புதிய பதிவுகள்2

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க. இணைந்து தேர்தலில் “மிகப்பெரிய கிரிமினல் மோசடி” ”போலி வாக்காளர்கள், முகவரிகள், புகைப்படங்கள்: வாக்குத் திருட்டு புகார் குறித்து ஆதாரங்களுடன் ராகுல் விளக்கம்

3 months ago
தேர்தலின் போது பகிரங்கமாக பணம் பொருட்கள் கொடுப்பது உலகத்துக்கே தெரிந்த விடயம். ஆனால் தேர்தல் கண்காணிப்பு குழுவுக்கு மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க. இணைந்து தேர்தலில் “மிகப்பெரிய கிரிமினல் மோசடி” ”போலி வாக்காளர்கள், முகவரிகள், புகைப்படங்கள்: வாக்குத் திருட்டு புகார் குறித்து ஆதாரங்களுடன் ராகுல் விளக்கம்

3 months ago
தென் மானிலங்களில் பா ஜ க விற்கு பெரிதான வரவேற்பு இல்லை, ஆனால் வட மானிலங்களில் பா ஜ க மிக பலமாக உள்ளது, வட மானிலத்தவர்கள் மேலை நாடுகளினால் இந்த பா ஜ க அரசினை கவிழ்ப்பதற்காக நடவடிக்கை எடுக்கிறார்கள், இந்திய எல்லைகளில் நெருக்கடிகளை உருவாக்கிறார்கள் என குற்றம் சாட்டுகிறார்கள், ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு இனிமேல் வரவே வராது என கூறுகிறார்கள். தென் மானிலங்களிலும் சில கூட்டாட்சி மூலம் பா ஜ க வருங்காலத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்படலாம்.

10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த தாதி - ஜேர்மனியில் சம்பவம்!

3 months ago
Water for injection (WFI) வேறு மருந்துகளுடன் பாவிப்பதற்காக தயாரிக்கப்படுவது, இதனை தனியாக உடலில் செலுத்தினால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என கருதுகிறேன்(சரியாக தெரியவில்லை).

10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த தாதி - ஜேர்மனியில் சம்பவம்!

3 months ago
கருணையாவது கருணை கொலையாது போட்டு தள்ளிவிட்டு நிம்மதியாக தான் இருக்க வேண்டும் என்ற கொள்கை தான் இந்த ஆண் தாதிக்கு இருந்திருக்கும். 10 பேரை தான் இவன் கொலை செய்யமுடிந்தது. ஆனால் இவன் வேறும் கொலைகள் செய்திருக்கலாமோ என்று பொலிஸ் ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்களாம் கொரோனா காலத்தில் யாழ்களத்தில் செய்தி படித்தனான் தடுப்பூசி போடுவதற்கு எதிரான கொள்கை கொண்ட யேர்மன் பெண் தாதி ஒருவர் கொரோனா தடுப்பூசி போட வந்த மக்களுக்கு தடுப்பு மருந்தை குப்பை தொட்டிக்குள் எறிந்து விட்டு தண்ணீரை ஊசி மூலம் ஏற்றினாராம். அப்படி தண்ணீர் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் எத்தனை பேர் கொரோனாவுக்கு பலியானார்களோ 😟

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 months ago
வணக்கம் வாத்தியார் . .........! பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது இடையா இது இடையா அது இல்லாததுபோல் இருக்குது ஆண் : கடற்கரை காற்று அடிக்குது காத்துல சேலை நடிக்கிது கடற்கரை காற்று அடிக்குது காத்துல சேலை நடிக்கிது முன்னால வரச் சொல்லி அழைக்கிது முகத்தில கடுகு வெடிக்கிது ஆண் : வெள்ளிக் கண்ணு மீனா வீதி வழிப் போறா தையாதக்கா தையாதக்கா உய்யா ஆண் : கண்ணுன்னு இருந்தா இமை வேணும் கழுத்துன்னு இருந்தா நகை வேணும் கண்ணுன்னு இருந்தா இமை வேணும் கழுத்துன்னு இருந்தா நகை வேணும் பொண்ணுன்னு இருந்தா துணை வேணும் ஒன்னும் புரியல்லையா இன்னும் தெரியல்லையா ஆண் : தேரோட்டும் கண்ணனுக்கு ராதா சிங்கார ராமனுக்கு சீதா தேரோட்டும் கண்ணனுக்கு ராதா சிங்கார ராமனுக்கு சீதா காரோட்டும் எனக்கொரு கீதா கல்யாணம் பண்ணிக்கொள்ள தோதா .......! --- நடையா இது நடையா ---

அல்காரிதத்திற்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி? என்ன தீர்வு?

3 months ago
"அம்மாவை விட அதிகம் கணிக்கும் அல்காரிதம்கள்" - வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவின் பங்கு பட மூலாதாரம், Laura G. De Rivera படக்குறிப்பு, நாம் உணராத அளவிற்கு அல்காரிதம்கள் நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்று லாரா ஜி. டி ரிவேரா கூறுகிறார். கட்டுரை தகவல் கிறிஸ்டினா ஜே. ஆர்காஸ் பிபிசி முண்டோ 51 நிமிடங்களுக்கு முன்னர் நீங்கள் இரவு உணவு சாப்பிட வெளியே செல்ல முடிவு செய்கிறீர்கள். நீங்கள் என்ன சாப்பிட விரும்புகிறீர்கள் என்று உங்கள் துணையால் தெரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம், ஆனால் செயற்கை நுண்ணறிவுக்கு அது தெரியும்: மாலையில் நீங்கள் 'டாக்கோஸ்' (Tacos) பற்றிய வீடியோக்களை பார்ப்பதைக் கண்டது, அதனால் இப்போது நீங்கள் அதைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது என்பதை அது தெளிவாக உணர்ந்துள்ளது. "நாம் முடிவுகளை எடுக்காவிட்டால், மற்றவர்கள் நமக்காக அதைச் செய்வார்கள்," என்று ஸ்பானிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான லாரா ஜி. டி ரிவேரா, பல ஆண்டுக்கால ஆராய்ச்சியின் விளைவாக வெளிவந்த தனது "அல்காரிதம்களின் அடிமைகள்: செயற்கை நுண்ணறிவு யுகத்தில் எதிர்ப்புக்கான கையேடு"("Slaves of the Algorithm: A Manual of Resistance in the Age of Artificial Intelligence,") என்ற புத்தகத்தில் எழுதுகிறார். "மனிதர்கள் மிகவும் கணிக்கப்படக் கூடியவர்கள் என்பதால் நாம் வெளியிலிருந்து திணிக்கப்பட்ட எண்ணங்கள், விருப்பங்கள் மற்றும் உணர்வுகளில் மூழ்கி வாழ்கிறோம். நமது கடந்த கால செயல்களில் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்துவது போதுமானது, அது யாரோ ஒருவர் நம் மனதைப் படித்தது போலாகிவிடும்," என்று அவர் மேலும் கூறுகிறார். நமது தேவைகள் அல்லது விருப்பங்களைக் கணிப்பதில் துல்லியம் மிக அதிகமாக உள்ளது. நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட அல்காரிதத்திற்கு போதுமான டிஜிட்டல் தரவுகள் அளிக்கப்பட்டால் நீங்கள் விரும்புவதையோ அல்லது விரும்பும் விஷயங்களையோ உங்கள் தாயைவிட மிகச் சிறப்பாக அதனால் கணிக்க முடியும் என்று ஸ்டான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழக உளவியலாளர் மற்றும் பேராசிரியர் மைக்கேல் கோசின்ஸ்கி தனது சோதனைகளில் நிரூபித்தார். செயற்கை நுண்ணறிவால் ஒருவரின் ஆர்வங்களை மிகத் துல்லியமாகக் கணிக்க முடியும் என்பது கொள்கையளவில், நல்லதாகத் தோன்றுகிறது. ஆனால் அதற்கு ஒரு விலை உண்டு, அது மிக அதிகம் என்று டி ரிவேரா கூறுகிறார்: "சுதந்திரத்தை இழக்கிறோம், நாம் நாமாக இருக்கும் திறனை இழக்கிறோம், கற்பனையை இழக்கிறோம்." "சமூக வலையமைப்பு (Social Network) இருக்கவும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கவும் நாமெல்லாம் நம் புகைப்படங்களைப் பதிவேற்றுவதன் மூலம் இன்ஸ்டாகிராமுக்கு இலவசமாக வேலை செய்கிறோம். விழிப்புடன் இருந்து, அபாயங்கள் உங்களைப் பாதிக்காமல் பார்த்துக் கொண்டு தளங்களின் நன்மைகளைப் பயன்படுத்துவது அவசியம்," என்று அவர் கூறுகிறார். பெரு நாட்டின் அரெகுய்பா நகரில் நவம்பர் 6 முதல் 9 வரை நடைபெறவுள்ள 15 நாடுகளில் இருந்து 130 பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கும் ஹே விழாவின் (Hay Festival) பின்புலத்தில் டி ரிவேராவுடன் நாங்கள் பேசினோம். பட மூலாதாரம், Penguin Random House படக்குறிப்பு, "தகவல்தான் அதிகாரம். அதைப் பெறுவதற்கான போட்டி கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது," என்று புத்தக ஆசிரியர் எழுதுகிறார். அல்காரிதத்திற்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி? என்ன தீர்வு? நான் காணும் தீர்வு மிகவும் எளிமையானது, யாருக்கும் சாத்தியமானது, இலவசமானது மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாதது. அதுதான் சிந்திப்பது. அதாவது, நமது மூளையைப் பயன்படுத்துவது. இது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்ட ஒரு மனிதத் திறன். நாம் வேலை செய்யாத அல்லது மக்களுடன் இல்லாத ஒவ்வொரு தருணத்திலும், நாம் தொலைபேசியை எடுத்துத் திரையில் கவனம் செலுத்தி நம்மை திசை திருப்புகிறோம். இப்போது மருத்துவரின் காத்திருப்பு அறையிலோ அல்லது வீட்டில் சலிப்படையும்போதோ நாம் சிந்திப்பதில்லை. நாம் சிந்திக்க வைத்திருந்த அந்த இடங்கள் இப்போது தொடர்ச்சியான திசை திருப்பலால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நமது ஸ்மார்ட்ஃபோன் மூலம், நம்மால் சிந்திக்க முடியாத அளவுக்குத் தொடர்ந்து தூண்டுதல்களைப் பெறுகிறோம். நாம் செய்யக்கூடிய வேறு சில விஷயங்களும் உள்ளன, ஆனால் இதுதான் மிக அடிப்படையானதாகவும் எளிதானதாகவும் நான் கருதுகிறேன். அல்காரிதத்தின் கட்டுப்பாடு மற்றும் மூன்றாம் தரப்பினரின் விருப்பத்திற்கு எதிராக விமர்சனப் பார்வையால் மட்டுமே தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாக்க முடியும். நீங்கள் ஒரு தளத்தில் பதிவு செய்யும்போது உங்கள் தரவை வழங்காமல் இருப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஒரு சேவையின் அனைத்து நுணுக்கமான விஷயங்களையும் படிப்பது அல்லது ஒவ்வொரு முறை ஒரு வலைதளத்திற்குள் நுழையும்போதும் "குக்கீகளை" (cookies) நிராகரிப்பது இன்னும் சிக்கலானது. நாம் என்ன சோம்பேறிகளாகிவிட்டோமா? நாம் கொஞ்சம் சோம்பேறிகளாகவும், கொஞ்சம் கைப்பாவைகளாகவும் இருக்கிறோம், ஆனால் நமக்குத் தகவல் இல்லாமலும் இருக்கிறோம். டிக் டோக் தளத்தில் பல மணிநேரம் செலவிடும்போது, அந்தத் தளத்திற்கு இலவசமாக வேலை செய்கிறோம் என்பதைப் பலர் புரிந்து கொள்வதில்லை. தங்கள் ஆன்லைன் நடத்தையைப் பற்றிய எல்லா தகவல்களையும் அவர்கள் கொடுக்கிறார்கள், மேலும் அந்தத் தகவலுக்கு மதிப்பு இருக்கிறது. அதனால்தான் கல்வி முக்கியமானது, இந்தப் பெரிய தளங்களின் வணிக மாதிரி எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்குவதே அது. நமக்கு கூகுள் இலவசமாக சேவை செய்கிறது என்றால், உலகின் பணக்கார நிறுவனங்களில் ஒன்றாக அது இருப்பது எப்படிச் சாத்தியம்? இதைப் பற்றிச் சிந்திப்பது மிகவும் முக்கியம், அப்போதுதான் தங்களைப் பற்றி அளிக்கக்கூடிய அனைத்துத் தகவல்களும் எவ்வளவு மதிப்பு மிக்கவை என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, "முடிவெடுப்பது நமக்கு பயத்தை தருகிறது, மேலும் ரோபோக்களை போல் இருந்துகொண்டு, என்ன செய்ய வேண்டுமென்று மற்றவர்கள் சொல்ல வேண்டுமென நாம் விரும்புகிறோம்," என்று பத்திரிகையாளர் கூறுகிறார். செயற்கை நுண்ணறிவின் ஆபத்து என்ன? உண்மையான ஆபத்து மனிதர்களின் மடமைதான். ஏனென்றால் செயற்கை நுண்ணறிவு உங்களுக்குத் தீங்கு செய்ய வேண்டியதில்லை, அவை பூஜ்ஜியங்களும் ஒன்றுகளும் (zeros and ones) மட்டுமே. ஆனால், நம்முடைய சோம்பல் மிக அதிகமாக இருப்பதால், விஷயங்கள் நமக்குச் செய்து முடிக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டால், அது மிகவும் நல்லது என ஏற்றுக்கொள்கிறோம். இதெல்லாம் நாம் இன்னும் அதிக அளவில் கையாளப்படக் கூடிய சூழ்நிலையில் நம்மை வைக்கிறது. நாம் மன விருப்பம் மரத்துப் போய்விட்ட நிலையில் வாழ்கிறோம். சுகாதார அமைப்பின் டிஜிட்டல்மயமாக்கல், பாரிய கண்காணிப்பு மற்றும் நமது குழந்தைகளின் ஆன்லைன் கல்வி ஆகியவற்றை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்கிறோம். அநீதிகள், துஷ்பிரயோகங்கள் மற்றும் அறியாமையை நாம் தவிர்க்க முடியாத விஷயங்களாக ஏற்றுக் கொள்கிறோம், நாம் மிகவும் சோம்பலாக இருப்பதால் அவற்றுக்கு எதிராக நம்மால் கிளர்ச்சி செய்ய முடியாது. ஒரு அல்காரிதம் அமைப்பில் தன்னியக்கத்தின் பேரில் செயற்கை நுண்ணறிவு மேற்கொள்ளும் கணிப்புகளை முழுமையாக நம்புவதால் ஏற்படும் விளைவுகள் என்னவாக இருக்கும்? நமது கருத்து வேறாக இருந்தாலும்கூட, ஒரு கணினி சொன்னால், அது உண்மையாக இருக்கும் என்று மனிதர்கள் நம்பத் தலைப்படுகிறார்கள் என ஆய்வுகள் காட்டுகின்றன. அதனால், வாழ்வா, சாவா முடிவுகள் உள்பட முக்கியமான முடிவுகளை நாம் பிறரிடம் ஒப்படைக்கும்போது அபாயம் மிக அதிகமாக உள்ளது. அப்படியானால், யார் முடிவெடுக்க நீங்கள் அனுமதிக்கப் போகிறீர்கள்? உங்கள் அம்மா, உங்கள் ஆசிரியர், உங்கள் முதலாளி, அல்லது செயற்கை நுண்ணறிவு? இது மனிதர்களுக்கு மிகவும் பழமையான ஒரு பிரச்னை. மேலும் உளவியலாளர், சமூகவியலாளர் மற்றும் பிராங்பேர்ட் பள்ளியின் உறுப்பினரான எரிக் ஃப்ரோமின் "சுதந்திரத்தைப் பற்றிய பயம்" (fear of freedom) என்ற புத்தகத்தை நான் மிகவும் விரும்புகிறேன். இந்தப் புத்தகம் இதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் நமக்குச் சொல்வதையே மனிதர்கள் விரும்புகிறார்கள் என்று ஃப்ரோம் வாதிடுகிறார். ஏனென்றால் அது நம்மைச் சார்ந்தது என்று நினைப்பது நமக்குப் பயங்கரமான பீதியைக் கொடுக்கிறது. முடிவெடுப்பது நமக்கு மிகவும் பயமாக இருக்கிறது, மேலும் ரோபோக்களை போல் இருந்து என்ன செய்ய வேண்டுமென மற்றவர்கள் சொல்ல வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். இதை ஃப்ரோம் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, செயற்கை நுண்ணறிவுக்காக மிகப்பெரிய தரவு மையங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன நமது தரவை ஆன்லைனில் கொடுக்காமல் இருக்க ஏதேனும் வழி இருக்கிறதா? நிச்சயமாக இருக்கிறது. உங்கள் தரவை வழங்காமல் இருக்க வழிகள் உள்ளன. தேவையானதை மட்டும் கொடுக்க வழிகள் உள்ளன. ஆனால் முக்கியமானது, தளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிவதுதான். அப்போதுதான் நீங்கள் நடவடிக்கைகளை எடுக்க முடியும். உங்கள் வாழ்க்கையையும் தரவையும் வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு அதைச் சற்றுக் கடினமாக்குவதற்காக மட்டுமே என்றாலும்கூட ஒரு பக்கத்திற்குள் நுழையும்போது குக்கீகளை நிராகரிப்பது போன்ற சிறிய செயல்களுக்கு நீங்கள் பழகிக் கொள்ளலாம். வேறு என்ன செய்ய முடியும்? நம்மைப் பாதுகாக்க ஓர் ஒழுங்குமுறை தேவைப்படுவதைப் பற்றிப் பேசலாம். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் நெறிமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் பேசலாம். விசில்ப்ளோயர்கள் (Whistleblowers – கூகுள் அல்லது மெட்டா போன்ற நிறுவனங்களுக்குள் பணிபுரியும் மற்றும் அமைப்பு பற்றித் தெரிந்தவர்கள்) கூறும் விஷயங்களைக் கேட்பது எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றிப் பேசலாம். அவர்கள் பேச முடிவு செய்யும்போது அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்பதுடன் அவர்களைப் பாதுகாப்பதும் முக்கியம். அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளால் பயன்படுத்தப்படும் கண்காணிப்பு அமைப்புகளை வெளிப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடனின் வழக்கைக் குறிப்பிடுகிறீர்களா? ஆம், ஸ்னோடன் எனக்கு இந்த நூற்றாண்டின் ஹீரோக்களில் ஒருவர். ஆனால் மேலும் பலர் இருக்கிறார்கள். அவருடையதுதான் மிகவும் அறியப்பட்ட வழக்கு. சோஃபி ஜாங் (Sophie Zhang) என்ற ஃபேஸ்புக்கின் தரவு விஞ்ஞானியும் உள்ளார். பொதுக் கருத்தைத் திரட்டுவதற்காகவும் வெறுப்பைத் தூண்டுவதற்காகவும் அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளால் போலிக் கணக்குகள் மற்றும் போட்களை (bots) திட்டமிட்டுப் பயன்படுத்தப்படுவது குறித்து அவர் நிறுவனத்திற்கு உள்ளேயே எச்சரித்த பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்டார். லத்தீன் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பாவின் சில இடங்கள் உள்பட உலகின் பல பகுதிகளில், அரசியல்வாதிகள் போலிக் கணக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். நிஜத்தில் இல்லாத பின்தொடர்பவர்கள்(Followers), நிறுத்த முடியாத விருப்பங்கள் மற்றும் மறுபதிவுகளைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் உண்மையான ஆதரவும் மக்கள் ஏற்பும் இல்லாதபோதுகூட தங்களிடம் அது இருப்பதாக நம்ப வைக்கிறார்கள் என்பதை ஜாங் உணர்ந்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நமது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய சிக்கலான தகவல்களின் முழுத் தொகுப்பும் பெரிய தரவு மையங்களில் சேமிக்கப்படுகின்றன. பிரச்னை குறித்துத் தனது உயரதிகாரிகளுக்குத் தெரிவித்தபோது, யாரும் அதைச் சரிசெய்ய விரும்பவில்லை என்பதைக் கண்டு அவர் ஆச்சரியப்பட்டார். உதாரணமாக, ஹோண்டுராஸின் அப்போதைய அதிபர் ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டஸின் போலியான பின்தொடர்பவர்கள் வலையமைப்பை நீக்க ஒரு வருடம் பிடித்தது. இவர் அமெரிக்காவுக்கு கொகைன் இறக்குமதி செய்வதற்கான சதியில் ஈடுபட்டது மற்றும் இயந்திரத் துப்பாக்கிகளை வைத்திருந்ததற்காக நியூயார்க்கில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். உங்கள் புத்தகத்தில், கூகுளின் செயற்கை நுண்ணறிவு நெறிமுறைக் குழுவின் இணை இயக்குநராக இருந்த கணினிப் பொறியாளர் டிம்னிட் கெப்ருவின் (Timnit Gebru) வழக்கையும் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். அவரும் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆம், அல்காரிதம்கள் இனம் மற்றும் பாலின பாகுபாட்டிற்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியதற்காக (பணி நீக்கம் செய்யப்பட்டார்). பெரிய மொழி மாதிரிகள் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், மக்கள் அவற்றை மனிதர்கள் என்று நம்பக்கூடும் என்றும், அவற்றால் பிறரைக் கையாள முடியும் என்றும் அவர் எச்சரித்தார். அவருடைய பணிநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நிறுவனத்தின் 1,400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கையெழுத்திட்ட கடிதம் இருந்தபோதிலும், அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். யூட்யூப்பின் முன்னாள் ஊழியரான கியோம் சாஸ்லோட் (Guillaume Chaslot) மற்றொரு "விசில்ப்ளோயிங் ஹீரோ". பரிந்துரை அல்காரிதம் பயனர்களைப் பரபரப்பான, சதிக் கோட்பாடு மற்றும் பிளவுபடுத்தும் உள்ளடக்கங்களை நோக்கித் தள்ளுவதை அவர் கண்டுபிடித்தார். நமக்கு எஞ்சியிருக்கும் நம்பிக்கை என்ன? உறுதியாக நமக்குத் தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு மென்பொருள் நிரல் (Software Program) என்ன செய்தாலும், அது புதிய விருப்பங்களைக் கண்டுபிடிப்பதற்கான மிகச் சிறிய அளவிலான படைப்பாற்றலைக்கூட அளிக்க முடியாது, அதாவது கடந்த கால தரவுகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இல்லாத படைப்பாற்றலை அதனால் கொடுக்க முடியாது. அதனால் மற்றவரின் நிலையில் தன்னை வைத்துப் பார்க்கும் பச்சாதாபத்தின் (empathy) அடிப்படையிலான தீர்வுகளையும் அளிக்க முடியாது, அல்லது மற்றவர்களின் மகிழ்ச்சியில் தனது சொந்த மகிழ்ச்சியைத் தேடும் ஒற்றுமையின் (solidarity) அடிப்படையிலான தீர்வுகளையும் அளிக்க முடியாது. இந்த மூன்று குணங்களும் வரையறையின்படி மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானவை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c6290v66d8lo

களைத்த மனசு களிப்புற ......!

3 months ago
Arun Kumar G · "நான் தனியா tenseஆ உக்காந்திருந்தேன்.‌ அப்ப சச்சின் வந்து என் தோள்ல கை போட்டார். என் பேட்டை வாங்கி அதோட handle adjust பண்ணி tape போட்டுக்குடுத்தார். அப்படி எனக்கு என்ன Tension...?! எங்க Hotel க்கு பக்கம்தான் அந்த அழகான Lords ground. காலைல எல்லாரும் அங்க வந்து சேரனும்னு news. எந்த வண்டியும் வரல நாங்க நடந்துதான் அங்க போகனும். நான் மெதுவா நடக்க ஆரம்பிச்சேன். Hotel கேட்டைத்தாண்டி Road cross பண்ணி அந்த அழகான Mecca Of Cricket கிரண்டுக்குள்ள நுழைஞ்சேன். Indian Jersey போட்டிருந்தாலும் Security யாராவது கேள்வி கேப்பாங்களோன்னு பயந்தேன். அந்தமாரி எதுவும் நடக்கல. உள்ள நுழைஞ்சதும் ஏதோ ஒரு பெரிய Office க்கு வேலைக்கு வந்துட்ட மாரி உணர்ந்தேன். அதோட நீளமான Room களையும், Honour Boardஐயும், அங்கிருந்த உயரமான Chairகளையும் பாத்தேன். அதுல Members மட்டும்தான் உக்காரனும்னு நெனச்சேன். எப்ப வேணா அங்க work பண்ற யாராவது கண்காணிப்பாளர் வந்து என்னை வெளிய போக சொல்லுவாங்கன்னு நெனச்சேன். அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம நின்னுட்டிருந்தேன். Coach Sandeep வந்து 'கங்குலி நீ நாளைக்கி Testல No.3ல இறங்கறே'ன்னு சொல்லீட்டு போயிட்டார். எனக்கு செம excitement ஆ இருந்தது. முதல் நாள் 26 ரன்னுல முடிச்சிருந்தேன். Bowling போட்டு 2 நல்ல விக்கெட் எடுத்திருந்தேன் அது எனக்கு Confidence குடுத்தது. அடுத்தநாள் Lunch அப்போ 65ல இருந்தேன். சாப்பிடாம தனியா இருந்தேன், கூட்டத்துல distract ஆக நான் விரும்பல. அந்த நேரம் வந்தது. அடுத்த Session பத்தியோ , அடுத்த ஓவர் பத்தியோ நான் கவலைப்படல என் கவனம் முழுசும் அந்த பால்ல இருந்தது. என் முதல் Century ஐ அடிச்சேன். ஒரு சாதனையை படைச்சேன். ஒட்டுமொத்த கிரவுண்டும் எழுந்து நின்னு கைதட்டனாங்க. Dressing Roomக்கு போறப்ப Dravid என்னை முன்னால போக சொன்னார். உள்ள எல்லாரும் Standing Ovation குடுத்தாங்க. அது ஒரு விவரிக்க முடியாத தருணம். அப்ப நான் சொல்லிக்கிட்டேன் 'சர்வதேச கிரிக்கெட்டே.. இதோ நான் வந்துவிட்டேன்..'! Lords 100 எப்பவும் Special. அங்க நேத்து நான் பாத்த அந்த நீளமா Hallல, அங்கிருக்கற Honour boardல, என் பேர் பெரிய பெரிய வீரர்களோட நிரந்தரமா பொறிக்கப்படப்போகுது. அது ஒரு அற்புதமான உணர்வா இருந்தது. நான் ஒரு Milestone achieve பண்ணீட்டேன் என் debut மேட்ச்ல.‌" -கங்குலியின் முதல் Test Debut 100 அனுபவங்கள். 👏" Voir la traduction

பிலிப்பைன்சை தாக்கும் அடுத்தடுத்த சூறாவளிகள்

3 months ago
கல்மேகி புயலின் தாக்கம் - பிலிப்பைன்ஸ், வியட்நாம் நாடுகளில் சுமார் 200 பேர் பலி! 07 Nov, 2025 | 02:10 PM பிலிப்பைன்ஸில் பாரிய சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய கல்மேகி புயல் வியட்நாமில் கரையை கடக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த அனர்த்தத்தில் சிக்கி இதுவரை சுமார் 5 பேர் உயிரிழந்ததாகவும் பிலிப்பைன்ஸில் பலியான 188 பேரையும் சேர்த்து, கல்மேகி புயல் சுமார் 200 பேரை காவு வாங்கியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த புயலின் பெரும் தாக்கத்தினால் மத்திய வியட்நாமில் நேற்று வியாழக்கிழமை (6) மண்சரிவு ஏற்பட்டதோடு, பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. நிறைய வீடுகள் சேதமடைந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்தனர். கல்மேகி புயலின் தாக்கத்தால் 7 பேர் காயமடைந்ததாகவும் சுமார் 2800 வீடுகள் சேதமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பசுபிக் கடலில் உருவான கல்மேகி புயல் கடந்த புதன்கிழமை (5) பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியை கடந்து, தென் சீனக் கடலை நோக்கி நகர்ந்தது. இதில் மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள சில தீவுப் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசியதுடன் கனமழை பெய்ததையடுத்து, நீக்ரோஸ் ஆக்சிடென்டல், செபு முதலிய மாகாணங்கள் வெள்ளக்காடாயின. வீதியோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், கடற்கரையோர வீடுகள், பெரிய அளவிலான கப்பல் கொள்கலன்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த புயல் இன்று வியட்நாமின் மத்திய பகுதியை நெருங்கி பெரிதளவில் சேதம் ஏற்படுத்தி வருகிறது. கடந்த வியாழக்கிழமை மத்திய வியட்நாம் வழியாக மணிக்கு 149 கி.மீ வேகத்தில் வீசிய கல்மேகி புயல், தற்போது மேற்கு நோக்கி கம்போடியா, லாவோஸை பகுதிகளில் நகர்கிறது. நேற்று இரவு முழுவதும் வீசிய புயல் காற்று காரணமாக இன்று காலை வியட்நாமின் மத்திய கடற்கரையோரப் பகுதிகள் முழுவதும் சேதமடைந்து, குப்பைகளால் சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், இன்று (7) இரவு மத்திய வியட்நாமை கல்மேகி புயல் கடுமையாக தாக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/229714

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

3 months ago
யானை · "பசிக்குது தோழா, நாலு இட்லி வாங்கிட்டு வாங்க, சாப்பிட்டுட்டுப் போவோம்" என்கிறார் ஜீவா "இங்கயே கேண்டீன் இருக்கு, சாப்பிட்டிருக்கலாமே தோழர்..." "சரிதான், எங்கிட்ட காசில்லைல்ல" தோழர் போய் இட்லி வாங்கிக் கொண்டு வர, அதை சாப்பிட்டுவிட்டு தான் கொண்டு வந்த மூட்டையை எடுத்துக் கொண்டு ஜீவா கிளம்புகிறார்... "கொடுங்க தோழர், அதை நான் கொண்டாறேன்" என்று ஜீவாவின் கையிலிருந்த மூட்டையை வாங்குகிறார் தோழர்... அப்போதுதான் அது நோட்டுகளும், சில்லறைக் காசுகளும் அடங்கிய பணமூட்டையென்பது தோழருக்குத் தெரிகிறது "இது என்னங்க" "மதுரை பொதுக்கூட்டத்துல தோழர்களும், பொதுமக்களும் கட்சிக்காக நிதி திரட்டிக் கொடுத்திருக்காங்க" என்கிறார் ஜீவா "மூட்டை நெறையா பணத்தை வச்சுக்கிட்டா பசியோட இருந்தீங்க.. இதுலருந்து எடுத்து சாப்பிட்டிருக்கலாமே"... "அதெப்படி தோழர் கட்சிக்குக் கொடுத்த நன்கொடைல நான் இட்லி வாங்கித் திங்க முடியும், அது தப்பில்லையா?" என்றார் ஜீவா.. தோழர் ஜீவா ❤ வீராசாமி Voir la traduction இப்படியெல்லாம் கூட வாழ்ந்திருந்திருக்கிறார்கள் ............! 🙂

சீனாவின் புதிய விமானந்தாங்கி கப்பல் 'புஜியான்' : கடற்படையில் புதிய புரட்சி

3 months ago
சீனாவின் புதிய விமானந்தாங்கி போர்க்கப்பல் அமெரிக்கா, இந்தியாவுக்கு எந்த அளவு சவால் தரும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவின் அதிநவீன விமானந்தாங்கி போர்க்கப்பலான 'ஃபுஜியான்' 7 மணி நேரங்களுக்கு முன்னர் "சீனாவின் அதிநவீன விமானந்தாங்கி போர்க்கப்பலான 'ஃபுஜியான்' அதிகாரப்பூர்வமாக நாட்டிற்கான சேவையில் இணைந்துள்ளது. அதற்கான பிரம்மாண்ட விழாவில் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொண்டார்" என்று சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீனாவின் மூன்றாவது போர்க் கப்பல் ஃபுஜியான், விமானங்களை அதிவேகமாகப் பறக்கச் செய்யும் மின்காந்த கவண்கள் (electromagnetic catapults) கொண்டிருக்கிறது. இதன்மூலம், கப்பல்களின் எண்ணிக்கை அடிப்படையில் உலகின் மிகப் பெரிய கடற்படையாக சீனா உருவெடுத்துள்ளது. சீனா தனது கடற்படையை வேகமாக வலுப்படுத்துவது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளும் தங்களது ராணுவ திறன்களை அதிகப்படுத்த வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்துகிறது. சீனப் போர்க்கப்பல் எப்படி இருக்கிறது? பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, லியோனிங் தான் சீனாவின் நவீன போர்க்கப்பலாகத் திகழ்ந்தது சீன அரசு ஊடக தகவலின்படி, ஃபுஜியானின் மின்காந்த கவண்கள் மற்றும் சமதள பறக்கும் தளம் (flat flight deck) மூலம் மூன்று வெவ்வேறு விதமான விமானங்கள் புறப்படலாம். சீனாவின் இந்த போர் கப்பலால், ஆயுதங்கள் ஏந்திய, எரிபொருள் நிரப்பப்பட்ட விமானங்களை செலுத்த முடியும். நீண்ட தூரத்திலிருந்தபடி எதிரி இலக்குகளை குறிவைத்து தாக்கும் திறனும் கொண்டது. ரஷ்யாவின் உதவியோடு கட்டப்பட்ட முந்தைய போர்க்கப்பல்களான தி லியோனிங் (the Liaoning) மற்றும் ஷான்டாங் (Shandong) ஆகியவற்றை விட இது சக்தி வாய்ந்தது. சீன கடற்படையின் முன்னேற்றத்தில் ஃபுஜியான் ஒரு மைல்கல் என்று சீன அரசு ஊடகம் கூறுகிறது. ஃபுஜியான் கப்பல் புதன்கிழமை தெற்கு ஹைனான் மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் கடற்படையில் இணைக்கப்பட்டது. சீன அதிபர் ஜின்பிங் கப்பலின் தளத்தைப் பார்வையிட்டு, கடலில் அதன் செயல்திறன் பற்றி விரிவாக கேட்டறிந்தார். மின்காந்த கவண் தொழில்நுட்பத்தை சீனா பெறவேண்டும் என்பது அதிபரின் தனிப்பட்ட முடிவு என்றும் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா எந்த அளவுக்கு போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும்? இதற்கு முன் மின்காந்த கவண் கொண்ட போர்க்கப்பல் அமெரிக்காவிடம் மட்டுமே இருந்தது. அமெரிக்கா - சீனா இடையிலான ஆதிக்கப் போட்டியில் சமீபமாக அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த மோதல் போக்கு ஆசிய பசிஃபிக் பிராந்திய பாதுகாப்பில் ஒரு முக்கிய விஷயமாக உருவெடுத்துள்ளது. கப்பல்களின் எண்ணிக்கை அடிப்படையில் அமெரிக்காவை முந்தி இப்போது சீன கடற்படை உலகின் பெரிய கடற்படையாக உருவெடுத்துள்ளது. அதேசமயம் கப்பல்களின் எண்ணிக்கையை மட்டும் வைத்து பலத்தைத் தீர்மானிப்பது துல்லியமாக இருக்காது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். தற்போது பல விஷயங்களில் சீனாவை விட அமெரிக்கா முன்னிலையில் இருக்கிறது. சீனாவிடம் தற்போது 3 நவீன விமானந்தாங்கி போர்க் கப்பல்கள் இருக்கின்றன. ஆனால், அமெரிக்காவிடம் அதுபோன்ற 11 விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் இருக்கின்றன. அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், க்ரூஸர்கள் (Cruisers), டெஸ்ட்ராயர்கள் (Destroyers) அல்லது பெரிய போர்க்கப்பல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமெரிக்காவின் கடற்படைத் திறன் சீனாவை விட மிக உயர்ந்தது. இருந்தாலும், சீனா தனது கடற்படையை மேலும் விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020 மற்றும் 2040க்கு இடையில் சீன கடற்படை கப்பல்களின் எண்ணிக்கை சுமார் 40 சதவீதம் அதிகரிக்கும் என்று அமெரிக்க கடற்படை மதிப்பிடுகிறது. இருப்பினும், அமெரிக்கா பல தொழில்நுட்ப துறைகளில் சீனாவை விட மிகவும் முன்னிலையில் உள்ளது. பல விமானந்தாங்கி கப்பல்களை இயக்கும் திறனையும் அமெரிக்கா கொண்டுள்ளது. சீனாவை விட அமெரிக்கா எவ்வளவு முன்னிலையில் உள்ளது? அமெரிக்க போர் கப்பல்கள் கடலில் நீண்ட காலம் தங்கிச் செயல்பட அணுசக்தி உதவுகிறது. ஆனால் ஃபுஜியான் பாரம்பரிய எரிபொருளில் இயங்குகிறது. அதனால், அந்தக் கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காக கரையோரத்திற்குத் திரும்ப வேண்டும் அல்லது கடலிலேயே டாங்கர்கள் மூலம் அதில் எரிபொருள் நிரப்பப்பட வேண்டும். ஃபுஜியான் மின்காந்த கவண் தொழில்நுட்பம் கொண்டிருந்தாலும், அதிலுள்ள போர் விமானம் பறக்கும் செயல்பாடு, 50 ஆண்டுகள் பழமையான அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பலின் திறனில் சுமார் 60% மட்டுமே என்று அமெரிக்க கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் இருவர் கடந்த மாதம் சிஎன்என் ஊடகத்திடம் தெரிவித்ததனர். இதற்கு காரணமாக அவர்கள் அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பலின் பறக்கும் தள வடிவமைப்பை குறிப்பிடுகின்றனர். லியோனிங் மற்றும் ஷான்டாங் போன்ற முந்தைய கப்பல்களுக்கு மாறாக, ஃபுஜியான், சீனாவின் ஸ்கீ-ஜம்ப் பாணி ரேம்ப் (ski-jump-style ramp) இல்லாத முதல் விமானந்தாங்கி போர்க்கப்பல் ஆகும். சீனாவின் முந்தைய விமானந்தாங்கி போர்க்கப்பல்களில், அதிலிருந்த போர் விமானங்கள் தங்களின் சொந்த சக்தியால் பறக்கும். இந்த புதிய வடிவமைப்பு சீனாவில், நாட்டின் 'விமானந்தாங்கி போர்க்கப்பல் வலிமையின் எழுச்சியின் சின்னம்' என பாராட்டப்படுகிறது. சுமார் 80,000 டன் எடையுள்ள ஃபுஜியான், அமெரிக்க கடற்படையின் 97,000 டன் எடையுள்ள நிமிட்ஸ் வகை போர்க் கப்பல்களுடன் அளவிலும் திறனிலும் நெருக்கமானதாகக் கருதப்படுகிறது. சீனா தற்போது டைப் 004 என்று அழைக்கப்படும் மற்றொரு புதிய விமானம் தாங்கி கப்பலை உருவாக்கி வருகிறது. அதிலும் மின்காந்த கவண் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். ஃபுஜியானுக்கு மாறாக அது அணு ஆற்றலில் இயங்கும் வகையில் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவின் நவீன போர்க்கப்பல் ஐ.என்.எஸ்.விக்ராந்த் இந்திய கடற்படையின் பலம் இந்திய கடற்படையில் 1.42 லட்சம் வீரர்கள் உள்ளனர் மற்றும் மொத்தம் 293 கப்பல்கள் உள்ளன. இதில் 2 விமானந்தாங்கி கப்பல்கள், 13 டெஸ்ட்ராயர்கள் (destroyers), 14 ஃபிரிகேட்ஸ் (frigates), 18 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 18 கார்வெட்ஸ் (corvettes) அடங்கும். தற்போது இந்திய கடற்படையில் மின்காந்த கவண் அமைப்பு கொண்ட எந்த விமானந்தாங்கி போர்க்கப்பலும் இல்லை. இந்தியாவின் விமானந்தாங்கி போர் கப்பல்களான ஐ.என்.எஸ்.விக்ரமாதித்யா மற்றும் ஐ.என்.எஸ்.விக்ராந்த் ஆகிய இரண்டும் எஸ்.டி.ஓ.பி.ஏ.ஆர் (Short Take-off But Arrested Recovery) எனப்படும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன. சோவியத் காலத்தில் உருவாக்கப்பட்ட ஃபிரிகேட் கப்பல் அட்மிரல் கோர்ஷ்கோவ், 2013-ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா என்ற பெயரில் இணைந்தது. அதேசமயம், இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானந்தாங்கி கப்பலான ஐ.என்.எஸ்.விக்ராந்த், 2022ஆம் ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்த போர் கப்பல், பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தன்னிறைவு நோக்கில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்பட்டது. எனினும், இந்தியப் பெருங்கடலில் ராணுவ பலத்தில் சமநிலையைக் பராமரிக்க, மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் தேவையென இந்திய கடற்படை கருதுகிறது. ஐ.என்.எஸ்.விக்ராந்த் அடுத்த மூன்று அல்லது நான்கு தசாப்தங்கள் வரை சேவையில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதேசமயம் விக்ரமாதித்யா 2035ஆம் ஆண்டுவாக்கில் ஓய்வு பெறும் வாய்ப்புள்ளது. சீனாவுடன் ஒப்பிடுகையில், இந்தியாவிடம் தற்போது இரண்டு விமானந்தாங்கி போர் கப்பல்கள் மட்டுமே உள்ளன. மின்காந்த கவண் அமைப்புகளுடன் அடுத்த தலைமுறை போர் கப்பல்களை உருவாக்குவது குறித்து இந்தியா பரிசீலித்து வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y07q2kq5zo
Checked
Mon, 02/09/2026 - 14:18
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed