ஊர்ப்புதினம்

தொடர்ந்தும் அனுர முன்னிலையில்; சுகாதார கொள்கை நிறுவகத்தின் புதிய கருத்துக்கணிப்பு

3 months 1 week ago
தொடர்ந்தும் அனுர முன்னிலையில்; இரண்டாவது மூன்றாவது விருப்பு வாக்குகளே முடிவை தீர்மானிக்கலாம்; சுகாதார கொள்கை நிறுவகத்தின் புதிய கருத்துக்கணிப்பு

Published By: RAJEEBAN   12 SEP, 2024 | 11:27 AM

image
 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு அதிகளவு ஆதரவு தொடர்ந்தும் காணப்படுவதையும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கான ஆதரவு அதிகரித்து வருவதையும் காண்பிக்கும் கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.

சுகாதார கொள்கைகள் நிறுவகம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் போது இது தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு மக்கள் வாக்களிக்க எண்ணியுள்ளனர் என்பது குறித்து ஆகஸ்ட் மாதம் ஐஎச்பி மேற்கொண்ட கருத்துக்கணிப்பின்போது தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவும் தொடர்ந்து முன்னிலையில் உள்ளமை தெரியவந்துள்ளது.

 

PEVI_01_20240911_E.png

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருக்கு 36 வீத ஆதரவு காணப்படுகின்றது,ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருக்கு 32 வீத ஆதரவு காணப்படுகின்றது,ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு 28 வீத ஆதரவு காணப்படுகின்றது .

ரணில்விக்கிரமசிங்கவிற்கான ஆதரவு மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் அதிகரித்து வந்துள்ளது.ஏனைய வேட்பாளர்களிற்கான ஆதரவு சிறிதளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

எங்களின் ஆகஸ்ட் மாத கருத்துக்கணிப்பு போட்டிகடுமையானதாக காணப்படுவதை வெளிப்படுத்தியுள்ளது, எந்த வேட்பாளரும் அரைவாசி வாக்குகளை கூட பெறமாட்டார்கள் என ஐஎச்பியின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி ரவி ரண்ணன் எலிய தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துகணிப்பு எந்த வேட்பாளரும் பெரும்பான்மையான வாக்காளர்களின் மனதை கவராததை புலப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள அவர் 2024ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலே இரண்டாவது மூன்றாவது விருப்புவாக்குகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் இலங்கையின் முதலாவது ஜனாதிபதி தேர்தலாக அமையலாம் என தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வாக்கும் அதன் முக்கியத்துவத்தை பெறுவதற்காக வாக்காளர்களிற்கு அறிவுறுத்தும் செயற்பாடுகளில் தேர்தல்கள் ஆணைக்குழுவும் சிவில் சமூகமும் ஈடுபடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/193472

வவுனியாவில் அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு!

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3   12 SEP, 2024 | 10:47 AM

image
 

தமது ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை போக்குவரத்துசபையின் வவுனியா வீதி ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை (12) பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை (11) வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் இருந்த அரச பேருந்தின் நடத்துனர் மற்றும் ஊழியர்கள் மீது வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்தின் ஊழியர்கள் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தால் அரச  பேருந்துத்தரப்பினை சேர்ந்த ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்டவர்களை கைதுசெய்யுமாறு தெரிவித்து போக்குவரத்துச்சபையின் வவுனியா வீதி ஊழியர்கள் இன்றையதினம் காலை முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, தமது கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் வட மாகாணரீதியாக பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

குறித்த நடவடிக்கை காரணமாக பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

IMG_20240912_073932.jpg

IMG_20240912_071542.jpg

IMG_20240912_071542.jpg

https://www.virakesari.lk/article/193458

நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலரை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்க அனுமதி

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3

12 SEP, 2024 | 09:44 AM
image

இலங்கையின் நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

இதன் மூலம்  காலநிலை மாற்றத்தினால் நீர்வளத்துக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

100 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியில்  நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத்  திட்டம் இரண்டு துணைத் திட்டங்களை கொண்டுள்ளது. 

முதலாவது திட்டம்  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு  தேசிய கொள்கைகள் மற்றும் உத்திகளை நிறுவும்.  இரண்டாவது திட்டம் மேம்படுத்தல் நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை செயல்படுத்துவதை ஆதரிக்கும்  என தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/193456

கடவுச்சீட்டு, விசா விவகாரத்திலுள்ள தாமதத்திற்கான காரணத்தை வெளியிட்டார் திரான் அலஸ்

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 7

12 SEP, 2024 | 08:56 AM
image
 

கடந்த இருபத்தைந்து வருடங்களாக 11 மில்லியன் கடவுச்சீட்டுகள் ஒரே நிறுவனத்தினால் 5.89 டொலர்களுக்கு எவ்வித டெண்டரும் இன்றி அச்சிடப்பட்டுள்ளதாகவும், அதற்கும் குறைவான விலைக்கு பெற்றுக்கொள்ள முடியும் என்பதாலேயே இம்முறை டெண்டர் கோரப்பட்டதாகவும் அமைச்சர் திரன் அலஸ்  தெரிவித்துள்ளார். மேலும் 5.06 டொலர்களுக்கு இ-பாஸ்போர்ட் பெற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு நேற்று புதன்கிழமை  (11) சென்ற அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரையாற்றிய,அமைச்சர்.

கடவுச்சீட்டு , விசா விவகாரம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசியல் ஆதாயம் அடைய காரணமாக அமைந்தது. சஜித் பிரேமதாச, தான் ஆட்சிக்கு வந்ததும் அதில் தொடர்புடையவர்களை தண்டிப்பேன் என்கிறார். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவதை நாங்களும் விரும்புகிறோம்.

ஆனால் உண்மை தெரியாமல் பேசுகிறார். கடவுச்சீட்டு பெறுவதற்கு  தரகர்  மாஃபியா 50,000 ரூபாய் முதல் பல்வேறு தொகைகளை வசூலித்ததாக அறிந்தோம்.

ஆனால் தற்போது அவை அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடிவரவு அலுவலகம் அருகிலும் ஒரு சிறப்பு பொலிஸார் குழு பணியில்  உள்ளது.

இப்போது வரிசைகள் இல்லை. இருபத்து  இரண்டு வருடங்களாக ஒரே நிறுவனத்தால் பாஸ்போர்ட் அச்சிடப்பட்டது. குறைந்தபட்சம் டெண்டர் கூட கோரப்படவில்லை. அவர்கள் இதுவரை 11 மில்லியன் பாஸ்போர்ட்டுகளை அச்சிட்டுள்ளனர்.

இம்முறை அதே நபர்களிடம் கொடுக்கச் சென்றபோது அதை நிறுத்திவிட்டு  டெண்டர் கோரச் சொன்னேன். புதிய கடவுச்சீட்டு கிடைக்கும் வரை சில தட்டுப்பாடு உள்ளது. கிடைப்பதை நிர்வகித்தல் வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வெளிநாடு செல்வதற்கு எனக்கு விசா பெற வேண்டிய அவசியம் இல்லை. உலகின் எந்த நாட்டிலும் 10 ஆண்டுகள் வாழ எனக்கு சிறப்பு விசா உள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் தொடர்புடைய 80 அமைச்சர்கள் வெளிநாடு செல்வதற்கான வீசாவைப் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.  இது மிகவும் தவறான கூற்று என்று நான் நினைக்கிறேன்.

தேர்தல் காலத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொல்கிறார்கள். எந்த அமைச்சர்களுக்கும் விசா கிடைத்ததா என்று தெரியவில்லை. ஆனால் நான் அப்படி விசா எடுக்கவில்லை. அப்படி யாரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லை.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் வெற்றி பெறுவார். இதில் சந்தேகமில்லை. அரசாங்க அமைச்சர்களாகிய நாம் அரசாங்கத்தின் தலைவருக்கு ஆதரவளிக்க வேண்டும்.

இந்த நாடு தற்போது ஓரளவு மீண்டுள்ளது. நாட்டை முழுமையாகக் கட்டியெழுப்ப தற்போதைய ஜனாதிபதிக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். இது பரிசோதனைக்கான நேரம் அல்ல. நீங்கள் உங்கள்  மனதினால் சிந்திப்பதைவிட்டும் மூளையால் சிந்தித்து  செயல்பட வேண்டும்  

இதுவரை நீதியின் செயல்பாடு ஏதோ ஒரு வகையில் தடைபட்டுள்ளது. போதைப்பொருள் பணம் பலரது கைகளில் சிக்கியுள்ளது.

அவர்கள் தான் பொலிஸ்மா அதிபரை    சுற்றி வளைத்து அடிக்கிறார்கள்.  யுக்திய செயல்பாடுதான் அதற்குக் காரணம். இந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் யுக்திய  செயற்பாடு இரட்டிப்பாக்கப்பட்டு கடுமையாக நடைமுறைப் படுத்தப்படும். 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தல் 100% இல்லாவிட்டாலும் 90% கட்டுப்படுத்தப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/193453

தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு!

3 months 1 week ago

தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு!
September 12, 2024
Applications-for-postal-voting-1-696x390

செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றவர்கள் வாக்களிப்பதற்கு
இன்றே கடைசி சந்தர்ப்பம் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 4, 5, 6ஆம் திகதிகளில் நடைபெற்றது. அன்றைய தினங்களில் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு நேற்றும் இன்றும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இன்றைய தினமும் வாக்களிக்கத் தவறுபவர்களுக்கு இனி சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
எனவே, தபால் மூலம் வாக்களிக்கத்தகுதி பெற்றவர்கள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் வாக்கை செலுத்தமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://eelanadu.lk/தபால்-மூல-வாக்களிப்பு-இன-2/

கூட்டுத் தலைமையை உருவாக்குவதற்காகவே பொதுவேட்பாளர்

3 months 1 week ago
பொதுவேட்பாளரின் சின்னமான சங்கிற்கு மட்டும் புள்ளடியிடுங்கள்: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

கூட்டுத்தலைமையை உருவாக்குவதற்காகவே ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர். எனவே, பொதுவேட்பாளரின் சின்னமான சங்கிற்கு மட்டும் புள்ளடியிடுங்கள் என இரானியேல் செல்வின் தெரிவித்துள்ளார். 

வடமராட்சியில், தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும்,"சிங்கள தலைவர்களையும், கட்சிகளையும் நாம் ஒரு தரப்பினராகவே பார்க்க வேண்டும். அத்துடன், தமிழ் மக்கள் அனைவரும் ஒரு தரப்பினராக இணைய வேண்டும். 

இவ்வாறு ஒன்றிணைந்து, பலமுள்ள மக்களாக நாம் பேசுவோம். அடிமைத்தனம் என்று எங்கள் மனங்களில் ஊறிப் போயுள்ள விடயங்களை உடைத்தெறிவோம்" என வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை,  தமிழ் மக்கள் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து பொதுவேட்பாளருக்கு வாக்களிப்போம் என கூறிய அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

https://www.facebook.com/100042065541571/videos/859387266158952/?

https://tamilwin.com/article/tamil-general-candidate-prapoganda-jaffna-1726065769#google_vignette

 

இராணுவத்தின் உரிமை பற்றி பேச ரணில், அனுர, சஜித்துக்கு உரிமையில்லை - சரத் வீரசேகர

3 months 1 week ago
11 SEP, 2024 | 09:27 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இராணுவத்தினரின் கௌரவம் மற்றும் உரிமைகளை பொதுஜன பெரமுனவினால் மாத்திரமே பாதுகாக்க முடியும். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ரணில், அனுர, சஜித் ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். 13க்கு ஒருபோதும் இடமில்லை என்று நாமல் ராஜபக்ஷ மாத்திரமே குறிப்பிடுகிறார். நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க விரும்புபவர்கள் பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொஸ்கம பகுதியில் புதன்கிழமை (11) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 92 பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் கொள்கை மற்றும் தீர்மானத்துக்கு எதிராக ஜனாதிபதியின் பக்கம் சென்றுள்ளார்கள். குறுகிய நோக்கங்களுக்காக நாங்கள் கட்சியை விட்டுச் செல்லவில்லை.

பெரும்பான்மையானவர்கள் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு நிச்சயம் வாக்களிப்பார்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இவர்களுக்கு ஏன் வாக்களிக்கக்கூடாது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த மூன்று வேட்பாளர்கள் இராணுவத்தினரது உரிமைகளை  பாதுகாப்பதாக குறிப்பிடுகிறார்கள். 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினரை நல்லாட்சி அரசாங்கமே சர்வதேசத்துக்கு காட்டிக் கொடுத்தது. இதற்கு ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார ஆகியோர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

இராணுவத்தினரது உரிமைகள் பற்றி பேசுவதற்கு ரணில், சஜித், அனுர ஆகியோருக்கு தார்மீக உரிமை கிடையாது. இவர்களின் அரசியல் மேடைகளுக்குச் செல்லும் இராணுவத்தினர் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும்.

யுத்த காலத்தில் வடக்கு மாகாணத்துக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் விநியோகத்தை வேண்டுமென்றே இடைநிறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றது. யுத்த சூழலிலும் வடக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றினோம்.

இராணுவத்தினர் யுத்தக் குற்றச்சாட்டுக்களில் ஈடுபடவில்லை என்பதை எடுத்துரைக்கும் வகையில் தான் கோட்டாபய ராஜபக்ஷ 30- 1 தீர்மானத்துக்கு இணையணுசரனை வழங்குவதில் இருந்து விலகினார். இராணுவத்தினரின் கௌரவம் மற்றும் உரிமைகளை பொதுஜன பெரமுனவினால் மாத்திரமே பாதுகாக்க முடியும்.

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காகவே இராணுவத்தினர்  தமது உயிரை நாட்டுக்காக தியாகம் செய்தார்கள். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கக்கூடாது என்பதை கடுமையாக குறிப்பிட்டார்கள். இராணுவத்தினரது அர்ப்பணிப்புக்கு உரிய மதிப்பளிக்கப்படுகிறதா?

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ரணில், அனுர, சஜித் ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். 13க்கு ஒருபோதும் இடமில்லை என்று நாமல் ராஜபக்ஷ மாத்திரமே குறிப்பிடுகிறார். நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க விரும்புபவர்கள் பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்க வேண்டும். பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்க முடியாது என்று குறிப்பிடும் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு பெரும்பான்மையினர் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/193415

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவில் கலந்துகொண்டோரின் கவனத்துக்கு

3 months 1 week ago

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவின் போது பக்தர்களால் தவறவிடப்பட்ட பொருட்கள் யாழ். மாநகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கை சங்கிலி – 1, மோதிரம் -1, பணப்பைகள் – 9, கைக்கடிகாரங்கள் – 18, தேசிய அடையாள அட்டைகள் – 4, சாரதி அனுமதிப்பத்திரம் – 4, வங்கி அட்டைகள் – 4, திறப்புகள் – 39 ஆகிய பொருட்களே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டன.

இவற்றை உரிமையாளர்கள் உரிய ஆதாரங்களை காட்டி மாநகர சபை நிர்வாகக் கிளையில் அலுவலக நேரத்தில் அக்டோபர் 10 ஆம் திகதி வியாழக்கிழமை வரை பெற்றுக் கொள்ளலாம் என்று யாழ். மாநகரசபை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/309271

யாழ்ப்பாணத்தில் கூறப்படும் விடயங்களைக் கேட்டு அழிவை நோக்கிச் செல்ல முடியாது - சிவனேசதுறை சந்திரகாந்தன்

3 months 1 week ago

Published By: VISHNU   11 SEP, 2024 | 08:54 PM

image

(எம்.மனோசித்ரா)

யாழ்ப்பாணத்தில் கூறப்படும் விடயங்களைக் கேட்டு அழிவை நோக்கிச் செல்ல முடியாது. அவர்களது பிரிவினைவாத கருத்துக்களைப் பின்பற்றினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. வடக்கு, கிழக்கில் நீண்ட காலமாக புரையோடிப் போயுள்ள உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்தில் புதன்கிழமை (11) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியல் என்பது மக்களின் ஆணையூடாக ஆணையைப் பிடிப்பதாகும். இலங்கையில் நிறைவேற்றுத்துறையின் அதிகாரம் என்பது சிறுபான்மை மக்களுக்கு இன்றியமைதா ஒன்றாகும். அந்த வகையில் கிழக்கு மக்களின் முழு நம்பிக்கையையும் வென்ற தலைவராக ரணில் விக்கிரமசிங்கவை வெற்றி பெறச் செய்வதற்கு நாம் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறையில் மிகப் பிரம்மாண்டமான கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும் அம்பாறையில் தமிழ் பிரதேசங்களில் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் எனத் தீர்மானித்து கல்முனை மற்றும் திருக்கோவில் பிரதேசங்களில் இரு வேறு கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

நாட்டு மக்கள் மிகுந்த துயரத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே முன்வந்தார். அதற்கு செலுத்தும் நன்றிக் கடனாக நாம் மீண்டும் மக்கள் ஆணையை அவருக்கு வழங்க வேண்டும். அம்பாறை தமிழ் மக்கள் நிச்சயம் ரணில் விக்கிரமசிங்கவுக்கே வழங்குவார்கள்..

இதனைப் பயன்படுத்திக் கொண்டு அம்பாறையின் அபிவிருத்தியில் மக்கள் பங்காளர்களாக வேண்டும். வடக்கு, கிழக்கில் நீண்ட காலமாக புரையோடிப் போயுள்ள உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கின்றார். விரைவில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுவதோடு, அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கின்றார்.

குறிப்பாக காணி சீர்திருத்த சட்டம் கூட அவரால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. எமக்கு தனிப்பட்ட அரசியல் நோக்கம் கிடையாது. பல்வேறு பொது பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

எனவே யாழ்ப்பாணத்தில் கூறப்படும் விடயங்களைக் கேட்டு அழிவை நோக்கிச் செல்லப் போகின்றோமா அல்லது அனைவரும் இணைந்து கிழக்கு மாகாணத்துக்கான அதிகாரத்தையும், அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறைக்கு தமிழ் அமைச்சரொருவரையும் பெற்றுக் கொள்ளப் போகின்றோமா? எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்று தீர்மானிக்க முடியாமல் வடக்கில் பிளவடைந்து காணப்படுபவர்களின் தீர்மானங்கள் பயனற்றவை என்றார்.

https://www.virakesari.lk/article/193442

பொது வேட்பாளருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்; தமிழகத்திலிருந்து வெளியாகியிருக்கும் செய்தி

3 months 1 week ago

தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்க வேண்டும் என்பதை ஓர் அறைகூவலாக விடுக்கின்றேன் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

இலங்கையில் வருகிற செப்டமர் 21ஆம் நாள் நடக்கவுள்ள குடியரசு தலைவருக்கான தேர்தலில் தமிழீழ மக்களின் விடுதலை, நீதிக்கான கோரிக்கைகளின் குறியீடாக பொது வேட்பாளர் ஒருவரைப் போட்டியிடுகின்றார்.

இதன் மூலம் உலகத்திற்கு தமிழ்த்தேசிய இனத்தின் இருப்பையும் விருப்பையும் அறிவிப்பது என்ற நோக்கில் அங்குள்ள விடுதலை ஆற்றல்கள் முன்முயற்சி எடுத்துள்ளன.

இதன் பொருட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்க வேண்டும் என்பதை ஓர் அறைகூவலாக விடுக்கின்றேன்.

இம்முயற்சிக்கு நமது ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று காலை 11 மணி அளவில் ஊடகச் சந்திப்புக்கு ஒழுங்கு செய்துள்ளோம் என்றார்.

https://thinakkural.lk/article/309273

38 நாடுகளின் பயணிகளுக்கு விசா சலுகை; எங்களுக்கு இல்லையா? - பாகிஸ்தான் போர்க்கொடி

3 months 1 week ago

Published By: Rajeeban

11 Sep, 2024 | 12:31 PM
 
 

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் தனது பிரஜைகளிற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து பாக்கிஸ்தான் சீற்றமடைந்துள்ளது .

இலங்கை அரசாங்கம் 38 நாடுகளின் பிரஜைகள் விசா இல்லாமல் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

எனினும் இந்த பட்டியலில் தனது நாடு இடம்பெறாதமை குறித்து பாக்கிஸ்தான் சீற்றமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாக்கிஸ்தானிற்கான இலங்கை தூதுவர் ரவீந்திரவிஜயகுணவர்த்தன ,இதனை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார் என பாக்கிஸ்தானையும் இந்த பட்டியலில் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாக்கிஸ்தான் பிரஜைகளிற்கான விசா வழங்கும் நடைமுறை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள இலங்கைக்கான பாக்கிஸ்தான் தூதுவர் N;மஜர் ஜெனரல் உல் அஜீஸ் இந்தியா உட்பட ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில்  இதனை மாற்றாந்தாய் மனப்பான்மை என வர்ணித்துள்ளார்.

பாக்கிஸ்தான்  பிரஜைகள் இலங்கைக்கு சுமூகமான விதத்தில் பயணம் செய்வதை உறுதி செய்வதற்காக  தற்போதைய நடைமுiறைய உடனடியாக மாற்றவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளர்ர்.

38 நாடுகளின் பயணிகளுக்கு விசா சலுகை; எங்களுக்கு இல்லையா? - பாகிஸ்தான் போர்க்கொடி | Virakesari.lk

தமிழக மீனவர்களின் படகை மோதி கவிழ்த்ததாக இலங்கை கடற்படை மீது குற்றச்சாட்டு

3 months 1 week ago
11 Sep, 2024 | 01:46 PM
image
 

நாகப்பட்டினம்: தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையினர் தங்களின் கப்பலை விட்டு மோதி படகை கவிழ்த்ததாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த தர்மன் என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில் கடந்த 9-ம் தேதியன்று அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல், தேவராஜ், கார்த்திகேயன், சதீஷ் ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில், நேற்று மாலை அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகின் மீது கடற்படை கப்பலைக் கொண்டு மோதியதாக கூறப்படுகிறது.

கப்பல் மோதியதில் தமிழக மீனவர்களின் ஃபைபர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் கடலில் காயங்களுடன் வலைகளில் சிக்கி மீனவர்கள் தத்தளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து மீனவர்களை தங்களது கப்பலில் ஏற்றிய இலங்கை கடற்படையினர், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை எதுவும் செய்யாமல் சுமார் 6 மணி நேரமாக அவர்களை மிரட்டி விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது, தங்கள் எல்லைக்குள் தான் மீன்பிடித்தோம் என தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை அதிகாரிகளிடம் கெஞ்சியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அங்கு வந்த சக தமிழக மீனவர்களிடம் செருதூர் மீனவர்களை ஒப்படைத்த இலங்கை கடற்படை அதிகாரிகள், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். அதன் பின்னர் சக மீனவர்களின் உதவியோடு நடுக்கடலில் கவிழ்ந்த தங்களது படகை மீட்ட நாகை மீனவர்கள் காயங்களுடன் இன்று (புதன்கிழமை) காலை கரை திரும்பியுள்ளனர்.

இலங்கை கடற்படை அதிகாரிகள் கப்பலை கொண்டு மோதியதில், படகில் இருந்த வலை, ஜிபிஎஸ் கருவி, செல்போன், மீன் பிடி தளவாட பொருட்கள் என ரூ.6.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கடலில் விழுந்து மூழ்கியதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

1309337__1_.jpg

இதனிடையே, செருதூர் மீன் இறங்குதளம் வந்து சேர்ந்த காயமடைந்த மீனவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்களும் இலங்கை கடற்படையினரும் மாறி மாறி தாக்குதல் நடத்திவருவது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்களின் படகை மோதி கவிழ்த்ததாக இலங்கை கடற்படை மீது குற்றச்சாட்டு | Virakesari.lk

வட்டுக்கோட்டையில் மகாகவி பாரதியார் வீதி திறப்பு!

3 months 1 week ago
11 Sep, 2024 | 05:36 PM
image
 

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் நினைவு தினமான இன்று (11) வட்டுக்கோட்டையில் பாரதி வீதி திறந்துவைக்கப்பட்டது. 

வட்டுக்கோட்டை தென்மேற்கு பகுதியில் இவ்வீதி அமைந்துள்ளது. 

விருந்தினர்கள் மங்கல இசை வாத்தியங்கள் முழங்க அழைத்துவரப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன் வீதி திறப்பு நிகழ்வு  ஆரம்பமானது. 

அடுத்து, விருந்தினர்களது  உரைகளை தொடர்ந்து வீதி திறக்கப்பட்டது.

யாழ். நண்பர்கள் அமைப்பின் தலைவர் கலாநிதி சிதம்பரமோகனின் தலைமையில் நடைபெற்ற இந்த வீதி திறப்பு நிகழ்வில் மறவன்புலவு சச்சிதானந்தம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். 

அத்துடன் மதகுருமார், வலி.மேற்கு பிரதேச செயலாளர் கவிதா உதயகுமார், வலி.மேற்கு பிரதேச சபை செயலாளர் சண்முகராஜா பாலரூபன், கிராம சேவையாளர் சிவபாலன் சிவகுமார், பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை, கலாநிதி கந்தையா சிவராஜா, Dr.MP.நடராஜா, வைத்தியசூரி செ.பரமசிவம்பிள்ளை, கா.கோபாலகிருஸ்ணன் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

IMG-20240911-WA0152.jpg

IMG-20240911-WA0153.jpg

 

 

IMG-20240911-WA0149.jpg

 

IMG-20240911-WA0144.jpg

IMG-20240911-WA0143.jpg

 

கவிழப்போகும் கப்பலில் ஏறி தற்கொலை செய்ய விரும்பவில்லை : இராஜாங்க அமைச்சு பதவி பறிபோனதிலும் கவலையில்லை - கீதா குமாரசிங்க!

3 months 1 week ago
image
 

 (எம்.மனோசித்ரா)

கவிழப்போகும் கப்பலில் ஏறி தற்கொலை செய்து கொள்ள நான் விரும்பவில்லை. சரியான பாதையில் பயணிப்பதற்காக எந்தவொரு தியாகத்துக்கும் நான் தயாராகவே இருக்கின்றேன்.  

எனவே இராஜாங்க அமைச்சு பதவி பறிபோனதில் கவலை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். 

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில்  புதன்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,  

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு நான் எடுத்த தீர்மானம் எனது சுய உரிமையாகும். எனது 14 வருட அரசியல் வாழ்வில் கட்சி தாவும் அரசியல் மற்றும் அடிமைத்தனமான அரசியலை நான் வெறுக்கின்றேன். எவ்வித சிறப்புரிமைகளையும் பெற்றுக் கொண்டதில்லை. எனவே நான் அரசாங்கத்துக்கு பயமில்லை. 

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தவறான தீர்மானத்தை எடுத்தால் நாடு பெரும் அழிவை எதிர்கொள்ளும். எனவே மக்கள் பிரதிநிதி என்ற ரீதியில் அவர்களுக்கு யதார்த்தத்தை உணர்த்த வேண்டியது எனது கடமையாகும். எனக்கு யாரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. இது நான் சிந்தித்து எடுத்த தீர்மானமாகும். 

ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக நான் வாக்களித்திருக்கின்றேன். ஆனால் அவர் என்னை இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியிருக்கின்றார். பதவிக்காக ரணிலுக்கு தேவையான தீர்மானத்தை தீர்மானத்தை என்னால் எடுக்க முடியாது. அதற்கான அவசியமும் இல்லை. சஜித் வெற்றி பெறுவார் என்பதால் தானே நீங்கள் அங்கு சென்றீர்கள் என்று என்னிடம் கேட்கின்றனர். அதுவே உண்மையாகும். 

கவிழப்போகும் கப்பலில் ஏறி தற்கொலை செய்து கொள்ள நான் விரும்பவில்லை. சரியான பாதையில் பயணிப்பதற்காக எந்தவொரு தியாகத்துக்கும் நான் தயாராகவே இருக்கின்றேன். எனவே இராஜாங்க அமைச்சு பதவி பறிபோனதில் கவலை இல்லை.

அரசியலுக்காகவே நான் சுவிட்ஸர்லாந்து குடியுரிமையையும் இழந்தேன். அதனால் எனக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. எனினும் அதனை விட நான் மக்களுக்கு சேவையாற்றுவதற்கே முன்னுரிமையளித்தேன் என்றார்.

கவிழப்போகும் கப்பலில் ஏறி தற்கொலை செய்ய விரும்பவில்லை : இராஜாங்க அமைச்சு பதவி பறிபோனதிலும் கவலையில்லை - கீதா குமாரசிங்க! | Virakesari.lk

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனின் பிரச்சார நடவடிக்கையில் அடிக்கடி இடையூறு

3 months 1 week ago

Published By: Vishnu

11 Sep, 2024 | 06:21 PM
image
 

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு செவ்வாய்க்கிழமை (10) அம்பாறை மாவட்டத்தில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் இம்முறை போட்டியிடும்  தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு நமக்காக நாம் எனும் தொனிப்பொருளில்    தேர்தல் பிரசாரத்தை   அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுத்திருந்தார்.

அவருடன் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா. நடராஜா உள்ளிட்டோரும் வருகை தந்திருந்தனர்.

முதலில் அம்பாறை மாவட்ட எல்லையில் உள்ள பெரிய நீலாவணையில் அரியநேத்திரனுக்குப் வரவேற்பளிக்கப்பட்டது.

தாயக செயலணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவருமான முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் பொன்னாடை போர்த்தி வரவேற்றார் .

ஏனைய தாயக செயலணி உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பு உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அங்கே முருகன் கோயிலில் சிறப்பு பூஜை இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து கல்முனை, காரைதீவு, அக்கரைப்பற்று போன்ற பகுதிகளிலும் தமிழ்ப் பொது வேட்பாளருக்குப் பெரு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இது தவிர தனது பிரச்சாரத்தை முன்னெடுத்த சந்தரப்பத்தில் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் அவருடன் முரண்பட்டதனை அவதானிக்க முடிந்தது.

தனது பிரச்சாரத்தை பெரியநீலாவனை முருகன் கோயில் முன்றலில் இருந்து  ஆரம்பித்த வேளை பூஜையில் ஈடுபட்டார்.

பின்னர் மற்றுமொரு பிரச்சார நடவடிக்கைக்காக செல்வதற்கு தயாராகி கொண்டிருக்கும் போது அங்கு வந்த  பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் விசேட அதிரடிப்படையினரின்  இடையூறினால் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

பின்னர் கல்முனை ஆர்.கே.எம்   சந்தி  கல்முனை தரவை பிள்ளையார் முன்றல் உள்ளிட்ட  காரைதீவு கண்ணகி அம்மன் கோயில் பகுதியிலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது இவ்வாறு அழுத்தங்கள் தொடர்ந்ததுடன் பாதுகாப்பு தரப்பினரால் தீவிரமாக கண்காணிப்பிற்கு உள்ளானார்.

IMG_0539.JPG

vip__1_.jpeg

vip__2_.jpeg

vip__3_.jpeg

vip__4_.jpeg

vip__5_.jpeg

vip__6_.jpeg

vip__7_.jpeg

vip__10_.jpeg

vip__14_.jpeg

vip__8_.jpeg

vip__15_.jpeg

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனின் பிரச்சார நடவடிக்கையில் அடிக்கடி இடையூறு | Virakesari.lk

யாழ்ப்பாணத்தில் டிப்பர் மோதி பாடசாலை மாணவி பரிதாபமாக பலி

3 months 1 week ago

யாழ்ப்பாணத்தில் (jaffna) பாடசாலை மாணவி ஒருவர் டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (10.9.2024) கொக்குவில் - ஆடியபாதம் வீதியில் இடம்பெற்றுள்ளது.

கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 17 வயதான வினுதா விஜயகுமார் என்ற மாணவியே இதன்போது உயிரிந்துள்ளார். 

திடீர் மரண விசாரணை

கொக்குவில் (Kokkuvil), ஆடியபாதம் வீதியில் தனியார் கல்வி நிலையத்துக்குப் பயணித்த மாணவியை டிப்பர் மோதியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் டிப்பர் மோதி பாடசாலை மாணவி பரிதாபமாக பலி | A Student Hit A Tipper In An Accident In Jaffna

விபத்தில் படுகாயமடைந்த மாணவி உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் மீதான மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

https://ibctamil.com/article/a-student-hit-a-tipper-in-an-accident-in-jaffna-1725990378#google_vignette

தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தம் எமது உரிமைக்கானது அது சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல

3 months 1 week ago

தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டமை சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல. மாறாக இந்த நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ் மக்கள் வரலாற்று ரீதியில் எதிர்கொண்டுவரும்  பிரச்சினைகள் இன்றும் தீர்க்கப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்கானது என தழிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினரும் முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து நேற்று (10) மாலை வடமராட்சி மாலுசந்தி மைக்கல் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும், தமிழ்த் தேசியம் இன்று பலவாறாக அகத் துண்டாலுக்கு உட்பட்டு வருகின்றது. இது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளியுலகிற்கும் ஆட்சியில் அமர்பவர்களுடன் பேசுவதற்கும் அழுத்தம் கொடுப்பதற்கான நிலைமைகளை பலமிழக்கச் செய்து விடுமோ என்ற நியாயபூர்வமான அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. அவ் அச்சத்தில் நியாயபூர்வமான யதார்த்தம் உள்ளது. தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய இனமான நாம் எமது அரசியல் அபிலாசைகளை சாதாரண ஜனநாயக உரிமைகளுடன் மட்டும் மட்டுப்படுத்திவிடமுடியாது.

நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எந்தளவு தூரம் ஆட்சியில் அமரக்கூடிய ஒருவருக்கு ஆதரவு அளிக்கலாம் என்று சிலர் அல்லும் பகலும் அறைபோட்டு சிந்திக்கின்றனர், செயற்படுகின்றனர். அவர்கள் இந்த நாட்டில் வெல்லக்கூடிய ஒருவரை தேடிப்பிடித்து சலுகைகளைப் பெற்று; பெற்று சகித்து வாழுவோம் என்ற என்ற மனநிலையில் இனத்தினை அடமானம் வைக்கின்றனர்.

நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையான எண்ணிக்கையில் வாழ்கின்றனர் என்பதற்காக எண்ணிக்கையில் குறைந்த அளவுடைய நாட்டின் தேசிய இனமான தமிழ் இனம் இன உரிமைகளை விற்று வாழ முடியாது. சிங்கள பேரினவாதிகளுக்கு நோகக்கூடாது என்று வாழ்பவர்கள் எம்மிடத்தில் அதிகரித்துவிட்டனர். மக்களின் இட்சியத்தினையும் தியாகத்தினையும் விற்றுப்பிழைப்பதில் முன்டியடிக்கின்றனர்.

மண்ணுக்காக எத்தனையோ தியாகங்களை எம் இனம் மேற்கொண்டிருக்கின்றது. அந்த அடிப்படையில், எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதை வலியுறுத்தியும் எமக்கு சமஸ்டி அடிப்படையிலான உலகம் ஏற்றுக் கொண்ட அரசியல் தீர்வினை முன்வைக்கக் கோரியும் நாம் பொது வேட்பாளரை முன்நிறுத்திச் செயற்படுவது நியாயபூர்வமாகச் சிந்திக்கும் எந்தவொரு சிங்களப் பிரஜைக்கும் எதிரான வேலைத்திட்டம் கிடையாது. சிங்கள முற்போக்கு சக்திகளும் சொந்த தாய் நாட்டில் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் தமிழ் மக்களின் கருத்து வெளிபாட்டு உரிமைக்கும் ஜனநாயக உரிமைக்கும் மதிப்பளித்து வாக்களிக்க முடியும்.

தமிழ் மக்களைப் பொருத்தளவில் எமது அரசியல் அபிலாசைகளை தொடர்ந்தும் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இன்றும் உள்ள நிலையில் ஒருமித்து தமிழ் பொது வேட்பாளரின் சின்னமான சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தமிழ்த் தேசியக் கடமையினை நிறைவேற்றுவோம் என ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினரும் முன்னாள் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/309238

லசந்த, தாஜூதீனை கொலை செய்தவர்கள் சமூகத்தில் சுதந்திரமாக நடமாடுகின்றனர் - சி.ஐ.டி.யின் முன்னாள் தலைவர்

3 months 1 week ago
11 SEP, 2024 | 11:53 AM
image
 

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவையும் வாசிம் தாஜூதீனையும் கொலை செய்தவர்கள் சமூகத்தில் சுதந்திரமாக நடமாடுகின்றனர் என சி.ஐ.டி.யின் முன்னாள் தலைவர் ரவி செனிவிரட்ண தெரிவித்துள்ளார்.

இருவரும் அரசியல் நோக்கங்களிற்காக கொலை செய்யப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

குருநாகலில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வாசிம் தாஜூதீன் படுகொலை விசாரணைகளை அவ்வேளை ஆட்சியிலிருந்தவர்கள் தடுத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் அந்த கொலை குறித்து உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவ்வேளை ஆட்சியாளர்கள் அனுமதிக்கவில்லைஎன அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/193388

நுவரெலியா - கந்தப்பளையில் அதிபர் அடித்ததில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில்; அதிபரை இடமாற்றம் செய்ய கோரி போராட்டம்!

3 months 1 week ago
11 SEP, 2024 | 02:22 PM
image
 

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கந்தப்பளை நு/கோட்பெல் தமிழ் வித்தியாலயத்தில் இம்முறை 5ம் ஆண்டு புலமைப் பரீட்சைக்கு  தோற்றவுள்ள 07 மாணவர்கள் அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் நுவரெலியா மாவட்ட  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பில் குறித்த மாணவர்களின் பெற்றோர்களால் ராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் நுவரெலியா வளையக் கல்வி காரியாலயத்திற்கு சென்று குறித்த பாடசாலையின் அதிபரை இடமாற்றம் செய்ய கோரியும் பாடசாலை அதிபருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

எனினும் இதுவரை உரிய தீர்வு கிடைக்காத காரணமாகவே பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து இன்று புதன்கிழமை  (11) குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கூறுகையில்,  

கடந்த சனிக்கிழமை பாடசாலையின் அதிபரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்வி கருத்தரங்குக்கு செல்லாத ஏழு  மாணவர்களை பிரம்பால்  தாக்கியதாகவும் இதனால் அவர்கள் நடக்க கூட முடியாது உள்ளதாகவும் தெரிவித்தனர். 

மேலும் குறித்த அதிபர் பாடசாலைக்கு மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும் , தற்போது நியமிக்கப்பட்டுள்ள அதிபர் நிர்வாகத் திறன் அற்றவராக உள்ள நிலையில் உடனடியாக அவரை மாற்றி புதிய அதிபரை நியமிக்கமாறும் கோரியுள்ளனர். 

இவ்விடயம் தொடர்பில் நீண்ட காலமாக உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த போதும் இதுவரை குறிப்பிட்ட அதிபரை இடமாற்றம் செய்ய  எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமையால் குறித்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

அதேவேளை, போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த நுவரெலியா வலயக்கல்வி பணிமனை அதிகாரிகளும் , ராகலை பொலிஸ் நிலைய அதிகாரிகளும் உடனடியாக இந்த விடயம் தொடர்பாக துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்து பாடசாலையில் இருந்து குறித்த  அதிபரை வெளியேற்றி நுவரெலியா வலயக்கல்வி பணிமனை அழைத்துச் சென்றதன் பின்னர்  போராட்டம் கைவிடப்பட்டது.

WhatsApp_Image_2024-09-11_at_14.15.45.jp

WhatsApp_Image_2024-09-11_at_14.15.45__1

WhatsApp_Image_2024-09-11_at_14.15.42.jp

WhatsApp_Image_2024-09-11_at_13.45.21.jp

WhatsApp_Image_2024-09-11_at_13.45.22.jp

WhatsApp_Image_2024-09-11_at_13.45.23.jp

https://www.virakesari.lk/article/193404

திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் புதுக்குடியிருப்பில் கைது!

3 months 1 week ago
11 SEP, 2024 | 10:16 AM
image
 

புதுக்குடியிருப்பு கைவேலி பாடசாலையில் மின்விசிறி திருட்டுடன் தொடர்புடைய மூவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.  

புதுக்குடியிருப்பு கைவேலி கணேசா வித்தியாலயத்தில் கடந்த மாதம் 16 ஆம் திகதி 4 மின் விசிறிகள் திருடப்பட்டுள்ளது.  

அதனையடுத்து பாடசாலை சமூகத்தினரால் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து  திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய கைவேலி முதலாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த பாடசாலை மின்விசிறிகளை களவாடிய நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த சந்தேகநபர் மின்விசிறிகளை களவாடி இருநபர்களுக்கு தலா 3000 ரூபாவிற்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.  

அதனையடுத்து மின்விசிறிகளை வாங்கிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் கைது செய்யப்பட்ட மூவரையும் இன்று (11)  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த இருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். 

களவாடிய குறித்த சந்தேகநபர் பொருட்களை விற்று அதிலிருக்கும் பணத்தினை போதை பொருளுக்கு பயன்படுத்தி வந்தமையும் குறிப்பிடதக்கது.

IMG_20240910_22003541.jpeg

IMG_20240910_22001681.jpeg

https://www.virakesari.lk/article/193375

Checked
Sun, 12/22/2024 - 16:01
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr