புதிய பதிவுகள்2

2026 ஆம் நிதியாண்டுக்கான இலங்கையின் 80 ஆவது வரவு - செலவுத் திட்டம்!

2 months 3 weeks ago
வரவு - செலவு திட்டத்தில் அரச, தனியார் துறை என யாருக்கும் எந்த நன்மையும் இல்லை - ரஞ்சித் மத்தும பண்டார 13 Nov, 2025 | 06:23 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வரவு - செலவு திட்டத்தில் அரச துறை, தனியார் துறை என யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. அதனால் மக்கள் அரசாங்கத்துக்கு பதிலளிக்க மாகாண சபை தேர்தலை எதிர்பார்த்து இருக்கிறார்கள். முடிந்தால் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுகிறேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (13) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டின் அபிவிருத்தியை தடை செய்து இந்த நாட்டில் ஊழல் மோசடிகளில் யாராவது ஈடுபட்டிருந்தால், அவர்களைவிட நாட்டின் அபிவிருத்திக்கு எதிராக . மக்கள் விடுதலை முன்னணியும் விடுதலை புலிகளும் ஈடுபட்டு வந்திருக்கின்றன. மக்கள் விடுதலை முன்னணி அமைக்கப்பட்டு 60 வருடங்களில் இந்த நாட்டை ஆட்சி செய்துவந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் எதிராக செயற்பட்டு வந்தது. அதேபோன்று வெளிநாட்டு ஒப்பந்தங்களுக்கு எதிராக செயற்பட்டு வந்தார்கள். ஆனால் மக்கள் விடுதலை முன்னணி இன்று எமது வெளிநாட்டுக்கொள்கை, கல்விக்கொள்கை, பொருளாதாரக் கொகையை ஏற்றுக்கொண்டிருக்கிறது. அன்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்காவிட்டால், நாடு அபிவிருத்தியடைந்திருக்கும். மேலும் நாடு வீழ்ச்சியடைவதற்கு இந்த அரசாங்கமும் பொறுப்புக்கூறவேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறும்போது அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் இன்று நாணய நிதியத்தின் தாலத்துக்கும் ஆடும் நிலையில் ஜனாதிபதி அநுரகுமார இருக்கிறார். மக்களின் அத்தியாவசிய பொருட்களின் நூற்றுக்கு 18வீதம் வரி குறைப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். குறைத்தீர்களா என கேட்கிறோம். துறைமுகத்தில் இறக்கப்படும் கட்டணத்துக்கு எரிபொருள் வழங்குவதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்திருந்தார்.வழங்குகிறார்களா? எமது காலத்தில் இருந்ததைவிட எரிபொருள் விலை தற்போது அதிகமாகும். சர்வதேச நாணய நிதியத்தின் கைபொம்மையாக மாறியுள்ள இந்த அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்துள்ளது. நாங்கள் அட்சியில் இருக்கும்போது நாட்டில் வறுமை வீதம் நூற்றுக்கு 10வீதமாகவே இருந்தது. தற்போது அது நூற்றுக்கு 35வீதமாக அதிகரித்துள்ளது. அதனால் திறைசேரியில் பணம் அதிகமாக இருந்தால், மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்த நிவாரணங்களை வழங்குங்கள். அரச ஊழியர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்ட அரசாங்கம் அரச ஊழியர்களை ஏமாற்றி இருக்கின்றனர். எனவே வரவு செலவு திட்டத்தில் அரசதுறை, தனியார் துறை என யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. அதனால் மக்கள் அரசாங்கத்துக்கு பதிலளிக்க மாகாணசபை தேர்தலை எதிர்பார்த்து இருக்கிறார்கள். அதனால் முடிந்தால் அரசாங்கம் மாகாணசபை தேர்தலை நடத்தட்டும். பாெதுத் தேர்தலைவிட உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அரசாங்கத்துக்கு 23இலட்சம் வாக்குகள் குறைவடைந்துள்ளது. மாகாணசபை தேர்தலை நடத்தினால் மேலும் 25இலட்சம் வாக்குகள் இல்லாமல்போகும். அதனால் முடிந்தால் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/230276

யாழில். தோட்ட கிணற்றினுள் கயிறு கட்டி இறங்கி நீராடியவர் கயிறு அறுந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழப்பு

2 months 3 weeks ago
Published By: Vishnu 13 Nov, 2025 | 08:29 PM யாழ்ப்பாணத்தில் தோட்ட கிணற்றில் கயிறு கட்டி குளித்துக்கொண்டிருந்த இளைஞன் கயிறு அறுந்த நிலையில் , நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறை , கொம்மாந்துறை பகுதியை சேர்ந்த நிரெக்சன் (வயது 18) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக கிணறுகளில் நீர் மட்டம் அதிகரித்தும் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் கொமாந்துறையில் உள்ள தோட்ட கிணற்றினுள் ஆளுக்கு ஒவ்வொரு கயிறு கட்டி இறங்கி ஐந்து பேர் நீராடியுள்ளனர். சில மணி நேரத்தில் நான்கு பேர் நீராடியது போது வீடு செல்வோம் என புறப்பட்ட போது , ஒருவர் மாத்திரம் நீங்கள் செல்லுங்கள் நான் இன்னும் சற்று நேரம் நீராடி விட்டு வருவதாக கூறி தொடர்ந்து கிணற்றினுள் நீராடி இருக்கிறார் ஏனைய நால்வரும் வீடு சென்ற நிலையில் , நீண்ட நேரமாகியும் மற்றையவர் வராததால் , கிணற்றடிக்கு சென்ற போது , அவர் கட்டியிருந்த கயிறு அறுந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து கிணற்றினுள் தேடிய போது , கிணற்றினுள் சடலமாக காணப்பட்டுள்ளார். பின்னர் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளதால் , நீர் நிலைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையால் , அவற்றில் நீராடுதலை தவிர்க்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். https://www.virakesari.lk/article/230285

முடிவுக்கு வந்த அமெரிக்க அரசு முடக்கம் - டிரம்புக்கு ஆறுதல் கிடைத்தாலும் சவால் தொடருமா?

2 months 3 weeks ago
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் ஆண்டனி ஸுர்கர் வட அமெரிக்க செய்தியாளர், வாஷிங்டன் 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட அரசாங்க முடக்கம் 43 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அரசு ஊழியர்கள் மீண்டும் சம்பளம் பெறத் தொடங்குவார்கள். தேசிய பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படும். குறைக்கப்பட்ட அல்லது முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு சேவைகள் மீண்டும் தொடங்கும். அனைத்தும் அமைதியான பிறகு, நிதி மசோதாவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட மை காய்ந்த பிறகு, இந்தச் சாதனை படைத்த அரசு முடக்கம் என்ன சாதித்தது? அதன் விலை என்ன? செனட் சபையில் ஜனநாயகக் கட்சியினர் சிறுபான்மையினராக இருந்தபோதிலும், குடியரசுக் கட்சியினர் அரசாங்கத்திற்குத் தற்காலிகமாக நிதியளிக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுத்ததன் மூலம் முடக்கத்தைத் தூண்ட முடிந்தது. ஆண்டின் இறுதியில் காலாவதியாகவிருந்த குறைந்த வருமானம் உடைய அமெரிக்கர்களுக்கான சுகாதார காப்பீட்டு மானியங்களை நீட்டிக்க குடியரசுக் கட்சியினர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் ஒரு நிபந்தனையை விதித்தனர். அரசாங்கத்தை மீண்டும் செயல்பட வைக்க ஒரு சில ஜனநாயகக் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை, கட்சி ஒழுங்கை மீறி வாக்களித்த பின்னர், மானியங்கள் குறித்து செனட்டில் வாக்கெடுப்பு பற்றிய வாக்குறுதி மட்டுமே கிடைத்தது. ஆனால் குடியரசுக் கட்சியின் ஆதரவோ அல்லது பிரதிநிதிகள் சபையில் அவசியமான வாக்கெடுப்பு குறித்தோ எந்த வாக்குறுதியும் கிடைக்கவில்லை. இதனால், கட்சியின் இடதுசாரி உறுப்பினர்கள் கோபமடைந்துள்ளனர். பட மூலாதாரம், Getty Images கோபமடைந்த ஒரு தரப்பு நிதி மசோதாவுக்கு வாக்களிக்காத ஜனநாயகக் கட்சி செனட் சபை தலைவர் சக் ஷூமர் மீது, இந்த அரசை மீண்டும் திறக்கும் திட்டத்திற்கு ரகசியமாக உடந்தையாக இருந்தார் அல்லது திறமையற்றவராக இருந்தார் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இடைக்காலத் தேர்தல்களில் கிடைத்த வெற்றி தங்களுக்குச் சாதகமாக இருந்தபோதிலும் தங்கள் கட்சி சரணடைந்துவிட்டதாக அவர்கள் உணர்ந்தனர். இந்த முடக்கத்தின் மூலமாகச் செய்யப்பட்ட தியாகங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதோ என்று அவர்கள் அஞ்சுகின்றனர். கலிபோர்னியாவின் ஆளுநர் கவின் நியூசோம் போன்ற பிரதான ஜனநாயகக் கட்சியினர்கூட முடக்க ஒப்பந்தத்தை "பரிதாபகரமானது" மற்றும் "சரணாகதி" என்று அழைத்தனர். நியூசோம் 2028இல் அதிபராக வேண்டுமென்ற லட்சியங்களைக் கொண்டவர் என்பதால் கட்சியினரின் மனநிலையை அறிய அவர் ஒரு நல்ல அளவுகோலாக இருக்கலாம். அவர் ஜோ பைடனின் விசுவாசமான ஆதரவாளராக இருந்தார். மேலும் டிரம்புக்கு எதிராக பைடனின் விவாத செயல்திறன் மிக மோசமாக இருந்தபோதும் அப்போதைய அதிபருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க முன்வந்தார். அவர் கோபமாக இருந்தால், அது ஜனநாயகக் கட்சித் தலைவர்களுக்கு நல்ல அறிகுறி அல்ல. பட மூலாதாரம், Getty Images டிரம்ப் மனநிலை என்ன? டிரம்பை பொறுத்தவரை, செனட் முட்டுக்கட்டை ஞாயிற்றுக்கிழமை உடைந்ததில் இருந்து, அவரது மனநிலை எச்சரிக்கை நிறைந்த நம்பிக்கையில் இருந்து கொண்டாட்டத்தை நோக்கித் திரும்பியுள்ளது. செவ்வாய்க் கிழமையன்று, அவர் நாடாளுமன்றத்தின் குடியரசுக் கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்தார் மற்றும் அரசாங்கத்தை மீண்டும் இயக்க வாக்களித்ததை "மிகப்பெரிய வெற்றி" என்று அழைத்தார். "நாங்கள் எங்கள் நாட்டைத் திறந்து வைக்கிறோம். அது ஒருபோதும் மூடப்பட்டிருக்கவே கூடாது," என்று வீரர் தின நினைவேந்தலில் கூறினார். டிரம்ப், ஷூமர் மீதான ஜனநாயகக் கட்சியின் கோபத்தை உணர்ந்து, திங்கள் கிழமை இரவு ஃபாக்ஸ் நியூஸ் நேர்காணலின்போது அதைப் பயன்படுத்திக் கொண்டார். "குடியரசுக் கட்சியை உடைக்க முடியும் என்று அவர் நினைத்தார். ஆனால் குடியரசுக் கட்சியினர் அவரை உடைத்தனர்," என்று ஜனநாயகக் கட்சியின் செனட் தலைவரைப் பற்றி டிரம்ப் கூறினார். டிரம்ப் சில நேரங்களில் பின்வாங்குவது போலத் தோன்றிய போதும், அரசாங்கத்தை மீண்டும் இயக்க இருந்த முட்டுக்கட்டையை அகற்ற மறுத்ததற்காக, அவர் கடந்த வாரம் செனட் குடியரசுக் கட்சியினரைக் கண்டித்தார். அவர் இறுதியில், குறிப்பிடத்தக்க சலுகைகள் எதையும் வழங்காமல் அரசு முடக்கத்தில் இருந்து வெளியே வந்தார். கடந்த 40 நாட்களில் கருத்துக் கணிப்புகளில் அவரது எண்கள் குறைந்து இருந்தாலும், குடியரசுக் கட்சியினர் இடைக்காலத் தேர்தல்களை எதிர்கொள்ள இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அடுத்து என்ன? முடக்கம் முடிவடைந்தவுடன், நாடாளுமன்றம் அதன் வழக்கமான நிகழ்ச்சி நிரலுக்குத் திரும்பும். பிரதிநிதிகள் சபை ஒரு மாதத்திற்கும் மேலாகப் பயனுள்ள செயல்பாடில்லாமல் இருந்தாலும், அடுத்த ஆண்டு தேர்தல் சுழற்சி தொடங்குவதற்கு முன்பு சில முக்கிய சட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று குடியரசுக் கட்சியினர் இன்னும் நம்புகிறார்கள். முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தில் சில அரசுத் துறைகளுக்கு செப்டம்பர் வரை நிதியளிக்கப்பட்டாலும், மற்றொரு முடக்கத்தைத் தவிர்க்க ஜனவரி மாத இறுதிக்குள் மீதமுள்ள அரசாங்கத்திற்கான செலவினங்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். தங்கள் காயங்களை ஆற்றி வரும் ஜனநாயகக் கட்சியினர், மீண்டும் மோதுவதற்கான ஒரு வாய்ப்புக்காக ஏங்கலாம். இதற்கிடையில், அவர்கள் எழுப்பிய சுகாதார மானியங்கள் பிரச்னை, இந்த வருட இறுதியில் தங்கள் காப்பீட்டுச் செலவுகள் இரு மடங்கு அல்லது மும்மடங்காக அதிகரிப்பதைக் காணப் போகும் கோடிக்கணக்கான அமெரிக்கர்களுக்கு ஒரு கவலையாக மாறக்கூடும். அத்தகைய வாக்காளர் வலியை புறக்கணித்தால் குடியரசுக் கட்சியினர் தங்கள் சொந்த அரசியல் ஆபத்தை எதிர்கொள்வார்கள். மேலும் அது மட்டுமே டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினர் எதிர்நோக்கியிருக்கும் ஒரே ஆபத்து அல்ல. பிரதிநிதிகள் சபையில் அரசுக்கு நிதியளிக்கும் வாக்கெடுப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய நாளில், சமீபத்தில் மரணமடைந்த தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் பற்றிய சமீபத்திய செய்திகளைப் பற்றிப் பேசுவதிலேயே அதிக நேரம் சென்றது. புதன்கிழமை பிற்பகுதியில், நாடாளுமன்ற உறுப்பினர் அடெலிடா கிரிஜால்வா பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். மேலும் எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான அனைத்துக் கோப்புகளையும் வெளியிட நீதித் துறைக்கு உத்தரவிட சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரும் மனுவில் 218வது நபராக, இறுதி நபராக கையெழுத்திட்டார். தனது அரசுக்கு நிதி பெறுவதில் பெற்ற வெற்றி மறைக்கப்படுவதாகத் தனது ட்ரூத் சோஷியல் இணையதளத்தில் டிரம்ப் புகார் கூற இதுவே போதுமானதாக இருந்தது. "முடக்கத்திலும், வேறு பல விஷயங்களிலும் அவர்கள் எவ்வளவு மோசமாகச் செயல்பட்டார்கள் என்பதிலிருந்து திசைதிருப்ப எதையும் செய்யத் துணியும் ஜனநாயகக் கட்சியினர், ஜெஃப்ரி எப்ஸ்டீன் புரளியை மீண்டும் கொண்டு வர முயல்கின்றனர்," என்று அவர் எழுதினார். சிறப்பாகத் திட்டமிடப்பட்ட திட்டங்கள் மற்றும் அரசியல் உத்திகள் ஒரு நொடியில் தடம் புரளக்கூடும் என்பதற்கான மிகத் தெளிவான நினைவூட்டலாக இது உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crl275jjyx1o

குடும்ப உறவுகளிலுள்ள சுயநலமும் பொறுமையும்

2 months 3 weeks ago
எங்களில் பலருக்குள்ளும் இதே கேள்வி இருந்து கொண்டேயிருக்கின்றது, கிருபன். பாசம், மனிதாபிமானம், குற்ற உணர்வு, விளம்பரம் என்று, நீங்கள் சொல்லியிருப்பது போலவே, பல வகையான உந்துதல்கள் இருக்கின்றன. நாங்கள் செய்யும் சில செயல்கள் கூட இதில் எந்த வகை என்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்பதும் உண்டு என்றே நினைக்கின்றேன். விளம்பர வகை என்று வரும் போது ஒப்பீட்டளவில் கொஞ்சம் இலகுவாக அவற்றை உணர முடிகின்றது, உதாரணம்: சுதா நாராயணமூர்த்தியின் சேவைகள் பற்றி வரும் துணுக்குகள் போன்றவை. மற்றைய வகைகளை பிரித்தறிவது சிரமம் போல. நீண்ட பல வருட செயற்பாடுகளின் பின் இதுவரை இவற்றால் விளைந்த பயன்கள் என்ன என்ற கேள்வி சில சமயங்களில் பலருக்கும் ஒரு அயர்ச்சியை கொடுக்கக்கூடும். ஆனால் ஜெயமோகன் அவர்கள் சொல்லியிருப்பது போல சில விடயங்களில் ஒரு சமூகமாக நாங்கள் பயன்களை கணக்குப் போட்டுப் பார்க்கவும் கூடாது என்றே தோன்றுகின்றது.

விஜய் கட்சியை சேர்ந்தவர்களை ‘தற்குறிகள் என விமர்சிக்காதீர்!’ - எழிலனின் கவனம் ஈர்த்த பேச்சும், பின்புல அரசியலும்

2 months 3 weeks ago
“விஜய் கட்சியை சேர்ந்தவர்களை தற்குறிகள் என திமுகவினர் விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அந்த இளைஞர்கள் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்களிடம் நாம்தான் போய் பேச வேண்டும். அவர்களிடம் பேசாமல் விட்டது நம் தவறு. தற்போது திமுகவில் 200 இளம் பேச்சாளர்கள் பயிற்சி பெற்றுள்ளார்கள். அவர்கள் இந்த இளைஞர்களிடம் பேச வேண்டும். நாம் அவர்களுடன் உரையாட வேண்டும். விமர்சனம் செய்யக் கூடாது. அவர்களை அரசியல்படுத்த வேண்டியது நமது கடமை” - இது ’திமுக 75 - அறிவுத் திருவிழா’ என்ற பெயரில் நடைபெற்ற மாநாட்டில் ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ எழிலன் நாகநாதன் பேசியது. இணையத்தில் அவரது பேச்சு வைரலாகிக் கொண்டிருக்கிறது. ‘சிலர் இது திமுக அதிருப்தி பேச்சு என்று கதை கட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அலசி ஆராய்ந்தால் எழிலனின் சிந்தனை ஆழ்ந்த அர்த்தம் பொதிந்தது. திமுகவுக்கு சுயபரிசோதனை பேச்சு என்பதை மறுக்க முடியாது என்பதுபோலவே தவெகவை, விஜய்யை தோலுரிக்கும் பேச்சும் கூட’ என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அரசியல்படுத்துவது எனப்படுவது யாதெனில்? - திராவிடக் கட்சிகளின் தொடக்கக் காலங்களில் இளைஞர், இளம்பெண்கள் பாசறைகள் வளர்த்தெடுத்தவர்கள் தான் இன்று அக்கட்சிகளில் கோலோச்சியுள்ள முகங்கள் எனலாம். இடதுசாரி கட்சிகளும் இதில் சளைத்தது இல்லை. விசிகவும் கூட இளைஞர்களை அரசியல்படுத்துவதில் தீவிரமாகவே செயல்பட்டு வருகிறது. ஆனால், புதிதாய் முளைத்த தவெக இந்த மாதிரியான எந்த முன்னெடுப்புகளையும் எடுக்காமலேயே ‘தொண்டர்’ படையை வைத்திருப்பதாக மார்தட்டிக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டம் பற்றிதான் அரசியல் நிபுணர்கள் தங்களின் பரந்துபட்ட பார்வையை முன்வைத்தனர். அவர்கள் கருத்துகளின் தொகுப்பு வருமாறு: ADVERTISEMENT “குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு அரசியலை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம். நம்மில் எத்தனை வீடுகளில் குழந்தைகளுடன் செய்தி வாசிக்கிறோம். அரசியல் பேசுகிறோம் என்று எண்ணிப் பார்க்க பத்து விரல்கள் கூட தேவையில்லை. அந்தளவுக்கு வீடுகளில் அரசியல் தீண்டத்தகாத பொருளாக இருக்கும்போது தாங்கள் திரையில், பேஸ்புக்கில், இன்ஸ்டாவில் கொண்டாடி ரசிக்கும் ஒருவர் நான் அரசியல் செய்யப்போகிறேன், முதல்வராகப் போகிறேன் என்று வந்து நின்றால், மிக எளிதாக அவர் பக்கம் இளம் தலைமுறையினர் சாய்ந்துவிடுவர். அதுதான் விஜய் கட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. தனது சினிமா ஹீரோ படம் ஃப்ளாப் ஆனாலும் முட்டுக் கொடுப்பதுபோலத் தான் கரூர் நெரிசலில் குழந்தைகளைப் பறிகொடுத்தவர்கள் கூட விஜய்க்கு முட்டு கொடுக்கிறார்கள். வீடு என்பது வெறும் கூடாரம் அல்ல. அது அரசியல் தன் பிரக்ஞையோடு குழந்தைகளை வளர்த்தெடுபது. அதேவேளையில் முக்கியமாக மனதில் கொள்ள வேண்டியது அரசியல் திணிப்பாக இருக்கக் கூடாது.” இது தந்திரமா? - “விஜய் கட்சித் தொண்டர்கள் அரசியல்மயமாக்கப்படாததால் தான் அவர்கள் விஜய் பிரச்சார வாகனத்தை உயிரைப் பணயம் வைத்து தொடர்ந்தார்கள். அதனால்தான் செய்தியாளரை சீண்டி விளையாடுகிறார்கள். அதனால்தான் அரசியல் பிரசாரத்துக்கு குடும்ப விழா போல் குழந்தைகளைக் கூட்டி வந்து பறிகொடுத்தார்கள். ஆனால், அந்த சமூகப் பிழையை மறைத்து அவர்களை ‘தற்குறிகள்’ எனப் பொதுமைப்படுத்துவது, இழிவுபடுத்துவது ஓர் அரசியல் தந்திரம். அதுவும் நிச்சயமாக எழிலன் குறிப்பிட்டதுபோல் ஒரு குறிப்பிட்டக் கட்சியின் சதியாகவும் இருக்கலாம் என்பதில் உடன்படுகிறேன்” என்று கூறுகிறார் கள அரசியல் நிபுணர் ஒருவர். இது குறித்து அவர் மேலும் விவரிக்கையில், “விஜய் ரசிகர்களை / தவெக தொண்டர்களை நாம் தமிழர் கட்சியில் கூடிக் கலையும் தொண்டர்களோடு ஒப்பிடலாம். சீமானின் திரைபிம்ப அடையாளம், தமிழ்த் தேசிய் உத்வேகப் பேச்சால் அவர் கட்சியில் இணைந்த பலர் ஒரு சில ஆண்டுகளில் அதிலிருந்து விலகி பிற கட்சிகளிலோ இணைவதைப் பார்த்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை ஒரு மெட்ரோ நகருக்கு வரும் ஃப்ளோட்டிங் பாப்புலேஷன் போல் அவர் கட்சியில் ஒரு கூட்டம் உள்ளே வருவதும், வெளியே செல்வதுமாக இருக்கும். அதுபோல் தான் இளைஞர் பட்டாளம் ஒன்று இப்போது தவெகவில் ஐக்கியமாகியுள்ளது. கொள்கை பிடிப்போ, லட்சியமோ கோட்பாடோ இல்லை. ஈர்ப்பரசியலில் சிக்கியவர்களே இவர்கள். அரசியல் பழகாமல் ஆர்ப்பரிக்கும் கூட்டம், அது சார்ந்த கட்சிக்கு மட்டுமல்ல, மாநில அரசியலுக்கே ஆபத்து. உணர்ச்சிவசப்பட்டு கோஷம் போடுபவர்கள் இன்னும் வாக்கு அதிகாரம் பெறாத இளம் தளிர்களையும் தங்கள் பாதையில் இழுக்கும் ஆபத்து அதிகம். இது புற்றுநோய் போன்றது. ஆரம்பக்கட்டத்தில் கண்டறிந்துவிட்ட நிலையில் அதற்கான சிகிச்சையை சரியாகச் செய்ய வேண்டும். அதுதான் அரசியல்மயமாக்குவது. விஜய் கட்சியினரை தற்குறிகள் என்பது எலீட் அரசியல்வாதிகளின் ‘ஆர்கஸ்ட்ரேட்டட் பாலிடிக்ஸ்’. அவர்களை அரசியல்படுத்த வேண்டும் என்ற எழிலனின் யோசனையும் அரசியல்தான். ஆனால், அதன்மூலம் விட்டேத்தியாக திரியும் இளைஞர்களை அரசியல்மயமாக்கலாம். அதன்மூலம் அவர்களுக்கு திமுகவுக்கு மடைமாற்றலாம். அல்லது குறைந்தபட்சம் விழிப்புணர்வு உடையவர்களாவது மாற்றலாம்” என்றார். எப்படி உருவானது இந்த வெற்றிடம்? - “விட்டில் பூச்சிகள் விளக்கை நோக்கிப் பாய்வது போல் பெருமளவிலான இளைஞர் கூட்டம், ஏன் ஜென்ஸீ தலைமுறை என்று வைத்துக் கொள்வோம் எப்படி தவெக, தவெக என்று மார்தட்டுகிறது என்று பார்த்தால் ஓர் அரசியல் வெற்றிடம் உருவாகியுள்ளதை மறுக்க முடியாது” என்கிறார் இன்னொரு அரசியல் விமர்சகர். அவர் கூறியதாவது: "திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், இன்பநிதி என்று வாரிசு அரசியல் பட்டவர்த்தமாகிக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் இபிஎஸ் vs ஓபிஎஸ், இபிஎஸ் vs ஓபிஎஸ், டிடிவி, சசிகலா, செங்கோட்டையன் என்று உள்கட்சி அரசியல் நீண்டு கொண்டிருக்கிறது. விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிக அவர் உடல்நலம் தேய ஆரம்பத்திலிருந்தே தேய ஆரம்பித்துவிடது. விசிக, இடது சாரிகள், காங்கிரஸ் தனியாக வருவதில்லை கூட்டணி அரசியல்தான் சரி என்று சேஃப் ஜோன் பாலிடிக்ஸ் செய்து கொண்டிருக்கிறது. மலர்ந்தே தீரும் என்று தாமரைக் கட்சி தடம் பதிக்க முயன்று கொண்டிருக்கிறது. இப்படியான சூழலில் தான் விஜய் என்ட்ரி கொடுக்கிறார். நான் கோடிகளில் வாங்கும் சம்பளத்தை உதறுகிறேன்; கரியர் உச்சத்தை கைவிடுகிறேன்; அரசியல் வாரிசும் அல்ல கட்சியை அடகுவைக்கும் செயலையும் செய்ய மாட்டேன் என்று ரவுண்டு கட்டி கம்பு சுத்துகிறார். மேம்போக்காக அவர் சொல்வதெல்லாம் ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும் கூட, அதற்காக மட்டுமே அரசியல் கத்துக்குட்டி கையில் ஆட்சியை எப்படிக் கொடுக்க முடியும். இது ஆண்ட, ஆளும் கட்சியினர் சுயபரிசோதனை செய்ய வேண்டிய காலம். விஜய் தாராளமாக அரசியல் கட்சி நடத்தட்டும், ஆட்சிக்கு ஆசைப்படட்டும். ஆனால் அவரும், அவர் கட்சி விசிறிகளும் அரசியல்மயமாக்கப்படாத நிலையில் அவருக்கு ஓட்டுப்போடுவது எந்த மாதிரியான எதிர்காலத்தை உருவாக்கும் என்பது கணிக்க முடியாதது” என்று காட்டமாக விமர்சித்தார். ‘ஏன் என்ற கேள்வி கேட்காமல்...’ - தமிழகத்தில் எடுப்பார் கைப்பிள்ளையாக நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அரசியல் மாற்றாக கருதிக் கொள்ளும் கட்சியாக தவெக நிற்கிறது. அதுதான் முடிவு என்று அவர்கள் தீர்மானிக்கும் முன்; அதையும் தாண்டி நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆழ்ந்து யோசித்து தேர்ந்தெடுங்கள் என்று அவர்களை அரசியல்மயமாக்க வேண்டும். “ஒரு தொண்டனுக்கு தேவைப்படும்போது அவனுடம் நிற்பவன்தான் தலைவன். திரையில் வீர ஆவேச வசனங்களும், ஃப்ரெண்ட்லி ஜெஸ்ச்சரும் காட்டுவதால் நிஜத்திலும் விஜய் அப்படியானவராகவே இருப்பார் என்று கூறிவிடமுடியாதல்லவா? இயல்பில் அவர் சற்றே தனிமை விரும்பி என்று அவரை அறிந்தவர்கள் கூறுகின்றனர். இருக்கட்டும், ஆனால் பொது வாழ்வுக்கு வருவதென்று முடிவெடுத்து, முதல் தேர்தலிலேயே முதல்வராகத்தான் ஆவேன் என்று பேசினால், ஊடகங்களை சந்திக்க, அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல துணிச்சல் இருக்க வேண்டாமா? அப்படியான சிறு அறிகுறி கூட விஜய்யிடம் இல்லையே. அவரை எப்படி நான் அரசியல் மாற்றாகப் பார்க்க முடியும்” என்று கேள்வி எழுப்பச் செய்ய வேண்டும். குடும்ப அரசியலையும் கேள்வி கேட்கச் செய்ய வேண்டும்; கோஷ்டிப் பூசலையும், அடகுவைக்கும் அரசியலையும் விமர்சிக்கக் கற்றுத்தர வேண்டும். இளைஞர்கள் அரசியலில் மூழ்கித் தெளிவார்கள். அது நிச்சயம் சாக்கடை அல்ல என்பதை அவர்களே உணர்வார்கள். ஏன் என்ற கேள்வி கேட்காவிட்டால் வாழ்க்கை மட்டுமல்ல அரசியல் வாழ்க்கையும் இருக்காது என்பதே நிதர்சனம். ‘தற்குறிகள் என விமர்சிக்காதீர்!’ - எழிலனின் கவனம் ஈர்த்த பேச்சும், பின்புல அரசியலும் | DMK MLA' viral speech about TVK cadres and an insight into Vijay's politics - hindutamil.in

நாட்டில் ஐந்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் - சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

2 months 3 weeks ago
13 Nov, 2025 | 03:41 PM நாட்டில் ஐந்து பேரில் ஒருவர் தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது நாட்டில் அதிகரித்துவரும் பொது சுகாதார கவலையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய கண் வைத்தியசாலையின் ஆலோசகர் கண் அறுவை சிகிச்சை நிபுணர் கபில பந்துதிலக, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கண் நோய்களாலும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அதனை தெரிவித்துள்ளார். அண்மைய தரவுகளின்படி, நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையில் 73 சதவீத அதிகரிப்பை கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகளவில் ஒன்பது பெரியவர்களில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில், இந்த பாதிப்பு 23 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, அதாவது ஐந்து பெரியவர்களில் ஒருவர் நீரிழிவு நோயாளர்களாக உள்ளனர். அவர்களில், மூன்றில் ஒரு பகுதியினர் கண் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்,. மேலும் இதில் 11 சதவீதமானோர் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் பார்வையற்றவர்களாக மாறும் அபாயம் உள்ளது, ஏனெனில் நீரிழிவு குறிப்பாக கண்களை பாதிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நீரிழிவு தொடர்பான குருட்டுத்தன்மை மற்றும் பார்வைக் குறைபாடு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 923 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், பொருளாதார விளைவுகள் கணிசமானவை என்றும் வைத்தியர் பந்துதிலக மேலும் குறிப்பிட்டார். குறிப்பாக 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கே இவ்வாறான நோய் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நோய் தடுக்கக்கூடியது எனவும். இந்த நபர்கள் பார்வையை இழக்க எந்த காரணமும் இல்லை. அதன் ஆரம்ப கட்டங்களில், வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுக் கட்டுப்பாடு மற்றும் வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், முழுமையான தடுப்பு சாத்தியமில்லை என்றாலும், சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சை பார்வையைப் பாதுகாக்க உதவும் என தேசிய கண் வைத்தியசாலையின் ஆலோசகர் கண் அறுவை சிகிச்சை நிபுணர் கபில பந்துதிலக தெரிவித்துள்ளார். நாட்டில் ஐந்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் - சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை | Virakesari.lk

நாய்களால் மனைவியிடம் விவாகரத்து கோரிய கணவர்

2 months 3 weeks ago
13 Nov, 2025 | 05:08 PM இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர் தெருநாய்கள் பிரச்சினையால் மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து கோரியுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணமானதில் இருந்து அவர் மனைவியின் செல்லப்பிராணி பாசத்தால் பல கொடுமைகளை அனுபவித்து வருவதாக கூறி வந்துள்ளார். இது தொடர்பில் கணவர், 'திருமணம் முடிந்த கொஞ்சநாளில் மனைவி ஒரு தெரு நாயை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார். அவர் வசித்து வந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போதும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் தெருவில் சுற்றி திரியும் நாய்களை வீட்டுக்கு எடுத்து வந்தார். தன் கணவருக்கு சமைக்கிறாரோ இல்லையோ. அந்த தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார். அத்தோடு அந்த நாய்களை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தார். இரவு நேரம் என் அருகில் தூங்கியதைவிட அந்த நாய்களுடன்தான் அதிக நேரம் தூங்கினார்' எனத் தெரிவித்துள்ளார். மனைவியின் இந்த செயல் கணவரை எரிச்சல் படுத்தியது. பக்கத்தில் வசித்து வந்த பொதுமக்களும் அப்பெண் மீது பொலிஸில் முறைப்பாடு அளித்தனர். ஆனால் விலங்குகள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்த அவர் பொதுமக்கள் மீது குற்றம் சாட்டினார். இதனால் அந்த பெண்ணின் மனைவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த அவர் கடந்த 2007 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தப்பி ஓடினார். இருந்த போதிலும் கணவரை அவர் தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். மேலும் தெருநாய்களை திருமணம் செய்து கொண்டது போல புகைப்படத்தை காட்டி தன்னை வெறுப்பேற்றுவதாகவும், இதன் காரணமாக மன அழுத்தத்தால் தனது ஆண்மை இழந்து விட்டதாகவும் அவர் புலம்ப ஆரம்பித்தார். கணவரும் பொலிஸ் நிலையத்துக்கு அலைந்தார். இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற அவர் தெரு நாய்களுடன் வாழ்க்கை நடத்திய மனைவியுடன் இனியும் குடும்பம் நடத்த முடியாது என கருதி தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனக்கோரி அகமதாபாத் குடும்ப நல நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துளள்ளார். மேலும் உடனடியாக தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று கண்ணீர் வடித்துள்ளார். மனைவிக்கு 15 இலட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவரது மனைவியோ கணவரின் குடும்பத்தினர் வெளிநாட்டில் ரிசார்ட் நடத்தி வருவதால் தனக்கு 2 ரூபாய் கோடி வேண்டும் என கேட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. நாய்களால் மனைவியிடம் விவாகரத்து கோரிய கணவர் | Virakesari.lk

மன்னாரில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு

2 months 3 weeks ago
3 Nov, 2025 | 05:58 PM மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து, அவர்களை கௌரவிக்கும் முகமாக மன்னார் இரணை இலுப்பைக்குளம், முள்ளிக்குளம் பண்டிவிரிச்சான் பிரதேசத்தைச் சேர்ந்த 95 மாவீரர்களின் பெற்றோர்கள் இன்று (13) கெளரவிக்கப்பட்டனர். மன்னார் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்களின் உறவுகளுடன் 150 மேற்பட்டோர் பங்குபற்றலுடன் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் அருட்தந்தையர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். முதலில் மாவீரர் பெற்றோர்களால் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு பின் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது. இந்நிகழ்வில் மாவீரர் தியாகங்கள் பற்றிய பேச்சுக்கள் நடைபெற்றதுடன் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டதுடன், இந்நிகழ்வின் நினைவாக மரக்கன்றுகளும் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. மன்னாரில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு | Virakesari.lk

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்திய – இந்திய எம்.பி. தொல். திருமாவளவன்

2 months 3 weeks ago
13 Nov, 2025 | 07:06 PM முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள் வியாழக்கிழமை (13) முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு சென்று உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கான திடீர் வருகையின்போது அவரை அப்பகுதி பொதுமக்கள் வரவேற்று, பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து, கவிஞர் யோ. புரட்சி அவர்கள் தன்னுடைய “ஆயிரம் கவிதைகள்” நூலை தொல். திருமாவளவன் அவர்களிடம் கையளித்தார். பின்னர் திருமாவளவன் அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சென்றடைந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கான பொதுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமிழர்களை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, உள்ளூர் மக்களிடையே பெரும் உணர்ச்சி பூர்வமான சூழலை ஏற்படுத்தியது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்திய – இந்திய எம்.பி. தொல். திருமாவளவன் | Virakesari.lk

குடும்ப உறவுகளிலுள்ள சுயநலமும் பொறுமையும்

2 months 3 weeks ago
எங்களின் காலகட்டம் மிக அதிகமாகவே இப்படியான ஒரு சூழலுடனேயே அமைந்துவிட்டது, சுவி ஐயா. சில வேளைகளில் தனிப்பட்ட ரீதியில் நான் களைத்துப் போய் விட்டேன் போல என்ற நினைப்பு கூட எனக்கு வருவதுண்டு..............
Checked
Wed, 02/11/2026 - 08:36
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed