புதிய பதிவுகள்2

அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் சிரிய ஜனாதிபதி

2 months 3 weeks ago
“உங்களுக்கு எத்தனை மனைவிகள்?” - சிரியா ஜனாதிபதியிடம் கேட்ட ட்ரம்ப் 13 Nov, 2025 | 04:09 PM “உங்களுக்கு எத்தனை மனைவிகள் இருக்கிறார்கள்” என சிரியா ஜனாதிபதி அகமது அல்ஷராவிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேட்டது, தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. சிரியா ஜனாதிபதி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, சிரியா ஜனாதிபதிக்கு வாசனைத் திரவியமொன்றை ட்ரம்ப் பரிசாக வழங்கியுள்ளார். அவ்வேளை, “இது ஆண்களுக்கான வாசனைத் திரவியம்” என்று ட்ரம்ப கூறிவிட்டு, அந்த வாசனைத் திரவியத்தை சிரியா ஜனாதிபதி மீது தெளித்திருக்கிறார். “இது மிகச் சிறந்த வாசனைத் திரவியம்” என்றும் “மற்ற வாசனைத் திரவியங்கள் உங்கள் மனைவிக்கானது. உங்களுக்கு எத்தனை மனைவிகள்?” என்று ட்ரம்ப், கேட்க, அதற்கு சிரியா ஜனாதிபதி, “ஒன்றே ஒன்றுதான்” என்று பதிலளித்துள்ளார். அப்போது சுற்றியிருந்த தலைவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்துள்ளது. அத்துடன், இந்த சந்திப்பின்போது அகமது அல்ஷராவும் ட்ரம்புக்கு பல அடையாளப் பரிசுகளை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பண்டைய சிரிய நாட்டுக் கலைப்பொருட்களின் பிரதிகள், குறிப்பாக, அந்நாட்டின் முதல் எழுத்துக்கள், முதல் முத்திரை, முதல் இசைக் குறிப்பு, முதல் சுங்க வரி போன்றவற்றின் குறிப்புப் பிரதிகளை வழங்கியதாக கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/230259

டெல்லி செங்கோட்டை அருகே வெடிப்பு - பலர் உயிரிழப்பு

2 months 3 weeks ago
டெல்லியில் நடந்தது ஒரு தெளிவான பயங்கரவாத தாக்குதல் - அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் 13 Nov, 2025 | 01:41 PM டெல்லியில் நடந்தது ஒரு தெளிவான பயங்கரவாத தாக்குதல் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) தெரிவித்துள்ளார். “டெல்லியில் நடந்தது தெளிவான ஒரு பயங்கரவாத தாக்குதல் என்றே தெரிகிறது. இதை விசாரிப்பதற்கான உதவிகளை வழங்க அமெரிக்கா முன்வந்தது. ஆனால், இந்தியா மிக கவனமாகவும் திறமையாகவும் விசாரித்து வருகிறது. இந்தியர்களை வெகுவாக பாராட்டவேண்டும்” என மார்கோ ரூபியோ மேலும் தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் டெல்லி, செங்கோட்டைக்கு முன்பாக கடந்த 10ஆம் திகதி இரவு வெடிபொருட்களை கொண்டுசென்ற கார் வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலத்தில் 3 ஆயிரம் கிலோ அமோனியம் நைட்ரேட் உட்பட பல ஆயுதங்கள், பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே டெல்லியில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது. இவ்வெடிப்பு அசம்பாவிதம் தொடர்பில் டெல்லி பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது பயங்கரவாதத்தோடு தொடர்புடைய வெடிப்பு சம்பவம் என்பதால் பின்னர், உள்விவகார அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவின் பேரில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/230239

பதவிலிருந்து ஓய்வு பெறுவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவிப்பு!

2 months 3 weeks ago
13 Nov, 2025 | 03:21 PM தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் பதவிலிருந்து ஓய்வு பெறுவதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார். சமன் ஸ்ரீ ரத்நாயக்க , 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருந்தார். 34 வருடங்களாக அரச சேவையில் பணியாற்றிய சமன் ஸ்ரீ ரத்நாயக்க , 2025 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதியுடன் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தனது கடமையின் போது உதவிய முன்னாள் அமைச்சர்கள், அரசாங்க ஊழியர்கள், அமைச்சர்கள், பிரதம அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நன்றியை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/230252

மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தி.இராஜகோபாலன் காலமானார்!

2 months 3 weeks ago
13 Nov, 2025 | 02:18 PM மலையகத்தின் மூத்த எழுத்தாளரும் ஆய்வாளருமான தி.இராஜகோபாலன் தனது 86ஆவது வயதில் காலமானார். லிந்துலை, துலாங்கந்தையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், மலையக சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட ஆளுமையாக தனது வாழ்நாள் முழுதும் விளங்கினார். வீரகேசரி வாரவெளியீட்டில் அவர் எழுதிய “சிரிக்கும் செவ்வந்தி பூ”, “கண்ணான கண்மணிக்கு கதை கேட்க ஆசை இல்லையோ” போன்ற தொடர்கதைகள் பெருமளவு வரவேற்பை பெற்றன. வீரகேசரிக்கு மட்டுமன்றி, பல பத்திரிகைகளுக்கு பல கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், தொடர்களை இவர் எழுதினார். இவர் தமிழ் மொழியில் எந்தளவுக்கு ஆழமான அறிவைப் பெற்றிருந்தாரோ அதேபோன்று ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்றவர் ஆவார். இவரது பல படைப்புகள், ஆக்கங்கள் மலையக மண்ணின் எழுச்சி மீதான எதிர்பார்ப்பை பிரதிபலித்தன. அன்னாரின் மறைவு மலையக சமூகத்துக்கு பேரிழப்பாகிறது. https://www.virakesari.lk/article/230243

2025 உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் - தேசிய நிகழ்வு நாளை ஆரம்பம்

2 months 3 weeks ago
2025 உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வார தேசிய நிகழ்வு நாளை ஆரம்பம் Published By: Digital Desk 1 13 Nov, 2025 | 01:29 PM 2025ஆம் ஆண்டுக்கான உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வார தேசியநிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (14) நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. "நமது நிகழ்காலத்தைப் பாதுகாக்கவும், நமது எதிர்காலத்தைப் பாதுகாக்கவும்" என்ற தலைப்பில் தேசிய நுண்ணுயிர் எதிர்ப்பு தடுப்பு மையத்தால் இந்த தேசிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பின் போக்கைக் குறைக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், 2050 ஆம் ஆண்டளவில் நுண்ணுயிர் எதிர்ப்பு காரணமாக வருடந்தோறும் 10 மில்லியன் உயிரிழப்புக்கள் ஏற்படுமென தெரிவிக்கப்படுகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பு என்பது பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சைகள் மற்றும் ஒட்டுண்ணிகள் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டதாக உருவாகும் ஒரு நிகழ்வாகும். இது உலகளாவிய சுகாதாரம் மற்றும் மேம்பாட்டு அச்சுறுத்தல் என தெரிவிக்கப்படுகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் AMR பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் அதிகரிப்பதையும் மருந்து எதிர்ப்புத் தொற்றுகளின் தோற்றம் மற்றும் பரவலைக் குறைப்பதற்கான சிறந்த நடைமுறைகளை இனம்காணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மருந்து எதிர்ப்பின் விளைவாக, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் பிற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் மூலம் தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பது கடினம் இதன்காரணமாக நோய் பரவும் அபாயம், கடுமையான நோய் மற்றும் உயிரிழப்பு அதிகரிக்கும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் நுண்ணுயிர் எதிர்ப்பு தடுப்புக்கான தேசிய மையத்தின் தலைவர் பிரதி பணிப்பாளர் ஜெனரல் டாக்டர் பிரியந்த அத்தப்பத்து தெரிவித்துள்ளார். அதன்படி, 2019ஆம் ஆண்டில் நுண்ணுயிர் எதிர்ப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.27 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4.95 மில்லியன் ஆகும். இதனை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், 2050 ஆம் ஆண்டுக்குள் நுண்ணுயிர் எதிர்ப்பு காரணமாக ஆண்டுதோறும் 10 மில்லியன் மக்கள் உயிரிழப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான நோய் காரணமாக நீண்டகால வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் விலையுயர்ந்த மருந்துகளின் தேவை ஆகியவற்றுடன், நுண்ணுயிர் எதிர்ப்பால் பாதிக்கப்பட்ட தனிநபர்களும் அவர்களது குடும்பங்களும் பெரும் நிதிச்செலவுகள் காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். 2030ஆம் ஆண்டுக்குள், நுண்ணுயிர் எதிர்ப்பு 24 மில்லியன் மக்களை தீவிர வறுமையில் தள்ளக்கூடும். மேலும், 2050ஆம் ஆண்டுக்குள், நுண்ணுயிர் எதிர்ப்பு தாக்கம், அதிக விலை கொண்ட மருந்துகள் மற்றும் தீவிர சிகிச்சை சேவைகளால் 1.2 டிரில்லியன் சுகாதாரப் பராமரிப்பு செலவுகளுக்கு வழிவகுக்கும். நுண்ணுயிர் எதிர்ப்பை எதிர்த்துப் போராட நாம் செய்யக்கூடிய முக்கிய விடயங்களில் மனிதர்களிடமும் விலங்குகளிடமும் தேவையற்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதாகும் என குறிப்பிடப்படுகிறது. மருத்துவ ஆலோசனை இல்லாமல் மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதனூடாக, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் தொற்று பரவுவதைத் தடுக்கமுடியும் என தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/230236

முதல்தர கிரிக்கெட்டில் மேகாலயா வீரர் ஆகாஷ் இரண்டு சாதனைகள்: 8 பந்துகளில் 8 சிக்ஸ்கள்; அதிவேக அரைச் சதம்

2 months 3 weeks ago
8 பந்துகளில் 8 சிக்ஸர்: வெறும் 11 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை - யார் இந்த ஆகாஷ் சௌத்ரி? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, ரஞ்சி டிராஃபியில் மேகாலயாவுக்காக விளையாடுகிறார் ஆகாஷ் சௌத்ரி 10 நவம்பர் 2025 முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து மேகாலயா கிரிகெட் வீரர் ஆகாஷ் சௌத்ரி வரலாறு படைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை ஆடிய அந்த இன்னிங்ஸில் தொடர்ந்து 8 பந்துகளில் 8 சிக்ஸர்களை அவர் விளாசினார். முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரின் ஆறு பந்துகளிலும் சிக்ஸர் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமை பெற்றார் அவர். வேகப் பந்துவீச்சாளரான ஆகாஷ் சௌத்ரி, அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை பிளேட் டிவிஷனின் குரூப் போட்டியில் இந்த சாதனையைப் படைத்தார். சூரத்தில் நடந்த இந்த ஆட்டத்தின் இரண்டாவது நாளில் மேகாலயா அணியின் ஸ்கோர் 576/6 என இருந்தபோது அவர் களமிறங்கினார். மேகாலயா அணி முதல் இன்னிங்ஸில் 628/6 என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்ய, தொடர்ந்து விளையாடிய அருணாச்சல பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 73 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரவி சாஸ்திரி, கேரி சோபர்ஸ் சாதனை சமன் ஆகாஷ் சௌத்ரிக்கு முன்னதாக முதல் தரப் போட்டிகளில் ஒரு ஓவரின் ஆறு பந்துகளிலும் சிக்ஸர் அடித்தவர்கள் வெஸ்ட் இண்டீஸின் கேரி சோபர்ஸ் மற்றும் இந்தியாவின் ரவி சாஸ்திரி ஆகிய இருவர் மட்டுமே. . தென்னாப்பிரிக்காவின் மைக் ப்ராக்டரும் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். ஆனால், இருவேறு ஓவர்களில் அவர் 6 சிக்ஸர்களை அடித்தார். தன் இன்னிங்ஸின் முதல் மூன்று பந்துகளில் ஆகாஷ் இரண்டு ரன் மட்டுமே எடுத்திருந்தார். அதன்பிறகு இடது கை ஸ்பின்னர் லிமார் தாபி வீசிய ஓவரில் 6 பந்துளிலுமே சிக்ஸர் அடித்தார் அவர். அடுத்த ஓவரில் ஆஃப் ஸ்பின்னர் டி.என்.ஆர்.மோஹித் பந்துவீச்சில், தான் சந்தித்த முதலிரு பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பி அவர் அரைசதம் கடந்தார். இதன்மூலம் 11 பந்துகளிலேயே அரைசதம் அடித்து அவர் சாதனை படைத்தார். இதற்கு முன், 'குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர்' என்ற சாதனையை டெஸ்டர்ஷயர் அணியின் வெய்ன் வைட் வைத்திருந்தார். 2012-ஆம் ஆண்டு எஸக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 12 பந்துகளில் அரைசதம் கடந்திருந்தார். 9 நிமிடங்களில் அரைசதம் இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகளின்படி, நேர அடிப்படையில் முதல் தர கிரிக்கெட்டில் அதிவிரைவாக அடிக்கப்பட்ட அரைசதங்களின் பட்டியலில் இது இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது. ஆகாஷ் சௌத்ரி தன் அரைசதத்தை 9 நிமிடங்களில் அடித்திருக்கிறார். இந்த சாதனை கிளைவ் இன்மேன் வசம் இருப்பதாக இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ சொல்கிறது. 1965-ஆம் ஆண்டு லெஸ்டர்ஷயர் அணிக்காக ஆடிய அவர், நாட்டிங்ஹாம்ஷயருக்கு எதிராக 13 பந்துகளில் அரைசதம் அடித்திருக்கிறார். ஆனால், அது 8 நிமிடங்களிலேயே அடிக்கப்பட்டிருக்கிறது. வலது கை மித வேகப்பந்துவீச்சாளரான ஆகாஷ் சௌத்ரி, வலது கை பேட்டர். அவர் 1999-ஆம் ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி பிறந்தவர் என்று இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ குறிப்பிட்டிருக்கிறது. அவர் 30 முதல் தரப் போட்டிகளில் (அருணாச்சல பிரதேசத்துக்கு எதிரான இந்தப் போட்டிக்கு முன்பு வரை) 14.37 என்ற சராசரியில் 503 ரன்கள் எடுத்திருந்தார். 29.97 என்ற சராசரியில் 87 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியிருக்கிறார். இவருக்கு முன்பாக, முதல் தரப் போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனை பந்தீப் சிங் வசம் இருந்தது. 2015-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் அணிக்காக ஆடிய அவர் திரிபுரா அணிக்கெதிராக 15 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஒரு ஓவரின் 6 பந்துகளிலும் சிக்ஸர் அடித்த சாதனையை முதன்முதலில் செய்தவர் கேரி சோபர்ஸ். 1968-ஆம் ஆண்டு நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் கிலாமார்கன் அணிகள் மோதிய போட்டியில், மால்கம் நேஷ் பந்துவீச்சில் அந்தச் சாதனையை செய்தார் சோபர்ஸ். 1984-85 ரஞ்சி சீசனில் பரோடாவுக்கு எதிரான போட்டியில் அன்றைய பாம்பே (இன்று மும்பை) அணிக்கு விளையாடிய ஆல்ரவுண்டர் ரவி சாஸ்திரி, திலக் ராஜ் வீசிய ஒரு ஓவரின் ஆறு பந்துகளிலும் சிக்ஸர் அடித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2y16gz17eo

வீதி விளக்குகளுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறிய உள்ளூராட்சி நிறுவனங்கள் - வலுசக்தி அமைச்சர்

2 months 3 weeks ago
13 Nov, 2025 | 12:47 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான உள்ளூராட்சி நிறுவனங்கள் வீதி விளக்குகளுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் பதிலளித்ததாவது, மின்சார கட்டணத்திற்கான பட்டியல்கள் இலங்கை மின்சார சபையினூடாக விநியோகிக்கப்பட்டுள்ள போதிலும், குறித்த உள்ளூராட்சி நிறுவனங்கள் அதனை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. வீதி விளக்குகளுக்கான விசேட மின்சார கட்டணம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணமே அறிவிடப்படுகின்றன. கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான உள்ளூராட்சி நிறுவனங்கள் வீதி விளக்குகளுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ளன. இவ்விடயம் குறித்து மாநகர சபையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/230220

சுவிஸ் தமிழர் பொருளாதார மேம்பாட்டு நிறுவனம்.

2 months 3 weeks ago
இந்தக் காணொளியில் எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய கேள்வி இவர்களின் வர்த்தகத்தை யாழில் நேரடியாக செய்ய நேரடி விமானசேவை செய்ய முடியாதாம். காரணம் யாழில் இறங்கி ஏறும் விமானங்களுக்கு இந்திய அனுமதி பெற வேண்டுமாம். இதனால் பெரும் பணம் விரயமாகும் என்கிறார்கள். இன்னுமொரு ஆச்சரியம் இலங்கை விமானங்களுக்கும் இந்தியாவே இறங்குவதற்கு அனுமதி பெற வேண்டுமாம். இலங்கையில் அதுவும் யாழில் விமான போக்குவரத்தை கட்டுப்படுத்த தனியான கோபுரம் இல்லையா?

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

2 months 3 weeks ago
நான் சொல்வதும் நிறுவனத்தின் வரி, vat போன்றவை. வருமானம் குறிப்பிட்ட அளவுக்கு வந்தால், , uk இல் நிறுவனம் வரித்திணைக்கத்திடம் vat (ஆஸ்திரலியாவில் ஒப்பானது gst) க்கு பதிய வேண்டும், தனிநபர் நிறுவனமும் (sole trader ) உள்ளடக்கம். அது விற்கும் பொருட்கள், சேவைகளுக்கு vat ஐ, அரசு சார்பாக / பிரதிநிதியாக, vat ஐ அறவியவேண்டும் அனால், அந்த vat அறவிவிட்டுதலில், uk இல் நிறுவனங்கள் தொழிற்படுவது பெருமளவில் வங்கியை ஒத்தது. தனிநபர் சம்பளத்தை சொன்னது புரிவது இலகுவாக. சிறுவிளக்கம் : வங்கிக்கு (தனிநபர், வேலையாளர்) சம்பளம் செலுத்தப்பட்டால், அந்த பணம் வங்கிக்கு பாவிக்க உரிமை, வேலையாளர் வங்கிக்கு unsecured creditor. வங்கியில், வேலையாளர் unsecured creditor என்ற படியால், அந்த பணம் வங்கிக்கு கிட்டத்தட்ட சொந்தம், இது நம்ப / ஏறுகொள்ளமுடியாது தான், ஆனால் அது தான் நிலை. கிட்டதட்ட இதே நிலை தான் vat போன்றவற்றில் - அதாவது அரசு சார்பாக , பிரதிநிதியாக, நிறுவனம் சேகரிக்கும் அல்லது நிறுவனத்துக்கு செலுத்தப்படும், நிறுவனதின் விடயங்களோடு தொடர்பு அல்லாத பணம். (மேலே சொன்ன தனிநபர் வேலையாளர் / வங்கி யின் கிட்டத்தட்ட ஒத்த நிலையினால் தான் ), UK இப்போது சொல்வது, 'பாதுகாக்க' முயற்சி எடுக்கப்பட்டு இருக்கிறது என்கிறது. இடையூறு இல்லை (ஏய்ப்பை பற்றி ஒன்றும் சொல்லவில்லை, அது வரியை மறைப்பது, ஒன்று அல்லது பலவழிகளில்)

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

2 months 3 weeks ago
கோசான் கூறுவது நிறுவனத்தின் வருமான வரி ஏய்ப்பு பற்றியது என நினைக்கிறேன், நீங்கள் குறுவது, நுகர்வோர் பொருள்கள்சேவைகள் மீதான தீர்வை என நினைக்கிறேன், இரண்டும் வெவ்வேறானவர்களுக்கான தீர்வை, எதற்கும் கோசான் தான் உறுதிப்படுத்த வேண்டும், நான் இடையூறு செய்தால் மன்னிக்கவும்.
Checked
Wed, 02/11/2026 - 02:34
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed