புதிய பதிவுகள்

உஷாரையா, உஷாரு..!

2 days 6 hours ago
இது, எப்படி இருக்கு? அந்த மோட் டார் சைக்கிளில்... வந்தவர், முன்பே திட்டமிட்டு.. செல்போனை பறிக்கவில்லை. அவரை பறிக்கும் மனநிலையை... தூண்டியவர்கள் இவர்களே...

இலங்கை தமிழர்கள் 4.61 இலட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது- நிர்மலா சீதாராமன்

2 days 6 hours ago
இலங்கை தமிழர்கள் 4.61 இலட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது- நிர்மலா சீதாராமன் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பழைய நடைமுறைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது. 1964 முதல் 2008 வரை 4.61 இலட்சம் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதென இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்தகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் மேலும் கூறியுள்ளதாவது, “ குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் நிராகரிக்கும் சட்டமல்ல. புதிய குடியுரிமையை வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கவே திருத்தம் கொண்டுவரப்பட்டது. என்.ஆர்.சி, என்.பி.ஆருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் சம்பந்தமில்லை. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பழைய நடைமுறைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது. 1964 முதல் 2008 வரை 4.61 இலட்சம் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. சி.ஏ.ஏ பற்றி பேசுவோர் அகதிகள் முகாம் பற்றி பேசுவதில்லை. மனித உரிமையை பற்றி பேசாதவர்கள்தான் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேசுகிறார்கள்” என தெரிவித்துள்ளார். http://athavannews.com/இலங்கை-தமிழர்கள்-4-61-இலட்சம/

யாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்

2 days 7 hours ago
யாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் உள்ள ஊடகவியலாளரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 5 க்கும் மேற்பட்டவர்கள் சைக்கிளில் சென்று வீட்டின் நுழைவாயில் மற்றும் கதவு என்பவற்றின் மீது தாக்குதல் மேற்கொண்டு, அங்கிருந்து தப்பி சென்றனரென முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் குறித்த ஊடகவியலாளரது வீட்டின் முன்பாக உள்ள மற்றொரு வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததுடன், அதன்போதும் ஊடகவியலாளர் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து குறித்த குடும்பத்தினர் அங்கிருந்து இடம்பெயர்ந்த நிலையில், நேற்றைய தினம் மீண்டும் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். http://athavannews.com/யாழில்-ஊடகவியலாளரின்-வீட/

சீனாவுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

2 days 7 hours ago
சீனாவுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் இலங்கையர்களுக்கு சுகாதார அமைச்சினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் பரவும் அடையாளம் காணப்படாத வைரஸ் நோயின் காரணமாகவே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய கொரோனா வைரஸ் என சந்தேகிக்கப்படும் வைரஸ் ஒன்று தற்போது சீனாவில் உஹான் மாநிலத்தில் பரவியுள்ளது. இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் இலங்கையர்களை அவதானமாக செயற்படுமாறு சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலைமை குறித்து உலக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கவனம் செலுத்துமாறும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இது தொடர்பாக கூடுதல் கவனத்துடன் செயற்படுவதாகவும் இவ்வாறான நிலைமை ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை சீனாவிற்கு விஜயத்தை மேற்கொள்வோர் அவதானத்துடன் செயற்படுமாறும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் தமது பிரஜைகளுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/சீனாவுக்கு-செல்லும்-இலங்/

இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவது கடினம் – நிதின் கட்கரி

2 days 7 hours ago
இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவது கடினம் – நிதின் கட்கரி “இந்தியாவை 350 இலட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்த்துவது கடினம் தான். எனினும், அது நடக்காத காரியம் அல்ல” என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில், இந்துார் மேலாண்மை சங்கத்தின் 29வது சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “2024ம் ஆண்டுக்குள் இந்தியாவை 350 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்த்துவது என்பது கடினமான இலக்கு தான். எனினும் அது நடக்காத காரியம் அல்ல. உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து இறக்குமதியை குறைத்துவிட்டால் அந்த இலக்கை நாம் எளிதில் எட்டிவிடலாம். நம் நாட்டில் ஏராளமான வளங்களும் உற்பத்தி செய்யும் திறனும் உள்ளன. எனினும் மருந்துகள், மருத்துவ சாதனங்கள், நிலக்கரி, செம்பு, காகிதங்கள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய, கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறோம். நம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றால், இறக்குமதிக்கு அதிக அளவில் செலவு செய்வதை நாம் முதலில் நிறுத்திக்கொள்ளவேண்டும். சிரமங்களையும், சவால்களையும் வாய்ப்புகளாக மாற்றும் திறன்கொண்ட இளைய தலைவர்களிடம், இந்தியாவின் எதிர்காலத்தை நான் காண்கிறேன். ஏற்றுமதியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். அது ஐந்து கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எனத் தெரிவித்துள்ளார். http://athavannews.com/இந்திய-பொருளாதாரத்தை-உய-2/

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு!

2 days 7 hours ago
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு! திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (திங்கட்கிழமை) முதல் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து நாளொன்றுக்கு 60,000 முதல் 70, 000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சாமி தரிசனத்திற்குப் பின்னர், பக்தர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகளும் திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு இலவசமாக ஒரேயொரு லட்டும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக லட்டு வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நாளை முதல் அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிக லட்டு வாங்க விரும்பும் பக்தர்கள் கோயிலுக்கு வெளியே உள்ள பணம் செலுத்தும் நிலையத்தில் 50 ரூபாய் வீதம் எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/திருப்பதி-ஏழுமலையான்-கோ-2/

தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா : தமிழ் முறைப்படி நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை!

2 days 7 hours ago
தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா : தமிழ் முறைப்படி நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை! தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழக்கு விழாவை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் தொடர்ந்து தெரிவித்த அவர், ”தஞ்சைத் தரணியில் மாமன்னர் இராசராச சோழன் எழுப்பிய பெருவுடையார் கோயில், ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழரின் பெருமையையும், கட்டிடக் கலையையும் உலகத்திற்குப் பறைசாற்றும் சின்னமாகப் புகழ் பெற்று விளங்குகிறது. நவீன கட்டிடக்கலை வல்லுநர்களாலும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவுக்குத் தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் அமைப்பு, தமிழர்களின் கட்டிடக்கலைக் கீர்த்தியை விண்முட்டப் பரவச் செய்துள்ளது. மாமன்னர் இராசராச சோழனால் கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயில் 1987-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பன்னாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1996-ஆம் ஆண்டு, தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. 23 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டு 2020, பெப்ரவரி 5-ஆம் நாள் குடமுழுக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகள் இந்துசமய அறநிலையத் துறை மற்றும் மத்திய தொல்லியல் துறை மூலம் நடைபெற்று வருகின்றன. தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என்று தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் முறைப்படி குடமுழுக்கு எனும் கோரிக்கையைத் தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஏற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், தஞ்சைப் பெரிய கோயிலின் அமைப்பு முறையும் தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாகவே இருக்கிறது” எனத் தெரிவித்தார். http://athavannews.com/தஞ்சைப்-பெருவுடையார்-கோய/

தமிழக முதலமைச்சரின் செயற்பாட்டுக்கு குடியரசுத்தலைவர் பாராட்டு

2 days 7 hours ago
தமிழக முதலமைச்சரின் செயற்பாட்டுக்கு குடியரசுத்தலைவர் பாராட்டு விவசாயியாக இருந்ததை மறக்காமல் இன்றும் விவசாயம் செய்யும் தமிழக முதலமைச்சரின் செயல்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்திலேயே வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். குறித்த டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய செயற்பாடுகள் ஊடாக மக்களை கவர்ந்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். இதனால் மக்கள் நிலையான விவசாயத்தை கையில் எடுத்து அதன்மேல் கவனத்தை செலுத்த வேண்டும். ஆட்சி செயற்பாடுகள் மூலம் பல்வேறு விருதுகளை மத்திய அரசிடம் இருந்து பெற்று வந்த முதலமைச்சர், இப்போது தம்முடைய தனிப்பட்ட செயற்பாடுகள் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். http://athavannews.com/தமிழக-முதலமைச்சரின்-செயற/

லிபியா போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்த ஜேர்மனி பேச்சுவார்த்தை ஒரு முக்கிய படியாகும் – எர்டோகன்!

2 days 7 hours ago
லிபியா போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்த ஜேர்மனி பேச்சுவார்த்தை ஒரு முக்கிய படியாகும் – எர்டோகன்! லிபியா போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்த, ஜேர்மனியில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை ஒரு “முக்கியமான படியாக” இருக்கும் என துருக்கிய ஜனாதிபதி தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இஸ்தான்புல் விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “பேர்லின் உச்சிமாநாட்டை ஒரு முக்கியமான படியாகவும், அரசியல் தீர்வாகவும் நாங்கள் பார்க்கிறோம்” என கூறினார். ஆனால் ஜனவரி 12 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு பின்னர் சமாதானத்திற்கான முயற்சிகளில் உள்ள முன்னேற்றத்தை குழப்பவாதிகளின் இலட்சியங்களுக்கு தியாகம் செய்யக்கூடாது” என்றும் தெரிவித்தார். http://athavannews.com/erdogan-says-berlin-talks-important-step-to-cement-libya-ceasefire/

ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் ஏமனில் 60 பேர் உயிரிழப்பு !

2 days 7 hours ago
யேமனில் பள்ளிவாசல் மீது தாக்குதல் – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்வு யேமனில் இராணுவ முகாமில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது. யேமன் நாட்டில் ஜனாதிபதி அப்துரப்பா மன்சூர் ஹாதி படையினருக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சி படையினருக்கும் இடையே 2015ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 19ஆம் திகதி தொடங்கிய உள்நாட்டுப்போர் இன்னும் நீடித்து வருகிறது. இந்நிலையில், யேமன் நகரமான மரிபில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஈரானுடன் இணைந்த ஹவுத்திகள் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 60 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் ஆரம்பத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அல் எக்பரியா தொலைக்காட்சி ஆதாராத்துடன் செய்தி வெளியிட்டது. ஈரானுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையில் யேமனில் ஒரு பினாமி போர் நடந்து வருகிற நிலையில் ஹவுத்திகள் ஈரானின் கைக்கூலிகள் என தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் சனா மற்றும் யேமனின் பெரும்பாலான நகர மையங்களை வைத்திருக்கும் ஹவுத்திகள் ஈரானின் சார்பாக இயங்குகின்றது என்ற குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது. இதனால் இந்த தாக்குதலுக்கு ஹவுத்திஸ் போராளிகள் உடனடியாக பொறுப்பேற்க மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இந்த ஏவுகணை தாக்குதலுக்கு யேமன் ஜனாதிபதி அப்துரப்பா மன்சூர் ஹாதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பயங்கரவாதிகள் நடத்தியுள்ள இந்த தாக்குதல் கோழைத்தனமான தாக்குதல் ஆகும். ஹவுத்தி பயங்கரவாதிகள் நடத்தியுள்ள இந்த தாக்குதல் அவர்கள் அமைதியை, சமாதானத்தை ஒருபோதும் விரும்புவதில்லை என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி சொல்கிறது. இதில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்கள், அழிவு, இந்த பிராந்தியத்தில் ஈரான் செய்துள்ள கைவேலை ஆகும்” என குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் இந்த ஏவுகணை தாக்குதல் குறித்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தரப்பில் இதுவரையில் எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/பள்ளிவாசல்-மீது-தாக்குதல/

யாழில் பொலிஸாரின் மூர்க்கத்தனமான செயற்பாடு! நீதிமன்றம் விடுத்த உத்தரவு

2 days 7 hours ago
பணியிலிருந்து இடை நிறுத்தாமல், இடமாற்றம்.... வேடிக்கை. இப்படி எத்தனை எத்தனை நடக்குது. நல்லவேளை நீதிபதி அவதானித்ததால் சிகிச்சை கிடைக்க வழி ஏற்பட்டிருக்குது. இல்லை என்றால், ஒரு சில நாளின் பின், போலீசாரை தாக்க முற்பட்டதால் துப்பாக்கி பிரயோகம் செய்தோம். என்று முடித்திருப்பார்கள்.

காணாமல் போனவர்கள் இறந்துவிட்டார்கள், அவர்களுக்கு மரண சான்றிதழ் – கோட்டா!

2 days 7 hours ago
அந்த முரளிதரன் கோத்தாவின் கைபொம்மையே. தமிழரின் வாக்கு வாங்கி அதன்மூலம் கோத்தபாயவே தமிழரின் ரட்ஷகர் என்று சர்வதேசத்தில் பிரச்சாரம் செய்து எஜமானை சர்வதேச போர்குற்றத்திலிருந்து விடுவிக்க இந்த கரெட்டி ஓணானும், தமிழரின் தலைவர்கள் என்று காட்டிக்கொடுத்த கூட்டத்தை சர்வதேசத்துக்கு காட்டி சந்திப்புகளை ஏற்படுத்தி தனக்கு சான்றிதழ் பெற சிங்களமும் காத்திருக்குது. சிங்களத்தின் காவலில், தடுப்பில் இருந்து கொலை செய்யப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஆதாரங்களையும், உறவினர்களால் படையினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஆதாரங்களையும் திரட்டி சர்வதேசத்துக்கு அனுப்பி, இந்த கோத்தபாய ஒரு பொய்யன் என நிருபிக்க ஆவன செய்ய வேண்டும். ராஜதந்திரிகள் என பிதற்றுபவர்கள் இதைக்கூட செய்யல எண்டா இவர்கள் என்னதான் செய்து தமிழ்த் தலைவர்கள் என்று பேரம் பேசப்போகினம்?
Checked
Wed, 01/22/2020 - 10:40
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed