புதிய பதிவுகள்2

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 months ago
பின்னுக்கு இருந்தே வருகிறேன். என்னிடம் கேட்கப்பட இல்லைதான் வரி எய்ப்பினால், வரி அமைப்பில் இருந்து நீக்கப்படும் வரியே தாக்கத்தை ஏற்படுத்துவது. இது வரித்திணைக்களம் (அரசு) அறிந்து பிற்போடப்பட்ட வரி, அதனால் தான் தெரிகிறது இப்படி (பிற்போடப்பட்டு கட்டுப்பட வேண்டிய) வரி இருக்கிறது என்று. பிற்போடப்பட்ட வரிக்கு காரணம் இருக்கிறது. ஏனெனில், அது வேறு முதலீட்டுக்கு போய், பிற்போடப்பட்ட வரியை விட கூட (in aggregate) வரும் என்ற எதிர்பார்ப்பில். அனால், அதில் ஒரு risk ஐ வரித்திணைக்களம் (அரசு) எடுக்கிறது, வியாபாரம் வங்குரோத்து ஆகலாம். அதாவது, வரித்திணைக்களம் (அரசு) மறைமுகமாக எந்தவொரு முதலீட்டு நிபுணத்துவமும் இல்லாமல் முதல் இடுகிறது வரியை. இது கிட்டத்தட்ட மற்றவர்களை (கம்பனிகளை) கொண்டு (நோகாமல்) வேலையை செய்வித்து (அதாவது முதலிட்டு) வரித்திணைக்களம் (அரசு) கட்டுப்பட வேண்டிய வரியிலும் கூட பெறுவது. இதில் பொதுவாக ஒப்பீட்டளவில் ரிஸ்க் குறைவு, ஏனெனில் கம்பனிகள் (பிற்போடப்பட்ட வரியை) மிக கவனமாகவே முதலிடும். வரி அமைப்பும் ஓர் வியாபாரம் அடிப்படையிலேயே செயற்படுவது - அப்படி ரிஸ்க் ஐ எடுத்த்தாலும், பிற்போடப்பட்ட வரி புதிய முத்லீஏடுகளுக்கு சென்று, பிற்போடப்பட்ட வரிஐ விட கூட வரி (in aggregate) வருவதே நிகழ்தகவு கூட. உடனே கேள்வி, எல்லா வியாபர அமைப்பும் அப்படி வங்குரோத்து ஆகினால் .. அதன் சாத்திய கூறு நாடு வங்குரோத்து ஆகினால், அப்படி நாடு வங்குரோத்து ஆகினாலும் நிலைக்கும் வியாபாரங்கள் இருக்கிறது, உலகமயமாதலினால் (எனவே, இவர்கள், இவர்களின் கம்பனி வேறு நாட்டில் முதலீடு செய்ய முயன்றதில் நியாயம் இருக்கிறது) ஆனால், இதற்காக நான் சொல்லவில்லை (இங்கே சொல்லப்படுவது போல களவெடுத்து, ஆனால் அது அல்ல, குற்றசாட்டு கூட வியாபாரம் நடத்தியதில்) முறிக்கப்படலாம் என்று. அதே போல 2008 / 2009 பிரச்சனைக்கு, கடன் பட்டட்டவர்கள், கட்டப்படாதது காரணம் அல்ல (இந்த படங்கள் மூலம் அது பரப்பப்படுகிறது). எனது விளக்கத்தை நேரம் இருக்கும் போது பதிகிறேன்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
2017 உல‌க‌ கிண்ண‌ பின‌லை பாருங்கோ ந‌ண்பா இந்தியா ம‌க‌ளிர் வெற்றிக்கு அருகில் வ‌ந்து தோத்த‌வை 2021ம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் ந‌ட‌ந்த‌ 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையிலும் பின‌லில் வ‌ந்து தோத்த‌வை இப்ப‌ இருக்கும் இந்தியா அணியில் சிறு மாற்ற‌ம் செய்ய‌ இருக்கு இர‌ண்டு பேரை நீக்கி விட்டு அவைக்கு ப‌தில் இர‌ண்டு திற‌மையான‌ ம‌க‌ளிர‌ அணியில் சேர்த்தால் இந்தியா மிக‌வும் ப‌ல‌மான‌ அணியாக‌ வ‌ந்து விடும்🙏🥰..............................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
உந்த கெட்டித்தனம் எல்லாம் போட்டி இந்தியாவில் நடக்குமட்டும்தான்! வெளி இடங்களில் நடக்கும்போது பார்ப்போம் இந்தியாவின் வண்டவாளத்தை!!😜

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

3 months ago
இந்தியா ம‌க‌ளிர் ப‌ல‌ வாட்டி ஆசியா கோப்பை வென்று விட்டின‌ம் 50 ஓவ‌ர் உல‌க‌ கோப்பையும் வென்று விட்டின‌ம் அடுத்த‌து 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையும் வென்றால் எல்லா கோப்பையும் வென்ற‌ பெருமைய‌ இந்தியாவும் த‌க்க‌ வைக்கும்..............................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
@Eppothum Thamizhan ஹ‌லோ தென் ஆபிரிக்கா ஜ‌னாதி ப‌தியா க‌தைக்கிற‌து............ஆம் ஆம்.............உங்க‌ட‌ நாட்டில் வ‌சிக்கும் ஒருத‌ரை காண‌ வில்லை க‌ண்டு பிடித்து த‌ருவிங்க‌ளா.............அப்கோஸ் க‌ண்டிப்பாய் க‌ண்டு பிடிச்சு த‌ருவேன் அவ‌ரின் வ‌ய‌து எத்த‌னை.............அவ‌ரின் வ‌ய‌து 50க்கு உள்ள‌ தான்..............அவ‌ரின் நேம் என்ன‌..................அவ‌ரின் நேம் எப்போதிம் த‌மிழ‌ன்😁.............................

குட்டிக் கதைகள்.

3 months ago
தினமும் ஒரு வரி தத்துவம் · படித்து பகிர்ந்து வீட்டுக்கு வெளியே ? நாய் சத்தம் கேட்டு வெளியே வந்தார். தனது வீட்டு கேட் முன் நின்று கொண்டு இருந்த உயர்சாதி நாயை அப்போது தான் கவனித்தார் அவர். அது நீண்ட நேரமாக நின்று கொண்டு இருப்பதாக தோன்றியது. அவரையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தது சற்று வியப்பை தந்தது. மேலும் ஐந்து நிமிடம் கழிந்தது. மெதுவாக விசிலடித்து கூப்பிட்டார். உடனே அது நாலு கால் பாய்ச்சலில் உள்ளே ஓடி வந்து அவரருகே நின்றது. வாஞ்சையுடன் அதன் கழுத்தை தடவிக்கொடுத்தார். பதிலுக்கு அதுவும் அவரது கால்களை நக்கியது. பின்னர் மாடிப்படிக்கு கீழே சென்று படுத்து நிமிடத்தில் சுகமாக உறங்கிப் போய் விட்டது. இவருக்கோ குழப்பம். ஏதோ செல்வந்தருடைய நாய் என்பது அதன் தோற்றம், கட்டியிருந்த பெல்ட், தாட்டியான உடம்பு போன்றவற்றில் இருந்து புரிந்தது. இங்கே எதற்காக வந்தது.? எழுந்து குளித்து உடைமாற்றி காலை உணவு முடித்து அலுவலகம் புறப்பட்டு செல்லும் வரை அது தூங்கிக்கொண்டு இருந்தது. வேலையாளிடம் சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றார். மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை. விசாரிக்கும் போது மதியமே சென்று விட்டதாக சொன்னார் பணியாள். மறுநாள் காலை. மறுபடியும் அதே நேரம். அதே நாய். அதே போல் உள்ளே வந்து இவரிடம் சற்று குலாவிவிட்டு அதே இடத்தில் தூங்கி விட்டது. மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை. இந்த சம்பவம் பல நாட்கள் தொடர்ந்தது. வேலையாளை விட்டு பின் தொடர்ந்தும் நாய் எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருநாள் ஒரு துண்டு சீட்டில் விபரம் எழுதி கழுத்தில் கட்டி அனுப்பினார். மறுநாள் அந்த நாய் வரும்போது கழுத்தில் வேறு ஒரு துண்டு சீட்டு இருந்தது. படித்து விட்டு உருண்டு புரண்டு சிரிப்பதை பார்த்து வேலையாளுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்படி என்ன தான் எழுதியிருந்தது....??? "அன்பு மிக்கவருக்கு வணக்கம். இந்த நாய் என்னுடையது தான். இது என்னுடைய மனைவியின் காட்டு கூச்சலால் விடிய விடிய தூங்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தது. சில நாட்களாக காலை வேளைகளில் காணாமல் போய்க்கொண்டு இருந்தது. தங்கள் கடிதம் மூலம் தங்கள் வீட்டில் அது நிம்மதியாக உறங்கி எழுந்து வருவது அறிந்து கொண்டேன். தங்களது அன்பிற்கு மிக்க நன்றி". பி.கு."ஒரு விண்ணப்பம். நாளை முதல் நாயுடன் நானும் வரலாமா? நானும் நன்றாக தூங்கி பல ஆண்டுகள் ஆகின்றன." 🤦‍♂️" ~மகிழா. 💃" -பகிர்வு பதிவு. 🌹 Voir la traduction......!

யாழ்.பல்கலை நூலகத்தில் இருந்து மகசீன்கள் மீட்பு ; சோதனை நடவடிக்கைக்கு பொலிஸ் முஸ்தீபு

3 months ago
பழுதுபார்க்கும் பணியில் வெளியான மர்மம் - காவல்துறை விரிவான விசாரணை 03 November 2025 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் யுத்தக் காலத்தில் இருந்தே அங்கு இருந்திருக்கலாம் என காவல்துறை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் கூரைக்கு அடியில் இந்த ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டமை குறித்து காவல்துறை ஊடகப் பேச்சாளர், எப்.யூ. வூட்லரிடம் எமது செய்தி சேவை வினவியது. இதற்கு பதிலளித்த அவர், குறித்த ஆயுதங்கள் நீண்டகாலமாக, குறிப்பாக, யுத்தக் காலத்தில் இருந்தே அங்கு இருந்திருக்கலாம் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார். முன்னதாக, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் கூரைக்கு அடியில் ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன இதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகம் கோப்பாய் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளது. இதனையடுத்து, 31 ஆம் திகதி காலை காவல்துறையினரும் விசேட அதிரடிப் படையினரும் குறித்த பொருட்களை மீட்டனர். அத்துடன், மேலதிக பழுதுபார்க்கும் பணிகளின் போது, நூலகத்தின் கூரையின் அருகிலுள்ள ஒரு பகுதியில், மேலும் ஒரு டி56 ரக துப்பாக்கி, இரண்டு மெகசின்கள், வெடிமருந்துகள் மற்றும் பல மருத்துவ உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நிலையில், அங்கு மேலும் ஆயுதங்கள் மறைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதால், காவல்துறையும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்து விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் எப்.யூ.வூட்லர் தெரிவித்தார். https://hirunews.lk/tm/428703/mystery-revealed-during-repair-work-police-conduct-detailed-investigation

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
34)இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? இந்தியா 8 போட்டியாளர்கள் சரியாக கணித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 75 புள்ளிகள் 2) ஏராளன் - 70 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 70 புள்ளிகள் 4) சுவி - 70 புள்ளிகள் 5) செம்பாட்டன் - 70 புள்ளிகள் 6) வாதவூரான் - 66 புள்ளிகள் 7) வீரப்பையன் - 65 புள்ளிகள் 8) கிருபன் - 64 புள்ளிகள் 9) புலவர் - 61 புள்ளிகள் 10) ரசோதரன் - 61 புள்ளிகள் 11) நியூபலன்ஸ் - 60 புள்ளிகள் 12) கறுப்பி - 56 புள்ளிகள் 13) வசி - 55 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள் 15) வாத்தியார் - 52 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 42, 44 - 47 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 98).

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
இருக்க‌லாம் இருக்க‌லாம் ஹா ஹா...............எதுக்கும் க‌ட்ட‌த்துரை அங்கில‌ சாமியாரின் க‌ள்ளுக் கொட்டிலுக்கு போய் விட்டு வ‌ர‌ச் சொல்லுவோம் ஹி ஹி😁........................

கிளிநொச்சயில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் – 10 பேர் கைது

3 months ago
கிளிநொச்சயில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் – 10 பேர் கைது சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து (05) சந்தேக நபர்களும், ஐந்து (05) பெண் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை நடத்தி சந்தேக நபரொருவரை அதிகாரிகள் கைது செய்தபோது, இரும்புக் கம்பிகள் மற்றும் பொல்லுகள் சகிதம் அங்கு வந்த குழுவொன்று அதிகாரிகளைத் தாக்கி, சந்தேகநபரை விடுவித்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து, அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று இந்தக் குழுவினரை கைது செய்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 16 முதல் 32 வயதுக்கு இடைப்பட்ட சந்தேகநபர்களும், 26 முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட பெண் சந்தேகநபர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (03) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். https://www.samakalam.com/கிளிநொச்சயில்-விசேட-அதிர/

போதைப்பொருள் வியாபாரிகள் , பாவனையாளர்களால் அல்லப்படும் திருநெல்வேலிச் சந்தை

3 months ago
போதைப்பொருள் வியாபாரிகள் , பாவனையாளர்களால் அல்லப்படும் திருநெல்வேலிச் சந்தை adminNovember 3, 2025 யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் போதைப்பொருள் பாவனையாளர்களால் சந்தைக்கு செல்வோர் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் , சம்பவம் தொடர்பில் பிரதேச சபை மற்றும் கோப்பாய் காவல்துறையினருக்கு அறிவித்தும் நடவடிக்கை இல்லை என குற்றம் சாட்டப்படுகிறது திருநெல்வேலி சந்தையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை , சந்தைக்குள் சனநெருக்கடி மிகுந்த நேரம் இளைஞன் ஒருவர் கடும் போதையில் தனது ஆடைகளை களைந்து , சந்தை வியாபரிகள் மற்றும் மக்களுடன் தகாத வார்த்தைகளால் பேசி வம்பிழுத்துக்கொண்டும் , வியாபாரங்களும் இடையூறு விளைவித்த வண்ணம் இருந்துள்ளார். அது தொடர்பில் நல்லூர் பிரதேச சபை மற்றும் கோப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தராத நிலையில் , இளைஞனின் பாட்டி முறையான வயோதிப பெண்ணொருவர் இளைஞனை அவ்விடத்தில் இருந்து அழைத்து செல்ல முற்பட்ட வேளை , இளைஞன் போதையில் வயோதிப பெண்ணையும் தாக்க முற்பட்டுள்ளார். அதேநேரம் சம்பவம் தொடர்பில் அறிந்து இளைஞனின் தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சந்தைக்கு விரைந்து வந்து இளைஞனை அங்கிருந்து அழைத்து சென்றிருந்தனர். அதேவேளை திருநெல்வேலி சந்தை பகுதியில் போதை வியாபாரிகள் மற்றும் , போதை பாவனையாளர்கள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சந்தை வியாபாரிகள் , சந்தைக்கு வருவோர் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்களை கொடுக்க வியாபரிகள் அச்சமுற்று உள்ளனர் ஆனால் , தமது வியாபர இடங்ககளில் பொருத்தப்பட்டுள்ள மற்றும் பிரதேச சபையினால் , சந்தைக்குள் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களின் அடிப்படையில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்தால் , போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் , போதை பாவனையாளர்கள் தொடர்பிலும், அவர்களால் சந்தைக்கு வருவோர் எதிர்நோக்கும் இன்னல்கள் தொடர்பிலும் கண்டறிய முடியும். எனவே , இது தொடர்பில் கோப்பாய் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பதுடன் போதைப்பொருளுடன் தொடர்புடையவர்களை சந்தையில் இருந்து வெளியேற்ற நல்லூர் பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர் .https://globaltamilnews.net/2025/222246/

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
ப‌ழைய‌ இந்திய‌ ம‌க‌ளிர் க‌ப்ட‌னும் ப‌ழைய‌ இந்திய‌ அணியின் வேக‌ப் ப‌ந்து வீச்சு ம‌க‌ளிரும் இப்ப‌ இருக்கும் இந்திய‌ ம‌க‌ளிர் அணி கோப்பை வென்ற‌ ச‌ந்தோச‌த்தில் அவ‌ர்க‌ளும் கோப்பைய‌ தூக்கும் போது பார்க்க‌ மிக‌வும் ச‌ந்தோச‌மாக‌ இருக்கு.............. இந்த‌ இந்த‌ ம‌க‌ளிருக‌ளுக்கு எத்த‌னை வ‌ருட‌ க‌ன‌வு இது.................................
Checked
Sun, 02/08/2026 - 11:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed