3 months ago
சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்களை பறிமுதல் செய்த பொலிசார்! பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாக கூறப்படும் பேருந்து, கார், கெப் ரக வாகனம் என்பவற்றை பொலிஸார் இன்று பறிமுதல் செய்துள்ளனர். சம்பத் மனம்பேரியின் மித்தெனிய பகுதியிலுள்ள வீடு சோதனை செய்யப்பட்டபோது குறித்த வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மித்தெனிய, தலாவ பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்திருந்தமை குறித்த சம்பவத்தில் சம்பத் மனம்பேரி அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பின்னர், அவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு, கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1452327
3 months ago
Images inside this were taken from various sources. Image credits to the respective owners. Document:
3 months ago
‘முழு நாடுமே ஒன்றாக’ போதைப்பொருள் தடுப்புத் திட்டம்: பலர் கைது! Published By: Digital Desk 1 09 Nov, 2025 | 11:20 AM நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று சனிக்கிழமை (08) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 5 கிலோ கிராம் 782 கிராம் ஹெரோயின், 827 கிராம் ஐஸ், 71 கிலோ கிராம் 682 கிராம் கஞ்சா, 275,501 கஞ்சா செடிகள்,4 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 25 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 637 போதை மாத்திரைகள் மற்றும் 1 கிலோகிராம் 585 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 994 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், 1,000 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், மறுவாழ்வு நிலையங்களுக்கு 5 பேர் அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/229889
3 months ago
க.பொ.த. உயர்தர பரீட்சை நாளை ஆரம்பம் : நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்கள் Published By: Digital Desk 1 09 Nov, 2025 | 07:37 AM எம்.மனோசித்ரா கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இதற்காக நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இம்முறை 340, 525 பேர் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள பரீட்சைகள் டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. 246 521 பரீட்சாத்திகள் பாடசாலை ஊடாகவும், 94 004 பரீட்சாத்திகள் தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ளனர். அதற்கமைய ஒட்டுமொத்த விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 340 525 ஆகும். உயர்தர பரீட்சைகளுடன் தொடர்புடைய சகல மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகள், கருத்தரங்குகளுக்கும் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. பாடசாலை ஊடாக பரீட்சைக்குத் தோற்றும் விண்ணப்பதாரர்களுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கும் அவை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்தார். பரீட்சாத்திகள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் என்பவற்றை கொண்டு வர வேண்டியது கட்டாயமானது என்றும் அவர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/229871
3 months ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நீங்கள் வாசிக்கும்போது உங்கள் தலைக்குள் என்னவெல்லாம் நடக்கிறது என்று எப்போதாவது யோசித்ததுண்டா? கட்டுரை தகவல் அனலியா லோரென்டே பிபிசி நியூஸ் முண்டோ 8 நவம்பர் 2025 " நம் அனுபவத்தின் எல்லைகளை விரிவாக்குவதற்கு வாசிப்பது ஒரு சிறந்த வழியாகும்," மூளையின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்துள்ள கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் முனைவர் ரேமண்ட் மார் இதை விளக்கியுள்ளார். மூளையின் செயல்பாட்டைக் குறித்த ஆய்வுகளின்படி, ஒரு நாவலில் உள்ள கதாபாத்திரத்தின் கதையை வாசிப்பது, அதை நிஜத்தில் வாழ்வதற்குச் சமமானதாக இருக்கிறது. ஆனால், மனிதர்களின் மிக சிக்கலான உறுப்பான மூளையின் புதிரான செயல்பாட்டிற்கும் வாசிப்பிற்கும் இடையிலான உறவு குறித்த விஞ்ஞானிகளின் பல கண்டுபிடிப்புகளில் இது ஒன்றுதான். வாசிக்கும்போது நம் மூளையில் என்ன நடக்கிறது என்று ஆய்வு செய்த மூன்று ஆராய்ச்சியாளர்களை பிபிசி பேட்டி கண்டது. மூளையும் மனமும் ஆராய்ச்சியாளர்கள் முதலில் இருந்து வலியுறுத்தி வருவது ஏதாவது இருக்குமானால் அது மூளைக்கும் மனதிற்கும் உள்ள வித்தியாசமே ஆகும். "மூளை என்ன செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ள, மனம் என்ன செய்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மூளையைப் பற்றி தனியாகப் பேச முடியாது," என்று கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் அறிவாற்றல் உளவியல் (Cognitive Psychology) பேராசிரியரான கீத் ஓட்லி சுட்டிக்காட்டினார். "நாம் வாசிக்கும்போது, ஒரு குறிப்பிட்ட மூளைப் பகுதி செயல்படுகிறதா என்பதை அறிவது மட்டும் போதாது. அந்தச் செயல்பாட்டில் மனம் எவ்வாறு இயங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்வதும் அவசியம்," என்று மார் ஏற்றுக்கொள்கிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாம் வாசிக்கும்போது மூளை அதற்கானப் படங்களை உருவாக்குகிறது. மனதில் தோன்றும் படங்கள் வாசிக்கும்போது தூண்டப்படும் முதல் எதிர்வினைகளில் ஒன்று, மனதில் படங்களை உருவாக்குவதுதான். "நாம் வாசிக்கும்போது, விளக்கப்பட்டதைப் போன்ற உருவங்களை மனம் உருவாக்குகிறது அல்லது நினைவுபடுத்துகிறது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன," என்று மார் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். "அடிப்படையில், நீங்கள் ஒரு காட்சியைப் பற்றிய விரிவான விளக்கத்தைப் வாசித்தால், உங்களால் மூளையின் காட்சிப் புறணியில் (visual cortex) செயல்பாட்டைக் காண முடியும். அறிதலுக்கும் (perceiving) அறிதல் பற்றி வாசிப்பதற்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன," என்று அவர் கூறினார். நாம் வாசிப்பதையே நிஜத்திலும் வாழ்கிறோமா? புனைகதைக் கதாபாத்திரத்தின் அனுபவத்தைப் பற்றி வாசிப்பதற்கும், அந்தச் செயல்பாட்டை நிஜ வாழ்க்கையில் அனுபவிப்பதற்கும் இடையில் மூளை பெரிய வேறுபாட்டைக் காண்பதில்லை என தோன்றுவதாக ஓட்லியும் மாரும் முடிவுக்கு வந்துள்ளனர். "ஏதோவொன்றைப் பற்றி வாசிப்பதற்கும் அதை அனுபவிப்பதற்கும் மூளை ஒரே மாதிரியாகவே வினைபுரிவதாக தெரிகிறது," என்று மார் விளக்கினார். அந்த நிபுணரின் கூற்றுப்படி, ஒரு நாவலில் ஒரு கதாபாத்திரம் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதைப் பற்றி ஒருவர் வாசிக்கும்போது, அந்த நபர் நிஜத்தில் அந்தச் செயலைச் செய்யப் பயன்படுத்தும் அதே மூளைப் பகுதிகளே செயல்படுகின்றன. "உதாரணமாக, ஒரு கதையின் கதாநாயகன் ஆபத்தான அல்லது பயப்படக்கூடிய சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, நாம் பயத்தை உணர்கிறோம் என்பது நமக்குத் தெரியும்," என்று மார் உதாரணம் அளித்தார். இது ஒன்றில் அல்லது ஒருவரிடத்தில் தன்னைப் பொருத்திப்பார்க்கும் தெளிவான பச்சாதாப உணர்வு. "நிஜ வாழ்க்கையில் மக்கள் பச்சாதாபம் உள்ளவர்களாக இருக்கிறார்களா என்பதை அறிய மூளையின் சில பகுதிகளை கண்காணிக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டது. கதைகளில் உள்ள கதாபாத்திரங்களைப் பற்றிப் வாசிக்கும்போது அதே மூளைப் பகுதிகள்தான் தூண்டப்படுகின்றன. ஏனெனில், உளவியல் செயல்முறை ஒத்திருக்கிறது," என்று ஓட்லி பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒரு கதாபாத்திரத்தைப் பற்றிய விரிவான விளக்கத்தை வாசிக்கும்போது, நாம் நம்மை அவர்களின் இடத்தில் வைத்து, ஏறக்குறைய அதே உணர்வுகளை அனுபவிக்க முடியும். இயக்கம் செயலைக் குறிக்கும் ஒரு வினைச்சொல்லை நாம் வாசித்தால், நாம் அதைச் செய்வதாக மூளை புரிந்துகொள்கிறதா? "நாம் ஒரு செயல்பாட்டு வினைச்சொல்லை மௌனமாகப் வாசிக்கும்போது செயல்படும் மூளையில் உள்ள இயக்கப் பகுதிகளும், நாம் இயக்கத்தைச் செய்யும்போது செயல்படும் பகுதிகளும் மிக அருகில் உள்ளன," என்று பிரான்சின் லியோனில் உள்ள மொழியியல் இயக்கவியல் ஆய்வகத்தின் (Language Dynamics Laboratory) அறிவாற்றல் நரம்பியல் ஆராய்ச்சியாளர் வெரோனிக் பூலெங்கர் சுட்டிக்காட்டினார். காலால் உதைப்பது, நடப்பது அல்லது ஓடுவது போன்ற செயல்களை ஒருவர் வாசித்தால், மூளை இயக்கப் பகுதியைத் தூண்டும் என்று அந்த ஆராய்ச்சியாளர் கூறினார். "ஒரு வகையில், மூளை நாம் வாசிக்கும் செயலை உருவகப்படுத்துகிறது," என்று பூலெங்கர் பிபிசி முண்டோவிடம் கூறினார். போட்டி ஆனால், ஒரு செயல்பாட்டு வினைச்சொல்லை வாசித்து, அதே நேரத்தில் ஒரு அசைவைச் செய்ய முயற்சித்தால் என்ன நடக்கும்? "ஒரு ஆய்வில், பங்கேற்பாளர்களை ஒரு திரையில் செயல்பாட்டு வினைச்சொற்களை வாசிக்கும் அதே நேரத்தில் ஒரு பொருளை எடுக்கச் சொன்னோம். அப்போது, வாசிக்காதபோது இருப்பதைவிட, அசைவுகளின் வேகம் குறைவாக இருந்தது," என்று பூலெங்கர் விளக்கினார். மூளையின் அதே வளங்களைப் பயன்படுத்துவதில் "குறுக்கீடு அல்லது போட்டி" இருப்பதால் இது நடக்கிறது என்று அந்த ஆராய்ச்சியாளர் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வாசிப்பதும் செயல்படுவதும் மூளையில் "குறுக்கீடு அல்லது போட்டி"யை உருவாக்குகின்றன. நேரடி அல்லது மரபுத்தொடர் மூளையின் செயல்பாட்டைக் கண்டறியும் செயல்பாட்டு காந்த அதிர்வு இமேஜிங் (functional magnetic resonance imaging - fMRI) என்ற மற்றொரு ஆய்வில், கை அல்லது கால் தொடர்பான செயல்பாட்டு வினைச்சொற்களை உள்ளடக்கிய நேரடி வாக்கியங்கள் அல்லது மரபுத் தொடர்களை வாசிக்கும்போது மூளையின் செயல்பாட்டை பூலெங்கர் பகுப்பாய்வு செய்தார். "இரண்டு வகையான வாக்கியங்களுக்கும், மூளையின் மொழி பகுதிகளின் செயல்பாடுகளுடன், இயக்க மற்றும் முன்-இயக்க மூளைப் பகுதிகளின் (motor and premotor brain regions) செயல்பாடுகளும் காணப்பட்டன," என்று அவர் விளக்கினார். அந்த நிபுணரின் கூற்றுப்படி, கை தொடர்பான வாக்கியங்கள் மூளையில் கையைச் சித்தரிக்கும் இயக்கப் பகுதியையும், அதே சமயம் கால் தொடர்பான வாக்கியங்கள் மூளையின் வேறுபட்ட இயக்கப் பகுதியையும் தூண்டுகின்றன. இது, மூளையின் இயக்கப் புறணியின் (motor cortex) உடலமைப்பு பிரதிபலிப்புக்கு (somatotopy) பதிலளிக்கிறது. அதாவது, உடலின் வெவ்வேறு பாகங்கள் இயக்கப் புறணியின் வெவ்வேறு துணைப் பகுதிகளில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அமைப்பு இது. நிஜ வாழ்க்கையில் எப்படி உதவும்? கதைகளைப் புரிந்துகொள்வதில் ஈடுபட்டுள்ள மூளைப் பகுதிகளுக்கும், மற்றவர்களைப் புரிந்துகொள்வதில் நாம் பயன்படுத்தும் பகுதிகளுக்கும் இடையே பொதுவான பகுதிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. அப்படியானால், புனைகதைக் கதாபாத்திரங்களைப் வாசிப்பதன் மூலம் பச்சாதாபம் கொள்வது, நிஜ வாழ்க்கையில் மக்களை நன்கு புரிந்துகொள்ள உதவுமா? மார் அப்படித்தான் நம்புகிறார். "நாம் அடிக்கடி வாசிப்பதிலும், அதில் உள்ள கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் ஈடுபாடு காட்டுவதாக இருந்தால், அது மற்றவர்களைப் புரிந்துகொள்ளும் நம் திறனை மேம்படுத்தலாம் அல்லது கற்றுக்கொள்ளலாம் என்று இது பொருள்படலாம்," என்று அவர் பகுப்பாய்வு செய்தார். "உதாரணமாக, ஒரு மாற்றுத்திறனாளி போல வாழ்வது எப்படி என்று நமக்கு ஒருபோதும் தெரியாமல் இருக்கலாம்," என்று அவர் கூறினார், "ஆனால், அதை அனுபவிக்கும் நபரின் இடத்தில் நம்மை வைக்கும் மிகச் சிறப்பாக எழுதப்பட்ட ஒரு கதையை வாசித்தால், நாம் அந்த அனுபவத்தைப் புரிந்துகொள்ளும் நிலையை அடையலாம்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2310jvzpzpo பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
3 months ago
என் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து ஒதுங்க தாயார் - சிவஞானம் சிறிதரன் எம்.பி பகிரங்க அறிவிப்பு 09 Nov, 2025 | 09:43 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மனநோயாளியான பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிக்கிறேன். என் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்து உண்மையை வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்டுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். என் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து ஒதுங்கத் தாயார். பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தால் அதற்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, கடந்த 2025 ஒக்ரோபர் 23ம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்ற சிறப்புரிமை; மீறலில் நான் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டு உண்மைக்கும், அறத்திற்கும் மாறான வகையில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் எனக்கு எதிரான சிறப்புரிமை மீறல் பிரேரணை ஒன்றை சபையில் முன்வைத்துள்ளார். அரசியலமைப்பின் திருத்தம் செய்யப்பட்ட 2018 ஆண்டின் 18 திருத்தத்தின் பிரகாரம் 2024 டிசம்பர் 06 திகதி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 11 பேரின் இரகசிய வாக்களிப்பில் தேர்தல்மூலமாக உயர் பதவிகளைத் தீர்மானிக்கும் அரசியலமைப்புசபைக்கு நான் ஜனநாயக முறைப்படி தெரிவுசெய்யப்பட்டேன். இப்பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உட்பட பலர் கண்வைத்து திரைமறைவில் ஈடுபட்ட போதும் நானும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்களும் தேர்தலில் போட்டியிட்டு நான் தெரிவு செய்யப்பட்டேன். தெரிவுசெய்யப்பட்ட 2024.12.06 திகதி முதல் இன்றுவரை எனது கௌரவமான பங்களிப்பை நேர்மையுடனும், அரசியலமைப்பு உறுப்புரிமை 9 இன் பீரகாரமும் எனது மனச்சாட்சிக்கு இணங்க செயற்பட்டு வருகின்றேன். அரசியலமைப்பின் உறுப்புரை 29 இன் பிரகாரமும் உறுப்புரை 7இன் பிரகாரமும் எனது தேசத்து மக்கள் சார்ந்து பொதுநலனில், மக்கள் நலனில் நின்றே எனது முடிவுகளை மிகத்தெளிவாக அரசியலமைப்பு சபையில் முன்வைத்துள்ளேன். என் கட்சிக்காகவோ அல்லது வெளிநபர்களின் நெருக்குதலுக்காகவோ எந்தமுடிவுகளையும் நான் மாற்றிக்கொள்ளவில்லை. எந்தவித வெளிப்புற அழுத்தமும் என்மீது பிரயோகிக்கப் படவுமில்லை. அவ்வாறு பிரயோகிக்கவும் முடியாது என்பதை கடந்த ஓராண்டு காலமாக நேர்மையுடனும், கண்ணியத்துடனும் அறம் சார்ந்து தைரியத்துடன் நிரூபித்துள்ளேன். 'சிவில் புத்தி பெரமுன' என்ற அமைப்பைச் சார்ந்தவர் எனக்கூறப்படும் 'சஞ்சய் மகவத்' என்பவரால் நிதிக்குற்றப்புலனாய்வுபிரிவில் நான் சொத்துக்கள் குவித்து வைத்திருப்பதாக 2025 ஜுலை 25ஆம் திகதி முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்ததாக பத்திரகைகளில், சமூக ஊடகங்களில் பார்வையிட்டிருந்தேன். செய்திகள் வெளிவந்த உடனேயே பகிரங்கமாக இவ்விசாரணையைச் செய்து உண்மையை வெளிக்கொண்டு வருமாறு வெளிப்படையாகக் கூறியிருந்தேன். இன்று ஏறத்தாள 04மாதங்களை நெருங்குகின்ற போதும் இதுவரை நிதிக்குற்றப் புலனாய்வுப்பிரிவினரால் எந்த முடிவுகளும் வெளியீடப்படவில்லை. இப்பொழுதும் இந்த உயர்ந்த சபையினூடாக ஒரு ஒரு கோரிக்கையை முன் வைக்கின்றேன். எனது பெயரிலோ, என்குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ அல்லது பினாமிகள் பெயரிலோ எனக்கு சொத்துக்கள் இருந்தால் வீசாரணை செய்து சட்டநடவடிக்கை எடுக்குமாறு பகிரங்கமாக கேட்கின்றேன். அதுபோல் எனது பெயரிலோ அல்லது எனது சிபாரிசிலோ, கடந்த காலங்களில் நான் மதுபான சாலைக்கான அனுமதிப்பத்திரம் ஏதும் பெற்றிருந்தால்சிபார்சு செய்திருந்தால் உடன் வெளிப்படுத்தி என்மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கோருகின்றேன். அசியலமைப்பு உறுப்புரை 41இன் பிரகாரம் நான் நீதியான முறையில் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்டுள்ளேன். அரசியலமைப்பு சபையில் மொத்தம் 10 உறுப்பினர்களில் நான் மட்டுமே இலங்கை வரலாற்றில் முதன்முதலில் தேர்தல்மூலம் தெரிவு செய்யப்பட்டவன் எனக்கருதுகிறேன். பாராளுமன்ற நிலையியற்கட்டளை 29(2) பிரகாரம் இது ஒரு சிறப்புரிமை மீறல் அல்ல என்பதையும் அரசியலமைப்பின் உறுப்புரை 41/ 1 இன்படி விசாரணை நடாத்தி உண்மையை முதலில் வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்டுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்த போது தமிழ் அதிபர் ஒருவரை முழந்தாழிட்டார்.இவர் ஒரு மன நோயாளி என்றே குறிப்பிட வேண்டும். பாராளுமன்ற நிலையியற் கட்டளை 29(2) பிரகாரம் இது ஒரு சிறப்புரிமை மீறல் அல்ல என்பதையும் அரசியலமைப்பின் உறுப்புரை 41/ 1 இன்படி விசாரணை நடத்தி உண்மையை முதலில் வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்டுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.என் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலக தயார். அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தால் அதற்கும் ஒத்துழைப்பு வழங்குவேன் என்றார். https://www.virakesari.lk/article/229875
3 months ago
3 months ago
எந்த சாயமும் போடலாம்....இப்ப நம்ம சனத்தின் நிலை அப்படி...
3 months ago
மம்தானியின் பூர்வீகம் உகண்டாவா? இந்தியாவா? இதே அணுகுமுறைப்படி டிரம்ப் ஜேர்மனியில் அல்லது ஸ்கொட்லாந்தில் அல்லவா சாதிக்க முயலவேண்டும்? மம்தானியின் பேச்சுக்கள், எனக்கே எரிச்சலூட்டுகிறன. பெருநகரங்களுக்கு அப்பாலான அமெரிக்கன் வாக்காளரை இது செம்ம கடுப்பாக்கும், என்பதும், ஜனாதிபதியாக வரமுடியாத இவர் நாடளாவிய ரீதியில் தன் கட்சிக்கே பின்னடைவை ஏற்படுத்துவார் என்பதும் என் நிலைப்பாடுமே. ஆனால் “பூர்வீகம்” பற்றிய உங்கள் கருத்து காலாவதியாகுவிட்ட கருத்தாக எனக்கு படுகிறது. குறிப்பாக பூர்வகுடிகளை ரிசவேசன் எனும் திறந்த சிறைகளில் வைத்துள்ள அமெரிக்கா போன்ற நாடொன்றில்.
3 months ago
உங்களுக்கு உண்மையில் என்ன பிரச்சனை என புரியவில்லை😂. உங்களின் முதலாவது பதிவிற்கான பதிலிலேயே இதற்கு இவர்கள் மட்டுமே பின்னால் இருப்பார்கள் என்பதல்ல என் வாதம் என்பதை தெளிவுபடுத்திவிட்டேன். எந்த கருத்தாளரும் சொல்லாத ஒன்றை சொல்லியதாக, இவர்கள் இருவரும் கருத்தாளர்களுக்கு அறிமுகமானவராக இருக்க கூடும் என, கற்பனையில் கம்பு சுத்துவது ஏன் செம்பா🤦♂️.
3 months ago
ஒரு நிறுவனத்தின் வரிச்சுமை (tax liability) என்பது இலாபம் ஈட்டப்பட்டதும் உருவாகிவிடும். Tax liability உருவாகிய தருணம் முதல் அந்த tax amount அரசுக்கு சொந்தமான பணம். தனியே இலாபத்தில் எடுக்கும் வரி மட்டும் அல்ல, நட்டத்தில் ஓடும் நிறுவனங்களுக்கு அவை அரசின் சார்பில் வாடிக்கையாளரிடம் வசூலிக்கும் VAT உட்பட பல வரிச்சுமைகள் இருக்கும். சரியாக தெரியவில்லை ஆனால் இது எண்ணை சம்பந்தபட்ட வியாபாரம் என்பதால் - fuel duty அல்லது அதுபோல் வேறு ஏதும் வரியும் சேர்ந்தே 250 மில்லியன் வரை இந்த கம்பனிக்கு வரிச்சுமை ஏற்பட்டிருக்கலாம். நமக்கு தெரிந்த ஒரே தரவு திவாலான கம்பெனியின் வரிச்சுமை, அதாவது வரியாக அரசுக்கு கட்ட படவேண்டிய தொகை 250 மில்லியன் அண்ணளவாக. இவ்வாறாக தேங்கும் வரிச்சுமையின் பால்பட்ட வரியை செலுத்த ஒரு கால எல்லை இருக்கும். அந்த கால எல்லைக்குள் நிறுவனம் வங்குரோத்து ஆகிவிட்டால் - அது அரசின் வருவாய்க்கு வரவேண்டிய வரியில் நட்டமே. ஒரு பெட்டிகடை உதாரணம். நான் ஒரு பொருளை 100 ரூபாய்க்கு வரி உட்பட விற்கிறேன். இதில் 17.50 ரூபாய் VAT என வைப்போம். இதை நான் வாடிக்கையாளரிடம் பொருள் விற்கும் போது அறவிட்டு விடுவேன். அதேபோல் எனது வியாபார வரி 2.50. இந்த 100 ரூபாய் வியாபாரத்தில் என் வரிச்சுமை 20 ரூபாய். இது வரிக்கொள்கையில் இருக்கும் இசைவுகள் relief ற்கு ஏற்ப மேலும் குறைந்து 18 ஆகிறது என வைப்போம். இந்த 18 ரூபாய் வரியை நான் கட்ட எனக்கு ஒரு கால எல்லை இருக்கும். சில சமயம் இந்த எல்லையை திறைசேரி நீட்டிக்கலாம், அல்லது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் எனில் அரைவாசியாக கூட குறைக்கலாம், ஏன் ரத்து கூட செய்யலாம். ஆனால் வரிச்சுமை, வரிச்சுமைதான். இந்த வரிப்பணத்தை உள்ளபடியே அரசால் தகுந்த நேரத்தில் வசூலிக்க முடிந்தால் அது அரசின் திறை சேரியில் +18 ரூபாய் என முடியும். அந்த 18 ரூபாயில் அரசு நாலு பேருக்கு டொபி வழங்கும் நலத்திட்டத்தை செய்யலாம். இந்த 18 ரூபாயை அரசு வசூலிக்க முன்னர் கம்பெனி திவாலானால் - அரசுக்கு 18 ரூபாய் சுவாகா. இதுதான் நாமம். மேலே ரசோ அண்ணா சொன்ன இந்திய வியாபார, நான் சொன்ன நகை கடை உதாரணங்களில், மாறி மாறி வங்குரோத்து செய்து தனியே வங்கியை மட்டும் சுத்துவதில்லை, இப்படி திறைசேரியையும் சுத்துவார்கள்.
3 months ago
அண்ணா, நாட்டின் தலைவர்களை மட்டும் அன்றி, மதங்களை, மக்களின் நம்பிக்கைகளை, சடங்குகளை வார்த்தைகளாலோ அல்லது செயல்களாலோ அவமதிப்பது அல்லது ஏளனம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல். மாற்றுக் கருத்துகள் இருக்கலாம், அவை மிக அவசியமும் கூட மனிதர்கள் தொடர்ந்து முன்னே செல்ல, ஆனால் சொல்லும் முறைகளில், பொது வெளிகளில், சில அடிப்படை நாகரிகம் பின்பற்றப்படவேண்டும். மம்தானியின் பேச்சில் இருந்த சவால்களும், சவடால்களும் கண்டிக்கப்படவேண்டியவையே. அதே போன்றே அதிபர் ட்ரம்பின் பேச்சுகளில், செயல்களில் இருக்கும் பல விடயங்களும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை. முதலில் இவர் பொய்களை சொல்வதை நிற்பாட்ட வேண்டும். எந்த அடிப்படையும் இல்லாமல், எந்த வித பொறுப்புகளும் இல்லாமல் இவர் சொல்லும் விடயங்களும், மனிதர்களை பிளவுபடுத்தும் பேச்சுகளும் ஒரு தலைவருக்கு உரியது மட்டும் இல்லாமல், நீண்ட காலப் போக்கில் மிக ஆபத்தானதும் கூட. அரசியலில் மட்டும் இல்லை, தொழில்துறைகளில், ஆராய்ச்சிகளில், இலக்கிய முயற்சிகளில் கூட, புலம்பெயர்ந்த மக்கள் புலம் பெயர்ந்த மண்ணிலேயே சாதிக்க முடிகின்றது. தாயகங்களில் இருக்கும் தான்தோன்றித்தனமான போக்கும், குழு மனப்பான்மையும், மிகப் பரவலான தனிமனித வழிபாடுகளும், அசையா நம்பிக்கைகளும் தாயக மண்ணில் கடக்கவே முடியாத, மீறவே முடியாத கட்டுப்பாடுகளாக இருக்கின்றன. இங்கு அமெரிக்காவில் நாசா முழுவதும் இந்திய விஞ்ஞானிகள். வைத்தியசாலை முழுவதும் இந்திய மருத்துவர்கள். தொழில்நுட்பத்துறையில் மேலிருந்து கீழ் வரையும் அவர்களே. இவர்கள் ஏன் இவ்வளவு பாடுபட்டு அமெரிக்காவை முன்னேற்றுகின்றார்கள்............ இந்தியாவை முன்னேற்றி, அதை 2020 இல் ஒரு வல்லரசாக இவர்களால் மாற்றி இருக்க முடியாதா.......... முடியவே முடியாது என்பதே உண்மை. இந்தியாவில் இருக்கும் சூழல் இவர்களை எதுவுமே செய்ய விடுவதில்லை. இதுவே தான் அரசியலுக்கும், சமூகநீதிப் போராட்டங்களுக்கும். நாங்கள் கூட தாயகத்தில் சொந்த ஊர்களில் இருந்திருந்தால், இங்கே இவ்வளவு சுதந்திரமாக கருத்துகளை எழுதிக் கொண்டிருக்கமாட்டோம் என்றே நம்புகின்றேன்...........❤️.
3 months ago
ஒருவரது சுய விருப்பின்றி அல்லது அவர்களது குடும்பத்தினரின் விருப்பின்றி தனிப்பட்ட ஒரு தாதியர் கருணைக் கொலை செய்ய இயலாது..இரவு நேரப் பணியாளர்களுக்கு இருக்க கூடிய அதிக மன அழுத்தம் நோயாளிகள் தங்களை தொந்தரவு செய்யாமலிருக்க, சத்தமின்றி தூங்க வைப்பதற்கு தூக்க மருந்துகளை குடுத்திருக்க கூடிய வாய்ப்புக்களே அதிகம்.இங்கு கூட இரவு நேர பணிகளில் ஏற்படும் அழுத்தங்களினால் (அதுவும் பெண்கள்) போதைக்கு அடிமையாகி வேலையை விட்டுட்டு அலைபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
3 months ago
இது, புலிச்சாயமா பாதாள போதைக்கடத்தல் சாயமா?
3 months ago
இதென்ன, பாட்டுக்கு பாட்டு போட்டியா நடக்குதிங்க? சுவியர் தனிராகமிசைக்கிறார் நின்று!
3 months ago
"Mississippi Masala"(12.02.1992) எனும் திரைப்பட வெளியீட்டிற்கு வந்த மீரா நாயர் தன் குழந்தை மம்தானியுடன் வந்த புகைப்படத்தை வைத்து....நியூயோர்க் மேயர் சம்பவம் மாதிரி ஜேர்மனியிலும் நடக்கக்கூடிய சாத்தியம் உள்ளதா என அச்ச செய்தியை விவாதமாக்கியுள்ளது. யூத மடியிலிருந்து காஸா அழிப்பை இனக்கொலை என குற்றம் சாட்டியவர் எவ்வளவு காலம் நீடிப்பார் என காத்திருந்து பார்க்கலாம்.
3 months ago
3 months ago
மிகவும் ஆச்சரியப்பட வைக்கும் காரணம் இது . இங்கே பல வயதான நோயாளிகள் பராமரிப்பு நிலையங்களில் இடமில்லாமல் சொந்த வீடுகளில் தங்க வைத்துப் பராமரிக்கப்படும் நிலையில் இவர் இப்படிக் கூறி மாட்டுப்பட்டுள்ளார். சரியான தண்டனையும் பெற்றுள்ளார்
3 months ago
இங்கே நாங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். அமெரிக்கா ரஷ்ய எரிபொருள் வாங்குவதற்கு தடை போடுகின்றது. அதை அது சார்ந்த நாடுகள் கடைப்பிடிக்க வேண்டும்.கடைப்பிடிக்கினார்கள் தான். ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்கும் நாடுகள் மேற்குலகின் எதிரிகளாக விமர்ச்சிக்கப்படுவார்கள்.பார்க்கப்படுவார்கள். முக்கியமாக சீனா இந்தியா. ஆனால்.... ரஷ்ய எரிபொருள் வாங்கி தங்கள் பொருளாதாரத்தை முன்னேற்றும் அதே இந்தியா,சீனாவில் மேற்குலகு தங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளை நிறுவுவார்கள். அல்லது பற்பல பொருளாதார ஒப்பந்தங்களை செய்வார்கள்.அதே ரஷ்ய எரிசக்தி மூலம் உருவாக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்வார்கள். இந்த லாஜிக் உங்களுக்கு புரிகின்றதா? சென்ற ஒரு சில தினங்களுக்கு முன் ஜேர்மனியின் உருக்கு தொழிற்சாலைகள் எரிசக்திவிலை உயர்வினால் பெரிய நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதாக செய்திகளில் படிக்கக்கூடியதாக இருந்தது.
3 months ago
மக்களின் வாக்குரிமையை அரசே துஸ்பிரயோகம் செய்கின்றது என்ற குற்றச்சாட்டு இன்று நேற்று அல்ல இந்தியாவில் பல வருடங்களாகவே கூறப்படுகின்றது கேட்டால் உலகில் பெரிய ஜனநாயக நாடு என்பார்கள்
Checked
Mon, 02/09/2026 - 14:18
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed