ஊர்ப்புதினம்

தமிழர் பகுதியில் அழிவடையும் தென்னை...! தேங்காய்க்கு பெரும் கேள்வி

3 months 2 weeks ago

நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக, தென்னை, வாழை, கமுகு உள்ளிட்ட பல பயிர்கள் அழிவடைந்து வரும் நிலை காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் பாரதிபுரம் பகுதி மற்றும் கண்டாவளை உள்ளிட்ட பல பகுதிகளில் தென்னை செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்பொழுது நாட்டில் தேங்காய்க்கு பெரும் கேள்வி நிலவி வருவதாக தென்னை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் 

இந்நிலையில், இவ்வாறான இயற்கை அழிவு ஏற்பட்டுள்ளமையால் தாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

தமிழர் பகுதியில் அழிவடையும் தென்னை...! தேங்காய்க்கு பெரும் கேள்வி | Coconut Price In Sri Lanka

தென்னை செய்கை மேற்கொள்ளப்பட்டு 8 & 9 வருடம் கடந்த நிலையில் பயன்தரக் கூடிய நிலையில் இருந்த பலரது தென்னைகள் அழிவடைந்து வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

அதேபோன்று வாழைச் செய்கையிலும் வறட்சியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு கமுகு போன்றவையும் அழிவடையும் நிலையில் காணப்படுவதாவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

https://ibctamil.com/article/coconut-price-in-sri-lanka-1725682256#google_vignette

இலங்கையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ஸ்டார்லிங் இணையசேவை

3 months 2 weeks ago

எலோன் மஸ்கின் (Elon Musk) செயற்கைக்கோள் பிரிவான ஸ்டார்லிங்கின் (Starlink) செயற்பாடுகளை  இலங்கையில் அமைப்பதற்கான திட்டத்தின் சில அனுமதிகள் நிலுவையில் உள்ளதால், ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை குறித்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்கு ஸ்டார்லிங்கிற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பூர்வாங்க அனுமதி வழங்கியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் (Kanaka Herath) முன்னதாக அறிவித்திருந்தார்.

தொலைத்தொடர்பு

இந்நிலையில், எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்கை நாட்டில் செயற்பட அனுமதிக்கும் வகையில், பல தசாப்தங்கள் பழமையான சட்டத்தில் திருத்தங்களை கடந்த செவ்வாயன்று (03.09.2024) நாடாளுமன்றம் அங்கீகரித்தது.

இலங்கையில் இடைநிறுத்தப்பட்டுள்ள ஸ்டார்லிங் இணையசேவை | Starling Internet Services Suspended The Country

குறித்த திருத்தங்கள் மூன்று புதிய வகையான உரிமங்களை அறிமுகப்படுத்தியதுடன் ஸ்டார்லிங்க் இலங்கையின் தொலைத்தொடர்பு சந்தையில் உரிமம் பெற்ற சேவை வழங்குநராக நுழைய அனுமதித்துள்ளது.

எனினும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இந்த நடவடிக்கை சாத்தியமற்றது என்று அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரம் தெரிவித்துள்ள நிலையில் ஜனதிபதி தேர்தல் முடியும் வரை இந்த திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்டார்லிங்க் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதும், எலோன் மஸ்க் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/starling-internet-services-suspended-the-country-1725688495

தெற்கின் தேர்தல் வெற்றி – தமிழர்களுக்கு கரி நாள் என்பதை வெளிப்படுத்துவோம் : அருட்தந்தை மா.சத்திவேல்

3 months 2 weeks ago

தெற்கின் தேர்தல் வெற்றி – தமிழர்களுக்கு கரி நாள் என்பதை வெளிப்படுத்துவோம் : அருட்தந்தை மா.சத்திவேல்
September 7, 2024

 

தெற்கின் தேர்தல் வெற்றி தினம் என்பது தமிழர்களுக்கு இன்னும் ஒரு கரி நாள் என்பதை வெளிப்படுத்துவோம். அதுவே எமக்கான தேர்தல் வெற்றியாக அமையட்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று சனிக்கிழமை (07) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றத்திற்கான சக்தியாக தம்மை அடையாளப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசநாயக்க அண்மையில் யாழில் நடத்திய ஜனாதிபதி தேர்தல் வாக்கு வேட்டை பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் மக்களின் அபிலாசைகள் என தான் நினைத்ததை மட்டும் காட்டி பேசியதோடு மாற்றத்திற்கான தெற்கின் மக்களோடு இணைந்து வடகிழக்கு தமிழர்களும் தமக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மறைமுகமாக அச்சுறுத்தும் தொனியில் பேசியது அரசியல் அநாகரீகமாகும்.

தமிழர்களின் ஜனநாயக உரிமைக்கு எதிரானதும் இன அழிப்பின் முகம் கொண்டதுமான வார்த்தைகளாகும். இதனை வன்மையாக கண்டிப்பதோடு வடகிழக்கு தாயக மக்கள் பேரினவாத கருத்தியல் கொண்ட இன அழிப்பு ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதோடு இவர்களின் வெற்றி தினத்தினை தமிழ் தேசமெங்கும் இன்னுமொரு ஒரு கரி நாளாக வெளிப்படுத்த வேண்டும்.

அநுரகுமார தமது உரையில் எந்த பாதையை தேர்ந்தெடுக்க, வேண்டும் யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதை மறைமுக அச்சுறுத்தும் பாணியில் கூறியதோடு மாற்றத்தை விரும்பும் தெற்கு மக்களோடு இணைய வேண்டும் என்று அழுத்தமாகவும்  குறிப்பிட்டார். அவ்வாறு வாக்களிக்காவிட்டால் தமிழ் மக்கள் அனுபவிக்க நேரிடும் என்பதையும் நாசுக்காக வெளியிட்டார். இது அவர்களின் 1988/89 கால நாகரிகத்தை காட்டி நிற்கின்றது.

வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை துண்டாடி பேரினவாதத்தின் வரலாற்று பெருமையை தமதாக்கிக் கொண்டவர்கள் இவர்கள். அவர் அந்த பிரிப்பு நிலையில் நின்று நாட்டின் பிரச்சினையை வடக்கு,கிழக்கு, தெற்கு என ஒன்றாகக்கூடி பேசித்தீர்ப்போம் என  தனது உரையில் குறிப்பிட்டார். வடகிழக்கை இனி இணைய விடமாட்டோம் என் நிலைப்பாட்டின் தொனியாகும். இதுவே அவர்கள் அரசியல் கலாச்சாரம். இத்தகைய கலாச்சாரத்தோடா தமிழர்களை ஒன்று சேர அழைப்பு கொடுக்கின்றார்கள்?

யாழின் கூட்டத்தில் மகிந்த, ரணில் மைத்திரி போன்றோரும் அவர்களின் சகாக்களும் புரிந்த பொருளாதார குற்றங்களுக்கும், நாட்டின் பொது சொத்தினை கொள்ளையடித்தமைக்கும் தண்டனை கொடுப்போம் என்று கூறியவர் தமிழர்களுக்கு எதிராக சிங்கள பௌத்த பேரினவாத அரசு படையினர் புரிந்த யுத்தக் குற்றங்களை மறைத்து யுத்தத்திற்கு முகம் கொடுக்காத மக்கள் முன் நிற்பதைக் போல் நின்றார்.

இதே அநுர குமார அண்மையில் இன்னுமொரு தேர்தல் பிரச்சாரத்தின் போது “நாம் ஆட்சிக்கு வந்தால் யுத்த குற்றவாளிகள் என அடையாளப்படுத்துவோரை தண்டிக்க மாட்டோம்” எனக் கூறியது மகிந்த, கோத்தா, மைத்திரி, ரணில் வரிசையில் நின்று  இனப்படுகொலை யுத்த குற்றங்களுக்கும் தமிழர்கள் எதிர்பார்க்கும் நீதி தன்னுடைய ஆட்சியில் இல்லை என்பதை வெளிப்படையாகவே கூறியிருக்கின்றார்.

உயிர்ப்பு தின (2019) குண்டுத்தாக்குதல்களுக்கு காரணமானோரை கண்டுபிடித்து தண்டிப்போம் என்று தெற்கில் வாக்கு கேட்பவர்கள் வடக்கிலே 30 வருட காலமாக அப்பாவிகளை கொலை செய்தவர்களை, விஷக் குண்டுகளை மக்கள் மீது பொழிந்தவர்களை, பல்லாயிரக்கணக்கானோர் காணாமலாக்கபட்டமைக்கு காரணமானவர்களை வெளிப்படுத்தமாட்டோம் என தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட  கொடுமையின் உண்மையை மறைத்து தன்னுடைய அரசியலுக்காக தெற்கில் ஒரு பகுதியினருக்கு எதிராக நடாத்தப்பட்ட தாக்குதலின் உண்மை தன்மையை வெளிப்படுத்துவோம் என கூறுவது அரசியல் வெட்கச் செயலாகும்.

அண்மையில் அநுரகுமார யாழில் நடத்திய கூட்டத்தில் மட்டுமல்ல வெறும் பிரதான வேட்பாளர்கள் வடகிழக்கில் நடாத்திய எந்த ஒரு வாக்கு வேட்டை கூட்டத்திலும் இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழர்களின் நிலங்கள் மற்றும் சிங்கள பௌத்த தொல்லியல் திணைக்களத்தின்  சிங்கள பௌத்த மயமாக்கல், சிங்கள பௌத்த குடியேற்றங்கள், தனியார் காணிகளில் புத்தர் சிலைகளை வைத்தல், அடாத்தாக விகாரைகளை கட்டுதல் போன்றவற்றிற்கு வருத்தமோ தடுத்து நிறுத்துவதாகவோ கருத்து கூற மறுத்துள்ளமை அவையெல்லாம் தமது காலத்திலும் தொடரும் என்பதையே உணர்த்துகிறது. இதுவும் ஒருவகையில் யுத்த பிரகடனமே.

பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிக் கதிரையை தமதாக்க தமிழர்களை வெறும் கறிவேப்பிலையாகவும் ரம்பையாகவும் பாவித்து விட்டு தூக்கி எறியவே முற்படுகின்றனர்.சுயநல அரசியலுக்கு தம்மை இரையாக்கிக்கொண்ட தமிழ் தேசிய அரியதரம் பூசிக்கொண்ட தமிழ் அரசியல் தரப்பினரும் தேர்தல் அரசியல் களத்தில் நின்று தமிழர்களை பலி கொடுக்கும் அரசியலை முன்னகர்த்துகின்றனர்.

சமாதானப்படையாக தமிழர் தாயகத்தில் காலடி வைத்த இந்திய இராணுவத்தையும், இந்தியாவின் முகத்தையும் இதற்கு அவர்கள் யார் என்பதையும் உலகிற்கு வெளிக்காட்டிய தியாகி திலீபனின் உயிர்தியாக மாதம் இதுவாகும். அவரின் உண்ணாவிரத போராட்டம் எமது அரசியலுக்கும் தேசியம் காக்கும் செயற்பாட்டுக்கும் உந்து சக்தியாக இருப்பதோடு எதிராளிகளில் முகத்திரையை கிழிக்க தேசமாக ஒன்று சேர்வோம். தெற்கின் தேர்தல் வெற்றி தினம்  என்பது தமிழர்களுக்கு இன்னும் ஒரு கரி நாள் என்பதை வெளிப்படுத்துவோம். அதுவே எமக்கான தேர்தல் வெற்றியாக அமையட்டும்.

https://www.ilakku.org/தெற்கின்-தேர்தல்-வெற்றி/

 

 

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கோரிக்கை! - தமிழ் சிவில் சமூக அமையம்

3 months 2 weeks ago

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கோரிக்கை! தமிழ் சிவில் சமூக அமையம் (Tamil Civil Society Forum)
adminSeptember 7, 2024
 
tamil-civil-Society-Forum.jpg

06.09.2024

எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் தேசிய அரசியல் அபிலாசைகளைக்  கூட்டாகப் பிரகடனம் செய்யஇ தமிழ்ப் பொது வேட்பாளர்                 திரு. பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு (சங்குச் சின்னத்திற்கு) வாக்களிக்க தமிழ் சிவில் சமூக அமையம் கோருகின்றது.

21 செப்டம்பர் 2024 அன்று இலங்கையில் நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தலில் முதற் தடவையாக தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்கள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு என்ற அமைப்பொன்றை உருவாக்கித்  தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்காக சங்குச் சின்னத்தில் திரு பாக்கியசெல்வம் அரியநேத்திரனை தமிழ்ப் பொது வேட்பாளராக  நிறுத்தியுள்ளோம்.

காலங்காலமாகச் சிங்களப் பேரினவாதத்தின் இனவழிப்பை எதிர்கொண்டு போராடி வருகின்ற தமிழ்த் தேசம் தனது உயிரினும் மேலாகக் கருதி வரும் தேசிய அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கான ஒருவாய்ப்பாக வரவிருக்கின்ற தேர்தலைப் பயன்படுத்துவதற்காக தேர்தலில் எம்மால் முன்மொழியப்பட்டுள்ள திரு பா. அரியநேத்திரன் அவர்களுக்கு எமது வாக்குகளை வழங்க வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாம் பணிவன்புரிமையுடன் தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

1982 முதல் இன்றுவரை இலங்கையில் நடைபெற்ற சனாதிபதித் தேர்தல்கள் எல்லாம் சிங்கள-பௌத்த பேரினவாதத் தலைவரைத் தேரந்தெடுப்பதாகவே அமைந்தன. இத் தேர்தல்களில் தமிழ் மக்கள் ஆதரவளித்த தென்னிலங்கையின் பிரதான அரசியற் கட்சிகளைச் சேர்ந்த சிங்கள வேட்பாளர்கள் கூட தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏற்றுக் கொண்டதுமில்லை, தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற சனாதிபதிகளும் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பு நடவடிக்கைகளைக் கைவிட்டதுமில்லை. அதனால் இனிவரும் சனாதிபதித் தேர்தல்களிலும் வழமைபோல் தென்னிலங்கையின் பிரதான அரசியற் கட்சிகளைச் சேர்ந்த சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிப்பதில் எமக்கு எந்த ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதே வரலாறு எமக்குத் தரும் வழிகாட்டலாகும்.

எனவேதான் இம்முறை நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தலைத் தமிழ் தேசத்தின் அரசியல் நிலைப்பாடு தொடர்பான தமிழ் மக்களின் தெளிவான ஆணை ஒன்றைச் சர்வதேசத்திற்கும் சிங்கள மக்களுக்கும் வெளிப்படுத்தும் வகையிலான தேர்தலாக மாற்றிப் பயன்படுத்தும் நோக்கில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தும் கூட்டு முயற்சியில் தமிழ் சிவில் சமூக அமையமும் இணைந்து கொண்டது.

சங்குச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்ப்பொது வேட்பாளரான திரு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும் வாக்குகள் ஒரு தனி நபருக்கான வாக்குகள் எனக் கருதாமல், அவ்வாக்குகள் தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கான வாக்குகளே என்ற புரிதலின் அடிப்படையிலேயே பொது வேட்பாளர் எனும் இச்செயற்திட்டத்தில் நாம் இணைந்து கொண்டோம்.

எமது பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்படும் வேளையில், ஒற்றையாட்சியைத் தமிழ் மக்களால் தீர்வாக ஆராயவும் முடியாது எனக்கூறியது போலஇ 13ம் திருத்தத்தையும் தீர்வொன்றின் அடிப்படையாகக்கூட ஏற்க முடியாது என வெளிப்படையாக நிராகரிக்க வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாம் எப்போதும் போல உறுதியாகக் கோரியிருந்தோம்.

எனினும் பல்வேறு பங்கீடுபாட்டாளர்கள் ஒன்றிணைந்து தயாரித்த கூட்டு ஆவணம் என்ற அடிப்படையில் எமது கருத்துக்கள் அனைத்தும் முழுமையாகவும், நாம் விரும்பிய மொழிப் பிரயோகத்திலும் உள்ளடக்கப் பட முடியாத யதார்த்த சூழ்நிலையையும் நாம் கருத்திற் கொள்கிறோம்.

இத்தகைய பின்னணியில், தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பான எமது விரிவான வாசிப்பையும் நிலைப்பாட்டையும், பின்வரும் விடயங்கள் தொடர்பிற் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.

1. அரசியற் தீர்வின் பகுதியாக உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பானது ஒரு புதிய கூட்டு அரசை இத்தீவில் உருவாக்குவதாக அமைய வேண்டும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, இறைமை ஆகியவற்றினை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் தேசங்களின் ஒன்றிணைவாக அமையும் அரசாக அது அமைய வேண்டும். அதாவது புதிய அரசானது ஒரு பன்மைத்தேசிய அரசு (Plurinational)  என்ற அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும்.

2. ஒற்றையாட்சி அரசு முறைமையையும் அதனது ஒரு அங்கமான 13ம் திருத்தத்தையும் தமிழ் மக்கள் முற்றாக நிராகரிப்பதோடு, இவை அரசியற்  தீர்வுப் பேச்சுவார்த்தைக்கான ஆரம்பப் புள்ளியாகக்  கூட அமைய மாட்டாது என்பதே தமிழர்களின் நிலைப்பாடாகும். ஒற்றையாட்சி அரசுக்குட்பட்ட எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் தமிழர் தரப்புப் பங்குபற்றக் கூடாது.

3. தமிழர்களின் சுயநிர்ணய அலகானது, அவர்களின் தாயகமானது, ஒன்றிணைந்த (தற்போதைய) வடக்கு கிழக்கு மாகாணங்களை கொண்டதாக அமைய வேண்டும். குறித்த சுயநிர்ணய அலகிற்குள் முஸ்லீம் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் தொடர்பில் திறந்த மனதோடு தமிழ்த் தரப்பு பேச்சுவார்த்தை நடாத்தத் தயாராக  இருக்க வேண்டும். .

4. பாதுகாப்பு  நாணயக் கொள்கை உட்பட ஒரு சில விடயங்கள் மாத்திரமே மத்திய அரசின் அதிகார எல்லைக்குள் இருப்பதோடு எஞ்சிய அதிகாரங்கள் (Residual Powers)  மாநிலங்களிற்கு உரியவையாக அமைய வேண்டும். குறிப்பாக கல்வி, அரச காணி, சுகாதாரம், சட்டம் ஒழுங்கு, வரி இறுக்கும் அதிகாரம் ஆகியன நிச்சயமாக மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்களாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அடிப்படை விடயங்களை உள்ளடக்கி  தமிழ் மக்கள் பேரவையால் தமிழ் மக்களின் கருத்துகளை உள்வாங்கி உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு முன்மொழிவைத் தமிழ் மக்கள் தமது அரசியல் நிலைப்பாடாக முன்வைக்க வேண்டும்.

5. தொடரும் இனவழிப்பின் ஒரு பகுதியாக போரின் போது தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு பன்னாட்டு குற்றவியல் விசாரணையை தமிழ் மக்கள் வேண்டுவதோடு, உண்மையைக் கண்டறிதல் உள்ளிட்ட உள்ளக செயன்முறைகள் மூலமாக பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகள் சாத்தியமற்றவை எனத் தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

6. 2009ல் ஆயுதப்போர் முடிவடைந்த பின்பும் வழமைபோன்றும்இ பல்வேறு புதிய வழிகளிலும் முன்னரிலும் விட மூர்க்கமாகவும் வேகமாகவும் தமிழ் மக்களின் மேலாகக் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பைச்  சிறீ லங்கா அரசுகள் தொடர்வதைத் தடுத்து நிறுத்த சர்வதேச தலையீடும், சர்வதேச அனுசரணையுடன் கூடிய பொறிமுறையும் கட்டாயமானதும் அவசரமானதுமான தேவைகளாகும்.

7. தமிழ் தேசம் தமக்குரித்தான சுயநிர்ணய உரிமையின்பாற்பட்டு சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வழிமுறையான பொது வாக்கெடுப்பு (ஒப்பங் கோடல்) ஒன்றின் மூலம் தமது அரசியல் தெரிவை மேற்கொள்ளும் வகையில் ஐ.நா.வினால் மேற்பார்வை செய்யப்படும் ஒரு பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் எனக் கோருகின்றனர்.

ஆனால்இ 13ஆம் திருத்தத்தை நிராகரித்து தேர்தல் விஞ்ஞாபனமானது தெளிவாக நிலைப்பாடு எடுக்கவில்லை என நாம் கருதுகிறோம். ஆயுத மோதல்களுக்குப் பின்னர் இனப்பிரச்சனைக்கான தீர்வைப் 13ம் திருத்தத்திற்குள்   முடக்குவதை நோக்கமாகக் கொண்டு உரையாடல்கள் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அனுபவ ரீதியாக மாகாண சபை முறையானது எவ்விதத்திலும் எமது நாளாந்த பிரச்சனைகளைக்கூடக் கையாள்வதற்குப் போதுமானதன்று என்பது எமது பட்டறிவு.

தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிற் பெரும்பாலானவை ஒற்றையாட்சியை மறுப்பதாகத் தமிழ் மக்களுக்குச் சொன்னாலும், பிராந்திய மற்றும் பூகோள அரசியற்  சக்திகளின் அழுத்தத்தின் காரணமாக நடைமுறையில் ’13 அல்லது 13 பிளஸ்’ என்ற வரையறைக்குள்ளேயே, அதாவது ஒற்றையாட்சி முறைமைக்கு உட்பட்டே, தமது நடைமுறை அரசியலைச் செய்து வருகின்றனர். இது தவறானது எனத்  தமிழ் சிவில் சமூக அமையம் கடந்த 15 வருடங்களில் பல முறை சுட்டிக் காட்டியுள்ளது.

ஆனாலும் இன்று எமது தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்,  13ம் திருத்தம் தொடர்பில் வெளிப்படையான நிராகரித்தல் அற்ற ஒரு மௌனத்தொனியே வெளிப்பட்டுள்ளது. தமிழ்ப் பொது வேட்பாளரின் விஞ்ஞாபனம் ஒற்றையாட்சியை நிராகரிக்கின்றமையானது 13ஆவது திருத்தத்தை அரசியல் தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகக் கூட தமிழ் மக்கள் கருத முடியாது என்று கூறுவதாகவே அர்த்தம் கொள்ளப்பட வேண்டும் என நாம் கருதுகிறோம்.

தமிழ் சிவில் சமூக அமையம் தனது நிலைப்பாடுகளாகவும், விஞ்ஞாபனம் தொடர்பான விரிவான வாசிப்பாகவும்,  பகிர்ந்து கொண்டவற்றில் இத் தேர்தல் விஞ்ஞாபனம், சில விடயங்களை  வெளிப்படையாகவும்  சில விடயங்களைப்  பூடகமாகவும் வெளிப்படுத்துகிறது. இதனால் மக்கள் மத்தியிலும் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதை நாம் அவதானிக்கிறோம்.

தமிழ் சிவில் சமூக அமையம் இந்நிலை தொடர்பில் ஆழ்ந்த கவலையும் கரிசனையும் கொள்கின்ற அதே வேளை தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு என்ற தமிழ்த் தேசிய அரசியல் முயற்சி வெற்றி பெற வேண்டும் என நாம் வலுவாக நம்புகின்றோம், விரும்புகின்றோம். இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே நாம் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கக் கோருகின்றோம்.

இத்தகைய அணுகுமுறையில் இருந்து – வாசிப்பிலிருந்து எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில் சங்குச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை நாம் வேண்டுகிறோம். தமிழ் அரசியல் நேர்மைப் பாதையில் தடம் பதிக்க நாம் உளச்சுத்தியுடன் தொடர்ந்து பயணிப்போம். தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு அத்தகைய பாதையில் செல்வதை உறுதி செய்ய எம்மாலான அனைத்தையும் நாம் தொடர்ந்து செய்வோம்.

2009இன் பின்னர் நடைபெற்ற மூன்று சனாதிபதித் தேர்தல்களிலும் தமிழ் மக்கள், தென்னிலங்கையின் பிரதான அரசியற் கட்சிகளைச் சேர்ந்த சிங்கள வேட்பாளருக்கே வாக்களித்தனர். எமது வாக்கைப் பெற்றவர்கள் தேர்தலில் வென்று பதவிக்கதிரை ஏறினாலும் அல்லது தோற்றாலும் ஒரு போதும் சிங்கள் பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலிலிருந்து அவர்கள் வெளியேறவில்லை என்பதே எமது அனுபவமாகும். இந்நிலையில் இம்முறை இனவாதிகளான சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை விட தமிழ் மக்களின் அபிலாசைகளை தனது தேர்தல் கோரிக்கைகளாக முன்வைத்துள்ள, தமிழ்ப் பொதுக்கட்டமைப்பால் முன்மொழியப்பட்டுள்ள திரு பா. அரியநேத்திரன் அவர்களுக்கு எமது வாக்குகளை வழங்கி எமது இலட்சிய உறுதியை வெளிப்படுத்துவோம் என தமிழ் மக்களைக் கோருகின்றோம்.

நன்றி.

(ஒப்பம்) அருட்பணி வீ. யோகேஸ்வரன்

இணைப் பேச்சாளர்

தமிழ் சிவில் சமூக அமையம்

(ஒப்பம்) பொ. ந. சிங்கம்

இணைப் பேச்சாளர்

தமிழ் சிவில் சமூக அமையம்

 

https://globaltamilnews.net/2024/206509/

போதைப்பொருள்களின் பின்னணியில் அரசியல் : அனைத்தையும் துடைத்தெறிவேன் - அநுரகுமார

3 months 2 weeks ago

Published By: VISHNU   07 SEP, 2024 | 12:15 AM

image
 

நாட்டில் இன்று பெருமளவான போதைப்பொருள் கடத்தல்களின் பின்னணியில் அரசியல்வாதிகளே இருக்கின்றனர். ஆட்சிக்கு வந்ததும், போதைப்பொருள் சாம்ராட்யம் அடியோடு துடைத்தெறியப்படும் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அநுரகுமா திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

போதைப்பொருள் கடத்தலில் சம்பாதிக்கப்படும் பணம்தான் இன்று பல அரசியல்வாதிகளின் பரப்புரைகளுக்குப் பயன்படுகின்றது. 

போதைப்பொருளின் பின்னணியில் அரசியல்வாதிகளே உள்ளனர். 

போதைப்பொருள்கள் இலங்கைக்குரியனவையா? இல்லை. அவை கொண்டுவரப்படுகின்றன. அதை அனுமதிக்கின்றனர். 

எனவே ஆட்சிக்கு வந்ததும், போதைப்பொருள் குழுக்கள் அடியோடு துடைத்தெறியப்படும். இந்த உத்தரவாதத்தை நான் மக்களுக்கு உறுதியுடன் தருகின்றேன் என்றார்.

https://www.virakesari.lk/article/193039

ஆயுர்வேத துறையை மருத்துவ விஞ்ஞானமாக அங்கீகரிப்போம் - ஜனாதிபதி

3 months 2 weeks ago
06 SEP, 2024 | 05:35 PM
image
 

ஆயுர்வேதத்தை மருத்துவ விஞ்ஞானமாக அங்கீகரிப்பதே தனது நோக்கமாகும் எனவும், அதற்காகவே ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய உள்நாட்டு மருத்துவத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த ஜனாதிபதி, நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு ஆயுர்வேதத்தை அதிகபட்சமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.  

பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் இன்று வெள்ளிக்கிழமை (06) முற்பகல் நடைபெற்ற உள்நாட்டு வைத்தியர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.  

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் பாரம்பரிய, ஆயுர்வேத, சித்த, யூனானி, ஹோமியோபதி வைத்தியர்கள், உள்நாட்டு மருந்து உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள்,  வர்த்தகர்கள் மற்றும் உள்நாட்டு மருத்துவத் துறையினர் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். 

உள்நாட்டு மருத்துவத்துறையின் முன்னேற்றத்துக்கான யோசனையும் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. 

WhatsApp_Image_2024-09-06_at_17.03.15.jp

இந்த மாநாட்டில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 

"2022ஆம் ஆண்டு சிகிச்சைக்காக என்னிடம் ஒப்படைக்கப்பட்ட நோயாளி தற்போது எழுந்து நடக்கிறார். குணமடைந்த நபரை மீண்டும் நோளாளியாக்குவதற்கு தகுதியற்ற வைத்தியர்கள் தயாராக உள்ளனர். அவர்களில் பிரயோசனமற்ற மருந்தை அவர் குடித்தால், அந்த நோயாளியை மீண்டும் குணப்படுத்த முடியாது. 

அதனால் அந்த மருந்தை குடிப்பதா இல்லையா என்பதை குணமடைந்த நபரே  தீர்மானிக்க வேண்டும். எவ்வாறாயினும் நோயாளியை மேலும் கஷ்டத்தில் தள்ளிவிடாமல் காப்பாற்ற வேண்டும் என்தே எமது நோக்கமாகும்.  

ஒரு நாட்டு இப்படி ஒரு நோய் வருவது நல்லதல்ல. என்னிடம் ஒப்படைக்கப்பட்ட  நோயாளிக்கு சிகிச்சை அளிக்க வெளியில் இருந்தும் சில வைத்தியர்களை  வரவழைக்க வேண்டியிருந்தது.  

வொஷிங்டன், டோக்கியோ உள்ளிட்ட 18 நாடுகளில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்தோம். இப்போது புதிய வைத்தியர் ஒருவர் வந்திருக்கிறார்.  

அவர் தரப்போவதாகச் சொல்லும் மருந்துகளை பார்க்கும்போது பயமாய் இருக்கிறது. அது குறித்து முழுநாடும் தீர்மானம் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.  

இந்த மாநாட்டில் பல கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டதோடு அவற்றை செயல்படுத்துவது குறித்து ஆலோசிகிறோம்.  

உள்நாட்டு மருத்துவ முறைகளைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும். ஜே.ஆர். ஜயவர்த்தனவின் காலத்தில் டபிள்யூ.ஜே.பெர்னாண்டோ தலைமையில் சுதேச மருத்துவம் தொடர்பான முதலாவது குழு அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர் அவ்வாறான அறிக்கைகள் எவையும் வரவில்லை. 

உள்நாட்டு மருத்துவ முறையில் பாரம்பரிய மருத்துவர்களும், ஆயுர்வேத பீடத்தில் பட்டம் பெற்றவர்களும் உள்ளனர். கடந்த காலங்களில், சுதேச மருத்துவம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது.  

அதற்கான மதிப்பும் கிடைத்தது. இந்த சுகாதார முறமைகள் இலங்கையிலும் தெற்காசிய நாடுகள் முழுவதிலும் 1000,2000 ஆண்டுகள் பரலாக காணப்பட்டது. 

இப்போது இந்தியா உள்நாட்டு மருத்துவம் குறித்து அதிகளவில் ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இலங்கையில் அது நடக்கவில்லை.  

எனவே உள்நாட்டு மருத்துவம் தொடர்பிலான ஆய்வுகளும், அதன் வரலாறுகள் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொண்டு இந்த துறையை மேலும் முன்னோக்கி கொண்டுச் செல்வோம். 

இதற்காக பாரம்பரிய வைத்தியர்களையும் ஒன்றிணைக்க வேண்டும். அவர்களுக்கும் அங்கீகாரம் வழங்க வேண்டும். அதே சமயம் ஜோதிடத்தையும் இதனுடன் இணைக்க வேண்டும்.  

இவை அனைத்தும் பின்னிப் பிணைந்தவை. இவற்றை பிரிக்க முடியாது. அதற்கு அமைவாக புதிய கட்டமைப்பைத் உருவாக்க வேண்டும். இந்தத் துறைகள் அனைத்தையும் அங்கீகரித்து அவற்றைப் பதிவு செய்ய புதிய சடடமொன்றை கொண்டு வர எதிர்பார்க்கிறோம். 

இந்தப் பணிகளை முன்னெடுக்க ஆயுர்வேதத் திணைக்களம் மாத்திரம் போதாது. ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை நிறுவுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து  வருகிறோம்.  

இந்தத் துறையின் முன்னேற்றத்திற்காக நீண்ட காலத் திட்டங்களையும் ஐந்தாண்டுத் திட்டத்தையும் வகுக்க எதிர்பார்க்கிறோம்.  

அதற்கேற்ப, சுதேச வைத்தியத் முறையின் மறுசீரமைப்பு குறித்து புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது.  அனைத்துப் பிரிவினரையும் ஒன்றிணைத்து இருக்கும்  வளங்களைப் பயன்படுத்தி  இவ்வாறான செயற்பாடுகளை ஆரம்பித்து முன்னோக்கிக் கொண்டு செல்வோம். 

ஆயுர்வேத மருத்துவத்திற்கு, மருத்துவ அறிவியலாக அங்கீகரிப்பை பெற்றுக்கொடுப்பதே எனது நோக்கம். அதன்படி, இந்த மருத்துவ முறைகளைத் தேடி சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வருகிறார்கள்.  

இது இந்தியாவில் செயற்படுகிறது. அந்த  முறையை நாமும் பின்பற்ற வேண்டும்.  நமது  சுதேசவைத்திய முறையின் அறிவியல் அடிப்படையைக் கண்டறிந்து செயற்படுவது மிகவும் முக்கியம்.  

அதற்காக ஆராய்ச்சிகள் அவசியம். மேலும், சுற்றுலாத்துறைக்காக இத்துறை, நவீனமயமாக்கப்பட்டு பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 

தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள ஒரு பாரிய ஹோட்டலுக்குச் செல்லும்போது, அங்கு ஆயுர்வேத சிகிச்சையைப் பெறலாம். இதே திட்டத்தை நாமும் எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டும்.  

எனவே, சுற்றுலாத் துறையில் ஆயுர்வேத மருத்துவம் சேர்க்கப்பட வேண்டும். இது அதிக அந்நியச் செலாவணியை ஈட்ட நமக்கு உதவுகிறது. இன்று சென்னை போன்ற நாடுகளில் ஜோதிட முறையும் உருவாகியுள்ளது. 

 இந்த மரபுகள் அனைத்தையும் இணைத்து இந்தத் துறையை நாம் முன்னேற்ற வேண்டும். எனவே ஆயுர்வேத தேசிய சபையை எவ்வாறு நிறுவுவது என்பது குறித்து எங்களுக்கு ஆலோசனை தேவை.  

அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் வகையில் இந்த சபையை நிறுவுவது அவசியமாகும்" என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

WhatsApp_Image_2024-09-06_at_17.03.22__1

 சுதேச வைத்திய  இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி:

 சுதேச வைத்தியத் துறையின் வளர்ச்சி மூலம் தேசியப் பொருளாதாரத்திற்குப் பெரிதும் பங்களிக்க முடியும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பல்வேறு சட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதை நன்றியுடன் நினைவுகூர விரும்புகின்றேன். 

அதன் மூலம்  சுதேச வைத்தியத் துறையை ஏற்றுமதி வருமானம் ஈட்டக்கூடிய துறையாக மாற்றும் பணியை மேற்கொண்டு வருகிறோம். 

300 மில்லியன் டொலர்களுக்கு மேல் அந்நியச் செலாவணியை ஈட்டும் வகையில்  உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தரமான மருந்துகளை  ஏற்றுமதி செய்வதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு பங்களிக்கும் வகையில்  சுதேச வைத்தியத் துறையை வெட் வரி இன்றி பேணுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பெறப்பட்ட  வாய்ப்பைப் பாராட்ட வேண்டும்.    

அத்துடன், பட்டதாரி ஆயுர்வேத வைத்தியர்கள் மற்றும் பயிற்சி பெற்ற ஆயுர்வேத வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க அவர் எடுத்த நடவடிக்கைகளை இங்குள்ள அனைவர் சார்பாகவும்  நினைவுகூறுகிறேன். 

சுதேச வைத்தியத் துறையின் மேம்பாட்டிற்காக நீங்கள் காட்டும் அக்கறையும், அதன் கீழ் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் தொடர வேண்டும் என்ற விருப்பத்துடனும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் ஜனாதிபதியாக நியமிக்க சுதேச வைத்தியத்துறை ஆதரவளிக்கும்" என்றார். 

பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் பந்துல குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் ஆஷு மாரசிங்க, சதேச மருந்து உற்பத்தியாளர்கள், கைத்தொழில்துறையினர், மருந்தக உரிமையாளர்கள், மருந்து சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட பாரம்பரிய வைத்திய, யூனானி, சித்த மற்றும்  ஹோமியோபதி உள்ளிட்ட சுதேச வைத்தியத் துறையின் பிரதிநிதிகள், பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2024-09-06_at_17.03.23.jp

https://www.virakesari.lk/article/193024

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக ஜனாதிபதி முன்னிலையில் நால்வர் பதவிப்பிரமாணம்

3 months 2 weeks ago
06 SEP, 2024 | 06:21 PM
image
 

மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே.எம்.ஜி.எச்.குலதுங்க, டி. தொடவத்த, ஆர்.ஏ. ரணராஜா ஆகியோரும் முன்னாள் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எம்.சி.எல்.பி. கோபல்லாவவும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நால்வரும் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (06) முற்பகல் நடைபெற்றது. 

அரசியலமைப்பின் 107ஆவது சரத்தின்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

மேலும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஊவா மாகாண ஆளுநராக அனுர விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் இதில் கலந்துகொண்டார்.

704d3097-f506-4eee-8760-e55a803bd3da.jfi

WhatsApp_Image_2024-09-06_at_5.01.55_PM.

WhatsApp_Image_2024-09-06_at_5.01.57_PM.

WhatsApp_Image_2024-09-06_at_5.01.52_PM.

WhatsApp_Image_2024-09-06_at_5.01.58_PM.

WhatsApp_Image_2024-09-06_at_5.02.00_PM.

WhatsApp_Image_2024-09-06_at_5.01.54_PM.

https://www.virakesari.lk/article/193022

போர்க் குற்றவாளிகளை நீதிமன்றங்கள் தண்டிக்கும் - அநுரகுமார

3 months 2 weeks ago

06 Sep, 2024 | 05:24 PM

போரின்போது என்ன நடந்தது என்பதை கண்டறிந்து வெளிப்படுத்துவதில் நான் அப்போதும் இப்போதும் உறுதியாகவுள்ளேன். ஆனால், போர்க்குற்றவாளிகளுக்கான தண்டனைகள் நீதிமன்றங்களுடன் தொடர்புடைய விடயம் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுரகுமார அண்மையில் வழங்கிய செவ்வியொன்றில், போரின்போது என்ன நடந்தது என்பதைக் கண்டறிய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது. அவர்கள் எவரையும் தண்டிக்கவேண்டும் என்று கோரவில்லை. எனவே, போரில் என்ன நடந்தது என்று வெளிப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். 

அவரின் இந்த செவ்வியை மேற்கோள் காட்டி, 'இறுதிப் போரின்போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கும் நிலைப்பாட்டில் நீங்கள் இல்லையா?' என்று யாழில் இடம்பெற்ற கூட்டத்தின்போது ஊடகவியலாளர்கள் வினவினார்கள். 

இதற்குப் பதிலளிக்கும்போதே, 'இறுதிப்போரின்போது என்ன நடந்தது என்பதை கண்டறிவதும் வெளிப்படுத்துவதும்தான் என் வேலை. தண்டனை வழங்குவது நீதிமன்ற சுயாதீனத்துடன் தொடர்புடைய விடயம். நான் போர்க்குற்றவாளிகளைக் கண்டறிவேன். நீதிமன்றங்கள் அவர்களைத் தண்டிக்கும்' என்று அநுர தெரிவித்துள்ளார்.

நமக்காக நாம்: திருகோணமலையில் அரியநேத்திரனின் பிரசாரம்!

3 months 2 weeks ago
நமக்காக நாம்: திருகோணமலையில் அரியநேத்திரனின் பிரசாரம்! நமக்காக நாம்: திருகோணமலையில் அரியநேத்திரனின் பிரசாரம்!

நமக்காக நாம் என்ற தொனிப் பொருளிலான பிரசாரம், தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனால் திருகோணமலையில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை சிவன் கோவில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளுடன் கலந்து கொண்ட பின்னர் பிரசார நடவடிக்கையை ஆரம்பித்திருந்தார்.

இதேவேளை இலங்கை தமிழ் அரசு கட்சியியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள் தமக்கான பெரும்பான்மை ஆதரவினை வழங்கியிருப்பதாக அவர் மகிழ்ச்சி வெளியிட்டிருந்தார்.

மேலும் நாட்டின் பதவியேற்கவுள்ள 9வது ஜனாதிபதி இணைந்த வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான ஓர் தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என்றும் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரன் வலியுறுத்தியிருந்தார்.

https://athavannews.com/2024/1398413

 

#############   ##################   ##################

  0-1.jpg?resize=750,375&ssl=1 ’நமக்காக நாம்’ பிரசார பயணம்- யாழில் ஆரம்பம்!

பொலிகண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பிரசார பயணத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதியில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பினர் பரப்புரை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்

இந்த நடவடிக்கையில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள், மாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1398468

யாழ். சங்கானையில் ஒரே இரவில் 3 வீடுகளில் கொள்ளை!

3 months 2 weeks ago
06 SEP, 2024 | 01:52 PM
image

யாழ்ப்பாணம் - சங்கானை பகுதியில் ஒரே இரவில் மூன்று வீடுகள் உடைத்து பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

சங்கானை தேவாலய வீதியில் உள்ள மூன்று வீடுகள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.  

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை  பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர். 

https://www.virakesari.lk/article/192992

ரணில் ஒரு வடக்கு தமிழ் இனவாதி என்றால் சுமந்திரன் தமிழினத்தின் துரோகி

3 months 2 weeks ago

 

 

 

 

ஊடகவியலாளர்- ஏ சி பௌசுல் அலிம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நெருங்கிப் பழகி வந்த சுமந்திரன் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி, தனிநபர் சட்ட முன்வரைவுகளை தடுப்பதற்கு சாட்சி சமர்ப்பித்து, ரணில் விக்ரமசிங்கவை இனவாதி என குற்றம் சுமத்தியுள்ளர். தமிழ் மக்கள் சுமந்திரன் எப்படிப்பட்டவர் என்பதை நன்கு அறிந்துள்ள நிலையில், அவர் ரணிலை குற்றம் சுமத்துவதற்கு எந்த தகுதியும் இல்லை என்ற கேள்வி எழுகிறது. ஒன்றாக இருந்து குழிபறித்த கூட்டத்தில் இருந்தவர் சுமந்திரன் என்பதை அவர் மறக்க முடியுமா? என்று கேட்க வேண்டி இருக்கிறது.

சுமந்திரன் ஒரு சட்ட வல்லுநராகவும், வாதத் திறமை கொண்டவராகவும் இருக்கலாம். ஆனால், அவர் மனசாட்சியை தொட்டுப் பேச வேண்டும். ரணிலை நம்ப வைத்து மோக்ஷம் செய்தவர் சுமந்திரன் என்பது தமிழ் மக்களுக்குப் புதிதல்ல ஏனைய மக்களும் இதை நன்கு அறிந்துள்ளனர்.

சம்பந்தன் ஐயா உயிரோடு இருந்தபோது அவரோடு இணைந்து உறவாடி தமிழினத்தை ஏமாற்றி வந்தவர் இன்று சம்பந்தன் ஐயா உயிரோடு இருந்திருந்தால் இந்த இழிவான செயல்களை கண்டித்திருப்பார் என்பது நிச்சயம்.

தமிழர் சமூகத்தின் நலனை முன்னெடுக்கும் வழியில் செயல்பட்டிருந்தால் தமிழரசு கட்சியும், சுமந்திரனும் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து அவருக்கு ஆதரவளித்திருக்க வேண்டும். ஆனால் இங்கு சுமந்திரன் செய்திருக்கும் செயல்கள், ரணிலின் முதுகில் குத்திய கொடுமையான செயலாகவே தமிழர் சமூகத்தால் பார்க்கப்படுகின்றன.

ரணில் எப்படிப்பட்டவர் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிந்துள்ளனர் அவர் ஒருபோதும் தமிழினத்துக்கு எதிரானவர் அல்ல.வடக்கு மக்களுக்கு குரல் கொடுத்து வந்த ரணிலின் செயல்களை சுமந்திரன் போன்றவர்கள் மறந்தாலும், தமிழ் மக்கள் ஒருபோதும் மறக்கப் போவதில்லை.

சுமந்திரன் அவரின் போலித்தனத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். ரணில் விக்ரமசிங்க ஒரு இனவாதி எனக் குற்றம் சுமத்தி அவரை பழிவாங்கும் எண்ணம் கொண்டவர் அல்ல. சுமந்திரன் செய்யும் துரோகத்தை தமிழ் மக்கள் விரைவில் வெளிப்படுத்துவர். ஏற்கெனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் குழப்பம் ஏற்படுத்தி, தமிழரசு கட்சிக்குள் சண்டையை தூண்டியவர் என்று தெரியும்.

இந்நிலையில் ரணிலை இனவாதி என சுமந்திரன் சொன்னால், அவரே அதைவிட மோசமான இனவாதியாக இருக்கும். தமிழ் மக்கள் சுமந்திரனின் துரோகித்தனத்தை நன்கு அறிந்து கொண்டுள்ளனர். வெற்றி, தோல்வி எதுவாயினும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்கத் தயங்கியவர் சுமந்திரன் என்பதால், அவரை மக்கள் எப்படி நம்பப் போகிறார்கள்?

சுமந்திரனின் போலித்தனமான முகம் கலைந்து விட்டது; அவரை நம்புவதற்கு தமிழ் மக்கள் தயங்குகின்றனர். ஹக்கீம், ரிஷாட் போன்ற முஸ்லிம் தலைவர்கள் சஜித் பக்கம் சென்றதால் அச்சம் கொண்டு, தன்னிச்சையாக தமிழரசு தீர்மானம் என அறிவித்துள்ளார் சுமந்திரன். தமிழரசு முக்கிய குழுவினர் கூட அவரது முடிவை எதிர்த்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திவிட்டார்கள்.

சஜித்துக்கு மக்கள் ஆதரவு அதிகரித்ததால் தான் சுமந்திரன் ரணிலை கைவிட்டு, சஜித்திடம் நல்ல பெயர் வாங்க முற்பட்டார். சட்டப் பாடத்தை நன்கு கற்றவர் அரசியல் பாடத்தை இன்னும் கற்றுக் கொள்ளாததுதான் கவலையாகும். சுமந்திரன் இன்னும் எத்தனை போலி நாடகங்களை அரங்கேற்றப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

https://madawalaenews.com/3772.html

img_2092-1-780x975.jpg.webp

கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட 'The Mall' வரியில்லா வர்த்தகத் தொகுதி ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

3 months 2 weeks ago
06 SEP, 2024 | 11:06 AM
image

கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட 'The Mall' வரியில்லா வர்த்தக தொகுதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்  நேற்று வியாழக்கிழமை (05) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.  

WhatsApp_Image_2024-09-06_at_09.12.13.jp

இந்த வர்த்தகத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டிருக்கும் வரியில்லா வர்த்தக தொகுதி, விற்பனை நிலையங்கள், உணவகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.  

இதற்குள் One World, China Duty Free Group (CDFG) மற்றும் Flemingo ஆகியவை இந்த வர்த்தகத் தொகுதியில் தங்கள் செயல்பாடுகளைத் ஆரம்பித்திருப்பதன் மூலம், கொழும்பு துறைமுக நகரம், பிராந்தியத்தில் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகத் தொகுதியாக பரிணமிக்கும்.  

பெயர் பலகையை திரைநீக்கம் செய்து, வணிக வளாகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, கண்காணிப்பு பயணத்தையும் மேற்கொண்டார். 

WhatsApp_Image_2024-09-06_at_09.12.03.jp

துறைமுக நகரை இவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும் என இரண்டு வருடங்களுக்கு முன்னர்  யாரும் எதிர்பார்க்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் அரசாங்கம் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியமையினால் இன்று துறைமுக நகரின் நிதிச் செயற்பாடுகளை தொடங்க முடிந்துள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  

சுமார் 100 நிறுவனங்கள் துறைமுக நகரம் குறித்து கவனம் செலுத்தியுள்ளன. அவற்றில் 74 நிறுவனங்கள் இந்த வருட இறுதிக்குள் துறைமுக நகரத்தில் முதலீடு செய்ய உள்ளதாகவும் ஜனாதிபதி மேலும்  தெரிவித்தார்.  

வெளிநாட்டு கடன் வழங்குனர்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் திருத்தமின்றி அமுல்படுத்தப்பட்டால் நாட்டுக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்கும் எனவும்  ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

WhatsApp_Image_2024-09-06_at_09.12.04.jp

இங்கு மேலும்  கருத்து தெரிவித்த  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 

இன்று துறைமுக நகரத்தில் இந்த வரியில்லா வர்த்தக தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளமை மிக முக்கியமானதாகும். இலங்கையின் சுற்றுலா துறை உலக அளவில் பிரசித்தம் பெற்றுள்ளது.  

இந்த வர்த்தகக் கட்டிட தொகுதி இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவார்கள். அவர்களுக்குத் தேவையான பொருட்கள் கிடைக்கும் வகையில் வணிக வளாகங்களை நிர்மாணித்து இந்த துறைமுக நகரத்தை மேம்படுத்தியுள்ளோம். இது துறைமுக நகரத்தின் ஆரம்பமாக மட்டுமே அமையும். 

துறைமுக நகரை இவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இரண்டு வருடங்களுக்கு முன்னர் எமக்கு இருக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியதன் காரணமாகவே இன்று இப்பணியை செய்ய முடிந்துள்ளது.  

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் கடன் வழங்கிய 18 நாடுகளுடன் இந்த வேலைத்திட்டத்தை தொடர்வதற்கு நாம் உடன்படிக்கை செய்துள்ளோம்.  

அந்த ஒப்பந்தங்களை மாற்றாமல் தொடர்ச்சியாக கொண்டுச் சென்றால் இலங்கைக்கு  நல்ல எதிர்காலம் கிட்டும். அந்த உடன்படிக்கைகளில் திருத்தம் செய்ய முற்பட்டால், எதிர்காலம் கேள்விக்குறியாகும்.  

குறிப்பாக 100 நிறுவனங்கள் இன்று துறைமுக நகரம் குறித்து கவனம் செலுத்தியுள்ளன. அதில் 74 நிறுவனங்கள் இந்த வருட இறுதிக்குள் இலங்கையில் முதலீடு செய்யவுள்ளன.  

மேலும், கொழும்பு கோட்டையில் புதிய சுற்றுலா வலயத்தை ஆரம்பிக்க உள்ளோம். இதனால், இப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். 

பொலிஸ் தலைமையகம்  இடம் மாற்றப்பட்டுள்ளது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சும் புதிய கட்டிடத்திற்கு மாறுகிறது. குடியரசு சதுகத்தையும் புதுப்பித்து, அந்தப் பகுதியை சுற்றுலா வலயமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேநேரம் பழைய தபால் நிலைய கட்டிடத்தை சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும். பழைய துறைமுகம் மற்றும் அதன் இறங்குதுறை மற்றும் பழைய சுங்க கட்டிடம் உள்ளிட்ட அனைத்தையும் சுற்றுலா அபிவிருத்திக்கு பயன்படுத்த முடியும். 

கடற்படைத் தலைமையகம் தற்போது அக்குரேகொடைக்கு மாற்றப்பட்டுள்ளதால், பழைய இடத்தில் புதிய ஹோட்டல்களை அமைக்கலாம். 

தற்போதுள்ள ஜனாதிபதி மாளிகை சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி விரிவான சுற்றுலாத்துறையை உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம். 

இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய சுற்றுலா பயணிகளை அதிக அளவில் அழைத்து வர வேண்டும். அதன் மூலம் ஈட்டும் வருமானத்தையும் அதிகரிக்க வேண்டும். 

இரண்டு வருடங்களில் இப்படியொரு வணிக வளாகத்தை ஆரம்பிக்க முடிந்ததற்கு பெருமைப்பட வேண்டும். 7000 சதுர மீட்டருக்குள் 03 உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன.  

இன்னும் பல நிறுவனங்கள் வர காத்திருக்கின்றன. நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாத்து முன்னேறி இந்த துறைமுக நகரை உலகப்புகழ் பெற்ற மையமாக மாற்றுவோம் என்றார்.   

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம; 

WhatsApp_Image_2024-09-06_at_09.12.15.jp

நகர மையத்தில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்ட வரியில்லா வர்த்தக வளாகத்தை திறந்துவைத்தமை அனைவருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணமாகும். இதை நனவாக்கிய அனைவருக்கும் எனது நன்றிகள். 

தற்போதுள்ள சட்ட வரையறைகளுக்குள் செயற்படுவது மிகச் சவாலாக இருந்தது. அதுகுறித்து ஜனாதிபதியும், இதன் தலைவரும் அறிவார்கள். பழைய சட்டதிட்டங்களுக்கு  அமைய இந்தச் செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கிறோம்.  

நாம் தற்போது புதிய அத்தியாத்திற்குள் நுழைந்திருக்கிறோம். கொழும்பு துறைமுக நகரம் தொடர்பிலான சகல வங்கி சட்டங்களும் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. அதன்படி கொழும்பு துறைமுக நகரம் முழுமையாக வர்த்தகச் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.  

நெருக்கடிகளுக்கு மத்தியில் முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய காலப்பகுதியில் இவ்வாறானதொரு கட்டிடத்தொகுதியை திறந்து வைப்பதற்கான சூழலை உருவாக்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார்.   

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர் பந்துல குணவர்தன, இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் மற்றும் உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் எம். எம். நைமுதீன், சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சாங் குய்பென்ங் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2024-09-06_at_09.12.05.jp

https://www.virakesari.lk/article/192977

மாங்குளத்தில் கண்ணிவெடி வெடித்ததில் 4 பெண் பணியாளர்கள் படுகாயம்!

3 months 2 weeks ago
06 SEP, 2024 | 10:32 AM
image
 

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் - துணுக்காய் பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த  கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் நால்வர் கண்ணிவெடி  விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். 

இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (05) இடம்பெற்றுள்ளது.  

குறித்த வெடிவிபத்தில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்ட்டிருந்த நான்கு பெண் பணியாளர்களே படுகாயமடைந்துள்ளனர்.  

காயமடைந்தவர்கள் 43, 40, 39  வயதுடையவர்கள் என்பதுடன்  இவர்களில்  மூவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்களுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/192969

13ஐ நடைமுறைப்படுத்துவதாக வழங்கும் வாக்குறுதிகள் தேர்தல் கால வெற்றுக் காசோலைகள் - யாழில் அநுர தெரிவிப்பு

3 months 2 weeks ago
06 SEP, 2024 | 09:55 AM
image
 

 13 நடைமுறைப்படுத்துவது அல்லது 13பிளஸ் வழங்குவது எனக் கூறுவது  தெற்கு வேட்பாளர்களின் தேர்தல் கால வெற்றுக் காசோலை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க யாழில் தெரிவித்தார்.  

யாழ். விரசிங்கம் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (05) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் தனது ஜனாதிபதி பரப்புரை கூட்டத்தில் உரையாற்றும் போதே அனுரகுமார திசாநாயக்க  இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில், 

தமிழ் மக்களிடம் 13ஐ வைத்து வியாபாரம் செய்வதற்கு நான் வரவில்லை அந்த வியாபாரத்தை செய்யும் நோக்கமும் எனக்கு இல்லை.  

தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலிலும் தமிழ் மக்களுக்கு 13ஐ காட்டி வாக்குகளை பெறும் முயற்சிகள்  தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. 

நான்  தமிழ் மக்களிடம் 13 தருகிறேன் என வியாபாரத்தை கூற மாட்டேன் ஒட்டுமொத்த இலங்கை மக்கள் விரும்பும் மாற்றத்தை உருவாக்குவதோடு புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவேன். 

நாட்டில் நீண்ட காலமாக புரையோடி உள்ள  இலஞ்சம், ஊழல் வாதிகளை அப்புறப்படுத்தி புதிய இலங்கையை உருவாக்குவதே எனது இலக்கு அதற்காகவே மக்கள் எங்களோடு அணி திரண்டுள்ளனர். 

நாட்டு மக்கள் எம்முடன் நடு திரண்டுள்ள நிலையில் சுமந்திரன் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கி தமிழ்  மக்களின் எதிர்பார்ப்பை சீரழிக்கப் பார்க்கிறார். 

சஜித் பிரேமதாச 13 தரப் போகிறாரா அல்லது 13 பிளஸ் தரப் போகிறாரா என்பது தொடர்பில் தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.  

நாங்கள் நாட்டை கொள்ளை அடிக்க வில்லை நாட்டு மக்களை கடனாளியாக்கவில்லை, நாட்டை கொள்ளையடித்தவர்களும் நாட்டை கடனாளியாக்கியவர்களும் தற்போது ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கிய சஜித் மற்றும் ரணில் பக்கமே உள்ளனர்.

இது ஏன் கூறுகிறேன் என்றால் ராஜபக்சர்கள் நாட்டை கொள்ளை அடித்து விட்டார்கள் என கூறிய ரணில் தரப்பினரில் சிலர்  ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசா பக்கம் உள்ளனர். 

அதேபோல மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச ராஜபக்ச குடும்பத்தின் ஊழல் மோசடிகளை மூடி மறப்பதற்காக ஜனாதிபதி தேர்தலில் களம் இறக்கப்பட்டுள்ளார். 

இவருடன் ஊழல் மோசடிகளை தடுப்போம் என கூறி வந்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கம் பக்கத்தில் இருந்த சிலர் நாமல் ராஜபக்சவின் பக்கத்துக்கு சென்றுள்ளனர்.  

ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் நாமல், சஜித், ரணில் அணிகள்  நாட்டை திருடிய நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்ற நபர்களை உள்ளடக்கிய கூட்டமே பகுதி பகுதியாக மூவர் பக்கமும் பிரிந்து நிற்கின்றனர்.  

இவர்களால் நாட்டை அழித்தவர்களை ஒன்றுமே செய்ய முடியாது ஏனெனில் மூவரும் ஒருவரை ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளார்கள்.  

ஆகவே தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்கள் எதிர்பார்த்து உள மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு மக்கள் தயாராக இருக்கின்ற நிலையில் வடக்கு மக்களும் இந்த மாற்றத்தில் பங்கெடுக்க தயாராக வேண்டும் என்றார்.  

https://www.virakesari.lk/article/192967

இலங்கை விமானப்படைக்கு அமெரிக்கா வழங்கிய விமானம் அடுத்த வாரம் இலங்கையை வந்தடையும்!

3 months 2 weeks ago
06 SEP, 2024 | 11:18 AM
image
 

லங்கை விமானப்படைக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட Beechcraft King Air 360ER விமானமானது அடுத்த வாரம் இலங்கையை வந்தடையும் என அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. 

அமெரிக்க  பாதுகாப்புத் திணைக்களத்தின் Building Partner Capacity நிகழ்ச்சித்திட்டத்தினால் நிதியளிக்கப்பட்ட 2019இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நன்கொடை இலங்கை விமானப்படையுடன் காணப்படும் நீண்டகால ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும். 

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், போதைப்பொருள் தடுப்பு மற்றும் கடத்தல் மற்றும் கள்ளக்கடத்தலை முறியடித்தல் ஆகிய விடயங்களில் இலங்கையின் திறன்களை அதிகரிக்கும் வகையில் இம்மேம்படுத்தப்பட்ட விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நன்கொடை அமெரிக்க இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பினை மேலும் வலுப்படுத்தும் அதேவேளை இந்நாட்டின் கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் இது கணிசமாக மேம்படுத்தும்.

இலங்கை விமானப்படைக்கு எவ்வித செலவுகளுமின்றி, அமெரிக்க அரசினால் வழங்கப்படும் 19 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியுடைய இம்மானியமானது, விமானம் மற்றும் அதற்கு தேவையான உதவிச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்குகிறது.

இவ்விமானம் அது தொடர்பான அறிமுகம் மற்றும் அதை இயக்குவது தொடர்பான பயிற்சி என்பன நிறைவடைந்த பின்னர், இவ்வாண்டின் பிற்பகுதியில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, இலங்கை அதிகாரிகள் இவ்விமானத்தை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் முழுமையாக தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக அமெரிக்க அதிகாரிகள் மூன்று மாதகால பயிற்சி நிகழ்ச்சித் திட்டமொன்றை நடத்துவார்கள்.

Beechcraft Textron Aviation நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு 2022ஆம் ஆண்டின் இறுதியில் தயாரிப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்ட இவ்விமானமானது 2024ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இறுதி செய்யப்பட்ட ரேடார் மற்றும் புகைப்படக் கருவிகள் போன்ற கடல்சார் ரோந்துப் பணிக்கு தேவையான உணரிகளை நிறுவுதல் உட்பட மேலதிக மேம்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டது.

அடுத்த வாரம் வருகைதருமென எதிர்பார்க்கப்படும் விமானத்தின் வருகைக்குத் தயாராவதற்காக 2024 ஜூன் முதல் ஒகஸ்ட் மாதம் வரை, கன்சாஸ் மற்றும் புளோரிடாவில் இடம்பெற்ற பயிற்சிகளில் இலங்கை விமானப்படை அதிகாரிகள் பங்கேற்றனர். இலங்கையை வந்தடைந்ததும், திருகோணமலை சீனக்குடாவிலுள்ள Maritime Patrol Squadron 3உடன் இணைந்துகொள்வதற்கு முன்பாக இவ்விமானம் இரத்மலானையிலுள்ள விமானப் படைத்தளத்தில் மேலதிக பயிற்சி மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கு உட்படும்.

https://www.virakesari.lk/article/192981

கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்த வேளை,காணாமல் ஆக்கப்பட்ட 158 பேரின் 34வது நினைவு தினம்

3 months 2 weeks ago

கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்த வேளை,காணாமல் ஆக்கப்பட்ட 158 பேரின் 34வது நினைவு தினம்
Vhg செப்டம்பர் 05, 2024
1000319711.jpg

1990ம் ஆண்டு செப்டம்பர் 5ம் திகதி, கிழக்குப் பல்கலைக கழகத்தில், அகதிகளாகத் தஞ்சமடைந்திருந்த 158 பேர், இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட நிலையில், அவர்களது 34வது நினைவு தினம் இன்று(05-09-2024) அனுஸ்டிக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டாலும் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை இழந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டதில் படுகொலை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இன்று, வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில், கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் என்பன இணைந்து நினைவேந்தல் நிகழ்வினை ஏற்பாடு செய்தனர். 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அ.அமலநாயகி,கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றிய தலைவர் வி.கஜரூபன்,சிவில் சமூக செயற்பாட்டாளர் திருமதி ரஜனி ஜெயபிரகாஸ், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் திட்டமுகாமையாளர் செல்வி நா.மிருஜா உட்பட பெருமளவானோர் நினைவேந்தலில் கலந்துகொண்டனர்.

பல்கலைக்கழக வளாகத்தின் முன் பாதாதைகளை ஏந்தியவாறு தமது உறவுகளுக்கு நீதி கோரி கவன ஈர்ப்புபேராட்டத்த்திலும் இவர்கள் ஈடுபட்டனர்.

யாழில். முதியோர் இல்லங்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர் – கருணை கொலை செய்யுமாறு கோரிக்கை

3 months 2 weeks ago

யாழில். முதியோர் இல்லங்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர் – கருணை கொலை செய்யுமாறு கோரிக்கை
adminSeptember 5, 2024
 

யாழ்ப்பாணத்தில் உறவினர்கள் மற்றும் முதியோர் இல்லங்களால் கைவிடப்பட்ட முதியவர் ஒருவர் தன்னை கருணை கொலை செய்யுமாறு , வடமாகாண ஆளூநர் மற்றும் யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஆகியோரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளையதம்பி ஜெயக்குமார் எனும் முதியவரே அவ்வாறு கோரியுள்ளார்.

குறித்த முதியவர் ஒரு காலை இழந்து, நோய்வாய்ப்பட்டு ஆதரவற்ற நிலையில் மானிப்பாய் உதயதாரகை சன சமூக நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தஞ்சமடைந்துள்ளார்.

அவரை அப்பகுதி மக்கள் முதியோர் இல்லம் ஒன்றில் சேர்க்க முயற்சிகளை எடுத்தனர். முதியோர் இல்லங்கள் அவரை ஏற்க மறுத்த நிலையில் , கிராம சேவையாளரின் சிபாரிசு கடிதத்துடனும் முயற்சிகளை மேற்கொண்ட  நிலையில் எந்த முதியோர் இல்லமும் அவரை சேர்க்கவில்லை

அந்நிலையில் பிரதேச செயலரின் சிபாரிசு கடிதத்துடன் பளையில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் சேர்ப்பதற்காக தமது செலவில் வாகனம் ஒன்றில் அவரை ஊரவர்கள் அழைத்து சென்ற போதிலும் , அங்கும் அவரை சேர்த்துக்கொள்ள நிர்வாகம் மறுத்துள்ளது.

அதனால் மீண்டும் தமது சனசமூக நிலையத்திற்கே அவரை அழைத்து வந்திருந்தனர்.

எந்தவொரு முதியோர் இல்லங்களோ , அமைப்புக்களோ , நிறுவனங்களோ தன்னை பொறுப்பேற்கததால் , தன்னை கருணை கொலை செய்து விடுமாறு , வடமாகாண ஆளூநர் மற்றும் யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார்.
 

 

https://globaltamilnews.net/2024/206463/

“சங்கிற்கு“ வாக்களித்து வரலாற்று கடமையை நிறைவேற்றுங்கள் – தமிழர் விடுதலைக் கூட்டணி!

3 months 2 weeks ago
tamil-unaites-libaration-front.png?resiz “சங்கிற்கு“ வாக்களித்து வரலாற்று கடமையை நிறைவேற்றுங்கள் – தமிழர் விடுதலைக் கூட்டணி!

தமிழ்ப் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரனுக்கே எமது ஆதரவு என தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் பரமசிவம் சிறீதரன்,தமிழ் மக்கள் அனைவரும் ‘சங்கு’ச் சின்னத்திற்கு வாக்களித்து தமது வரலாற்று கடமையை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,

எம் அன்புக்கினிய தமிழ் மக்களே! ஈழத் தமிழர்கள் கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் அனாதைகளாக அலைந்து திரிகிறார்கள். நாம் நம்பிய அனைவருமே தேர்தல்களின் பின்னர் எம்மை ஏமாற்றியே வருகிறார்கள். தேர்தலில் வாக்குறுதி கொடுத்த யாருமே அதன் பின்னர் எம்மை மதித்ததில்லை.

இம்முறை எமக்கு ஒரு புதிய தெம்பு பிறந்துள்ளது. வெற்றி பெறப்போவதில்லை எனத் தெரிந்து கொண்டே நாம் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கப் போகிறோம். ஏன் தெரியுமா?

நாம் நம்பிய அனைவரும் எம்மைக் கைவிட்ட போதும், நாம் எமது  உரிமைகளுக்கான போராட்டத்தைக் கைவிடவில்லை என்பதையும், அதற்காகப் போராடும் எமது உணர்வுகளை இன்னும் இழந்து விடவில்லை என்பதையும் அத்துடன் எமது வலிகளையும் வேதனைகளையும் இந்த உலகுக்கு உரக்கச் சொல்லப் போகிறோம்.

வெற்றி பெறும்வரை எமது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட உணர்வுகளை அடுத்த அடுத்த தலைமுறைக்கு ஊட்டுவது எமது வரலாற்றுக் கடமை.

கடந்த காலங்களில் கூட்டணியின் தலைமை பல துரோகங்களுக்குத் துணைபோய் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், இன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை தமிழ் இனத்தின் வரலாற்றுக் கடமையைச் செய்யத்  தயங்காது.

எமது ஆதரவு தமிழ்ப் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்ப்பாளர் அரியநேந்திரன் அவர்களுக்கே. தமிழ் மக்கள் அனைவரும் ‘சங்கு’ச் சின்னத்திற்கு வாக்களித்து தமது வரலாற்று கடமையை நிறைவேற்ற வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம் –  என  குறிப்பிடப்பட்டுள்ளது.

IMG-20240905-WA0023.jpg?resize=424%2C600

https://athavannews.com/2024/1398260

 

#####################     ###################   #######################

 

458631258_519351893837361_80647840616489

நடை பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலின் வாக்குச் சீட்டு இதுதான்.  

😂

சஜித் இரட்டை வேட அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்!

3 months 2 weeks ago
 sajith_premadasa_anura_kumara_dissanayak சஜித் இரட்டை வேட அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்!

”நாட்டில் இனவாதத்தினை மூலதனமாக்கி ஆட்சி பீடம் ஏறிய மொட்டு கட்சி இன்று சுக்குநூறாக பிளவு பட்டுள்ளதாக” தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சம்பிக்க ரணவக்க, ரிசாட் பதியூதீன் ஆகியோர் சஜித்துடன் இருக்கின்றனர். சஜித் பிரேமதாச வவுனியாவுக்கும் மன்னாருக்கும் வருகைதரும் போது சம்பிக்க ரணவக்கவை கூட்டிவரமாட்டார்.

ஆனால், காலிக்கு செல்லும்போது சம்பிக்கவை அழைத்துச்செல்வார். எனினும் அங்கு ரிசாட் பதியூதீனை அழைத்துச் செல்லமாட்டார். என்ன அரசியல் இது. இதுதான் இரட்டை வேட அரசியல். கொள்கை இருப்பது தேசிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே. நாங்கள் அனைத்து இன மக்களின் உரிமைகளை உறுதிசெய்யும் புதிய ஒரு அரசியலமைப்பை உருவாக்குவோம்.

பிரதேச சபைகளில் இருந்து அதிகாரப்பகிர்வை வழங்கும்படியான ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்படும். இனவாதத்தினை மூலதனமாக்கி ஆட்சியினை பெற்ற மொட்டு கட்சி இன்று சுக்குநூறாகிப்போயுள்ளது. இனவாதம் சாதிவாதத்துக்கு தேசிய மக்கள் சக்தியில் இடமில்லை.
போதைப்பொருள் பின்புலத்தில் இருப்பது அரசியல்வாதிகளே.

அது உங்கள் குழந்தைகளை பாதிக்கும். கிராமத்தை பாதிக்கும். அதனை முழுமையாக நாம் தடுத்து நிறுத்துவோம். ரணில் கடைசி நேரத்தில் தோல்வியடைவார். சத்தமில்லாமல் வீடு செல்வார். அது அவருக்கு பழக்கப்பட்ட ஒன்று” இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1398398

சிங்கள மக்களின் பெரும்பான்மை பெற்ற அரசாங்கம் எமக்கு தேவையில்லை; புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் - வவுனியாவில் அநுர

3 months 2 weeks ago
05 SEP, 2024 | 09:51 PM
image
 

எங்களுக்கு தெற்கு சிங்கள மக்களின் பெரும்பான்மை பெற்ற அரசாங்கமோ அல்லது வடக்கு மக்களின் பங்களிப்பு இல்லாத அரசாங்கமோ தேவையில்லை. வடக்கு, கிழக்கு தெற்கு மக்களின் நம்பிக்கையினை வென்ற ஒரு அரசாங்கமே தேவை என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கலைமகள் மைதானத்தில் இன்று வியாழக்கிழமை (5) நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

சம்பிக்க ரணவக்க, ரிசாட் பதியூதீன் ஆகியோர் சஜித்துடன் இருக்கின்றனர். சஜித் பிரேமதாச வவுனியாவுக்கும் மன்னாருக்கும் வருகைதரும் போது சம்பிக்க ரணவக்கவை கூட்டி வரமாட்டார். ஆனால், காலிக்கு செல்லும்போது சம்பிக்கவை அழைத்துச்செல்வார். ஆனால், அங்கு ரிசாட் பதியூதீனை அழைத்துச் செல்லமாட்டார். என்ன அரசியல் இது. இதுதான் இரட்டை அரசியல். 

கொள்கை இருப்பது தேசிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே. நாங்கள் அனைத்து இன மக்களின் உரிமைகளை உறுதிசெய்யும் புதிய ஒரு அரசியலமைப்பை உருவாக்குவோம். பிரதேச சபைகளில் இருந்து அதிகாரப்பகிர்வை வழங்கும்படியான ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்படும்.  

இனவாதத்தினை மூலதனமாக்கி ஆட்சியினை பெற்ற மொட்டு கட்சி இன்று சுக்கு நூறாகிப்போயுள்ளது. இனவாதம் சாதிவாதத்துக்கு தேசிய மக்கள் சக்தியில் இடமில்லை. இப்போதே இந்த நாட்டை கட்டியெழுப்ப ஆரம்பிக்கவேண்டும். விவசாயத்தை பாதுகாக்கவேண்டும். உங்கள் ஆபரணங்கள் எங்கே? அவை வங்கிகளில் இருக்கின்றன. எனவே இந்த  விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும். விதை ஆராய்ச்சி நிலையங்களை புதுப்பிக்கவேண்டும். 

போதைப்பொருள் பின்புலத்தில் இருப்பது அரசியல்வாதிகளே. அது உங்கள் குழந்தைகளை பாதிக்கும். கிராமத்தை பாதிக்கும். அதனை முழுமையாக நாம் தடுத்து நிறுத்துவோம். 

எங்களுக்கு எவ்வாறான ஒரு அரசாங்கம் தேவை. தெற்கில் சிங்கள மக்களின் பெரும்பான்மை பெற்ற அரசாங்கமா அல்லது வடக்கு மக்களின் பங்களிப்பு இல்லாத அரசாங்கமா? அப்படியான அரசு எமக்கு தேவையில்லை. வடக்கு, கிழக்கு, தெற்கு மக்களின் நம்பிக்கையினை வென்ற ஒரு அரசாங்கமே எங்களுக்குத் தேவை. இதற்கு முந்தைய ஜனாதிபதிகள் உருவானது தெற்கில் இருந்து மட்டுமே. இம்முறை வடக்கு, கிழக்கு, தெற்கு மக்கள் இணைந்து தேசிய மக்கள் சக்தியை வெற்றிபெறச் செய்யவேண்டும். 

ரணில் கடைசி நேரத்தில் என்ன செய்வாரோ என்று கூறுகின்றனர். ஒன்றுமில்லை. அவர் தோல்வியடைவார். சத்தமில்லாமல் வீடு செல்வார். அது அவருக்கு பழக்கப்பட்ட ஒன்று. 

இந்த கள்வர்களை, நாட்டையும் பொருளாதாரத்தையும் சீர்குலைத்தவர்களை, போதைப்பொருள் வியாபாரிகளை, உலகத்திடம் எங்களை அவமானப்படுத்தியவர்களை, போரை உருவாக்கியவர்களை, மூவின மக்களிடையில் சண்டைகளை உருவாக்கியவர்களை என அனைவரையும் ஒன்றாக தோற்கடித்து நாட்டை பசுமையாக்கி மக்களின் வாழ்க்கையினை அழகாக்கும் ஒரு புதிய அரசை கொண்டுவருவதற்காக நாம் பாடுபடுவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/192949

Checked
Sun, 12/22/2024 - 16:01
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr