புதிய பதிவுகள்2

சர்வதேச டி- 20 யில் இருந்து ஓய்வு பெறுவதாக கேன் வில்லியம்சன் அறிவிப்பு

2 months 4 weeks ago
சிற‌ந்த‌ வீர‌ர் நியுசிலாந்தின் ந‌ம்பிக்கை ந‌ச்ச‌த்திர‌ம் இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விடுகிரார்............................

விதை நெல் உற்பத்திக்கு காப்புறுதித் திட்டம் அறிமுகம்

2 months 4 weeks ago
Nov 12, 2025 - 10:35 AM விதை நெல் உற்பத்தி செய்யும் பண்ணைகளில் மேற்கொள்ளப்படும் நெற்செய்கைக்கு காப்புறுதித் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தக் காப்புறுதித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. விதை நெற்செய்கைக்கு வெள்ளம், வறட்சி, நோய்கள், பூச்சித் தாக்குதல்கள், இயற்கைப் பேரழிவுகள் மற்றும் காட்டு யானைகளினால் ஏற்படும் சேதங்களுக்கு இந்தத் திட்டம் காப்பீடு வழங்குகிறது. ஒரு ஏக்கர் செய்கைக்காக ஒரு போகத்திற்கு ரூ. 13,600/- தவணை செலுத்துவதன் ஊடாக ஒரு ஏக்கருக்கு ரூ. 180,000/- இழப்பீடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை கூறுகிறது. இந்த விதை நெல் பண்ணைகளுக்கு காப்புறுதிப் பாதுகாப்புப் பெற வேண்டுமானால், அவை விவசாயத் திணைக்களத்தின் விதைப் பதிவுச் சேவையில் கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அச் சபை வலியுறுத்துகிறது. விதை நெல் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகளைச் செய்கையில் தக்கவைத்துக்கொள்வதே இதன் பிரதான நோக்கம் என்றும் விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை மேலும் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmhvjecxp01jjo29n1l4wopmk

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 months 4 weeks ago
வணக்கம் வாத்தியார் . .........! தமிழ் பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : பாடினாள் ஒரு பாட்டு பால் நிலாவினில் நேற்று ஓடினேன் அதை கேட்டு தேடினேன் வலை போட்டு பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ ஆண் : நல்ல தமிழ் இசை அமுதென வருகையில் நெஞ்சம் அங்கே சென்றது ஆண் : மெல்ல மயங்கிய இரு விழி மலர்களை தென்றல் சொந்தம் கொண்டது ஆண் : வெள்ளி ரதமென உருகிய பனியினில் பெண்மை தெய்வம் நின்றது ஆண் : உள்ளம் முழுவதும் புதுவித கவிதைகள் அள்ளி அள்ளி தந்தது இருவர் : பூங்குயில் அவள் யாரோ பொன் மயில் அவள் பேரோ ஆண் : ஆளில்லாத நீரோ ஆண் : நீரில்லாத ஆறோ ஆண் : ஆறில்லாத ஊரோ ஆண் : அவளில்லாத நானோ ஆண் : மனக்கோயில் வாழ வந்த தெய்வீக பெண் என்பதோ ஆண் : எனக்காக ஏங்குகின்ற செவ்வல்லி கண் என்பதோ ஆண் : பருவம் கொண்ட பாவை ஆண் : பனி படர்ந்த பார்வை ஆண் : வரவு சொல்ல தோன்றும் ஆண் : உறவு கொள்ள வேண்டும் ஆண் : மலர் மாலை யாருக்கென்று பெண் பாவை கண் தேடுமோ ஆண் : எதிர் பார்க்கும் ஏழை நெஞ்சம் என்னோடு ஒன்றாகுமோ ......! --- பாடினாள் ஒரு பாட்டு ---

தனபாலசிங்கத்தின் “தமிழ்த்தேசியவாத அரசியலின் எதிர்காலம்” — கருணாகரன் —

2 months 4 weeks ago
தனபாலசிங்கத்தின் “தமிழ்த்தேசியவாத அரசியலின் எதிர்காலம்” November 9, 2025 — கருணாகரன் — தமிழ்த் தேசியவாத அரசியலுக்கு எதிராக NPP யின் எழுச்சி உருவாக்கியிருக்கும் நெருக்கடிச் சூழலில் ‘தமிழ்த்தேசியவாத அரசியலின் எதிர்காலம்’ என்ற நூலினை ‘தினக்குரல்’ பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பு உட்பட ஊடகத்துறையின் முக்கிய பொறுப்பிலிருந்த மூத்த பத்திரிகையாளர் திரு. வீரகத்தி தனபாலசிங்கம் எழுதியிருக்கிறார். இந்த நூலில் எட்டுக் கட்டுரைகள் உள்ளன. இந்த எட்டுக் கட்டுரைகளில் ஏழு கட்டுரைகளும் தமிழ்த்தேசியவாத அரசியலின் இருப்பு, அதனுடைய எதிர்காலம் குறித்த கேள்விகளை ஆதாரமாக முன்வைத்துப் பேசினாலும் இலங்கைத்தீவின் இனப்பிரச்சினை, கடந்த கால ஆட்சியாளர்களின் தவறுகள், தமிழ்த் தலைமைகளின் தீர்க்கதரிசனமற்ற அரசியல் பார்வை, யதார்த்த அரசியலை ஏற்றுக் கொள்ளத் தயங்குவதால் தமிழ்த்தேசியவாத அரசியலாளர்களும் மக்களும் சந்திக்கின்ற பின்னடைவுகள், மாகாணசபை முறையின் அவசியம், அரசியலமைப்பைத் திருத்தும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள், ஆட்சியிலிருக்கும் NPP அரசாங்கத்தின் பொறுப்புகள் எனப் பலவற்றையும் பேசுகின்றன. இவற்றைப் பற்றி வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து ஆராய்கிறார் தனபாலசிங்கம். ஒரு கட்டுரை மட்டும் மறைந்த தமிழ்த் தலைவர் இரா. சம்பந்தனுடைய அரசியல் வகிபாகம் பற்றியது. அதுவும் ஒரு வகையில் தமிழ்த்தேசியவாத அரசியலைப் பற்றிப் பேசுவதான். எழுந்தமானமாகவோ தன்னுடைய விருப்பு – வெறுப்பு நிலையிலிருந்தோ எதையும் பேச விழையாமல், வரலாற்று நிதர்சனங்களின் ஊடாக, யதார்த்த பூர்வமாக எல்லாவற்றையும் அணுகுவது இந்த நூலின் முக்கியத்துவமாகும். தனபாலசிங்கத்தின் முக்கியத்துவமும் இதுவே. இந்த நூலைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால், ‘எல்லாப் பக்கமும் கூருள்ள ஆயுதமொன்றைப் போல இந்த நூல் உள்ளது’ எனலாம். அதனால் எல்லாத் தரப்பினருக்கும் விழுகிறது பாரபட்சமில்லாத அடி. கூடவே எல்லோருடைய பொறுப்புகளும் சுட்டிக்காட்டப்பட்டு நியாயமான முறையில் உணர்த்தப்படுகிறது. அதாவது, கடுமையான விமர்சனம். சிநேகபூர்வமான சுட்டிக் காட்டுதல்கள். இவை சமகாலத்தை மையப்படுத்திப் பேசினாலும் இலங்கைத்தீவின் அரசியல் நிலவரத்தையும் வரலாற்றையும் யதார்த்தப் பார்வையோடு, தேவைக்கேற்ப முன்பின்னாகப் பேசி, உண்மைகளைக் கண்டறிய விளைகின்றன. முழுமையாக நோக்கினால், இலங்கைத்தீவின் இனச்சிக்கலுக்குப் பொருத்தமான தீர்வைக் காண்பதையும் தமிழ்ச் சமூகம் பொருத்தமான அரசியலை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றது எனலாம். என்பதால் இன்றைய அரசியலாளர்களும் மக்களும் இந்த நூலைப் படிக்க வேண்டியது அவசியமாகிறது. நூலில் உள்ள கட்டுரைகள் சொல்ல விளைகின்ற விடயங்களைத் தொகுத்துப் பார்க்கலாம். 1. ‘கறுப்பு ஜூலைக்குப் பிறகு 42 வருடங்கள்’ என்ற முதலாவது கட்டுரை, இந்தக் காலப் பகுதியில் மிகப் பெரிய உள்நாட்டுப்போர் நடந்து முடிந்து விட்டது. பேரழிவுகளில் நாடு சிக்கி மீண்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அனைத்துச் சமூகங்களிலும் பலியாகியுள்ளனர். பொருளாதாரம் முற்றாகவே பின்னடைவு நிலைக்குள்ளாகியிருக்கிறது. அரசியல் ரீதியாக (மனித உரிமைகள் மற்றும் தீர்வு விவகாரங்களில்) சர்வதேச தலையீடுகளும் பொருளாதார ஆக்கிரமிப்புகளும் நிகழும் நிலை உருவாகியுள்ளது. இப்படியெல்லாம் இருந்தும் இன்னும் சிங்கள மக்களுடைய – சிங்கள அதிகார வர்க்கத்தினுடைய உள நிலையில் மாற்றத்துக்கான அறிகுறியைக் காணவில்லை; படிப்பினையைப் பெறவில்லை என்று கவலை தெரிவிக்கிறது. தீர்வுக்கான அரசியல் வரைவை உருவாக்குவதில் அனைத்து ஆட்சியாளர்களுக்கும் உள்ள தடுமாற்றத்தையும் அர்ப்பணிப்பற்ற தன்மையையும் சொல்கிறது. முக்கியமாக 1983 இல் நடைபெற்ற வன்முறைச் சூழலை, அன்றைய அரசியல் சக்தியாக இருந்த UNP யும் அதனுடைய தலைமையான ஜே. ஆர். ஜெயவர்த்தனாவும் மேற்கொண்ட அரசியல் தவறுகளை – மேலாதிக்கச் செயற்பாடுகளை – இனவாத அணுகுமுறையை தனபாலசிங்கம் ஆதாரபூர்வமான எடுகோள்களோடு முன்வைத்துள்ளார். இது மூத்தவர்களுக்கு நினைவூட்டலையும் இளைய தலைமுறையினருக்கு கடந்த கால வரலாற்றுச் சூழலைப் பற்றிய புரிதலையும் ஏற்படுத்துகிறது. 2. 13 ஆவது திருத்தத்தை தமிழர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? என்பது பற்றிய கட்டுரை சற்றுச் சுவாரசியமானது. அத்துடன் நியாயமான கேள்வியையும் எழுப்புகிறது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கும் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைக்கும் இடையில் சிக்குப்பட்டிருப்பது 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான மாகாணசபை முறைமை ஆகும். ஆனால், தற்போதுள்ள சூழலில் மட்டுமல்ல, அரசியல் தீர்வுக்காக முன்னெடுக்கப்பட்ட அல்லது உரிமைக்கான போராட்டத்தின் பின்னர் மிஞ்சியிருப்பது இது ஒன்றேயாகும். இது தொடர்பாக சிங்களத் தரப்பிலும் ஏற்பும் மறுப்புமான நிலைப்பாடுகள் உண்டு. தமிழ்த்தரப்பிலும் அப்படித்தான் நிலைமை. இந்த நிலையில் இதை ஏற்றுக் கொள்வதில் தமிழ் மக்கள் எத்தகைய நிலைப்பாட்டுடன் உள்ளனர்? என்பதே தனபாலசிங்கத்தின் கேள்வியாகும். இந்தக் கேள்வியை அவர் இந்தியாவினதும் சர்வதேச சமூகத்தினதும் இலங்கை இனப்பிரச்சினையின் அணுமுறை தொடர்பான ஈடுபாட்டு எல்லைகளின் அனுபவங்களை முன்வைத்தே எழுப்புகிறார். என்பதால் இது முதன்மையான உரையாடலுக்கு உரிய ஒன்றாக உள்ளது. 3. தமிழ்த்தேசியவாத அரசியலின் எதிர்காலம் பற்றிய கேள்வியை எழுப்பும் மையக்கட்டுரை இது. தேசிய மக்கள் சக்தி (NPP) யின் எழுச்சியும் அது ஆட்சியைக் கைப்பற்றியதும் வடக்குக் கிழக்கில் அதற்கு ஏற்பட்டுள்ள செல்வாக்கும் இன்னும் அதற்கு இந்தப் பிராந்தியத்தில் உள்ள கவர்ச்சியும் அல்லது ஈர்ப்பும் தமிழ்த் தேசியவாத அரசியலை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளதா? என்பதே கட்டுரையின் சாரம். தேசிய இனப்பிரச்சினைக்கு NPP யிடம் உருப்படியான – வெளிப்படையான தீர்வைக் காண முடியவில்லை என்றாலும் சனங்கள் (தமிழ் மக்கள்) NPP யையும் அநுரகுமார திசநாயக்கவையும் தமக்கு நெருக்கமாகவே உணர்கிறார்கள். இதனை எதிர்கொள்வதற்கு தமிழ்த்தேசியக் கட்சிகள் தவிக்கின்றன. இவ்வளவுக்கும் NPP இனப்பிரச்சினைக்கு எத்தகைய தீர்வை, எந்தக் காலப்பகுதிக்குள் முன்வைப்பது என்பதைப் பற்றி எந்தப் பதிலும் சொல்லாமலே NPP தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதனால் கடுமையானதொரு நிலைப்பாட்டை தமிழ்க்கட்சிகள் இனவாதப் போக்கில் எடுத்திருக்கின்றன என்கிறார் தனபாலசிங்கம். இது மேலும் நெருக்கடிகளைக் கொடுக்கும் ஒன்றாகவே மாறும். உண்மையான காரணம், தமிழ்த்தேசியவாதக் கட்சிகளில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட நிறைவின்மையே காரணம். அதைக் கண்டறிவதுதான் முக்கியமானது என்பது அவருடைய வாதம். இந்தக் கட்டுரையாளரின் கருத்தும் அதுதான். முக்கியமாக ‘பெரும்பான்மைச் சிங்கள மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இலங்கைக்குள் அரசியல் தீர்வு சாத்தியமில்லை என்ற உண்மையை தமிழ் மக்களுக்குப் புரிய வைப்பதில் தமிழ் அரசியல்வாதிகள் அக்கறைப்படவில்லை என்ற கவலைய்யும் – குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார் தனம். 4. இலங்கைத் தமிழர் அரசியலில் சம்பந்தனின் வகிபாகத்தைப் பற்றிய கட்டுரை இது. சம்பந்தன், தமிழ்த் தலைவராகவும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தவர். இரண்டு நிலையிலும் அவருடைய பாத்திரம் எவ்வாறிருந்தது? எத்தகைய பங்களிப்பைக் கொண்டிருந்தார் என்பதைப் பற்றி ஆராயப்படுகிறது. ஏறக்குறைய 60 ஆண்டுகாலம் அரசியலில் அனுபவமுடையவரான சம்பந்தன், 15 ஆண்டுகள் தமிழ்த் தலைவராகவும் ஐந்து ஆண்டுகள் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறார். சம்பந்தனுடைய தலைமைத்துவக் காலகட்டமானது, தமிழர்கள் ஆயுதந்தாங்கிய விடுதலைப்போராட்டத்தில் தோல்வியைத் தழுவிய சூழலைக் கொண்டது. அதாவது மிகக் கடினமான காலத்தில் – வெற்றிக் களிப்போடு இருந்த சிங்களத் தலைமைகளோடு, தமிழ் மக்களின் உரிமைசார் அரசியலைக் கையாள வேண்டியிருந்தது என்கிறார் தனபாலசிங்கம். ஒரு பத்திரிகை ஆசிரியராக தனக்கு வாய்த்த அரசியல் உறவுகளை அடிப்படையாக வைத்து இந்த விடயங்களை அவர் நோக்குகின்றார். சம்பந்தனுடைய அரசியற் தலைமைத்துவத்தை தமிழ் மக்களில் ஒருசாரார் நிறைவின்மையாகப் பார்க்கின்றபோதும், அவர் தன் வாழ்நாளில் பாராளுமன்றத்திலும் வெளியிலும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடத்திலும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளையும் இலங்கை அரசின் தவறான போக்குகளையும் எந்தச் சமரசமும் இல்லாமலே வெளிப்படுத்தி வந்திருக்கிறார். சில சந்தர்ப்பங்களில் அவர் கடுந்தொனியில் கூட அவற்றைச் சொல்லியிருக்கிறார். ஒரு மிதவாத தலைவர் என்ற அடிப்படையில் அவருடைய எல்லைகள் மட்டுப்பட்டன என்பதை நினைவூட்டுகிறார் தனபாலசிங்கம். ஆனால், என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தன் இருந்தவரையில் அவர் தமிழர்களின் தலைவர் என்ற ஒரு அடையாளத்தையும் உணர்வையும் ஏற்படுத்தியிருந்தார். சம்பந்தனுக்குப் பிறகு அப்படி ஒரு அடையாளம் தமிழ் அரசியற் பரப்பில் இல்லாமற் போயுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டி, சம்பந்தனுடைய முக்கியத்துவத்தை – அவருடைய இருப்பின்மையை உணர்த்துகிறார். 5. இது மிகச் சவாலுக்குரிய – இன்றைய சமகால ஆட்சியாளர்களுடைய அரசியல் யாப்பு, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்ததாக உள்ளது. இனப்பிரச்சினையைக் கையாளும் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லையென்றால், புதிய அரசியல் கலாச்சாரம் என்பது அர்த்தமற்றது என்பதை ஆராய்ந்து நிறுவுகிறது இந்தக் கட்டுரை. NPP அதிகாரத்தில் இருப்பதால் ‘இனவாத அரசியல்வாதிகள் தேர்தல்களில் போட்டியிடாமல் அரசியலில் இருந்தே ஒதுங்கியிருப்பதாகக் கருதக் கூடாது. அப்படிக் கருதவும் முடியாது. இதை இனவாத அரசியலின் முடிவாகவும் அமைந்து விடப்போவதில்லை. பதிலாக பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு எதிராக விதைக்கப்பட்டிருக்கும் நச்சுத்தனமான சிந்தனைகள் தோற்கடிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஒரு சரியான அரசியல் யாப்பும் இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய செயற்பாட்டுத் துணிவும் ஏற்படும் என நிறுவப்படுகிறது. இது அதற்குப் பொருத்தமான – வாய்ப்பாக அமைந்த காலம். இதனை அரசாங்கமும் பிற சக்திகளும் தமிழ்ச் சமூகமும் இழக்கக் கூடாது என்பதே கட்டுரையின் தொனியாகும். 6. சமகால நிலவரத்தை முன்வைத்து, தமிழ்த்தேசியவாத சக்திகள் எத்தகைய முடிவுகளை – தீர்மானங்களை எடுக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தி குறுகிய கால ஆட்சிக்குள் படித்துக் கொண்ட பாடங்கள் என்ன? என்பனவற்றை நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலை அடிப்படையாக வைத்து, ஒரு கண்ணோட்டமாக எழுதப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழரசுக்கட்சி கவனிக்க வேண்டிய விடயங்கள் அழுத்தம் கொடுத்து எழுதப்பட்டுள்ளன. பாராளுமன்றத் தேர்தலை விட உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ்த்தேசியவாத சக்திகளின் இருப்புச் சற்று உறுதிப்படுத்தப்பட்டாலும் தலைக்கு மேலே தொங்கும் கத்தி அகலவில்லை. தேசிய மக்கள் சக்தி உள்ளுராட்சித் தேர்தலிலும் வலுவான இடத்தில் – இரண்டாவது இடத்தில்தான் உள்ளனது என்பதை ஆதாரப்படுத்தி, நிலைமைகளைப் புரிந்து கொள்ளுங்கள் என்று தமிழ்த் தரப்பை எச்சரிக்கிறார். 7. இதுவும் சமகாலத்தையொட்டியதொரு கட்டுரையே. சுமந்திரன் (தமிழரசுக் கட்சி) ஏற்பாடு செய்த ஆகஸ்ட் 2025 ஹர்த்தாலின் சாதக பாதகத்தை ஆராய்ந்து பார்க்கும் தனபாலசிங்கம், ஒரு பொதுக்கோரிக்கை எப்படி அமைய வேண்டும். ஒரு போராட்ட முன்னெடுப்பு எப்படி இருக்க வேண்டும். வெற்றியைப் பெற வேண்டும் என்றால் அதற்கு ஏனையோருடைய பங்களிப்புகள் என்ன? அவற்றை எப்படிக் கோருவது? பலவீனப்பட்டுள்ள தரப்பை (தமிழ் மக்களை) மேலும் பலவீனப்படுத்தும் அடிப்படையிலான போராட்ட அறிவிப்பு – போராட்ட எதிர்ப்பு நிலைப்பாடுகள் விரும்பத்தகாதவை என்று வலியுறுத்திப் பேசுகிறார். ஒரு ஊடகவியலாளரின் கோபமும் நிதானமும் இதில் தெளிவாகவே புலப்படுகிறது. 8. இறுதிக் கட்டுரை முக்கியமானது, புதிய அரசியலமைப்பின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? என்ற கேள்வியை எழுப்பி ஆரம்பிக்கிறது. இது அநேகமாக அரசாங்கத்தரப்பையே கூடுதலாகக் கவனத்தில் எடுத்துப் பேசுகிறது. முக்கியமாக ஆட்சியிலிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொறுப்புகளைப் பற்றிச் சொல்லப்படுகிறது. கடந்த கால ஆட்சியாளரின் தடுமாற்றங்கள், இனத்துவ நோக்கு, அரசியல் வறுமை, ஊழல் போன்று இந்த ஆட்சித் தரப்பும் தவறுகளையே பராமரிக்குமாக இருந்தால், அது நாட்டை மேலும் பலவீனப்படுத்திப் பாதிப்பை உண்டாக்கும் என்று சொல்கிறது. ‘அதிகாரப் பரவலாக்கம் ஆட்சி முறையில் சகல சமூகங்களின் பங்கேற்பையும் உறுதி செய்வதற்கான ஒரு வழிமுறையே தவிர, தேசிய ஒருமைப்பாட்டுக்கான அச்சுறுத்தல் இல்லை‘ என்று மிக ஆழமான ஒரு உண்மையை எடுத்துரைத்துள்ளார் தனபாலசிங்கம். ‘இலங்கையில் அமைதியும் சமூகங்கள் பரஸ்பர மதிப்புடன் வாழ்கின்ற சூழ்நிலையும் ஏற்பட வேண்டுமானால், நாட்டின் பன்முகத் தன்மையைப் பிரதிபலிக்கக் கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். இது தொடக்கத்துக்கான நேரம். அதை வீணாக்கக் கூடாது‘ என்று முடிக்கிறார். எனவே மேற்படி எட்டுக் கட்டுரைகளும் இனமுரண் அரசியலின் தீய விளைவுகள், இனப்பிரச்சினைக்கான தீர்வின் அவசியம், அதற்கான வழிமுறைகள், அவற்றை முன்னெடுக்கும் பொறுப்புகள், சமூகங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள், இந்தியாவின் நிலைப்பாடு, அதன் எல்லை அல்லது மாறிவரும் பிராந்திய அரசியற் சூழல், தமிழ் மக்களின் சர்வதேசக் கற்பனை, ஒரு நாடு இரு தேசம் என்ற மிகுவிருப்பம், யதார்த்தத்துக்கும் கற்பனைக்கும் இடையில் தத்தளிக்கும் தமிழ் மக்கள், தமிழ்த்தேசியவாத அரசியற் சக்திகளின் பலவீனம், அதைக் களைய வேண்டிய அவசியம், இனவாத அரசியலில் இதுவரையில் மன்னிப்பே கோராத ஐ.தே.க மற்றும் அதனுடைய தலைமைகள், தமிழ்க் கட்சிகளின் ஐக்கியமும் பலவீனங்களும், புலம்பெயர் தமிழர்களின் அரசியல் ஈடுபாடும் யதார்த்தமும், தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் தரப்பின் அறிவாற்றல், விவேகம், செயற்றிறன், கோட்பாட்டுப் பயில்கை – கோட்பாட்டு வலிமை, ஜனநாயக அடித்தளம் எனப் பலவற்றை இந்த எட்டுக் கட்டுரைகளிலும் வைத்துப் பேசப்படுகிறது. முக்கியமாகத் தேர்வு செய்யப்பட வேண்டிய – தேவையான விடயங்களை அழுத்தம் கொடுத்துப் பேசுகிறது இந்த நூல். அதேவேளை சிறுபிள்ளைத்தனமான அரசியல் புரிதல்களையும் விமர்சிக்கிறது. குறிப்பாக புலம் பெயர் தமிழர்களுடைய முதலீடுகளுக்கு அரசாங்கம் இடமளித்தால், இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்ற எளிய சூத்திரத்தைத் தமிழ்த் தரப்பு வைத்திருக்கிறது என்பது சிரிப்புக்குரிய சங்கதி அல்லவா! புலம்பெயர் மக்களுடைய முதலீடுகளுக்கு இடமளிக்கப்பட வேண்டும். ஆனால், அதனால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீரும் என்ற கற்பனைகள் செல்லுபடியற்றவை. அதைப்போலவே, மக்களுடைய தேவைகள் என்பது அரசியல் உரிமைப் பிரச்சினை மட்டுமல்ல, பல்வேறுபட்ட தேவைகளுக்குரியது. குறிப்பாக மேல் வர்க்கத்தின் பிரச்சினையும் உணர்தலும் வேறு. அதனால் அதற்குரிய நிலைப்பாடுகளும் வேறாகவே இருக்கும். அடிநிலை மக்களின் உணர்வும் தேவைகளும் பிரச்சினைகளும் வேறு. அவர்களுடைய நிலைப்பாடுகளும் வேறானவை. இதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே எல்லாவற்றையும் தொகுத்து நோக்கினால், சமகால அரசியல் முன்னெடுப்பாளர்களுக்குரியதொரு கையேடு. பொதுமக்கள் நிதானமான முறையில் சமகால – எதிர்கால அரசியலைத் தெளிவு கொள்வதற்கொரு வழிகாட்டி ஏடு. ஒரு ஊடகவியலாளராகவும் அரசியல் நோக்கராகவும் நேர்நிலை நின்று பகுப்பாய்வைச் செய்திருக்கிறார் தனபாலசிங்கம், பொருத்தமான முன்வைப்புகளையும் வைத்துள்ளார். ஆனால், இலங்கைத்தீவில் முஸ்லிம்களும் மலையகத் தமிழர்களும் உள்ளனர். அனைத்துத் தீர்வும் அவர்களையும் உள்ளடக்கியதே. அவற்றையும் இணைத்துப் பேசியிருக்க வேண்டும். பன்மைத்துவத்தைப் பற்றிப பேசுவதென்பது, அனைவரையும் உள்ளடக்கியதே. யாரையும் விட்டு விடுவதல்ல. https://arangamnews.com/?p=12433

பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!

2 months 4 weeks ago
கனகரத்தினத்துக்கு எதிராக செல்வம் அடைக்கலநாதன் சட்ட நடவடிக்கை! Nov 12, 2025 - 07:35 AM எனது பெயருக்கும், கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கக்கூடிய வகையிலும், அரசியலில் இருந்து ஒதுக்கக் கூடிய வகையிலும், இணைய ஊடகங்கள் ஊடாக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ள நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் என்பவருக்கு எதிராக சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,, நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் என்பவருக்கு எதிராக சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன்.அவரிடம் ஐந்து கோடி ரூபாய் (ஐம்பது மில்லியன்) நஷ்ட ஈடு கோரியுள்ளேன்.எனது அரசியல் நடவடிக்கையை ஆதாள பாதாளத்திற்குள் கொண்டு செல்லுகின்ற ஒரு சூழலை ஏற்படுத்துகின்ற வகையில் அவர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறி இருக்கிறார்.அவரது கருத்துக்கள் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் இதற்கு ஆதாரத்துடன் பதில் கூற வேண்டும்.இதனை தொடர்ந்து நீதிமன்றத்தை நாட உள்ளேன். அவரது குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தில் நிரூபிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.அந்த வகையில் என் மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். மேலும் இதுவரை இலங்கையில் உள்ள நீதிமன்றங்கள் அல்லது பொலிஸ் நிலையங்களில் எனக்கு எதிராக எந்த முறைப்பாடுகளும் அல்லது விசாரணைகளும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களை நிரூபிக்க வேண்டும்.தவறும் பட்சத்தில் மன உளைச்சலையும்,கௌரவத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தியமைக்காக 5 கோடி ரூபாய் நஷ்ட ஈட்டை அவர் வழங்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார். -மன்னார் நிருபர் லெம்பட்- https://adaderanatamil.lk/news/cmhvcy1em01jbo29n2vlnq8kd

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் கொள்வனவு விலை அறிவிப்பு!

2 months 4 weeks ago
Nov 12, 2025 - 07:04 AM அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தை 150 ரூபாவுக்கும் அரசாங்கம் கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த நேற்று (11) பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். இதன் விளைவாக, சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை ஒரு கிலோகிராம் ரூபா 200 வரையிலும், உருளைக்கிழங்கின் விலை ஒரு கிலோகிராம் ரூபா 300 வரையிலும் உயரும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் பயிரிடும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்வைத்து அமைச்சர் இந்தக் கொள்வனவு விலைத் திட்டத்தை வெளியிட்டார். https://adaderanatamil.lk/news/cmhvbu92101jao29nt01w2uvl

ஆவா குழுவின் தலைவன் கைது!

2 months 4 weeks ago
ஆவா குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் கைது! Nov 12, 2025 - 11:15 AM ஆவா குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் நேற்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருகையில், ஆவா குழு வினோத் என்பவர் 2 கிராமம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடனும், அவரது சகா ஒருவர் கைக்குண்டு மற்றும் வாளுடனும் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது இருவரும் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmhvku4bc01jlo29n3kszllx7

கருத்து படங்கள்

2 months 4 weeks ago
புதியதாக நியமிக்கப்பட்ட தொல்லியல் ஆலோசனைக் குழுவில், சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த எந்த பிரதிநிதிகளும் இடம் பெறவில்லை.

புவி வெப்பமாதல் என்பது கட்டுக்கதையா? காலநிலை மாற்றம் பற்றிய 5 கூற்றுகளும் அறிவியல் உண்மையும்

2 months 4 weeks ago
பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,புவி வெப்பமடைதல் இருக்கும் போதிலும், துருக்கியின் இஸ்தான்புல்லில் இதுபோன்ற குளிர்காலங்களும் பனிப்பொழிவு நாட்களும் தொடர்ந்து ஏற்படும் கட்டுரை தகவல் எழுதியவர்,மார்க்கோ சில்வா பதவி,பிபிசி வெரிஃபை 2 மணி நேரங்களுக்கு முன்னர் பிரேசிலில் 30வது ஐநா காலநிலை உச்சிமாநாடு நடைபெறும் நிலையில், காலநிலை மாற்றம் குறித்த தவறான கூற்றுகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பரவி வருகின்றன. அப்படிப்பட்ட ஐந்து தவறான தகவல்களையும் உண்மை என்ன என்பதையும் இங்கு விரிவாகத் தெரிந்துகொள்வோம். கூற்று 1: காலநிலை மாற்றம் மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல மனிதர்களால் காலநிலை மாறவில்லை எனும் வகையில் சமூக ஊடகங்களில் சிலரால் பதிவிடப்படுகின்றன. பூமியின் வரலாறு முழுவதும் வெப்பமாதல் மற்றும் குளிர்ச்சியடைதலின் சுழற்சிகளைக் கடந்து வந்துள்ளது என்பது உண்மைதான். அது பெரும்பாலும் எரிமலை செயல்பாடு அல்லது சூரிய செயல்பாட்டில் நிகழ்ந்த மாறுபாடுகள் போன்ற இயற்கைக் காரணிகளால் நடந்துள்ளன. ஆனால், இந்த மாற்றங்கள் நீண்டகால அளவில், அதாவது ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்தவை. உலக வானிலை அமைப்பின் தகவல்படி, கடந்த 150 ஆண்டுகளில் பூமி சுமார் 1.3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பமடைந்துள்ளது. இந்த வெப்பமயமாதல் விகிதம் முந்தைய ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் காணப்படவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அமைப்பு (IPCC), இது "சந்தேகத்திற்கு இடமின்றி" மனித நடவடிக்கைகளால், முதன்மையாக நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படுவதாகக் கூறுகிறது. விளம்பரம் ஐபிசிசி என்பது காலநிலை ஆய்வை மதிப்பாய்வு செய்வதற்கும், பூமி மீது நடப்பது என்ன என்பது குறித்த சான்றுகள் சார்ந்த அறிக்கைகளை வழங்குவதற்கும் விஞ்ஞானிகளை ஒன்றிணைக்கும் ஓர் ஐ.நா. அமைப்பாகும். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நிலக்கரி என்பது புதைபடிவ எரிபொருளாகும், இதை எரிக்கும்போது அதிக பசுங்குடில் வாயுக்கள் வெளியாகின்றன. புதைபடிவ எரிபொருட்களை பயன்படுத்துவதால் பசுங்குடில் வாயுக்கள் வெளியாகின்றன. அவை பூமியைச் சுற்றி ஒரு போர்வையைப் போலச் செயல்படுகின்றன. வளிமண்டலத்தில் கூடுதல் ஆற்றலை கிரகித்து வைத்து வெப்பத்தை அதிகரிக்கின்றன. "காலநிலை மாற்றம் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயமல்ல. அது ஆதாரங்களின் அடிப்படையிலானது," என்று லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த காலநிலை விஞ்ஞானி ஜாய்ஸ் கிமுட்டாய் கூறுகிறார். "புவியின் காலநிலை அமைப்பின் ஒவ்வொரு மூலையிலும் மனித நடவடிக்கைகளின் தடங்கள் தெளிவாகத் தெரிகின்றன" என்றும் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டார். கூற்று 2: உலகம் சூடாகவில்லை, குளிர்ச்சியடைந்து வருகிறது போலந்து அல்லது கனடா போன்ற இடங்களிலுள்ள சில சமூக ஊடக பயனர்கள், தங்கள் பகுதிகளில் வழக்கத்தைவிட குளிர்ச்சியான வானிலை நிலவுவதை, 'புவி வெப்பமாதல் குறித்து விஞ்ஞானிகள் பொய் சொல்கிறார்கள்' என்பதற்கான சான்றாகக் கருதுகின்றனர். இது தவறு. பட மூலாதாரம், EPA வானிலை என்பது பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் குறுகிய கால நிலைமைகளைக் குறிக்கும். ஆனால், காலநிலை என்பது நீண்டகாலம் நிலவும் சூழலைக் குறிக்கிறது. "சில பகுதிகள் குறுகிய கால அல்லது உள்ளூர் குளிர்ச்சியை அனுபவித்தாலும், நீண்டகால உலக வெப்பநிலை பதிவுகள், புவியின் மேற்பரப்பு ஒட்டுமொத்தமாக வெப்பமடைந்து வருவதைத் தெளிவாகக் காட்டுவதாக" பிலிப்பைன்ஸின் காலநிலை விஞ்ஞானி முனைவர் ஜோசப் பாஸ்கான்சிலோ கூறுகிறார். கடந்த 1980களில் இருந்து, ஒவ்வொரு தசாப்தமும் முந்தையதைவிட வெப்பமாக இருந்து வருகிறது, இது தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உலக வானிலை ஆய்வு அமைப்பு கூறுகிறது. 2024ஆம் ஆண்டு மிக வெப்பமான ஆண்டாகப் பதிவானது. உலகளாவிய சராசரி வெப்பநிலை, 1800களின் பிற்பகுதியில் இருந்த அளவைவிட 1.55 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. கூற்று 3: கார்பன்-டை-ஆக்சைடு ஒரு மாசுபடுத்தி அல்ல மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தை மறுக்கும் சமூக ஊடக பயனர்கள் பெரும்பாலும் கரிம வாயுவை "மாசுபடுத்தும் காரணி அல்ல" என்றும் மாறாக அதுவொரு "தாவர உணவு" என்றும் கூறுகின்றனர். பிபிசி, போர்த்துகீசியன் மற்றும் குரோஷிய மொழிகளில் பார்த்த பதிவுகள், வளிமண்டலத்தில் அது அதிகமாக இருப்பது இயற்கைக்கு நல்லது என்றுகூடக் கூறுகின்றன. மாசுபடுத்திகள் அல்லது மாசுக் காரணிகள் என்பவை, சுற்றுச்சூழலில் சேரும் போது அந்த அமைப்புக்கோ அல்லது மனித ஆரோக்கியத்திற்கோ தீங்கு விளைவிக்கும் பொருட்களாகும். வளிமண்டலத்தில் சாதாரண மட்டங்களில், பூமியில் வாழ்வதற்கு கரிம வாயு அவசியம். கரிம வாயுவை போன்ற பசுங்குடில் வாயுக்கள் இல்லாமல் போனால், உயிர் வாழும் சூழலை உருவாக்க முடியாமல் பூமி குளிரானதாக இருக்கும் என்று நாசா கூறுகிறது. தாவரங்கள் கரிம வாயுவை, நீர் மற்றும் சூரிய ஒளியுடன் சேர்த்து, ஆக்சிஜன் மற்றும் கரிம பொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்துகின்றன. அவை பூமியின் பெரும்பாலான உணவுச் சங்கிலிகளின் அடிப்படையாக உள்ளன. பட மூலாதாரம், DANIEL MUNOZ/AFP via Getty Images படக்குறிப்பு, வளிமண்டலத்தில் உள்ள கரிம வாயு தாவர வளர்ச்சிக்கும் உணவுச் சங்கிலிக்கும் அவசியம். ஆனால், வளிமண்டலத்தில் அதிகமாக கரிம வாயு சேரும்போது, விஞ்ஞானிகள் அதை "மாசுபடுத்தி அல்லது மாசுக் காரணி" என்று வகைப்படுத்துகிறார்கள். ஏனெனில், அது தீங்கு விளைவிக்கத் தொடங்குகிறது. 2024ஆம் ஆண்டில் கரிம வாயு சராசரியை விட அதிக அளவை எட்டியது. அதாவது காற்றில் உள்ள பத்து லட்சம் மூலக்கூறுகளில் 280 மூலக்கூறுகள் கரிம வாயுவினுடையவை என்ற அளவில் 1750களில் இருந்தன. அந்த நிலை மாறி, தற்போது பத்து லட்சம் காற்று மூலக்கூறுகளில் 423 கரிம வாயுக்களினுடையவை என்கிற அளவுக்கு கரிம வாயுவின் அளவு அதிகரித்துள்ளதாக உலக வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. மனிதனால் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு செறிவு அதிகரிப்பிற்கும் புவி வெப்பமாதலுக்கும் தொடர்பு இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்து நிரூபித்துள்ளனர். இது சுற்றுச்சூழல் அமைப்புகளில் பரந்த அளவிலான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். "காடுகள் அதிக தீ விபத்துகளுக்கு உள்ளாகி வருகின்றன. வறட்சி அல்லது வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைகின்றன. இயற்கையான சூழலியல் அமைப்புகளின் சமநிலை குலைவதால் காட்டுயிர்கள் வாழ்விடத்தை இழக்கின்றன," என்று கனடாவை சேர்ந்த சூழலியல் நிபுணர், பாதுகாப்பு விஞ்ஞானி மற்றும் ஆலோசகர் மிச்செல் கேலமண்டீன் கூறுகிறார். வளிமண்டலத்தில் கரிம வாயு அதிகரிப்பது, தாவர வளர்ச்சியை மேம்படுத்த முடியும். ஆனால் இது அதனால் ஏற்படும் வெப்ப அழுத்தம் மற்றும் நீர்ப் பற்றாக்குறை உள்ளிட்ட காலநிலை மாற்றத்தின் எதிர்மறை விளைவுகளை ஈடுசெய்யப் போதுமானதாக இருக்காது என்று ஐபிசிசி கூறுகிறது. கூற்று 4: காட்டுத்தீக்கு காலநிலை மாற்றம் காரணம் அல்ல இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா, தென் கொரியா, துருக்கியில் பெரிய காட்டுத்தீ ஏற்பட்டது. அதுபோன்ற சமயங்களில், சில சமூக ஊடக பயனர்கள், தீ வைக்கப்படுவதே இதற்கு காரணம் என்று கூறி, அதில் காலநிலை மாற்றம் போன்ற காரணிகளுக்கு இருக்கும் பங்கை நிராகரிக்கின்றனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்த ஆண்டு காட்டுத்தீயால் ஸ்பெயின் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தீ வைப்பவர்களைக் கைது செய்வது குறித்த வைரல் பதிவுகள், குறிப்பிட்ட தீயை காலநிலை மாற்றத்துடன் தொடர்புபடுத்தும் விஞ்ஞானிகள் மற்றும் அரசியல்வாதிகளை கேலி செய்யும் பதிவுகளால் பெரும்பாலும் நிரம்பியுள்ளன. ஆனால், பல தீ விபத்துகள் உண்மையில் மனிதர்களால் வேண்டுமென்றேவோ அல்லது தற்செயலாகவோ தொடங்கி இருந்தாலும், காட்டுத்தீயை அந்த ஒரு காரணத்துடன் குறைத்து மதிப்பிடுவது, "அடிப்படையில் தவறாக வழிநடத்தும் செயல்" என்று கொலம்பியா தேசிய பல்கலைக்கழகத்தில் தீ சூழலியல் குறித்து ஆய்வு செய்யும் முனைவர் டொலோர்ஸ் ஆர்மென்டெராஸ் கூறுகிறார். ஒருசில காட்டுத்தீ சம்பவங்களை காலநிலை மாற்றத்துடன் தொடர்புபடுத்துவது கடினம். ஏனெனில், காடுகள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன, நிலப்பரப்பு உள்படப் பல காரணிகளும் ஓரளவுக்கு காட்டுத் தீக்கு காரணமாகின்றன. ஆனால், காலநிலை மாற்றம் காட்டுத்தீ ஏற்படுவதற்கும் பரவுவதற்கும் ஏற்ற நிலைமைகளை உருவாக்குவதை நாம் அறிவோம். வட அமெரிக்காவின் மேற்குப் குதி அல்லது தெற்கு ஐரோப்பா போன்ற பகுதிகளில், காலநிலை மாற்றம் 'தீ வானிலை' என்று அழைக்கப்படுவனவற்றின் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாக ஐபிசிசி கூறுகிறது. அதாவது, நீண்டகால வறண்ட சூழல், தீவிர வெப்பம் மற்றும் அதீத காற்று ஆகியவற்றின் கலவையைக் கொண்ட வானிலை. அந்த நிலைமைகளில், காட்டுத்தீ ஏற்படுவது, மின்னல் போன்ற இயற்கையான காரணத்தால் ஏற்படுவதாக இருந்தாலும் சரி அல்லது தீ வைப்பு, விபத்து போன்ற மனிதர்களால் ஏற்படுத்தப்படுவதாக இருந்தாலும் சரி, ஏராளமான தாவரங்களை எரித்து தீவிர காட்டுத்தீ ஏற்பட வழிவகுக்கின்றன. "இப்போதைய கேள்வி தீ வைக்கப்படுவதா அல்லது காலநிலை மாற்றமா என்பதல்ல. அதிக தீவிரத்துடன் கூடிய வெப்பமான காலநிலை, எந்தவொரு காட்டுத்தீ சம்பவத்தின் விளைவுகளையும் எப்படி தீவிரப்படுத்துகிறது என்பதே. இந்த விளைவுதான், இப்போது நாம் பல இடங்களில் கவனிக்கும் பேரழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீ சம்பவங்களை ஏற்படுத்துகிறது," என்றும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம், LUIS ACOSTA/AFP via Getty Image படக்குறிப்பு, ஐ.நா.வின் 30வது காலநிலை உச்சிமாநாட்டை நடத்தும் பிரேசில் மற்றும் அண்டை நாடுகள் 2024இல் கடுமையான வறட்சியை எதிர்கொண்டன. கூற்று 5: காலநிலை 'பொறியியல்' தீவிர வானிலைக்கு காரணமாகிறது வானிலையை மாற்றியமைத்தல் அல்லது புவி பொறியியல் (geoengineering) காரணமாகக் கடுமையான மழை, வெள்ளம் அல்லது சூறாவளி ஏற்படுவதாகச் சொல்லப்படும் கருத்துகள் தொடர்ந்து இணையத்தில் பரவி வருகின்றன. கடந்த ஆண்டு துபையில் அல்லது ஸ்பெயினின் வலென்சியாவில் திடீர் வெள்ளம் ஏற்பட்ட போது, பல சமூக ஊடக பயனர்கள் அத்தகைய நடைமுறைகளே காரணம் என்று கூறினர். ஆனால், வானிலையை மாற்றியமைத்துக் கையாளுதல் மற்றும் புவி பொறியியல், இரண்டுமே ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. உலகின் பல்வேறு பகுதிகள் அனுபவிக்கும் வானிலை உச்சநிலையை இவை குறிக்கவில்லை. வானிலையை மாற்றியமைப்பது சாத்தியம். அதில், மேக விதைப்பு என்பது மிகவும் பொதுவான நுட்பங்களில் ஒன்று. சமீபத்திய ஆண்டுகளில் சீனா, மெக்சிகோ, இந்தியா உள்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இது பயன்படுத்தப்பட்டு உள்ளதாக அமெரிக்க அரசாங்க அறிக்கை கூறுகிறது. பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, 2024ஆம் ஆண்டில் துபையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை காலநிலை மாற்றம் மோசமாக்கி இருக்கலாம் என்று ஓர் அறிவியல் ஆய்வு முடிவு செய்துள்ளது நீராவி உறைந்து போவதை ஊக்குவிக்க, மழை அல்லது பனிக்கான வாய்ப்பை அதிகரிக்க, சிறிய துகள்களை (சில்வர் ஐயோடைட் போன்றவற்றை), ஏற்கெனவே இருக்கும் மேகங்களில் விதைப்பது இந்தச் செயல்முறையில் அடங்கும். "இத்தகைய வானிலை கையாளுதல் நுட்பங்கள் மிகக் குறுகிய காலத்திற்கு உள்ளூர் அளவில் செயல்படுத்தப்படுகின்றன. எனவே, கடந்த பல தசாப்தங்களாக இந்த பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் காலநிலையில் ஏற்படும் விரைவான மாற்றங்களை இந்த நுட்பங்களால் கணக்கிட முடியாது" என்கிறார் இந்திய அறிவியல் நிறுவனத்தின் வளிமண்டல மற்றும் கடல்சார் அறிவியல் மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் கோவிந்தசாமி பாலா. மேக விதைப்பு போன்ற வானிலையை மாற்றியமைக்கும் நுட்பங்களின் செயல்திறன் குறித்து சில விவாதங்கள் இருந்தாலும், அவை மட்டுமே பெரிய வெள்ளம் அல்லது பெரிய அளவிலான புயல்களை ஏற்படுத்த முடியாது என்று விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கிறார்கள். மறுபுறம், புவி பொறியியல் என்பது காலநிலையை மாற்றும் குறிக்கோளுடன் சுற்றுச்சூழலைக் கையாளும் முயற்சிகளைக் குறிக்கிறது. இதில் அடிக்கடி குறிப்பிடப்படும் ஒரு வடிவம், சூரிய கதிர்வீச்சு மாற்றம். அதாவது, சூரிய ஒளியை மீண்டும் விண்வெளியில் பிரதிபலிக்கச் செய்யவும், கோட்பாட்டளவில் பூமியை குளிர்விக்கவும், வளிமண்டலத்தில் சில பொருட்களின் நுண்துகள்களைத் தெளிப்பதே சூரிய கதிர்வீச்சு மாற்றமாகும். பிரிட்டன் உள்படப் பல நாடுகளில், சமீபத்திய ஆண்டுகளில் சூரிய பொறியியல் ஆராய்ச்சியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆபத்தான வெப்பமாதலைக் கட்டுப்படுத்த உதவுமா என்பதைப் புரிந்துகொள்ளும் முயற்சிகளாக இவை உள்ளன. உலகம் அனுபவித்து வரும் சில தீவிர வானிலைகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? காலநிலை மாற்றமே, வெப்ப அலைகள் அல்லது அதிக மழைப்பொழிவு போன்ற சில வகையான தீவிர வானிலைகள் உருவாவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதாகவும், அந்த நிலைமைகளைத் தீவிரப்படுத்துவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy7lx1jrv0o

தலாவ பஸ் விபத்து-பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்!

2 months 4 weeks ago
தலாவ பஸ் விபத்து-பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்! பாடசாலை மாணவர் ஒருவரின் உயிரைப் பறித்து, சுமார் 40 இற்கும் மேற்பட்ட பயணிகளுக்குக் காயங்களை ஏற்படுத்திய தலாவை, ஜயகங்க பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்துச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பஸ்ஸின் சாரதி, எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தம்புத்தேகம நீதவான் கயாத்திரி ஹெட்டியாரச்சி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன் இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, அதன் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு தம்புத்தேகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, விபத்துச் சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பஸ்ஸின் நடத்துநரை தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்திய தம்புத்தேகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர், ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது, விபத்தானது முதலாவது சந்தேகநபரான பஸ் சாரதியின் அஜாக்கிரதை மற்றும் கவனக்குறைவு காரணமாகவே இடம்பெற்றது எனத் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2025/1452565

விசேட சோதனையில் பெருந்தொகை போதைப்பொருளுடன் அறுவர் கைது!

2 months 4 weeks ago
விசேட சோதனையில் பெருந்தொகை போதைப்பொருளுடன் அறுவர் கைது! கிரிந்த பிரதேசத்தில் பெருந்தொகையான போதைப்பொருளுடன் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவும் தெற்கு மாகாண பொலிஸ் குழுவும் இணைந்து கிரிந்த பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது பெருந்தொகையான போதைப்பொருளுடன் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து 300 கிலோகிராம்களுக்கும் அதிகமான ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் போதைப்பொருள் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1452577

ஒன்றரை வருடமாக நீதித்துறையை ஏமாற்றிய போலி சட்டத்தரணி கைது!

2 months 4 weeks ago
செவ்வந்தி பாணியில் மட்டக்களப்பில் செயற்பட்டுவந்த போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு. மட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்ட போலி சட்டத்தரணியை அடையாளம் காணும் அணிவகுப்பு நீதிமன்றத்தில் இன்று (11) இடம்பெற்றபோது அவரை அடையாளம் காணப்பட்டதையடுத்து எதிர்வரும் 24ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். செவ்வந்தி பாணியில் மட்டக்களப்பில் செயற்பட்டுவந்த போலி ஆண் சட்டத்தரணி ஒருவரை கடந்த சனிக்கிழமை (08) ஓந்தாச்சிமடம் பிரதேசத்தில் வைத்து கைதுசெய்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) இரவு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறும் குறித்த தினத்தில் ஆள் அடையாளம் காணும் அடையாள அணிவகுப்பு இடம்பெறும் என கட்டளையிட்டு உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தி அவருக்கு எதிராக முறைப்பாடு செய்த மூன்று பேரும் அடையாளம் காண்பித்ததையடுத்து நீதவான் குறித்த நபரை எதிர்வரும் 24 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார் அதேவேளை இவ்வாறு கைதுசெய்யப்பட்ட போலி சட்டத்தரணி கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சட்டத்தரணி போல் நடித்து வந்துள்ளார். இவர் உயர்கல்வியை விஞ்ஞான பாடம் கற்றுள்ளதாகவும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து கொழும்பில் வாழ்ந்து வந்த அவர் கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் திருமணம் முடித்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேவேளை அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சட்டத்தரணி என அடையாளப்படுத்தும் போலி வருகை அட்டை மற்றும் இறப்பர் முத்திரை, சட்டத்தரணி என வாகனத்துக்கு அடையாளப்படுத்தி ஒட்டப்படும் ஸ்டிக்கர்களை தயாரித்து கொடுத்த கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை நீதவான் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1452549

அடுத்த ஆண்டாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 50 சதவீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள் ; நாமல் ராஜபக்ஷ

2 months 4 weeks ago
11 Nov, 2025 | 02:52 PM ( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) ஏழைகளுக்கு வரி விதித்து, செல்வந்தர்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் தான் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும், நாட்டு மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். அடுத்த ஆண்டாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 50 சதவீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து சுமார் 4.30 மணித்தியால வரலாற்று சாதனையான உரையை நிகழ்த்தினார் என்று ஆளும் தரப்பினர் குறிப்பிடுகின்றனர். இந்த வரவு - செலவுத் திட்டத்தில் வரலாற்று சாதனைமிக்க என்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதை ஆழமாக ஆராய வேண்டும். 2025 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் 50 சதவீதமேனும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த கால வரவு - செலவுத் திட்டங்களில் செல்வந்தர்களிடமிருந்து பெற்று, ஏழைகளுக்கு நிவாரணமளிக்கப்பட்டது, ஆனால் இந்த வரவு செலவுத் திட்டம் ஏமைகளிடமிருந்து பெற்று செல்வந்தர்களுக்கு வழங்கும் போக்கில் காணப்படுகிறது. பொருளாதார மீட்சிக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் நாங்கள் எதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களுக்கு மக்கள் தான் எதிர்ப்பு தெரிவித்தது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் பேசிய விடயங்களை ஹன்சாட்டில் இருந்து தொகுத்து நூலாக வெளியிட வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும், நாட்டு மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். உங்களைப் போன்று வைராக்கியத்துடன் செயற்பட போவதில்லை .அடுத்த ஆண்டாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 50 சதவீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள் என்றார். https://www.virakesari.lk/article/230087

மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?

2 months 4 weeks ago
தம்மை விட பெரும்பான்மையாக உள்ள சிங்களவரோடும் ஒத்து போகமுடியவல்லை. தம்மை விட சிறுபான்மையாக இருக்கும் முஸ்லீம் மக்களோடும் ஒத்து போக முடியவில்லை. தமக்குள் இருக்கும் கிறிஸ்தவர்களுடனும் மதம் மாற்றுகிறான் என்று இடைக்கிடை பாய்ச்சல். பக்கது நாடு இந்தியாவுடனும் தந்திரோயபாய ரீதியிலாவது நட்புடன் இருக்க முடியவில்லை. சர்வதேசத்தில் சக்திவாய்ந்த நாடுகளான மேற்குலகோடும் முரண்டு பிடி. யாராவது தமிழருக்குள் சற்று moderate ஆக சிந்தித்தாலும் அவர்களுக்கு துரோகி என்று கூறி பழி போட்டு ஒதுக்கல். இப்படியான குண்டு சட்டிக்குள் குதிரையோட்டும் குறுந்தேசியவாதம் என்றுமே வெற்றி பெறப்போவதில்லை.

யாழ்ப்பாணத்தில் வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து - இளைஞன் உயிரிழப்பு!

2 months 4 weeks ago
முதலில் இந்த தெரு நாய்களை ஒழிக்கணும் ..அடுத்து இந்த மோட்டர் சயிக்கிளையும் ஒழிக்கணும் ...சனத்தொகை வீழ்ச்சி நாளுக்கு 10 ஆக குறையுது..கடவுளே
Checked
Tue, 02/10/2026 - 23:32
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed