புதிய பதிவுகள்2

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

1 day 22 hours ago
இருதய அறுவைச் சிகிச்சையின் பின்... முன்பு போல் எழுத முடியவில்லை என்று சொன்னார். இடைக்கிடை யாழை மேலோட்டமாக பார்ப்பதாகவும் தெரிவித்தார். நீங்களும், ஈழப்பிரியனும் விசாரித்ததாக சொல்கின்றேன் நிழலி. 🙂

இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்

1 day 22 hours ago
இது வரை, இந்த மேற்கு சார்ந்த ஊடகங்கள் பொய்" என்ற "ரிபீட் பல்லவியைத்" தாண்டி, அந்த தரவுகளை நீங்கள் மறுத்து எந்த சான்றையும் தந்ததை நான் காணவில்லையே? இனிச் செய்வீர்களா? எதிர்காலத்தில் வரக்கூடிய ஒரு உரையாடல் சந்தர்ப்பத்தில் உங்கள் கையை (handle) ப் பிடித்து அழைக்க எனக்கு அனுமதி இருக்கிறதா? அறியத் தாருங்கள்😎!

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

1 day 22 hours ago
ரைட்டு, சாத்ஸ் கொச்சிக்காயை கடித்தே விட்டார்🤣. பிகு 1. ஒரு மனிதன் ஒரு நாட்டுக்கு போய் தன் பார்வையில் எழுதிய ஒரு பயணகட்டுரைக்கு (அதில் சொல்லப்பட்டவை கொஸ்பெல் உண்மைகள் என நான் சொல்லவில்லை, நான் கண்டதன் அடிப்படையில் என் கருத்துக்கள் மட்டுமே) - ஒரு மாதமாக சம்பந்தமே இல்லாத பல திரிகளில் குய்யோ….முறையோ என கதறி திரியும், உங்களையும் உங்கள் சகாக்களை நினைக்க பரிதாபமாகவே உள்ளது. 2. சேவல் கூவாமல் விட்டாலும் பொழுது விடியும். நீங்கள் யாழில் எப்படி கதறினாலும் இலங்கையில் வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருக்கும் - நான் கண்டு வந்து எழுதியது - இப்போ இலங்கையில் உள்ள நிலைமை என நான் காண்பதை. யாழில் எழுதும் பல இலங்கை வாசிகள் உளர். எவரும் நான் சொன்னதை மறுக்கவில்லை. நான் எழுதுவது பிழை என்றால் என்னை திருத்துங்கள் என நானே சொன்ன பின்னும். சிலர் வரவேற்று கருத்திட்டுள்ளனர். எதிர்மறையாக எழுதியோர் பலர் 20+ வருடங்களா இலங்கை போகாதோர். @MEERA @nedukkalapoovan சில கேள்விகளை எழுப்பினர் பதில் கூறினேன். அவர்கள் நிலை இலங்கையில் அப்படி ஒரு முன்னேற்றமும் இல்லை என்பதாக படுகிறது. இருக்கட்டும். என்னது போலவே அவர்கள் அனுபவத்தையும் மறுக்கும் தகுதி எனக்கில்லையே. 3. இலங்கை “சொர்க்காபுரி” என எங்கும் நான் எழுதவில்லை. இலங்கை சொர்க்கம் எண்டால் நான் ஏன் இந்த குளிருக்குள் கிடந்து மாரடிக்கப்போகிறேன். “நிலமை எதிர்பார்த்தளவு மோசமில்லை” என்பதற்கும் “நாடு சொர்க்கம்” என்பதற்கும் உள்ள வேறுபாடு புரியாத அளவுக்கு மூளை சிலருக்கு சக்கு பிடித்திருப்பது வருத்தமளிக்கிறது. பிகு:பிகு: மேலே “சொர்கம்யா” என எழுதியது நையாண்டி. கூடவே எலி பிடிக்க சீஸ் தூவது போல், இப்படி எழுதினால் யாருக்கு அதிகம் பத்தும் என ஒரு பரிசோதனையும். காங்கிராட்ஸ் - போட்டியின் வெற்றியாளர் நீங்கள்தான்.

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

1 day 22 hours ago
யாழ்ப்பாணம் போய் வந்தவரை அப்படியே கொஞ்சம் யாழ் பக்கமும் வரச் சொல்லுங்கள். யாழ்ப்பாணத்தை விட யாழ் கொஞ்சம் கிட்ட என்று சொல்லவும்.

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

1 day 22 hours ago
@goshan_che உம் போய்வந்தார்.அப்படி எதுவும் எழுதலையே? ஒருவேளை காரைவிட்டு இறங்கலையோ? சும்மா பகிடிக்கு,தடி பொல்லுகளோடு வந்திடாதேங்கோ.

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

1 day 22 hours ago
மக்களுடன் சகஜமாக மின நெருங்கி பழகுபவர் என்று கூறுவார்கள். கொரோனா காலத்திலும் வன்னியில் இயந்திரங்கள் ஆளணிகளுடன் வந்து கிணறுகள் இறைத்து கொடுத்ததாக ஞாபகம். ஆழந்த அஞ்சல்கள்.

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

1 day 22 hours ago
வெளிநாட்டுகாரரை எப்படித் தான் மணந்து பிடிக்கிறார்களோ தெரியாது. ஆனாலும் கண்டு பிடித்து விடுகிறார்கள். நான் சொல்வது ஒரு செல்போன் வைத்திருந்தால் வெளிநாட்டுக்காரன் இரண்டு போன் வைத்திருந்தால் உள்நாட்டுக்காரன். சிறி பாஞ்ச் எப்படி இருக்கிறார்? ஏன் யாழைவிட்டு ஒதுங்கி இருக்கிறார்.

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

1 day 22 hours ago
தமிழர் உரிமை பெற்றால் ரத்த ஆறு ஓடும் என்பதை நான் எங்கே மறுத்தேன்? நான் சொல்லாத ஒன்றை சொல்லி ஏன் பூசணிக்காயை என் தலையில் கட்டுகிறீர்கள்?

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

1 day 22 hours ago
ஓம் இது அவர்களின் சுற்றுலாத்துறைக்கே ஒரு நாறடிப்புத்தான். எப்போ? இதை நிழலி சொல்லுமாப்போல் ஈழத்தமிழர் அல்லாதோர் முன் கொண்டு செல்லும்போது. இலங்கை உண்மையிலே கொலைகளமாக இருந்த போதே சுற்றுலா போன வெள்ளைகள் பல கோடி. எனவே இப்படி செய்வது பெரிய தாக்கத்தை தராவிடினும் - ஒரு செய்தியையாவது சொல்லும். ஆனால் இப்படியா சுத்துமாத்தோடு வாழ்ந்து வளர்ந்த எமக்கே இதை வைத்து பிம்பம் எழுப்ப முனைவது பேதமை. இதெல்லாம் சப்பை மேட்டர். 2024 நல்லூர் சீசனுக்கு போகும் வெளிநாட்டு தமிழர் அளவு நான் சொல்வதை உறுதி செய்யும். விரட்டப்பட்டதை வடக்கில் இருந்து பார்த்தவர்களுக்கு மறந்தாலும், விரட்டப்பட்டவர்களுக்கு மறக்காது.

முல்லைத்தீவில் 35 ஆடுகளைத் திருடியவர் கைது!

1 day 22 hours ago
ஈழப்பிரியன்... சுகாதார அமைச்சில் இருந்து 679 வாகனங்கள் காணாமல் போயிருக்கும் போது ஆடு காணாமல் போவது சின்ன விசயம் போலுள்ளது. இனி மற்ற அமைச்சுக்களிலும் கணக்கு எடுத்தால்.... குத்து விளக்கில்தான் கனக்குப் பார்க்க வேண்டும்.ஏற்கெனவே... கோத்தா காலத்திலும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து பல வாகனங்கள் காணாமல் போனதாக செய்தி வந்திருந்தது.

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

1 day 22 hours ago
பாஞ்ச் அண்ணை சென்ற மாதம் யாழ்ப்பாணம் போய் வந்தவர். அவர் சொன்னார்... கடையில் பொருட்கள் வாங்க நின்றால், சிலர் வந்து குறிப்பிட்ட சில பொருட்களை வாங்கித் தரும்படி கையை பிடித்து கெஞ்சுவார்களாம். பார்க்க பெரும் பரிதாபமாக இருக்குமாம். அவர்களில் இருவகை உண்டாம். சிலர் வறுமையில் வேறு வழி இல்லாமல் கேட்பவர்கள். மற்றவர்கள் வாங்கிக் கொடுத்த பொருளை கொண்டு போய் வேறு இடங்களில் பாதி விலைக்கு விற்று விட்டு அந்தக் காசில் போதை ஏற்றுவார்கள் என்று என்றார். இதனால்... யாருக்கு கொடுப்பது, யாரை தவிர்ப்பது என்று அவதானமாக இருக்க வேண்டும் என்கிறார். அதனால்.... உண்மையான வறியவர்களும் பாதிக்கப் படுகின்றார்களாம்.

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

1 day 22 hours ago
அண்மையில், தன் இறப்பு குறித்து, தான் இறக்கப் போவதாக அண்மையில் ஒரு YouTube காணொளியில் தெரிவித்து இருந்தார். தான் கனவு கண்டதாகவும், அந்தக் கனவில் தான் இறந்து போவதாகவும், அப்போது ஒரு பாடல் ஒலித்தது எனவும், அந்த பாடலை முடிந்தளவு ஞாபகப்படுத்தி பாடி இருந்தார். ஏழை எளிய மக்களுக்கு பல நல்ல உதவிகள் சேவைகள் செய்த ஒருவர் இவர். சிங்கள மக்கள் இவரையும் நிராகரித்து மகிந்த கட்சிக்கு வாக்களித்து இவரை தோற்கடித்து இருந்தனர்.

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

1 day 22 hours ago
அது. இது நியாயமான, தேவையான, வினத்திறனான செயல். ஈழத்தமிழர், சொற்பமாக ஏனைய தமிழர் மட்டும் வாசிக்கும் தளத்தில் வந்து சிங்களவன் மோடன், இலங்கையில் ஒரே களவு என எழுதுவது ஒரு பயனையும் தராது. எல்லாம் மங்கி, கடைசியில் பார்வையும்?

முல்லைத்தீவில் 35 ஆடுகளைத் திருடியவர் கைது!

1 day 22 hours ago
முல்லைத்தீவு வன்னிப் பகுதிகளில் உள்ள கள்வர்கள் தென்பகுதியில் உள்ள கொள்ளையர்களோடு தொடர்பை ஏற்படுத்தி வாகனங்களைக் கொண்டுவந்து இவர்கள் காட்டும் மோட்டார்சைக்கிள் சைக்கிள் என்பவற்றை அள்ளிப் போட்டுக்கொண்டு போய் தென்பகுதியில் விற்பனை செய்கிறார்களாம். சிலதுகள் ஏதாவது பிரச்சனையில் அகப்படும் போது களவு சாமான் என்று பிடிபடுவதாக சொன்னார்கள்.

பதிலடி கொடுத்தால், அதை தனியாக செய்வீர்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

1 day 23 hours ago
அமெரிக்கா (மற்றும் வாலுகள், வாலுகள் ஒன்றும் அறிவிக்கவில்லைத் தான்) போர்வைக்கு கதை விடுவதை செய்தியாக அமெரிக்கா ஆக்க, மேற்கு ஊடகங்கள் காவுகின்றன. மற்ற (நாடுகள்) எவரும் இதை கருத்தில் எடுக்கவில்லை. எடுப்பது (ராஜதந்திர) மடமை. அனால், இது ராஜதந்திரத்தில் ஒன்றாக (ஐயந்திரிபுக்கு, மறுத்தலுக்கு இடம், காலம் ஏற்படுத்தப்படுகிறது) மேற்கு கருதலாம். ஏனெனில், அப்பட்டமான, இரான் தூதரக தாக்குதலை அவ்வாறே ஏய்க்காட்ட முயன்றன. ஆயினும், பாதுகாப்பு சபையில் வெட்டவெளிச்சம் போட்டு அம்மணத்தை காட்டின. செய்துவிட்டு, இஸ்ரேல் நன்றாக செய்து விட்டது எனறு அறிவிப்பதை எது தடுக்கிறது (ஈரானின் தாக்குதலை தடுத்தது போல, இஸ்ரேல் நன்றாக தடுத்தது விட்டது என்றது போல)? அமெரிக்கா உள்ளேயும் செலவாகு கூடும், தேர்தலில். அனால், இது ஆழமாக போய்விடக் கூடாது எனபதற்கு, ருசியா, சீன நெருக்கப்படுகிறது, பெயராவில் பகிரங்கமாக இஸ்ரேல் இன் பதிலுக்கு, இரான் திருப்பி அடிக்க கூடாது என்பதற்கு (மேற்கும் அதன் rule based. தூஹ்ஹரகம் அழிக்கப்பட்டதை கவலை கூட தெரிவிக்க விடாமல் முடக்கிய மேற்கு). சீன சொல்லி இருப்பது, ஈரானுக்கு அதன் இறைமை, நிலபுல ஒருமைப்பாட்டுக்கு இணைவாக கையாளாக்கூடிய நிலையில் இருக்கிறது. சீனாவின் (ரஸ்சியாவினதும்,) செய்மதிகள் விமானந்தாங்கி, இஸ்ரேல், மற்றும் அரபு நாடுகளை அவதானித்து கொண்டு இருக்கும். மற்றது, அவை f35, எப்படி இருக்கும் என்பதிலும் குறி. (ஈரானிடமும் தொழில்நுட்பங்கள் இருக்கிறது, உண்மையான சண்டையில் வேலை செய்யுமா, செய்யா என்பதை அறிவதற்கும்).

சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு

1 day 23 hours ago
நான் இவ்வாறான, வெளி நாட்டவர்களின் காணொளிகளுக்கு வழக்கமாக இடும் பின்னூட்டம், "ஒரு பெரும் இனப்படுகொலையை, தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளை பாவித்து போர் நடாத்திய ஒரு அரசிடம் இருந்து, சிங்கள இனத்திலும் இருந்தும், வேறு எதனை எதிர்பார்க்கப் போகின்றீர்கள்" என்றே. இதனால் என்ன பயன்? போர்க் குற்ற விசாரணை எல்லாம் நடக்குமா? எனக் கேட்டால், கண்டிப்பாக இல்லை. ஆனால், ஆகக் குறைந்தது ஒரு சிலருக்காவது, இலங்கை எனும் சொர்க்க புரியில், ஒரு இனப்படுகொலை யுத்தம் இடம்பெற்றதா என கேள்விகளாவது மனசில் எழும். நீங்கள் யாழ்ப்பாணம் போனால், வெளி நாட்டில் இருந்து வந்தவர் என்று அவர்கள் புரிந்து கொண்டால், முச்சக்கர சாரதியில் இருந்து தின்னவேலி சந்தையில் காய்கறி விற்பவர் வரைக்கும் நன்றாக ஏமாற்றுவார். கேள்வி கேட்டால், போருக்கு பயந்து ஓடிப் போனவர் தானே என்றும் சிலர் நக்கலடிப்பர்.
Checked
Fri, 04/19/2024 - 11:37
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed