புதிய பதிவுகள்2

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
யாழ் அதிர்ந்தது..... ஜெர்மன் வரை கேக்குது..😂 வாழ்த்துகள் 💪 உங்கள் இந்திய மகளிர் அணிக்கு கிடைத்த வெற்றியை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம் என்பதற்கு இந்த இந்திய மகளிர் அணி ஒரு உதாரணம் 👍

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? தென்னாப்பிரிக்கா 69 ஒட்டங்கள். ஒரு போட்டியாளர்களும் சரியாக பதில் அளிக்கவில்லை. 1) அகஸ்தியன் - 70 புள்ளிகள் 2) ஏராளன் - 63 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 63 புள்ளிகள் 4) சுவி - 59 புள்ளிகள் 5) கிருபன் - 59 புள்ளிகள் 6) புலவர் - 59 புள்ளிகள் 7) செம்பாட்டன் - 59 புள்ளிகள் 8) ரசோதரன் - 59 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 58 புள்ளிகள் 10) வீரப்பையன் - 58 புள்ளிகள் 11) வாதவூரான் - 55 புள்ளிகள் 12) கறுப்பி - 54 புள்ளிகள் 13) வசி - 53 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள் 15) வாத்தியார் - 48 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 33, 35, 37, 39 - 42, 46 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 83).

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
டென்மார்க் நேர‌ம் 11:30 தொட‌ங்குவ‌தால் ம‌திய‌ உண‌வுக்கு முத‌லே போட்டிய‌ பார்க்க‌ தொட‌ங்கிடுவேன்.................என்ன‌ இந்த‌ உல‌க‌ கோப்பையில் எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு அதிக‌ ம‌ழை............................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
அந்த உத்வேகம்தானே விளையாட்டு தரும் போதை. இப்பிடி எத்தினை போட்டியைப் பார்த்திருக்கிறம். அலாரம் வைச்சு எழும்பி, வீட்டில திட்டுவாங்கி, ஒரு வேலை சொன்னா செய்யேலாது, விளையாட்டு பாக்கமட்டும் எழும்பிறது என்று எல்லாம் சொல்லக் கேட்டு கேட்டு......

தமிழ் - முஸ்லிம் நட்புறவை கட்டி எழுப்புது பற்றி கலந்துரையாடல்

3 months ago
முதலில் அவைக்குச் சொல்லுங்கோ ...கிளிநொச்சி ...வவுனியாவில் கட்டினமாதிரி பெரிய மசூதி நகரினுள் கட்ட வேண்டாமென்றூ... இடப்பெயர்வின் நினைவு நாளன்று புலிகளுக்கு கரி பூசுவதையும் ...இல்லாத பொல்லாததை சொல்வதையும் நிறுத்தும்படி...அதஒவிட கிழக்கில் செய்த அட்டூழியங்களுக்கு அந்த பிரதேச தமிழரிடம் மன்னிப்புக்கெட்டு பறித்த காணிகளையும் ...கோவில்களையும் விட்டுத்தரும்படி...சம்மதமா

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
இந்தியா ம‌க‌ளிர் அணிய‌ எப்ப‌வோ ப‌ல‌மான‌ ம‌க‌ளிர் அணியாக‌ மாற்றி இருக்க‌லாம்.............இந்தியாவிக் ஆண்க‌ளின் கிரிக்கேட்டுக்கு செல‌விடும் ப‌ண‌ம் பெண்க‌ளுக்கு செல‌விடுவ‌தில்லை என்ர‌ நினைவுக்கு தெரிந்து 2013 அந்த‌ கால‌ப் ப‌குதியிலே ம‌க‌ளிருக்கான‌ ஜ‌பிஎல்லும் வைக்க‌னும் என‌ ப‌ழைய‌ இந்திய‌ன் கிரிக்கேட் ம‌க‌ளிர்க‌ள் விரும்பின‌வை...............அப்போது அதை ந‌டைமுறைப் ப‌டுத்த‌ வில்லை மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் தான் ம‌க‌ளிர் ஜ‌பிஎல்ல‌ ஆர‌ம்பிச்சு வைச்ச‌வை அதில் திற‌மைய‌ வெளிப் ப‌டுத்தின‌வையை இந்த‌ உல‌க‌ கோப்பையில் சேர்த்த‌வை இப்போது இந்திய‌ அள‌வில் ஒவ்வொரு மானில‌த்திலும் ம‌க‌ளிர் கிரிக்கேட் வைக்கின‌ம்...............இன்னும் 4அல்ல‌து 5வ‌ருட‌ம் க‌ழித்து பார்த்தால் கிரிக்கேட் உல‌கில் இந்திய‌ன் ம‌க‌ளிர‌ அசைக்க‌ முடியாது................ இந்த‌ உல‌க‌ கோப்பையில் இந்திய‌ ம‌க‌ளிரின் ப‌ந்து வீச்சு பாராட்டும் ப‌டி இல்லை , பின‌ல் விளையாட்டிலும் இர‌ண்டு ம‌க‌ளிர் ப‌டு சுத‌ப்ப‌ல் ப‌ந்து வீச்சு................இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் திற‌மையான‌ ம‌க‌ளிருக்கு வாய்ப்பு கொடுத்தால் இதே போல் இன்னும் ப‌ல‌ வெற்றிக‌ளை கோப்பைக‌ளை வெல்ல‌லாம்.............................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
அய்யா ..சனிக்கிழமை இரவு நித்திரையே..கொள்ளவில்லை...அதிகாலை 3.20 க்கு தொடங்கிய கிரிக்கட்டு பார்வை,..ஞாயிறு பின்னேரம் 3 மணி மட்டும்... இந்தியப் பொண்ணுகள் 3 மச்சில் என்னை விழுத்திப் போட்டாளுகள்...அதுதான் இன்றுவரை 3ம் இடத்தில் அசையாமல் தூண்போல் நிற்கிறன்....

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
இவ்வளவு காலமாக, அவுஸ்ரேலிய மகளிரின் ஆதிக்கத்தைப் பார்த்து பார்த்து, ஒரு பொறாமையே வரும். எப்படி இந்தப் பெண்கள் இப்பிடி விளையாடுகிறார்கள். நம் பெண்கள் அந்த நிலைக்கு வருவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் யோசித்திருக்கிறேன். அதுவும் எங்கள் நாடுகள் போன்று பெண்களை சமமாக நடத்தாத இடங்களில், அவர்களுக்குத் தகுந்த வசதிகளை குடுக்காத இடத்தில் இருந்து எல்லாவற்றையும் தகர்த்து, இந்தியப் பெண்கள் சாதித்தது ஒரு பெரும் பாய்ச்சல். அவர்களும் நன்றாக விளையாடத்தொடங்கி கன காலம் ஆகிவிட்டது. ஆனாலும் அவுஸ்ரேலியாவை முந்த முடியவில்லு. 2025ம் ஆண்டு எல்லாவற்றையும் மாற்றி விட்டது.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
நீங்க‌ள் சொல்வ‌து நூற்றுக்கு நூறு உண்மை ம‌க‌ளிர் ஜ‌பிஎல்ல‌ இன்னும் இர‌ண்டு அணிய‌ கூட்டினால் இன்னும் ப‌ல‌ திற‌மையான‌ ம‌க‌ளிர‌ அதில் இருந்து தெரிவு செய்ய‌லாம் அவுஸ்ரேலியா ம‌க‌ளிரின் ஆதிக்க‌மும் ஆண்க‌ள் அணியின் ஆதிக்க‌த்துக்கு எதிராக‌ இந்தியா கிரிக்கேட்டில் வ‌ள‌ந்து விட்ட‌து....................................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
இந்தியாவின் இந்த வெற்றி மகளிர் கிரிக்கட்டை எங்கேயோ கொண்டு போகப்போகுது. முதலாவது T20 உலகக் கோப்பையில் ஆண்கள் அணி பெற்ற வெற்றியுடன்தான் IPL பிறந்தது. அதன் பின், எப்படி கிரிக்கட் மாறியது என்று கண்கூடாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். மகளிர் போட்டிகள் அடுத்த தரத்துக்கு, கட்டத்துக்கு காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌ல் நான் செய்த‌து இப்ப‌ இந்தியா ம‌க‌ளிர்க‌ள் ப‌ல‌ முத்த‌ம் கொடுத்து இருப்பின‌ம் இந்த‌ கோப்பைக்கு🙏🥰...............................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
இந்தியாவையும் எங்க‌ட‌ ஜ‌க்க‌ம்மாவையும் ந‌க்க‌ல் நையாண்டி செய்த‌ ஆளில் நீங்க‌ளும் ஒருவ‌ர் உங்க‌ளை கிண்ட‌ல் அடிச்சு விட்டு தான் விடுவோம் இந்தியான்ட‌ ப‌வ‌ர் இப்ப‌ தெரியுதா.................இந்தியா அணிக்கு வாழ்த்து கூட‌ சொல்ல‌ வில்லை😁..............................

உக்ரேனிய பண்ணை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குமாறு ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது.

3 months ago
முன்பு எவ்வாறு ருமேனியா விவசாயிகள் ஐரோப்பிய ஒன்றைய சட்டதிட்டங்களினால் பெரு நிறுவனங்களுடன் போட்டியிட முடியாது விவசாயத்திலிருந்து ஒதுங்கினார்களோ, அதே போல் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாட்டு விவசாயிகளுக்கெதிராக வரி, சட்ட திட்டங்கள் உள்ள நிலையில் (ஐரோப்பிய ஒன்றியத்தினால்); உக்கிரேனிய விவசாயிகளுக்கு மானியம் வரி விலக்களிப்பு, கடனுதவி என ஒரு தலைப்பட்சமாக அனைத்து வசதிகளையும் கொண்டதனால், உக்கிரேனின் விவசாய பொருள்கள் விலை மலிவாக காணப்படுகின்ற நிலையில், அந்த நிதியங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பணம் பெறும் நாட்டு விவசாயிகளுக்கு ஒரு தலைபட்சமாக விலை அதிகரிப்பு ஏற்படுத்தி ஒரு பாரபட்சமான சூழ்நிலையினை ஏற்படுத்தியுள்ளது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது நாட்டு மக்களின் நலனை பேண முற்படும் போது அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டும் நிலை உருவாகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத உக்கிரேனுக்காக அதன் உறுப்பு நாடுகளின் குடிமக்களை தண்டிக்கிறது ஐரோப்பிய ஒன்றியம். ஐரோப்பிய ஒன்றியம் தனது அதிகார எல்லைகளை விரிவுபடுத்துவதற்கு பயன்படுத்தும் "புலி வருது (இரஸ்சியா)" ஒரு புறம் பல உயிர்களை தொடர்ந்தும் காவுகொள்கிறது, போரினை முடிவிற்கு கொண்டு வருவதனால் அதிகார மட்டுப்படுத்தல் சிக்கலில் சிக்காமல் இருக்க முயற்சிப்பதற்காக உக்கிரேனை பயன்படுத்துகிறது, உக்கிரேனுக்கு இந்த விவச்சாய பொருளால் ஏற்படும் இலாபம் அதற்கு வாய்க்கரிசி போன்றது.
Checked
Sun, 02/08/2026 - 11:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed