ஊர்ப்புதினம்

யாழில். "தீபலோக" தீபாவளி இலக்கிய கலந்துரையாடல் - தெற்கு கலைஞர்களும் பங்கேற்பு

3 months 2 weeks ago

18 Oct, 2025 | 04:11 PM

image

"தீபலோக" தீபாவளி இலக்கிய கலந்துரையாடல், யாழ்ப்பாணத் திருவள்ளுவர் கலாசார மையத்தில்  சனிக்கிழமை (18) நடைபெற்றது.

இந்நிகழ்வில்  புத்தக கண்காட்சியும் இடம்பெற்றதுடன்  புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவனந்தராசா , ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோரும்,  வடக்கு மற்றும் தெற்கு கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

IMG_0583.jpeg

IMG_0541.jpeg

IMG_0534__1_.jpeg

https://www.virakesari.lk/article/228077

இளைஞர்களை பாதாள உலகுக்குத் தள்ளியவர்கள், பயன்படுத்தியவர்கள் யாவர்; ஸ்ரீநேசன்

3 months 2 weeks ago

18 Oct, 2025 | 03:27 PM

image

இலங்கை இளைஞர்களில் ஒரு பகுதியினரை பாதாள உலகத்தினுள் தள்ளியவர்கள், அவர்களைப் பயன்படுத்தியவர்கள்  யாவர் என்பதை அறிய வேண்டியது அவசியமாகும், இது காலத்தின் கட்டாய தேவையாகும். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். 

அவர் சனிக்கிழமை (18) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிகையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

எதிர்காலத் தலைவர்களாக, எதிர்காலத்தை வடிக்கும் சிற்பிகளாக மாற வேண்டிய இளைஞர்களை ஆக்கவழிக்குள் கொண்டு செல்லாமல், அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் அதிகார சத்திகள், அரசியல்வாதிகள் யாவர் என்பதை இனங்காண வேண்டியது அவசியமாகும். அவர்களுக்குரிய தண்டனைகளும் அவசியமாகும்.

பாதாள உலகினுள் தள்ளப்படும் இளைஞர்கள்  கொலை, கொள்ளை, போதைப்பொருள் வணிகம், பாலியல் பலாத்காரங்கள், போன்ற மோசமான பாதகச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ஜனாதிபதிகளாக பதவி வகித்த ஜெயவர்தனா, பிரேமதாச, சந்திரிககா, மகிந்த ராஜபக்ஸ, கோத்தாபாய ராஜபக்ஸ, ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களின் ஆட்சிக் காலங்களில், பாதாள உலக தாதாக்கள் என்னும் எதிர் மறைக் கலாசார சட்ட விரோதர்களும் தமது கைவரிசைகளைக் காட்டி வந்துள்ளனர். 

கோணாகல சுனில், சொத்தி உபாலி, பெத்ததகன சஞ்சீவ, கஜ்ஜா, ஜுலம்பிட்டிய அமரே, சம்பத் மனம்பபேரி, கெகல்பத்ர பத்மே, என்று பல இளைஞர்கள் அரசியல் வாதிகளின் தேவையாளர்களாக இருந்துமுள்ளனர்.

சட்டவிரோத சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு கொல்லப்பட்டும், தண்டிக்கப்பட்டும் உள்ளனர். பொட்ட நவ்பர் என்னும் குடு தாதா தனது சகாவான குடு தெரோசா என்பவருக்குத் தண்டனைத் தீர்ப்பை அளித்தமைக்காக சரத் அம்பேபிட்டிய என்ற மேல் நீதிமன்ற நீதிபதியை தனது கையாட்கள் மூலமாக தெருவில் சுட்டுக்கொன்ற வரலாறும் உண்டு.

மொத்தத்தில் சில அதிகார சக்திகள் அரசியல் வாதிகளால், உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும், பாதாளர்கள் தமது தேவை முடிந்த பின்னர், கைகழுவி விடுகின்றனர்,கொன்றும் விடுகின்றனர்.

வறுமை, கல்வி அறிவின்மை, தொழிலின்மை, பிறழ்வான சூழல் போன்றவற்றால் பாதிக்கப்படும் இளைஞர்கள் யுவதிகள் போதைப்பொருள் வலைப் பின்னல், பாதாள சூனியச்சக்கரம் என்பவற்றால் வீழ்த்தப்பட்டு  சில அரசியல்வாதிகளின் ஏவலாளிகளாக மாறிப்பின்னர், இளவயதிலேயே பலிக்கடாக்கள் ஆகி விடுகின்றனர். 

பலி கொடுப்பவர்கள் அரசியல்வாதிகளாகவும், அரசியல் தலைவர்களாகவும் இருப்பதுண்டு. பெண்கள் மென்மையானவர்கள் என்பார்கள், ஆனால் அவர்களும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு குடு தெரேசா, இசாரா செவ்வந்தி  போன்றவர்கள் உதாரணர்களாவர்.

எனவே, இளைஞர் யுவதிகளை தவறான பாதைகளுக்கு இட்டுச்சென்று அவர்களது எதிர்காலத்தைச் சூனியமாக்கும் அதிகார சக்திகள், அரசியல்வாதிகளையும் சட்டப்பிடியில் இருந்து அரசாங்கம் தப்பவிடக்கூடாது. வளமான நாடு, அழகான வாழ்க்கையை ஏற்படுத்த இதுவும் அவசியமானதாகும் என்றார்.

https://www.virakesari.lk/article/228070

யாழ். போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு நிறைவு – விசேட தபால் தலை வெளியீடு

3 months 2 weeks ago

யாழ். போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு நிறைவு – விசேட தபால் தலை வெளியீடு

written by admin October 18, 2025

02.jpg?fit=1170%2C780&ssl=1

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு சேவையை நினைவு கூர்ந்து, விசேட தபால் தலை (Commemorative Stamp) இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.

அஞ்சல் திணைக்களத்தின் உதவி அஞ்சல் அத்தியட்சகர் நாயகம், வட மாகாண உதவி அஞ்சல் அத்தியட்சகர் நாயகம் மற்றும் அஞ்சல் துணைக் கிளை உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த விசேட தபால் தலையை வெளியிட்டனர்.

  அந்நிகழ்வில் மதத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவானந்தராசா , சி.சிறிதரன் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி , யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம. பிரதீபன் , வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ,வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, 1850ஆம் ஆண்டு “ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை” என்ற பெயரில், அந்த காலத்திய அரசாங்க அதிபர் மற்றும், அவருடைய நண்பர்களுடன் இணைந்து சிறிய அளவில் நிறுவப்பட்டது.

பின்னர், 1907ஆம் ஆண்டு, இவ்வைத்தியசாலைக்கு “யாழ்ப்பாணம் சிவில் வைத்தியசாலை” என்ற புதிய பெயர் வழங்கப்பட்டு, அதன் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டன. அதற்குப் பிறகு, 1956ஆம் ஆண்டு, இது “யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை” என மாற்றப்பட்டது.

1980ஆம் ஆண்டு, இவ்வைத்தியசாலை “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை” (Jaffna Teaching Hospital) என பெயர் மாற்றம் பெற்று, அன்றிலிருந்து அதே பெயரில் தொடர்ந்தும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், எதிர்காலத்தில் “தேசிய வைத்தியசாலை” (National Hospital) என்ற அடிப்படையில் இந்த வைத்தியசாலை உயர்த்தப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 175 ஆண்டு சேவையை நினைவு கூர்ந்து, பல்வேறு விழாக்கள் மற்றும் நிகழ்வுகள் வைத்தியசாலையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

17.jpg?resize=800%2C534&ssl=119.jpg?resize=800%2C534&ssl=121.jpg?resize=800%2C534&ssl=101.jpg?resize=800%2C534&ssl=116.jpg?resize=800%2C534&ssl=118.jpg?resize=800%2C534&ssl=120.jpg?resize=800%2C534&ssl=1

https://globaltamilnews.net/2025/221685/


கடல் வழியாகவே பெருந்தொகையான போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றது - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

3 months 2 weeks ago

கடற்வழியாகவே பெருந்தொகையான போதைப்பொருள் கடத்தப்படுகின்றது

Oct 18, 2025 - 05:33 PM -

கடற்வழியாகவே பெருந்தொகையான போதைப்பொருள் கடத்தப்படுகின்றது

இலங்கைக்கு கடற்வழியாகவே பெருந்தொகையான போதைப்பொருள் கடத்தப்படுகின்றது. எனவே, இந்த போதைப்பொருள் மாபியாவுக்கும் முடிவு கட்டப்பட்டு வருகின்றது. இதற்குரிய நடவடிக்கையின் போது கடற்றொழிலாளர்களும் பாதுகாப்பு தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடலட்டை சங்க பிரதிநிதிகளுடனான கூட்டம் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (18) நடைபெற்றது.

இதன்போது, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன், பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், வட பிராந்திய கட்டளைத்தளபதி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கடலோரப் பாதுகாப்பு திணைக்களம், கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், இலங்கை கடற்றொழில் துறைமுக கூட்டுத்தாபனம், தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை (NARA), இலங்கை தேசிய நீர் உயிர் இன வளர்ப்பு அதிகார சபை (NAQDA) ஆகியவற்றின் அதிகாரிகளும், யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது வடக்கு கடற்றொழிலாளர்களுக்காக அரசாங்கத்தால் கடந்த ஒருவருட காலப்பகுதிக்குள் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் பற்றியும், எதிர்கால இலக்குகள் சம்பந்தமாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.

துறைமுகங்களை நவீனமயக்காமல், நவீன மீன்பிடி முறை உள்ளிட்ட நடவடிக்கைகள்மூலம் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

அரசியல் பலம் மூலம் காரியங்களை சாதித்தது அந்த காலம். எனவே, கடல் அட்டை பண்ணை நடவடிக்கை உட்பட கடற்றொழில் சார்ந்த நடவடிக்கைகளின்போது அனைத்து நடவடிக்கைகளும் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு அமையவே இடம்பெறும். அரசியல் விளையாட்டு இங்கு எடுபடாது எனவும் அமைச்சர் திட்டவட்டமாக அறிவித்தார்.

அத்துடன், எமது கடற்றொழிலாளர்களை சில போதைப்பொருள் மாபியாக்கள், போதைப்பொருள் கடத்தலுக்காக பகடைக்காய்களாக பயன்படுத்துவதற்கு முற்படுகின்றனர். அந்த மாபியாக்களின் வலைகளில் நாம் சிக்கிவிடக்கூடாது. ஆசை வார்த்தைகளை நம்பிவிடக்கூடாது.

சட்டவிரோத நடவடிக்கையென்பது எப்போதும் ஆபத்தானதாகவே இருக்கும். எனவே, போதைப்பொருள்களை முடிவுகட்டுவதற்குரிய அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் வேலைத்திட்டத்துக்கு கடற்றொழிலாளர்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

கடல்மார்க்கமாகவே அதிகளவு போதைப்பொருள் கடத்தப்படுகின்றது. எனவே, கடற்றொழிலாளர்களை அந்த கும்பல் இலகுவில் இலக்கு வைக்கலாம். இது பற்றி மீனவ அமைப்புகள் விளிப்பாக இருக்க வேண்டும். தமது தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக இருந்தால் சட்டத்தன் பிடிக்குள் இருந்து தப்ப முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அதேவேளை, இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஓரிரு அத்துமீறல்களே இடம்பெறுகின்றன. இப்பிரச்சினை முழுமையாக தீர்ப்பதற்குரிய இராஜதந்திர மட்டத்திலான முயற்சிகள் இடம்பெறுகின்றன. அதேபோல கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு என்பவற்றை வலுப்படுத்துமாறு நான் கடற்படையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmgw8btx4012zo29n56c5jqbd

IMF நிதி வசதி திட்டத்தில் உறுதியாக இருக்க இலங்கைக்கு வலியுறுத்தல்

3 months 2 weeks ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இலங்கை தற்போதைய சர்வதேச நாணய நிதிய நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, எதிர்காலத்தில் சீர்திருத்தங்கள் முக்கியமானவை என்று அதன் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்பிங் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்தக் கூட்டங்களுக்கு இணையாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அத தெரணவுக்காக நியூயோர்க்கில் இருக்கும் இந்தீவரி அமுவத்த கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அதன் பிரதிநிதிகள் இந்தக் கருத்தை வெளியிட்டனர்.

அங்கு கருத்து தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்பிலிங்,

"நாங்கள் ஒரு படி பின்னோக்கிப் பார்த்தால், பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அதன் பலனாக இப்போது மிகவும் வலிமையான வளர்ச்சி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 5% வளர்ச்சி. இந்த ஆண்டு அது 4.2% ஆக இருக்கும் என்று நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு அது 3% ஆக மாறுவதற்கான ஆற்றல் உள்ளது. இந்த நேரத்தில் கொடுக்கக்கூடிய மிக முக்கியமான அறிவுரை என்னவென்றால், அதிக பலன்களைப் பெறுவதற்கு இந்தத் திட்டத்தை மேலும் தொடர்வது முக்கியம். அப்போது வளர்ச்சி வரும். அது தொடர்ந்து நடைபெறும். இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு முக்கியமானது என்னவென்றால், வரவுசெலவுத் திட்டத்தில் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதில் பொது நிதி ஒருங்கிணைப்பு ஒரு முக்கிய பங்கைக் வகிக்கும். அத்துடன், பொது நிறுவனங்களின் சாத்தியக்கூறுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்தப் பலன்கள் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க இது மிகவும் அவசியம்" என்று கூறினார்.

https://adaderanatamil.lk/news/cmguydd6m0122qplp7sj20x4o

கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை

3 months 2 weeks ago

கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை

adminOctober 17, 2025

suresh-premachanran.jpg?fit=1170%2C659&s

மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதில் தாங்கள் போட்டியிடுவோம் என கூறுகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் , பிறகு 13ஆம் திருத்த சட்டத்தை அடியோடு மறுக்கிறோம் என்கின்றனர். அதனால் அவர்களுக்கு அது தொடர்பில் சரியான கருத்து இல்லை என்பதே உண்மை என  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே ஒரு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

சவிற்ஸ்லாந்தில் இடம் பெற்ற சமஸ்டி தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது சுவிஸ் அரசாங்கம் சமஸ்டித் தீர்வினை தமிழ் மக்களுக்கு வழங்க இருப்பது போன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்

ஆனால் உண்மை அதுவல்ல அங்கே பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் தலைவர்களை சுவிஸ் அரசாங்கம் அழைத்தது சமஸ்டி தொடர்பான ஒரு கற்பிதத்தை வழங்குவதற்கு மாத்திரமே தவிர வேறு எதற்கும் அல்ல.

அங்கு அதிகம் வந்தவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் எனவே அவர்கள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் முன்வைக்கப்பட்ட யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விடயங்களை முன் கொண்டு செல்வதாக தெரிவித்தார்கள்.

ஆனால் அது தொடர்பான எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை எனவே இதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அத்துடன் 13 ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி எமக்கு கிடைக்கின்ற குறைந்தபட்ச அதிகாரமான மாகாண சபை தேர்தலை நடத்தி அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.  அதனால் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாங்கள் அதிலே போட்டியிடுவோம். தேர்தல் தொடர்பில் பேசப்பட வேண்டும் என்று கூறுகிற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் 13ஆம் திருத்தச் சட்டம் தேவை இல்லை என கூறி வருகின்றனர். எனவே இது தொடர்பில் அவர்களுக்கு சரியான கருத்துக்கள் இல்லை என்றார்.

https://globaltamilnews.net/2025/221656/

வலி. வடக்கில் காணிகளை விடுவிப்பதாக கூறி, ரேடார் அமைக்கவும், வைத்தியசாலை அமைக்கவும் காணிகளை சுவீகரிக்க முயற்சி

3 months 2 weeks ago

Published By: Vishnu

17 Oct, 2025 | 08:37 PM

image

மக்களுடைய காணி மக்களுக்கே என கூறி ஆட்சி அமைத்தவர்கள் வீதியை மாத்திரம் திறந்து விட்டு, காணிகளை கையளித்தது போன்றதான மாயையை உருவாக்கியுள்ளனர் என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

வலி, வடக்கில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். 

மக்களின் காணிகளை மக்களுக்கே கையளிப்போம் என ஆட்சி அமைத்தவர்கள், இன்று ஆட்சி அமைத்து ஒரு வருட காலம் கடந்து காணிகளை மக்களிடம் கையளிக்கவில்லை. 

கடந்த அரசாங்கம் கையளிக்க தயாராக இருந்த காணிகளையே அவர்கள் ஆட்சிக்கு வந்து சில நாட்களில் மக்களிடம் கையளித்தனர். 

யாழ்ப்பாணம் - பலாலி வீதியை முழுமையாக திறந்து விட்டதன் ஊடாக உயர்பாதுகாப்பு வலயமாக உள்ள பலாலி காணிகளை விடுவித்தது போன்று காட்டுகின்றனர். 

பலாலி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் கடந்த 35 வருட காலத்திற்கு மேலாக வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களின் சொந்த இடங்கள் இன்னமும் இராணுவ கட்டுப்பாட்டில் காணப்படுகிறது. அவர்கள் தங்கள் காணிகளை விடுவிக்குமாறு தொடர்ந்து போராடி வருகின்றனர். 

பலாலி இராணுவ வைத்தியசாலையை சூழவுள்ள பகுதியில் உள்ள தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி வைத்தியசாலை கட்டடங்களை இராணுவத்தினர் கட்டி வருகின்றனர்.

தற்போது போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த கீரிமலையில் ரேடார் அமைக்க போவதாக கூறி 2 ஏக்கர் தனியார் காணியை கடற்படை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கிறது.

ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியது போன்றே மக்களின் காணி மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என மேலும் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/228027

இராணுவ ஆயுதக் களஞ்சியங்களை பார்வையிட்டார் பாதுகாப்பு பிரதி அமைச்சர்

3 months 2 weeks ago

17 Oct, 2025 | 03:58 PM

image

(எம்.மனோசித்ரா)

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இராணுவத்தின் முக்கிய வெடிமருந்து மற்றும் ஆயுத களஞ்சிய நிலையங்களைப் பார்வையிட்டுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) மற்றும் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆகியோரும் இதில் கலந்துக் கொண்டனர்.

இதன் போது, பிரதி அமைச்சர் வெடிமருந்து களஞ்சிய தொகுதிகளை ஆய்வு செய்ததுடன், அந்த வளாகத்தின் தற்போதைய செயற்பாடு மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பாய்வு செய்தார். சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்ட உயர்மட்டக் கூட்டத்திற்கும் அவர் தலைமை தாங்கினார்.

இதன்போது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துதல், அவசரகால நிலைமைகளுக்கு முகம் கொடுக்க தேவைப்படும் திட்டங்களை உருவாக்குதல், வெளிப்புற நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், சீரான செயற்பாடு, பொறுப்புக்கூறல் மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தை உறுதி செய்வதற்காக நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல முக்கியமான விடயங்கள்  தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சு, ஏனைய சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் சேர்ந்து, அதன் தேசிய நோக்கங்களுக்கு ஏற்ப நாடலாவிய ரீதியில்  உள்ள அனைத்து இராணுவ வசதிகளிலும் பாதுகாப்பைக் கண்காணிக்கவும், மதிப்பிடவும், மேம்படுத்தவும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2025-10-17_at_12.52.12.jp

WhatsApp_Image_2025-10-17_at_12.52.12__1

https://www.virakesari.lk/article/227993

மந்திரிமனையின் கூரைகளை அகற்றும் பணிகளில் தொல்லியல் திணைக்களம்!

3 months 2 weeks ago

17 Oct, 2025 | 04:13 PM

image

யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை நிலவும் நாட்களில் மந்திரிமனை மேலும் சேதமடையாதிருக்க, மந்திரிமனையின் வாயிற்பகுதியில் உள்ள கூரைகள் அகற்றப்பட்டு, அவற்றை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

அகற்றப்படும் பொருட்களை பாதுகாப்பாக பேணி, மழைக்காலம் முடிவடைந்த பின்னர் மீள பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2__6_.jpg

கடந்த மாதம் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக மந்திரிமனையின் பாகமொன்று இடிந்து விழுந்தது. 

முன்னதாக, சேதமடைந்து காணப்பட்ட அப்பகுதி மேலும் இடிந்து விழாமல், அதனைக் காப்பாற்றுவதற்காக இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டது. இந்நிலையில், அந்த இரும்புக் கம்பிகளை திருடர்கள் திருடிச் சென்றமையால், பாதுகாப்பின்றி இருந்த மந்திரிமனையின் குறித்த பாகம் கடந்த மாதம் இதே நாளில் மழைக்கு காரணமாக இடிந்து விழுந்தது. 

அதன் பின்னர், ஏனைய பாகங்கள் இடிந்து விழாமல் பாதுகாக்க, மீண்டும் இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டன. 

இந்நிலையில், தற்போது யாழ்ப்பாணத்தில் மழைக் காலம் தொடங்கியுள்ளமையால், மந்திரிமனையின் மேல் கூரைகளின் பாரத்தால், சுவர்கள் இடிந்து விழும் அபாயம் காணப்படுகிறது. இதன் காரணமாக, கூரைகளை அகற்றும் நடவடிக்கைகளை தொல்லியல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது. 

இந்த மந்திரிமனை அமைந்துள்ள நிலப்பகுதி தனியார் ஒருவருக்கு சொந்தமாக காணப்படுவதால், அதனை புனரமைக்க அவர் கடந்த காலங்ககளில் சம்மதம் தெரிவிக்காதமையாலேயே மந்திரிமனை கடந்த காலங்களில் புனரமைக்கப்படவில்லை என தொல்லியல் திணைக்களம் கூறியிருந்தது. 

தற்போது மந்திரிமனையின் வாயில் பகுதியில் உள்ள கூரைகளை அகற்ற குறித்த உரிமையாளர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவற்றை தற்காலிகமாக அகற்றி பாதுகாப்பாக வைத்திருந்து, மழைக்காலம் முடிந்த பின்னர், மீள பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியுடன் தொல்லியல் திணைக்களம் கூரைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. 

2__7_.jpg

2__5_.jpg

2__4_.jpg

2__2_.jpg

2__3_.jpg

https://www.virakesari.lk/article/228012

இந்தியாவில் பிரதமர் ஹரிணி படித்த கல்லூரியில் அவரது பெயரில் புதிய ஆய்வு கூடம் !

3 months 2 weeks ago

17 Oct, 2025 | 03:22 PM

image

( இணையத்தள செய்திப் பிரிவு )

இந்தியாவின் டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியின் (Hindu College) புதிய ஆய்வுக் கூடம் ஒன்றுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவிற்கு அண்மையில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். 

இதன்போது பிரதமர் ஹரிணி, சமூகவியல் இளங்கலைப் பட்டத்தைப் பூர்த்தி செய்த டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரிக்கு (Hindu College) விஜயம் செய்திருந்தார். 

இந்த விஜயத்தின் போது டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியின் (Hindu College) புதிய ஆய்வுக் கூடத்திற்கு "ஹரினி அமரசூரிய சமூக மற்றும் இனவியல் ஆய்வுக் கூடம்" (Harini Amarasuriya Social & Ethnographic Research Lab) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதன்போது பிரதமர் ஹரிணி, தான் கல்வி கற்ற டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியின் (Hindu College) வகுப்பறைகளை பார்வையிட்டு, மாணவியாக இருந்த காலத்தைப் பற்றி நினைவு கூர்ந்து மகிழ்ந்தார்.

அத்துடன், மாணவியாக இருந்த தனது காலத்தை நினைவுகூர்ந்து தனது எண்ணங்களை அங்கு கூடியிருந்தவர்களுடன் பகிர்ந்துகொண்டார். இந்து கல்லூரியில் தான் பெற்ற கல்வியானது, கல்விப் பயணம், சமூக நீதி, சமத்துவம் மற்றும் கல்விச் சீர்திருத்தம் மீதான தனது வாழ்நாள் அர்ப்பணிப்பை எவ்வாறு வடிவமைத்தது என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

அவ் வரவேற்பு விழாவில் கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றிய பிரதமர், "கல்வி என்பது வெறுமனே தமது எதிர்காலத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்கானது மட்டுமல்ல, மற்றவர்களின் எதிர்காலத்தை மாற்றுவதற்கு நம்மைத் தயார்படுத்துவதுமாகும்" எனக் குறிப்பிட்டார். அத்துடன், அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவம்மிக்க சமூகங்களை உருவாக்குவதில் கருணை, ஜனநாயகம் மற்றும் செயல் திறன் மிக்க குடிமகனாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

இந்து கல்லூரி விஜயத்தை அடுத்து பிரதமர், 2015 ஆம் ஆண்டில் திட்டமிடல் ஆணைக்குழுவிற்குப் பதிலாக நிறுவப்பட்ட, இந்திய அரசின் கொள்கை அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (NITI Aayog) விஜயம் செய்தார்.

இந்த விஜயத்தில், கல்வி, புத்தாக்கம் மற்றும் அரச நிர்வாகம் ஆகியவற்றில் இந்தியாவின் கொள்கை மற்றும் நிறுவனச் சீர்திருத்தங்களைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை தற்போது தனது புதிய கல்விச் சீர்திருத்தத்தை செயல்படுத்தத் தயாராகி வருவதால், NITI Aayog அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான மேற்பார்வைப் பயணம் மூலமும் Atal Innovation Mission (AIM) மற்றும் கல்வித் துறையில் ஆய்வு, படைப்பாற்றல் மற்றும் டிஜிட்டல் கற்கை முறைகளை வலுவூட்டுவதற்கான அதன் அணுகுமுறை உட்பட இந்தியாவின் மாற்றம் பற்றிய அனுபவங்கள் மீதும் பிரதமர் கவனம் செலுத்தினார்.

WhatsApp_Image_2025-10-17_at_11.10.59__1

WhatsApp_Image_2025-10-17_at_11.10.58.jp

WhatsApp_Image_2025-10-17_at_11.10.55.jp

WhatsApp_Image_2025-10-17_at_11.10.59.jp

WhatsApp_Image_2025-10-17_at_11.10.55__2

WhatsApp_Image_2025-10-17_at_11.10.55__1


இந்தியாவில் பிரதமர் ஹரிணி படித்த கல்லூரியில் அவரது பெயரில் புதிய ஆய்வு கூடம் ! | Virakesari.lk

அடையாளத்தை பாதுகாக்க வேலணையில் நாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான விதைகள்!

3 months 2 weeks ago

17 Oct, 2025 | 05:02 PM

image

தீவகத்தின் அடையாளத்தை பாதுகாத்து பசுமையை உருவாக்கவும், பனைமரங்களின் பாதுகாப்பை உறுதி செய்து  நன்னீர் வளங்களைப் பாதுகாக்கவும்  வேலணை பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பனம் விதைகள் நாட்டப்பட்டன.

குறித்த திட்டம், இன்று காலை வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

அல்லையூர் இளைஞர்களின் ஏற்பாடில் வேலணை பிரதேச செயலகம் மற்றும் வேலணை பிரதேச சபை ஆகியவற்றின் அனுசரணையுடன் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் , பிரதேச சபையின் உறுபினர்கள், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் இளைஞர்கள்  என பலர் கலந்துகொண்டு பனம் விதைகளை நாட்டியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.


அடையாளத்தை பாதுகாக்க வேலணையில் நாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான விதைகள்! | Virakesari.lk

தலைமறைவாக இருந்த “தொட்டலங்க கன்னா” கைது!

3 months 2 weeks ago

17 Oct, 2025 | 03:34 PM

image

பொலிஸாரிடமிருந்து தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான “தொட்டலங்க கன்னா” என்பவர் கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார். 

“தொட்டலங்க கன்னா” என்பவர் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி 39.99 கிராம் ஹெரோயினுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். 

பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் “தொட்டலங்க கன்னா” என்பவர் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் அவருக்கு எதிராக ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டிருந்தது.

அத்துடன் தலைமறைவாக உள்ள “தொட்டலங்க கன்னா” என்பவரை தேடி கண்டுபிடித்து கைதுசெய்து தண்டனைக்குட்படுத்துமாறும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

 இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது “தொட்டலங்க கன்னா” என்பவர் கொழும்பு கொட்டாஞ்சேனையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தலைமறைவாக இருந்த “தொட்டலங்க கன்னா” கைது! | Virakesari.lk

கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்

3 months 2 weeks ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்களது திட்டமிட்ட விமான புறப்படும் நேரத்திற்கு நான்கு (04) மணிநேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்குள் நுழைந்து பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இச்செயல்முறை, பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்கும் விமான நிலையத்தினுள் பயணிகள் போக்குவரத்தைச் சீராகச் செய்வதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், இந்த காலம் 3 மணி நேரத்திற்கு முன்னதாக காணப்பட்டது.

https://adaderanatamil.lk/news/cmguh67ze0129o29nsvhmes6m

இந்திய - இலங்கை பிரதமர்கள் சந்தித்து பேச்சு

3 months 2 weeks ago

Published By: Digital Desk 3

17 Oct, 2025 | 04:38 PM

image

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வெள்ளிக்கிழமை (17) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில்,

இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், புதுமை, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடினோம். நெருங்கிய அண்டை நாடுகளாக, நமது இரு நாட்டு மக்களின் செழிப்புக்கும், பகிரப்பட்ட பிராந்தியத்திற்கும் நமது ஒத்துழைப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என பதிவிட்டுள்ளார்.

G3dMVXNXcAAEi_b.jpg

G3dMTKRWoAAPRl0.jpg

G3dMUOPXEAAeUbh.jpg

https://www.virakesari.lk/article/228017

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் மோசடி

3 months 2 weeks ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கும் மோசடியில் ஈடுபட்ட மூவர் நேற்று (16) கைது செய்யப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணைகளில், சந்தேகநபர்கள் பேஸ்புக் கணக்குகளில் வெளியிடப்படும் பதிவுகளைப் பயன்படுத்தி இந்த மோசடியை மேற்கொண்டு, அதன் மூலம் பெறப்படும் பணத்தைப் பயன்படுத்தி போதைப்பொருள் உட்கொள்வது தெரியவந்துள்ளது.

புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படங்களைப் பயன்படுத்தி, இந்தக் குழு போலி பேஸ்புக் கணக்குகளை நிர்வகித்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது.

இந்தக் கணக்குகளில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி தேவை எனக் கூறி பதிவுகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதனை பார்த்து உணர்ச்சிவசப்பட்டவர்கள் நிதி உதவிகளை வழங்கியுள்ளனர்.

ஆனால், அந்தக் குழந்தைகளின் உறவினர்கள், பேஸ்புக்கில் பரவிய அந்தப் பதிவுகளைப் பார்த்து, விசாரணை செய்து, தங்கள் குழந்தைக்கு உதவி தேவையில்லை என அறிவித்துள்ளனர்.

நிதி உதவி வழங்கிய ஒருவர் இது தொடர்பாக முறைப்பாடு அளித்ததை அடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணைய கண்காணிப்பு மற்றும் புலனாய்வு பிரிவின் ஊடாக பேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தொழில்நுட்ப தரவுகளைப் பெற்று, சமீபத்தில் விசாரணைகளை ஆரம்பித்தது.

அதன் விளைவாக, மோசடியாக நிதி சேகரிக்கும் சிலருக்கு சொந்தமான ஆறு பேஸ்புக் கணக்குகள் கண்டறியப்பட்டன.

அதில், புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இலக்காகக் கொண்டு, நீண்ட காலமாக பணம் ஈட்டிய மோசடி ஒன்று செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

இதற்கு முன்னர், போலி கணக்குகளுக்கு பணம் செலுத்திய பல நன்கொடையாளர்களிடமிருந்து பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த மோசடியை மேற்கொண்ட மூவர் ஓபநாயக்க மற்றும் ரக்வானை பகுதிகளில் நேற்று கைது செய்யப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணைகளில், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்காக பிராரத்தனை செய்யுமாறு பல்வேறு நபர்கள் வெளியிடும் பதிவுகளின் தகவல்களைப் பயன்படுத்தி, மோசடிக்காரர்களின் வங்கிக் கணக்கு விபரங்களைச் சேர்த்து பதிவுகளை உருவாக்கி, பணம் சேகரித்தது தெரியவந்துள்ளது.

அந்தப் பதிவுகளைப் பார்க்கும் மக்கள், குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு பணம் செலுத்திய நிலையில், மோசடிக்காரர்கள் அந்தப் பணத்தை தினசரி எடுத்து, போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.

சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

https://adaderanatamil.lk/news/cmgu7gom40121o29nvy4k24ym

தமிழ்த் தேசியப் பேரவை அடியோடு குலைகின்றது; ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் கஜேந்திரகுமார் எம்.பி. கடும் அதிருப்தி!

3 months 2 weeks ago

தமிழ்த் தேசியப் பேரவை அடியோடு குலைகின்றது; ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் கஜேந்திரகுமார் எம்.பி. கடும் அதிருப்தி!

1242407381.JPG

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை மையப்படுத்திய அரசியலமைப்பின் 13ஆம் திருத்தந்தை யைப்படுத்திய மேற்கொள்வதைத் தொடர்ந்து, அந்தக் கூட்டணியுடனான அரசியற் கூட்டில் (தமிழ்த் தேசியப் பேரவை) இருந்து வெளியேறுவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகள் 13ஆவது திருத்தத்தை முற்றாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பில் அவர்கள் தமக்குள் ஒன்றுகூடிக் கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளனர். இதையடுத்தே, தமிழ்த் தேசியப் பேரவையை உருவாக்கும் போது செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு முரணாக அந்தக் கட்சிகள் நடந்துகொண்டதாகக் கருதி, பேரவையில் இருந்து வெளியேறுவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளார். அதில், பேரவையில் பங்காளித்தரப்பாக உள்ள ஜனநாயகத்தமிழ்த் தேசியக் கூட்டணியினரின் செயற்பாட்டில் அதிருப்தி தெரிவித்ததுடன், கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்ததாவது:-
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்து 13ஆவது திருத்தம் தொடர்பில் கதைத்துள்ளனர். நாங்கள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக்கூட்டணியோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஒற்றையாட்சி முறைக்குள் தமிழ்த் தேசிய அரசியலை நடத்துவதற்கு இடமில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அத்துடன், 13ஆவது திருத்தம் தமிழர்களுக்கான தீர்வல்ல, 'ஏக்கிய ராஜ்ஜிய' யோசனைகளுக்கும் இடமில்லை என்றும் தெளிவாகக் கூறியுள்ளோம். இவற்றுக்கெல்லாம் இணங்கியே ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினர் எம்முடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டனர். ஆனால். எங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு முரணாகவே தற்போது அவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் எம்முடன் ஒப்பந்தத்தைச் செய்துகொண்டு எம்மூடாகப் பதவிகளைப் பெற்றுவிட்டு தற்போது ஒப்பந்தங்களுக்கு முரணாகச் செயற்படுகின்றமையை ஏற்க முடியாது. என்பதுடன், இந்தச் செயற்பாட்டை அவர்கள் தாமாகவே ஒப்பந்தத்தில் இருந்து விலகிய செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

நாங்கள் மீண்டும் மீண்டும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினருக்கு வலியுறுத்துவது என்னவென்றால், தமிழ் மக்களுக்கு மோசமான தீங்குகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளைச் செய்யாதீர்கள் என்பதே. இந்தச் செயற்பாடுகள் சுமந்திரன் போன்றோரின் தமிழர் விரோதச் செயற்பாட்டை வலுப்படுத்துவதாகவே அமைந்துவிடும் என்றார்.

https://newuthayan.com/article/தமிழ்த்_தேசியப்_பேரவை_அடியோடு_குலைகின்றது;_ஜனநாயகத்_தமிழ்த்_தேசியக்_கூட்டணியில்_கஜேந்திரகுமார்_எம்.பி._கடும்_அதிருப்தி!

கொழும்பு துறைமுக மனித புதைகுழியின் அகழ்வு நிறைவு, நூற்றுக்கும் மேற்பட்ட மனித எலும்புகள் மீட்பு

3 months 2 weeks ago

Published By: Vishnu

17 Oct, 2025 | 03:52 AM

image

கொழும்பு துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் மீட்கப்பட்ட புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரின் உயர் பாதுகாப்பு வலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்மசிங்கவின் ஆட்சிக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி தொடர்பான வழக்கு, 2025 ஒக்டோபர் 13 திங்கட்கிழமை கொழும்பு நீதவான் கசுன் காஞ்சன திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புகள் குறித்து வைத்திய பகுப்பாய்வை ஆரம்பிக்குமாறு விசேட சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகேவுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அகழ்வாய்வில் இருந்து மீட்கப்பட்ட குறைந்தது 106 பேரின் மனித எலும்புகள் ஏற்கனவே குற்றக் காட்சி விசாரணை பொலிஸாரின் (SOCO) காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் நீதிமன்றம் மூலம் பகுப்பாய்வுக்காக ஒப்படைக்கப்பட உள்ளன.

கொழும்பு துறைமுகத்தில் அகழ்வாய்வுப் பணிகள் விசேட தடயவியல் சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகே மற்றும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் சோமதேவ ஆகியோரால் நடத்தப்பட்டன.

ஒக்டோபர் 13 ஆம் திகதி நீதிமன்றத்தில், எதிர்கால வைத்திய பகுப்பாய்வு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டுமென பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வோஷான் ஹேரத் கோரிக்கை விடுத்தார்.

நீதிபதி 2025 நவம்பர் 28 ஆம் திகதி வழக்கை மீண்டும் விசாரிக்க திகதி நிர்ணயித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்குச் செல்லும் புதிய அதிவேக வீதியை நிர்மாணிப்பதற்காக பூமியைத் அகழ்ந்தபோது ஜூலை 13, 2024 அன்று அந்த பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய செயலக வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன.

இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்த பின்னர், கொழும்பு புதுக்கடை மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்கவின் உத்தரவின் பேரில், செப்டெம்பர் 5, 2024 அன்று அந்த இடத்தில் அகழ்வாய்வு பணிகள் ஆரம்பமாகின.

தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட கொழும்பு துறைமுக மனித புதைகுழியிலிருந்து குறைந்தது 106 பேரின் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இது நாட்டில் இதுவரை அகழ்வாய்வு செய்யப்பட்ட நான்காவது பெரிய மனித புதைகுழியாக பதிவாகியுள்ளது.

https://www.virakesari.lk/article/227935

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய பொலிஸ் திணைக்களம் செயற்படுகிறது - நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

3 months 2 weeks ago

16 Oct, 2025 | 03:32 PM

image

(இராஜதுரை ஹஷான்)

பொலிஸ் திணைக்களம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகிறது.ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவதற்காக பொலிஸார் முறையற்ற வகையில் செயற்பட்டால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மெதிரிகிரிய பகுதியில் புதன்கிழமை (15) இரவு நடைபெற்ற பொதுமக்களுடனான சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

பாதாள குழுக்களை கைது செய்வதாகவும், போதைப்பொருட்களை கைப்பற்றுவதாகவும் அரசாங்கம் குறிப்பிடுகிறது.ஆனால் சுங்கத்தில் இருந்து பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பற்றி ஏதும் குறிப்பிடுவதில்லை.

அனைத்து குற்றங்களையும் ராஜபக்ஷர்கள் மீது சுமத்துவதையே இந்த அரசாங்கம் பிரதான கொள்கையாக கொண்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கமும் இவ்வாறே செயற்பட்டது.இறுதியில் நாட்டு மக்கள் நெருக்கடிக்குள்ளானார்கள்.

இந்த அரசாங்கமும் எம்மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.அந்த குற்றச்சாட்;டுக்களை சட்டத்தின் முன் நிரூபித்து உண்மையை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட வேண்டிய தேவை எமக்கு உள்ளது.

பொலிஸ் திணைக்களம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகிறது.ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவதற்காக பொலிஸார் முறையற்ற வகையில் செயற்பட்டால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும்.

மாகாணசபைத் தேர்தல் பற்றி பேசப்படுகிறது. நாங்கள் எந்தத் தேர்தல்களுக்கும் தயார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மாகாணசபைத் தேர்தலை ஜனநாயக ரீதியில் நடத்தினார்.ஆகவே தேர்தலை கண்டு நாங்கள் அச்சமடைய போவதில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/227892

வரி வருவாயில் சுங்கத்துறை புதிய சாதனை!

3 months 2 weeks ago

New-Project-205.jpg?resize=750%2C375&ssl

வரி வருவாயில் சுங்கத்துறை புதிய சாதனை!

இலங்கை சுங்கத்துறை, 2025 ஒக்டோபர் 15 அன்று 2,470 மில்லியன் ரூபாவை வசூலித்து.

இது இதுவரை இல்லாத அளவிலான ஒரு நாள் வரி வருவாயை பதிவு செய்த சந்தர்ப்பம் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது. 

சுங்க பணிப்பாளர் ஜெனரலின் கூற்றுப்படி, இந்த ஆண்டு இதுவரை வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் 1,867 பில்லியன் ரூபாவாகும்.

இதனால், சுங்கத்துறை அதன் வருடாந்திர இலக்கான ரூ. 2,115 பில்லியனைத் தாண்டும் பாதையில் செலுத்துகிறது.

இதற்கு வாகன இறக்குமதி வரிகள் முக்கிய வருமான ஆதாரமாக இருப்பதாகவும், அவை சுங்க வருவாயில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2025/1450559

தொலைபேசியூடான உடனடி கடன் சேவை குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

3 months 2 weeks ago

New-Project-203.jpg?resize=750%2C375&ssl

தொலைபேசியூடான உடனடி கடன் சேவை குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

இணையத்தளங்கள் அல்லது கைத் தொலைபெசிகள் ஊடாக கவனத்தை ஈர்க்கும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டு அல்லது நேரடி தொலைபேசி அழைப்புகள் மூலம் எவ்வித சாட்சிகளுமின்றி உடனடியாக பணத்தை பெற்றுக்கொள்ளும் முறையை காண்பித்து கடன் வழங்க முன்வரும் நிறுவனங்கள் தொடர்பாக பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இத்தகைய நிறுவனங்கள் ஊடாக கையடக்கத் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு கடன்களை மக்கள் பெற்றுக்கொள்ளும் போது பெறப்படும் வட்டி வீதம் மற்றும் கடனை மீண்டும் செலுத்த வேண்டிய காலங்கள் தொடர்பாக எவ்வித முழுமையான தகவல்களும் முன்னறிவித்தலுமின்றி கடன் வழங்குவதால் கடன் பெறுபவர்கள் பல சிரமங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் மன அழுத்தங்களுக்கும் உள்ளாகுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சில நிறுவனங்கள் கடனை மீளப்பெறும் கட்டத்தில் அதிர்ச்சிகரமாக அதிகளவிலான வட்டிகள் வசூலிக்கப்படுவதாகவும், தொடர்ந்தும் தொலைபேசி அழைப்புகள் மூலம் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அவர்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறான தகவல்களை பரப்பும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றனர்.

இதனை தொடர்ந்து, இவ்வாறான முறையில் இணையத்தளம் மற்றும் தொலைபேசி ஊடாக கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பாக இலங்கை பொலிஸ், இலங்கை மத்திய வங்கியின் வங்கியற்ற நிதி நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தல் மற்றும் மேற்பார்வை திணைக்களத்தை தொடர்பு கொண்டு விசாரணைகள் மேற்கொண்ட போது , இவ்வாறான பல நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குபடுத்தல் முறைமை கடைபிடிக்காமல் செயற்படுவதாகவும், கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பாக ஒழுங்குபடுத்தல் முறைமையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மேலும் அறிவித்துள்ளனர்.

அதனால், இணையத்தளம் மற்றும் தொலைபேசி ஊடாக உடனடியாக கடன் பெறும் போது அது தொடர்பாக அவதானத்துடனும், விளக்கங்கள் அதன் நிபந்தனைகளை முறையாக அறிந்து அதன் பின்னர் சேவையை பெற்றுக்கொள்ளுமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

https://athavannews.com/2025/1450553

Checked
Wed, 02/04/2026 - 07:31
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr