த வழமைகள், நடத்தைகள், பாலின பங்களிப்பு ஆகியவற்றை வைத்து சமூகம் ஒரு நபரைப் பார்க்கும் விதமே பாலினம் (Gender) எனப்படும்.
ஆனால், ஒரு நபர் தனது பாலினத்தை எவ்வாறு வரையறுக்கிறார் என்பதே பாலின அடையாளம். இந்த பாலின அடையாளம் என்பது பிறப்பின்போது வழங்கப்படுகின்ற பாலினம் சார்ந்த வழமைகள் மற்றும் சமூகம் வைத்திருக்கும் எதிர்பார்ப்பைப் பொறுத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
பல்வேறு வகையான பாலின ஈர்ப்புகள்
Getty Images
பொதுவாக ஒருவரின் பாலின ஈர்ப்புக்கு அடிப்படையாக இருக்கும் முக்கியக் கூறுகள் வளரிளம் பருவத்தின் தொடக்கத்தில் வெளிப்படுகின்றன என்றும் உணர்ச்சி, காதல் மற்றும் பாலியல் ஈர்ப்பின் இந்த வடிவங்கள் எந்தவொரு பாலியல் முன் அனுபவமும் இல்லாமல்கூட எழலாம் என்றும் ஏபிஏ கூறுகிறது.
அதேபோல, ஒருவரின் பாலின ஈர்ப்பை மாற்றுவதற்கு, அறிவியல் ரீதியாகப் பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்ட சிகிச்சைகள் ஏதும் இல்லை எனக் கூறும் அமெரிக்க மனநல சங்கம், அத்தகைய சிகிச்சைகளை ஊக்குவிப்பது தன்பாலின மற்றும் இருபாலின ஈர்ப்பாளர்களுக்கு சமூகத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறுகிறது.
அமெரிக்காவை சேர்ந்த கிளாட் (Glaad) எனும் அரசு சாரா ஊடக கண்காணிப்பு அமைப்பு பலதரப்பட்ட பாலின ஈர்ப்புகளை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டுமென விளக்குகிறது.
ஊடகங்கள், பொழுதுபோக்குத்துறை மற்றும் சமூகத்தில் பால் புதுமையினருக்கான (LGBTQ+) முறையான பிரநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த கிளாட் அமைப்பு செயல்படுகிறது.
பாலின ஈர்ப்பு வகைகள்
Getty Images
கிளாட் அமைப்பின் விளக்கப்படி,
எதிர்பாலீர்ப்பு (Hetrosexuality)
ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் வரும் பாலீர்ப்பு பொதுவாக எதிர்பாலீர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. பாலின ஈர்ப்பு என்பதைத் தாண்டி காதல் அல்லது உணர்வு சார்ந்த ஈர்ப்பும் இதில் அடங்கும்.
தன்பாலின ஈர்ப்பு (Lesbian, Gay)
தங்களுடைய பாலினத்தைச் சேர்ந்தவர்கள் மீது பாலின ஈர்ப்பு கொள்வது தன்பாலின ஈர்ப்பு அல்லது ஒருபாலீர்ப்பு எனப்படும். இதிலும் பாலின ஈர்ப்பு என்பதைத் தாண்டி காதல் அல்லது உணர்வு சார்ந்த ஈர்ப்பும் உண்டு.
இருபாலின ஈர்ப்பு (Bisexual)
தன்னுடைய பாலினத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிற பாலினத்தைச் சேர்ந்தவர்கள் மீது பாலின ரீதியாகவோ, காதல் அல்லது உணர்வு ரீதியாகவோ ஈர்ப்பு கொள்பவர்கள் இதில் அடங்குவார்கள். ஆனால் இந்த இருபாலினத்தவர்கள் மீதான ஈர்ப்பு என்பது ஒரே நேரத்தில், ஒரே விதத்தில் இருக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை.
எதிர்பாலீர்ப்பு, தன்பாலின ஈர்ப்பு, மற்றும் இருபாலின ஈர்ப்பு, இவை அனைத்துமே மனித பாலுணர்வின் இயல்பான அம்சங்கள் என்றும், இவை பல்வேறு கலாசாரங்கள் மற்றும் வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் ஏபிஏ கூறுகிறது.
Getty Images
அமெரிக்க இசைக் கலைஞரும் நடிகையுமான மைலே ரே சைரஸ், தனது பாலின ஈர்ப்பு குறித்து வெளிப்படையாகப் பேசிய பிரபலங்களில் ஒருவர்
அனைத்துப் பாலின ஈர்ப்பு (Pan sexual)
பாலின அடையாளத்திற்கு அப்பாற்பட்டு அல்லது அனைத்து பாலினங்களைச் சேர்ந்தவர்கள் மீதும் வரக்கூடிய ஈர்ப்பு 'அனைத்துப் பாலின ஈர்ப்பு' எனப்படும். அதேநேரம் அனைத்து பாலினங்களின் மீதும் ஒரே மாதிரியான அல்லது ஒரே அளவிலான ஈர்ப்பு இருக்கும் என்று கூற முடியாது.
அமெரிக்க இசைக்கலைஞரும் நடிகையுமான மைலே ரே சைரஸ், அமெரிக்க பாடகி மற்றும் நடிகை ஜானெல்லே மோனே ராபின்சன், பிரிட்டன் நடிகை காரா ஜோஸ்லின் டெலிவிங்னே, உள்படப் பல பிரபலங்கள் தங்களை 'அனைத்துப் பாலின ஈர்ப்பு கொண்டவர்கள்' என பொதுவெளியில் அறிவித்துள்ளனர்.
பாலீர்ப்பு இல்லாமை (Asexual)
யார் மீதும் பாலின ஈர்ப்பு இல்லாத நபர்களைக் குறிக்க 'பாலீர்ப்பு இல்லாமை' என்ற சொல் பயன்படுகிறது. அதேநேரம், எவரின் மீதும் காதல் அல்லது உணர்வு ரீதியான ஈர்ப்பு கொள்ளாத நபர்களைக் குறிக்க ஏரோமான்டிக் (Aromantic) என்ற சொல் பயன்படுகிறது.
இதில் 'பாலீர்ப்பு இல்லாத' நபர்கள், ஏரோமான்டிக் நபர்களாக இருக்கலாம் அல்லது அவர்களுக்கு பாலீர்ப்பு அல்லாத காதல் ஈர்ப்பு மட்டும் இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல ஏரோமான்டிக் நபர்கள் பாலியல் ஈர்ப்பு கொண்டவர்களாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
எதிர்பாலீர்ப்பு கொள்ளாதோரையும் அல்லது பிறப்பில் குறிக்கப்படும் பாலினத்தோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர்களையும் குறிக்க 'குயர்' என்ற வார்த்தை பயன்படுகிறது. கடந்த காலங்களில், சமூகத்தின் பாலின மற்றும் பாலீர்ப்பு எதிர்பார்ப்புகளுக்கு ஒத்துவராதவர்களுக்கான அவச்சொல்லாக இது இருந்தது. ஆனால், இப்போது பால் புதுமை சமூகத்தினர் (LGBTIQA+) தங்களை வரையறுத்துக் கொள்வதற்காக இதைப் பயன்படுத்துகின்றனர்.
Getty Images
ஆன்ரோசெக்ஷுவல் மற்றும் கைனேசெக்ஷுவல்
ஆன்ரோசெக்ஷுவல் (Androsexual) என்பது ஆண்மை (Masculinity) என விவரிக்கப்படும் சில விஷயங்களுக்காக, ஒருவர் மீது காதல், அழகியல் அல்லது பாலினரீதியிலான ஈர்ப்பு கொள்பவர்களைக் குறிக்கப் பயன்படுகிறது.
அதேபோல பெண்மை என விவரிக்கப்படும் சில விஷயங்களுக்காக, ஒருவர் மீது ஈர்ப்பு கொள்பவர்களை கைனேசெக்ஷுவல் (Gynesexual) என்று குறிப்பிடுவார்கள்.
மேலே குறிப்பிட்டவை தவிர்த்து, சில பாலின ஈர்ப்புகள் இன்னும் பரவலாக அறியப்படவில்லை என்றாலும், இணையத்தில் அவை குறித்து விவாதங்கள் எழுவதைக் காணலாம். அதில் குறிப்பிடத்தக்க சில,
ஃபிக்டோசெக்ஷூவல் (Fictosexual)
புத்தகங்கள், அனிமேக்கள், வீடியோ கேம்கள் அல்லது திரைப்படங்களின் கற்பனை கதாபாத்திரங்கள் மீது காதல் அல்லது பாலின ஈர்ப்பு கொண்டிருப்பவர்களை இவ்வாறு விவரிக்கிறார்கள்.
சேபியோசெக்ஷுவல் (Sapiosexual)
உடல் தோற்றத்தைப் பொருட்படுத்தாமல், புத்திசாலித்தனம் அல்லது மதிநுட்பத்திற்காக ஒருவர் மீது ஈர்ப்பு கொள்ளும் நபர்களை விவரிக்க இந்தச் சொல் பயன்படுகிறது.
லித்தோசெக்ஸுவல் (Lithosexual)
லித்தோசெக்ஸுவல் என்பது, ஒரு நபர், மற்றவரிடம் காதல் அல்லது பாலின ஈர்ப்பைக் கொண்டிருப்பார், ஆனால் அதே ஈர்ப்பையோ அல்லது காதலையோ தான் விரும்பும் நபரிடம் இருந்து எதிர்பார்க்கமாட்டார். இந்த வகையான ஈர்ப்பைக் கொண்டிருப்பவர்கள், தான் விரும்பும் நபருடன் உடல் ரீதியிலான அல்லது உணர்வு ரீதியிலான இணைப்பு ஏற்படுத்துவது குறித்துக் கவலைகொள்ளமாட்டார்கள்.
பலதரப்பட்ட பாலின ஈர்ப்புகள் குறித்த சமூகப் பார்வை
Getty Images
"இதுபோன்ற பலதரப்பட்ட பாலின ஈர்ப்புகளை ஏற்றுக்கொள்வதிலும், அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதிலும் பல்வேறு சிக்கல்கள் சமூகத்தில் உள்ளன. ஆனால், எந்த வகையான பாலின ஈர்ப்பாக இருந்தாலும், அதில் ஒருவரின் 'சம்மதம்' (Consent) என்பது மிகவும் முக்கியம்" என்கிறார் குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் அமைப்பைச் சேர்ந்த மௌலி.
இந்த அமைப்பு, ஒரு சுயாதீன பதிப்பகமாகவும் இலக்கியக் குழுவாகவும் செயல்பட்டு வருவதாகக் கூறும் மௌலி, "பால் புதுமை (LGBTIQA+) எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் மீது சமூகத்தில் கவனத்தை ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புதான் குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ்" என்கிறார்.
கடந்த 2021ஆம் ஆண்டு பிரிட்டன் மற்றும் வேல்ஸில் பாலின ஈர்ப்பு சார்ந்து ஒரு கணக்கெடுப்புநடத்தப்பட்டது. அதில் 13 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களை தன்பாலின ஈர்ப்பு அல்லது இருபாலின ஈர்ப்பு கொண்டவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.
அதில், 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில், 1.5 சதவீதத்திற்கும் அதிகமானோர் (7,48,000 பேர்) தன்பாலின ஈர்ப்பு கொண்டதாகவும், 6,24,000 பேர் (1.3%) இருபால் ஈர்ப்பு கொண்டவர்கள் என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டதாகவும் அந்தக் கணக்கெடுப்பு கூறுகிறது.
மேலும், சுமார் 1,65,000 பேர், தாங்கள் பிற பாலின ஈர்ப்புகளைக் கொண்டவர்கள், அதாவது தன்பால் ஈர்ப்பு, இருபால் ஈர்ப்பு, அனைத்துப் பால் ஈர்ப்பு தவிர்த்த பாலின ஈர்ப்புகளைக் கொண்டவர்கள் எனத் தெரிவித்தனர். சுமார் 2,62,000 பேர் (0.5%) பிறப்பில் பதிவு செய்யப்பட்ட பாலினத்தில் இருந்து தங்களுடைய பாலின அடையாளம் வேறுபட்டுள்ளதாகக் கூறினர்.
"எதிர்பால் ஈர்ப்பு தவிர்த்து பிற பாலின ஈர்ப்புகளை இந்தச் சமூகம் அந்நியமாகப் பார்க்கிறது. இதில் இருவரின் சம்மதம் என்பது உறுதி செய்யப்படும்போது, அவர்களை கண்ணியத்தோடும், விருப்பப்படியும் வாழ அனுமதிக்க வேண்டும்" என்கிறார் மௌலி.
"ஆனால் அந்த அடிப்படை உரிமைகளுக்காகப் போராட வேண்டிய சூழல்தான் இன்றும் நம் சமூகத்தில் நிலவுகிறது" என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
https://www.bbc.com/tamil/articles/cp839g3v7eqo
2 days 1 hour ago
விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?
RS Infotainment
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து உருவாகியுள்ள விடுதலை 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
விடுதலை முதல் பாகம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இன்று அதன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.
விடுதலை படத்தின் இரண்டு பாகங்களுக்கும், இளையராஜா இசையமைத்துள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விடுதலை 2 படம் குறித்துப் பல்வேறு ஊடகங்களில் வெளியான விமர்சனங்கள் என்ன சொல்கின்றன?
படத்தின் கதைகளம்
விடுதலை முதல் பாகத்தில், மலைப் பகுதியில் மக்கள் வாழுமிடத்தில் சுரங்கம் அமைத்து வளங்களைச் சுரண்ட நினைக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிராக புரட்சி வெடித்து மக்கள் படை ஒன்று உருவாகிறது. அதை தலைமை வகிக்கும் பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி) என்ற கதாபாத்திரத்தை சுற்றியே கதை நகர்கிறது.
புரட்சி செய்யும் மக்கள் படைக்கு எதிராக அரசாங்கம் சிறப்பு போலீஸ் படையை அப்பகுதிக்கு அனுப்புகிறது. அதன் ஜீப் ஓட்டுநராக குமரேசன் என்னும் கதாபாத்திரத்தில் சூரி நடித்திருக்கிறார்.
முதல் பாகத்தில் குமரேசன் (சூரி) கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது போல், இரண்டாம் பாகம் முழுக்க பெருமாள் வாத்தியாரின் பின்கதைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக `டைம்ஸ் ஆஃப் இந்தியா' குறிப்பிட்டுள்ளது.
``பெருமாள் வாத்தியார் யார்? அவர் எப்படி இந்த தமிழர் மக்கள் படையைக் கட்டமைத்தார்? அவருக்கான அடிப்படைத் தத்துவக் கோட்பாட்டுகள் என்ன? அவரை உருவாக்கியது யார்? ஆயுதப் போராட்டத்தை அவர் கையில் எடுத்ததற்கான காரணம் என்ன?" என்பதுதான் இரண்டாம் பாகத்தின் திரைக்கதை" என்கிறது இந்து தமிழ் திசை விமர்சனம்.
RS Infotainment
விடுதலை 2
முதல் பாகத்தில் புரட்சியாளர் `பெருமாள் வாத்தியார்' (விஜய் சேதுபதி) கைது செய்யப்படுகிறார். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தில் மலையில் இருந்து குமரேசன்(சூரி) உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் அவரை வேறு இடத்திற்கு அழைத்து வருகிறார்கள். வழி நெடுக பெருமாள் வாத்தியார் தனது வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறார்.
இந்த நிலையில் "அவரின் பின்கதை குமரேசனை எப்படி பாதிக்கிறது எனும் போக்கில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது" என டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம் கூறுகிறது.
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 வலுவான கதைகளத்தைக் கொண்டிருப்பதாக `இந்தியா டுடே' தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
``சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் இந்தத் திரைப்படம் கம்யூனிசத்திற்கான ஒரு கையேடு" என்றும், "கூற விரும்பும் கம்யூனிச கருத்தை எளிமையாக்கி, இன்றைய பாமர மக்களுக்கும் எளிதில் புரியும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்” இந்தியா டுடே பாராட்டியுள்ளது.
`இளம் தலைமுறைக்கு அரசியல் பாடம்'
RS Infotainment
"முதல் பாகத்தில், மலைக் கிராம மக்களின் வாழ்வியலையும் காவல்துறையின் அத்துமீறல்களையும் சமரசமற்று பதிவு செய்திருந்த இயக்குநர் வெற்றிமாறன், இரண்டாம் பாகத்தில் களப்போராட்ட வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பங்களின் வாழ்வியல் வலிகளை உருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்" என்று இந்து தமிழ் திசை விமர்சனம் கூறுகிறது.
விடுதலை 2 திரைப்படம், "தலைமறைவு, கைது, கண்ணீர், கொடூரமான மரணங்கள் என இயக்கவாதிகளின் வாழ்வாதாரப் போராட்டத்தை டிஜிட்டல் யுகத்தில் ஆவணப்படுத்தியுள்ளதாகக் கூறும் இந்து தமிழ், "வெற்றிமாறன் இளம் தலைமுறைக்கு அரசியல் பாடம் கற்பித்திருக்கிறார்" என்றும் விவரிக்கிறது.
மேலும் விடுதலை 2 மூலம் சரியான கேள்விகளைக் கேட்டு, `யார் சரி எது சரி' என்று வெற்றிமாறன் மக்களைச் சிந்திக்க வைப்பதாக இந்தியா டுடே கூறுகிறது.
`பெருமாள் வாத்தியாரின் பின்கதை ஏற்படுத்திய தொய்வு'
RS Infotainment
"இயக்குநர் வெற்றி மாறன் முதல் பாகத்தில் தனது பாணியில் வன்முறைக் காட்சிகளை அழுத்தமாகக் காட்சிப்படுத்தி சில விமர்சனங்களைச் சந்தித்தார். இரண்டாம் பாதியும் அதேபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது" என தினமணி விமர்சித்துள்ளது.
"இரண்டாம் பாகத்தில் இருக்கும் வன்முறைக் காட்சிகளில் எந்தவிதமான உணர்ச்சிகளும் கைகூடவில்லை. குண்டு வெடிக்கிறது, பெண்ணை ஆடையில்லாமல் சித்தரவதை செய்கின்றனர், பண்ணை அடிமைத்தனத்தைக் கொடூரமாகக் காட்டுவது என எதிலும் நமக்கு உணர்ச்சிகள் கடத்தப்படவில்லை. இது திணிக்கப்பட்ட காட்சிகளாகவே எஞ்சுகின்றன" என்றும் தினமணி விமர்சனம் குறிப்பிட்டுள்ளது.
இந்து தமிழ் விமர்சனத்திலும், படத்தில் வரும் வன்முறைக் காட்சிகளில் அதிகமான ரத்தம் தெறிப்பதாகக் கூறுகிறது. இந்தியா டுடே தன் விமர்சனத்தில், ``பெருமாளின் பிளாஷ்பேக்கை விவரிக்கும்போது படம் தொய்வடைகிறது" எனக் கூறியுள்ளது.
"விடுதலை 2 அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த கதையாக இருக்காது" என்றும் இந்தியா டுடே விமர்சித்துள்ளது.
`போலித்தனம் இல்லாத காதல் காட்சிகள்'
RS Infotainment
படத்தின் ஆரம்பத்தில் கென் கருணாஸ் வரும் காட்சிகள் விறுவிறுப்பாக நகர்வதாகக் கூறும் இந்தியா டுடே, விடுதலை 2 படத்தின் முக்கிய பலம் இயக்குநர் வெற்றிமாறன் எழுதிய ஆழமான வசனங்கள்தான் என்கிறது.
படத்தின் கதாபாத்திரங்கள் பற்றிப் பேசியுள்ள இந்து தமிழ், "இங்கு சிவப்பு மற்றும் கருப்பு நிற அரசியல் தோன்றுவதற்கான அவசியத்தையும், அதன் ஆரம்பத்தையும் ரத்தம் தெறிக்கப் பேசியுள்ள இந்தப் படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, சுப்ரமண்ய சிவா, இளவரசு, சேத்தன், இயக்குநர் தமிழ், பாவெல், பாலாஜி சக்திவேல் என ஒவ்வொருவரின் பங்களிப்பும் படத்துக்கு பலம் சேர்த்திருப்பதாக" பாராட்டியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி அற்புதமான நடிப்புடன் படத்தைத் தாங்குவதாகக் குறிப்பிட்டுள்ள இந்தியா டுடே, சூரி, குமரேசனாக இரண்டாம் பாகத்தில் படத்துக்கு பலம் சேர்ப்பதாக எழுதியுள்ளது.
இந்து தமிழ் விமர்சனம் படத்தில் வரும் காதல் காட்சிகளில் வெற்றிமாறன் வாகை சூடியிருப்பதாகப் புகழ்ந்துள்ளது.
"அழுக்கும், ரத்தமும் படிந்த இயக்கவாதிகளின் போலித்தனம் இல்லாத காதலை விஜய் சேதுபதியும்-மஞ்சு வாரியாரும் பரிமாறிக் கொள்ளும் விதம் சிறப்பு" என்றும் குறிப்பிடுகிறது.
திரைப்பட ட்ரெய்லரின்போது மஞ்சு வாரியாரின் ஹேர்ஸ்டைலுக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் "வெற்றிமாறன், திரைப்படத்தில் அதற்கு அருமையான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். இனி தலைமுடியை வெட்டிக்கொள்ளும் கலாசாரம் அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்றும் இந்து தமிழ் குறிப்பிட்டுள்ளது.
ஒளிப்பதிவு சிக்கல்கள்
RS Infotainment
விடுதலை 2 படத்தில் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்கு சரியான முடிவை அளித்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.
``இது பாராட்டுக்குரிய முயற்சி. சில தொடர்ச்சியான ஓவர்லேப் வசனங்களின் சிக்கல்கள் இருந்த போதிலும், உரையாடல் சார்ந்த கதைக்களத்துடன், பல முற்போக்கான சித்தாந்தங்கள் மற்றும் கருத்துகளைக் காட்சிப்படுத்தியன் மூலம் கதை வலுப்பெறுகிறது" என இந்தியா டுடே கூறியுள்ளது.
இளையராஜாவின் பின்னணி இசையைப் பாராட்டியுள்ள பற்றி இந்து தமிழ், ``பின்னணி இசையில் இளையராஜா மிரட்டுகிறார். விஜய் சேதுபதி, மஞ்சு வாரியரின் காதல் காட்சிகளில் கிட்டாரில் மிருதுவாகவும், விஜய் சேதுபதியின் வன்முறைக் காட்சிகளில் ட்ராம்போனில் பதற்றத்துடனும் நம் செவிகளுக்குள் அவரது இசை புகுந்து கொள்கிறது" என்று பாராட்டியுள்ளது.
படத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டிய இந்து தமிழ் விமர்சனம், ``ஒரு வசனம் முடிந்து மற்றொரு வசனம் வருவதற்குள் ஓவர்லேப் டயலாக்குகள் வந்துவிடுவதால், நிறைய வசனங்களை முழுமையாகக் கேட்க முடியவில்லை" என்று விமர்சித்துள்ளது.
படத்தின் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும், அது தேவையின்றி பொருத்தப்பட்ட இடைச்செருகல் போன்ற உணர்வை மட்டுமே கொடுப்பதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
``காட்சிகளாகவே நிறைய முரண்பாடுகள் இருப்பதாக சூரியின் பார்வையில் விரியும் விடுதலையின் கதை, இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் கதையாகவே மாறியுள்ளதாக" தினமணி விமர்சனம் குறிப்பிட்டுள்ளது.
``சூரிக்கு அதிக காட்சிகள் இல்லை. மஞ்சு வாரியரின் வருகை, பெருமாளான விஜய் சேதுபதி வாத்தியாராக மாறுவதில் பெரிய அழுத்தங்கள் இல்லை. கொலைக்கு கொலை என்றே கதை கூறப்பட்டு இருப்பதாகவும்" விமர்சித்துள்ளது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c3907kerl3go?at_campaign=ws_whatsapp
Checked
Sun, 12/22/2024 - 16:01
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed