புதிய பதிவுகள்2

யாழ் மாவட்டத்திற்கு காற்று மாசுபடுத்தலினால் ஆபத்தா??

2 months 4 weeks ago
அண்மைக்கலாமாக வடமாகாணத்தில் காற்றின் தரம் குறைந்து வருகின்றது அதாவது யாழ்ப்பாணத்தில் காற்று அதிகளவில் மாசுபட்டு வருகின்றது. தற்பொழுது அது ஆபத்தான நிலைக்கு அண்மித்து உள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது காற்று சுவாசிக்க உகந்தது அல்ல என்று கூறப்படுகின்ற நிலையில் இவ்வாறு மாசுப்படல் பல்வேறு காரணங்களால் நடைபெறுகின்றது அது பற்றி இப்பதிவு விளக்குகின்றது. யாழ் மாவட்டத்தில் இவ்வாறு காற்று மாசு படுவதற்கான காரணங்கள் என்ன? முக்கியமாக அயல்நாடான இந்தியாவில் இருந்து குறிப்பாக டில்லி போன்ற நகரங்களில் இருந்து மாசுபட்ட காற்று யாழ் மாவட்டத்தினை நோக்கி நகர்வதாகும். குறிப்பாக வடகீழ் பருவ பெயர்ச்சி காற்று நிலவும் நவம்பர் முதல் பெப்ரவரி வரையான காலப்பகுதியில் இவ்வாறான மாசடைந்த காற்று யாழ் மாவட்டத்தினை வந்தடைகின்றது. மேலும் இக்காலப்பகுதியில் நிலவவும் அதிகரித்த ஈரப்பதன் காரணமாக வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மற்றும் குப்பைகளினை எரிப்பதினால் வரும் புகை என்பன வளிமண்டலத்தில் மேல் நோக்கி செல்லாமல் தரை மட்டத்தில் தங்குவதினால் மனிதர்கள் அதிகளவு மாசடைந்த காற்றினை சுவாசிக்க நேரிடுகின்றது. 2. வேறு என்ன காரணங்களினால் காற்று மாசடைகின்றது? மேற்குறிய காரணங்கள் தவிர கட்டிட நிர்மாண பணிகளினாலும், வாகனங்கள் வீதியில் செல்லும் பொழுது வீதியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் படிந்த தூசுக்கள் வளி மண்டலத்திற்கு வெளிக்கிளம்புவதினால் காற்று மாசுபடுகின்றது 3. கொழும்பு போன்ற நகரங்களில் காற்று மாசுபடுவதற்கான பிரதான காரணங்கள் என்ன? பிரதானமாக வாகனம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையே காரணம் ஆகும் 4. யாழில் தற்போது நிலவவும் அதிக மாசுப்பட்ட காற்று எவ்வாறு குறைவடையும்? வட கீழ் பருவ காற்று முடிவடைந்து தென் மேல் பருவ காற்று (May to September) தொடங்கும் பொழுது இந்து சமுத்திரத்தில் இருந்து வரும் ஈரப்பதன் நிறைந்த காற்று இம்மாசுக்களை கழுவி செல்ல தற்பொழுது நிலவும் சூழ்நிலை மாறும். இடைப்பட்ட காலங்களில் உள்ளூரில் நிலவும் காற்று ஒட்டத்தினை பொறுத்து காற்று மாசுபடல் இருக்கும் 5. எவ்வாறான மாசுக்கள் இந்த மாசடைந்த காற்றில் இருக்கும்? வாகன மற்றும் தொழில் சாலைகளில் இருந்து வெளியேறும் புகைகளில் இருக்கும் கார்பன் துகள்கள், கார்பன் மோனோக்ஸ்சைடு, கந்தகம், நைட்ரோஜென் ஓட்ஸ்சைட், ஈயம், பிளாஸ்ட்டிக் துகள்கள் …. போன்ற பல்வேறு மாசுக்கள் இருக்கும். இவை தவிர பல்வேறு சிறு துணிக்கைகள் இருக்கும் இவை மிக மிக மெல்லிய துகள்களாக இருக்கும். முக்கியமாக 2.5 மைக்ரோ மீட்டர் அல்லது அதிலும் குறைவான மைக்ரோ மீட்டரில் இம்மாசுக்கள் இருக்கும் இதன் காரணமாக இந்த மாசுக்கள் நுரையீரலின் சுவாச சிற்றறை வரை சென்றடையும் இவை பொதுவாக PM 2.5 என்றழைக்கப்படும். பல சந்தர்ப்பங்களில் இவை நுரையீரலினை தாண்டி இரத்தத்தில் கலக்கும் PM 10 என்பது 10 மைக்ரோ மீட்டர் அல்லது அதிலும் குறைவான மைக்ரோ மீட்டரில் இருக்கும் மாசுக்கள். உதாரணமாக வீதியோர தூசுக்கள், மகரந்த மணிகள் போன்றன இதில் அடங்கும். இவை எமது நாசிக்குழியுடன் நின்று விடும். எனவே PM 2.5 என்பது PM 10 என்பதினை விட ஆபத்தானது. 6. ஏன் மாசடைந்த காற்று மணக்கவில்லை? சாதாரணமாக நாம் மாசடைந்த காற்றினை சுவாசிக்கும் பொழுது வித்தியாசமான மணமாக இருக்கும் ஆனால் தற்போதைய மாசடைந்த காற்று அதிகளவு ஈரப்பதன் மூலம் நிரம்பி இருப்பதினால் இவ்வாறான மணம் இருக்க மாட்டாது 7. மாசடைந்த காற்றினை சுவாசித்தினால் மனிதருக்கு எவ்வாறான சுகாதார சீர்கேடுகள் ஏற்படும்? ஏற்கனவே சுவாச நோய்கள் உள்ளவர்களுக்கு அந்த நோய்கள் அதிகரிக்கும் அதாவது தீவிரத் தன்மை அடையும். சிலருக்கு புதிதாக சுவாசம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் அதாவது இருமல் மற்றும் சுவாசிப்பதில் கடின தன்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும் 8. எம்மை எவ்வாறு நாம் பாதுகாத்து கொள்ளலாம்? வீட்டினை விட்டு வெளியில் செல்லும் பொழுது பொதுவாக போக்குவரத்தில் ஈடுபடும் பொழுது முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் எமது சூழலில் குப்பைகளை இருக்கது தவிர்க்க வேண்டும். 9. எவ்வாறு காற்றின் தரத்தினை அறிந்து கொள்ளலாம்? IQAir, World’s Air Pollution, AirNow App, Accu weather போன்ற சர்வதேச வலைத்தளங்களில் இருந்தும் இலங்கையின் AQ.LK, https://www.nbro.gov.lk/ வலைத்தளங்களில் இருந்தும் realtime முறையில் நாம் சுவாசிக்கும் காற்று எவ்வளவு மாசுபட்டுள்ளது என்பதினை அறிந்து கொள்ளலாம் இவ்வாறு மாசடைவதன் காரணமாக பாதிப்பினை எதிர்கொண்ட வைத்தியர் ஒருவர் மேல்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு ஒன்றினை தாக்குதல் செய்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கையாள்வதை நோக்கமாகக் கொண்ட விரிவான திட்டத்தைத் தயாரிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் (CEA) மற்றும் யாழ்ப்பாண மாநகர சபைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ஜனவரி 22, 2026 அன்று மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி https://tinyurl.com/3mynhy82

அன்புள்ள, அப்பாவுக்கு....

2 months 4 weeks ago
ஓரு தந்தை தனது இளம் வயது மகளின் அறையை கடந்து செல்லும்போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு உள்ளே சென்றார். எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. அப்போதுதான் தலையணையின் மேல் ஒரு கடிதம் இருப்பதைப் பார்த்தார். அதை எடுத்துப் பார்த்தார். அதன்மேல் ”அப்பாவுக்கு” என்று எழுதியிருந்தது. பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார். அதில் இவ்வாறு எழுதியிருந்தது: அன்புள்ள அப்பா, மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். என் காதலன் டிமோத்தியுடன் நான் வீட்டை விட்டுப்போகிறேன். உங்களுடனும் அம்மாவுடனும் சண்டைபோட்டு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை. அதனால் சொல்லாமல் போகிறேன். டிமோத்தியின் அன்பு என்னை அவனுக்கு அடிமையாக்கிவிட்டது. நீங்கள் டிமோத்தியைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். உடம்பில் பல இடங்களில் பச்சை குத்தியிருந்தாலும், அவன் நல்லவன். அதற்கும் மேலே நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். அதை கலைக்க டிமோத்தி விரும்பமில்லை. டிமோத்திக்கும் எனக்கும் நிறைய வயது வித்தியாசம் இருந்தாலும் (இப்போதெல்லாம் 42 ஒரு வயதல்ல), அவனிடம் பணமில்லாமல் இருந்தாலும் எங்கள் உறவு உறுதியானது. டிமோத்திக்கு இன்னும் பல காதலிகள் இருந்தாலும், எனக்கென்று தனது வாழ்க்கையில் ஒரு தனி இடம் கொடுத்திருக்கிறான். என் மூலம் நிறைய பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறான். டிமோத்திக்கு நதியருகே ஒரு அழகிய குடிசையிருக்கிறது. அங்கு நாங்கள் தங்கியிருப்போம். அவன் காட்டில் கஞ்சா பயிர் செய்வான். அதை நாங்கள் எங்கள் நண்பர்களுக்கு விற்று வாழ்க்கை நடத்துவோம். கஞ்சாவை நானும் புகைத்தேன். ரொம்ப சுகமாயிருக்கிறது. மருத்துவர்கள் சீக்கிரம் எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுங்கள். ஏனென்றால் அப்போதுதான் டிமோத்தி எய்ட்சிலிருந்து விரைவில் குணமடைவான். அப்பா நீங்களும் அம்மாவும் என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். எனக்கு என்னைப் பார்த்துக் கொள்ள தெரியும். எனக்கு பதினைந்து வயதாகிறது. என்றாவது ஒரு நாள் உங்களையெல்லாம் உங்கள் பேரக்குழந்தைகளுடன் வந்து பார்ப்பேன். உங்கள் அன்பு மகள், லிண்டா..! அவருக்கு உலகமே சுற்றுவது போலிருந்தது.. கடிதத்தின் கீழே “பின்பக்கம் பார்க்க” என்று எழுதியிருந்தது.. துடிக்கும் இதயத்துடன் கடிதத்தை திருப்பி பார்த்தார். அங்கு இவ்வாறு எழுதியிருந்தது: பின்குறிப்பு; அப்பா, நான் முன்பக்கம் எழுதியது எதுவும் உண்மையில்லை. நம் வாழ்க்கையில் எவ்வளவோ மோசமான விஷயங்களெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது நான் பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத்தில் தேர்ச்சி பெறாதது ஒன்றும் பெரிய விஷயமே கிடையாது. எனது தேர்வு அட்டை எனது மேஜைமேல் இருக்கிறது. எடுத்து கையெழுத்து போடுங்கள். நான் பக்கத்து வீட்டில்தான் இருக்கிறேன். உங்கள் கோபம் தணிந்ததும் கூப்பிடுங்கள். 😂 🤣

துணியால் கண்களை கட்டிக்கொண்டு வீதியில் நடந்துச் சென்ற கொழும்பு மேயர்!

2 months 4 weeks ago
12 Nov, 2025 | 11:55 AM கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தசார், துணியால் கண்களை கட்டிக்கொண்டு வீதியில் நடந்துச் சென்று பார்வைக் குறைபாடுள்ளவர்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டார். இந்த விழிப்புணர்வு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பார்வைக் குறைபாடுள்ள இலங்கையின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வாவும் கலந்துகொண்டார். இதன்போது, கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தசார், துணியால் கண்களை கட்டிக்கொண்டு வீதியில் நடந்துச் சென்றார். “நான் துணியால் கண்களை கட்டிக்கொண்டுள்ளேன், கண்பார்வை இல்லாமல் நடப்பது எப்படியிருக்கும் என்பதை நான் இப்போது புரிந்துகொள்கிறேன்," என கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தசார் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/230151

கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி கிட்டு பூங்காவில் வெள்ளிக்கிழமை ஆரம்பம் - தொல். திருமாவளவன் பங்கேற்பு

2 months 4 weeks ago
12 Nov, 2025 | 04:18 PM (எம்.நியூட்டன்) தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வட மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்துகின்ற கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) வெள்ளிக்கிழமை (14) பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இத்தொடக்க விழாவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் கௌரவ விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார். தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் தம்பிராசா யுகேஸ் தலைமையில் நடைபெறவுள்ள இத்தொடக்க நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா கலந்துகொள்கிறார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தொடக்க உரையாற்ற, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் சிறப்புரை ஆற்றவுள்ளார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் இக்கண்காட்சி இம்மாதம் 23ஆம் திகதி வரை தினமும் காலை 8.30 மணி தொடக்கம் முன்னிரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. கண்காட்சியைப் பார்வையிட வருகைதரும் மாணவர்களுக்கு வழமை போன்று இம்முறையும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/230177

கருத்து படங்கள்

2 months 4 weeks ago
பிக்குகளும், பாதிரியார்களும் தான்... பாலியல் வன்புணர்வு செய்வதில் கில்லாடிகள். அதற்குள் ஐயரையும், மௌலவியையும் ஏன் கோத்து விட்டுள்ளார்கள் என தெரியவில்லை.

கருத்து படங்கள்

2 months 4 weeks ago
இந்த புத்தகத்தை எரிப்பவர்கள் எல்லோரும் சாமியார்களாகவும் வயது போனவர்களாகவும் இருக்கிறார்களே? சிறியவர்கள் திருந்தி விட்டால் தங்கள் பாடு திண்டாட்டம் என்று பயந்திட்டார்களோ?

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் கொள்வனவு விலை அறிவிப்பு!

2 months 4 weeks ago
ஒவ்வொரு வெங்காய அறுவடை மாதங்களிலும் அரசு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து விலையைக் குறைத்து உற்பத்தியாளர்களின் வருவாயை வீழ்த்துகிறதென்ற குற்றச்சாட்டு உள்ளது. இதில் அரசு கவனமெடுக்க வேண்டும்.

பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!

2 months 4 weeks ago
ஒருவரை மிரட்டியுள்ளார்.பின்னர் அவர் இறந்துள்ளார். இதை ஏன் தீவிரவிசாரணை செய்யாமல் இருக்கிறார்கள்? ஒரு பெண்ணும் இதிலே சம்பந்தப்படுகிறார். ஏன் இன்னமும் அந்தப் பெண்ணை விசாரிக்கவில்லை?

துருக்கி இராணுவ விமானம் மலையில் மோதி விபத்து – 20 பேர் உயிரிழப்பு

2 months 4 weeks ago
துருக்கி இராணுவ விமானம் மலையில் மோதி விபத்து – 20 பேர் உயிரிழப்பு. துருக்கி சி-130 ராணுவ சரக்கு விமானம் ஒன்று ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறியதில் விமானத்தில் பயணித்த 20 பேரும் உயிரிழந்துள்ளனர் துருக்கி இராணுவத்திற்கு சொந்தமான சி-130 ரக சரக்கு விமானம் நேற்று அசர்பைஜானில் இருந்து புறப்பட்டது. துருக்கி வந்து கொண்டிருந்த அந்த இராணுவ விமானத்தில் 20 பேர் பயணித்தனர். இந்நிலையில் ஜோர்ஜியா நாட்டின் எல்லைக்குள் பறந்துகொண்டிருந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 20 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து விபத்து நடந்த பகுதியில் மிட்புபணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அஜர்பைஜான்- ஜார்ஜியா எல்லையில் பறந்து கொண்டு இருந்த போது திடீரென கீழே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தி அறிவித்துள்ளது. விமானத்தில் எத்தனை பணியாளர்கள் இருந்தனர் என்பது தெளிவாக தெரியவில்லை. அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியா நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. சி-130 ராணுவ சரக்கு விமானங்கள் துருக்கியின் ஆயுதப் படைகளால் பணியாளர்களை கொண்டு செல்லவும் தளவாடங்களை கையாளுவதற்கும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. https://athavannews.com/2025/1452588

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 4 weeks ago
போட்டியை திற‌ம்ப‌ட‌ ந‌ட‌த்திய‌மைக்கு ந‌ன்றியும் பாராட்டுக்க‌ளும் க‌ந்த‌ப்பு அண்ணா. போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். கருத்துக்களை பகிர்வு செய்த அனைவருக்கும் நன்றிகள், குறிப்பாக ஈழப்பிரியன் அண்ணா, வீரப்பையன்.

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

2 months 4 weeks ago
இப்போது ம‌க‌ளிர் விக்வாஸ் தொட‌ர் அவுஸ்ரேலியாவில் ந‌ட‌க்குது உல‌க‌ கோப்பையில் விளையாடின‌ முன்ன‌னி ம‌க‌ளிர்க‌ளும் விளையாடுகின‌ம் ம‌க‌ளிர்க‌ளும் இடை விடாது தொட‌ர்ந்து கிரிக்கேட் விளையாடிட்டு இருக்கின‌ம்.................................
Checked
Tue, 02/10/2026 - 23:32
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed