ஊர்ப்புதினம்

புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்துக்கு அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி கடும் எதிர்ப்பு : 7ஆம் திகதிக்கு முன் தீர்மானத்தை மாற்றுமாறும் வலியுறுத்தல்

3 months 1 week ago

புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்துக்கு அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி கடும் எதிர்ப்பு : 7ஆம் திகதிக்கு முன் தீர்மானத்தை மாற்றுமாறும் வலியுறுத்தல்

24 Oct, 2025 | 04:49 PM

image

(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்துக்கமைய பாடசாலை நேரத்தை 30 நிமிடத்தால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி துறைசார்ந்தவர்களுடன் எந்தவொரு கலந்தாலோசனைகளையும் முன்னெடுக்காமல் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாக அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.  

வெள்ளிக்கிழமை (24) கொழும்பில் விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்து குறித்த தொழிற்சங்கம் இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை நேரத்தை அதிகரிப்பது குறித்த தீர்மானத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால் அடுத்த தவணை ஆரம்பமானதும் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அகில இலங்கை ஒன்றிணைந்த ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யல்வல பக்ஞ்ஞாசேகர தேரர், அதிபர், ஆசிரியர் உட்பட கல்வித்துறை சார்ந்தவர்களுடன் எவ்வித கலந்துரையாடல்களையும் முன்னெடுக்காமல் அரசாங்கம் தன்னிச்சையாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. தற்போது 1 - 1.30 மணியளவில் மாணவர்கள் சோர்வடைகின்றனர். அதிகாலை 3 மணிக்கு எழுந்து பல கிலோ மீற்றர் பயணம் செய்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும் இருக்கின்றனர்.

அவ்வாறெனில் அந்த மாணவர்களுக்கு அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்துக்கமைய அருகிலுள்ள பாடசாலையில் கல்வி கற்பதற்கான வசதிகளையாவது அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவ்வாறு எந்தவொரு முன்னாயத்தமும் திட்டமிடலும் இன்றி பாடசாலை நேரத்தில் 30 நிமிடத்தை அதிகரித்துள்ளமை நியாயமற்றது. 

எனவே இந்த தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும். பொருத்தமான மாற்றங்கள் தொடர்பில் துறைசார் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில், அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த புதிய முறையில் இடைவேளை இரு சந்தர்ப்பங்களில் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு இரு இடைவேளைகள் வழங்கப்பட்டால் மாணவர்களை வகுப்பறைகளிலிருந்து வெளியனுப்புவதற்கும், மீள அழைப்பதற்கும் கூட நேரம் போதாது. அவ்வாறிருக்கையில் இவ்வாறான ஒரு நடைமுறை சாத்தியமற்ற முறைமையை யோசனையை வழங்கியது யார்?

தேசிய கல்வி நிறுவனத்தின் எவ்வித தகுதியும் அற்ற குழுக்களாலேயே இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. கலைத்துறை பட்டதாரிகள் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான பாடப்பரப்புக்களை தயாரிக்கின்றனர். இவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் குழுக்களில் அங்கத்துவம் வகித்தவர்களாவர். அதனால் அவர்களுக்கு இவ்வாறான முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. 

நவம்பர் 7ஆம் திகதி பாடசாலைகளுக்கு தவணை விடுமுறை வழங்க முன்னர் இந்த தீர்மானத்தை அரசாங்கம் மாற்ற வேண்டும். அவ்வாறில்லையெனில் பாடசாலை ஆரம்பமானதன் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/228581

வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள் - விருதுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை

3 months 1 week ago

வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள் - விருதுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை

வெள்ளி, 24 அக்டோபர் 2025 06:14 AM

வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள் - விருதுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை

பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றோரின் தொழில்முயற்சிகளுக்கு தேசிய ரீதியிலான அங்கீகாரங்களை பெற்றுக்கொடுக்கும் முகமாக , “வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025”  எனும் விருது வழங்கும் நிகழ்வில் 16 பிரிவுகளில் 33 விருதுகள் வழங்கப்படவுள்ளன எனவும் , அதற்காக தொழில் முனைவோரை விண்ணப்பிக்குமாறும் , யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தினர் கோரியுள்ளனர் 

யாழ் . மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற , ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். 

மேலும் தெரிவிக்கையில், 

வடமாகாணத்தின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக வடமாகாணத்தின் சிறந்த தொழில்முனைவோர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் “வட மாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025” (Northern Entrepreneur Awards – 2025) நிகழ்வானது தேசிய தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை (National Enterprise Development Authority – NEDA)  மற்றும் யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின்  (Chamber of Commerce and Industries of Yarlpanam – CCIY) ஏற்பாட்டில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.

வட மாகாணத்தின் தொழில்முனைவோருடைய திறன்கள், அவர்களின் புத்தாக்கங்கள், தலைமைத்துவம் மற்றும் பொருளாதார பங்களிப்புக்கள் போன்றவற்றை பாராட்டுவதோடு தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளித்து, சிறந்த தொழில்முனைவோரை தேசிய மட்டத்தில் அடையாளம் காணப்படுவதை உறுதி செய்வதே இவ் விருதுகளின் பிரதான நோக்கமாகும்.  

குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றோரின் தொழில்முயற்சிகளுக்கு தேசிய ரீதியிலான அங்கீகாரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு எமக்குரியது.

வடமாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025 இல் பெண் தொழில்முனைவோர், இளம் தொழில்முனைவோர், வேளாண்மை, உணவு சார் உற்பத்திகள், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, மீன்பிடி, கல்வி, ஏற்றுமதிகள், கட்டிட நிர்மாணம் மற்றும் உட்கட்டமைப்பு, கைவினை மற்றும் படைப்புத் துறை உள்ளிட்ட 16 பிரிவுகளில் மொத்தம் 33 விருதுகள் வழங்கப்படவுள்ளன.

வடமாகாண தொழில்முனைவோர் விருதுகள்-2025 ற்கான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து எம்மிடம் உடனடியாக சமர்ப்பிக்குமாறுகேட்டுக்கொள்கின்றோம்.

அன்பான தொழில் முனைவோரே வடமாகாண தொழில்முனைவோர் விருதுகள் கிடைப்பதன் முலம் நீங்கள் பெறும் நன்மைகள்

1. அங்கீகாரமும் நம்பகத்தன்மையும் (Recognition & Credibility)

2. இலவச சந்தைப்படுத்தலும் (Free Publicity & Marketing)

3. வலுவான வலையமைப்பு (Stronger Networking)

4. ஊழியர்களின் மனதளவவிலான தன்னம்பிக்கை உயரும் (Employee Morale & Retention)

5. உங்கள் வியாபார வளர்ச்சியில் இன்னுமொர் அத்தியாயத்தின் வாயில் (Gateway to Business Growth)

6. உங்கள் தனிப்பட்ட மற்றும் வணிகக் குறி மதிப்பு அதிகரிப்பு  (Personal & Brand Equity)

விருதுகள் உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு  கொண்டு செல்ல உதவும்  படிக்கட்டுக்கள் .   விருதுகளுக்காக நீங்கள்  விண்ணப்பிக்கும் செயல்முறை தான் உங்கள் வியாபாரத்தை அல்லது சேவையை  நீங்களே  ஒருமுறை மதிப்பாய்வு செய்ய  கிடைக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும் என தெரிவித்துள்ளனர்.

https://jaffnazone.com/news/51566

யாழில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு சொத்து குவித்த எட்டு பேருக்கு எதிராக விசாரணை ஆரம்பம்

3 months 1 week ago

யாழில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு சொத்து குவித்த எட்டு பேருக்கு எதிராக விசாரணை ஆரம்பம்

வெள்ளி, 24 அக்டோபர் 2025 06:45 AM

யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் , போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் , மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

முதல் கட்டமாக 08 பேருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் , அவர்களில் ஐவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் , மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்படவுள்ளன. 

வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகை பணத்தினை பெருக்கோடு யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுதல் , மீற்றர் வட்டிக்கு பணத்தினை வழங்கி , அதனை திரும்ப செலுத்த தவறுபவர்களை கடத்தி சென்று சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி  ,அவற்றை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுதல் , பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்தல் , போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகள் ஊடாக சொத்துக்களை சேர்ந்தவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் பொலிஸ் விசேட பிரிவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

அதன் அடிப்படையில் முதல் கட்டமாக யாழ்ப்பாணத்தில் எட்டு பேர் அடையாளம் காணப்பட்டு , அவர்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து குறித்த நபர்களிடம் வாக்கு மூலங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்ப்பவர்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் தமக்கு கிடைக்க பெற்று வருவதாகவும் , அது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுப்போம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

https://jaffnazone.com/news/51571

கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் ஆபாச காணொளிகள்!! விசாரணைக்கு அழைக்கப்படும் நடிகைகள்

3 months 1 week ago

கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் ஆபாச காணொளிகள்!! விசாரணைக்கு அழைக்கப்படும் நடிகைகள்

October 24, 2025 10:36 am

கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் ஆபாச காணொளிகள்!! விசாரணைக்கு அழைக்கப்படும் நடிகைகள்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள கெஹல்பத்தர பத்மேவின் கையடக்க தொலைபேசி தரவுகளை பகுப்பாய்வு செய்ததில், ஐந்து பிரபல நடிகைகள் மற்றும் ‘மிஸ் இலங்கை’ கிரீடம் வென்ற ஒரு மாடல் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளன.

அதன்படி, அவர்கள் ஆறு பேருக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுத் துறை இந்த ஆறு பெண்களையும் அழைத்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே, மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, அவரது கையடக்க தொலைபேசிகளும் சிஐடியினரால் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

இதில், பிரபல நடிகை ஒருவர் தனது காதலனுடன் இருக்கும் ஆபாச காணொளி தொலைபேசியில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மற்ற ஐந்து நடிகைகளின் புகைப்படங்களும், ‘மிஸ் இலங்கை’ மாடலின் புகைப்படங்களும் அந்த கையடக்க தொலைபேசியில் காணப்பட்டன.

பெரும்பாலான புகைப்படங்கள் கெஹல்பத்தர பத்மேவுடன் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டவை என்று தெரிவிக்கப்படுகிறது.

https://oruvan.com/pornographic-videos-on-kehelbaddara-padmes-phone-actresses-summoned-for-questioning/

வெள்ளைக்கொடி விவகாரம்: சர்வதேச விசாரணை வேண்டும் – கோடீஸ்வரன்

3 months 1 week ago

வெள்ளைக்கொடி விவகாரம்: சர்வதேச விசாரணை வேண்டும் – கோடீஸ்வரன்

October 24, 2025 10:59 am

வெள்ளைக்கொடி விவகாரம்: சர்வதேச விசாரணை வேண்டும் – கோடீஸ்வரன்

இறுதிப்போரின்போது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உள்ளக பொறிமுறை ஊடாக நீதி கிட்டாது. எனவே, சர்வதேச விசாரணையே வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

” 2009 இறுதிப்போரின்போது வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த மக்கள், புலிகள் சவேந்திர சில்வாவின் அனுமதியுடன் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார்.

இதனோடு சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டியவர்களாக உள்ளனர்.

எனினும், போர் முடிவடைந்து பல வருடங்ககள் கடந்தும் தமிழ் மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. படுகொலை குறித்து கடந்த அரசாங்கமும் விசாரணை செய்யவில்லை, இந்த அரசாங்கமும் விசாரணை முன்னெடுக்கவில்லை. இதன்காரணமாகவே உள்நாட்டு பொறிமுறைமீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

உள்ளக பொறிமுறைமூலம் குற்றமிழைத்தவர்களை தண்டிக்க முடியாது. எனவேதான் சர்வதேச விசாரணையை கோரி நிற்கின்றோம்.” எனவும் க. கோடீஸ்வரன் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

https://oruvan.com/white-flag-issue-international-investigation-needed-billionaire/

போதைப்பொருள் பேரழிவை ஒழிக்க முழு நாடும் ஒன்றுபட வேண்டும் – ஜனாதிபதி

3 months 1 week ago

போதைப்பொருள் பேரழிவை ஒழிக்க முழு நாடும் ஒன்றுபட வேண்டும் – ஜனாதிபதி

October 24, 2025

அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து விவாதிக்க முடிந்தாலும், நாட்டிலிருந்து போதைப்பொருள் பேரழிவை  ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதில் இனிமேலும் விவாதித்துக் கொண்டிருப்பதற்கு இடமில்லை. போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டத்திற்காக முழு நாடும் ஒன்றுபட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

‘போதைப்பொருள் பேரழிவை  வேரோடு ஒழிப்பதற்கான ” முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’ குறித்து ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு விளக்கமளிப்பதற்காக வியாழக்கிழமை (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது தேசிய பேரழிவாக மாறி இளைஞர் சமூகத்தைப் போன்றே பாடசாலை  மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து வரும்  போதைப் பொருள் வர்த்தகத்தை மையமாகக் கொண்டு அநேகமான குற்றங்கள் நடப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய  மட்டத்தில் அரசியல் தலைமைத்துவம், செயற்திறனாக முடிவெடுக்கும் பொறிமுறை மட்டுமன்றி பரந்த பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்தின்  ஊடாக போதைப்பொருள் அச்சுறுத்தலை  முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த தேசிய நோக்கத்தை அடைவதற்காக , ”முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’  முன்னெடுக்கப்படுவதோடு பரந்தளவிலான பிரச்சார செயல்முறையின் ஊடாக போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து சமூகத்தின் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பாரிய திட்டமொன்றாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பிரச்சார திட்டத்தை செயல்படுத்துவதில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களால் மேற்கொள்ளக் கூடிய பங்களிப்பு குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றக் கும்பல்களின் நிதி பலம் என்பன பொருளாதாரம், சமூகக் கட்டமைப்பு, அரச பொறிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சியைக் கூட  வீழ்ச்சியடையச் செய்து  நாட்டையும் சமூகத்தையும் அழித்து வருவதாகத் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் இந்த அச்சுறுத்தலுக்கு இனிமேலும் இடமளிப்பதில்லையென முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களில் அரசியல்  நிழலின் கீழ் சுதந்திரமாக வளர்ந்த இந்தக் குற்றங்கள், தற்போது நாட்டையும் சமூகத்தையும் கடுமையாக ஆக்கிரமித்துள்ளது என்பதையும், அதற்கு பொலிஸ், சுங்கம், மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் உள்ளிட்ட முக்கிய அரச நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

மீண்டும்  இவ்வாறான நிலைமை ஏற்படாதவாறு எதிர்கால சந்ததியினருக்காக  இந்த தேசிய பேரழிவைத் தோற்கடிப்பதற்கு  அனைவர்  மீதும் சுமத்தப்பட்டுள்ள மறுக்க முடியாத பொறுப்பை ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு  எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும்.

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, ஆகியோருடன் அரச மற்றும் தனியார் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொழுதுபோக்கு துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

https://www.ilakku.org/the-entire-country-must-unite-to-eradicate-the-drug-scourge/

கடந்த காலங்களை விட தற்போது கடற்படையினர் வினைத்திறனுடன் செயற்படுகின்றனர்

3 months 1 week ago

கடந்த காலங்களை விட தற்போது கடற்படையினர் வினைத்திறனுடன் செயற்படுகின்றனர்

adminOctober 24, 2025

கடந்த காலத்தை விட கடற்படையினர் அதிக வினைத்திறனுடன் செயற்படுகின்றனர். அவர்கள் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மிக கடுமையாக முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண மீனவர் சங்கங்களின் இணையத்தின் செயலாளர்முகமட் ஆலம் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்தில்  நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,

கடந்த கால அரசாங்கத்தை. விட தற்போதைய அரசாங்கம் இந்திய மீனவர்களை கைது செய்வதில் அதிக அக்கறை காட்டுகின்றது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். வட மாகாணத்தை பிரதிநிதிப்படுத்தும் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.  இந்த அரசாங்கத்தை கொண்டு வந்ததில் எங்களுக்கு ஒரு பங்கு உண்டு. எனவே கடற்தொழிலாளர்களின் நலன்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த அரசாங்கம் செயற்பட வேண்டும்.

பல்வேறு பகுதிகளில் இழுவை மீன்பிடி படகு தொழில் நடைபெறுகிறது. அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும். கடந்த காலத்தை விட இந்த அரசாங்கம் ஒரே நாளில் அதிக அளவு இந்திய மீனவர்களை கைது செய்தது. கடந்த மாதம் ஐந்து படகுகளில் 40 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் உண்மையில் வரவேற்கத்தக்க விடயம்.

கடல் எங்களுக்கு உரியது கச்சதீவும் எங்களுக்கு உரியது. இந்த இறையாண்மைக்கு உட்பட்ட நாட்டில் நாங்களும் ஒரு பங்காளி என்ற வகையில், நாங்கள் இந்த கோரிக்கையை விடுகின்றோம்.  இந்திய மீனவர்களின் கைது நடவடிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் கடல் சார் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடற்படையினரும் திறமையாக செயல்படுகின்றனர் அவர்கள் கடந்த கால அரசாங்கத்தை விட தற்பொழுது உள்ள அரசாங்கத்தில் மிகவும் வினை திறனுடன் செயல்படுகின்றனர் என மேலும் தெரிவித்தார்.

https://globaltamilnews.net/2025/221887/

இலங்கைக்கு பரிசாக வழங்கிய யானைகளை மீண்டும் திரும்பப் பெற தாய்லாந்து நடவடிக்கை!

3 months 1 week ago

New-Project-261.jpg?resize=750%2C375&ssl

இலங்கைக்கு பரிசாக வழங்கிய யானைகளை மீண்டும் திரும்பப் பெற தாய்லாந்து நடவடிக்கை!

தாய்லாந்து பரிசாக வழங்கிய இரண்டு யானைகளை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்காக தாய்லாந்து அரசாங்கம் இலங்கையுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. 

இலங்கையில் குறித்த யானைகள் மேசமாக பராமறிக்கப்படுவதாகவும், தவறாக நடத்தப்படுவதாகவும் வெளியான செய்திகளைத் தொடர்ந்து அவற்றை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வர தாய்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

தாய்லாந்து யானைகளான  Plai Pratu Pha மற்றும் Plai Srinarong ஆகியவற்றின் நலன் குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், தாய்லாந்தின் பிரதிப் பிரதமரும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சருமான Suchart Chomklin வியாழக்கிழமை (23) தனது முகநூல் பக்கத்தில் அவசரமாக இலங்கைக்கு விமானத்தில் செல்ல திட்டமிட்டுள்ளதாக பதிவிட்டார்.

கடந்த ஆண்டு தாய் யானை மீட்புக் குழுவால் இந்த கவலைகள் முதலில் வெளிப்படுத்தப்பட்டன.

தாய்லாந்தால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட யானைகள், அதிகமாக வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டு, சரியான வாழ்க்கைத் தரங்கள் இல்லாமல் உள்ளன என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது. 

விலங்குகள் எல்லா நேரங்களிலும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்காக அவை உடனடியாக தாய்லாந்திற்குத் திரும்ப வேண்டும் என்று அந்தக் குழு வலியுறுத்தியது.

Thai elephants in Sri Lanka

இந்த நிலையில் இது தொடர்பான நேற்றைய முகநூல் பதிவில் தாய்லாந்தின் பிரதிப் பிரதமர், யானைகளின் நிலைமையினை பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மற்றும் பிற தாய்லாந்து அரசு நிறுவனங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இந்தப் பிரச்சினையைப் புறக்கணிக்கவில்லை என்றும் விளக்கினார்.

யானைகளை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு அனைத்து தொடர்புடைய நிறுவனங்களுடனும் ஒருங்கிணைக்க இராஜதந்திர முயற்சிகளுக்கு ஒப்புதல் அளித்த பிரதமர் அனுடினுடன் இந்த விடயத்தைப் பற்றி விவாதித்ததாகவும் கூறினார்.

எனினும், இந்த செயல்முறைக்கு சிறிது நேரம் ஆகலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்களுடன் இணைந்து யானைகளின் உடல்நலம் குறித்து மதிப்பிடுவதற்காக இலங்கைக்கு செல்லவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யானைகளை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான இராஜதந்திர விவாதங்கள் தொடரும் வரை, உள்ளூர் பராமரிப்பாளர்கள் அவற்றுக்கு முறையான பராமரிப்பை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பிரதமர் Suchart Chomklin தெளிவுபடுத்தினார். 

https://athavannews.com/2025/1451029

நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களை வரவேற்கத் தயார் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

3 months 1 week ago

New-Project-260.jpg?resize=750%2C375&ssl

நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களை வரவேற்கத் தயார் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் 

இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவில் இருக்கும் மக்கள் மீண்டும் தாயகம் திரும்பினால் அரசாங்கம் வரவேற்கத் தயாராகவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் நடைபெறும் நிகழ்வொன்றுக்காக தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதி அமைச்சர், அங்கு ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர், 

இலங்கை அரசு பொருளாதாரத்தில் சிக்கலான சூழலில் இருந்த போது இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ளது. 

மலையக தமிழர்களுக்கு இந்தியா சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

புதிய ஜனாதிபதி பதவியேற்றதும் இலங்கை வந்த இந்திய பிரதமர் பல்வேறு நிதி உதவிகள் உள்ளிட்ட உதவிகளை  தொடர்ந்து செய்து வருகிறார்.

தற்போது பொருளாதார சிக்கலில் இருந்து இலங்கை வேகமாக மீண்டு வருகிறது.

நாட்டில் இலஞ்சம் முழுவதும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு பிரதிநிதிகளின் செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டு வீண் விரையம் தவிர்க்கப்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களை போல் செயல்படுகின்றனர்.

இலங்கையில் இருந்த இரட்டை சட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கடந்த கால ஆட்சியாளர்கள் ரணில் விக்ரமசிங்க போன்றவர்கள்  தவறு செய்ததால் அவர்களை சிறையில் அடைக்கப்பட்டதன் பின் அனைவருக்கும் நீதி சமம் என்பதை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தற்போதய  ஒதுக்கீட்டில் வடமாகாணத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அங்கு ஏராளமான பணிகள் நடந்து வருகிறது, சர்வதேச விளையாட்டு மையம் யாழ்ப்பாணம் பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது.

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சனையை ஒதுக்கி வைத்து மீன்வளம் கடல் வளம் குறித்து அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மீன்வளத்தை பாதிக்கும் வகையிலான திட்டங்களை தடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியா – இலங்கை என இரு நாடுகளும் அரசியல் ரீதியாக ஒற்றுமையாக உள்ளது.

இரண்டு நாட்டு அரசும் மீனவர் பிரச்சனையை பேசி முடிக்க நடவடிக்கைகள் எடுக்க இருக்கிறோம்.

இந்திய இலங்கை மீனவர்கள் இடையேயான பிரச்சனை

சகோதரர்களுக்குள் இருக்கும் பிரச்சனை தான் உள்ளது. பேசி சுமுகமான முடிவை எட்ட முடியும்.

இலங்கை – இந்தியா என இருநாட்டு மக்கள் உறவுகாரர்கள். ஏன் மீனவர் பிரச்சனையை மட்டும்  வைத்து பகைமை உண்டாக்க வேண்டும்.

இலங்கை அனைத்து நாடுகளுடனும் நட்புடன் உள்ளது.

இலங்கையை சீனா ஆக்கிரமித்துள்ளதாக சொல்வது அனைத்தும் பொய்

சுயாதீனமான நாடாக இலங்கை உள்ளது. 

மற்ற அனைத்து நாடுகளும் முதலீடுகளும் உதவிகளையும் செய்வதை வைத்து அந்த நாடுகள் இலங்கையை ஆக்கிரமிப்பு செய்துள்ளது என சொல்லக்கூடாது.

இலங்கை அகதிகளுக்கு இந்திய மற்றும் தமிழக அரசு பெரு உதவிகள் செய்து வருகிறது.

இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவில் இருக்கும் மக்கள் மீண்டும் தாயகம் திரும்பினால் இலங்கை அரசாங்கம் வரவேற்கத் தயாராக உள்ளது.

இலங்கை மக்களின் கோரிக்கை குறித்து இரு நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

https://athavannews.com/2025/1451026

சுதேச மருத்துவப் பட்டதாரிகள் 304 பேருக்கு நியமனம் வழங்கப்படும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

3 months 1 week ago

சுதேச மருத்துவப் பட்டதாரிகளின் நியமனந்தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் கடுமையாக கேள்வி எழுப்பினார் ரவிகரன் எம்.பி; நவம்பரில் 304பேருக்கு நியமனம் வழங்கப்படுமென - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பதில்

Published By: Digital Desk 3

23 Oct, 2025 | 05:34 PM

image

பட்டப்படிப்பையும் உள்ளகப்பயிற்சியையும் முடித்து வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் சுதேச மருத்துவப் பட்டதாரிகளின் நியமனம் தொடர்பாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் மிகக் கடுமையான முறையில் கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்நிலையில் கடந்த 2009, 2010, 2011ஆகிய கல்வியாண்டுகளில் ஆயுர்வேத, சித்த மற்றும், யுனானி ஆகிய சுதேச மருத்துவத்துறைகளில் பட்டப்படிப்பை நிறைவுசெய்த பட்டதாரிகள் 304பேரை ஆரம்ப சுதேச மருத்துவ அலுவலர் பதவிக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 03ஆம் திகதி நியமனம் செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பதிலளித்துள்ளார். 

அதேவேளை தற்போது நாட்டிலுள்ள சுதேச வைத்தியசாலைக் கட்டமைப்பிலே அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவர் ஆளணியைவிடவும் அதிகமான அளவில், சுதேச பட்டதாரிகள் காணப்படுவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

பாராளுமன்றில் வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இவ்வாறு சுகாதார அமைச்சரிடம் மிகக் கடுமையாக கேள்வி எழுப்பியநிலையில் சுகாதார அமைச்சரால் மேற்கண்டவாறு பதிலளிக்கப்பட்டது. 

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே! 

மேலைத்தேய மருத்துவ சேவை வழங்கல் என்றாலும் சரி, சுதேச மருத்துவ சேவை வழங்கல் என்றாலும் சரி எமது வன்னி மாவட்டத்திற்கான மருத்துவ சேவை வழங்கலை, சமச்சீராக அணுகுங்கள் என்பதே எம் கோரிக்கை. 

சுதேச மருத்துவ துறையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு காணப்படவேண்டிய 14 சமூக நல மருத்துவர்களில் ஒருவர் மட்டுமே பணியாற்றுகிறார். 13 பணி வெற்றிடங்கள் உள்ளன. மாவட்டம் முழுதும் ஒரேயொரு சமூக நல மருத்துவரைக்கொண்டு எவ்வாறு வினைத்திறனான சேவை வழங்கலை மேற்கொள்ள முடியும்? இது எத்தகைய சமச்சீரற்ற நிலை! 

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான ஐந்து சித்த மருத்துவ சேவை வழங்கும் மருத்துவமனைகளிலும் உள்ள மொத்த அனுமதிக்கப்பட்ட ஆளணி 64. தற்போது இங்கு 40 பணி வெற்றிடங்கள் உள்ளன. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஊழியர் அணியுடனே முல்லைத்தீவு மாவட்ட சித்த மருத்துவ அலகுகள் பணிபுரிகின்றன! 

2025 இன் முதல் எட்டு மாதங்களிலும் சராசரியாக 1000 நோயாளிகளுக்கு மேல் மேற்படி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இன்னமும் அதிகமாக நோயாளிகளை உள்ளீர்த்து சேவை வழங்குவதில் உள்ள முதன்மையான மட்டுப்பாடு குறித்த மருத்துவமனைகளில் உள்ள ஆளணிப்பற்றாக்குறையே. 

சுகாதார அமைச்சர் அவர்களே! 

சுதேச மருத்துவத் துறையில் மருத்துவர் வெற்றிடங்களுடன் மருத்துவமனைச் சூழலுக்கு மிகவும் இன்றியமையாத சுகாதாரத் தொழிலாளர்கள், சுகாதார உதவியாளர்கள், சுகாதார தூய்மை பணியாளர்கள், மர்த்தனவியலாளர் உள்ளிட்ட ஊழியர் வெற்றிடங்களும் உள்ளன.  வடமாகாணம் முழுவதும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான பணி வெற்றிடங்கள் சித்த மருத்துவத்துறையில் உள்ளன. மருத்துவ சேவை வழங்கலின் தரத்தை அதிகரிப்பதற்கு, மேற்படி சேவை நிலையங்களில் உள்ள ஆளணி வெற்றிடங்களை நிரப்புதலும் இன்றியமையாதது. 

எனது முதலாவது கேள்வி! 

இதுவரை ஆயுர்வேத, சித்த, யுனானி பட்டக்கற்கை நெறிகளைக் கற்று, உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்து பணிநியமனங்களுக்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். தற்போது பல்கலைக்கழங்களில் மேற்படி கற்கைநெறிகளை மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கற்று வருகின்றனர். இவர்களும் தங்களுக்கு அரசு வேலைவாய்ப்பை தரும் என்றே நம்பி கற்கின்றார்கள். 

மேற்படியாக ஏழாயிரத்துக்கும் மேற்பட்டுள்ள இப்பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு நீங்கள் அளிக்கும் உறுதி மொழி என்ன? 

படியுங்கள்- அரசிடம் வேலை வாய்ப்பை கோரவேண்டாம் என்பதா? 

படித்து நீங்களாக தனியார் மருத்துவ சேவை நிலையங்களை நடாத்துங்கள் என்பதா? 

அல்லது ஒவ்வோர் ஆண்டும் இத்தனை எண்ணிக்கையிலான அரச பணி வெற்றிட வாய்ப்பு தான் வழங்கப்படும் என்பதா? ஏனெனில், இது தொடர்பில் ஒரு தெளிவான அறிவித்தலை அரசு இதுவரை அவர்களுக்கு வழங்கவில்லை என்றே எண்ணுகிறேன் - என்றார். 

இந்நிலையில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இதற்குப் பதிலளிக்கையில், 

கடந்த 2025.06.30ஆம் திகதிய நிலவரப்படி இலங்கையின் சுதேசமருத்துவசேவையில், குறிப்பாக ஆயுர்வேதம், யுனானி, சித்தம் மூன்று மருத்துவத்துறைகளுக்குமாக 2567 அனுமதிக்கப்பட்ட சுதேச மருத்துவர் ஆளணிகள் காணப்படுகின்றன. இருப்பினும் தற்போது 2065 சுதேசமருத்துவர்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் 502 சுதேசமருத்துவர்களின் வெற்றிடங்கள் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. 

இந்நிலையில் இலங்கை சுதேசமருத்துவசேவையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு முகாமைத்துவசேவைகள் திணைக்களத்திற்கு அனுமதிகிடைத்துள்ளது. 

அந்தவகையில் தற்போது நாட்டில் காணப்படும் 502 சுதேச மருத்துவர் வெற்றிடங்களில், 304 ஆரம்ப சுதேச மருத்துவ அலுவலர் பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச்செய்வதற்கான அமச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அதற்கமைய ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 

குறிப்பாக இந்த 304 சுதேச மருத்துவர் பதவிவெற்றிடங்களும் 2009, 2010, 2011ஆகிய மூன்று கல்வியாண்டுகளில் பட்டப்படிப்பினை நிறைவுசெய்தவர்களைக்கொண்டே நிரப்புவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர்மாதம் 03ஆம்திகதி குறித்த 304 சுதேசமருத்துவ நியமனங்களையும் வழங்கவிருக்கின்றோம். 

இவ்வாறு 304பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டபின்னர் மிகுதியாகவுள்ள வெற்றிடங்களுக்கும் நியமனங்களை வழங்குவோம். 

மேலும் சுதேச மருத்துவத்தில், அதாவது ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம் ஆகிய மூன்று துறைகளிலும் 2021தொடக்கம் 2025ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் 1990பேர் பட்டப்படிப்பினை நிறைவுசெய்து வேலையை எதிர்பார்த்துள்ளனர். 

இதேவேளை குறித்த 2021 தொடக்கம் 2025வரையான காலப்பகுதியில் ஆயுர்வேதம், சித்த மற்றும் யுனானி ஆகிய மருத்துவ பட்டப்படிப்பிற்கென கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரச பல்கலைக்கழகங்களால் மொத்தம் 2,709மாணவர்கள் உள்ளீர்ப்புச் செய்யப்பட்டுள்ளனர். 

அந்தவகையில் நாட்டிலுள்ள எமது சுதேச வைத்தியசாலைக்கட்டமைப்பிற்குள் தற்போதுள்ள அனுமதிக்கப்பட்ட மருத்துவர் ஆளணியைவிட அதிகமான அளவில் சுதேச பட்டதாரிகள் காணப்படுகின்றனர். 

எனினும் தற்போதுள்ள சுதேசமருத்துவர் வெற்றிடங்கள் கணக்கீடுசெய்து அதற்கமையவே ஆட்சேர்புக்கள் செய்யப்படவிருக்கின்றன. பொது அட்டவணைக்கு அமையவே அந்த நியமனங்களை மேற்கொள்ளவுள்ளோம். 

அத்தோடு சுதேச மருத்துவத்துறையின் பணியாட்தொகுதிகளை நியமனஞ்செய்வதுதொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்கள் கோரிக்மைகளை முன்வைத்துள்ளார். குறித்த பணியாட்தொகுதிகளை நியமனஞ்செய்வதற்கும் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

நியமனங்களை மேற்கொள்வதற்கென விண்ணப்பங்களைக்கோருதல், உள்ளீர்த்தல் என்பதற்கு அப்பால் அவர்களுக்கு பயிற்சியளிக்கவேண்டிய தேவையுமுள்ளது. பயிற்சிக்காலம் முடிவுற்றபின்னர் முரண்படுகளின்றி அந்த நியமனங்களை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/228481

இஷாராவை போல ஈஸ்டர் தாக்குதல் கொலையாளிகளை தப்பிக்கவைத்த ஆனந்தன்!

3 months 1 week ago

பாதாள உலக தலைவர் கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி மற்றும், அவருக்கு உதவிய நபர்களிடம் இருந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் திடுக்கிடும் சம்பவமொன்று வெளியாகியுள்ளது.

இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச்சென்ற விடயம் குறித்து அண்மைய நாட்களில் கிளிநொச்சி யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு அவர் தங்கியிருந்த இடங்களை அடையாளம் காட்டியிருந்தார்.

இந்த பின்னணியில் அவரை இந்தியாவுக்கு கடத்த ஆனந்தன் என்ற நபர் உதவியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 

இந்நிலையில் ஆனந்தன் என்பவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பலரை கடல் வழியாக தப்பிச் செல்ல உதவியதாக தெரியவந்துள்ளது.

இஷாராவை போல ஈஸ்டர் தாக்குதல் கொலையாளிகளை தப்பிக்கவைத்த ஆனந்தன்! | Jaffna Man Who Helped Easter Killers Escape

இது தொடடர்பில் தெரிய வருகையில், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியை, யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு மீன்பிடி படகில் ஏற்றிச் சென்ற ஆனந்தன் என்ற பிரதான சந்தேக நபர், தொடர்பில் மேலும் பல தகவல் வெளியாகியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய பல சந்தேக நபர்களையும் கடல் வழியாக தப்பிச் செல்ல ஆனந்தன் என்பவரே ஏற்பாடு செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், உதயபுரம், மூன்றாம் பாதையில் வசிக்கும் 29 வயதான ஏ.பி. ஆனந்தன் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், நேற்று முன்தினம் இரவு கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இந்த சந்தேக நபருக்கு கிளிநொச்சியில் உள்ள சொந்தமான வீட்டில் இருந்து மைக்ரோ வகை துப்பாக்கியையும் கொழும்பு குற்றப்பிரிவு மீட்டுள்ளது. இந்நிலையில் சந்தேக நபர் திஹாரிய, ஒகொடபொலவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்தியாவுக்கு கடத்தும் வலையமைப்பு

பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பிற குற்றவாளிகளை படகு மூலம் இந்தியாவுக்கு கடத்தும் வலையமைப்பின் பின்னணியில் உள்ள மூளையாக ஆனந்தன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இஷாராவை போல ஈஸ்டர் தாக்குதல் கொலையாளிகளை தப்பிக்கவைத்த ஆனந்தன்! | Jaffna Man Who Helped Easter Killers Escape

ஆனந்தன் தனது தம்பிகள் இருவருடன் இணைந்து இந்த மோசடியை செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. கேரள கஞ்சா மோசடி தொடர்பாக அவரது தம்பிகள் இருவரும் தற்போது காவல்துறையின் தடுப்பு காவலில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் வழிகள் வழியாக மேற்கொள்ளப்படும் கேரள கஞ்சா வியாபாரத்திலும் இந்த சகோதரக் குழு ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்தக் குழுவின் தலையீட்டால் சமீப காலங்களில் பிரதான குற்றவாளிகள் மற்றும் பாதாள உலக துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் கடல் வழிகள் வழியாகத் தப்பிச் செல்ல இந்த நபர் உதவி செய்துள்ளதாகவும் கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

அவர் உதவி செய்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சந்தேக நபர்கள் யார் என்பதை மேலும் உறுதிப்படுத்தி வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

https://ibctamil.com/article/jaffna-man-who-helped-easter-killers-escape-1761202503

14 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் கொழும்பு காசல் வீதியில் சுகாதார அமைச்சுக்கு 16 மாடிக் கட்டிடம்

3 months 1 week ago

Published By: Digital Desk 3

23 Oct, 2025 | 03:04 PM

image

சுகாதார அமைச்சிக்கான புதிய 16 மாடி அலுவலக தொகுதியின்  கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவடையும், மேலும் குத்தகை அடிப்படையில் சுகாதார அமைச்சகத்தால் தற்போது இயங்கிவரும் அனைத்து அலுவலகங்களும் புதிய கட்டிடத்தின் முதல் கட்டத்தின் முதல் தளத்தில் நிறுவப்படும். 

கொழும்பில் உள்ள காசல் வீதியிலுள்ள மகளிர் போதனா வைத்தியசாலைக்கு அருகாமையில் கட்டப்பட்டு வரும் சுகாதார அமைச்சின் புதிய 16 மாடி அலுவலக வளாகத்தின் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்வதற்கான சிறப்பு ஆய்வு விஜயத்தின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

WhatsApp_Image_2025-10-23_at_1.53.38_PM.

தற்போது, சுகாதார அமைச்சின் கீழ் உள்ள பல அலுவலகங்கள் குத்தகை அடிப்படையில் ஒரு தனியார் கட்டிடத்தில் இயங்குகின்றன, மேலும் அந்த கட்டிடத்தின் குத்தகை காலத்தை வரும் ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டாம் என்றும், புதிய கட்டிடத்தின் கட்டுமானத்தை விரைவுபடுத்தவும், அந்த அலுவலகங்கள் அனைத்தையும் புதிய கட்டிடத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த புதிய கட்டிட கட்டுமானப் பணிகள் நீண்ட காலமாக முடங்கிக் கிடந்தன. மேலும் அரசாங்க நிதியைப் பயன்படுத்தி கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

375,000 (முந்நூற்று எழுபத்தைந்தாயிரம்) சதுர அடி பரப்பளவைக் கொண்ட இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை முடிப்பதற்கான தற்போதைய மதிப்பிடப்பட்ட செலவு சுமார் 14,000 மில்லியன் ரூபாய் ஆகும். இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கட்டுமானப் பணிகளுக்காக ரூ. 3,000 மில்லியன் ஒதுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது, மேலும் இந்த ஆண்டு இந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளுக்கும் தேவையான தளபாடங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கும் மேலும் ரூ. 1,500 மில்லியன் ஒதுக்க அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, நாட்டில் உள்ள ஒன்றரை இலட்சம் சுகாதார ஊழியர்களுக்கான சேவைகள் மற்றும் நாட்டில் உள்ள சுகாதாரத் துறை தொடர்பான அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் அமைந்துள்ள இந்த கட்டிடத்திலிருந்து விரைவில் நிறுவப்படும்.

தற்போது பல்வேறு இடங்களிலிருந்து சேவைகளை வழங்கி வரும் சுகாதார அலுவலகங்களை ஒரே கட்டிட வளாகத்திற்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பை இது வழங்கும், மேலும் வாடகை அடிப்படையில் பராமரிக்கப்படும் கட்டிடங்களுக்கு செலுத்தப்படும் பெரிய அளவிலான பணத்தையும், போக்குவரத்து மற்றும் பிற சேவைகளுக்கு செலவிடப்படும் பெரிய அளவிலான பணத்தையும் மிச்சப்படுத்தும்.

WhatsApp_Image_2025-10-23_at_1.53.39_PM_

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ, கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலையைக் கவனித்தார். கட்டுமானப் பணிகள் தொடர்பான சேவைகளை வழங்கும் ஒப்பந்த நிறுவனங்களான மத்திய பொறியியல் சேவைகள் நிறுவனம் மற்றும் மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகத்தின் அதிகாரிகளுடன் கட்டுமான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் நீண்ட கலந்துரையாடலை நடத்தினார். 

இந்த முழு கட்டிடத்தின் கட்டுமானத்தையும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டங்களைத் தயாரிக்குமாறு மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகத்திற்கு (CECB) அமைச்சர் தெரிவித்தார்.

இந்த கண்காணிப்பு விஐயம் மற்றும் மற்றும் கலந்துரையாடலில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர், நிபுணர் வைத்தியர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர்கள் சாலிந்த பண்டார, சுனில் கலகம, ஜனக கித்சிறி குணவர்தன, துணை இயக்குநர் தினிப்பிராலய ஹேரத், மத்திய பொறியியல் சேவைகள் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் மத்திய பொறியியல் ஆலோசனை பணியகத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

WhatsApp_Image_2025-10-23_at_1.53.41_PM.

https://www.virakesari.lk/article/228459

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 பாடசாலை மாணவர்கள்!

3 months 1 week ago

Oct 23, 2025 - 02:06 PM -

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 பாடசாலை மாணவர்கள்!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். 

போதைப்பொருள் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினரை அழித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். 

நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் கருத்துக்களைத் தெரிவித்தார். 

"தூக்கிலிடப்பட உள்ள 805 ஆண்கள் சிறையில் உள்ளனர். 

தூக்கிலிடப்பட உள்ள 21 பெண்களும் உள்ளனர். 

தூக்கிலிடப்பட உள்ள 805 பேரில் 5 பாடசாலை மாணவர்களும் அடங்கியுள்ளனர். 

தென் மாகாணம் தான் பாதாள உலக நடவடிக்கைகளில் முதலிடத்தில் உள்ளது. 

இவ்வளவு படித்த சமூகம் கூலிக்கு கொலை செய்யும் சமூகமாக எப்படி மாறியுள்ளது என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. 

எப்படி பாரிய அளவில் போதைப்பொருட்களை கொண்டு வந்து இந்த நாட்டை அழிக்கும் நிலைக்கு அவர்கள் கொண்டு வந்தார்கள். 

இதற்கெல்லாம் மூல காரணம் இந்த நாட்டில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள். அவர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும். 

ஏனென்றால் அவர்கள் ஒரு தேசத்தை அழிக்கிறார்கள். 

எனவே, பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தூக்கிலிடப்பட வேண்டும். அது பாவம் அல்ல." என்றார்.

https://adaderanatamil.lk/news/cmh3640l70165qplpb1ahhitk

செம்மணி புதைகுழி: வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி பெற திட்டம்

3 months 1 week ago

செம்மணி புதைகுழி: வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி பெற திட்டம்

October 23, 2025 11:32 am

செம்மணி புதைகுழி: வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி பெற திட்டம்

”செம்மணி புதைகுழி விவகாரத்தில் சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெறப்படும். ஏனெனில் உண்மையை கண்டறிவதற்கு இது முக்கியம்.” – என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்டுவரும் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” செம்மணி புதைகுழி அகழ்வு நடவடிக்கைக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எமக்கு சில விடயங்களில் ஆய்வுக்கூட வசதி இல்லை. எமது நாட்டு பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படவேண்டும். எமக்கு உண்மையை கண்டறிவதுதான் முக்கியம். தொழில்நுட்ப உதவியும் தேவைப்படுகின்றது. எனவே, சர்வதேச தொழில்நுட்ப உதவி பெறப்படும்.” – என்றார்.

https://oruvan.com/chemmani-massacre-plan-to-seek-foreign-technical-assistance/

2026 முதல் நாடு முழுவதும் முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம்

3 months 1 week ago

2026 முதல் நாடு முழுவதும் முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம்

October 23, 2025 12:16 pm

2026 முதல் நாடு முழுவதும் முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம்

2026 முதல் அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்ட கட்டமைப்பு அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கல்வி மறுசீரமைப்புக்கான பாராளுமன்ற உபகுழுவின் கூட்டம் நேற்று (22) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்த பிரமர், 2026 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்ட அமைப்பு நடைமுறைக்கு வரும் என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, முன்பள்ளி கல்விக்கான பாடத்திட்டக் கட்டமைப்பு ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சுமார் 19,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உத்தியோகபூர்வ பயிற்சித் திட்டம் 2025 நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாகாணத்திலும் இதற்கான ஆசிரியர் பயிற்சிகள் நடத்தப்படவுள்ளதுடன், புதிய பாடத்திட்ட கட்டமைப்பின்படி கற்பித்தல் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் குறிப்பிட்டார்.

மேலும் பிரதமர் வலியுறுத்தியதாவது, எந்தவொரு பாடசாலையும் மூடப்படாது என்பதுடன், பாடசாலைகளை ஒன்றிணைத்து மேம்படுத்துவது தற்போது அரசாங்கத்தின் கொள்கையாகும் எனவும் குறிப்பிட்டார். இது கல்வித் தரத்தை உயர்த்தவும், அனைத்து சிறுவர்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்கவும் நோக்கமாகக் கொண்டது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த பாராளுமன்ற உபகுழுக் கூட்டத்தில், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகள் மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

571116063_1303803955122364_7672368209262571266226_1303804031789023_8479793903610571014712_1303804035122356_5773235622206

https://oruvan.com/single-curriculum-for-pre-schools-across-the-country-from-2026/

மணல்காட்டில் 300 ஏக்கர் காணியை அபகரிக்க முயற்சி; எதிர்ப்பு தெரிவித்த மக்களை மிரட்டிய சிங்களவர்கள்

3 months 1 week ago

மணல்காட்டில் 300 ஏக்கர் காணியை அபகரிக்க முயற்சி; எதிர்ப்பு தெரிவித்த மக்களை மிரட்டிய சிங்களவர்கள்

army-1-780x470.jpg

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மணல்காடு கிராமத்தில் முந்நூறு ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சி மணல்காடு மக்களால் முறியடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

வாகனம் ஒன்றில் வந்த சிங்கள மொழி பேசுபவர்கள் தனியார் காணிகள் உட்பட அரச காணிகள் மற்றும் சமூக காடாக பிரகடனப்படுத்தப்பட்ட சவுக்கமரக்காடு உட்பட 300 ஏக்கர் காணியை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் அபகரிப்பதற்கு நில அளவை செய்வதற்கு முற்பட்டுள்ளனர்.

அங்கு காணி அளவீடு செய்வதனை அவதானித்த கிராம மக்கள் உடனடியாக அவ்விடத்திற்கு சென்று காணியை அளவீடு செய்ய விடாது தடுத்துள்ளனர்.

குறித்த சிங்கள மொழி பேசுபவர்கள் மக்களை மிரட்டும் தொனியில் செயற்பட்டுள்ள நிலையிலும் மக்களின் கடும் எதிர்ப்பினால் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

பின்னர் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு சென்று அங்கிருந்து மீண்டும் அளவீடு செய்யும் நோக்கில் மணல்காடு நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தயாராக நின்றதை அறிந்திருந்தவர்கள் செம்பியன்பற்று பிரதேசத்திலிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிராம மக்கள்,

தம்மில் பலருக்கு குடியிருக்கவே காணிகள் இல்லாத நிலை உள்ளதாகவும், இந்நிலையில் தனியர் நிறுவனம் ஒன்றிற்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலரால் காணிகள் வழங்கப்பட்டமையை  எதிர்ப்பதாகவும் தெரிவித்ததுடன் ஒருபோதும் இவ்விடயத்தை அனுமதிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தனர்.

17611456310.png

17611456311.png

17611456312.png

17611456313.png

17611456314.png

https://akkinikkunchu.com/?p=345677

“இந்தியா- இலங்கை பாலம் சட்டவிரோத செயல்களுக்கு வழிவகுக்கும்” – மல்வத்து பீடாதிபதி எச்சரிக்கை

3 months 1 week ago

“இந்தியா- இலங்கை பாலம் சட்டவிரோத செயல்களுக்கு வழிவகுக்கும் – மல்வத்து பீடாதிபதி எச்சரிக்கை”

October 23, 2025

palk-strait-bridge-jpg.webp

இந்தியா மற்றும் இலங்கைக்கு  இடையிலானா  பாலம் அமைக்கப்பட்டால், சட்டவிரோத செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் உள்ளதாக மல்வத்து விஹாரையின் பீடாதிபதி திபட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை இடையே கடல் வழியாக போதைப்பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விமானப்படைத் தளபதிகாளான  ஏர் மார்ஷல், பந்து எதிரிசிங்க, மல்வத்தை மகா விஹாரைக்கு நேற்று சென்றிருந்தபோது பீடாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  நாட்டில் தற்போது அதிக எண்ணிக்கையிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருவதாகவும், இவை ஏதேனும் காரணத்திற்காக சமூகத்திற்குள் நுழைந்தால், பெரும் பேரழிவுக்கு  வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படும் அதேநேரம், அவற்றை இலங்கைக்குக் கொண்டுவருவதைக் கட்டுப்படுத்த அந்தந்த நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும் என மல்வத்து விஹாரையின் பீடாதிபதி மேலும்  வலியுறுத்தியுள்ளார்.

https://www.ilakku.org/india-sri-lanka-bridge-will-lead-to-illegal-activities/

வடக்கு, கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 500 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிப்பு !

3 months 1 week ago

வடக்கு, கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 500 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிப்பு !

By SRI

25-68c8e6da58bfd.jpg

2025 ஆம் ஆண்டில் இதுவரை வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவப் பயன்பாட்டில் இருந்த 672 ஏக்கர் அரசாங்கக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

இன்று (23) பாராளுமன்றத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

விடுவிக்கப்பட்ட காணிகளில் 86.24 ஏக்கர் தனியார் காணிகளும், இராணுவப் பயன்பாட்டில் இருந்த 586 ஏக்கர் காணிகளும் அடங்குவதாக அவர் கூறினார்.

குறித்த காணிகள் தொடர்பான தகவல்கள், பாதுகாப்புச் சபை மற்றும் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு இந்த விடுவிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.

கிழக்கில் மட்டும் 34.58 ஏக்கர் அரசாங்கக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர கூறினார்.

https://www.battinews.com/2025/10/500.html

யாழ். குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம்

3 months 1 week ago

யாழ். குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம்

sachinthaOctober 23, 2025

23-2.jpg

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊர்காவற்றுறை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்கின்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நயினாதீவு மற்றும் நெடுந்தீவு போன்ற இரண்டு தீவுகளையும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் இணைக்கும் பிரதான சமுத்திர அணுகல் வழியாக குறிகட்டுவான் இறங்குதுறை பயன்படுத்தப்படுகின்றது. இவ் இறங்குதுறை மூலம் குறித்த தீவுகளுக்கு பயணம் செய்கின்ற பயணிகள் மற்றும் பண்டங்கள் போக்குவரத்து படகுச் சேவைகளுக்கான வசதிகள் வழங்கப்படுவதுடன், சமூக ரீதியாக, சமய ரீதியாக மற்றும் நிர்வாக ரீதியாக பரந்துபட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.தற்போது காணப்படுகின்ற இறங்குதுறையானது நீண்டகாலமாக பாரியளவிலான புனரமைப்புக்கள் மேற்கொள்ளப்படாமையால், பாரியளவிலான கட்டமைப்பு ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளது. போக்குவரத்து, யாத்திரிகர் பயணங்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தியில் இறங்கு துறையின் முக்கியத்துவத்தை அடையாளங் கண்டு இடைநிலை வரவு செலவுத்திட்ட சட்டகத்தின் கீழ் குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்கின்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பதில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://www.thinakaran.lk/2025/10/23/breaking-news/159976/யாழ்-குறிகட்டுவான்-இறங்/

காங்கேசன்துறைமுக அபிவிருத்தியில் இந்தியாவின் நிபந்தனைகள் ஆராய்வு

3 months 1 week ago

காங்கேசன்துறைமுக அபிவிருத்தியில் இந்தியாவின் நிபந்தனைகள் ஆராய்வு

1743931966.jpg

காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திக்காக இந்திய அரசு வழங்கும் 62 மில்லியன் டொலர் மானியத்தை அரசாங்கம் இன்னும் இறுதி செய்யவில்லை. கடனிலிருந்து மானியமாக மாற்ற இந்திய அரசு முன்வைத்த நிபந்தனைகள் குறித்து இன்னும் பேச்சுகள் நடந்து வருவதாக துறைமுக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்த துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து துணை அமைச்சர் ஜனிதா ருவான் கொடித்துவக்கு இதுதொடர்பில் தெரிவிக் கையில்.
வடக்கு துறைமுகத்தின் மேம்பாட்டுக் காக இந்தியா 62 மில்லியன் டொல ருக்குமேல் வழங்கியிருந்தாலும், அந்தத்தொகை தற்போது கடனாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கடனை மானியமாக வழங்க இந்திய அரசு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. அந்த நிபந்தனைகள் இன்னும் கலந் துரையாடப்பட்டுவருகின்றன.


இந்தத் திட்டத்தைத் தொடரலாமா வேண்டாமா என்பது குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவை எடுக்க வில்லை. ஒரு துறைமுகம் நிறுவப்படும்போது, அதன் சமூகப்பொருளாதார தாக்கத்தை நாம் கவனிக்க வேண்டும்.
அது உறுதி செய்யப்பட்டவுடன், தேவையான பேச்சுகளைத் தொடங்கி அதற்கேற்ப முன்னேறுவோம் - என்றார்.

https://newuthayan.com/article/காங்கேசன்துறைமுக_அபிவிருத்தியில்_இந்தியாவின்_நிபந்தனைகள்_ஆராய்வு#google_vignette

Checked
Wed, 02/04/2026 - 07:31
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr