stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டி நடக்குமானால் கொழும்பு மைதானத்தில் நடக்கும் பெரியப்பு புள்ளிய எப்படி போடப் போகிறார் போட்டி நடந்தால் தெரியும் உண்மையான பலம்மான அணி எது என்று.................. விளையாட்டில் எதுவும் நடக்கலாம்........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இரண்டு அணிகளும் விளையாடினால் தான் பண மழை கொட்டும்.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தானை இந்தியாவுடன் விளையாட வைப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடந்தவண்ணம் உள்ளன. வங்காளதேசமும் கலந்து கொண்டிருக்கினம். வங்காளதேசமும் அவர்களை விளையாடும்படி கோரியுள்ளது. இன்னும் 48 மணிநேரத்தில் அறிவிப்பதாக பாகிஸ்தான் தெரிவாளர் மோக்ஸின் கூறியுள்ளார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை அணியில் நிரந்தரமாய் ஒரு தமிழனை விளையாட விடனும்............................. தொடர்ந்து சிங்களம் விளையாடினால் தோல்வி தான் முரளிதரன் விளையாடின காலத்தில் இலங்கை அணி அதிக வெற்றி............... இப்ப இருக்கும் சின்ன அணிகளே இலங்கை அணிக்கு சவால் விடும் நிலைக்கு வந்து விட்டினம்..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளைக்கு பாக்கிஸ்தான் வெல்லும் முதல் மைச்சில் சுதப்பின மாதிரி சுதப்பாம விளையாடினால் எளிதில் வெற்றி................. அமெரிக்க அணியின் மட்டையடி நல்ல நிலையில் இருக்கு.......................பாக்கிஸ்தான் கப்டன் சரினா நேரத்தில் சரியான வீரர்களிடம் பந்தை கொடுத்தால் நல்லம்........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
2024ல் அமெரிக்கா செய்த சம்பவம். மீண்டும் நடக்குமா
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்கள் சொல்வது சரி அவர் ஏலத்தில் எடு பட்டு இருக்கிறார் விளையாடும் வாய்ப்பு கொடுக்கல................. நானும் இப்ப தான் முழுதா தேடி பார்த்தேன் அவரை பற்றி................... ஜபிஎல்ல சின்ன அணிகளில் விளையாடின திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கனும்...........................
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்பிடியா. பஞ்சாப் அணியில இருந்திருக்கிறார். ஆனால் விளையாடின மாதிரி தெரியேல. தேடிப் பார்த்தேன், விளையாடின விபரம் தெரியவில்லை. இனி அவரைத் திரும்பவும் கூப்பிடலாம். இன்று நல்ல பெறுபேறு.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கொழும்பு மைதானத்தில் போட்டி நடப்பதால் பாக்கிஸ்தான் 4சுழல் பந்து வீரர்களுடன் விளையாட வருவினம்............... மூன்று சுழல் பந்து வீரர்களுக்கு பந்து போடவும் தெரியும் மட்டையால் அடிக்கவும் தெரியும் வெற்றி பாக்கிஸ்தானுக்கே......................................... அவர் ஏற்க்கனவே ஜபிஎல்ல பஞ்சாப்புக்கு விளையாடி இருக்கிறார்...................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கனடாவின் அன்ஸ் பட்டேலுக்கு நல்ல எதிர்காலம் இரூக்கு. IPLல ஆளக் காணலாம் என்று நினைக்கிறேன்
-
நாட்டில் புற்றுநோய் அபாயம் அதிகரிப்பு – தினமும் 100 புதிய நோயாளிகள்
நாட்டில் புற்றுநோய் அபாயம் அதிகரிப்பு – தினமும் 100 புதிய நோயாளிகள் Published By: Vishnu 09 Feb, 2026 | 08:17 PM நாட்டில் நாளாந்தம் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவாகி வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். புதிய புற்றுநோய் ஆரம்பகால கண்டறிதல் மையம் திறப்பு நிகழ்வில் உரையாற்றிய அவர், தினமும் சுமார் 40 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் குறிப்பிட்டார். அதேபோல், தினசரி 15 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்ற நிலையில், அவர்களில் மூன்று பேர் உயிரிழக்கின்றனர் எனவும் தெரிவித்தார். இதனைத் தடுக்கும் வகையில், 20 வயதிற்குப் பிறகு பெண்கள் மாதந்தோறும் சுய மார்பகப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், 20–40 வயதினருக்கு மூன்று வருடங்களுக்கு ஒருமுறைவும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒருமுறையும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். https://www.virakesari.lk/article/238259
-
செம்மணி மனித புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் மார்ச் 16இல் அறிவிக்கப்படும்!
செம்மணி புதைகுழிக்குள் இருந்து வெளியேற்றப்பட்ட வெள்ளநீர் - அகழ்வுப் பணிகள் மார்ச்சில்! Published By: Vishnu 09 Feb, 2026 | 07:02 PM செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைள் திங்கட்கிழமை (09) முன்னெடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுக்க இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல் யாழ்ப்பாணத்தில் கடும் மழை பெய்தமையால் புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நின்றது. இந்நிலையில் புதைகுழிக்குள் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை திங்கட்கிழமை (09) நல்லூர் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது. மழை நீரை வெளியேற்றிய பின்னர் புதைகுழி சேற்று தன்மையாக காணப்படுவதால் அடுத்த கட்ட அகழ்வுபணிகளை முன்னெடுப்பது தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டு, அன்றைய தினத்திற்கு வழக்கு திகதியிடப்பட்டுள்ளது. அதேவேளை புதைகுழிக்குள் இருந்து வெள்ளம் வெளியேற்றும் நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் , சட்டத்தரணிகளான நிரஞ்சன், ஞா.ரஜித்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேரில் இன்றையதினம் சென்று பார்வையிட்டனர். மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்காக கடந்த ஆண்டு நீதி அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதி திரும்பியுள்ளமையால் இவ்வாண்டுக்கு புதிய பாதீடு சமர்ப்பிக்கப்பட்டு, நிதியினை மீள பெற வேண்டியுள்ளமையால் புதிய பாதீட்டை மன்றில் சமர்ப்பிக்க சட்ட வைத்திய அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/238256
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஒன்பதாவது போட்டியும் இனிதே முடிந்தது. நாளைக்கு பாகிஸ்தான் அமெரிக்கப் போட்டி. பாகிஸ்தானுக்கு முதல் சோதனை.
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
வட்டு தெற்கு நா.பரராஜசிங்கம் ஐயா வீட்டு மலசலகூடம், குழி கட்டும் பணி நிறைவு பெற்றது. வெள்ளை அடிக்க வேண்டும். வட்டு தெற்கு நா.பரராஜசிங்கம் ஐயா வீட்டு மலசலகூடம், குழி வெட்டிக் கட்டும் செலவு விபரம். @goshan_che அண்ணை, @வாத்தியார் அண்ணை, @குமாரசாமி அண்ணை, @Kavi arunasalam ஐயா, பரராஜசிங்கம் ஐயாவிற்கு நாம் ஒத்துக்கொண்ட மிகுதி 50000 ரூபாவை வழங்கட்டுமா? பொன்னாலை வேலைகள் சீலனுடைய தாமதத்தால் (வைத்தியசாலையில் நெருங்கிய உறவினர் இருந்ததால்) பிந்துகிறது. நாளை எஞ்சியுள்ள 3 பைக்கற், குறைப் பைக்கற் சீமந்தில் கல் அறுப்பதாக கூறினார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கனடா படு தோல்வி அடைய வில்லை கவுரவமானதோல்வி...................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் 135ரன்ஸ் தாண்ட வாய்ப்பு இருக்கேன கனித்தேன் போர போக்கை பார்த்தால் கனடா அணி150அடிக்கும் போல் தெரியுது......................
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
ஓமானை வீழ்த்தி அணிகள் நிலையில் இலங்கையை முந்தியது ஸிம்பாப்வே Published By: Vishnu 09 Feb, 2026 | 07:33 PM (நெவில் அன்தனி) ஓமானுக்கு எதிராக கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டியில் 8 விக்கெட்களால் மிக இலகுவாக ஸிம்பாப்வே வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் பி குழுவுக்கான அணிகள் நிலையில் நிகர ஓட்ட வேகம் அடிப்படையில் இலங்கையை முந்திக்கொண்டு ஸிம்பாப்வே முதலிடத்தில் இருக்கிறது. ப்ளெசிங் முஸராபனி, ரிச்சர்ட் எங்கரவா, ப்றட் இவான்ஸ் ஆகியோர் துல்லியமாக பந்துவீசி தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றி ஸிம்பாப்வே இலகுவாக வெற்றி பெற வழிவகுத்தனர். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஓமான் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. முதல் ஐந்து வீரர்களில் இருவர் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்ததுடன் மற்றைய மூவரும் 5 ஓட்டங்களுக்கு அப்பால் பெறவில்லை. ஸிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்தப் போட்டியில் ஓமான் சார்பாக விநாயக் ஷுக்லா (28), சுபியான் மெஹ்மூத் (25), நதீம் கான் (20) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். சுபியான் மெஹ்மூத், விநாயக் ஷுக்லா ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்திராவிட்டால் ஓமானின் நிலைமை இதைவிட மோசமாகி இருக்கும். பந்துவீச்சில் ப்ளெசிங் முஸராபனி 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரிச்சர்ட் எங்கரவா 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்றட் இவான்ஸ் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு 104 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 13.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது. எவ்வாறாயினும் ஸிம்பாப்வேயின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஆரம்ப வீரர்களில் ஒருவரான டியொன் மயர்ஸ் (0), தடிவனாஷே மாருமணி (21) ஆகிய இருவரும் மொத்த எண்ணிக்கை 30 ஓட்டங்களாக இருந்தபோது ஆட்டம் இழந்தனர். மற்றைய ஆரம்ப வீரர் ப்றயன் பெனெட், ப்றெண்டன் டெய்லர் ஆகிய இருவரும் திறமையாக துடுப்பெடுத்தாடி அணியின் வெற்றியை அண்மிக்க உதவினர். எனினும் அவர்கள் இருவரும் 68 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ப்றெண்டன் டெய்லர் உபாதை காரணமாக ஓய்வு பெற்றார். ஓட்டங்கள் பெறுகையில் அவர் நொண்டியவாறு ஓடியதை அவதானிக்க முடிந்தது. ப்றெண்டன் டெய்லர் 31 ஓட்டங்களைப் பெற்றார். எனினும் அதன் பின்னர் வெற்றிக்கு தேவைப்பட்ட ஓட்டங்களை ஸிம்பாப்வெ சிரமப்படாமல் பெற்றது. ப்றயன் பெனெட் 48 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா 5 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். ஆட்டநாயகன்: ப்ளெசிங் முஸராபனி https://www.virakesari.lk/article/238257
-
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
எப்ஸ்டீன் இரகசிய ஆவணங்களில் 1,005 முறை இடம்பெற்றுள்ளது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பெயர் Published By: Digital Desk 3 09 Feb, 2026 | 04:45 PM மறைந்த அமெரிக்க பணக்காரரும், பாலியல் குற்றவாளியுமான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான பல மில்லியன் பக்கங்கள் கொண்ட இரகசிய ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது. இதில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் உயர் அதிகாரிகளுடன் எப்ஸ்டீன் கொண்டிருந்த தொடர்புகள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளியாகியுள்ள 35 இலட்சம் பக்கங்கள் கொண்ட மின்னஞ்சல்கள் மற்றும் கடிதப் பரிமாற்றங்களில் விளாடிமிர் புட்டின் பெயர் 1,005 முறை இடம்பெற்றுள்ளது. ரஷ்யா குறித்த குறிப்புகள் 5,000-க்கும் மேற்பட்ட இடங்களில் வருகின்றன. எப்ஸ்டீன் பலமுறை புட்டினைச் சந்திக்க முயற்சி செய்துள்ளதும், அதற்காக ஐரோப்பிய அரசியல்வாதிகளின் உதவியை நாடியதும் தெரியவந்துள்ளது. இருப்பினும், இருவரும் நேரில் சந்தித்ததற்கான உறுதியான ஆதாரம் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. ஐநா-வுக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் விடாலி சுர்கினுடன் (Vitaly Churkin) எப்ஸ்டீன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். சுர்கினின் மகனுக்கு நியூயோர்க்கில் வேலை வாங்கித் தரவும் அவர் முன்வந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு மின்னஞ்சல் ஒன்றில் "சுர்கின் ஒரு சிறந்த நபர், எங்களுக்கிடையிலான உரையாடலுக்குப் பின்னர் அவர் ட்ரம்ப் பற்றி நன்கு புரிந்து கொண்டார்" என எப்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார். எப்ஸ்டீன் ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து இளம்பெண்களை அமெரிக்காவிற்கு அழைத்து வந்ததும், அவர்களை உயர் பதவியில் உள்ளவர்களுக்கு அறிமுகம் செய்ததும் ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். "இந்த விபரீத பாலியல் ஊழல் வழக்கில் ரஷ்ய உளவு அமைப்புகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. எப்ஸ்டீன் ரஷ்யாவின் 'உளவாளியாக' செயல்பட்டாரா என்பது தொடர்பில் போலந்து அரசு விரிவான விசாரணை நடத்தும்." இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது. கிரெம்ளின் மாளிகை ஊடகத் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவிக்கையில், "எப்ஸ்டீன் ரஷ்ய உளவுத்துறையின் சொத்து என்ற வாதத்தை நகைச்சுவையாகக் கூட எடுத்துக்கொள்ள முடியாது; இது நேரத்தை வீணடிக்கும் செயல்" என விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் செல்வாக்கு மிக்க நிதி ஆலோசகராக இருந்த எப்ஸ்டீன், இளம்பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 2019 இல் கைது செய்யப்பட்டார். விசாரணை நிலுவையில் இருந்தபோதே நியூயோர்க் சிறையில் அவர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். அவரது நட்பு வட்டத்தில் உலகத் தலைவர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் பெரும் வர்த்தகர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238233
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இனி வரும் பரிட்சைகள் வெறி டிவிக்கள் எப்படித் தான் பாஸ் ஆகப் போகிறோமோ தெரியாது லொள்😛😁......................
-
செம்மணி மனித புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் மார்ச் 16இல் அறிவிக்கப்படும்!
செம்மணி மனித புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் மார்ச் 16இல் அறிவிக்கப்படும்! Published By: Digital Desk 1 09 Feb, 2026 | 03:38 PM செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் எதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதி அறிவிக்கப்படும் என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (09) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை (09) காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் குறித்து மறுஆய்வு செய்யப்படும், மேலும் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர், குறித்த இடத்தை ஆய்வு செய்த நீதவான் அடுத்த விசாரணையை மார்ச் 16ஆம் திகதி நடத்தவும், அதேநாளில் மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான திகதியை நிர்ணயிக்கவும் உத்தரவிட்டார். இதேவேளை, யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரி, மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான செலவு மதிப்பீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். https://www.virakesari.lk/article/238231
-
பனை மரத்தில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து ; இளைஞர் பலி!
பனை மரத்தில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞர் பலி! Published By: Digital Desk 1 09 Feb, 2026 | 03:03 PM வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொன்னாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நின்ற பனைமீது மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் காயமடைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/238219
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்கள் மட்டுமா பாஸ் . ......குடும்பமே பாஸ்தான் ........! 😂
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
உலகக் கிண்ண அறிமுக அணி இத்தாலியை இலகுவாக வெற்றிகொண்டது ஸ்கொட்லாந்து; இத்தாலி அணியில் இலங்கை வம்சாவளி கிரிஷான் 09 Feb, 2026 | 05:02 PM (நெவில் அன்தனி) கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (09) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சி குழு போட்டியில் இத்தாலியை எதிர்த்தாடிய ஸ்கொட்லாந்து 73 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது. தமது அணியின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை எனத் தெரிவித்து பங்களாதேஷ் அணியை இந்த உலகக் கிண்ணத்திலிருந்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபை விலக்கிக்கொண்டதை அடுத்து அவ்வணிக்கு பதிலாக ஐசிசியினால் சி குழுவில் ஸ்கொட்லாந்து இணைத்துக்கொள்ளப்பட்டது. எட்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐரோப்பிய பிராந்திய உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் இத்தாலியிடம் 12 ஓட்டங்களால் தோல்வி அடைந்த ஸ்கொட்லாந்து, இன்றைய போட்டியில் பதிலடி கொடுத்து அந்தத் தோல்வியை நிவர்த்திசெய்துகொண்டது. ஜோர்ஜ் மன்சே, மைக்கல் ஜோன்ஸ், ப்றண்டன் மெக்முலென் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களும் மைக்கல் லீஸ்க் பதிவுசெய்த 4 விக்கெட் குவியலும் ஸ்கொட்லாந்தின் இலகுவான வெற்றிக்கு வழிவகுத்தன. இதேவேளை, இன்றைய போட்டியின் ஆரம்பத்தில் இத்தாலி அணித் தலைவர் வெய்ன் மெட்சன் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தபோது இடது தோற்பட்டையில் கடும் உபாதை ஏற்பட்டதால் அவர் ஓய்வு பெற நேரிட்டது. இது இத்தாலி அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 207 ஓட்டங்களைக் குவித்தது. இதன் மூலம் இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் 200 ஓட்டங்களைக் கடந்த முதலாவது அணி என்ற சாதனையை ஸ்கொட்லாந்து படைத்தது. ஜோர்ஜ் மன்சே, மைக்கல் ஜோன்ஸ் ஆகிய இருவரும் 83 பந்துகளில் 126 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அவர்கள் இருவரும் 10 ஓட்டங்கள் இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஜோர்ஜ் மன்சே 54 பந்துகளில் 13 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 84 ஓட்டங்களைக் குவித்தார். அவர் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் மைக்கல் ஜொன்ஸ் 37 ஓட்டங்களுடன் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து ப்றெண்டன் மெக்முலென், அணித் தலைவர் ரிச்சி பெறிங்டன் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலபபடுத்தினர். ப்றெண்டன் மெக்முலென் 18 பந்துகளில் 4 சிக்ஸ்கள் உட்பட 41 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ரிச்சி பெறிங்டன் 15 ஓட்டங்களைப் பெற்றார். மைக்கல் லீஸ்க் 5 பந்துகளில் 2 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 22 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். 208 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி 16.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்ப வீரர் ஜஸ்டின் மொஸ்கா (0) ஆட்டம் இழந்த பின்னர் நான்கு துடுப்பாட்ட வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். ஆனால் மற்றையவர்கள் எல்லோரும் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் களம் விட்டகன்றார். அன்தனி மொஸ்கா (13), ஜோன் - ஜோன் ட்ரவோ மட்ஸ் (22) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 32 ஓட்டங்களைப் பகிர்ந்து 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (40 - 3 விக்.) தொடர்ந்து ஹெரி மனென்டி (37), பென் மனென்டி (52) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர். அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்ததும் எஞ்சிய 5 விக்கெட்கள் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன. இந்தப் போட்டியில் இத்தாலி சார்பாக இலங்கை வம்சாவளி வீரரான கிரிஷான் ப்ரியன்த பெர்னாண்டோ கலுகமகே விளையாடியமை விசேட அம்சமாகும். அவர் ஆட்டம் இழக்காமல் 3 ஓட்டங்களைப் பெற்றதுடன் பந்துவீச்சில் விக்கெட் எதனையும் வீழ்த்தவில்லை. பந்துவீச்சில் மைக்கல் லீஸ்க் 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மார்க் வொட் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/238239
-
ஜப்பான் பொதுத்தேர்தல்: சானே தகாய்ச்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி!
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக தெரிவான தகாய்ச்சிக்கு ட்ரம்ப் வாழ்த்து 09 Feb, 2026 | 12:22 PM “ஜப்பானில் நடந்த இந்த தேர்தல் ஜப்பானின் வருங்காலத்துக்கு மிக முக்கியமான ஒன்று. தகாய்ச்சி ஏற்கெனவே வலிமையான, சக்தி படைத்தவர், அறிவாற்றல் கொண்ட தலைவர் என்பதை நிரூபித்திருக்கிறார்” என ஜப்பான் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள சானே தகாய்ச்சிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டை உண்மையாக நேசிப்பவர் தகாய்ச்சி என்றும் கூறிய ட்ரம்ப், எதிர்வரும் மார்ச் மாதம் 19ஆம் திகதி வெள்ளை மாளிகையில் தகாய்ச்சியை வரவேற்க தான் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். ஜப்பான் நாட்டில் நேற்று (8) நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் ஆளும் விடுதலை ஜனநாயக கட்சி (Liberal Democrat Party) 316 இடங்களைப் பெற்று, அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட சானே தகைச்சி (Sanae Takaichi), அதிக வாக்குகளைப் பெற்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜப்பான் பெண் பிரதமர் என்ற சிறப்பை அடைந்திருக்கிறார். இந்நிலையில், தகாய்ச்சிக்கு பாராட்டு தெரிவித்திருக்கும் ட்ரம்ப், அண்மையில் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டபோது, அங்கு தகாய்ச்சியின் நிர்வாகத் திறமையையும் தலைமைப் பண்பையும் கண்டு ட்ரம்ப் பாராட்டியிருந்தார். https://www.virakesari.lk/article/238205
-
வானிலை: முன்கூட்டிய அபாய எச்சரிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட நிலைபேறான மீட்புத் திட்டம் அவசியம் – பாதுகாப்பு பிரதி அமைச்சர்
தித்வா சூறாவளி பாதிப்புகள்: முன்கூட்டிய அபாய எச்சரிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட நிலைபேறான மீட்புத் திட்டம் அவசியம் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் 09 Feb, 2026 | 09:40 AM (நமது நிருபர்) தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீர்செய்து, நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் ஜனாதிபதி பணிக்குழுவின் திட்டங்களுக்கு அமைவாக, நாட்டிற்கு அபாயம் குறித்த முன்கூட்டிய தகவல்களை அடிப்படையாகக் கொண்ட, நிலைபேறான மீட்புத் திட்டத்தை உருவாக்க அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தெரிவித்தார். அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு தொடர்பான விசேட கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (06) அன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. இதில் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் இக்கூட்டத்தில் சேதங்கள் மற்றும் இழப்புகளின் ஆரம்ப மதிப்பீடுகள், மீட்புத் தேவைகளுக்கான நிதி கணக்கீடு மற்றும் சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் வழங்கவுள்ள ஆதரவின் தன்மை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. பாதுகாப்புச் செயலாளர், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் குடியிருப்பு ஒருங்கிணைப்பாளர், ஐரோப்பிய ஒன்றியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர், ஜனாதிபதி பணிக்குழுவின் கீழ் இயங்கும் எட்டு உபகுழுக்களில் 'அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீட்டுக் குழுவே' முதன்மையானது. இந்தக் குழுவின் தலைமையின் கீழ் ஏனைய குழுக்கள் மேற்பார்வை செய்யப்படுவதுடன், 'மீளக் கட்டியெழுப்பும் இலங்கை' திட்டத்தின் இலக்குகளை அடைவதற்கு இந்த மதிப்பீடு மிக முக்கியமானது. தித்வா புயலால் ஏற்பட்ட உட்கட்டமைப்புச் சேதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் சமூகத் தாக்கங்கள் ஆகியவற்றை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உரிய அதிகாரிகள் முறையாகப் பகுப்பாய்வு செய்வது அவசியம். அவசர நிவாரணப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது நீண்டகால மறுசீரமைப்பு மற்றும் மீளமைப்புக்கான கட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டிற்கு அபாயம் குறித்த முன்கூட்டிய தகவல்களை அடிப்படையாகக் கொண்ட, நிலைபேறான மீட்புத் திட்டத்தை உருவாக்க அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்றார். https://www.virakesari.lk/article/238185