ஊர்ப்புதினம்

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு கிழக்கில் மகத்தான வரவேற்பு

3 months 1 week ago
09 SEP, 2024 | 05:25 PM
image

ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரன் கிழக்கு மாகாணத்துக்கு திங்கட்கிழமை (09) விஜயம் செய்தபோது மேள தாள வாத்தியங்கள் முழங்க வரவேற்கப்பட்டார்.

தமிழ் பொது வேட்பாளரான அரியநேத்திரன் வடக்கில் தமது பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டதையடுத்து, தான் பிறந்த மண்ணான கிழக்கு மாகாணத்துக்கு இன்று விஜயம் செய்துள்ளார். 

இதன்போதே அவருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.  

அரியநேத்திரன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் தரப்பில் போட்டியிட பொதுக் கட்டமைப்பினாலும் அரசியல் கட்சிகளினாலும் களமிறக்கப்பட்டவர் ஆவார்.

download__1_.jfif

download__2_.jfif

https://www.virakesari.lk/article/193249

சுவாச ஆரோக்கியத்திற்கான NIHR குளோபல் ஹெல்த் ரிசர்ச் யூனிட் (RESPIRE)

3 months 1 week ago

Published By: VISHNU   09 SEP, 2024 | 08:40 PM

image

ஆசியாவில் நிலவும் சுவாச நோய் தன்மைகளை எதிர்த்துப் போராட உலக முன்னணி வல்லுநர்கள் இலங்கையில் ஒன்று கூடுகின்றனர்.

உலகெங்கிலும் உள்ள சுவாச சுகாதார நிபுணர்கள் இந்நோய் தாகத்திற்கு எதிரான தங்கள் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் வகையிலும், ஆசிய பிராந்தியத்தில் சுவாச நோய்களின் பாதிப்புகளை குறைத்திட நடத்தப்பட்டு வரும் ஆராய்ச்சியின் பரந்துபட்ட விடயங்களை வெளிப்படுத்தும் வகையிலும் கொழும்பில் ஒன்று கூடுகின்றனர்.

NIHR_-_foto_01.jpeg

சுவாச ஆரோக்கியத்திற்கான NIHR குளோபல் ஹெல்த் ரிசர்ச் யூனிட்டின் (RESPIRE) வருடாந்த அறிவியல் கூட்டம் 2024 ஆவணி 27 முதல் 29 வரை நடைபெறுகிறது, மேலும் 2016 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆராய்ச்சிப் பிரிவானது, இலங்கையில் சுவாச ஆரோக்கிய ஆராய்ச்சிக்கான மேலதிகமான முதலீட்டுக்கான அவசியத்தை எடுத்துக்காட்டும் வகையில் நாடொன்றில் ஒரு மாநாட்டை நடத்துவது இதுவே முதன் முறையாகும்.

இந்த மூன்று நாட்களுக்கான தொடர் கூட்டத்தில் 2024 ஆவணி 27ஆம் திகதியன்று தொடக்க விழாவில், சுகாதார அமைச்சு, இலங்கை மருத்துவ சங்கம், இலங்கை நுரையீரல் நிபுணர்கள் கல்லூரி மற்றும் இலங்கை பல்கலைக்கழகங்களின் சுகாதார பீடங்களின் கௌரவ விருந்தினகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு பிராந்தியதில் சிறந்த சுவாச ஆரோக்கியத்தை உறுதி செய்யும் முகமாக ஆராய்ச்சிக் குழு உறுப்பினர்கள் தங்கள் ஆய்வுகளின் சமீபத்திய விடயங்களை தெரியப்படுத்துவதோடு உலகளாவிய சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றியம் விவாதிபார்கள்.

இலங்கையின் சுகாதார அமைப்பில் சுவாச நோய்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

2017 ஆம் ஆண்டில் இலங்கை மருத்துவமனை இறப்புகளில் நாட்பட்ட சுவாச நோய்கள் (CRD)மற்றும் நிமோனியா ஆகியவை இரண்டும் அதிக எண்ணிக்கையிலான (18%) மரணங்களுக்கு காரணமாய் அமைந்துள்ளன.1 கடந்த தசாப்தத்தில் விகிதாசார இறப்பு தரவுகளின் ஒப்பீடுகள், இந்த இரண்டு வகையான நோய்களினால் மருத்துவமனையில் இறப்புகள் அதிகரித்து செல்லும் போக்கின் தன்மையை வெளிப்படுத்துகின்றன.

நாள்பட்ட சுவாச நோய்களில், ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய் (சிஓபிடி) ஆகிய இரண்டு வகையான நோய்களே அதிக நோய்த் தாக்கத்தையும் இறப்பையும் ஏற்படுத்தும் முன்னணி நோய்களாக அமைகின்றன. குழந்தை பருவத்தினர் பள்ளி செல்லாதிருப்பதற்கு மூச்சுத்திணறல் ஓர் முக்கிய காரணமாக இருப்பதோடு பெரியவர்களில், ஆஸ்துமா மற்றும் சிஓபிடி முறையே  11%  மற்றும்  10.5% அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

நுரையீரல் புற்றுநோய் உட்பட பல சுவாச நோய்களின் அதிகரிப்புக்கு அசுத்தமான காற்றின் தன்மையே காரணம் என்று கூறப்படுகிறது. நகரமயமாக்கல் மற்றும் அதிகரித்துவரும் மோட்டார் வாகனங்களின் பாவனையானது, நாடு முழுவதும் சுற்றுப்புற சூழலின் காற்றின் தரம் தாழ்த்தப்பட்டமையுடன் தொடர்புபட்டதாய் அமைகிறது.

நகரங்களில் வெளிப்புற காற்று அசுத்தமடைதல் ஒரு முக்கிய விடயமாக இருப்பதைப் போலவே, கிராமப்புற சமூகங்களில் காற்றோட்டம் இல்லாத சமையலறைகளில் உணவு சமைக்க விறகுகள் பயன்படுத்தப்படுவது உட்புற காற்று அசுத்தமடைதளுக்கான ஒரு அச்சுறுத்தும் காரணியாக அமைகிறது.

கிராமப்புற சமூகங்களைச் சேர்ந்த புகைபிடிக்கும் பழக்கமற்ற பெண்களிடையே சமையலறையிலிருந்து வெளிப்படும் புகையினாலேயே நாட்டப்பட்ட மூச்சுத்திணறல் நோயானது ஏற்படடுவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. உயிரிவாயுவை சுவாசிப்பதன் காரணமாக கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் சுகாதார விளைவுகள் பற்றிய ஆய்வு கொழும்பு மற்றும் கண்டி ஆகிய இரண்டு முக்கிய மாவட்டங்களில் நடத்தப்படும்.

இவர்கள் வளி மாசடைதல் மற்றும் புகையிலைப் பயன்பாடு பற்றி நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்களை; ஆராய்ந்து, அதில் காணப்படும் குறைபாடுகளையும் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டிய விடயங்களையும் கண்டறிவார்கள். இலங்கையில் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பயனளிக்கக்கூடிய மிக முக்கியமான விடயங்களை இவ் வேலைத்திட்டமானது வெளிக்கொணரும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

2019 ஆம் ஆண்டில், சிஆர்டி (CRD) ஆனது உலகளாவிய இறப்புக்கான மூன்றாவது முக்கிய காரணமாக 

1. 100,000 மக்கள் தொகைக்கு 218.5 இறப்புகளில் 39.3

சுவாச ஆரோக்கியத்திற்கான  NIHR குளோபல் ஹெல்த் ரிசர்ச் யூனிட்  (RESPIRE)

www.ed.ac.uk/usher/respire

RESPIRE@ed.ac.uk

ஆசிரியர்களுக்கான குறிப்புகள்

ஊடக விசாரணைகளுக்கு, தொடர்பு கொள்ளவும்:

பேராசிரியர் சாவித்திரி விமலசேகர, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம். savithriww@yahoo.com

பேராசிரியர் துமிந்த யசரத்ன, பேராதனைப் பல்கலைக்கழகம். yasaratne@yahoo.com

சுவாச ஆரோக்கியம் (RESPIRE) பற்றிய NIHRகுளோபல் ஹெல்த் ரிசர்ச் யூனிட் பற்றி விபரம்

தெற்காசியாவில் சுவாச நோய்களால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை மற்றும் பரவலான உடல்நலம் மற்றும் சமூக பாதிப்புகளைக் குறைப்பதையே RESPIRE நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆசியாவில் சுவாச நோய் மற்றும் இறப்பைக் குறைப்பதற்காக எடின்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் மலாயா யுனிவர்சிட்டி மலாயா ஆகியவற்றின் தலைமையில், வங்கதேசம், பூட்டான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள ரெஸ்பைர் அமைப்பினர் குறைந்த செலவு, அளவிடக்கூடிய கொள்கை மற்றும் மருத்துவ தலையீடுகளை வழங்கி இணைந்து செயற்படுகின்றனர்.

RESPIRE இன் ஆராய்ச்சி திட்டங்கள் தொற்று நோய்களை உள்ளடக்கியது. உதாரணம் - காசநோய் மற்றும் நிமோனியா, தொற்றாத நோய்கள் - ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய், தடுக்கக்கூடிய ஆபத்து காரணிகள் - காற்றின் தரம் மற்றும் புகையிலை பயன்பாடு மற்றும் சுவாச ஆரோக்கியத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கம்.

உலகளாவிய சுகாதார ஆராய்ச்சிக்கு ஆதரவாக யுகே அரசாங்கத்தின் யுகே சர்வதேச மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தி  NIHR 16/136/109  மற்றும் NIHR132826  ஆகியவற்றால் RESPIRE நிதியளிக்கப்படுகிறது. இந்த வெளியீட்டில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின்(கள்) கருத்ததுக்களே அன்றி NIHR அல்லது யுகே அரசாங்கத்தின் கருத்துக்கள் அல்ல.

மேலதிக தகவல்களுக்கு

Twitter/X மற்றும் Facebook  மற்றும்  www.ed.ac.uk/usher/respire/ அல்லது @RESPIREGlobal இனை பார்வையிடவும். 

உடல்நலம் மற்றும் பராமரிப்பு ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் (NIHR)

தேசிய சுகாதாரம் மற்றும் பராமரிப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் (NIHR) நோக்கம், ஆராய்ச்சி  மூலம் நாட்டின் ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் மேம்படுத்துவதாகும். 

இதனை நாம் பின்வருமாறு செயற்படுத்துகிறோம்:

உரிய காலத்தில் தேசிய சுகாதார சேவை, பொது சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றிற்குப் பயனளிக்கும் ஆராய்ச்சிக்கு நிதியுதவி செய்தல்;

ஆராய்ச்சியின் கண்டறிதல்களை மேம்படுத்தவும், சிகிச்சைகள் மற்றும் சேவைகளை வழங்க உலகத்தரம் வாய்ந்த நிபுணர்கள், செயற்பட்டு உதவியாளர்கள் மற்றும் திறமையான பணியாளர்களில் முதலீடு செய்தல்;

⦁ எங்கள் ஆராய்ச்சியின் பொருத்தப்பாடு, தரம் மற்றும் அதனால் எதிர்பார்க்கப்படும் விளைவுகளின் தாக்கத்தினை மேம்படுத்துவதற்காக நோயாளர்கள், சேவைகளை வழங்க உதவுபவர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் சமூக அங்கத்தவர்களுடன் ஒன்றிணைந்து செயற்படல்;

⦁ சிக்கல் தன்மையான உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்பு சவால்களைச் கையாளக்கூடிய சிறந்த ஆராய்ச்சியாளர்களது கவனத்தை எம்பக்கம் ஈர்த்தல், அவர்களுக்கு உகந்த பயிற்சிகளை அளித்து ஆதரித்தல்;

⦁ ஏனைய பொது நிதிவழங்குனர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையாளர்களுடன் கைகோர்த்து, ஒரு ஒருங்கிணைந்த மற்றும் உலகலாவிய ரீதியில் போட்டித்தன்மையுள்ள ஆராய்ச்சி முறையை வடிவமைக்க உதவுததல்;

⦁ குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தை கொண்ட நாடுகளில் (LMICs) வாழும் ஏழை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உலகளாவிய சுகாதார ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கு நிதியுதவி வழங்குதல்;

NIHR இற்கு சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையால் நிதி வழங்கப்படுகிறது. NIHR குளோபல் ஹெல்த் ரிசர்ச் போர்ட்ஃபோலியோ யுகே அரசாங்கத்தின் சர்வதேச மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தி LMIC களில் வாழ்பவர்களின் நேரடியானா மற்றும் அத்தியாவசிய நலனுக்காக உயர்தர பயன்பாட்டு சுகாதார ஆராய்ச்சிக்கு உதவுகிறது.

https://www.virakesari.lk/article/193272

மட்டு. சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் - நினைவுத்தூபியில் கல்வெட்டு பதிப்பதை தடுத்து குழப்பம் விளைவித்த பொலிஸார் - இராணுவமும் குவிப்பு

3 months 1 week ago
09 SEP, 2024 | 03:13 PM
image
 

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபியை புனர்நிர்மானம் செய்து, அதில் ”இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டவர்கள்” என பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை இன்று திங்கட்கிழமை (09) பதித்துக்கொண்டிருந்தபோது, இக்கல்வெட்டை பொலிஸார் பலவந்தமாக அகற்றி, அங்கு புனரமைப்பு செய்யவிடாமல் தடுத்துள்ளனர்.

அதனையடுத்து பொதுமக்களுக்கும் பொலிஸாருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டதில் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது. 

அத்துடன், அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு  சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உட்பட 7 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

WhatsApp_Image_2024-09-09_at_12.45.50.jp

1990 செட்டெம்பர் 9ஆம் திகதி  கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான் முதலான பிரதேசங்களைச் சேர்ந்த 85 பெண்கள், 10 வயதுக்குட்பட்ட 42 சிறுவர்கள், 25 வயோதிபர்கள் உட்பட  186 பொதுமக்கள் இராணுவத்தினராலும் ஊர்காவல் படையினராலும் ஒட்டுக்குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்டு 34வது நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. 

இந்த நினைவேந்தலை முன்னிட்டு சத்துருக்கொண்டானில் அமைக்கப்பட்ட படுகொலை செய்யப்பட்டவர்களின் தூபியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கான  முன்னாயத்த வேலைகளை செய்துகொண்டிருந்தனர்.

WhatsApp_Image_2024-09-09_at_12.45.49.jp

இதன்போது “1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 186 அப்பாவி பொதுமக்கள்” என பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மற்றும்  உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டை நினைவுத்தூபியில் பதித்துக்கொண்டிருந்தனர். 

அவ்வேளை அங்கு சென்ற கொக்குவில் பொலிஸார், “இராணுவத்தினராலும் முஸ்லிம் ஊர்காவல் படையினர் ஒட்டுக்குழுக்களால் படுகொலை செய்யப்பட்ட” என குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டை பதிக்க முடியாது என கூறி கல்வெட்டை பதிக்கவிடாமல் தடுத்துள்ளனர்.

 இதன்போது அங்கிருந்த பொதுமக்கள் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

WhatsApp_Image_2024-09-09_at_12.45.46.jp

அப்போது பொதுமக்கள், இது 1995 சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்தபோது  ஓய்வுபெற்ற நீதியரசர் கே.பாலிகிட்ணன் தலைமையில் ஆணைக்குழு அமைக்கப்பட்டு, அதில் பாதிக்கப்பட்ட மக்களும் அதில் உயிர் தப்பியவர்கள் பலரும் இராணுவத்தினர், ஊர்காவல் படையினர் படுகொலை செய்ததாக சாட்சியமளித்து, அவை ஜனாதிபதி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் யாரால் படுகொலை செய்யப்பட்டது என பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை ஏன் பதிக்கக்கூடாது என பொதுமக்கள் கேள்வியெழுப்பி வாதம் செய்தனர். 

இந்நிலையில் தொடர்ந்தும் கல்வெட்டை பதிக்கவிடாது பொலிஸார் தடுக்க முற்பட்டபோது அதனை மீறி கல்வெட்டு பதிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது அங்கு நின்ற  பொலிஸ் அத்தியட்சகர் பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட 7 பேரை அங்கிருந்து இழுத்துச் சென்று ஜீப் வண்டியில் ஏற்றியுள்ளார். 

WhatsApp_Image_2024-09-09_at_12.45.47.jp

அத்துடன் கல்வெட்டு பதிக்கும் வேலையை செய்துகொண்டிருந்த மேசனை இழுத்துத் தள்ளி, கல்வெட்டை அகற்றியதில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து ஜீப் வண்டியில் ஏற்றப்பட்ட 7 பேரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, பின்னர் இறக்கிவிடப்பட்டனர். 

அதேவேளை அங்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

WhatsApp_Image_2024-09-09_at_12.45.45__1

WhatsApp_Image_2024-09-09_at_12.45.45.jp

WhatsApp_Image_2024-09-09_at_12.45.48.jp

https://www.virakesari.lk/article/193230

வவுனியா குடிவரவு - குடியகல்வு திணைக்களத்திற்கு முன் பெரும் அவலம்

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 7   09 SEP, 2024 | 10:28 AM

image
 

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன் 15 நாட்களுக்கு மேலாக இரவு பகலாக குழந்தைகளுடன் பொது மக்கள் காத்திருக்கும் பெரும் அவலம் நிகழ்கிறது. என பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கழிவு வாய்க்காலின் மிக மோசமான துர்நாற்றம், நுளம்பு கடி தொல்லை, பாம்புகளின் நடமாட்டம் என பெரும் அவலத்திற்கு முகம் கொடுத்து வாரக்கணக்கில் இரவு பகலாக படுக்கை விரிப்புக்களை விரித்து படுத்து உறங்குவதாகவும், தெரிவித்துள்ள பொது மக்கள், இந்த பெரும் அவலத்திற்கு விரைவில் தீர்வு காணுமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாள் ஒன்றுக்கு 60 கடவுச் சீட்டுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன நிலையில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் இவ்வாறு15 நாட்களுக்கு மேலாக வரிசையில் நிற்கின்றனர்.

 

WhatsApp_Image_2024-09-09_at_08.01.28_91

WhatsApp_Image_2024-09-09_at_08.18.02_27

WhatsApp_Image_2024-09-09_at_08.18.02_af

WhatsApp_Image_2024-09-09_at_08.01.27_66

https://www.virakesari.lk/article/193194

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

3 months 1 week ago

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது.

இன்றைய தினம் மதியம் 12.30 மணிக்கு பின்னர் இலங்கை விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இன்று பிற்பகல் 5 மணிக்கு இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடும் பக்க நிகழ்வும் நடைபெறவுள்ளது.

இதனிடையே, இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக அறிய கிடைக்கின்றது.

https://thinakkural.lk/article/309094

மாவீரர்களது தியாத்தை நெஞ்சில் நிறுத்தி சங்குக்கு வாக்களிப்போம் – அனந்தி சசிதரன் வேண்டுகோள்

3 months 1 week ago

மாவீரர்களது தியாத்தை நெஞ்சில் நிறுத்தி சங்குக்கு வாக்களிப்போம் – அனந்தி சசிதரன் வேண்டுகோள்
September 9, 2024

 

தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களது தியாகத்தையும், போரின்போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் இழப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி செப்டம்பர் 21 ஆம் திகதி தமிழ்ப் பொது வேட்பாளரின் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்போம் என முன்னாள் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு அதரவாக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பரப்புரை நடவடிக்கை அச்சுவேலி விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிக்கு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பரப்புரைக்கூட்டத்தில் உரையாற்றும் போது அனந்தி சசிதரன் இவ்வாறு தெரிவித்தர்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது கணவர் எழிலனை இராணுவத்திடம் நேரடியாக கையளித்து இன்று 15 ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை. சர்வதேச அளவில் நீதிகேட்டு போராடிக்கொண்டிருக்கிறேன். கடந்த தேர்களில் மாறி மாறி சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்தோம். ஆனால் எவரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை காணவில்லை.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இரண்டு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்தார். இம்முறை தமிழ் மக்கள் சார்பில் கூட்டாக பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் கொண்டுவரப்பட்டுள்ளார். தமிழர்களுடைய வாக்கு தமிழருக்கே என்ற அடிப்படையில் நாங்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும்.

தமக்காக வாழாது எமது மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் உயிர்நீத்த பல்லாயிரம் மாவீரகளது தியாகத்தையும், போரின்போது கொல்லப்பட்ட மக்களது இழப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி தமிழர்களின் உரிமைச் சின்னமான சங்கு சின்னத்திற்கு நேராக ஒரே ஒரு புள்ளடியை போட்டு தமிழர்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்ட வேண்டும் என தெரிவித்தார்.

இப்பரப்புரை கூட்டத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று ஜனாதிபதித்தேர்தலில் சங்கு சின்னத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்திருந்தனர். இதன் போது அப்பகுதியை சேர்ந்த பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
 

https://www.ilakku.org/lets-vote-for-sangh-with-the-memory-of-heroes/

கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15,000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு!

3 months 1 week ago
drugs.jpg?resize=750,375&ssl=1 கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15,000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு!

கடந்த சில மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15,000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 15,491 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும், 4,860 மில்லியன் ரூபா பெறுமதியான 511 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், அந்தக் காலப்பகுதியில் கேரள கஞ்சா, ஹாஷிஸ், போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்களையும் கடற்படையினர் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

https://athavannews.com/2024/1398667

மன்னார் வைத்தியசாலைக்கு இரண்டு சிறப்பு விருதுகள்!

3 months 2 weeks ago
WhatsApp-Image-2024-09-07-at-8.36.01-PM- மன்னார் வைத்தியசாலைக்கு இரண்டு சிறப்பு விருதுகள்!

உலக சுகாதார நிறுவனத்தினால் ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் சுகாதார, தரம் மற்றும் பாதுகாப்பு  பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வு நேற்று (7) கொழும்பில் இடம் பெற்றுள்ளது.

இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு, நோயாளிகள் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்திய வைத்தியசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இரு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

இருநுாறுக்கும்  மேற்பட்ட மத்திய மற்றும் மாகாண சுகாதார நிறுவனங்களுக்குள் அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற போட்டியில் வட மாகாணத்தில் இருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மாத்திரமே குறித்த விருதை வென்றுள்ளமை குறிப்படத்தக்கது.

நிகழ்வில், இலங்கைக்கான பிரதிநிதி டாக்டர் அலோகா சிங்கா, சுகாதார அமைச்சின் செயலாளர்  டாக்டர் பாலித மஹிபால மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1398631

புதிதாக மின் இணைப்புகளை மேற்கொள்வோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

3 months 2 weeks ago

புதிதாக மின் இணைப்புகளை மேற்கொள்ளும் போது வரி இலக்கத்தை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான முன்மொழிவு இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

வருமான உரிமம்

வாகனப் பதிவு, வருமான உரிமம் பெறுதல், நடப்புக் கணக்கு தொடங்குதல், நிலம், அசையாச் சொத்து உள்ளிட்ட சொத்துகளைப் பெறுதல் போன்ற வழக்குகளில் வரி இலக்கத்தை பெறுவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதிதாக மின் இணைப்புகளை மேற்கொள்வோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Tariff Electricity Connection Notice Issued

இதன்படி மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வது தொடர்பான பரிந்துரை நிதித் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/tariff-electricity-connection-notice-issued-1725756449

விசேட தேவையுடையோர்களுக்கான காப்புறுதி திட்டம்: சஜித்தின் நற்செய்தி!

3 months 2 weeks ago

நாட்டில் காணப்படும் விசேட தேவையுடையோர்களுக்கு காப்புறுதிகளையும் வழங்குவோம் என என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

அத்துடன், அத்தோடு விசேட தேவையுடையோர்கள் பயன்படுத்துகின்ற உபகரணங்களுக்கு அறவிடப்படும் வரியையும் நீக்குவோம் என குறிப்பிட்டுள்ளார்

கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியால் வகுக்கப்பட்ட கொள்கைப் பிரகடனத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, மாற்றுத்திறனாளிகளின் நலன்களை பேண தனியான ஜனாதிபதி செயலணியொன்று நிறுவப்படும். 2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணிப்பீட்டின் பிரகாரம் மொத்த மக்கள் தொகையில் 8.7% விசேட தேவையுடையோர் இருக்கின்றார்கள்.

வங்கிக் கடன்

அது எண்ணிக்கையில் 16 இலட்சம். இவர்களுக்காக பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரலெழுப்பி இருக்கிறேன். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் இதற்காக சமூக ஒப்பந்தம் ஒன்றிற்கு வந்தோம்.

விசேட தேவையுடையோர்களுக்கான காப்புறுதி திட்டம்: சஜித்தின் நற்செய்தி! | Sajith Premadasa On Disabled People Rights

ஆனால் துரதிஷ்டவசமாக ஆட்சி அதிகாரம் கிடைக்கவில்லை. என்றாலும் எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அதற்காக நாடாளுமன்றத்தில் பிரேரணைகளை முன்மொழிந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களும் இருந்தார்கள்.

வங்கிக் கடன்களை பெற்றுக் கொள்வதற்கு தடைகள் காணப்படுகின்றன. எனவே அவற்றை இலகுபடுத்துவோம். இந்த சமூகத்தில் காணப்படுகின்ற திறமையானவர்களுக்காக தனியான விசேட வேலை திட்டங்களையும் முன்னெடுப்போம்.

இவை வெறும் வார்த்தைகளாக மாத்திரமன்றி செயற்பாட்டில் கொண்டு வருவோம். விசேட தேவையுடையவர்களும் எமது நாட்டின் பிரஜைகளே. எனவே இந்த சமூகத்துக்காக சகல வசதிகளையும் கொண்ட கல்விமுறை ஆரம்பிக்கப்பட்டு பயிற்சிகளையும் வழங்குவோம்” என்றார்.

Gallery

Gallery

Gallery

Gallery

https://ibctamil.com/article/sajith-premadasa-on-disabled-people-rights-1725711975#google_vignette

மாகாண சபை முறைமையை மீண்டும் பலப்படுத்தி அபிவிருத்தி : வடக்கு, தென்னிலங்கை மக்களிடம் அநுர மன்னிப்புக் கோர வேண்டும் - ஜனாதிபதி

3 months 2 weeks ago
07 SEP, 2024 | 10:26 PM
image

வடக்கு மக்களுக்கு  சட்டத்தின் மூலம் முழுமையாக பாதுகாப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி என்ற வகையில் உறுதி அளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இன்று ஜே.வி.பி.யின் கொள்கைகளை சுமந்து வரும் அநுரகுமார திஸாநாயக்க வடக்கு மக்களை அச்சுறுத்தி வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வடக்கில்  மக்களை அச்சுறுத்தியது தொடர்பில்   வடக்கு தமிழ் மக்களிடமும் தென்னிலங்கை மக்களிடமும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பிரதேசத்தில் இன்று (07) பிற்பகல் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

வடக்குப் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு எடுத்துரைத்த ஜனாதிபதி, மாகாண சபை முறைமையை மீண்டும் பலப்படுத்தி ஒவ்வொரு மாகாணத்திற்கும் விரிவான அபிவிருத்தியை வழங்குவதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

''இரண்டு வருடங்களுக்கு முன்னர் குடும்பமாக ஒவ்வொரு வரிசைகளில் நிற்கிறோம். ரூபாய் பெறும் வீழ்ச்சி கண்டது. வியாபாரங்கள் மூட்டப்பட்டு தொழில்களை இழக்க நேரிட்டது. மக்கள் கஷ்டங்களை மறந்திருக்க வாய்ப்பில்லை. மீண்டும் அந்த யுகம் வேண்டுமா? நல்ல எதிர்காலம் வேண்டுமா? என்பதை தேர்தல் தீர்மானிக்கும்.

அன்று நாங்கள் அரசமைத்த போது அனுரவும் சஜித்தும் இருக்கவில்லை. இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும் இல்லை. இப்போது அவர்களால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்கின்றனர். எல்லாவற்றையும் சீர்குலைக்கவே முயற்சிக்கின்றனர். கஷ்டப்பட்டு 2 வருடங்களில் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டோம்.

சில சமயங்களில் கஷ்டமான தீர்மானங்களை எடுத்தோம். வரிசை அதிகரித்து செலவை குறைத்தோம். மக்கள் கஷ்டங்களை ஏற்றுக்கொண்டனர். சிறந்த எதிர்காலம் கிடைக்குமென மக்கள் நம்பினர். எனவே மீண்டும் வரிசை யுகத்திற்கு தேவையில்லை. எனவே முன்னோக்கிச் செல்வோம். 

ஐ.எம்.எப் அமைப்புடன் ஆலோசித்து அவர்களின் நிபந்தனைகள் பிரகாரம் செயலாற்றினோம். அதன் பலனான ரூபாய் வலுவடைந்தது. அதனால் பொருட்களின் விலை குறைந்திருக்கிறது.  அந்த சலுகை மக்களுக்கும் கிடைக்கிறது.  வீட்டின் கஷ்டங்களை பெண்களே அறிவர்.  பொருட்களின் விலை குறைந்ததால் அஸ்வெசும நிவாரணம் வழங்கினோம்.

அதேபோன்று பொருளாதாரம் தற்போது மேலும் வலுவடைந்திருக்கிறது. தனியார் துறையில் சம்பள அதிகரிப்பு கிடைத்தது. அரச ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு கிடைத்தது. அடுத்த வருடத்தில் மேலும் அதிகரிப்போம். அரச ஊழியர்கள் பெரும் சுமைகளைத் தாங்கிக்கொண்டனர்.. 

அதனால் இன்று வாழ்க்கைச் சுமை சற்று குறைந்திருக்கிறது. இத்தோடு விட்டுவிடாமல் மக்கள் சுமையை மேலும் குறைப்போம். கஷ்டப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவேன். மக்களுக்கு காணி உறுதிகளை தந்திருக்கிறேன். ஒரு சிலருக்கு கிடைக்கவில்லை தேர்தலின் பின் அந்த திட்டம் தொடரும். 

அடுத்த ஐந்து வருடங்களில் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவோம். கல்வியை பலப்படுத்துவோம். அதற்காக வேலைத் திட்டங்கள் என்னிடம் உள்ளது. அதனால் தான் 'இயலும் ஸ்ரீலங்கா' என்று சொல்கிறேன். அனுவரவும் சஜித்தும் திட்டங்கள் இல்லாததால் இயலாது ஸ்ரீலங்கா என்றே சொல்லில்கொள்ள வேண்டும். 

நாட்டில் வரிகளைக் குறைத்தால் மீண்டும் பணத்தை அச்சிட நேரிடும். அதனால் ஐ.எம்.எப் சலுகைகள் கிடைக்காது. அதனை செய்ய வேண்டுமா? எனவே, ரூபாவின் பெறுமதியை அதிகரிப்பதே எனது தேவையாகும். 2023 முன்னெடுத்த திட்டங்களுக்கு தற்போது பலன் கிடைக்கிறது. 2024 இ்ல் செய்தவைக்கு அடுத்த வருடம் தீர்வு கிடைக்கும். 

நாம் இப்போது உற்பத்திகளை அதிகரிக்க வேண்டியுள்ளது. அதனால் பெருமளவில் வரி அறவீட்டு பரப்பை அதிகப்படுத்தி வரிச்சுமையை குறைக்க வேண்டும். பெண்களே பொருளாதார நெருக்கடியின் பிரச்சினைகளை பல கஷ்டங்களுக்கு மத்தியில் நிர்வகித்தனர். அதற்காக பெண்களைப் பாராட்டுகிறேன். பெண்கள் பட்ட கஷ்டங்களை மறுக்கவில்லை. எனவே பெண்களை வலுவூட்டும் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறோம். 

உள்ளூராட்சி, மாகாண சபைகளில் பெண்களின் பிரச்சினைகளுக்கும், குடும்ப வன்முறைகளுக்கும் தீர்வு வழங்க பொலிஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கிறோம். சட்ட உதவிகளையும் பெண்களுக்கு வழங்குவோம். பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு கடன் வட்டி வீதம் குறைக்கப்படும். 

விவசாய நவீனமயமாக்கலை வடக்கிற்கும் வழங்குவோம். வருமானத்தை அதிகரிக்க வழி செய்வோம். மலையக பகுதிகளிலிருந்தும் அதற்காக ஒத்துழைப்பு பெறப்படும். அதனால் மக்களுக்கு அதிக இலாபம் கிடைக்கும். அதற்காக சலுகைக் கடன்களையும் வழங்குவோம். சுற்றுலாப் பயணிகள் வருகையை இரட்டிப்பாக அதிகரிப்போம். அதற்காகவே பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தோம். 

வடக்கில் மூன்று கைத்தொழில் பேட்டைகளை அமைப்போம். டிஜிட்டல் பொருளாதார மையங்களையும் அமைப்போம். யாழ். மக்கள் வௌியில் சென்று தொழில் செய்யாமல் இங்கு தொழில்களை செய்ய வழிமுறைகளை உருவாக்குவோம். யாழ். நதி திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்பட்டு குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு தருவோம்.

கல்வி மேம்பாட்டுக்கான முயற்சிகளையும் முன்னெடுப்போம். அதற்காகவே 'இயலும் ஸ்ரீலங்கா' திட்டம் செயற்படுத்தப்படும். மீண்டும் மாகாண சபைகளை செயற்படுத்துவோம். பாரிய அபிவிருத்திகளை செய்ய மாகாண சபைகளின் பங்களிப்பு அவசியம். 

அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது 'தெற்கு மக்கள் மாற்றம் ஒன்றுக்காக ஒன்றுபட்டிருக்கும் போது வடக்கு மக்கள் அதற்கு மாறான தீர்மானத்தை எடுத்தால் தெற்கு மக்களின் மனோபாவம் எவ்வாறு இருக்கும்' என்று கேட்டிருக்கிறார். அப்படிச் சொல்வது வடக்கு மக்களை அச்சுறுத்துவதாகும். 2010 ஆம் ஆண்டில் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு நாங்கள் கூறினோம். மக்கள் வாக்களித்தனர். ஆனால் சிங்கள மக்கள் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு வாக்களித்தனர். அதற்காக மஹிந்த ராஜபக்‌ஷ யாழ்ப்பாண மக்களை அச்சுறுத்த தெற்கிலிருந்து ஆட்களோடு வரவில்லை. தமிழ் மக்கள் சஜித்துக்கு வாக்களித்த போது சிங்கள மக்கள் கோட்டாபய ராஜபக்‌ஷவை தெரிவு செய்தனர். அப்போதும் கோட்டாபய ராஜபக்‌ஷ வடக்கு மக்களை அச்சுறுத்த வரவில்லை. 

ஆனால், ஜே.வீ.பி மக்களை அச்சுறுத்துகிறது. அனுரவிற்கு வெற்றிபெற்ற அனுபவம் இல்லை. அவர் வெல்வதற்கான சாத்தியமும் இல்லை. வடக்கு மக்களின் சட்டரீதியான பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்துவோம். எனவே, மக்களை அச்சுறுத்தியதையிட்டு ஜேவீபியினர் வெட்கப்பட வேண்டும். அனுர திசாநாயக்க இதற்காக வடக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்காக சிங்கள மக்களைப் பயன்படுத்திக் கொண்டதால் அவர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். 

எனவே, விரும்பியவருக்கு வாக்களிக்கும் உரிமை வடக்கு மக்களுக்கு உண்டு. அந்த உரிமையைப் பாதுகாப்போம். எனவே செப்டம்பர் 21 சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது அபிவிருத்தியும் வராது." என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன்,

"இன்று யாழ். மக்கள் யாருக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானத்தை எடுத்துள்ளனர். தொடர்ச்சியாக பல தடவைகள் யாழ்.மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்துள்ளனர். ஆனால் நான் முதல் முறையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கப்போகிறேன். 

எனவே, எமது தேவைகளுக்காக வந்த தலைவர்களோடு இருக்கவேண்டும்.. தேவையில்லா நேரத்தில் வந்த தலைவர்கள் பின்னால் நிற்பதுபொருத்தமல்ல. நாம் நன்றி மறப்பவர்கள் அல்ல. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை ஏற்றிருக்காவிட்டால் இலங்கை சோமாலியாவை போன்ற நிலையை அடைந்திருக்கும். கீழே விழுந்து கிடந்த இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானங்களால் உயர்த்தி வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 21 ஆம் திகதி மக்கள் தமது இருப்பை காப்பதற்கான தலைவரைத் தெரிவு செய்ய வேண்டும்.

கடந்த இரு வருடங்களில் மக்களுக்கு நிம்மதியை தந்த தலைவராகவே ஜனாதிபதி இருக்கிறார். இலங்கை தமிழரசுக் கட்சி வேடடிக்கையான வேலைகளை செய்கிறது. மறுமுனையில் சுமந்திரன் ஓடிப்போய் எதிர்கட்சித் தலைவருக்கு ஆதரவளிக்க முன்வந்திருக்கிறார். தமிழ் மக்களின் வாக்குகளை புதைக்குழிக்குள் தள்ளும் வகையிலேயே சுமந்திரனின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்கு செய்துள்ள சேவைகள் மக்கள் நன்கு தெரியும். 

எதிர்கட்சித் தலைவர் நல்லாட்சியில் இருந்தபோது வடக்கு மக்களுக்கான வீட்டுத் திட்டங்களை முழுமையாக நிறைவு செய்யாமல் விட்டுவிட்டு ஆட்சிக்கு வந்த பின்பு செய்வதாக கூறுவது வேடிக்கையாகும். எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த வீட்டுத் திட்டங்களை மீள ஆரம்பித்தற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார். எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் மாத்திரமே இந்த நாட்டை மீட்டெடுக்க முடியும்." என்றார்.  

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

"நாடு மிகக் கஷ்டத்திலிருந்த வேளையில் மீட்க வந்தமைக்காகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நாம் ஆதரவளித்தோம். அரசியல் இலாபம் கருதாமல் நாட்டை பற்றி சிந்தித்து அவர் செயலாற்றியதாலேயே எம்மால் தேர்தலை நடத்த முடிந்திருக்கிறது.. அவரைக் கண்டு பலரும் பொறாமை கொண்டிருந்தாலும், நாம் அவருக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டுமென நினைக்கிறோம். 

பொருளாதார நெருக்கடியால், தெற்கிலும் வடக்கிலும் மக்கள் பெரும் நெருக்கடிகளை கண்டனர். விவசாயம் செய்ய முடியாமல் போனது. இன்றைய நிலை அவ்வாறானதல்ல ஜனாதிபதி எல்லா பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதேபோல் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுள்ளார். இந்நாட்டின் தெற்கிலிருந்த தலைவர்கள் வடக்கு மக்களை இரண்டாம் பட்சமாகவே கருதினர். ஆனால், அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்த்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. 

அதனால் தான் தெற்கில் போன்றே வடக்கு மக்களுக்கும் காணி உறுதிகளை வழங்கினார். இப்பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தவும் அவர் பெருமளவான நிதியை ஒதுக்கியிருக்கிறார். விமான சேவை அமைச்சராக நியமித்த வேளையிலும் பலாலி விமான நிலையத்திற்கு சர்வதேச விமான சேவைகளை கொண்டுவரக்கூடிய நிலையை ஏற்படுத்துமாறு வலியுறுத்தினார். 

அதன்படியே யாழிலிருந்து இந்தியாவிற்கு எலயர்ன்ஸ் எயார் விமான சேவை இடம்பெறுகிறது. நாளாந்தம் இரு விமான சேவைகள் இடம்பெறுகின்றன. விரைவில் இண்டிகோ விமான சேவையும் விமானப் பயணத்தை பலாலியிலிருந்து ஆரம்பிக்கவுள்ளது. இவ்வாறான விடயங்களை வடக்கு மக்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியிருக்கிறார். எனவே, யாழ். மக்கள் சரியானவரைத் தெரிவு செய்ய வேண்டும்." என்றார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

''2022 ஆம் ஆண்டில் நான் கல்வி அமைச்சராக பொறுப்பெடுத்த காலத்தில் பாடசலைகள், கல்விச் செயற்பாடுகள் என அனைத்தும் ஸ்தம்பிதமடைந்து கிடந்ததையே காண முடிந்தது. இன்று வட மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை, அதிபர் பற்றாக்குறை, நிர்வாகச் சேவையிலிருக்கும் பற்றாக்குறையும் நிவர்த்திக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களில் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கியிருக்கிறோம். 

அடுத்த வருடத்திலிருந்து கொத்தனிப் பாடசாலைகளை அமைத்து பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான பௌதீக வளங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம். யாழ். மக்கள் கல்விக்கு முன்னுரிமை வழங்கும் சமூகம். நாம் இன்று நாட்டை மீட்க முற்படும் வேளையில் ஜேவீபியினர் கல்விச் செயற்பாடுகளை முடக்கும் முயற்சிகளையே முன்னெடுத்தனர்.. எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள அதிகரிப்பை வழங்கினார். 

எனவே, புதிய ஒருவர் ஜனாதிபதியாக வந்தாலும் உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது. நாம் ஆரம்பித்த பணிகளுக்காக சுற்று நிருபங்களை வெளியிட வேண்டிய தேவை உள்ளது. சம்பளப் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க போகிறார் என்பதை அனுரகுமார திசாநாயக்க எங்குமே கூறவில்லை. சஜித்தும் அவ்வாறுதான் சொல்கிறார். ஆனால் இவர்களின் ஆட்சி வந்தால் சம்பள அதிகரிப்பு செயன்முறை முற்றாக சரிவடையும். 

கடந்த காலத்தில் அரசாங்கம் அடைந்த வெற்றியின் பலனாகவே அரசாங்கம் இந்த சலுகைகளை வழங்குகிறது என்பதை மக்கள் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்." என்றார்.  

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்

"இன்று சில வேட்பாளர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இனவாதி என்கிறார்கள். எதிர்தரப்பு வேட்பாளர்களில் ஒருவர் 2015 - 2019 வரையில் கலாச்சார அமைச்சராக இருந்தபோது 1000 விகாரைகள் கட்டத் தீர்மானித்திருந்தார். அவற்றை தமிழ் மக்கள் அதிகமான பகுதிகளில் செய்யவே அவர் அனுமதி வழங்கியிருந்தார்.  அவ்வாறின்றி, சிங்கள மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் அதனை செய்திருந்தால் அவருக்கும் நாமும் ஆதரவளித்திருப்போம். எனவே இவ்வாறான தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இனவாதி என்று சொல்வது வேடிக்கையானது. 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிக்கு 69 இலட்சம் மக்கள் வாக்களித்தனர். அவர் ஜனாதிபதி பதவியை இன்னொருவருக்கு வழங்க முன்வந்த வேளையில் எவரும் அதனை ஏற்க முன்வராமல் ஓடிவிட்டனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அன்று நாட்டைப் பொறுப்பேற்றுக்கொண்டு நாட்டை மீட்டெடுத்தார். நாட்டின் பொருளாதாரத்தை மீட்பது ஒரு மரம் வளர்ப்பது போன்றதாகும். நன்றாக வளர்ந்த மரத்தை இலகுவாக வெட்டி வீசிவிட முடியும். ஆனால் அந்த மரத்தை வளர்ப்பது கஷ்டமாகும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதைபோல புதியவர்களை நம்பி ரணில் ஆட்சிக்கு முடிவுகட்டினால் எல்லோரும் சென்று வரிசைகளில் நிற்க நேரிடும். இன்று வடக்கில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் பற்றி அதிகமாக பேசப்படுகிறது. காணிப் பிரச்சினைக்கு ஜனாதிபதி தொடர்ந்தும் தீர்வுகளை வழங்குகிறார். ஆனால் எந்தவொரு மாகாணத்துக்கும் பொலிஸ் அதிகாரங்கள் இல்லை.

இங்கிருந்து மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்புகின்ற அனைவரும் அரசாங்கத்திற்கு எதிராகவே செயற்படுகின்றனர். ஆனால், அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு பொலிஸ் துறைசார் அதிகாரங்களைப் பெற்றுக்கொண்டு அந்த விடயங்களை நிர்வகிக்க முடியும். வடக்கிலிருந்து 6 கெபினட் அமைச்சர்களைத் தெரிவு செய்ய முடியும். ஆனால் ஒருவர் மட்டுமே வருகிறார். அதனால் நமது உரிமைகளை நாமே விட்டுக்கொடுக்கிறோம். நாம் தவறு செய்வதால் இன்னுமொருவர் வந்து தனது சமூகத்திற்கு அதனை செய்கிறார். எனவே, மக்கள் சரியான தலைவரை தெரிவு செய்து அவரோடு இணைந்து பயணிக்க வேண்டும்." என்றார்.

இந்து மதத் தலைவர்கள், யாழ். மாவட்ட விவசாய திணைக்களத் தலைவர் தியாகலிங்கம், பிரதேச அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரக் கணக்கான மக்கள் இந்த வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/193097

மாவையுடன் திடீர் சந்திப்பில் ஈடுபட்ட ரணில்.

3 months 2 weeks ago

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றிரவு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்திற்கு பிரசாரத்திற்குச் சென்றுள்ள ஜனாதிபதி வேட்பாளர், ரணில் விக்ரமசிங்க, காங்கேசன்துறையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்தார்.

தீர்க்கப்படாத இனப்பிரச்சினை

 

இதன்போது, நீண்டகாலமாக தீர்க்கப்படாத இனப்பிரச்சினைக்கு சமஸ்டி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பொருளாதாரத்தின் ஊடாக வளப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

மாவையுடன் திடீர் சந்திப்பில் ஈடுபட்ட ரணில்..! | President Ranil Suddenly Met Maavi

 

தேர்தலின் பின்னர் இந்தப் பணிகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக ரணில் விக்ரமசிங்க அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொருளாதாரத்தில் சிறந்த அனுபவம் உள்ளதால் ரணில் விக்ரமசிங்க இதனை செய்துமுடிப்பார் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாவையுடன் திடீர் சந்திப்பில் ஈடுபட்ட ரணில்..! | President Ranil Suddenly Met Maavi

தேர்தலின் பின்னர் பாரிய கடமைகள் இருப்பதாகவும் சமஸ்டி அடிப்படையில் தீர்வு கண்டு, அந்த நாட்டின் தலைவராக ரணில் விக்ரமசிங்க இருக்க வேண்டும் என்று கோரியதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 

https://tamilwin.com/article/president-ranil-suddenly-met-maavi-1725729737?itm_source=parsely-detail

இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்

3 months 2 weeks ago

காங்கேசன்துறை துறைமுகத்தை விஸ்தரிப்பதற்கு இந்தியா (India) 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதென இலங்கையின் விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (07) நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவின் நிதியுதவிகள் 

மேலும், இந்த நிதி வழங்கலுக்கமைய குறித்த துறைமுகம் விரைவில் கப்பல் பயணங்களுக்கு தயாராகி விடும் எனவும் அவர் கூறியுள்ளார். 

இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம் | Kankesanturai Port Expanding By 65 M Indian Fund

ஏற்கனவே, வடக்கில் விமான நிலையம், தீவுகளில் காற்றாலை மின்சாரம் மற்றும் தொடருந்து போக்குவரத்து துறைகளில் இந்தியா நிதியுதவிகளையும் முதலீடுகளையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/kankesanturai-port-expanding-by-65-m-indian-fund-1725723887

அநுர கூறுவதைப் போன்று சிங்கள மக்களின் தேவைக்கமைய தமிழர்களால் வாக்களிக்க முடியாது - அரசியல் பிரதிநிதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் காட்டம்

3 months 2 weeks ago
07 SEP, 2024 | 06:22 PM
image

(நா.தனுஜா)

நாட்டின் சிங்கள மக்கள் கடந்த காலங்களில் தமிழர்களை நசுக்கும் சிங்கள ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாகவே வாக்களித்தனர் எனவும், ஆகவே அநுரகுமார திஸாநாயக்க கூறுவதைப்போன்று சிங்கள மக்களுக்கு எது தேவையோ அதற்கேற்றவாறு தமிழ் மக்களால் வாக்களிக்கமுடியாது எனவும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அண்மையில் யாழ்ப்பாணத்தில் மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:  

'நாட்டின் பெரும்பான்மை மக்கள் மாற்றத்தை வேண்டிநிற்கும் இவ்வேளையில் யாழ் மக்களான நீங்கள் மாத்திரம் அதற்கு எதிராக எவ்வாறு செயற்படுவீர்கள்? இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தீர்மானம் அந்த மாற்றத்துக்கு எதிரான தீர்மானமாக மாறியது ஏன்? யாழ்ப்பாணத்தில் புத்திஜீவிகள், கற்றறிந்தவர்கள் இருக்கிறார்கள். மாற்றத்துக்கு எதிராக யாழ் மக்களை வழிநடத்தும் அரசியலை நீங்கள் ஏற்றுக்கொள்ளாதீர்கள். அத்தகைய தீர்மானம் தவறானது என்பதை நீங்கள் உங்கள் மக்களுக்கு எடுத்துக்கூறுங்கள். நாங்கள் வெற்றிபெறுவோம். தெற்கில் இலட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்று நாம் வெற்றிபெறுவோம். ஆனால் அந்த வெற்றியின், மாற்றத்தின் பங்குதாரர்களாக நீங்களும் இணைந்துகொள்ளுங்கள். மாறாக அந்த மாற்றத்துக்கு எதிரானவர்களாக நீங்கள் மாறிவிடாதீர்கள்.'

தென்னிலங்கை சிங்கள மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு விரோதமாக தமிழ் மக்கள் செயற்படக்கூடாது எனும் தொனியில் அமைந்த அநுரகுமார திஸாநாயக்கவின் இக்கருத்து தொடர்பில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுபற்றிக் கருத்து வெளியிட்ட புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிங்கள மக்கள் கடந்த காலங்களில் தமிழர்களை நசுக்கும் சிங்கள ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவே வாக்களித்து வந்திருப்பதாகவும், எனவே சிங்களவர்களுக்கு எது தேவையோ அதற்கேற்றவாறு தமிழர்களால் வாக்களிக்கமுடியாது எனவும், மாறாக எது சரியோ அதற்கே வாக்களிக்கமுடியும் எனவும் தெரிவித்தார். அதேபோன்று தமிழர்களுக்கான ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வு குறித்த உத்தரவாதத்தை யாரேனுமொரு வேட்பாளர் வழங்கியிருந்தால் தாம் அதுபற்றிப் பரிசீலித்திருப்போம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை அநுரகுமார திஸாநாயக்கவின் கருத்து தொடர்பில் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான், வடக்கில் மக்கள் முன்பு உரையாற்றுகின்ற அநுரகுமார திஸாநாயக்க, 'தெற்கில் மக்கள் விரும்பும் மாற்றத்துக்கு எதிராக நின்றதாக நீங்கள் அடையாளப்படுத்தப்படுவதை விரும்புகின்றீர்களா?' எனக் கேட்கின்றார். அதாவது அவர்களுக்கு (தேசிய மக்கள் சக்திக்கு) ஆதரவான நிலைப்பாட்டை தமிழ் மக்கள் எதிர்க்கக்கூடாது என்ற எச்சரிக்கையே அதுவாகும். அதுமாத்திரமன்றி சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி மேற்கொண்ட தீர்மானத்தையும் அவர் கேள்விக்கு உட்படுத்துகின்றார்.  இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமானவையாகும். ஆகையினாலேயே மக்கள் விடுதலை முன்னணி இன்னமும் மாற்றமடையவில்லை என்று நாம் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றோம். எனவே இதுகுறித்து நாட்டுமக்கள் விழிப்புடன் செயற்படவேண்டியது அவசியமாகும்' என்று குறிப்பிட்டார்.

அதேபோன்று 'அநுரகுமார திஸாநாயக்கவின் கூற்றுப்படி தமிழர்களுக்கென எந்தவொரு அரசியல் இலக்குகளும் இல்லை. அவர்கள் தமது அரசியல் கோரிக்கைகளை மறந்துவிட்டு, நீதிக்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கவேண்டும்' என்று விசனம் வெளியிட்டிருக்கும் சட்டத்தரணியும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான சஞ்சுலா பீற்றர், 'ஏனைய சிங்கள அரசியல் கட்சிகளைப் போலன்றி, தேசிய மக்கள் சக்தி மாறுபட்டது என்று கூறுவதை இனியேனும் நிறுத்துங்கள்' என்று வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/193096

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பதில் உறுதி - பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள் முன்னிலையில் சிறிதரன் எடுத்துரைப்பு

3 months 2 weeks ago
07 SEP, 2024 | 05:30 PM
image

(நா.தனுஜா) 

எனது அரசியல் பயணத்தையும் அது சார்ந்த பணிகளையும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் நின்றுதான் எமது மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதன் அடிப்படையிலேயே காலத்தின் தேவையுணர்ந்து தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். 

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பினால் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தமிழ் பொது வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.  

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அறிவித்திருக்கும் நிலையில், தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதாக சிறிதரன் அறிவித்துள்ளார். 

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த மாதம் 29ஆம் திகதி லண்டனுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சிறிதரன், அங்கு முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார்.  

அதன் ஓரங்கமாக இரு தினங்களுக்கு முன்னர் பிரித்தானியவாழ் புலம்பெயர் தமிழர்களின் ஏற்பாட்டில் அங்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய சிறிதரன், 'ஈழத்தமிழர்களை மையப்படுத்திய தமிழ்த் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இனத்தின் இருப்புக்காகவும், இறைமைக்காகவும் அரசியல் பணியாற்றுவதற்காகவே நான் இணைந்துகொண்டேன். எனது அரசியல் பயணத்தையும், அது சார்ந்த பணிகளையும் அதே தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் நின்றுதான் எமது மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதனால் இறுதி வரை அந்தக் கொள்கையில் பிறழ்வற்றுப் பயணிக்கத் தலைப்பட்டுள்ளேன்' என்று தெரிவித்துள்ளார். 

அதுமாத்திரமன்றி அதன் அடிப்படையிலேயே காலத்தின் தேவையுணர்ந்து தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலும் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/193089

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடேன் - பா.அரியநேத்திரன்

3 months 2 weeks ago
07 SEP, 2024 | 02:22 PM
image

(நா.தனுஜா)

இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறங்கியிருப்பதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பெறுகின்ற செல்வாக்கைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில், அதில் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பினரால் வட, கிழக்கு தமிழ் மக்கள் சார்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கின்றார். இத்தேர்தலில் அவர் வெல்லப்போவதில்லை என்றாலும், இதன்மூலம் கிடைக்கப்பெறும் செல்வாக்கைப் பயன்படுத்தி எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு வெல்லக்கூடும் என்ற கருத்துக்கள் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுவருகின்றன.    

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் அரியநேத்திரன், இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறங்கியிருப்பதன் மூலம் வட, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெற்றிருக்கும் செல்வாக்கை ஒருபோதும் தனக்காகப் பயன்படுத்திக்கொள்ளப்போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 

அதேவேளை தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம்வகிக்கும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் அல்லாத ஏனைய சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடும் உத்தேசத்தைக் கொண்டிருக்கிறார்களாக என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள அரியநேத்திரன், அவ்வாறானதொரு கருத்தை அவர்கள் இதுவரையில் எங்கும் கூறவில்லை எனவும், அவர்கள் அத்தகைய உத்தேசத்தில் இருப்பதாகத் தனக்குத் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

அதேபோன்று எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் பொதுக்கட்டமைப்பில் அங்கம்வகிக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் களமிறங்குவார்கள் என்று தான் கருதவில்லை எனவும், மாறாக பொதுக்கட்டமைப்பில் அங்கம்வகிக்கும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் அவர்களது அரசியல் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வார்கள் எனவும் அரியநேத்திரன் விளக்கமளித்துள்ளார். 

https://www.virakesari.lk/article/193076

தெற்கின் தேர்தல் வெற்றி தினம் தமிழர்களுக்கு கரி நாள் – அருட்தந்தை மா.சத்திவேல்

3 months 2 weeks ago
 IMG-20201202-WA0004-1.jpg?resize=750,375 தெற்கின் தேர்தல் வெற்றி தினம் தமிழர்களுக்கு கரி நாள் – அருட்தந்தை மா.சத்திவேல்.

தனியார் காணிகளில் புத்தர் சிலைகளை வைத்தல், விகாரைகளை கட்டுதல் போன்றவற்றிற்கு வருத்தமோ தடுத்து நிறுத்துவதாகவோ கருத்து கூற மறுத்துள்ளமை அவையெல்லாம் தமது காலத்திலும் தொடரும் என்பதையே உணர்த்துகிறது. இதுவும் ஒருவகையில் யுத்த பிரகடனமே என அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிக் கதிரையை தமதாக்க தமிழர்களை வெறும் கறிவேப்பிலையாகவும் ரம்பையாகவும் பாவித்து விட்டு தூக்கி எறியவே முற்படுகின்றனர்.சுயநல அரசியலுக்கு தம்மை இரையாக்கிக்கொண்ட தமிழ் தேசிய கட்சியினரும் அரியதரம் பூசிக்கொண்ட தமிழ் அரசியல் தரப்பினரும் தேர்தல் அரசியல் களத்தில் நின்று தமிழர்களை பலி கொடுக்கும் அரசியலை முன்னகர்த்துகின்றனர்.

சமாதானப்படையாக தமிழர் தாயகத்தில் காலடி வைத்த இந்திய இராணுவத்தையும், இந்தியாவின் முகத்தையும் இதற்கு அவர்கள் யார் என்பதையும் உலகிற்கு வெளிக்காட்டிய தியாகி திலீபனின் உயிர்தியாக மாதம் இதுவாகும். அவரின் உண்ணாவிரத போராட்டம் எமது அரசியலுக்கும் தேசியம் காக்கும் செயற்பாட்டுக்கும் உந்து சக்தியாக இருப்பதோடு எதிராளிகளில் முகத்திரையை கிழிக்க தேசமாக ஒன்று சேர வேண்டும் என தெரிவித்துள்ளார். தெற்கின் தேர்தல் வெற்றி தினம் என்பது தமிழர்களுக்கு இன்னும் ஒரு கரி நாள் என்பதை வெளிப்படுத்துவோம். அதுவே எமக்கான தேர்தல் வெற்றியாக அமையட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/2024/1398515

அரியநேத்திரனுக்கு வாக்களிக்குமாறு தமிழ் சிவில் சமூக அமையம் கோரிக்கை

3 months 2 weeks ago
    அரியநேத்திரனுக்கு வாக்களிக்குமாறு தமிழ் சிவில் சமூக அமையம் கோரிக்கை அரியநேத்திரனுக்கு வாக்களிக்குமாறு தமிழ் சிவில் சமூக அமையம் கோரிக்கை.

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், சங்கு சின்னத்தில் தமிழ் மக்களின் இன்னல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்கள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு என்ற அமைப்பொன்றை உருவாக்கித் தமிழ் பொது வேட்பாளராக அரியநேத்திரனை களமிறக்கியுள்ள நிலையில் , அவருக்கு வாக்களிக்குமாறு தமிழ் சிவில் சமூக அமையம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதற்கமைய குறித்த கோரிக்கையை அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவுப்படுத்தியுள்ளது.

குறித்த அறிக்கை பின்வருமாறு,

21 செப்டம்பர் 2024 அன்று இலங்கையில் நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தலில் முதற் தடவையாக தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்கள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு என்ற அமைப்பொன்றை உருவாக்கித்  தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்காக சங்குச் சின்னத்தில் திரு பாக்கியசெல்வம் அரியநேத்திரனை தமிழ்ப் பொது வேட்பாளராக  நிறுத்தியுள்ளோம்.

காலங்காலமாகச் சிங்களப் பேரினவாதத்தின் இனவழிப்பை எதிர்கொண்டு போராடி வருகின்ற தமிழ்த் தேசம் தனது உயிரினும் மேலாகக் கருதி வரும் தேசிய அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கான ஒருவாய்ப்பாக வரவிருக்கின்ற தேர்தலைப் பயன்படுத்துவதற்காக தேர்தலில் எம்மால் முன்மொழியப்பட்டுள்ள திரு பா. அரியநேத்திரன் அவர்களுக்கு எமது வாக்குகளை வழங்க வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாம் பணிவன்புரிமையுடன் தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

1982 முதல் இன்றுவரை இலங்கையில் நடைபெற்ற சனாதிபதித் தேர்தல்கள் எல்லாம் சிங்கள-பௌத்த பேரினவாதத் தலைவரைத் தேரந்தெடுப்பதாகவே அமைந்தன. இத் தேர்தல்களில் தமிழ் மக்கள் ஆதரவளித்த, தென்னிலங்கையின் பிரதான அரசியற் கட்சிகளைச் சேர்ந்த சிங்கள வேட்பாளர்கள் கூட தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏற்றுக் கொண்டதுமில்லை, தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற சனாதிபதிகளும் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பு நடவடிக்கைகளைக் கைவிட்டதுமில்லை. அதனால் இனிவரும் சனாதிபதித் தேர்தல்களிலும் வழமைபோல் தென்னிலங்கையின் பிரதான அரசியற் கட்சிகளைச் சேர்ந்த சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிப்பதில் எமக்கு எந்த ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதே வரலாறு எமக்குத் தரும் வழிகாட்டலாகும்.

எனவேதான் இம்முறை நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தலைத் தமிழ் தேசத்தின் அரசியல் நிலைப்பாடு தொடர்பான தமிழ் மக்களின் தெளிவான ஆணை ஒன்றைச் சர்வதேசத்திற்கும் சிங்கள மக்களுக்கும் வெளிப்படுத்தும் வகையிலான தேர்தலாக மாற்றிப் பயன்படுத்தும் நோக்கில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தும் கூட்டு முயற்சியில் தமிழ் சிவில் சமூக அமையமும் இணைந்து கொண்டது.

சங்குச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்ப்பொது வேட்பாளரான திரு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும் வாக்குகள் ஒரு தனி நபருக்கான வாக்குகள் எனக் கருதாமல், அவ்வாக்குகள் தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கான வாக்குகளே என்ற புரிதலின் அடிப்படையிலேயே பொது வேட்பாளர் எனும் இச்செயற்திட்டத்தில் நாம் இணைந்து கொண்டோம்.

எமது பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்படும் வேளையில், ஒற்றையாட்சியைத் தமிழ் மக்களால் தீர்வாக ஆராயவும் முடியாது எனக்கூறியது போல, 13ம் திருத்தத்தையும் தீர்வொன்றின் அடிப்படையாகக்கூட ஏற்க முடியாது என வெளிப்படையாக நிராகரிக்க வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாம் எப்போதும் போல உறுதியாகக் கோரியிருந்தோம்.

எனினும் பல்வேறு பங்கீடுபாட்டாளர்கள் ஒன்றிணைந்து தயாரித்த கூட்டு ஆவணம் என்ற அடிப்படையில் எமது கருத்துக்கள் அனைத்தும் முழுமையாகவும், நாம் விரும்பிய மொழிப் பிரயோகத்திலும் உள்ளடக்கப் பட முடியாத யதார்த்த சூழ்நிலையையும் நாம் கருத்திற் கொள்கிறோம்.

இத்தகைய பின்னணியில், தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பான எமது விரிவான வாசிப்பையும் நிலைப்பாட்டையும், பின்வரும் விடயங்கள் தொடர்பிற் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.

  1. அரசியற் தீர்வின் பகுதியாக உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பானது ஒரு புதிய கூட்டு அரசை இத்தீவில் உருவாக்குவதாக அமைய வேண்டும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, இறைமை ஆகியவற்றினை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் தேசங்களின் ஒன்றிணைவாக அமையும் அரசாக அது அமைய வேண்டும். அதாவது புதிய அரசானது ஒரு பன்மைத்தேசிய அரசு (Plurinational) என்ற அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும்.
  2. ஒற்றையாட்சி அரசு முறைமையையும் அதனது ஒரு அங்கமான 13ம் திருத்தத்தையும் தமிழ் மக்கள் முற்றாக நிராகரிப்பதோடு, இவை அரசியற் தீர்வுப் பேச்சுவார்த்தைக்கான ஆரம்பப் புள்ளியாகக்  கூட அமைய மாட்டாது என்பதே தமிழர்களின் நிலைப்பாடாகும். ஒற்றையாட்சி அரசுக்குட்பட்ட எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் தமிழர் தரப்புப் பங்குபற்றக் கூடாது.
  3. தமிழர்களின் சுயநிர்ணய அலகானது, அவர்களின் தாயகமானது, ஒன்றிணைந்த (தற்போதைய) வடக்கு கிழக்கு மாகாணங்களை கொண்டதாக அமைய வேண்டும். குறித்த சுயநிர்ணய அலகிற்குள் முஸ்லீம் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் தொடர்பில் திறந்த மனதோடு தமிழ்த் தரப்பு பேச்சுவார்த்தை நடாத்தத் தயாராக இருக்க வேண்டும். .
  4. பாதுகாப்பு, நாணயக் கொள்கை உட்பட ஒரு சில விடயங்கள் மாத்திரமே மத்திய அரசின் அதிகார எல்லைக்குள் இருப்பதோடு எஞ்சிய அதிகாரங்கள் (Residual Powers) மாநிலங்களிற்கு உரியவையாக அமைய வேண்டும். குறிப்பாக கல்வி, அரச காணி, சுகாதாரம், சட்டம் ஒழுங்கு, வரி இறுக்கும் அதிகாரம் ஆகியன நிச்சயமாக மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்களாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அடிப்படை விடயங்களை உள்ளடக்கி தமிழ் மக்கள் பேரவையால் தமிழ் மக்களின் கருத்துகளை உள்வாங்கி உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு முன்மொழிவைத் தமிழ் மக்கள் தமது அரசியல் நிலைப்பாடாக முன்வைக்க வேண்டும்.
  5. தொடரும் இனவழிப்பின் ஒரு பகுதியாக போரின் போது தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு பன்னாட்டு குற்றவியல் விசாரணையை தமிழ் மக்கள் வேண்டுவதோடு, உண்மையைக் கண்டறிதல் உள்ளிட்ட உள்ளக செயன்முறைகள் மூலமாக பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகள் சாத்தியமற்றவை எனத் தமிழ் மக்கள் கருதுகின்றனர்.
  6. 2009ல் ஆயுதப்போர் முடிவடைந்த பின்பும் வழமைபோன்றும், பல்வேறு புதிய வழிகளிலும் முன்னரிலும் விட மூர்க்கமாகவும் வேகமாகவும் தமிழ் மக்களின் மேலாகக் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பைச் சிறீ லங்கா அரசுகள் தொடர்வதைத் தடுத்து நிறுத்த சர்வதேச தலையீடும், சர்வதேச அனுசரணையுடன் கூடிய பொறிமுறையும் கட்டாயமானதும் அவசரமானதுமான தேவைகளாகும்.
  7. தமிழ் தேசம் தமக்குரித்தான சுயநிர்ணய உரிமையின்பாற்பட்டு சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வழிமுறையான பொது வாக்கெடுப்பு (ஒப்பங் கோடல்) ஒன்றின் மூலம் தமது அரசியல் தெரிவை மேற்கொள்ளும் வகையில் ஐ.நா.வினால் மேற்பார்வை செய்யப்படும் ஒரு பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் எனக் கோருகின்றனர்.

ஆனால், 13ஆம் திருத்தத்தை நிராகரித்து தேர்தல் விஞ்ஞாபனமானது தெளிவாக நிலைப்பாடு எடுக்கவில்லை என நாம் கருதுகிறோம். ஆயுத மோதல்களுக்குப் பின்னர் இனப்பிரச்சனைக்கான தீர்வைப் 13ம் திருத்தத்திற்குள்   முடக்குவதை நோக்கமாகக் கொண்டு உரையாடல்கள் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அனுபவ ரீதியாக மாகாண சபை முறையானது எவ்விதத்திலும் எமது நாளாந்த பிரச்சனைகளைக்கூடக் கையாள்வதற்குப் போதுமானதன்று என்பது எமது பட்டறிவு.

தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிற் பெரும்பாலானவை ஒற்றையாட்சியை மறுப்பதாகத் தமிழ் மக்களுக்குச் சொன்னாலும், பிராந்திய மற்றும் பூகோள அரசியற்  சக்திகளின் அழுத்தத்தின் காரணமாக நடைமுறையில் “13 அல்லது 13 பிளஸ்” என்ற வரையறைக்குள்ளேயே, அதாவது ஒற்றையாட்சி முறைமைக்கு உட்பட்டே, தமது நடைமுறை அரசியலைச் செய்து வருகின்றனர். இது தவறானது எனத்  தமிழ் சிவில் சமூக அமையம் கடந்த 15 வருடங்களில் பல முறை சுட்டிக் காட்டியுள்ளது.

ஆனாலும் இன்று எமது தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்,  13ம் திருத்தம் தொடர்பில் வெளிப்படையான நிராகரித்தல் அற்ற ஒரு மௌனத்தொனியே வெளிப்பட்டுள்ளது.தமிழ்ப் பொது வேட்பாளரின் விஞ்ஞாபனம் ஒற்றையாட்சியை நிராகரிக்கின்றமையானது 13ஆவது திருத்தத்தை அரசியல் தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகக் கூட தமிழ் மக்கள் கருத முடியாது என்று கூறுவதாகவே அர்த்தம் கொள்ளப்பட வேண்டும் என நாம் கருதுகிறோம்.

தமிழ் சிவில் சமூக அமையம் தனது நிலைப்பாடுகளாகவும், விஞ்ஞாபனம் தொடர்பான விரிவான வாசிப்பாகவும்,  பகிர்ந்து கொண்டவற்றில், இத் தேர்தல் விஞ்ஞாபனம், சில விடயங்களை  வெளிப்படையாகவும், சில விடயங்களைப்  பூடகமாகவும் வெளிப்படுத்துகிறது. இதனால் மக்கள் மத்தியிலும் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதை நாம் அவதானிக்கிறோம்.

தமிழ் சிவில் சமூக அமையம் இந்நிலை தொடர்பில் ஆழ்ந்த கவலையும் கரிசனையும் கொள்கின்ற அதே வேளை தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு என்ற தமிழ்த் தேசிய அரசியல் முயற்சி வெற்றி பெற வேண்டும் என நாம் வலுவாக நம்புகின்றோம், விரும்புகின்றோம். இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே நாம் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கக் கோருகின்றோம்.

இத்தகைய அணுகுமுறையில் இருந்து – வாசிப்பிலிருந்து எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில் சங்குச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை நாம் வேண்டுகிறோம். தமிழ் அரசியல் நேர்மைப் பாதையில் தடம் பதிக்க நாம் உளச்சுத்தியுடன் தொடர்ந்து பயணிப்போம். தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு அத்தகைய பாதையில் செல்வதை உறுதி செய்ய எம்மாலான அனைத்தையும் நாம் தொடர்ந்து செய்வோம்.

2009இன் பின்னர் நடைபெற்ற மூன்று சனாதிபதித் தேர்தல்களிலும் தமிழ் மக்கள், தென்னிலங்கையின் பிரதான அரசியற் கட்சிகளைச் சேர்ந்த சிங்கள வேட்பாளருக்கே வாக்களித்தனர். எமது வாக்கைப் பெற்றவர்கள் தேர்தலில் வென்று பதவிக்கதிரை ஏறினாலும் அல்லது தோற்றாலும் ஒரு போதும் சிங்கள் பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலிலிருந்து அவர்கள் வெளியேறவில்லை என்பதே எமது அனுபவமாகும். இந்நிலையில் இம்முறை இனவாதிகளான சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை விட தமிழ் மக்களின் அபிலாசைகளை தனது தேர்தல் கோரிக்கைகளாக முன்வைத்துள்ள, தமிழ்ப் பொதுக்கட்டமைப்பால் முன்மொழியப்பட்டுள்ள திரு பா. அரியநேத்திரன் அவர்களுக்கு எமது வாக்குகளை வழங்கி எமது இலட்சிய உறுதியை வெளிப்படுத்துவோம் என தமிழ் மக்களைக் கோருகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/2024/1398550

வேட்பாளர்களின் நேரடி விவாதம் – இன்று மாலை

3 months 2 weeks ago
candidate-debate-1.jpg?resize=750,375 வேட்பாளர்களின் நேரடி விவாதம் – இன்று மாலை.

நாட்டை மீட்பது எவ்வாறு? என்ற தலைப்பில் மார்ச் 12 என்ற இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையிலான விவாதம் இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது.

3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த விவாதத்தில் முதலாம் நாளான இன்றைய தினம் 6 வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ மற்றும் பா.அரியநேத்திரன் ஆகியோர் மாத்திரம் இதற்காகத் தங்களது விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்த விவாதத்திற்கு சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அதில் பங்கேற்ற முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

அத்துடன் அனுரகுமார திஸாநாயக்க நேற்று பிற்பகல் வரை இந்த விவாதத்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்தவில்லையெனப் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று பிற்பகல் 3 மணி முதல் 5 மணிவரை இரண்டு மணித்தியாலங்களுக்கு இந்த விவாதம் நடைபெறவுள்ளது.

இந்த விவாதத்தில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு 6 கேள்விகள் முன்வைக்கப்படும் எனப் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/PoliticalCartoonsLKA/

விசேட வைத்தியர்களின் ஓய்வு வயது 63 ஆக அதிகரிப்பு

3 months 2 weeks ago

சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றும் வைத்திய அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக திருத்தப்பட்டுள்ளது.

ஓய்வூதிய சட்டத்தின் உரிய விதிகளை திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மகிபால (Palita Mahipala ) வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கட்டாய ஓய்வு வயதை திருத்துமாறு (01-07-2024) அன்று ஓய்வூதிய பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளரின் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய ஓய்வு வயது

இந்நிலையில் குறித்த விடயமானது சுகாதார அமைச்சின் செயலாளரால்  மாகாண சுகாதார செயலாளர்கள், கொழும்பு, கண்டி மற்றும் காலி தேசிய வைத்தியசாலைகளின் பணிப்பாளர் மற்றும் பிரதி பணிப்பாளர் நாயகங்கள்.

விசேட வைத்தியர்களின் ஓய்வு வயது 63 ஆக அதிகரிப்பு | Pension Retirement Age Of Medical Officers Revived

மற்றும், அனைத்து வைத்தியசாலை பணிப்பாளர்கள், மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள், பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றும் வைத்திய நிபுணர்கள், அனைத்து தர வைத்திய அதிகாரிகள், விசேட பல் சத்திரசிகிச்சை நிபுணர்கள், அனைத்து பல் சத்திரசிகிச்சை நிபுணர்கள், அனைத்து நிர்வாக தர வைத்திய அதிகாரிகள் மற்றும் அரச பதிவு வைத்திய அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

https://ibctamil.com/article/pension-retirement-age-of-medical-officers-revived-1725671951

Checked
Sun, 12/22/2024 - 16:01
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr