ஊர்ப்புதினம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை தாக்கிய சவுதி பயணி கைது!

3 months 1 week ago

New-Project-279.jpg?resize=750%2C375&ssl

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை தாக்கிய சவுதி பயணி கைது!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு பெண் விமானப் பணிப்பெண்களைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சவுதி அரேபிய நாட்டவர் ஒருவர் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் ரியாத்தில் இருந்து கொழும்புக்குச் செல்லும் போது விமானப் பணிப்பெண்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர் 28 வயதான சவுதி நாட்டவர், அவர் மலேசியாவிற்கு தனது பயணத்தைத் தொடர திட்டமிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

விமானம் தரையிறங்கத் தயாராகும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அந்த நேரத்தில், அனைத்து பயணிகளும் சீட் பெல்ட்களை கட்டிக்கொண்டு இருக்க வேண்டும். இருப்பினும், சந்தேக நபர் இந்த விதிமுறையை மீறி கழிப்பறைக்குள் செல்ல முயன்றார், இது வாக்குவாதத்திற்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரும் சுற்றுலா பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர் இன்று (27) கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

https://athavannews.com/2025/1451228

யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து

3 months 1 week ago

Published By: Digital Desk 3

26 Oct, 2025 | 05:16 PM

image

புகழ்பெற்ற தென்னிந்திய தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (26) யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.

தனது வருகை தொடர்பில் கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில், 

இன்று

யாழ்ப்பாணம் செல்கிறேன்

என் நண்பர்

பாஸ்கரன் கந்தையா தயாரிக்கும்

மில்லர் படத்தின் படப்பிடிப்பைத் 

தொடங்கி வைக்கிறேன்

நல்லிலக்கியங்களும்

நவகலைகளும்

ஒரு போர்ச்சமூகத்திலிருந்துதான்

பூத்துவர முடியும்

மனதின் வலியும்

மார்பின் தழும்பும்

கலையின் கச்சாப்

பொருள்களாகும்

ஈழத்தில்

நல்ல கலைவடிவங்கள்

மலர்வதற்கான

காலச்சூடு உண்டு

ஈழத் தமிழர் வெல்லட்டும்;

தொட்டது துலங்கட்டும்

என் நண்பரின் வளர்ச்சிக்கு

வாழ்த்துச் சொல்லச் செல்கிறேன்;

நாளையே திரும்பிவிடுவேன்  எனப் பதிவிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/228728

12 வயதிற்குட்பட்ட சிறார்கள் நவீன கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படும் - அரசாங்கம்

3 months 1 week ago

Published By: Vishnu

26 Oct, 2025 | 06:56 PM

image

(எம்.மனோசித்ரா)

பாடசாலை மாணவர்களில் 12 வயதிற்குட்பட்டோர் நவீன கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக, சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், 12 வயதுக்குக் குறைவான எந்தவொரு பிள்ளையும் நவீன கையடக்க தொலைபேசிகளை  வைத்திருக்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதிக்கப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாணவர்கள் தவறிழைத்தால் அவர்களுக்கு தண்டனை வழங்குவது பொறுத்தமற்றது. பாசத்துடன் அறிவுரை கூறி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். சுய ஒழுக்கத்தையும் கட்டுப்பாடுகளையும் அவர்களுக்கு பழக்கப்படுத்த வேண்டும். சுய கட்டுப்பாடுடைய சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும்.

போதைப்பொருள் பாவனை தொடர்பிலும் மாணவர்களுக்கு சுய ஒழுக்கம் கற்பிக்கப்பட வேண்டும். கையடக்க தொலைபேசி என்பது ஒரு விஷமாகும். அதில் குறுகிய காணொளிகள் மிக ஆபத்தானவை. பிள்ளைகளில் மூளை இயங்கும் வேகத்தை அவை கட்டுப்படுத்துகின்றன.

எனவே தான் அவற்றிலிருந்து பிள்ளைகளை வேறுபடுத்துமாறு பெற்றோரிடம் வலியுறுத்துகின்றோம். அவுஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகள் சிறுவர்கள் தொலைபேசி பாவிப்பதை தடை செய்துள்ளன. அந்த வகையில் பாடசாலை மாணவர்கள் தொலைபேசி பாவிப்பதை தடை செய்வதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்.

இந்தத் தடை மூலம், அதிகப்படியான திரைக் காட்சியில் இருந்தும், தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கத்தில் இருந்தும் பிள்ளைகளைப் பாதுகாத்து, ஆரோக்கியமான வளர்ச்சியையும் சமூகத் தொடர்பாடலையும் ஊக்குவிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றார்.

https://www.virakesari.lk/article/228733

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ஆசிரியை உட்பட இருவர் கைது!

3 months 1 week ago

Screenshot-2025-10-26-140043.jpg?resize=

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ஆசிரியை உட்பட இருவர் கைது!

கம்பளை உலப்பனை பிரதேசத்தில் வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரும் அவரது மருமகன் ஜஸ் மற்றும் ஹொரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பளை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கம்பளை உலப்பனை பிரதேசத்தில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவரும் மாமியார், மருகன் ஆகிய இருவர் 200 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கம்பளை குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அவர்களிடம் இருந்து இரண்டு தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த மருமகன் முச்சக்கரவண்டி சாரதியாக உள்ள நிலையில் இவர்கள் கம்பளை, நாவலப்பிட்டி உலப்பனை போன்ற பகுதியில் இந்த சூட்சமான முறையில் போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்துள்ளனர்.

67 வயதுடைய ஒய்வு பெற்ற ஆசிரியை பல பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளில் முன்னேடுத்து வந்த நிலையில் தற்போது ஒய்வு பெற்றியிருந்த சந்தரப்பத்தில் மருமகனுடன் இணைந்து ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தின் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2025/1451151

மதுபோதையில் யாழ் தேவி ரயிலை செலுத்திய தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் கைது!

3 months 1 week ago

New-Project-1-11.jpg?resize=600%2C300&ss

மதுபோதையில் யாழ் தேவி ரயிலை செலுத்திய தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் கைது!

யாழ்தேவி’ ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் , கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (25) பிற்பகல் அனுராதபுரத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த இந்த ரயில், பிற்பகல் 2.40 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலையத்தை அடைந்துள்ள நிலையில் அவர் மது அருந்தியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரை அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் அவர் நீதிமன்றில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, யாழ்தேவி ரயிலுக்கு வேறொரு கட்டுப்பாட்டாளர் நியமிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கிப் புறப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1451106

தாதியர்களின் சிருடையை அவரவர் மத கலாச்சாரத்திற்கு ஏற்ப மாற்றினால் ஊழியர் சங்கம் ஊடாக நடவடிக்கை எடுப்போம் ; முத்தேட்டுவ ஆனந்த தேரர்

3 months 1 week ago

Picsart_25-10-26_14-38-52-694-780x957.jpg

(அஷ்ரப் ஏ சமத்)
இந்த நாட்டில் சர்வதேச தரத்தில் தாதியர்களுக்கு என்ற ஓர் சீருடை இருந்து வந்தது. அதை யாரும் அவரவர் மதம் கலாச்சாரத்திற்கும் ஏற்ப மாற்ற நினைப்பார்கள் ஆனால் அதற்கு எதிராக எங்களது பொது அரச தாதியர்கள் ஊழியர் சங்கம் தடுத்து நிறுத்தும்..

அதற்கு எதிராக நாங்கள் ஊழியர் சங்கத்தின் நடவடிக்கையில் இறங்கும் என பொதுச் சேவை தாதியர்கள் சங்கத்தின் தலைவர் முத்தட்டுவே ஆனந்த தோரோ இன்று 26 ஆம் திகதி அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர்
சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்

நாட்டில் வழமையாக இருந்து வரும் தாதியர்கள் சீருடையை அவரவர் மதம் கலாச்சாரத்திற்கேற்ப அணியலாம் என ஊடகங்களில் வெளிவந்த செய்தியை கவனித்தேன்….

ஆனால் தற்பொழுது சுகாதார அமைச்சர் திறம்பட எடுத்துச் செல்லும் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ச இதற்கு உடன்படமாட்டார் என நினைக்கின்றேன்

முன்னாள் அமைச்சர் கலாம் சென்ற எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் கூட பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள் கலாச்சார ஆடை அணிவதற்கு ஏற்ப தாதியர்களின் சீறுடையை மாற்றும் படி அப்போது இருந்த சுகாதார அமைச்சர் ரேணுகா கேரத்திடம் கோரிக்கை விடுத்தார் அப்போது சுகாதார அமைச்சர் இவ்வாறு செய்ய முடியாது…என்று சொல்லியிருந்தார்.

ஆகவே தான் சுகாதார அமைச்சர் இந்த தாதியர்கள் அணியும் சீருடையை ஒர் குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு கலாச்சாரத்துக்கு ஏற்ப மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க மாட்டார் என நம்புகின்றோம் இவ்வாறு அவர் நடவடிக்கை எடுப்பின் எங்கள் ஊழியர்கள் சங்கம் இதற்கு எதிராக வேலை நிறுத்தம் ஈடுபடுவோம்..


அவ்வாறு முஸ்லிம் தாதியர்கள் நமது கலாச்சாரத்திற்கும் ஏற்ப உடை அணிய வேண்டும் என்றால் அவர்கள் அத்தொழிலில் இருந்து விலகிச் செல்ல முடியும் எனவும் முத்துட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்

மேற்படி விடயம் கடந்த 24ஆம் திகதி மாதாந்தம் முஸ்லிம்களது பிரச்சினைகள்,மதம், கல்வி கலாச்சார விஷயம் கலந்துரையாடுவதற்கு ஒவ்வொரு மாதமும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் வெளிநாட்டு அமைச்சர் தலைமையில் வெளிநாட்டு அமைச்சின் கூடி கலந்துரையாடுவார்கள்.

அவ்வப்போது முஸ்லிம்கள் சம்பந்தமான அவ்வப்போது எழும் பிரச்சினைகள் முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் அமைச்சல் விஜித் ஹேரத்திடம் முன் வைத்தனர் இதில் மூதூர் வைத்தியசாலை ,தாதியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் , மற்றும் திறந்த பல்கலைக்கழக தாதிய பயிற்சி நெறிகள் பயிலும் முஸ்லிம் பெண்கள் சீருடையில் அணிவதில் எதிர்கொள்ளும் பிரச்சினை அமைச்சரிடம் முன் வைக்கப்பட்டது.

அச் சமயம் அமைச்சர் முஸ்லிம் பெண்கள் தத்தமது கலாச்சாரத்தில் கேற்ப உடை அணிந்து கொள்ள முடியும். அதில் தாதியர்கள் சீருடையில் அவர்களது கலாச்சாரத்திறகு அணிய எவ்வித தடையும் விதிக்கவில்லை எனச் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.

https://madawalaenews.com/30701.html

யாழ்.பல்கலையின் அடுத்த துணைவேந்தர் யார் ? களத்தில் பேராசிரியர் ரகுராமும்

3 months 1 week ago

யாழ்.பல்கலையின் அடுத்த துணைவேந்தர் யார் ? களத்தில் பேராசிரியர் ரகுராமும்

adminOctober 25, 2025

jaff-uni-chancelors.jpg?fit=1170%2C1170&

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு ஆறு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவையின் பதவிவழிச் செயலாளரான பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

அதற்கான இறுதித் தினம் கடந்த 15ம் திகதி ஆகும். அன்றைய தினம் பிற்பகல் 3 மணியுடன் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் நிறைவடைந்த வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பீடாதிபதிகள் 4 பேர் உட்பட ஆறு பேராசிரியர்கள் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி, கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரன், விஞ்ஞான பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் பு.ரவிராஜன், உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி சிரேஷ்ட பேராசியர் கு. மிகுந்தன் மற்றும் விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் பிறின்ஸ் ஜெயதேவன் ஆகியோர் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்னர் என அறியமுடிகிறது.

பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைய டிசெம்பர் மாத முற்பகுதியில் நடாத்தப்படவுள்ள விசேட பேரவைக் கூட்டத்தில், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் நிபுணர் ஒருவரின் முன்னிலையில் தெரிவுக்கான புள்ளிகள் வழங்கப்பட்டு, புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களின் விபரங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

பல்கலைக் கழகச் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்து துணைவேந்தராக ஜனாதிபதி பிரகடனம் செய்வார்.

அதேவேளை துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் தொடர்பில் , உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்துவதற்கு பேரவைச் செயலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அது தொடர்பான தகவல்களை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனமொன்று வெளிப்படைத் தன்மையுடன் ஊடகங்களுக்குத் தகவல் தெரிவிக்க மறுத்துள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://globaltamilnews.net/2025/221961/

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடையும் சாத்தியம்!

3 months 1 week ago

25 Oct, 2025 | 03:07 PM

image

வங்காள விரிகுடா கடல் பகுதி மற்றும் நாட்டின் கிழக்கு ஆழமற்ற கடல் பகுதிகளில் பலத்த காற்று, கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பானதாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்த எச்சரிக்கை  12.00 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு இது செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. 

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (26)  க்குள் ஒரு ஆழமான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, ஞாயிற்றுக்கிழமை (27) காலை தென்மேற்கு மற்றும் அதை அண்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் ஒரு சூறாவளி புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு, அடுத்த 48 மணி நேரத்தில் ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.

இதன் காணரமாக 05N-15N மற்றும் 80E-95E எல்லைக்குட்பட்ட ஆழ்கடல் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரும் வரை கடற்படையினர் மற்றும் மீனவர்கள்  செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடல் பகுதிகளில் செயல்படும் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு  செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதேவேளை, காங்கேசன்துறை முதல் திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழமற்ற கடல் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரும் வரை செல்ல வேண்டாம் என்றும் கடற்படையினர் மற்றும் மீனவர்களுக்கு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழமற்ற கடல் பகுதிகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படையினர்  மற்றும் மீனவர்கள்  இந்த விடயம் தொடர்பில்  விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Sea-advisory.jpg

sea-advsiory-2.jpg

https://www.virakesari.lk/article/228638

80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் - சட்டத்தரணி பிரதிபா மஹானாமஹேவ

3 months 1 week ago

நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் - சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ

25 Oct, 2025 | 04:22 PM

image

நாட்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ தெரிவித்துள்ளார்.  

பிரஜா சக்தி அபிவிருத்தி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை முறையான சட்ட கட்டமைப்பின் கீழ் பதிவு செய்வது அவசியமாகும்.

அத்துடன், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகளும் சமூக அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும்.

பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை ஒதுக்கி வைப்பதால் அவர்கள் மேலும் பாதிக்கப்படுகின்றனர்.

இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கு அடிப்படைப் பாலியல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி முறைமையை விரிவாக்குவது அவசியமாகும்.

95 சதவீதமான பாலியல் தொழிலாளர்கள் தற்போது ஆணுறை உள்ளிட்ட பாதுகாப்பான முறைகளைப் பயன்படுத்தி வருவதால் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்களும் கணிசமாக குறைவடையும் என சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதிபா மஹானாமஹேவ மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/228647

யாழ்தேவி ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது

3 months 1 week ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், 'யாழ்தேவி' ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் இன்று (25) பிற்பகல் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த இந்த ரயில், பிற்பகல் 2.40 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலையத்தை அடைந்துள்ளது.

இதன்போது அவர் மது அருந்தியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் அவர் நீதிமன்றில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

யாழ்தேவி ரயிலுக்கு வேறொரு கட்டுப்பாட்டாளர் நியமிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கிப் புறப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmh66cbsr017cqplp06gyyxes

போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது ! - சுமந்திரன்

3 months 1 week ago

போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது !

By SRI

image_1484585630-7e01e251c9.jpg

பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், அதனைக் காரணமாகக்கூறி பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கும், பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாடளாவிய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. அதன்படி பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுவரும் அதேவேளை, மறுபுறம் பாதாள உலகக்குழுவினர் என அடையாளப்படுத்தப்படும் பலர் பொதுவெளியில் கொல்லப்படும் சம்பவங்களும் அதிகரித்துவருகின்றன.

அதுமாத்திரமன்றி அரசாங்கம் பொதுவெளியில் நிகழும் இவ்வாறான படுகொலைகளை பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் கொல்லப்படுவதாகக்கூறி நியாயப்படுத்திவரும் போக்கு தொடர்பில் பலரும் கண்டனங்களை வெளிப்படுத்திவருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றிக் கருத்துரைத்த சுமந்திரன், பாதாள உலக்குழுக்கள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளைத் தாம் வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.

இருப்பினும் அதனைக் காரணமாகக்கூறி பொதுவெளியில் இடம்பெறும் கொலைகளை நியாயப்படுத்துவதற்கு அரசாங்கம் முற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும், மாறாக சட்டம், ஒழுங்கை உரியவாறு பேணவேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இவ்வருடத்தில் இதுவரை சுமார் 50 க்கும் மேற்பட்ட இவ்வாறான கொலைச்சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும், இனிவருங்காலங்களில் இத்தகைய சட்டவிரோத படுகொலைகள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சுமந்திரன் வலியுறுத்தினார்.

https://www.battinews.com/2025/10/blog-post_358.html

க.பொ.த உயர்த்தர மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

3 months 1 week ago

க.பொ.த உயர்த்தர மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

25 Oct, 2025 | 10:51 AM

image

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்த்திற்கான பொது தகவல் தொழில்நுட்ப (GIT) தேர்வுக்கான அனுமதி அட்டைகள் அனைத்தும் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

அனைத்து அதிபர்களும் தங்கள் பாடசாலைக்குறிய அனுமதி அட்டைகளை அந்தந்த வலயக் கல்வித் உதவி கல்வி பணிப்பாளரிடமிருந்து  பெற்றுக்கொள்ளலாம்  என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் தபால் மூலம், அவர்களின் தனிப்பட்ட தபால் முகவரிகளுக்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளதாக  பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

பரீட்சாத்திகளின் பெயர்கள், பாடங்கள் தொடர்பாக ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியிருந்தால், அத்தகைய மாற்றங்களை உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் செய்யலாம் என்றும் ஆணையாளர் நாயகம் தெரவித்துள்ளார். 

அனைத்து திருத்தங்களும் அக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் செய்துக்கொள்ள வேண்டும் எனவும் பரீட்சாத்திகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 10ம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை, நாடு முழுவதும் உள்ள 2,362 தேர்வு நிலையங்களில் நடைபெறும்.

பொது தகவல் தொழில்நுட்ப ( GIT ) தேர்வு டிசம்பர் 6 ஆம் திகதி 1,665 தேர்வு நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/228615

“ஆனந்தன்” வழங்கிய தகவலுக்கமைய கஞ்சா கடத்தல்காரர் கைது!

3 months 1 week ago

“ஆனந்தன்” வழங்கிய தகவலுக்கமைய கஞ்சா கடத்தல்காரர் கைது!

25 Oct, 2025 | 10:36 AM

image

நீண்ட நாட்களாக இந்தியாவிலிருந்து படகு மூலம் கஞ்சா கடத்தி வந்த கஞ்சா கடத்தல்காரர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கைதுசெய்யப்பட்ட கஞ்சா கடத்தல்காரரிடமிருந்து 10 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு, இந்தியாவுக்கு தப்பிச் செல்ல படகு ஏற்பாடு செய்து கொடுத்து உதவியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள  “ஆனந்தன்” என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கஞ்சா கடத்தல்காரர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கைசதுசெய்யப்பட்ட கஞ்சா கடத்தல்காரர் படகு மூலம் கஞ்சா மாத்திரம் கடத்தி உள்ளாரா அல்லது பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல உதவி உள்ளரா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

“கணேமுல்ல சஞ்சீவ” படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு பின்னர் ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இஷாரா செவ்வந்தி வழங்கிய தகவலுக்கமைய இந்தியாவுக்கு தப்பிச் செல்ல படகு ஏற்பாடு செய்து கொடுத்து உதவிய   “ஆனந்தன்” என்பவர் கைதுசெய்யப்பட்ட நிலையில்,  “ஆனந்தன்” வழங்கிய தகவலின் அடிப்படையில் கஞ்சா கடத்தல்காரர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/228620

தந்தை செல்வாவின் மூத்த மகள் கனடாவில் காலமானார் !

3 months 1 week ago

தந்தை செல்வாவின் மூத்த மகள் கனடாவில் காலமானார் !

25 Oct, 2025 | 12:37 PM

image

தந்தை செல்வா என்று போற்றப்பட்டவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவருமான தந்தை செல்வாவின் (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) மூத்த மகள் சுசீலாவதி வில்சன் தனது 97 ஆவது வயதில் கனடாவில் இறைவனடி எய்தினார்.

அன்னார் இலங்கை அரசியல் பற்றிய விமர்சனத் துறையில்  போற்றப்பட்டவரும் கனடா நியூ பிரன்சுவிக் பல்கலைக்கழகத்தின் அரசியற்துறைப் பேராசிரியருமான அ.ஜெயரெத்தினம் வில்சனின் அன்புத் துணைவியாரும் கனேடியச் சட்டத்தரணி மல்லிகா, மைதிலி குமணன் ஆகியோரின் அன்புத் தாயாருமாவார். 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் சனிக்கிழமை (25 ஒக்டோபர் 2025) 11.00 மணி முதல் 2.00 மணி வரை Chapel Ridge - 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 நடைபெறுகிறது.

இந்நிலையில், தந்தை செல்வாவின் மூத்த மகள் சுசீலாவதி (சுசீலி) வில்சனின் மறைவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

சுசீலாவதியின் மறைவு தொடர்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான தந்தை செல்வாவின் மூத்த மகள் சுசீலாவதி (சுசீலி) வில்சனின் மறைவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றது.

சுசீலி , தனது தாயாருடன் இணைந்து, 1950கள் மற்றும் 60களில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரசார நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்கு ஆரம்ப காலத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கினார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சுசீலி பட்டப்படிப்பை முடித்தவர். அங்குதான் அவர் தனது கணவராகிய பேராசிரியர் அல்ஃபிரட் ஜெயரத்தினம் வில்சன் (Prof. A. J. Wilson) அவர்களைச் சந்தித்தார்.

பேராசிரியர் ஏ.ஜே. வில்சன், இலங்கையின் அரசியல் குறித்துப் பல நூல்களை எழுதிய புகழ் பெற்ற கல்விமானாக விளங்கியவர். பிற்காலத்தில் சுசீலி, ஐக்கிய இராச்சியத்தில் ஒரு தொழில்முறை நூலகராக (Professional Librarian) தகுதி பெற்று, தனது கணவரின் கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார்.

கனடாவில் குடியேறிய பின்னர், அவர் நியூ பிரன்சுவிக் பல்கலைக்கழகத்தில் (University of New Brunswick) நூலகராகப் பணியாற்றினார்.

சுசீலி வில்சன், கட்சிக்கும், குறிப்பாக தமிழ்மக்களின் மேம்பாட்டிற்கும் ஆற்றிய பங்களிப்பை இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த நன்றியுணர்வுடன் நினைவுகூருகிறது. அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது பிள்ளைகள் மல்லிகா, மைதிலி மற்றும் குமணனுக்கு கட்சி தனது ஆழ்ந்த அனுதாபங்கள் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

566555928_675387921941102_57109469540998

வடமாகாணத்தில் நாளை 13 மணி நேர மின் தடை!

3 months 1 week ago

வடமாகாணத்தில் நாளை 13 மணி நேர மின் தடை!

1233058443.jpg

 வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களிலும் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை 26ம் திகதி மின்தடைப்படும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

அதன்படி முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாண, கிளிநொச்சி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் 13 மணி நேரம் தொடர் மின் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார் 220kV மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைப்பதற்கான வேலைகளிற்காகவே நாளைய தினம்   ‘காலை 6.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை மின் துண்டிக்கப்படுவதால், யாழ்ப்பாண மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் வவுனியா மாவட்டம் முழுவதும் மின் விநியோகமானது துண்டிக்கப்படவுள்ளது.

வேலைகள் பூர்த்தியாகியவுடன் மின் இணைப்பானது உடனடியாக மீள வழங்கப்படும் என இலங்கை மின்சாரசபை  மேலும்  அறிவித்துள்ளது.  

https://newuthayan.com/article/வடமாகாணத்ததில்__நாளை_13_மணி_நேர_மின்_தடை!

இந்திய இராணுவத்தின் கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலையின் நினைவேந்தல்

3 months 1 week ago

இந்திய இராணுவத்தின் கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலையின் நினைவேந்தல்

adminOctober 24, 2025

1001148206.jpg?fit=1170%2C878&ssl=1

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரியில் தஞ்சம் அடைந்திருந்த பொது மக்கள் மீது இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் 38 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொக்குவில் இந்து கல்லூரி நுழைவாயிலில் முன்பாக இடம்பெற்றது.

நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தி அதனைத் தொடர்ந்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

1987 ஒக்டோபர் 11 ஆம் திகதி மற்றும் 12 ஆம் திகதிகளில் கொக்குவில் பிரம்படி பகுதிகளில் நடைபெற்ற படுகொலைகளை தொடர்ந்து கொக்குவில் இந்துக் கல்லூரியில் தஞ்சம் அடைந்திருந்த பொதுமக்கள் மீது இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், 26 பொதுமக்கள், படுகொலை செய்யப்பட்டனர்.

1001148203.jpg?resize=800%2C600&ssl=1

1001148200.jpg?resize=800%2C600&ssl=11001148206.jpg?resize=800%2C600&ssl=1

https://globaltamilnews.net/2025/221923/

உள்நாட்டு யுத்த காலத்தை விட தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- சாகர காரியவசம்!

3 months 1 week ago

download-23.jpg?resize=294%2C171&ssl=1

உள்நாட்டு யுத்த காலத்தை விட தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- சாகர காரியவசம்!

தமிழீழ விடுதலை புலிகள் கூட அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளைக் கொலை செய்யவில்லை போர்க் காலத்தை விடவும் தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வெலிகம துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமானது படு பயங்கரமாகும் எனவும் தமக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த தவிசாளர் லசந்த விக்கிரமசேகர கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அது வழங்கப்படாத சூழ்நிலையிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நாட்டில் 30 வருடகாலம் போர் நிலவியது. இந்தக் காலப்பகுதியில் விடுதலை புலிகள் கூட இவ்வாறு அச்சமின்றி அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளை கொல்லவில்லை. ஆனால், இந்த அரசாங்க ஆட்சியின் கீழ் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கம் நாட்டை அராஜக நிலைக்குக் கொண்டு செல்வதற்காகப் பாதாளக் குழு என்ற போர்வையில் தமக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

மக்கள், நாய் பூனைகள்போல சுட்டுக்கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் பாதாளக் குழுக்களை ஒடுக்குகின்றோம் என்ற போர்வையில் அக்குழுக்கள் பலப்படுத்தப்படுகின்றனவா என்ற சந்தேகமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1451060

நாட்டில் குறைவடைந்து வரும் திருமணம், பிறப்பு வீதங்கள்!

3 months 1 week ago

download-1-12.jpg?resize=275%2C183&ssl=1

நாட்டில் குறைவடைந்து வரும் திருமணம், பிறப்பு வீதங்கள்!

2024 ஆம் ஆண்டில் இலங்கையில் திருமணங்கள் மற்றும் பிறப்புக வீதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 1இலட்சத்து 39ஆயிரத்து 290 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8 சதவீத குறைவாகும் என தரவுகள் குறிப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த 2022 ஆம் ஆண்டு, பொருளாதார நெருக்கடியின் காலத்தில், நாடு முழுவதும் 1இலட்சத்து 71ஆயிரத்து 140 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

முன்னதாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிபர தரவுகளின்படி பிறப்புகளிலும் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2024 ஆம் ஆண்டில் 2 இலட்சத்து 20ஆயிரத்து 761 பிறப்புகள் பதிவாகியுள்ளன.

இது 2020 ஆம் ஆண்டில் பதிவான 3 இலட்சத்து ஆயிரத்து 706 பிறப்புகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் குறைவாகும்.

https://athavannews.com/2025/1451063

ஆஸ்திரேலிய முதலீட்டாளரின் சொத்துக்களை மோசடி செய்த இருவர் கைது!

3 months 1 week ago

Two-arrested-for-promising-1.jpg?resize=

ஆஸ்திரேலிய முதலீட்டாளரின் சொத்துக்களை மோசடி செய்த இருவர் கைது!

மன்னாரில், மோசடி, சொத்துக்களை குற்றவியல் ரீதியாக கையகப்படுத்துதல் மற்றும் ஆஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்த குற்றச்சாட்டுகளில் மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களை நேற்று (24) மாலை முருங்கன் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில்,குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

மன்னார், நானாட்டான், புதுக்குடியிருப்பு, ஓமந்தை மற்றும் ஆலம்பில் பகுதிகளில் பல வணிகங்களை ஆரம்பிக்க ஆஸ்திரேலிய முதலீட்டாளர் குறித்த நபர்களுக்கு நிதி வழங்கியிருந்தார்.

இந்த வணிக முயற்சிகளில் நான்கு வன்பொருள் கடைகள், இரண்டு பெரிய தன்னந்தோட்டம் , ஒரு பால் பண்ணை, ஒரு நெல் வயல் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அடங்குவதுடன் இவற்றிற்காக சுமார் 180 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் தற்போது அது மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டாளர் கூறியுள்ளார்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய சந்தேக நபர் ஒருவரும் அவரது மனைவியும் தற்போது தலைமறைவாகியுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட ஏனைய இரு சந்தேக நபர்களையும் முருங்கன் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நேற்று (24) மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

https://athavannews.com/2025/1451058

அரசாங்கத்திலும் ஒரு நாமல் இருக்கிறார் நாமல் ராஜபக்ஷ சாடல்

3 months 1 week ago

24 Oct, 2025 | 04:52 PM

image

(எம்.மனோசித்ரா)

மஹிந்த ஜயசிங்கவுக்கு கனவிலும் ராஜபக்ஷர்கள் தான் தோன்றுகின்றனர். அதனால் அதனால் தான் அவர் அதிகளவில் ராஜபக்ஷர்கள் குறித்து பேசுகின்றார். செவ்வந்தி தனது தொலைபேசியில் பதிவு செய்திருப்பது எந்த நாமலுடைய இலக்கம் என்பதை அதனை பரிசோதித்தவர்களே கூற வேண்டும். ஆனால் அரசாங்கத்திலும் நாமல் கருணாரத்ன என்ற ஒருவர் இருக்கின்றார் என்பதை நினைவுபடுத்துகின்றேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (24) பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மஹிந்த ஜயசிங்கவுக்கு கனவிலும் ராஜபக்ஷர்கள் தான் தோன்றுகின்றனர். அதனால் அதனால் தான் அவர் அதிகளவில் ராஜபக்ஷர்கள் குறித்து பேசுகின்றார். ஆனால் அரசாங்கத்திலும் நாமல் கருணாரத்ன என்ற ஒருவர் இருக்கின்றார் என்பதை நினைவுபடுத்துகின்றேன்.

எவ்வாறிருப்பினும் நாமல் எனக் கூறும் போது தமது அரசாங்கத்திலுள்ள நாமலை மறந்து அவர்களுக்கு எனது நினைவு வருகின்றமை மகிழ்ச்சிக்குரியது.

செவ்வந்தி தனது தொலைபேசியில் பதிவு செய்திருப்பது எந்த நாமலுடைய இலக்கம் என்பதை அதனை பரிசோதித்தவர்களே கூற வேண்டும்.

நாட்டு பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு நாட்டு தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் காணப்படுகிறது.

ஜனாதிபதி நடை பயிற்சியின் போது பாதுகாப்புடனேயே செல்கின்றார். அது சிறந்த விடயம். அதேபோன்று அவர் ஏனையோரது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெலிகம பிரதேசசபை தலைவர் எழுத்து மூலம் தனக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் இரு மாதங்களுக்கு முன்னரே கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

ஆனால் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு நபருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அவர் மீது முறைப்பாடுகள் உள்ளனவா, குற்றச்சாட்டுக்கள் உள்ளனவா என்பதை ஆராய முன்னர் முதலில் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் கூட இந்த காரணத்தை அடிப்படையாகக் கொண்டே மிகுந்த பாதுகாப்புடன் அழைத்து வரப்படுகின்றனர்.

அவ்வாறிருக்கையில் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியொருவருக்கு காணப்பட்ட உயிர் அச்சுறுத்தலை பொலிஸ் மா அதிபர் எவ்வாறு உதாசீனப்படுத்த முடியும்? ஏன் அவருக்கான பதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் போது கிடைக்கப் பெற்ற புலனாய்வுத் தகவலும் இவ்வாறு தான் உதாசீனப்படுத்தப்பட்டது. தமக்கு தேவையற்றவர்களின் பாதுகாப்பை ஸ்திரமற்றதாக்குவதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

அந்த கோணத்தில் அவதானிக்கும் போது அரசாங்கத்தின் அனுசரனையுடன் திட்டமிட்ட குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறான கொலைகள் இடம்பெறும் போது அரசாங்கம் பதற்றமடைகிறது.

323 கொள்கலன்கள் தொடர்பில் முதலாவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடளித்த டான் பிரியசாத் கொல்லப்பட்ட போதும் அரசாங்கம் இவ்வாறு தான் செயற்பட்டது.

மரண விசாரணை அறிக்கை கிடைக்க முன்னரே, அமைச்சரொருவர் அவரது கொலை தொடர்பில் கருத்து வெளியிட்டார். அதேபோன்று தற்போது லசந்த கொலையை திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புபடுத்தி திசைதிருப்ப முயற்சிக்கின்றனர் என்றார்.

https://www.virakesari.lk/article/228587

@goshan_che அண்ணையின் கவனத்திற்கு!

Checked
Wed, 02/04/2026 - 07:31
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr