ஊர்ப்புதினம்

ஜனாதிபதித் தேர்தல்-பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை!

3 months 1 week ago
presidential-election-2024-sri-lanka.jpg ஜனாதிபதித் தேர்தல்-பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை!

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 9 நாடுகளில் இருந்து தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் அழைப்பிற்கிணங்க அவர்கள் வருகை தந்துள்ளதாக அதன் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் அவர்கள் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.

இதில் சார்க் வலய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ரஷ்ய கண்காணிப்பாளர்களும் இந்த கண்காணிப்பு குழுக்களில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1399264

கிளிநொச்சியில் முஸ்லிம்களின் காணி அபகரிப்பு- கண்ணீர் விட்டு கதறும் தாய்

3 months 1 week ago

IMG-20240909-WA0028-780x614.jpg.webp

கலாபூஷணம் பரீட் இக்பால்

கிளிநொச்சியில் பறிபோகும் நிலையில் 50 வருடம் வாழ்ந்த இடம். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக விடுதலை புலிகளினால் ஒட்டுமொத்த வடமாகாண முஸ்லிம்களும் குறுகிய மணித்துளியில் விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் உலகம் அறிந்த விடயம். .

34 வருடங்கள் கடந்தும் விரட்டி அடிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகள் சிலரால் அபகரிக்கப்பட்டதால் கிளிநொச்சி பிரதான வீதி கந்தசாமி கோயில் முன்பாக இருக்கக்கூடிய முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளில் சட்டவிரோதமான முறையில் அவர்களினால் அபகரிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு 34 வருடம் கடந்தும் அவர்கள் புத்தளம் போன்ற பகுதிகளில் அகதிகளாக குடிசைகளில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் பல தடவை மாவட்டச் செயலகம் பிரதேச செயலகம் போன்றவற்றுக்கு பல முறைப்பாடுகளை கொடுத்தும் அவர்களுக்கான தீர்வை அவர்களினால் பெற்றுக் கொடுக்க முடியவில்லை 09/09/2024 திங்கட்கிழமை காலை ஊடக சந்திப்பில் யாழ் முஸ்லிம் வட்டார சர்வதேச மனித உரிமைகள் பணிப்பாளர் ஆரிப் அப்துல் பரீட் அவர்கள் கிளிநொச்சியில் முஸ்லிம்களின் காணி அபகரிப்பு விடயம் சம்பந்தமாக பத்திரிகையாளர்களை ஒன்று கூட்டி விபரித்தார். பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீரோடு தங்களின் அவல நிலைகளை பத்திரிகையாளர்களுக்கு எடுத்துரைத்தார்கள். சகல ஆவணங்கள் இருந்தும் அவர்களுடைய சொந்த இடத்துக்கு செல்ல முடியாத அவல நிலையை கண்ணீரோடு தெரிவித்தார்கள்.

இந்த நிகழ்வில் சர்வதேச மனித உரிமை அமைப்பின் செயல்பாட்டாளர்களும் கலந்து கொண்டார்கள். இவர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர் போன்றவர்கள் இந்த ஏழைகளுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும்.


கலாபூஷணம் பரீட் இக்பால் – யாழ்ப்பாணம்

https://madawalaenews.com/4225.html

முதல் தெரிவு அரியம்; 2 வது தெரிவு அனுர;  தமிழர் தேசத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்

3 months 1 week ago

முதல் தெரிவு அரியம்; 2 வது தெரிவு அனுர;  தமிழர் தேசத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் anura-kumara-dissanayake-ariyanethran.jp

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில், யார் அடுத்த ஜனாதிபதி என்ற கேள்வி தொடர்ந்தும் நிலவிவரும் அதேவேளை,மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் அவாவும் இலங்கை மக்களிடம் ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக கடந்த 75 வருடங்களாக ஒரே பாசறையில் உருவான தலைவர்களே இந்த நாட்டில் ஆட்சியதிகாரத்தை அலங்கரித்து வந்த அதேவேளை,நாடு ஒரு வங்குரோத்து அடைந்த நாடாக உருவெடுப்பதற்கும் இன-மத முறுகல் மற்றும் ஒரு இனம் இன்னொரு இனத்தின் மீது அச்சம் கொண்டு பகைமையை வளர்த்ததற்கும் இந்த 75 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்த அரசுகளும் தலைவர்களுமே காரணம் என்பதை இன்றைய தலைமுறை சிந்திக்க ஆரம்பித்திருக்கும் ஒரு சூழலில் நாட்டில் ஒரு மாற்று சக்தியை உருவாக்குவதற்கு அணி திரள்வதையும் அதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

அந்த அடிப்படையில் தமிழர் தேசமும் போருக்கு பின்னரான கடந்த 15 வருடங்களுக்கு பின்னர் ஒரு தெளிவான எண்ணவோட்டத்தில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது.அந்த அடிப்படையில் தமிழர் தேசமான வடக்கு-கிழக்கில் இம்முறை பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டிருக்கும் அதேவேளை,அவருடைய வெற்றிக்காக ஒரு சில காட்சிகளை தவிர ஏனைய அனைத்து கட்சிகளும் அதேபோல்,சிவில் சமூகத்தினர்,பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மாற்றத்துக்காக ஏங்கும் மக்கள் உழைக்க ஆரம்பித்திருக்கும் அதேவேளை,ஒட்டுமொத்த நாட்டிலும் ஒரு மாற்றம் ஏற்படவேண்டுமென்ற நோக்கத்தில் பயணிப்பதை அவதானிக்க முடிகிறது.

அந்த அடிப்படையில் தமிழ் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் பிரசார நடவடிக்கைகளின் போது குறிப்பாக தமிழர்கள் அதுவும் இளம் சமூகம் முன்னெடுக்கும் பிரசாரங்களின்போது முதல் தெரிவு பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கும் இரண்டாவது புள்ளடி அனுர குமாரவுக்கும் வழங்குவது தொடர்பில் சிலாகிக்கப்பட்டு வருவதாக அறியக்கிடைக்கிறது.

இம்முறை தேர்தலில் தமிழர் தாயகத்திலும் ஒரு மாற்றம் ஏற்படவேண்டுமென்றும் ஒட்டுமொத்த நாட்டிலும் ஒரு மாற்றம் வரவேண்டுமென இந்த இளம் சமூகம் எதிர்பார்க்கிறது.அந்த அடிப்படையில் முதல் புள்ளடி அரியத்துக்கும் இரண்டாவது விருப்பு புள்ளடி அனுரவுக்கும் வழங்கப்படவேண்டுமென்ற கோரிக்கையை இந்த இளம் சமூகம் முன்வைத்துவருவதுடன்,பலரது விருப்பும் இதுவாகத்தான் இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

ஆகவே பழமைவாத அரசியல் பாசறையில் வளர்ந்தவர்களை விலக்கிவைத்துவிட்டு புதிய ஒரு தெரிவுக்கு இளம் சமூகம் முன் வந்திருப்பது நாட்டுக்கு எவ்வாறான எதிர்காலத்தை உருவாக்கப்போகிறது என்பதையும் அந்த தெரிவு வெற்றியளிக்குமா? என்பதையும் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னர் பார்க்கமுடியும்.

 

https://akkinikkunchu.com/?p=291372

 

வடக்கு புகையிரத பாதையை திறக்க வேண்டாம் என முறைப்பாடு

3 months 1 week ago

வடக்கு புகையிரத பாதையை திறக்க வேண்டாம் என முறைப்பாடு

வடக்கு புகையிரத மார்க்கத்தின் அனுராதபுரம் முதல் மஹவ வரையிலான புகையிரத பாதையைத் திருத்தும் பணிகளை உரிய முறையில் பூர்த்தி செய்யாமல், அதை திறப்பதை இடைநிறுத்துமாறு கோரி லொகோமோட்டிவ் இயக்குநர்கள் பொறியியலாளர்கள் சங்கம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 

குறித்த சேவை மார்க்கத்தின் சமிக்ஞை அமைப்பு சீரமைக்கப்படவில்லை எனவும், அதனால் புகையிரத மார்க்கம் பாதுகாப்பற்ற நிலையில், உள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இவ்வாறான பின்னணியில் வடக்கு புகையிரத மார்க்கத்தின் அனுராதபுரம் முதல் மஹவ வரையிலான  மார்க்கத்தின் திருத்தப் பணிகள் முழுமையுடையாத நிலையில், ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு அதனைத் திறக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக லொகோமோட்டிவ் இயக்குநர்கள் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. R

 

https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வடகக-பகயரத-பதய-தறகக-வணடம-என-மறபபட/71-343713

 

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் 18ஆம் திகதியுடன் நிறைவு

3 months 1 week ago

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் 18ஆம் திகதியுடன் நிறைவு
September 13, 2024
election-commission.-696x365.jpg

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுபெற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

குறித்த தினத்தில் மாலை 4 மணிவரை வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இதற்காக நாடளாவிய ரீதியில் 13,417 வாக்களிப்பு நிலையங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://eelanadu.lk/ஜனாதிபதித்-தேர்தல்-தொடர-9/

 

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக Air- Ship சேவை- கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கைச்சாத்து

3 months 1 week ago
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக Air- Ship சேவை- கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கைச்சாத்து இலங்கை வரலாற்றில் முதன் முறையாக Air- Ship சேவை- கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கைச்சாத்து.

தெற்காசியாவில் முதன் முறையாக  இலங்கையில் Air- Ship சேவையை ஆரம்பிக்கும் ஒப்பந்தம்  சர்வதேச Air Space நிறுவனத்தின் தலைவர் ஷுகரேவ் செர்ஜி நிகோலாவிச்க்கும், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்திற்கும் இடையில் இன்று ஆளுநர் தலைமையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா துறையை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

திருகோணமலையில் உள்ள நிலாவெளி,மட்டக்களப்பில் உள்ள  பாசிக்குடா, அம்பாறையில் உள்ள அருகம்பே போன்ற சுற்றுலா தளங்களின் இயற்கை அழகை ரசிக்கும் வகையிலும், பயணத்தை இலகுபடுத்தும் நோக்கிலும் பறக்கும் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இவ்வேலைத்திட்டமானது எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது.

இதன் போது கருத்து தெரிவித்த சர்வதேச Air Space நிறுவனத்தின்

தலைவர் ஷுகரேவ் செர்ஜி நிகோலாவிச், இலங்கையில் உள்ள பல மாகாணங்களை ஒப்பிடும் போது,கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒன்றரை வருடமாக ஆளுநர் செந்தில் தொண்டமானால் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள்   வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதை  அவதானிக்க முடிந்தது. ஆளுநர்  Air- Ship சேவையை ஆரம்பிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதற்கு அமைய கடந்த ஒரு மாத காலமாக எமது நிறுவனத்தின் அதிகாரிகள் இங்கு இருந்து இவ்வேலைத்திட்டம் குறித்து  ஆராய்ந்தனர். எங்களுடைய  ஆய்வு அறிக்கை படி இவ்வேலைதிட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பதை அறிந்து  air ship வேலைத்த்திட்டத்திட்காக முழு முதலீடு செய்யவுள்ளோம்  என தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1399191

தமிழர்கள் ஒன்றுபட்டுள்ளார்கள் என்பதை சர்வதேசத்திற்கு காட்டவேண்டும் என்கிறது கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம்

3 months 1 week ago

தமிழ் மக்கள் இந்த நாட்டில் அனுபவித்து துன்பங்களுக்கு தீர்வாக இம்முறை தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்கவேண்டும் எனவும் அது தமிழர்களின் தலையாய கடமையெனவும் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேச லோகநாதன் குருக்கள் தெரிவித்தார்.

கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனை ஆதரிக்கும் வகையில் எடுத்த தீர்மானத்தினை அறிவிக்கும் வகையிலான ஊடக சந்திப்பு மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள ஒன்றியத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த ஊடக சந்திப்பில் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேச லோகநாதன் குருக்கள், செயலாளர் சிவஸ்ரீ சி.குகநாதன் குருக்கள், உறுப்பினர் சிவஸ்ரீ செ.கு.உதயகுமார குருக்கள் ஆகியோர் கலந்துதெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த தலைவர்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்ற எமது தமிழ் பொது வேட்பாளர் பா.அரியனேத்திரன் அவர்களை ஆதரித்து இன்று எமது அலுவலகத்தில் நாங்கள் இந்த ஊடக சந்திப்பை நடத்துவதற்கு முன் வந்துள்ளோம்.

இலங்கை திரு நாட்டிலேயே எமது மக்கள் இதுவரை காலமும் பெரும்பான்மை இன சிங்கள ஜனாதிபதிகளினால் இதுவரை காலமும் நாங்கள் பல்வேறு பட்ட ஆதரவை வழங்கியிருந்தோம் அதன் மூலமாக எங்களது மக்களுக்கு கிடைத்தது ஏமாற்றம் மாத்திரமே அன்றி வேறு எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.

இன்று எமது மக்கள் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களினால் எமது இனம் மிகவும் மோசமாக வஞ்சிக்கப்பட்டது தமிழர்கள் மிகவும் கேவலமாக நடத்தப்பட்டார்கள் எமது இனம் கொன்றொழிக்கப்பட்டது இவை அனைத்தையும் இதுவரை காலமும் நாங்கள் அனுபவித்து வந்திருக்கின்றோம். அதற்கு ஒரு தீர்வாக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பொதுச் சபையின் ஊடாக நாங்கள் இந்த தமிழர் பொதுச் சபையிலே எமது கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம் அங்கத்தவர்கள் ஆக இருக்கின்றோம். அதன் மூலம் இந்த பொது கட்டமைப்பினால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற அரியநேத்திரன் அவர்களை ஆதரிக்க வேண்டும் ஏனென்றால் அது தமிழர்களுடைய தலையாய கடமை ஆகும்.

எங்களது இனம் தேசியம் சுய நிர்ணயம் ஆகியவற்றை நாங்கள் பெற வேண்டுமாக இருந்தால் உங்களுக்காக அந்த வலுவான சக்தியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமாக இருந்தால் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதனை சர்வதேசத்திற்கும் இலங்கையில் மாறி மாறி வருகின்ற பௌத்த அரசியல்வாதிகளுக்கும் எடுத்துக்காட்டுவதற்காகவும் இந்த தேர்தல் ஒரு முக்கியமான களமாக அமைந்திருக்கின்றது.

ஏனென்றால் இந்த தேர்தலிலே தமிழர்கள் என்கின்றவர்கள் இதுவரை காலமும் தமிழ் தேசியம் என்கின்ற போர்வையில் பல்வேறுந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையிலே நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

இம்முறை முதல் முறையாக வடகிழக்கில் இருக்கின்ற தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியத்தின் பால் உறுதிபூண்டு அனைவரும் ஒற்றுமையாக எமது ஜனாதிபதி தேர்தலிலே மற்றவர்களுக்கு நாங்கள் எடுத்துக்காட்டாக இந்த பொது வேட்பாளர் அவர்களை நாங்கள் ஆதரிக்க வேண்டும்.

அது மாத்திரம் இல்லாமல் இரு ஜனாதிபதி தேர்தலிலே பொது வேட்பாளர் ஜனாதிபதியாக வருவதற்காக போட்டியிடவில்லை எமது மக்களுடைய ஒற்றுமை எங்களுடைய உரிமைக்காக நாங்கள் குரல் கொடுப்பதற்கு எல்லோரும் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக முதல் முறையாக ஒரு படிக்கல்லாகவே இதனை நாங்கள் கருதுகின்றோம்.

ஆகவே ஒவ்வொரு தமிழ் மக்களும் உணர்ந்து எதிர் வருகின்ற 21 ஆம் திகதி காலையில் இறை வழிபாட்டுடன் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும் சென்று எமது சங்கு சின்னத்திற்கும் எமது வேட்பாளர் அரிய நேத்திரன் அவர்களுக்கு மாத்திரம் தங்களது வாக்கினை செலுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் அனைவரும் தங்களது உரிமைகளுக்காகவும் நாங்கள் பட்ட துன்பங்களில் இருந்து வெளியேறி நாங்களும் சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என்று சர்வதேசத்திற்கும் ஏகையிலே வருகின்ற அரசியல் தலைமைகளுக்கும் உணர்த்துவதற்கு எல்லோரும் அணி திரண்டு எமது சங்கு சின்னத்தை வலுப்பட செய்வோம் அதன் மூலம் எமது உரிமைகளையும் எமது கோரிக்கைகளையும் நாங்கள் வென்றெடுப்பதற்கு அனைவரும் ஒன்று சேருமாறு உங்களை அன்போடு வேண்டுகின்றோம் என்றார்.

https://thinakkural.lk/article/309383

வாக்களித்ததை யாருக்கும் சொன்னால் கைது செய்யப்படுவர்; தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அதிரடி அறிவிப்பு

3 months 1 week ago
கைபேசி எடுத்துவர முடியாது; வாக்களித்ததை யாருக்கும் சொன்னால் கைது செய்யப்படுவர்; தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அதிரடி அறிவிப்பு

வாக்களிப்பு நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் வாக்காளர்கள் மட்டுமன்றி வேட்பாளர்களும் வாக்குச்சாவடிகளுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்ல முடியாது என்றும், வாக்களித்ததன் பின்னர் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை பகிரங்கமாக சொன்னால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

‘சுதந்திரமானதும் மற்றும் நியாயமானதுமான ஜனாதிபதி தேர்தலில் ஊடகங்களின் வகிபாகம்’ எனும் தொனிப்பொருளில் இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தால் ஏற்பாடு செய்திருந்த விசேட கருத்தரங்கு, கொழும்பிலுள்ள இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கேட்போர் கூடத்தில், வியாழக்கிழமை (12) பிற்பகல் நடைபெற்றது.

அதில், கலந்துகொண்டு கருத்துரையை வழங்கியதன் பின்னர், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/309386

நல்லை ஆதீன முதல்வரை சந்தித்த நாமல்

3 months 1 week ago
wwtttw.jpg?resize=750,375 நல்லை ஆதீன முதல்வரை சந்தித்த நாமல்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகைதந்தநிலையில் நல்லை ஆதீனத்திற்குச் விஜயம் செய்தார்.

நல்லை ஆதீன குரு முதல்வர்  ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்த நாமல் ராஜபக்ஷ பொன்னாடை போர்த்து கௌரவித்தார்.

பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டநிலையில் நல்லை ஆதீன குரு முதல்வரால் நாமல் ராஜபக்ஷவுக்கு நினைவாக  நந்திக் கொடி வழங்கப்பட்டது.

https://athavannews.com/2024/1399182

வடக்கு கிழக்கு இணைக்கப்படாது;நாமல் உறுதி

3 months 1 week ago

Simrith   / 2024 செப்டெம்பர் 12 , பி.ப. 07:21 - 0      - 38facebook sharing button

whatsapp sharing button

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அரசாங்கத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு இணைக்கப்படாது, அதேவேளை பொலிஸ் அல்லது காணி அதிகாரங்கள் இந்தப் பகுதிகளுக்கு வழங்கப்படாது என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒரு பௌத்த நாடு அனைத்து மதங்கள், மொழிகள் மற்றும் சமூகங்களை பாதுகாக்கிறது, குறுகிய கால நன்மைகள், சலுகைகள் அல்லது பதவிகளுக்காக SLPP நாட்டை அல்லது கட்சியை ஒருபோதும் காட்டிக் கொடுக்காது என்று ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் ராஜபக்சே கூறினார். 

Tamilmirror Online || வடக்கு கிழக்கு இணைக்கப்படாது;நாமல் உறுதி

மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!

3 months 1 week ago

மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் தனது மகளை பலமுறை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்; 53 வயதான குறித்த தந்தை தனது மகளான 23 வயதுடைய யுவதியை பல தடவைகள் பாலியல் வன்புணர்வு செய்துள்ள நிலையில் குறித்த யுவதியும் கர்ப்பமடைந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்னர் கர்ப்பம் கலைக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னரும் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் பொலிஸார் தந்தையை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவமானது இணுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது என்பதுடன், குறித்த யுவதி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுளார்.

மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்! (newuthayan.com)

திருகோணமலையில் அதிகரித்துவரும் சிங்களக் குடியேற்றங்கள்: புதிய ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டு

3 months 1 week ago
திருகோணமலையில் அதிகரித்துவரும் சிங்களக் குடியேற்றங்கள்: தமிழ், முஸ்லிம் மக்களின் சரித்திரம் மற்றும் கலாசாரத்தை அழிப்பதே பிரதான நோக்கம் - 'த ஒக்லன்ட் இன்ஸ்டிடியூட்' வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டு

Published By: VISHNU    12 SEP, 2024 | 09:03 PM

image

(நா.தனுஜா)

யுத்தத்தின் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்தும் இராணுவக் கண்காணிப்பின் கீழ் இருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் விரிவடைந்துவருகின்றது.

வடக்கு, கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒன்றிணைந்த தாயகம் என்ற கோட்பாட்டை இல்லாமல் செய்யும் அதேவேளை, அவர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் அவர்களது சரித்திரம் மற்றும் கலாசாரம் என்பவற்றை முற்றாக அழிப்பதே இந்த நில அபகரிப்பு முயற்சிகளின் பிரதான இலக்காகும் என த ஒக்லன்ட் இன்ஸ்டிடியூட்டினால் வெளியிடப்பட்டுள்ள நில அபகரிப்பு தொடர்பான புதிய ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இயங்கிவரும் 'த ஒக்லன்ட் இன்ஸ்டிடியூட்' என்ற கல்வியகத்தினால் திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்புக்கள் தொடர்பான தரவுகளையும், ஆவணப்படுத்தல்களையும் உள்ளடக்கிய 'ஆக்கிரமிப்பின் கீழ் திருகோணமலை: இலங்கையில் தமிழர் தாயகத்தை இலக்குவைக்கும் நில அபகரிப்பு' எனும் தலைப்பிலான 32 பக்க ஆய்வறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை சுதந்திரமடைந்த நாள் முதல் அபிவிருத்தி என்ற போர்வையில் இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டு குடியேற்றங்கள் நிறுவப்பட்டிருப்பதாகவும், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதிலிருந்து இக்குடியேற்றங்கள் அதிகரித்திருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை வலுவற்றவர்களாக்கும் பொருட்டு அரசாங்கங்கள் மற்றும் இராணுவத்தினரால் கையாளப்பட்டுவரும் பலதரப்பட்ட உத்திகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.

'யுத்தத்தின் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்தும் இராணுவக் கண்காணிப்பின் கீழ் இருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் விரிவடைந்துவருகின்றது. வடக்கு, கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒன்றிணைந்த தாயகம் என்ற கோட்பாட்டை இல்லாமல் செய்யும் அதேவேளை, அவர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் அவர்களது சரித்திரம் மற்றும் கலாசாரம் என்பவற்றை முற்றாக அழிப்பதே இந்த நில அபகரிப்பு முயற்சிகளின் பிரதான இலக்காகும்' என த ஒக்லன்ட் இன்ஸ்டிடியூட்டின் ஸ்தாபகரும் நிறைவேற்றுப்பணிப்பாளருமான அனுராதா மிட்டால் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்த ஆய்வறிக்கையின் பிரகாரம், நில அபகரிப்புக்களின் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் தற்போது 27 சதவீதமாக இருக்கும் சிங்கள மக்கள், அந்த மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 36 சதவீதத்தைத் தம்வசம் வைத்திருக்கின்றனர். அங்கு 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு (41,164 ஏக்கர்) அபகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்த 10 வருடங்களில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத்திட்டங்கள், துறைமுக நவீனமயமாக்கல், சக்திவலு உற்பத்தி, சுற்றுலாத்துறை மேம்பாடு என்பன உள்ளடங்கலாக 'அபிவிருத்தி' எனும் போர்வையில், 'சிங்களமயமாக்கல்' நடவடிக்கையின் ஓரங்கமாக இந்த நில அபகரிப்புக்கள் இடம்பெற்றுவருகின்றன.

அதேபோன்று தொல்லியல் திணைக்களம், வன இலாகா, மகாவலி அதிகாரசபை மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு அரச கட்டமைப்புக்கள் இந்த நில அபகரிப்பின் மூலம் இடம்பெறும் 'சிங்களமயமாக்கல்' நடவடிக்கையில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் 'ஆக்கிரமிப்பின் கீழ் திருகோணமலை' என்ற ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

 'தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகளை விஸ்தரிப்பதானது பௌத்தமயமாக்கலை மேற்கொள்வதற்கும், குடித்தொகைப்பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் தமிழ், முஸ்லிம் மக்களின் கலாசார சின்னங்களை அழிப்பதற்கும் வாய்ப்பேற்படுத்துகின்றது.

2009 ஆம் ஆண்டிலிருந்து குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 3887 ஏக்கர் நிலப்பரப்பில் 26 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று இலங்கை இராணுவத்தின் 7 பிராந்திய தலைமையகங்களில் 5 வட, கிழக்கு மாகாணங்களில் நிறுவியிருப்பதன் மூலம் இம்மாகாணங்கள் தொடர்ந்து உச்சளவில் இராணுவமயமாக்கப்பட்டுள்ளன. இது அப்பகுதிகளில் பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்கும், சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கும், நிலங்களை அபகரிப்பதற்கும் உதவுகின்றது' எனவும் த ஒக்லன்ட் இன்ஸ்டிடியூட் தெரிவித்திருக்கிறது.

https://www.virakesari.lk/article/193536

இலங்கை தொடர்பான 51/1 தீர்மானம்: மேலும் இரு வருடங்களுக்குக் காலநீடிப்பு செய்யப்படுமா? - ஒக்டோபர் 7 ஆம் திகதி தீர்மானம் எட்டப்படும்

3 months 1 week ago

Published By: VISHNU   12 SEP, 2024 | 06:27 PM

image

(நா.தனுஜா)

இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு, நடைமுறையில் இருக்கும் 51/1 தீர்மானத்தை மேலும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குக் காலநீடிப்புச் செய்வது குறித்து ஆராயப்பட்டுவரும் நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி பேரவையில் அதுகுறித்த தீர்மானம் எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (9) ஜெனிவாவில் ஆரம்பமானது. அன்றைய தினம் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் உரை மற்றும் மியன்மார் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை, அதன்மீதான விவாதம் என்பவற்றைத் தொடர்ந்து இலங்கை விவகாரம் குறித்து ஆராயப்பட்டது.

அதன்படி இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்க அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் என்பன தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் உரையாற்றினார்.

அதனைத்தொடர்ந்து உயர்ஸ்தானிகரின் அறிக்கை தொடர்பில் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றியதுடன், சர்வதேச மற்றும் உள்நாட்டு மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் அவற்றின் அறிக்கைகளைச் சமர்ப்பித்தன. இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட சிவில் சமூக அமைப்புக்களில் அறிக்கைகளில் இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை மேலும் இரு வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தக்கூடியவகையில் புதுப்பிக்குமாறு பேரவையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானம், பின்னர் 51/1 ஆக கால நீடிப்புச்செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த நிலையில், அத்தீர்மானம் இம்மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. அதனையடுத்து இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவருவது பற்றி முன்னர் ஆராயப்பட்ட போதிலும், இலங்கையில் இது தேர்தல் ஆண்டு என்பதால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மேலும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குக் காலநீடிப்புச் செய்வதற்கான சாத்தியப்பாடு குறித்து பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் ஆலோசிக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதியுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் முடிவுடையவுள்ள நிலையில், ஒக்டோபர் 7 ஆம் திகதி இலங்கை தொடர்பான 51/1 தீர்மானம் அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன் பேரவையில் வாக்கெடுப்பின்றி காலநீடிப்புச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலின் பின்னர் ஆட்சிபீடமேறும் புதிய அரசாங்கம் இதற்கு உடன்படாவிடின், இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் காலநீடிப்புச் செய்வதற்கு வாக்கெடுப்புக்குச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

https://www.virakesari.lk/article/193533

பழிதீர்ப்பதற்காக தமிழ் அரசியல் கைதிகளை 30 ஆண்டுகளாக இலங்கை அரசாங்கம் சிறையில் வைத்திருக்கிறதா? - குரலற்றவர்களின் குரல் அமைப்பு

3 months 1 week ago
12 SEP, 2024 | 05:06 PM
image

அரசும் அதன் அதிகாரமும்தான் எமது தமிழ் அரசியல் கைதிகளை பழிதீர்க்கும் போக்கில் 30 ஆண்டுகளாக சிறைக்குள் தடுத்து வைத்துக்கொண்டிருக்கின்றதா என குரலற்றவர்களின் குரல் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. 

தேசிய சிறைக்கைதிகள் தினமான இன்றைய தினம் வியாழக்கிழமை (12) யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அமைப்பினர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர். 

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 

ஜனநாயகப் பெயர் கொண்டமைந்துள்ள இலங்கை நாட்டில் இன்று 116ஆவது தேசிய சிறைக்கைதிகள் தின நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

சுமார் 13 ஆயிரம் கைதிகளை மாத்திரமே தடுத்து வைத்திருக்கக்கூடிய இட வசதியினைக் கொண்ட சிறைக்கூடங்களுக்குள் 24 ஆயிரம் கைதிகளை திணித்து அடைத்து வைத்துக்கொண்டிருக்கின்ற நிலையிலேயே சிறைத்துறை இந்த கைதிகள் தின நிகழ்வை கடைபிடித்துவருகிறதென்பது  சுட்டிக்காட்டத்தக்கது. 

இருப்பினும் உணவு, நீர், சுகாதாரம் மற்றும் மருத்துவம் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் போதுமற்ற நிலையில் பெயருக்காக கொண்டாடப்படுகின்றதா இந்த தேசிய சிறைக்கைதிகள் தினம் என்கின்ற கேள்வி எழுகிறது. 

இத்தனை மோசமான கட்டமைப்பை கொண்டியங்கும் சிறைக்குள்ளேயே சமூகத்தை நேசித்த எமது தமிழ் அரசியல் கைதிகள் 30 ஆண்டுகளாக வாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது எத்தனை கொடூரமானது!

"எமது நாடு ஜனநாயக நாடு. நாம் கருணை அன்பு மிக்கதொரு பாரம்பரிய சமூக சமயத்தை  சார்ந்தவர்கள். மறப்போம் மன்னிப்போம் என்பது எமது கொள்கையில் ஒரு அங்கம்" என மேடை முழக்கம் செய்கின்ற அரசும் அதன் அதிகாரமும் தான் எமது தமிழ் அரசியல் கைதிகளை பழிதீர்க்கும் போக்கில் 30 ஆண்டுகளாக சிறைக்குள் தடுத்துவைத்துக்கொண்டிருக்கிறதா எனக் கேட்கின்றோம். 

இன்று தேர்தல் பரப்புரைகளாலும் எண்ணற்ற வாக்குறுதிகளாலும், நாடு நிரம்பித் ததும்பிக்கொண்டிருக்கிறது. ஆனபோதிலும், தமிழினத்தின் பெயரில் மூன்று தசாப்த காலங்களாக சிறையில் கொடுமை அனுபவித்துவரும் எமது தமிழ் அரசியல் கைதிகளின் நரக வாழ்க்கைக்கான முற்றுப்புள்ளியின் எல்லை இதுவரை தெரியவில்லை. 

உண்மையிலேயே ஒரு ஜனநாயக நாட்டினுடைய சட்டங்களை அமுல்படுத்துகின்ற நீதித்துறையும் அதற்கு ஒப்ப இயங்குகின்ற சிறைத்துறையும் அரச இயந்திரத்தின் முக்கிய இரு பிரிவுகளாகும். 

இவை குற்றம் காணும் குடிமக்களை  சீர்திருத்தி, குறிப்பிட்டதொரு காலத்துக்குள் மீண்டும் அவர்கள் சமூகத்துடன் சேர்ந்து வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் பொறுப்புக்குரிய நிறுவனங்களாகும்.

ஆனாலும், தமிழ் அரசியல் கைதிகளுடைய விடுதலை விடயத்திலே அரசும் அதன் இயந்திரங்களும் மாற்றான் தாய் மனப்போக்குடன் நடந்துகொள்வதன் நோக்கம் என்ன?

காலம் காலமாக கதிரையேறும் சிங்கள ஆட்சி அதிகாரங்கள், தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குச் சூரையாடும் கலாசாரத்துக்கு இனிமேலாவது முற்றுப்புள்ளியிட வேண்டும். மக்களினதும் சர்வதேசத்தினதும் பார்வைக் கோணங்களை திசை மாற்றும் கைங்கரியத்தை கைவிட வேண்டும். 

நிச்சயமாக இதற்கு மேலும், கால வீணடிப்புச் செய்யாமல் தமிழ் மக்களின் தீர்க்கப்பட வேண்டிய அவசர அடிப்படை விடயங்களுக்கு தீர்வினைக் கூற வேண்டும்.

குறிப்பாக, இனத்தின் பெயரில் நாளுக்கு நாள் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் 10 தமிழ் அரசியல் கைதிகளினதும் விடுதலை விடயத்தில், அரசின் உண்மையான இறுதி நிலைப்பாட்டை பொதுவெளியில் தெரிவிக்க வேண்டும் என்பதை 'குரலற்றவர்களின் குரல்' மனிதநேய அமைப்பினராகிய நாம், இந்த ஆண்டு தேசிய சிறைக்கைதிகள் தின பகிரங்க கோரிக்கையாக முன்வைக்கின்றோம். 

அவ்வாறில்லையேல், இந்த நாட்டின் ஆட்சி அதிகாரங்களுக்கும் அதற்குத் துணை செய்யும் குடி மக்களுக்கும், தமிழினத்தின் சாபக் கேடு என்பது தவிர்த்தொதுக்க முடியாத ஒரு காலத்தின் நியதியாகும் என்பதை நினைவூட்ட கடமைப்படுகின்றோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்த ஊடக சந்திப்பில் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் முருகையா கோமகன், அரசியல் கைதியான பார்த்தீபனின் சகோதரி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

https://www.virakesari.lk/article/193518

என்னை எந்த பிரதான கட்சித் தலைவர்களும் பேசுவதற்காக அழைக்கவில்லை; அழைத்தாலும் நான் செல்வதாக இல்லை - அரியநேத்திரன்

3 months 1 week ago
12 SEP, 2024 | 04:15 PM
image

தமிழ் பொது வேட்பாளர் என்ற ரீதியில் என்னை எந்த பிரதான கட்சித் தலைவர்களும் பேசுவதற்காக அழைக்கவில்லை. அவ்வாறு அவர்கள்  அழைத்தாலும் நான் செல்லப்போவதில்லை. நான் எடுத்த இந்த முடிவில் இறுதி வரை பயணித்தே தீருவேன் என தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் வெற்றியை அல்லது இலக்கை உடைப்பதற்கு இப்போது பல சக்திகள் இறங்கியுள்ளன. இந்த நபர்களினால் இன்னும் சில தினங்களில் அல்லது தேர்தலுக்கு முதல் நாளிலோ என்னைப் பற்றி துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்படலாம். 

நான் தேர்தலில் இருந்து ஒதுங்கிவிட்டேன் என்று கூட அவர்கள் துண்டுப்பிரசுரங்கள், காணொளிகளை வெளியிடக்கூடும். இவை எதையும் மக்கள் நம்ப வேண்டாம்.

தமிழ் மக்களுக்கு நான் ஒன்று கூறுகின்றேன். நீங்கள் குழப்பமடையத் தேவையில்லை. விருப்பு வாக்கு, விருப்பத் தேர்வு என்கின்ற விடயத்தில் பலர் மக்களை குழப்பமடையச் செய்து வருகின்றனர். மக்களாகிய நீங்கள் எனது சங்கு சின்னத்துக்கு மட்டும் ஒரு புள்ளடியிடுங்கள் அவ்வளவுதான். 

இன்று இந்த பொது வேட்பாளர் என்கின்ற விடயம் இலங்கையில் மட்டுமல்ல, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  ஏனென்றால் எங்கள் விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை ரீதியிலான, ஆயுத ரீதியிலான இராஜதந்திர செயற்பாட்டிலே கூர்மை பெற்றபோது எல்லோருமே இதை அவதானித்துக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள்  எல்லோருமே தவறு விட்டிருக்கின்றார்கள். 

இலங்கை மட்டும் எங்களை ஏமாற்றவில்லை. இந்தியாவும் எங்களை ஏமாற்றி இருக்கின்றது. இறுதிப் போரில் இனப்படுகொலையை செய்வதற்காக பல நாடுகள் இலங்கைக்கு துணை போயிருக்கின்றது. எனவே அவர்கள் அனைவருக்கும் ஒரு மனச்சாட்சி இருக்கின்றது. இணைந்த வட கிழக்கிலே ஒரு அரசியல் தீர்வினை தமிழர்களுக்கு வழங்க அவர்கள் தவறியிருக்கின்றார்கள். அந்த தவறை சுட்டிக்காட்டவேண்டிய உரிமை வடகிழக்கு மக்களுக்கு இருக்கிறது. அதை ஒரு ஜனநாயக வடிவமாக நாங்கள் காட்ட இருக்கின்றோம்.

தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் வேட்பாளராக நான் வரவேண்டும் என்று ஆசைப்படவில்லை. வேட்பாளராக என்னை தெரிவு செய்வதற்கு முன் நானே இரண்டு பேரை வேட்பாளராக முன்மொழிந்தேன். இறுதியாக சில மாற்றங்கள் ஏற்பட்டதன் காரணமாக நான் இதை ஏற்றிருக்கின்றேன்.

அனைவரும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் அரசுக் கட்சியில் இருந்து வேறு அரசியல் கட்சியில் போட்டியிடுவது தமிழ் அரசு கட்சியை விட்டு விலகிச் செல்வதாக கருதப்படலாம். நான் இன்னுமொரு கட்சியில் அங்கத்துவம் பெறவில்லை.  இப்பொழுதும் தமிழ் அரசுக் கட்சியில் தான் இருக்கின்றேன். நான் தமிழ் தேசிய கொள்கையுடையவன். கட்சியின் கொள்கையை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதே போன்று எனது தமிழ் தேசிய கொள்கையினையும் கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/193514

அனுராவை கைது செய்து விசாரியுங்கள்; குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

3 months 1 week ago

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்கவை கைது செய்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அநுர திஸாநாயக்க இனக்குழுக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி தேசப்பற்றுள்ள மக்கள் சக்தியினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அநுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்துக்களால் இன முரண்பாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சுகத் ஹேவாபத்திரன குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/309333

ஜனாதிபதி தேர்தல் 2024: தென்னிலங்கை ஜேவிபி/என்பிபி ஆதரவு அலையின் பின்னணியில் உள்ள சமூக உளவியல் காரணிகள்

3 months 1 week ago

எம்.எல்.எம்.மன்சூர்

சிங்­கள பெரும்­போக்கு ஊட­கங்­க­ளிலும், சமூக ஊட­கங்­க­ளிலும் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பாக கருத்­துக்­களை பதிவு செய்யும் அர­சியல் விமர்­ச­கர்கள் அனை­வரும் பொது­வாக பயன்­ப­டுத்தும் ஒரு சொல் ‘தீர­ணாத்­மக’ என்­பது (தமிழில் அதனை ‘இரண்டில் ஒன்று முடி­வாகப் போகும் தருணம்’ என்று சொல்­லலாம்). இன்று இலங்கை அதன் சுதந்­தி­ரத்­திற்கு பிற்­பட்ட 76 வருட கால வர­லாற்றில் மிக மிக நிர்­ண­ய­மான ஒரு கட்­டத்தில் வந்து நின்­றி­ருக்­கி­றது என்ற அபிப்­பி­ராயம் பொது­வாக அனைத்துத் தரப்­புக்கள் மத்­தி­யிலும் நிலவி வரு­கி­றது.

முன்னர் இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தல்­க­ளுடன் ஒப்­பிட்டு நோக்கும் பொழுது இந்தத் தேர்தல் முற்­றிலும் வேறு­பட்ட ஓர் இயல்பை கொண்­டி­ருப்­ப­தனை அவ­தா­னிக்க முடி­கி­றது. ஜனா­தி­பதி தேர்­தல்­களில் இது­வ­ரையில் இருந்து வந்த இரு முனைப் போட்டி இந்தத் தடவை ஒரு நான்கு முனைப் போட்­டி­யாக மாற்­ற­ம­டைந்­தி­ருப்­பது முத­லா­வது விசேஷம். பலர் நாமல் ராஜ­பக்­சவின் பெயரை தவிர்த்து ‘இது ஒரு மும்­முனைப் போட்டி’ என்று சொல்லி வந்­தாலும் கூட, நாமலும் ஒரு குறிப்­பி­டத்­தக்க போட்­டி­யா­ள­ராக இருந்து வரு­கிறார் என்­பதில் சந்­தே­க­மில்லை.

தேர்­தல்­களில் இது­வ­ரையில் 5% க்கு குறை­வான வாக்­கு­களை மட்­டுமே பெற்று வந்த ஒரு விளிம்பு நிலைக் கட்சி ஒரு முதன்மை போட்­டி­யா­ள­ராக எழுச்­சி­ய­டைந்­தி­ருப்­பது இரண்­டா­வது சிறப்­பம்சம். 1990கள் தொடக்கம் ஜனா­தி­பதி தேர்தல் பிரச்­சா­ரங்­களின் போது சிங்­கள சமூ­கத்தின் கொடிய எதி­ரி­க­ளாக கட்­ட­மைக்­கப்­பட்டு வந்த தமிழ் பிரி­வி­னை­வாதம், டயஸ்­போரா சமூகம் மற்றும் 2019 இல் முன்­வைக்­கப்­பட்ட இஸ்­லா­மிய தீவி­ர­வாதம் போன்ற கோஷங்கள் பிரச்­சார மேடை­க­ளி­லி­ருந்து தலை­ம­றை­வா­கி­யி­ருப்­பது. அடுத்த விசேஷம். அதா­வது, கடந்த 20 ஆண்­டு­களில் வெளிப்­ப­டை­யாக இன­வாதம் பேசப்­ப­டாமல் நடத்­தப்­படும் முத­லா­வது தேர்தல் இது.

சிங்­கள மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­களில் (Sinhala Heartland) தெளி­வா­கவே ஒரு ஜேவிபி / என்­பிபி ஆத­ரவு அலை நிலவி வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பாக வெவ்­வேறு தரப்­புக்­களால் பல்­வேறு இடங்­களில் நடத்­தப்­பட்ட கருத்துக் கணிப்­புக்கள் மீண்டும் மீண்டும் இதனை ஊர்­ஜிதம் செய்­தி­ருக்­கின்­றன. அநுர குமார திசா­நா­யக்க தலை­மை­யி­லான அணி மீது கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைக்கும் அர­சியல் ஆய்­வா­ளர்­களும் கூட ‘ஆம் அவர்­க­ளுக்கு ஒரு ஆத­ரவு அலை இருந்து வரு­கி­றது; அதை மறுக்க முடி­யாது’ என்ற பீடி­கை­யு­ட­னேயே தமது கருத்­துக்­களை முன்­வைக்­கி­றார்கள்.
அதே வேளையில், சஜித் மற்றும் ரணில் ஆகியோர் இந்தத் தடவை முன்­வைத்­தி­ருக்கும் பிரச்­சார சுலோ­கங்கள் பெரி­தாக வாக்­கா­ளர்­களை கவ­ரக்­கூ­டி­ய­வை­யாக இருந்து வர­வில்லை. சார்­பு­ரீ­தியில், ஜேவிபி / என்­பிபி அணிக்குக் கிடைத்­தி­ருக்கும் குறிப்­பிட்டுச் சொல்லக் கூடிய அனு­கூலம் – ‘எதிரி யார்’ என்­பதை தெளி­வாக அடை­யாளம் காட்டக் கூடிய ஆற்றல்.

சஜித் அணியை பொறுத்­த­வ­ரையில் அவர்கள் ‘வீழ்த்த விரும்பும் முதன்மை எதிரி’ யார் என்­பது அவர்­க­ளுக்கே தெளி­வில்­லாமல் இருப்­பது முக்­கி­ய­மான ஒரு பல­வீனம். ராஜ­பக்­ச­களின் அர­வ­ணைப்பில் இருந்த பலரை தனது அணிக்குள் உள்­ளீர்த்துக் கொண்ட பின்னர் ‘திரு­டர்­களை களை எடுப்போம்’ போன்ற ஜன­ரஞ்­சக சுலோ­கங்­களை முன்­வைக்கும் தார்­மீக உரி­மையை இழந்­தி­ருக்­கிறார் சஜித்.

அவ­ரு­டைய மற்­றொரு பல­வீனம் இன்­றைய இலங்­கையின் பொரு­ளா­தார யதார்த்­தங்­க­ளுக்கு துளியும் சம்­பந்­த­மில்­லாத விதத்தில் கோமா­ளித்­த­ன­மான வாக்­கு­று­தி­களை வழங்­கு­வது. சொல்­லப்­போனால் ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்­கி­ர­ம­ரத்ன போன்ற நாட்டு நடப்­புக்­களை நன்கு அறிந்து வைத்­தி­ருக்கும் SJB முக்­கி­யஸ்­தர்­களை பெரும் சங்­க­டத்தில் நெளிய வைக்கும் வாக்­கு­று­திகள் அவை.

‘அநுர குமா­ரவே எங்கள் தெரிவு’ என்று சொல்லும் பலர் அதற்கு முன்­வைக்கும் காரணம் ‘ஒரு தடவை அவர்­க­ளுக்கும் கொடுத்துப் பார்ப்­போமே’ என்­பது. அதா­வது, ‘இவ்­வ­ளவு காலமும் எத்­த­னையோ பேருக்கு வாக்­க­ளித்து ஏமாந்­தி­ருக்­கிறோம். கடை­சியில் இன்­றைய வங்­கு­ரோத்து நிலைதான் எமக்கு எஞ்­சி­யி­ருக்­கின்­றது’ என்ற ஆதங்­கமே இந்தப் பேச்­சுக்­களில் தொனிக்­கி­றது. அத­னையே அதா­வது – ‘ இந்தத் தடவை திசை­காட்­டிக்கு’ என்று மக்கள் சொல்­வ­தையே – ஜேவிபி/ என்­பிபி அணி தனது பிரச்­சார சுலோ­க­மாக பயன்­ப­டுத்தி வரு­கி­றது.

குறிப்­பாக, 2022 அற­க­லய மக்கள் எழுச்­சிக்குப் பின்னர் நாட்டில் உரு­வாக்­கி­யி­ருக்கும் ஜேவிபி/ என்­பிபி ஆத­ரவு அலையின் குடி­ச­ன­வியல் பண்­புகள் (Demographic Features) எவை, புதி­தாக ஜேவிபி ஆத­ர­வா­ளர்­க­ளாக சேர்ந்­தி­ருக்கும் பல இலட்சக் கணக்­கா­ன­வர்கள் எங்­கி­ருந்து வந்­தார்கள், இந்த முடிவை நோக்கி அவர்­களைத் தள்­ளிய சமூக, உள­வியல் கார­ணிகள் எவை போன்ற கேள்­வி­க­ளுக்கு விடை­களை கண்­டு­பி­டிப்­ப­தற்கு நாங்கள் 2004 வரைக்கும் பின்­நோக்கிச் செல்ல வேண்டும்.

2004 பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஜாதிக ஹெல உரு­மய (JHU) கட்சி சார்பில் மேல் மாகா­ணத்தில் போட்­டி­யிட்ட வேட்­பா­ளர்­களில் 9 பேர் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வா­னார்கள். அவர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் புத்த பிக்­குகள். விடு­தலைப் புலி­க­ளு­ட­னான போரை சந்­தி­ரிகா – மங்­கள அர­சாங்கம் கையாண்ட விதம் குறித்து கடும் விரக்தி நிலையில் இருந்து வந்த தீவிர சிங்­கள -பௌத்த உணர்­வா­ளர்­களின் ஒரு பிரி­வி­னரே இவ்­விதம் திடீர் JHU ஆத­ர­வா­ளர்­க­ளாக மாறி­யி­ருந்­தார்கள். அவர்­களை அவ்­விதம் அணி திரட்­டு­வதில் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க முதன்­மை­யான ஒரு பாத்­தி­ரத்தை வகித்­தி­ருந்தார். கங்­கொ­ட­வில சோம தேரர் உரு­வாக்­கிய பௌத்த எழுச்சி அலை­யினால் தூண்­டப்­பட்­டி­ருந்த ஒரு பிரி­வி­னரின் இன உணர்­வு­களை அச்­சந்­தர்ப்­பத்தில் ரண­வக்க மிகவும் சாதுர்­ய­மாக தனக்கு சாத­க­மான விதத்தில் பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருந்தார்.

இந்தச் சமூகப் பிரி­வினர் மேல் மாகா­ணத்தில் – குறிப்­பாக கொழும்பு மற்றும் கம்­பஹா மாவட்­டங்­களில் – செறிந்து வாழ்ந்து வரு­கி­றார்கள். 1980 களில் உரு­வா­கிய தொழில் வாய்ப்­புக்­களைப் பெற்று, வெளி மாகா­ணங்­க­ளி­லி­ருந்து வந்து கொழும்பு புற நகர் பகு­தி­களில் குடி­யே­றி­ய­வர்கள். ஜே.ஆர். அறி­முகம் செய்து வைத்த திறந்த பொரு­ளா­தார கொள்­கையின் மூலம் பய­ன­டைந்த முதல் தலை­மு­றை­யினர் கிட்­டத்­தட்ட இரண்டு இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட வாக்­கா­ளர்­களைக் கொண்­டி­ருக்கும் கெஸ்­பாவ, கடு­வெல, கோட்டே, மக­ர­கம, ஹோமா­கம போன்ற கொழும்பு மாவட்­டத்தைச் சேர்ந்த தேர்தல் தொகு­தி­களில் இந்த வகுப்­பி­னரின் பிர­சன்னம் அதிகம்.

சிங்­கள மத்­திய தர வரக்­கத்தின் ஒரு புதிய பிரி­வி­னரின் எழுச்­சி­யாக (Sociological Phenomenon) அப்­பொ­ழுது அது பார்க்­கப்­பட்­டது. கொழும்பு மாவட்­டத்தில் கெஸ்­பாவ மற்றும் மக­ர­கம போன்ற தொகு­தி­களில் வாக்­கு­களின் அடிப்­ப­டையில் யூஎன்­பியை மூன்­றா­வது இடத்­திற்கு தள்­ளி­விட்டு, JHU இரண்­டா­வது இடத்தை பிடித்துக் பிடித்துக் கொள்ளும் அள­வுக்கு அப்­போ­தைய சிங்­கள பௌத்த அலை வலு­வா­ன­தாக இருந்து வந்­தது. இதே­போல கம்­பஹா மற்றும் களுத்­துறை ஆகிய மாவட்­டங்­க­ளிலும் JHU கணி­ச­மான அள­வி­லான வாக்­கு­களை பெற்றுக் கொண்­டி­ருந்­தது.

அதன் பின்னர் இந்தப் பிரி­வினர் 21 ஆம் நூற்­றாண்டு சிங்­கள பெருந் தேசி­ய­வா­தத்தின் ‘Trendsetter’ களாக உரு­வா­கி­ய­துடன், அவர்கள் தூண்­டி­விட்ட அந்த உணர்வு சிங்­கள சமூகம் நெடு­கிலும் மிக வேக­மாக பர­வி­யது. 2010, 2019 ஜனா­தி­பதி தேர்­தல்­களில் முறையே மஹிந்­த­வுக்கும், கோட்­டா­ப­ய­வுக்கும் இப்­பி­ரி­வி­னரே அமோக ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தார்கள்.
2022 பொரு­ளா­தார நெருக்­க­டியின் போது எரி­பொருள் மற்றும் எரி­வாயு தட்­டுப்­பா­டுகள் போன்ற பிரச்­சி­னைகள் அவர்கள் இது­வ­ரையில் அனு­ப­வித்து வந்த ‘Comfort Zone’ இலி­ருந்து அவர்­களை வெளியில் எடுத்து வந்­தன. அந்த நிலையில், ராஜ­பக்­ச­களை ஆத­ரித்த அதே அளவு தீவி­ரத்­துடன் அவர்­களை எதிர்க்­கவும் தொடங்­கி­னார்கள்.

சுருக்­க­மாகச் சொன்னால் 2019 இல் கோட்­டா­பய ராஜ­பக்­ச­வுக்கு ஆத­ரவு வழங்­கிய படித்த சிங்­கள நடுத்­தர வர்க்­கத்தை சேர்ந்­த­வர்கள் பல இலட்­சக்­க­ணக்கில் இப்­பொ­ழுது திசை­காட்­டியின் பக்கம் வந்­தி­ருக்­கி­றார்கள்.

இந்த அலை ‘கம்­யூனிஸ்ட் / சோஷ­லிச ஆத­ரவு அலை அல்ல’. என்­பதை முதலில் சொல்ல வேண்டும். அநுர குமா­ரவும், அந்த அணியின் ஏனைய தலை­வர்­களும் (குறிப்­பாக லால் காந்த போன்­ற­வர்கள்) அதனை நன்கு அறிந்து வைத்­தி­ருக்­கி­றார்கள். ஜேவிபி / என்­பிபி மேடையில் கழுத்­துப்­பட்டி அணிந்த கன­வான்கள் ஏராளம் பேர் உட்­கார்ந்­தி­ருக்கும் காட்சி மற்­றொரு சுவா­ரஸ்யம். யுஎன்பி மற்றும் லங்கா சுதந்­திர கட்சி போன்ற பாரம்­ப­ரிய கட்­சி­களின் பிரச்­சார மேடை­களில் கூட முன்னர் அந்த மாதி­ரி­யான காட்­சிகள் தென்­ப­ட­வில்லை. கட்­சிக்கு ஒரு கண்­ணி­ய­மான, மத்­திய தர வர்க்க முகத்­தோற்­றத்தை முன்­வைக்க வேண்­டிய நிர்ப்­பந்­தத்தின் குறி­யீடு அது. ஒரு பெரும்­போக்கு அர­சியல் கட்­சி­யாக (Mainstream Political Party) மாற்­ற­ம­டை­வ­தற்கு ஜேவிபி செலுத்­தி­யி­ருக்கும் விலையே என்­பிபி அணியின் இணைப்பு.

1971 மற்றும் 1987 – 1989 ஜேவிபி கிளர்ச்­சி­களின் போது நில­விய இலங்கை சமூகம் – குறிப்­பாக சிங்­கள சமூகம் – இப்­பொ­ழுது பெரும் மாற்­றங்­களை எதிர்­கொண்­டி­ருக்­கின்­றது. நகர்ப்­பு­றங்­க­ளிலும், கிராமப் புறங்­க­ளிலும் புதிய மத்­திய தர வர்க்­கத்­தினர் எழுச்­சி­ய­டைந்­தி­ருக்­கி­றார்கள். இன்­றைய இலங்­கையின் நுகர்வு கலா­சா­ரத்தின் பிர­மாண்­மான வளர்ச்­சியின் பின்­ன­ணியில் இருந்து வரு­ப­வர்கள் அவர்கள். முன்­னைய தலை­மு­றை­க­ளிலும் பார்க்க முற்­றிலும் வேறு­பட்ட அபி­லா­ஷை­களை கொண்­டி­ருப்­ப­வர்கள்.

இலங்கை பொது சமூ­கத்தில் 2022 இன் பின்னர் ஓங்கி ஒலித்து வரும் -‘உட­ன­டி­யாக எமக்­கொரு System Change தேவை’, ‘225 பேரையும் துரத்­தி­ய­டிப்போம்’ போன்ற கோஷங்­களை இச்­ச­மூகப் பிரி­வி­னரே கையில் எடுத்­தி­ருக்­கி­றார்கள். காலி­மு­கத்­திடல் அற­க­லய பூமியில் குமார் குண­ரத்­னத்தின் ‘பெரட்­டு­காமி’ கட்­சி­யினால் முன்­வைக்­கப்­பட்ட சுலோ­கங்கள் அவை. ஒரு விதத்தில், தீவிர கம்­யூ­னிஸ்­டுகள் காண விழையும் சமூக மாற்­றத்தை வலி­யு­றுத்­து­பவை. ஆனால், இன்­றைய இலங்­கையில் அச்­சு­லோ­கங்கள் அதே அர்த்­தத்தில் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பதை இங்கு முக்­கி­ய­மாக சுட்டிக் காட்ட வேண்டும்.

இந்தக் கோஷங்­களை முன்­வைத்து வரு­ப­வர்கள் எதிர்­பார்க்கும் உண்­மை­யான ‘System Change’ எது? இன்­றைய ஊழல் அர­சி­யல்­வா­தி­களை பிர­தி­யீடு செய்யும் பொருட்டு எந்த வகை­யான மக்கள் பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­பட வேண்டும் என அவர்கள் எதிர்­பார்க்­கி­றார்கள்? அவர்­க­ளு­டைய ஆதர்ச புர்­ஷர்கள் யார்?

தனது முறை வரும் வரையில் பொறு­மை­யுடன் கியூ வரி­சையில் காத்­தி­ருக்கும் ஒரு ஜனா­தி­பதி. போக்­கு­வ­ரத்து விதி மீற­லொன்றை இழைத்து விட்டு அதற்கு அப­ராதம் செலுத்தும் ஒரு பிர­தம மந்­திரி. தனது பிள்­ளையை பொறுப்­புடன் பள்­ளிக்கு அழைத்துச் செல்லும் தந்­தை­யான ஒரு அரச தலைவர் போன்­ற­வர்­களை காட்டும் காணொ­ளி­களை புதிய தலை­மு­றை­யினர் பிர­மிப்­புடன் பார்க்­கி­றார்கள். தமது ஆதர்­சங்­க­ளாக அவர்­களை கொண்­டாடி வரு­கி­றார்கள்.
ஆனால், மேற்­படி உதா­ர­ணங்கள் அனைத்தும் லிபரல் ஜன­நா­யக நாடு­க­ளி­லி­ருந்து எடுக்­கப்­பட்­டவை என்­பது தான் இங்­குள்ள சுவா­ரஸ்யம்.

ஊழல், முறை­கே­டுகள் இல்­லாத எவ­ருக்கும் பார­பட்சம் காட்­டாத அரச நிர்­வாக கட்­ட­மைப்­புக்­க­ளுக்­கான ஆதர்­சங்­க­ளா­கவும் இந்த மேலைய லிபரல் ஜன­நா­யக நாடு­க­ளையே இவர்கள் சுட்டிக் காட்­டு­கி­றார்கள்.

“நான் சுதந்­தி­ரத்­திற்கு முன்னர் பிறந்­தவன். வாழ்நாள் முழு­வதும் ஒரு தேசா­பி­மா­னி­யா­கவே இருந்­தி­ருக்­கிறேன். எனது வாழ்க்­கையின் முதல் 75 ஆண்­டு­களை இந்த மண்­ணி­லேயே கழித்தேன். ஆனால், இங்கு வாழ முடி­யாத நிலையில் சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் எனது பிள்­ளைகள் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு குடி­பெ­யர்ந்­தார்கள். அவர்­க­ளு­டைய வற்­பு­றுத்­தலின் பேரில் பின்னர் நானும் அங்கு சென்றேன். இரு நாடு­க­ளையும் ஒப்­பிட்டு பார்க்கும் பொழுது தான் நாங்கள் எந்த அள­வுக்கு சீர­ழிந்­த­வர்­க­ளாக இருந்து வரு­கிறோம் என்­பதை புரிந்து கொள்ள முடி­கி­றது” என்­கிறார் 1971 ஜேவிபி கிளர்ச்­சியில் சம்­பந்­தப்­பட்­டி­ருந்த ஒரு முன்­னணி சிங்­கள நாடகக் கலைஞர்.

மேற்­படி கூற்று இன்று ஜேவிபி / என்­பிபி அணியின் பின்னால் திரண்­டி­ருக்கும் சிங்­கள மத்­திய தர வர்க்­கத்­தி­னரின் மதிப்­பீ­டுகள் மற்றும் எதிர்­பார்ப்­புக்கள் என்­ப­வற்றின் துல்­லி­ய­மான ஒரு பிர­தி­ப­லிப்பு எனச் சொல்லலாம்.

சரி­யாகச் சொன்னால் இலங்­கையின் பொரு­ளா­தார கட்­ட­மைப்பில் அவர்கள் ஒரு தலைகீழ் மாற்­றத்தை எதிர்­பார்க்­க­வில்லை. இவர்­களில் கணி­ச­மான எண்­ணிக்­கை­யினர் நவ லிபரல் பொரு­ளா­தா­ரத்தின் ஆத­ர­வா­ளர்கள். ஆகவே, இந்தப் பின்­ன­ணியில், அவர்­க­ளு­டைய எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்றி வைக்கும் விட­யத்­திலும், அவர்­களை தமது அணிக்குள் தக்க வைத்துக் கொள்ளும் விட­யத்­திலும் ஒரு எதிர்­கால ஜேவிபி / என்­பிபி அர­சாங்கம் கடும் சவால்­களை எதிர்­நோக்க வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

(வெற்றியின் பின்னர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்னவாக இருந்து வந்த போதிலும்) ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார வெற்றியீட்டினால் அது சுதந்திரத்திற்கு பிற்பட்ட இலங்கை அரசியலில் ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய மாற்றமாக (Paradigm Shift) வரலாற்றில் பதிவு செய்யப்படும். மறுபுறத்தில், ஜேவிபி/என்பிபி வேட்பாளர் தோற்றாலும் கூட, அதனை அந்த அணி எதிர்கொண்ட ஒரு பின்னடைவாக கருத வேண்டியதில்லை. ஏனென்றால், வாக்குகளின் அடிப்படையில் அது நிச்சயமாக நாட்டின் ஒரு முக்கிய அரசியல் கட்சியாக எழுச்சியடைந்திருக்கும். அந்த மாற்றமும் இலங்கை அரசியலுக்கு இதுவரையில் இல்லாத ஒரு புதிய இயங்கியலை (Dynamics) எடுத்து வர முடியும்.- Vidivelli

https://www.vidivelli.lk/article/17705

யாழ் மறை மாவட்ட ஆயருடன் நாமல் சந்திப்பு!

3 months 1 week ago
WhatsApp-Image-2024-09-12-at-12.43.59-PM யாழ் மறை மாவட்ட ஆயருடன் நாமல் சந்திப்பு!

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கும் யாழ் மறை மாவட்ட ஆயரிற்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது.

யாழ் மறை மாவட்ட ஆயருடனான சந்திப்பில் நாமல் ராஜபக்ச மற்றும் அவர் தரப்பை சார்ந்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் 15 நிமிடங்கள் குறித்த சந்திப்பு இடம் பெற்றது.

https://athavannews.com/2024/1399120

புலம்பெயர் தொழிலாளர்களினால் அனுப்பப்படும் பணத்தொகையின் வீதம் அதிகரிப்பு!

3 months 1 week ago
புலம்பெயர் தொழிலாளர்களினால் அனுப்பப்படும் பணத்தொகையின் வீதம் அதிகரிப்பு! புலம்பெயர் தொழிலாளர்களினால் அனுப்பப்படும் பணத்தொகையின் வீதம் அதிகரிப்பு!

கடந்த 2023 ஆம் ஆண்டு  ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஓகஸ்ட் மாதத்தில் புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களினால் நாட்டுக்கு அனுப்பட்ட பணம் 11 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதன்படி, கடந்த ஓகஸ்ட் மாதம் புலம்பெயர் தொழிலாளர்களினால் மொத்தம் 577.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் நாட்டிற்கு 12.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டுள்ளன.

இதனிடையே, உத்தியோகபூர்வ பணம் அனுப்பும் முறைகளைப் பயன்படுத்தும் தொழிலாளர்களுக்கு மின்சார வாகன கொள்வனவில் குறைந்த வட்டி கடன் போன்ற சலுகைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1399134

தமிழர்களுக்கு நடந்த அநீதிகளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதற்கு ஒரே வழி பொதுவேட்பாளர் என்கிறார் அருட்தந்தை ஜோச்மேரி

3 months 1 week ago

இந்த நாட்டில் தமிழர்கள் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லப்படுகின்றார்கள். இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதற்கு இன்று எமக்குள்ள ஒரே வழி பொதுவேட்பாளராகும். வேறு யாருக்கும் வாக்களிப்பதன் மூலம் அதனை அடையமுடியாது என மட்டக்களப்பு மாவட்ட ஜேசு சபை துறவி அருட்தந்தை ஜோச்மேரி தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த நாட்டில் தமிழர்கள் அழிக்கப்பட்டுவருகின்றார்கள். இதனை வெளியுலகுக்கு கொண்டுசெல்லவேண்டும்.

நாங்கள் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதனால் எமது பிரச்சினையை கொண்டுசெல்லமுடியாது.

அதனால் பொதுவேட்பாளராக அரியநேத்திரன் நிறுத்தப்பட்டுள்ளார். இது நல்ல சந்தர்ப்பம். இதனை நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.

https://thinakkural.lk/article/309310

Checked
Sun, 12/22/2024 - 16:01
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr