புதிய பதிவுகள்2

தமிழர்களின் குடித்தொகைப் பெருக்கத்தில் பாரிய வீழ்ச்சி - ச.லலீசன் சுட்டிக்காட்டு

3 months ago
03 Nov, 2025 | 02:46 PM இலங்கையில் குடித்தொகை பெருக்கத்தில் தமிழர்களின் குடிப்பெருக்கம் பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர், "செந்தமிழ்ச் சொல்லருவி" சந்திரமௌலீசன் லலீசன் தெரிவித்துள்ளார். உலக சித்தங்கேணி ஒன்றியத்தின் அனுசரணையில், சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை நிதியம் நடத்திய வருடாந்த வாசிப்பு மாத போட்டியின் பரிசளிப்பு விழாவானது ஞாயிற்றுக்கிழமை (03) வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் அரங்கில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்டு பிரதம விருந்தினர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்து தத்துவ நெறியிலே எமது முன்னோர்கள் யுகங்களை, கிருத யுகம், திரேத யுகம், துவாபர யுகம், கலியுகம் என நான்காக வகுத்தார்கள். இப்போது நடைபெறுவது கலியுகம். தலைமுறைகள் பற்றியும் சொன்னார்கள். 1945ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர்களை அமைதியான தலைமுறையினர் என்றார்கள். அவர்கள் பெரிதாக குடித்தொகை பெருக்கத்தை காட்டவில்லை. 1945ஆண் ஆண்டு உலகப்போர் முடிவடைந்தது. இதன்காரணமாக உலகத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அப்போது, உலகத்திலே மக்கள் தொகை குறைந்து விட்டது என்றும், மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் ஒரு கோஷம் எழுந்தது. அந்த கோஷம் யாழ்ப்பாணத்திலும் ஒலித்தது. அந்த சந்தர்ப்பத்தில் தான் மிதமிஞ்சிய அளவில் பிள்ளைகளை பெற்றார்கள். 1945 -1950ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஒரு வீட்டில் 10,12 பிள்ளைகளை பெற்றார்கள். அதனால் குடும்ப அங்கத்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இலங்கையின் குடித்தொகை கணக்கெடுப்பு தரவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வந்தன. ஒரு காலத்தில் 13 இலட்சம்பேர் யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள். தற்போது ஐந்தரை இலட்சம்பேர் மாத்திரமே யாழ்ப்பாணத்தில் உள்ளார்கள். ஏனையோர் புலம்பெயர் தேசங்களுக்கு சென்று அங்கே குடித்தொகையை பெருக்குகின்றார்கள். இங்கே, நாம் இருவர் நமக்கிருவர் என்ற காலம் போய், நாமிருவர் நமக்கேன் ஒருவர் என்று கேட்கின்ற காலம் வந்துவிட்டது. குறிப்பாக தமிழர்களின் குடித்தொகை பெருக்கமானது குறைந்திருக்கிறது. இஸ்லாமியர்களின் குடித்தொகை பெருக்கம் 10.5 வீதத்திற்கு வளர்ச்சியடைந்துள்ளது. தமிழர்களது குடித்தொகை பெருக்கமானது 11.5 வீதத்திலேயே உள்ளது. தமிழர்களின் குடித்தொகை பெருக்கம் மெல்ல மெல்லமாக உயர்கிறது என்று சொல்கின்ற அளவிற்குகூட இல்லை என்றார். தமிழர்களின் குடித்தொகைப் பெருக்கத்தில் பாரிய வீழ்ச்சி - ச.லலீசன் சுட்டிக்காட்டு | Virakesari.lk

செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம்

3 months ago
03 Nov, 2025 | 02:59 PM செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்.நீதவான் நீதமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் , சட்டத்தரணிகளான நிரஞ்சன், ஞா.ரஜித்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். அதன் போது புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நிற்பதனால் அடுத்த அகழ்வு பணிகளை மேற்கொள்வது தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி மீண்டும் அகழாய்வு தளத்திற்கு விஜயம் மேற்கொண்டு, அடுத்த கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம் | Virakesari.lk

பருத்தித்துறை பகுதியில் 105 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது!

3 months ago
105 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது! 03 Nov, 2025 | 03:25 PM யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸாரால் கடந்த சனிக்கிழமை (01) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 105 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் பெண் உட்பட நான்கு சந்தேக நபர்கள் இரண்டு டிங்கி படகுகளுடன் கைதசெய்யப்பட்டுள்ளனர். 'முழு நாடுமே ஒன்றாக' என்ற தேசிய நடவடிக்கையின் கீழ் “போதையற்ற நாடு -ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்கை” என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுவிக்கும் தேசிய பணிக்கு பங்களிக்கும் கடற்படை, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் உள்ளூர் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பலான உத்தரவுடன் இணைக்கப்பட்ட பருத்தித்துறை கடற்படை நிலையம், பருத்தித்துறை காவல்துறையினருடன் இணைந்து, சுப்பர்மடம கடற்கரைப் பகுதி மற்றும் பலாலி முள்ளியவளை பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் மூலம் கேரள கஞ்சாவை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்கள், இதற்காகப் பயன்படுத்தப்பட்ட இரண்டு டிங்கிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 105 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு பெண் சந்தேக நபரையும் கைது செய்தனர். இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 மற்றும் 41 வயதுடையவர்கள் என்றும், யாழ்ப்பாணம் பருத்தித்துறை சுப்பர்மடம பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டனர். சந்தேக நபர்கள், கேரள கஞ்சா பொதிகள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. 105 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது! | Virakesari.lk

யூடியூபர் சாலிய டி ரணவக்க தாய்லாந்தில் கைது!

3 months ago
03 Nov, 2025 | 05:34 PM சமூக ஊடக செயற்பாட்டாளரும், யூடியூபரும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான சாலிய டி.ரணவக்க (Saliya Ranawaka) தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவைச் சேர்ந்தவர் போல் நடித்து மக்களை ஏமாற்றியதாக அவரது I4 பயண நிறுவனம் மீது குற்றச்சாட்டுகள் இருந்தது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்திற்குச் சென்றவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுத்த பிறகு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் அவர் கைது செய்யப்பட்டு ஜீப் வாகனத்தில் பயணம் செய்யும் நேரடி காணொளி வெளியிட்டுள்ளார், அதில் அரசியல் காரணங்களுக்காக தான் கைது செய்யப்பட்டதாக மட்டுமே கூறப்பட்டுள்ளது. 'சிங்கள' அமைப்பின் முன்னாள் செயற்பாட்டாளர் என்று கூறப்படும் சாலிய, யூடியூப்பில் சர்ச்சைக்குரிய காணொளிகளை வெளியிடுவதில் பெயர் பெற்றவர் என குறிப்பிடப்படுகின்றது. 47 வயதான சாலிய டி. ரணவக்க, 2008 ஆம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தில் லெப்டினன்ட்டாக போர்க்களத்தில் நுழைந்தார், மேலும் தனது 12 ஆண்டு சேவையை முடித்தபோது உளவுத்துறைப் பிரிவில் கப்டனாக இருந்தார். ஈழப் போரின் போது உளவுத்துறை அதிகாரியாக தனது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, பின்னர் அவர் "சிங்கள என்றால் என்ன?" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அரச புலனாய்வுப் பிரிவில் இருந்து ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவில் சேர்ந்த சாலிய ரணவக்க, தனது பன்னிரண்டு ஆண்டு சேவையின் போது பொதுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைப்பாளராகப் பணியாற்றினார். அரச சாரா மட்டத்தில் அரபு வஹாபிசம் குறித்து பொதுமக்களுக்குக் கல்வி கற்பித்து வந்த அவர், கோட்டாபய ராஜபக்சவின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு 2016 இல் சிங்கள தேசிய அமைப்பை நிறுவி அந்த அமைப்பின் மூலம், பொதுமக்களுக்கு வஹாபிசம் குறித்து கல்வி கற்பிக்கப்பட்டது. குரகல, தெவனகல, முஹுது மகா விஹாரயா மற்றும் ஸ்ரீ பாத போன்ற இடங்களில் போராட்டத் திட்டங்களைத் தொடங்கியவர் அவர்தான். அவர் குவாசி நீதிமன்றங்கள் மற்றும் மதரசா பள்ளிகளுக்கு எதிரான ஒரு எதிர்ப்பாளராக இருந்தார். வஹாபிகளைத் தேடியதற்காக கத்தாரில் முன்னதாக கைது செய்யப்பட்டார். ஆனால் ராஜபக்ச அரசாங்கத்தின் இராஜதந்திர தலையீடு காரணமாக 3 நாட்களுக்குள் இலங்கைக்குத் திரும்ப முடிந்தது. அவர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார், அமெரிக்க குடிமகனாக உள்ளார், மேலும் அவர் சமீபத்தில் கனடாவிற்கு வேலை வழங்குநராக அறியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. யூடியூபர் சாலிய டி ரணவக்க தாய்லாந்தில் கைது! | Virakesari.lk

“கணேமுல்ல சஞ்சீவ”வின் கொலைக்கு பின்னால் ஐவர் உள்ளனர் - இஷாரா செவ்வந்தி

3 months ago
03 Nov, 2025 | 04:27 PM பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடமிருந்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு பின்னர் ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரின் கொலைக்கு பின்னால் 5 பேர் செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள “கெஹெல்பத்தர பத்மே” என்பவரின் தலைமையில் “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரின் கொலை திட்டத்திற்கு பின்னால் கெஹெல்பத்தர பத்மே , கமாண்டோ சலிந்து , தருன், பிரதான துப்பாக்கிதாரி மற்றும் இஷாரா செவ்வந்தி ஆகிய ஐவரும் பிரதானதமாக செயற்பட்டுள்ளதாக விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது. அத்துடன், இஷாரா செவ்வந்தியின்ட தாயாரின் இறுதி சடங்கை காணொளி எடுத்து அவருக்கு அனுப்பிய இஷாரா செவ்வந்தியின் மாமா தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளன. இஷாரா செவ்வந்தியின் மாமா தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர். “கணேமுல்ல சஞ்சீவ”வின் கொலைக்கு பின்னால் ஐவர் உள்ளனர் - இஷாரா செவ்வந்தி | Virakesari.lk

செம்மணியில் மீட்கப்பட்ட செருப்பு 1995ஆம் ஆண்டுக்கு முந்தையது ?

3 months ago
செம்மணியில் மீட்கப்பட்ட செருப்பு 1995ஆம் ஆண்டுக்கு முந்தையது ? செம்மணி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட காலணி ஒன்று தொடர்பில் ஆராயப்பட்டதில் அது 1995ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முற்பட்டது என கண்டறியப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழியை இன்றைய தினம் திங்கட்கிழமை நேரில் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், செம்மணி புதைகுழியில் இருந்து காலணி ஒன்று மீட்கப்பட்டது. அதில் 39ரூபாய் 90 சதம் என விலை காணப்பட்டது. அதன் அடிப்படையில் குறித்த காலணி நிறுவனத்திடம் மேற்கொள்ளபட்ட விசராணையில் அக்காலணி 1985ஆம் ஆண்டு – 1995ஆம் ஆண்டு கால பகுதியில் சந்தையில் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அது 1995 ஆம் ஆண்டுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அதேவேளை இரண்டு கட்டமாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது மீட்கப்பட்ட 239 என்புக்கூட்டு எச்சங்களையும் ஆய்வு செய்வதற்கான செலவீன பாதீட்டு அறிக்கை சட்ட வைத்தியர் அதிகாரியினால் தாயரிக்கப்பட்டுள்ளது. அது மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கான ஒப்புதல் கிடைக்கப்பெற்று நிதி ஒதுக்கப்பட்டதும், அதன் பணிகள் ஆரம்பிக்கப்படும். என்புக்கூடுகளை ஆராய்வதற்கு , அகழ்வு பணியில் கடமையாற்றி வந்த சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ். போதனா வைத்திய சாலை சட்ட வைத்தி அதிகாரி மயூதரன் உள்ளடங்கலாக, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி உள்ளிட்ட புதைகுழிகளில் மீட்கப்பட்ட மனித என்புக்கூடுகளை ஆய்வு செய்த நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 07 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான அனுமதிகள் கிடைக்கப்பெற்றதும் பணிகள் முன்னெடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2025/1451889

அத்துமீறிய மீன்பிடி; 31 இந்திய மீனவர்கள் கைது

3 months ago
இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த 35 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில், கடற்படையின் ரோந்து கப்பல்கள் இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான மூன்று இயந்திரப் படகுகளை இடைமறித்தபோது இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மூன்று படகுகளும் மீன்பிடி உபகரணங்களுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் 31 மீனவர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மீதமுள்ள நான்கு மீனவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆரம்பக்கட்ட விசாரணைகள் நிறைவடைந்தவுடன், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மற்றும் உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த 35 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது | Virakesari.lk

மட்டக்களப்பில் இரு வேறு பிரதேசங்களில் போதைப்பொருள், கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

3 months ago
03 Nov, 2025 | 06:00 PM மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள கருவப்பங்கேணி மற்றும் திருப்பெருந்துறை பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இருவர் ஞாயிற்றுக்கிழமை (2) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார். பொலிஸ் குழு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவரின் வீட்டை முற்றுகையிட்டனர். இதன்போது 34 வயதுடைய பிரபல வர்த்தகரிடமிருந்து 5 கிராம் 650 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. பின்னர், அந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின், அங்கிருந்த பெண்கள் உட்பட சிலர் ஒன்றிணைந்து, கைது செய்யப்பட்டவரை அழைத்துச்செல்ல விடாமல், பொலிஸாரை தடுத்து பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு அந்த நபரை பொலிஸார் மீட்டு அழைத்துச் சென்றனர். அதேவேளை திருப்பெருந்துறை பகுதியிலும் கசிப்பு விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டபோது அங்கு கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 56 வயதுடைய ஒருவரை 24 போத்தல் கசிப்புடன் பொலிஸார் கைது செய்தனர். போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்காக நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும் மற்றும் கசிப்புடன் கைது செய்தவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பில் இரு வேறு பிரதேசங்களில் போதைப்பொருள், கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது | Virakesari.lk

வவுனியாவில் மரணித்த பல்கலைக்கழக மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு

3 months ago
Published By: Vishnu 03 Nov, 2025 | 07:19 PM வவுனியா பல்கலைக்கழகத்தில் மரணமடைந்த மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் திங்கட்கிழமை (03) தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா பல்கலைக்கழத்தில் மாணவர்களின் மது விருந்து நீண்ட நேரம் இடம்பெற்ற நிலையில் சனிக்கிழமை காலை வவுனியாப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் மரணமடைந்த நிலையில் பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவ்வாறு உயிரிழந்தவர், அநுராதபுரம் ஜயசிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவர் ஆவார். குறித்த மாணவனுக்கு பகிடிவதையின் போது வலுக்கட்டாயமாக மதுபானம் பருக்கியதால் மரணமடைந்துள்ளதாக மாணவனின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். குறித்த விடயம் தொடர்பில பூவரசன்குளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து இருந்ததுடன், திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் அவர்களும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டார். அதன் பின் குறித்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனைகள் இடம்பெற்றிருந்த நிலையில் இளைஞனின் மரணத்திற்கான காரணம் முழுமையாக கண்டறியப்படாத நிலையில் அவரது இரத்த மற்றும் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசேதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மாணவர் உயிரிழந்த போது, அவரது உடலில் கணிசமான அளவு மதுபான செறிவு இருந்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். அத்துடன் விசாரணையின் போது, உயிரிழந்த மாணவரின் சகோதரி, கடந்த 31ஆம் திகதி இரவு பல்கலைக்கழக மாணவர்களின் விருந்தொன்றில் சிரேஷ்ட மாணவர்கள் தனது சகோதரருக்கு பலவந்தமாக மதுபானம் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது சகோதரனுக்கு வேறு எந்த நோயும் இருந்திருக்கவில்லை என்றும், பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதை குறித்து பல தடவைகள் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வவுனியாவில் மரணித்த பல்கலைக்கழக மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு | Virakesari.lk

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
அப்பு சோறு முக்கியம். வேலை இல்லா பட்டதாரிகள் சொல்லுறாங்களே என்று வேலை நேரத்தில் கவனமப்பு. போதிய வசதிகள் இல்லாமல் போட்டியை திறம்படி நடத்திய உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். துல்லியமான விடைகளைக் கணித்து முதலாவது இடத்தைப் பிடித்த @Ahasthiyan னுக்கு வாழ்த்துக்கள். போட்டியை விறுவிறுப்பாக கொண்டு போன உறவுகளுக்கும் பாராட்டுக்கள். பையா எங்களை @கிருபன் கூகிளில் விடை எழுத பழக்கியதால் கூகிள் இல்லாமல் சரியாக விடைகள் எழுத முடியவில்லை.

மறந்து போனோமா வழுக்கி ஆற்றை

3 months ago
அந்த ஐந்து வருடங்கள் நீங்கள் அந்தப்பக்கம் வேலை செய்த பொது😅 நாங்கள் உங்கள் வீட்டுப்பக்கமாக யாழ் இந்து மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம் 😂

மறந்து போனோமா வழுக்கி ஆற்றை

3 months ago
அனுரா அரசு வந்த பின்னர் சீனோரும் இயங்க ஆரம்பித்துள்ளது கடற்படை தங்கள் கட்டுப்பாட்டில் ஒரு உணவகம் நடத்துகின்றார்கள் அது சுற்றுலாப் பிரயாணிகளுக்கு உகந்ததாக உள்ளது-

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
போட்டியில் வெற்றி பெற்ற அகஸ்தியன் , அல்வாயான், செம்பாட்டான், ஏராளன் மற்றும் அனைவருக்கும் பாராட்டுகள் .........! இந்த திரியை அணையாமல் கொழுத்திக் கொண்டிருந்த மேன்மையான உறவுகளுக்கு நன்றிகள் .....! கந்தப்புவுக்கு ம் . ........ சொல்லி வேல இல்ல ......... ரொம்ப நன்றி ........! 🙂

மறந்து போனோமா வழுக்கி ஆற்றை

3 months ago
கொஞ்சம் தூரம் என்றாலும் பரவாயில்லை என்று நவாலி சங்கரத்தைப் பாதையைப் பயன்படுத்துவது ஓரளவுக்கு நல்ல சுவாசத்தைக் கொடுக்கும் சில வேளைகளில் பிரதான வீதியே குப்பையால் நிறைந்திருக்கும் அந்தளவுக்கு மாநகரசபை ஊழியர்கள் கவனமாக வேலை செய்வார்கள்🤨 தலைவர் 🙏 80 களுக்கு முன்னர் அங்கு வேலை செய்திருக்கலாம் என நினைக்கிறேன் சேர்மன் ஊரில் CTB தியாகராஜா என்று அழைக்கப்படடுவார் எங்கள் உறவினர் தான்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
போட்டியில் வெற்றிபெற்ற அகஸ்தியனுக்கும் தொடர்ந்து அல்வாயான், செம்பாட்டான் மற்றும் போட்டியில் கலந்துகொண்ட அனைவர்க்கும் வாழ்த்துகள். போட்டியைக் கலகலப்பாக வைத்திருந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் கந்தப்பு அண்ணைக்கு விசேஷமான நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் 👍🙏
Checked
Sun, 02/08/2026 - 11:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed