புதிய பதிவுகள்2

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

3 months ago
அணுகுமுறை மாறியதால் வசமான உலகக்கோப்பை - இந்திய வீராங்கனைகள் சாதித்தது எப்படி? பட மூலாதாரம், Pankaj Nangia/Getty படக்குறிப்பு, உலகக்கோப்பையுடன் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கட்டுரை தகவல் மு.பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 2 நவம்பர் 2025, 19:52 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய பெண்கள் அணி இப்போது உலக சாம்பியன். ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது இந்திய அணி. லீக் சுற்றின் ஒருகட்டத்தில் தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்றிருந்தது இந்திய அணி. அவர்களால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், மிகச் சிறப்பாக கம்பேக் கொடுத்து, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வெளியேற்றிய இந்த இந்திய அணி, இப்போது சாம்பியனும் ஆகியிருக்கிறது. மிகமுக்கியமான இந்த இறுதிப் போட்டியில் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்து ஏரியாவிலும் முழுமையான செயல்பாட்டைக் கொடுத்தது இந்திய அணி. இந்த வெற்றியைப் பெற முக்கியமான கட்டங்களில் இந்திய வீராங்கனைகள் தங்கள் அணுகுமுறைகளை மாற்றவேண்டியிருந்தது, பெரும் எழுச்சியைக் காணவேண்டியிருந்தது, உறுதியாகப் போராடவேண்டியிருந்தது. இந்த அணி அவை அனைத்தையுமே செய்திருக்கிறது. இறுதிப் போட்டியில் நல்ல தொடக்கம் நவி மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய ஓப்பனர்கள் ஷஃபாலி வெர்மா, ஸ்மிரிதி மந்தனா இருவருமே இந்த இன்னிங்ஸை சிறப்பாகத் தொடங்கினார்கள். 17.4 ஓவர்களில் 104 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தது இந்த ஜோடி. மரிசான் காப் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை வழக்கத்துக்கு மாறாக ஸ்மிரிதி மந்தனா எதிர்கொண்டார். வழக்கமாக அவருடன் ஓப்பனராகக் களமிறங்கிய பிரதிகா ராவல் தான் முதல் பந்தை எதிர்கொண்டிருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் கூட ஷஃபாலி தான் முதல் பந்தை சந்தித்தார். ஆனால், இந்தப் போட்டியில் அது மாறியிருந்தது. இறுதிப் போட்டிக்கு முன் பிபிசி தமிழிடம் பேசிய சென்டர் ஆஃப் எக்சலன்ஸைச் சேர்ந்த பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரன், "மரிசான் காப் வீசும் இன்ஸ்விங்கர்கள் பேட்டர்களுக்கு சவாலாக இருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார். உள்ளே வரும் பந்துகள் வழக்கமாக வலது கை பேட்டர்களுக்கு சிக்கல் விளைவிக்கும். அதிலிருந்து ஷஃபாலியைக் காப்பதற்காக ஸ்மிரிதி இந்த முடிவை எடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் முதல் ஓவரில் எவ்வித ரிஸ்கும் எடுக்காமல் அதை மெய்டனும் ஆக்கினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஸ்மிரிதி - ஷஃபாலி இணை முதல் விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்தது ஸ்மிரிதி அவ்வளவு பாதுகாப்பாக இன்னிங்ஸைத் தொடங்க, தன் வழக்கமான பாணியில் இன்னிங்ஸை ஆரம்பித்தார் ஷஃபாலி. அயபோங்கா ககா வீசிய முதல் பந்தையே பௌண்டரிக்கு விரட்டி தன் ரன் கணக்கைத் தொடங்கினார். நான்காவது ஓவருக்குப் பிறகு இவர்கள் இருவருமே அதிரடியைக் கையில் எடுத்தார்கள். அதனால் ரன்ரேட் ஆறுக்கும் அதிகமாகவே இருந்துவந்தது. இந்த ஜோடியைப் பிரிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க பௌலர்கள் தடுமாற, 18வது ஓவரிலேயே ஆறாவது பௌலரைப் பயன்படுத்தினார் தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்ஃபார்ட். அப்படி ஆறாவது பௌலராக பந்துவீசிய டிரையான் தான் அந்த அணிக்கு முதல் விக்கெட்டை பெற்றுக்கொடுத்தார். அவர் பந்துவீச்சில் 43 ரன்கள் எடுத்திருந்த ஸ்மிரிதி மந்தனா கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இருந்தாலும், மிகப் பெரிய இறுதிப் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்தது இந்த தொடக்க ஜோடி. இரண்டாவது போட்டியிலேயே தாக்கம் ஏற்படுத்திய ஷஃபாலி வழக்கமாக அதிக பந்துகளை தூக்கி அடிக்கும் ஷஃபாலி வெர்மா, இந்த அதிமுக்கிய இறுதிப் போட்டியில் சற்றே கூடுதல் கவனத்துடன் விளையாடினார். நிறைய பந்துகளை தரையோடு அடிக்கவே பார்த்தார். அதுமட்டுமல்லாமல் பந்துவீச்சாளர் யார் என்று பார்த்துத்தான் தன் அணுகுமுறையையும் தேர்வு செய்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மிக இளம் வயதில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருது வாங்கியது ஷஃபாலி தான் போட்டிக்கு முன்பு பேசியிருந்த ஆர்த்தி சங்கரன், மரிசான் காப் தவிர்த்து இடது கை ஸ்பின்னர் மலாபாவை கவனமாக எதிர்கொள்ளவேண்டும் என்று கூறியிருந்தார். ஷஃபாலி அப்படி கவனமாக ஆடியது போலத்தான் இருந்தது. மலாபா தனக்கு வீசிய 17 பந்துகளில் ஒன்றை மட்டுமே பௌண்டரி ஆக்கினார் ஷஃபாலி. அதுவும் முதல் பவர்பிளேயில் வீசப்பட்ட பந்தில். அதன்பிறகு அவர் பௌண்டரி அடிக்க நினைக்கக்கூட இல்லை. மலாபாவை கவனமாகத்தான் அவர் எதிர்கொண்டிருந்தார். அதேசமயம் அவருக்கு நல்ல 'விட்த்' (width) கிடைக்கும் பந்துகளைத் தண்டிக்கவும் அவர் தவறவில்லை. நன்கு கணித்து திட்டமிட்டு அவர் இந்த இன்னிங்ஸை கட்டமைத்தார். 49 பந்துகளில் அரைசதம் அடித்த ஷஃபாலி, சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 87 ரன்கள் (78 பந்துகள்) அடித்திருந்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார். தீப்தியின் மற்றுமொரு அரைசதம் ஷஃபாலி அவுட்டாகி சரியாக 11 பந்துகள் கழித்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் (24 ரன்கள்) வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சற்று பொறுமையாக ஆடத் தொடங்கினார். அதனால் ரன்ரேட் குறையத் தொடங்கியது. 28வது ஓவர் முடிவில் 5.92 ஆக இருந்த ரன்ரேட், 32வது ஓவர் முடிவில் 5.46 என்றானது. ஆனால் இது மோசமடையாமல் பார்த்துக்கொண்டார் தீப்தி ஷர்மா. மரிசான் காப் வீசிய 33வது ஓவரின் முதல் பந்தையே சிக்ஸருக்கு அனுப்பி தன்னுடைய ரன் வேகத்தைக் கூட்டினார் அவர். அதனால் இந்திய அணியின் ரன்ரேட் மறுபடியும் எழுச்சி பெறத் தொடங்கியது. ஹர்மன்ப்ரீத் கவுர் அவுட்டான பிறகும் கூட தீப்தி சீரான வேகத்தில் ரன் சேர்த்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்திய அணியின் ரன்ரேட் பாதிக்காத வகையில் ஆடினார் தீப்தி ஷர்மா 53 பந்துகளில் அரைசதம் அடித்த தீப்தி ஷர்மா, 58 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். இடையே ரிச்சா கோஷ் தன் வழக்கமான அதிரடி ஆட்டத்தின் மூலம் 24 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். அதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணி தரப்பில் அயபோங்கா ககா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ரன் அவுட் மூலம் கிடைத்த முதல் விக்கெட் 299 என்ற இலக்கை சேஸ் செய்த தென்னாப்பிரிக்க அணியின் ஓப்பனர்கள் லாரா வோல்ஃபார்ட், டாஸ்மின் பிரிட்ஸ் இருவரும் நிதானமாகவே இன்னிங்ஸைத் தொடங்கினார்கள். முதல் 5 ஓவர்களில் அந்த அணி 18 ரன்களே எடுத்திருந்தது. அதன்பிறகு இருவருமே வேகமெடுக்கத் தொடங்கினார்கள். 8.5 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 50 ரன்களைக் கடந்தது. இது பெரிய பார்ட்னர்ஷிப்பாக உருவெடுக்கும் என்று நினைத்திருந்த நிலையில், பிரிட்ஸ் ரன் அவுட் ஆனார். மிட் ஆன் திசைக்கு அவர் அடித்துவிட்டு ஓட, அங்கு நின்றிருந்த அமஞ்சோத் கவுர் டைரக்ட் ஹிட் அடித்து அவரை அவுட்டாக்கினார். அதுமட்டுமல்லாமல், நேராக எதிர் முனைக்கு ஓடாமல், கோணலாக பிரிட்ஸ் ஓடியதும் ரன் அவுட்டுக்குக் காரணமாக அமைந்தது. 17.7 மீட்டர் தூரத்தில் கிரீஸை அவர் அடைந்திருக்கலாம். ஆனால் கோணலாக ஓடியதால் 19 மீட்டர் ஓடியும் அவரால் கிரீஸுக்குள் வர முடியவில்லை. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அமஞ்சோத் செய்த ரன் அவுட் இந்தியாவின் விக்கெட் தேடலுக்கான முதல் பதிலாக அமைந்தது பிரிட்ஸின் மோசமான ரன் அவுட், அமஞ்சோத்தின் சிறந்த ஃபீல்டிங் இரண்டும் சேர்ந்து இந்தியாவின் முதல் விக்கெட்டுக்கான தேடலுக்குப் பதில் கொடுத்தன. ஆனால், அமஞ்சோத்தின் நல்ல ஃபீல்டிங் மட்டுமல்லாமல், அதே ஓவரில் ஜெமிமா செய்த நல்ல ஃபீல்டிங்குமே இந்த விக்கெட்டுக்கு வழிவகுத்தது. அதற்கு முந்தைய பந்தை கவர் திசையில் அடித்து ஒரு ரன் எடுக்க முயற்சி செய்தார் பிரிட்ஸ். ஆனால், அதை ஜெமிமா சிறப்பாகத் தடுத்துவிட அவரால் ரன் எடுக்க முடியவில்லை. தொடர்ந்து அடுத்த பந்திலேயே அவர் அந்த ஒற்றை ரன்னைத் தேட அந்த விக்கெட் கிடைத்தது. "ஜெமிமா அந்த சிங்கிளைத் தடுத்தது இந்த விக்கெட்டுக்கு காரணமாக அமைந்தது" என வர்ணனையில் இருந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசேன் கூறினார். அந்த விக்கெட்டுக்குப் பிறகு மிக விரைவாக இரண்டாவது விக்கெட்டும் கிடைத்தது. ஃபீல்டிங்கில் 2 கேட்ச்களைத் தவறவிட்டிருந்த பாஷ், பேட்டிங்கிலும் தடுமாறினார். 6 பந்துகள் சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஶ்ரீ சரணியின் பந்துவீச்சில் வெளியேறினார். பந்துவீச்சிலும் கைகொடுத்த ஷஃபாலி இந்த உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஆரம்பத்தில் இடம்பிடிக்காத ஷஃபாலி வெர்மாவுக்கு, கடந்த சில நாள்கள் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கின்றன. பிரதிகா ராவல் காயம் காரணமாக அணியில் இடம்பிடித்தவர், ஆடிய இரண்டாவது போட்டியிலேயே 87 ரன்கள் எடுத்தார். ஆனால், பேட்டிங் மட்டுமல்லாமல் இந்த இறுதிப் போட்டியில் பந்துவீச்சிலும் இந்திய அணிக்குக் கைகொடுத்தார் ஷஃபாலி வெர்மா. மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வோல்ஃபார்ட், சுனே லீஸ் ஜோடி இந்திய பந்துவீச்சை சிறப்பாகக் கையாண்டது. இருவருமே அதிரடியாக ஆடி ரன் விகிதம் குறையாமல் பார்த்துக்கொண்டனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, யாரும் எதிர்பாராத வகையில் பந்துவீச்சிலும் அசத்தினார் ஷஃபாலி அந்த பார்ட்னர்ஷிப்பை உடைப்பதற்கான ஷஃபாலி வெர்மாவை பந்துவீச அழைத்தார் ஹர்மன்ப்ரீத் கவுர். எதிர்பார்த்ததைப் போலவே இரண்டாவது பந்திலேயே சுனே லீஸின் விக்கெட்டை அவர் கைப்பற்றினார். ஆனால், ஷெஃபாலியின் வேட்டை அதோடு நிற்கவில்லை. அடுத்த ஓவரின் முதல் பந்தில் அனுபவ வீராங்கனையான மரிசான் காப்பின் விக்கெட்டையும் வீழ்த்தி தென்னாப்பிரிக்காவுக்கு பின்னடைவை ஏற்படுத்தினார். பந்தின் வேகத்தை நன்கு கூட்டி குறைத்து தன் பந்துவீச்சில் வித்தியாசம் காட்டினார் ஷஃபாலி வெர்மா. இந்த ஆடுகளத்தில் பந்து நன்கு நின்று வந்ததால், அவர் வேகத்தைக் குறைத்தபோது தென்னாப்பிரிக்க பேட்டர்களால் அதை கணிப்பது கடினமாக இருந்தது. போராடிய வோல்ஃபார்ட், ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய தீப்தி ஒருபக்கம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்துகொண்டே இருந்தாலும், மற்றொரு பக்கம் தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்ஃபார்ட் உறுதியாகப் போராடினார். சீரான இடைவெளிகளில் அவர் பௌண்டரிகள் அடித்துக்கொண்டே இருக்க தேவைப்படும் ரன் ரேட் ஓரளவு கட்டுக்குள்ளேயே இருந்தது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அரையிறுதி, இறுதி என தொடர்ந்து இரு பெரிய போட்டிகளிலும் சதமடித்திருக்கிறார் வோல்ஃபார்ட் 45 பந்துகளில் அரைசதம் அடித்த வோல்ஃபார்ட், 96 பந்துகளில் சதமடித்தார். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் அவர் சதமடித்திருந்தார். இதன்மூலம் பெண்கள் உலகக் கோப்பையின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் சதமடித்த முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்தார் அவர். என்னதான் சதம் அடித்தாலும், வெற்றியை இலக்காகக் கொண்டிருந்ததால் அவர் கொண்டாடவில்லை. இந்தியா பேட்டிங்கில் சற்று பின்தங்கியபோது எப்படி தீப்தி முன்னாள் வந்து இந்திய ரன்ரேட்டை மறுபடியும் உயர்த்தினாரோ, அதேபோல் பந்துவீச்சிலும் அதைச் செய்தார் தீப்தி. 42வது ஓவர் வீசவந்த அவர், இந்தியாவின் கை மீண்டும் ஓங்குவதற்குக் காரணமாக அமைந்தார். அந்த ஓவரின் முதல் பந்தை வோல்ஃபார்ட் தூக்கி அடிக்க, தட்டுத் தடுமாறி அந்தப் பந்தைப் பிடித்தார் அமஞ்சோத் கவுர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்ததோடு 5 விக்கெட்டுகளும் வீழ்த்தினார் தீப்தி ஷர்மா மூன்று பந்துகள் கழித்து இன்னொரு முன்னணி வீராங்கனையான டிரையானையும் அவுட்டாக்கினார் அவர். அது தென்னாப்பிரிக்காவுக்குப் பெரிய பின்னடைவாக அமைந்தது. லீக் சுற்றில் இந்தியாவுக்கு சவாலாக விளங்கிய நெடீன் டி கிளார்க் இந்தப் போட்டியிலும் போராடிப் பார்த்தார். அவர் கொடுத்த கேட்ச்சை ஜெமிமா தவறவிட்டது ஆட்டத்தை இன்னும் பரபரப்பாக்கியது. ஆனால், மறுபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டே இருந்த நிலையில், ஒரு பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்து அவரும் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இதன்மூலம் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக சாம்பியன் ஆனது. 87 ரன்கள் அடித்ததோடு இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்திய ஷஃபாலி வெர்மா இந்தப் போட்டியின் 'பிளேயர் ஆஃப் தி மேட்ச்' விருது வென்றார். போட்டிக்குப் பின் பேசிய அவர், "என்னை கடவுள் ஏதோவொரு காரணத்துக்காகத்தான் இங்கு அனுப்பியிருக்கிறார் என்று நினைத்தேன். அது இன்று பிரதிபலித்துவிட்டது. இது கடினமாகத்தான் இருந்தது. ஆனால், நான் என் மீது நம்பிக்கை வைத்தேன். என்னால் நிதானமாக இருக்க முடிந்தால், எல்லாமே செய்ய முடியும் என்று நம்பினேன்" எனக் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பிளேயர் ஆஃப் தி டோர்னமென்ட் - தீப்தி ஷர்மா இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்ததோடு 5 விக்கெட்டுகளும் வீழ்த்திய ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா 'பிளேயர் ஆஃப் தி டோர்னமென்ட்' விருது வென்றார். இந்த உலகக் கோப்பையில் 3 அரைசதங்கள் உள்பட தீப்தி 215 ரன்கள் எடுத்தார். மேலும், 22 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனை தீப்தி தான். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3ep0v9kpleo

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
பெரிய‌ப்பு ஊ என்று ஒரு வார்த்தை சொல்லுங்கோ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை ஜ‌யாவை நான் க‌வ‌னிச்சு அனுப்பிறேன் லொள் அதுக்கு பிற‌க்கு இப்ப‌டி எல்லாம் எழுத‌ மாட்டார்😁..........................

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து - 9 பேர் காயம்

3 months ago
பிரிட்டன் ரயிலில் நடந்த கத்திக்குத்து - 9 பேர் கவலைக்கிடம் பட மூலாதாரம், PA Media படக்குறிப்பு, இச்சம்பவம், தொடர்பாக போலீஸார் இருவரை கைது செய்துள்ளனர். 2 நவம்பர் 2025 பிரிட்டனின் கேம்பிரிட்ஜ்ஷயரில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுள் 9 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக, பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. டான்கேஸ்டரில் இருந்து லண்டன் கிங்ஸ் கிராஸ் சென்றுகொண்டிருந்த ரயிலில் இந்த தாக்குதல் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக பிரிட்டன் நாட்டவர்கள் இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் யாரென்ற அடையாளம் இதுவரை வெளியாகவில்லை. சனிக்கிழமை இரவு 7.42 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) பயணிகள் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளித்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அந்த ரயில் கேம்பிரிட்ஜ்ஷயரில் உள்ள ஹண்டிங்டன் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட வேண்டியிருந்தது. எனினும், அந்த ரயில் வழக்கமாக அங்கு நிற்காது. பயணத்தை ஒத்திவைக்க அறிவுறுத்தல் பட மூலாதாரம், PA Media படக்குறிப்பு, காயமடைந்தவர்களின் விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை. உள்ளூர் நேரப்படி இரவு 9.45 மணியளவில், இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டதாக, கேம்பிரிட்ஜ்ஷயர் மேயர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் பயங்கரவாத தடுப்பு காவல்துறையும் இணைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு என்ன காரணம் என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் குறித்த விவரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. பயணிகள் தங்கள் பயணத்தை ஒத்திவைக்குமாறு லண்டன் வடகிழக்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ரயில் சேவைகள் இதனால் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது. நேரில் கண்டவர்கள் கூறியது என்ன? பட மூலாதாரம், PA Media படக்குறிப்பு, சம்பவம் நடந்ததையடுத்து அவசரசேவை குழுவினர் சம்பவ இடத்தை அடைந்தனர். ரயிலில் இச்சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் பிபிசியிடம் கூறுகையில், காயமடைந்த ஒருவர் தங்களை நோக்கி ஓடிவந்து, "யாரோ ஒருவர் கத்தி வைத்துள்ளதாக" கூறியுள்ளார். நேரில் பார்த்த சாட்சியங்களின்படி, இச்சம்பவத்தைத் தொடர்ந்து பயணிகள் மத்தியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது, மேலும் காயமடைந்தவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளனர். எல்லோரையும் ஒரு நபர் கத்தியால் தாக்கியதையடுத்து, "ஓடுங்கள், ஓடுங்கள்!" என பலரும் அலறியதை தாங்கள் கேட்டதாக, நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர், பலரும் ஆரம்பத்தில் இதை ஹாலோவீன் இரவில் வேடிக்கையாக செய்ததாக கருதியுள்ளனர். ஆனால், ஒருவரின் கைகளில் இருந்த ரத்தத்தையும் இருக்கையில் இருந்த ரத்தத்தையும் பார்த்த பின்னரே பலரும் இதை தாக்குதல் என்று உணர்ந்துள்ளனர். பீட்டர்பரோ ரயில் நிலையத்திலிருந்து இந்த ரயில் கிளம்பியதையடுத்து, இத்தாக்குதல் நடைபெற்றதாக, ஹண்டிங்டன் எம்.பி. பிபிசியிடம் தெரிவித்தார். பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறை முதன்மை கண்காணிப்பாளர் கிரிஸ் கேசே, இத்தாக்குதல் "அதிர்ச்சியளிப்பதாக" தெரிவித்துள்ளார். அதிகரிக்கும் கத்திக்குத்து தாக்குதல்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இத்தகைய கத்திக்குத்து தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக, அரசு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2011ம் ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை "நிலையான அளவில் அதிகரித்து வருகின்றன". இது "தேசிய நெருக்கடியாக" உள்ளதாக பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் கூறும் அளவுக்கு முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கடந்த ஓராண்டில் அரசின் கடும் நடவடிக்கையால், போலீஸார் 60,000 கத்திகளை பறிமுதல் செய்துள்ளனர் அல்லது பலரும் அவர்களாகவே ஒப்படைத்துள்ளனர். பொது இடங்களில் கத்தி வைத்திருப்பது குற்றம், மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நான்கு ஆண்டுகள் வரை அதற்கு சிறைத்தண்டனை அளிக்கப்படும். கடந்த மாதம் இதேபோன்று மான்செஸ்டரின் சினகாக்கில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj3z81n62y5o

'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது

3 months ago
“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 1282 பேர் கைது! 03 Nov, 2025 | 11:55 AM ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 1282 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது நாடளாவிய ரீதியில் 1274 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, 86 கிலோ 153 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 252 கிலோ 129 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 18 மில்லிகிராம் கொக்கேயின் போதைப்பொருளும், 05 கிலோ 391 கிராம் 615 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 37871 கஞ்சா செடிகளும், 02 கிராம் 195 மில்லிகிராம் குஷ் போதைப்பொருளும், 06 கிராம் 88 மில்லிகிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 1647 போதை மாத்திரைகளும் , 91 மதன மோதக மாத்திரைகளும் , 140 கிராம் 16 மில்லிகிராம் மாவா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்களில் 26 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/229353

அத்துமீறிய மீன்பிடி; 31 இந்திய மீனவர்கள் கைது

3 months ago
அத்துமீறிய மீன்பிடி; 31 இந்திய மீனவர்கள் கைது. எல்லை தாண்டி வந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் இன்றைய தினம் காரைநகர் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மூன்று படகுகளில் வந்த 31 இந்திய மீனவர்களே இவ்வாறு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல்வள திணைக்களத்தினர், கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்று, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1451865

பெண் பிக்குவை அச்சுறுத்திய இருவர் கைது!

3 months ago
பெண் பிக்குவை அச்சுறுத்திய இருவர் கைது! பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் வத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் பிக்கு ஒருவரை அச்சுறுத்தி, வாய்மொழியாக திட்டிய சம்பவம் தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள், குறித்த பெண் பிக்குவை வாய்மொழியாக திட்டுவதையும் அச்சுறுத்துவதையும் காட்டும் சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது. வத்தளை பொலிஸ் பிரிவின் கெரவலப்பிட்டி பகுதியில் நேற்று (02) இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர்கள் 58 மற்றும் 67 வயதுடையவர்கள், அவர்கள் வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள். இருவரும் இன்று (03) வெலிசறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். https://athavannews.com/2025/1451869

தெலுங்கானாவின் லொறி – பேருந்து ந‍ேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

3 months ago
தெலுங்கானாவின் லொறி – பேருந்து ந‍ேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் உயிரிழப்பு, பலர் காயம்! தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் இன்று (03) காலை சரளைக் கற்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று, அரசு நடத்தும் வீதிப் போக்குவரத்துக் கழக பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த துயரச் சம்பவத்தில் மூன்று மாதக் குழந்தை உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர். மற்றும் பலர் காயமடைந்தனர். 70 பயணிகளுடன் தந்தூர் டிப்போவைச் சேர்ந்த பேருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதி இந்த விபத்து நிகழந்துள்ளது. மோதலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால் லொறிரியன் சரளைக் கற்கள் பேருந்து மீது விழுந்து பல பயணிகள் கீழே சிக்கிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து நடந்த இடம் மனதைப் பிளக்கும் காட்சியாக இருந்ததாகவும், உள்ளூர்வாசிகள் அவர்களை மீட்க விரைந்து வந்தபோது பயணிகள் உதவிக்காக அலறி அழுததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் செவெல்லா அரசு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் ஹைதராபாத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை இன்னும் கவலைக்கிடமாக இருப்பதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தைத் தொடர்ந்து, ஹைதராபாத்-பிஜாப்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது, செவெல்லா-விகாராபாத் பாதையில் நீண்ட வாகனங்கள் வரிசையில் நின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1451875

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? அவுஸ்திரேலியா ( Alana King - 7 விக்கெட்டுகள்) 8 போட்டியாளர்கள் சரியாக பதில் எழுதியிருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 70 புள்ளிகள் 2) ஏராளன் - 65 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 65 புள்ளிகள் 4) சுவி - 65 புள்ளிகள் 5) செம்பாட்டன் - 65 புள்ளிகள் 6) புலவர் - 61 புள்ளிகள் 7) வாதவூரான் - 61 புள்ளிகள் 8) ரசோதரன் - 61 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 60 புள்ளிகள் 10)வீரப்பையன் - 60 புள்ளிகள் 11) கிருபன் - 59 புள்ளிகள் 12) கறுப்பி - 56 புள்ளிகள் 13) வசி - 55 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள் 15) வாத்தியார் - 52 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 33, 35 - 42, 44 - 47 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 93).

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
47)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? இந்தியா ( Deepti Sharma - 22 விக்கேற்றுகள்) சரியாக பதில் அளித்தவர்கள் - சுவி, செம்பாட்டன், வாதவூரான் 1) அகஸ்தியன் - 70 புள்ளிகள் 2) ஏராளன் - 65 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 65 புள்ளிகள் 4) சுவி - 65 புள்ளிகள் 5) செம்பாட்டன் - 63 புள்ளிகள் 6) வாதவூரான் - 61 புள்ளிகள் 7) கிருபன் - 59 புள்ளிகள் 8) புலவர் - 59 புள்ளிகள் 9) ரசோதரன் - 59 புள்ளிகள் 10) நியூபலன்ஸ் - 58 புள்ளிகள் 11) வீரப்பையன் - 58 புள்ளிகள் 12) கறுப்பி - 54 புள்ளிகள் 13) வசி - 53 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள் 15) வாத்தியார் - 50 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 33, 35 - 42, 44, 46, 47 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 91).

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
38)இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது?தென்னாபிரிக்கா அணி 69 ஒட்டங்களை எடுத்தது. சரியாக பதில் அளித்தவர்கள் - ஏராளன், ஆல்வாயன், வாத்தியார், சுவி, வாதவூரான் 1) அகஸ்தியன் - 70 புள்ளிகள் 2) ஏராளன் - 65 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 65 புள்ளிகள் 4) சுவி - 63 புள்ளிகள் 5) செம்பாட்டன் - 61 புள்ளிகள் 6) கிருபன் - 59 புள்ளிகள் 7) புலவர் - 59 புள்ளிகள் 8) வாதவூரான் - 59 புள்ளிகள் 9) ரசோதரன் - 59 புள்ளிகள் 10) நியூபலன்ஸ் - 58 புள்ளிகள் 11) வீரப்பையன் - 58 புள்ளிகள் 12) கறுப்பி - 54 புள்ளிகள் 13) வசி - 53 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள் 15) வாத்தியார் - 50 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 33, 35 - 42, 44, 46 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 89).

வெள்ளவத்தை ரோயல் பிரசாந்த் கருத்தரிப்பு மையம் அங்குரார்ப்பணம்

3 months ago
கட்டணங்களின் விபரங்களையும் இணையுங்கள் பார்ப்போம். ஓரிரு தடவைகள் ரோயலுக்கு சென்றுள்ளேன். டெல்மன் இதை விட கொஞ்சம் பரவாயில்லையோ என்று சொல்ல தோன்றுகின்றது.
Checked
Sun, 02/08/2026 - 11:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed