All Activity
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளை நடக்கும் போட்டி மைதானம் சுழல் பந்துக்கு சாதகமான மைதானம் பாக்கிஸ்தான் அணியில் பல சுழல்பந்து வீச்சாளர்கள் இருக்கினம்................இங்லாந்தை பாக்கிஸ்தான் வெல்லக் கூடும்.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாக்கிஸ்தான் நாட்டை பூர்விகமா கொண்ட சிம்பாவே கப்டன் 2027 உலக கோப்பை வர விளையாடுவாரா.....................பல வருடம் கிழித்து சிம்பாவே அணிய சரியாக வழி நடத்தி வெற்றி பாதைக்கு அழைத்து சென்றவர்.................. இவரின் ஓய்வு சிம்பாவே அணிக்கு பின்னடைவாய் இருக்கும்...............................
-
யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு உத்தரவு!
சிங்கள அரசுகள் கொடுக்கிற மாதிரி காட்டி பறிக்கிற மாதிரி பறிப்பதுதான் வேலை ..இது என்ன நமக்குப் புதிசா
-
கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது
அவதானமாக இருங்கள் அய்யனே...வெளியில் போக வேண்டாம் ...கிரிக்கட்டை பாருங்கள் ... யாழில் கிறுக்குங்கள்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளைக்கு இங்லாந் எதிர் பாக்கிஸ்தான் இரண்டு அணிகளையும் பிடிக்கும் இங்லாந்தை ஒரு படி கூட பிடிக்கும்............வெற்றி வாய்ப்பு பாக்கிஸ்தானுக்கு அதிகம்...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வார ஞாயிற்றுக் கிழமையுடன் கிரிக்கேட் திருவிழா முடிவடையுது இந்தக் கிழமையுடன் ஒரு நாள் இரண்டு போட்டி முடிவடையுது அதுக்கு பிறக்கு ஒரு நாளுக்கு ஒரு போட்டி................. பினல் போட்டி இந்தியாவில் நடக்கா விட்டால் மகிழ்ச்சி பாக்கிஸ்தான் பினலுக்கு வந்தால் இந்தியாவில் நடக்காது ஹா ஹா😄............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியான்ட கையில் கோப்பை போகாது தென் ஆபிரிக்கா அல்லது நியுசிலாந் இந்த இரண்டில் ஒரு அணி கோப்பையுடன் நாடு திரும்பக் கூடும்................................
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாழ்கள் போட்டியில் யாருக்கும் புள்ளி கிடைக்காம முடிஞ்ச போட்டி என்றால் இதுவாய் தான் இருக்க முடியும்😄😛....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்த பாரிய வெற்றிக்குப் பின், இந்தியாவின் நிலைமைதான் மோசம். மே.இ தெ.ஆவ வென்றாலே போதும். ஓட்ட விகிதத்தில் இந்தியா கதி அதோ கதிதான். இந்தியா இனித் தோக்காமலே வெளிய போய்விடும்.
-
மகா சங்க மாநாடு இன்று!
பௌத்த மகா சம்மேளனம் தோல்வி; ஒருசில தேரர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது - அமைச்சர் லால்காந்த Published By: Vishnu 23 Feb, 2026 | 08:41 PM (இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்துக்கு பாடம் கற்பிப்பதாகக் குறிப்பிட்டுக் கொண்டு கொழும்பில் நடந்த பௌத்த சங்க சம்மேளனம் தோல்வியடைந்துள்ளது. ஒருசில பௌத்த பிக்குகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் கிடையாது என விவசாயம், நீர்பாசனத்துறை மற்றும் காணி அமைச்சர் லால் காந்த தெரிவித்தார். கொழும்பில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கத்துக்கு எதிராக சகல எதிர்க்கட்சிகளும் இன்று ஒன்றிணைந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என தேர்தல் காலத்தில் முரண்பட்டுக் கொண்டிருந்த சகல தரப்பினரும் இன்று நண்பர்களாக கைகோர்த்துள்ளார்கள். கடந்த கால ஊழல் மோசடிகள் மற்றும் படுகொலைகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போது அச்சமடைந்துள்ளவர்கள் இன்று அரசாங்கத்துக்கு எதிராக கைகோர்த்துள்ளார்கள். அரசாங்கத்துக்கு பாடம் கற்பிப்பதாகக் குறிப்பிட்டுக் கொண்டு கொழும்பில் நடந்த பௌத்த சங்க சம்மேளனம் தோல்வியடைந்துள்ளது. ஒருசில பௌத்த பிக்குகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் கிடையாது. எதற்காக இந்த மாநாட்டை அவர்கள் நடத்தினார்கள் என்று அவர்களுக்கும் தெரியாது, அதில் கலந்துக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவருக்கும் தெரியாது. அரசாங்கத்தக்கு எதிராக எங்கு போராட்டம், மாநாடுகள் நடக்கிறது. அங்குச் சென்று அமர்ந்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் தான் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளார். குறுகிய அரசியல் இலாபத்துக்காக தவறான செயற்பாடுகளுக்கு துணைசெல்ல வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக் கொள்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/239403
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா வெஸ்சின்டீஸ் கூட தோத்தால் உலக கோப்பையில் இருந்து இந்தியா வெளிய ஏற்க்கனவே தென் ஆபிரிக்காவிடம் படு தோல்வி புள்ளி பட்டியலில் வெஸ்சின்டீஸ் அணி நல்ல நிலையில் நிக்கினம் வெஸ்சின்டீஸ் இந்தியா கூட இதே போல் விளையாடினால் இந்தியா தோப்பது உறுதி......................... இந்தியா அணி இந்த உலக கோப்பையில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை................பாப்போம் வெஸ்சின்டீஸ் அணிய வெல்லுகினமான்னு.............................
-
"சாய் வித் சித்ரா" போலி விவாதம்
"சாய் வித் சித்ரா" போலி விவாதம் By ஆர். அபிலாஷ் February 21, 2026 "சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமான நாடகக் காட்சிகள், மேலோட்டமான பக்தி என தன்னை மறு-உருவாக்கம் செய்துகொண்டார். அதுவும் "அறம்" இருக்கிறதே ரொம்ப மட்டமான ஒரு தொகுப்பு. மிகையான மதிப்பீடுகள், போலியான அற விழுமியங்கள், போலியான மனிதச் சித்தரிப்புகளின் அடுக்கு அது. அவரே நல்லுணர்ச்சிகளைத் தூண்டும் நோக்கில் எழுதியதாகச் சொல்கிறார். எந்த இலக்கியவாதியும் அப்படிச் செய்ய மாட்டார். அது இலக்கியத்தின் நோக்கம் அல்ல. நல்லுணர்ச்சி என்ன அல்வாவா பொட்டலம் மடித்துக் கொடுக்க? அதுவென்ன பாலுணர்ச்சியா தூண்டுவதற்கு? அது 30,000 பிரதிகள் விற்றதாக பவா சொன்னதில் அதிர்ச்சி இல்லை. அது பல லட்சம், கோடி பிரதிகள் விற்றிருக்க வேண்டும். நம் ஊரில் வாசிக்கவே தெரியாத எத்தனையோ கோடி பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அது போய் சேர்ந்திருக்க வேண்டும். அவர்களுக்கு அந்நூல் ரொம்பவே பிடிக்கும். "வெண்முரசு" இன்னொரு கொடுமை. வியாசரின் "மகாபாரதத்தைப்" படித்திருக்கிறேன். அதைப் படித்தவர்களுக்குத் தெரியும் - அதில் பாத்திரங்கள் அவ்வளவு எதார்த்தமாக இருக்கும். நிறைய பலவீனங்கள், ஈகோ, தன்னலம் ஆகியவற்றால் நடத்தப்படுபவர்களாக இருப்பார்கள். அர்ஜுனன் கூட ஆன்ம பலம் மிக்கவனாக இருந்தாலும் பெரும்பாலும் எளிய உணர்ச்சிகளே அவனைப் பிடித்தாட்டும். இதையெல்லாம் நீங்கள் ஜெயமோகனின் "வெண்முரசு" பாத்திரங்களில் பார்க்க முடியாது. அவர்கள் டிவி தொடர் பாத்திரங்களைப் போல இருப்பார்கள். அவர் டிவி தொடருக்காக எழுத ஆரம்பித்து பின்னர் நாவலாக மாற்றிவிட்டதாக சொல்கிறார்கள். கார்ட்போர்ட் பாத்திரங்கள், கார்ட்போர்ட் கதை. மகாபாரதம் எனும் மகத்தான காவியத்தைப் படிக்க விரும்பும் ஒரு தலைமுறைக்கு அதன் சாரத்தைத் தொடாமல் வடிவத்தை மட்டுமே எடுத்து சீரியல் வடிவில் அவர் தனதான ஜிகினா மொழியில் எழுதிக் கொடுத்துவிட்டார். அது வெளிவந்தபோது ஒரு பதிப்பாள நண்பர் என்னிடம் சொன்னார், "வாசகர்களை இந்துத்துவப்படுத்த ஜெயமோகன் அதைச் செய்கிறார்" என்றார். ஆனால் அந்தளவுக்குகூட அதற்கு முக்கியத்துவம் இல்லை. ஜெயமோகனுக்கு இது தெரியும் - தன் இலக்கிய வீழ்ச்சியை ஈடுகட்டத்தான் அவர் இலக்கிய அரசியல் செய்கிறார், கூட்டம் கூட்டமாகப் போடுகிறார், பணம் செலவழித்து எழுத்தாளர்களைத் தன் வசம் இழுக்கிறார், விருது ஆசை காட்டுகிறார், சினிமாக்காரர்களை வரவழைத்து அவர்களுடைய அணுக்கம் தரும் அதிகாரத்தைக் காட்டி இன்னும் மிரட்டுகிறார், இப்போது ரீல்ஸும் போடுகிறார். இதுதான் நம் இலக்கியவாதிகள் வந்து சேர்ந்துள்ள இடம். இவர்களை வாசிப்பவர்கள் நிலை பட்டுக்கோட்டை பிரபாகரை வாசிப்பவர்களை விடப் பரிதாபம். அவர்களுக்காவது தமக்கு இலக்கியம் தெரியாது என்று தெரியும்; இவர்களுக்குத் தாம் வாசிப்பது இலக்கியம் அல்ல என்று தெரியாது. இந்த லும்பன் இலக்கிய கும்பலுக்கும் அசல் இலக்கிய வாசகர்களுக்கும் தான் இடைவெளி இன்று எழுந்துள்ளது. நாம் பேச வேண்டியது பாவப்பட்ட பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவிடம் அல்ல, போலியான சினிமாத்தனமான இலக்கிய எழுத்தாளர்களிடம்தான். பின்குறிப்பு: இன்றும் மிகத்தீவிரமான சிக்கலான ஆழமான இலக்கியத்தைப் படிப்பதற்கு மிகக் குறைவான வாசகர்களே உள்ளனர். அவ்வளவு பேர் இருப்பதே சாத்தியம் என எனக்குத் தோன்றுகிறது. அதாவது சிறந்த நாவல்களை நீங்கள் லட்சக்கணக்கில் கூட விற்க வைக்கலாம். அதற்கு சந்தையும் ஊடகங்களும் உதவக் கூடும். ஆனால் அவற்றை ஆழமாக வாசிக்கும் பயிற்சி அப்போதும் மிகக்குறைவானவர்களிடமே இருக்கும். நல்ல இலக்கியத்தை வெகுமக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது. அப்படிச் சேரும் நிலை ஏற்பட்டால் நம் உலகம் இப்படி இருக்காது. அது பௌதீகமாகவும் ஆன்மீகரீதியாகவும் முழுமையாக விடுதலை பெற்றிருக்கும். https://www.writerabilash.in/2026/02/blog-post_21.html
-
ஏராளன் started following இரணைதீவில் சட்டவிரோத கடலட்டைகள் மீட்பு : 10 பேர் கடற்படையினரால் கைது! , "சாய் வித் சித்ரா" போலி விவாதம் , கொக்குத்தொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை ஊடறுத்து யானைவேலி மற்றும் உப்பளம் அமைக்கும் செயற்பாடு; முல்லை மாவட்டசெயலரின் கவனத்திற்கு கொண்டுவந்த - ரவிகரன் எம்.பி and 2 others
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
107ரன்ஸ் வித்தியாசத்தில் வெஸ்சின்டிஸ் அணி அமோக வெற்றி......................
-
கொக்குத்தொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை ஊடறுத்து யானைவேலி மற்றும் உப்பளம் அமைக்கும் செயற்பாடு; முல்லை மாவட்டசெயலரின் கவனத்திற்கு கொண்டுவந்த - ரவிகரன் எம்.பி
கொக்குத்தொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை ஊடறுத்து யானைவேலி மற்றும் உப்பளம் அமைக்கும் செயற்பாடு; முல்லை மாவட்டசெயலரின் கவனத்திற்கு கொண்டுவந்த - ரவிகரன் எம்.பி Published By: Vishnu 23 Feb, 2026 | 06:49 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநல சேவைநிலயப்பிரிவிற்குட்பட்ட தமிழ் மக்களின் நெற்செய்கைக் காணிகளை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் யானைவேலி அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன், கோட்டைக்கேணி பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஆக்கிரமித்து உப்பளம் ஒன்றை அமைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பு பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட முறையீடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் 23.02.2026 இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்குத் தெரியப்படுத்தியதுடன், குறித்த விடயங்கள் தொடர்பில் கவனஞ்செலுதனதுமாறும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில், கொக்குத்தொடுவாய் கமநலசேவைநிலையப் பிரிவிலுள்ள கூமாவடிக்கண்டல், நாயடிச்சமுறிப்பு, கன்னாட்டி, அக்கரைவெளி உள்ளிட்ட தமிழர்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் யானைவேலி அமைப்புக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களை ஆக்கிரமித்து விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் பெரும்பான்மை இனத்தவர்கள் காட்டுயானைகளிடமிருந்து பாதுகாப்பபைப் பெறுவதற்காக தமிழ் மக்கள் தற்போது நெற்செய்கையில் ஈடுபட்டுவரும் வயல் நிலங்களின் குறுக்காக இவ்வாறு யானைவேலிகள் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் நாடாளுன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அத்தோடு தமிழ் மக்கள் தற்போது நெற்செய்கையில் ஈடுபட்டுவரும் வயல்காணிகளையும் ஆக்கிரமிப்புச் செய்வதற்கான ஒரு உத்தியாகவே இவ்வாறு தமது வயல் காணிகளின் குறுக்காக மகாவலி அதிகாரசபை யானைவேலி அமைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாகவும் கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பு பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மகாவலி அதிகாரசபைதொடர்பில் குற்றச்சாட்டொன்றும் முன்வைக்கப்பட்டிருந்தது. அதேவேளை கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவிலுள்ள கோட்டைக்கேணி பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஆக்கிரமிப்புச்செய்து உப்பளம் அமைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இத்தகையசூழலில் 23.02.2026இன்று கொக்குத்தொடுவாய் கமக்காரஅமைப்பு பிரதிநிதிகளுடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்குசென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த பிரச்சினைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரரனின் கவனத்திற்கு கொண்டுவந்தார். குறிப்பாக கோட்டைக்கேணியில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்கப்படக்கூடாதென்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தீர்மானத்தை மீறி உப்பளம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதயைும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் முல்லைத்தீவு மாவட்டசெயலாளரிடம் சுட்டிக்காட்டினார். அத்தோடு குறித்த பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் கமக்கார அமைப்பினால் தமக்கு கோரிக்கை கடிதம் கையளிக்குமாறு கேட்டுக்கொண்ட முல்லைத்தீவு மாவட்டசெயலாளர், இவ்விடயங்கள் தொடர்பில் தம்மால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/239400
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிம்பாவே வீரர்களும் அந்த மாதிரி சிக்ஸ் அடிக்கினம் ஹா ஹா......................
-
இன்று உலக தாய்மொழி தினம்
சர்வதேச தாய்மொழி தினம்! Feb 21, 2026 - 05:11 PM சர்வதேச தாய்மொழி தினத்தினத்தினை முன்னிட்டு அனைத்து இன மக்களும் கலந்துகொண்ட உணவு கண்காட்சியொன்று இன்று (21) மட்டக்களப்பில் நடாத்தப்பட்டது. உணவின் மொழி வழியாக உள்ளூர் உணவுகளின் மடைபரவல் என்னும் தொனிப்பொருளில் இந்த உணவு திருவிழா மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் நடைபெற்றது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் கைத்தொழில் மற்றும் சமூக இணைப்பு மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் மட்டக்களப்பில் வாழும் அனைத்து இன மக்களின் பாரம்பரிய உணவுகளைக்கொண்டதாக இந்த கண்காட்சி அமைந்திருந்தது. பேராசிரியர் சி.ஜெய்சங்கரின் ஒழுங்கமைப்பிலும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர் அருளானந்தம் தலைமையிலும் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ப.பிரதீபன் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர். மூத்தோர்களின் நினைவுகளிலிருந்தும் அவர்களின் அனுபவங்களிலிருந்தும் கைவிட்டுப்போன, அருந்தலாகிப்போன, மறைக்கப்பட்ட எமது முன்னோர்களின் உருவாக்கங்களான ஊட்டமான உணவுகளின் சுவையினை எமதாக்கிக்கொள்ளும் சுகநலவாழ்விற்கான பயணம் என்னும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இதன்போது வேடுவசமூகத்தின் உணவுகள், இஸ்லாமிய மக்களின் உணவுகள், இந்து சமூகத்தின் உணவுகள், பறங்கிய சமூகத்தின் உணவுகள், சிங்கள சமூகத்தின் உணவுகள் என மட்டக்களப்பில் வசிக்கும் அனைத்து இனமக்களினதும் பண்டைய உணவுகள் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பெருமளவான பொதுமக்களும் மாணவர்களும் இந்த கண்காட்சிகளை பார்வையிட்டதுடன் உணவினையும் சுவைத்துச்சென்றதை காணமுடிந்தது. https://adaderanatamil.lk/top-picture/cmlw8zn730002356pkkkzkz52
-
பாலியல் வன்முறை எனும் விதிவிலக்கின் மொழி
பாலியல் வன்முறை எனும் விதிவிலக்கின் மொழி By ஆர். அபிலாஷ் February 03, 2026 எப்ஸ்டைன் கோப்புகள் குறித்த தரவுகள் உண்மையில் கொட்டிக் கிடக்கின்றன. இந்தியாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்குமான வித்தியாசம் இது. நாம் இத்தகைய விவகாரங்களை கிசுகிசு, வம்பு, கற்பனைக் கதைகளுக்குள் மறைத்துவிடுவோம். அவர்களை அவற்றை ஆவணங்களாகவே பொதுவெளியில் வெளியிடுகிறார்கள். ஆனால் அதற்காக எப்ஸ்டைனைப் போன்ற சிறுமிகளைப் பாலியல் தேவைக்காக பயன்படுத்துவோர், பணத்தைக் காட்டி பல இளம்பெண்களைச் சுரண்டுவோர், அவர்களை டிரம்பைப் போன்ற வேறு நண்பர்கள், அதிகார வர்க்கத்தினரிடம் பகிர்ந்து கொள்வோர் இந்தியாவில் இல்லையென்றில்லை. இத்தகையோர் வரலாற்றில் இதற்கு முன் இருந்ததில்லையா? இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள். இதைப் பற்றிப் படிப்பவர்களை அதிகம் தொந்தரவு செய்வது, கலங்கடிப்பது எந்த வரைமுறையுமற்ற பாலியல் அத்துமீறல்கள். குற்றங்கள் கூட அல்ல. ஏனென்றால் ஒருவிதத்தில் பாலியல் தரகர்கள், சினிமா தயாரிப்பாளர்கள், மாடல்களை வைத்து நிகழ்ச்சி நடத்தும் நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார் எப்ஸ்டைன். அவரிடம் யாரோ விசாரணை செய்யும் காணொளியும் வெளியாகி இருக்கிறது. அதிலும் இப்பணம் கேள்விக்குள்ளாகிறது. உங்கள் பணம் நியாயமானதா என்பதைப் போலொரு கேள்வி. எப்ஸ்டைன் ஆமாம் அதற்கென்ன? நான் சம்பாதித்ததுதானே என்கிறார். இதனாலே பாலின பேதம், பாலின அதிகாரம் எனும் தனிமனித ஒழுக்கம், தனிமனித அதிகாரம் எனும் குறுகிய எல்லையைக் கடந்து நாம் இப்பிரச்சினையைப் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். எப்ஸ்டைனின் நடவடிக்கைகளைப் பார்க்கையில் அவர் இளம்பெண்களை விருப்பமின்றி கடத்தி வந்து கொடுமைப்படுத்தியதாகத் தெரியவில்லை. அவரைக் குறித்து பின்னர் புகார் தெரிவித்தவர்களும் ஏதோ ஒரு கொடுக்கல் வாங்கலில் உள்ளே வந்தவர்கள். அல்லது தரகர்கர்களால் ‘வாங்கப்பட்டு’ கொண்டு வரப்பட்டவர்கள். அப்பெண்கள் இப்போது புகார் சொல்வதில் நிறைய நியாயம் உள்ளது. அவர்கள் முகமையற்ற ‘விற்பனைப் பண்டங்கள்’. சமத்துவத்தை நம்பும் சமூகத்தில் மனிதர்களை, அதுவும் குழந்தைகளைப் பண்டமாக்கி விற்க முடியுமா, என்பது நம்மை நடுங்கச் செய்கிறது. ஆனால் பிரச்சினை உண்மையில் எப்ஸ்டைன்கள் அல்ல, இந்த ‘தொழில்’தான். நாம் இதை நோண்டினால், அலசினால், கேள்வி கேட்டால் நிறைய நிறைய அசௌகர்யங்கள் ஏற்படும் - பாலியல் ஒழுக்கம், பாலியல் குற்றங்கள், அவை ஏன் நிகழ்கின்றன, குடும்பம், பாலியல் கட்டுப்பாடுகள், மதம் ஆகியவற்றுக்கும் ஒழுக்க மீறலுக்குமான தொடர்பு என்ன ஆகிய கேள்விகள். அடுத்து கட்டுக்கடங்காத பெருஞ்செல்வம் ஏன் எப்போதுமே மிதமிஞ்சிய போதைப் பழக்கம், பாலியல் மீறல்களுக்கு வழிவகுக்கின்றன? (நான் குடும்பத்தைப் பற்றி வேறோர் இடத்தில் பேசியிருப்பதால் இங்கு தவிர்க்கிறேன்.) அடுத்து, செல்வம் ஏன் எப்போதும் மனிதர்களை சமூக அமைப்புகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் வெளியே ‘சுதந்திரமானவர்களாக’ மாற்றுகிறது? இச்சுதந்திரம் ஏன் அறத்தினால் நெறிப்படுத்தப்படுவதில்லை? ஏன் அறம் ஒரு மத்திய வர்க்கச் சிக்கலாக மட்டும் இருக்கிறது? ஏன் பெரும் பணக்காரர்கள் அறத்தைப் பற்றி கவலை கொள்வதில்லை? ஏன் வணிகவியல் படிப்புகளில் அறம் சொல்லித் தரப்படுவதில்லை? ஏன் நம்மால் அத்தகைய வர்க்கத்தினரைக் கட்டுப்படுத்த முடிவதில்லை? ஆக ஒவ்வொரு முறை இத்தகைய குற்றங்கள் சர்ச்சையாகும்போதும் நாம் இவர்களைத் தூற்றிவிட்டு வேலையைப் பார்க்கப் போகிறோம். ஆனால் மத்திய, கீழ் வர்க்கத்தினர் இதே குற்றங்களைச் செய்ய முற்பட்டால் அவர்கள் சிதைக்கப்பட்டு எல்லாருக்கும் முன்னுதாரணமாக மாற்றப்படுவார்கள். அறத்துக்கு அப்பாலான ஒரு வர்க்கம் இருக்கிறதா? அவர்கள் வர்க்கப் படிநிலைக்கு அப்பாலாக இருக்கிறார்களா? பணம் எனும் தூய கருத்துரு அதைச் சாத்தியமாக்குகிறதா? அதாவது பணமே கடவுளுக்கு மாற்றாகத் தோன்றிய தூய கருத்துரு என்று மார்க்ஸ் சொல்வது சரியெனில் பணம் ஒரு வர்க்கத்தை கடவுளுக்கு இணையாகக் கொண்டு நிறுத்துகிறதா? ஒரு கடவுளைக் கீழிறக்கி சிறையில் தள்ளி சவுக்கால் அடிப்பதைப் போலத்தான் எப்ஸ்டைனை இப்போது செய்திருக்கிறார்களா? அவரது மரணம் எதைக் காட்டுகிறது? அவரது நேர்காணலில் நீங்கள் சாத்தானின் மனித உருவமா எனும் கேள்வி இதை மனத்தில் வைத்தே எழுப்பப்படுகிறதா? இதைக் குறித்தும் நாம் யோசிக்க வேண்டும். கடைசியாக, எப்ஸ்டைனுடையது (பிறழ்வு என்றல்லாமல்) பாலியல் வன்முறைக் குற்றம் என வகைப்படுத்தப்படும் எனில் அது உபயோகமாக இருக்கும். அது பாலியல் வன்முறை நிறுவனமயப்பட்டது, அதைப் பணம் சாத்தியப்படுத்துகிறதா எனும் கேள்விக்கு நம்மை இட்டுச் செல்லும். பாலியல் கட்டுப்பாட்டை ஒழுக்கவாதமாக அல்லாமல் சட்டரீதியான சமூகக் கட்டுப்பாடாகப் பார்த்தோமானால் இன்னும் தெளிவான பதில் கிடைக்கும். நம் சட்டம் அனைவரையும் சமமாகப் பார்த்தாலும் ஆளும் அதிகார வர்க்கம் சட்டத்துக்கு அப்பாலான ஒரு வர்க்கமாகவே எல்லா நாடுகளிலும் உள்ளது. அளவற்ற செல்வம் படைத்த வர்க்கமே ஆளும் கட்சிகளைக் கட்டுப்படுத்துவதால் அவர்களும் நீதிமன்றத்துக்கு அப்பாலான ஒரு மீ-குடிமக்களாக மாறுகிறார்கள். இதை நீதிமன்றம் இவ்வர்க்கத்தினரை நடத்தும் விதத்தைப் பார்த்தாலே புரியும். ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் எந்தத் தலைவரையும் குற்றம் சாட்டி நம்மால் சிறைக்கு அனுப்ப முடியாது. அதிகாரத்தை இழந்த பின்னரே இயலும். ஒருவிதத்தில் அதிகாரத்தின் மீதான மரியாதை (மக்கள் அளிக்கும் அதிகாரத்துக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு எனும் பெயரில்) அரசை நீதிமன்றத்துக்கு அப்பால் நிறுத்துகிறது. ‘மக்களுக்காகவே நீதி, நீதிக்காக மக்கள் அல்ல’ எனும் பெயரில் நீதிமன்றத்தின் ‘நடைமுறை வரம்பிற்கு’ வராத வர்க்கமொன்று தோற்றுவிக்கப்படுகிறது. இவர்களுக்கு நிதியளிக்கும் வர்க்கமே நவீன கடவுளாக நம் சமூகத்தில் இருந்து வருகிறார்கள். இது ஊழலோ, எதார்த்தமோ அல்ல, இது சமூக நிறுவனங்கள் அளித்துள்ள ஒருவித அனுகூலம். எப்போதுமே நிறுவனங்கள் ‘விதிவிலக்குகளின்’ அடிப்படையிலே தோன்றுகின்றன என்பதை நாம் நினைவுகொள்ள வேண்டும். நீதி விசாரணையில் இருந்தும் சமத்துவத்தில் இருந்தும் விதிவிலக்கு என்பதே ஜனநாயகச் சமூகங்களில் பணக்கார, ஆளும் வர்க்கத்தை உருவாக்குகிற ‘விதிவிலக்கு’. அவ்விதிவிலக்கு இல்லையெனில் சமூக அதிகாரக் கட்டமைப்பு சீர்குலையும் என நம்புகிறேன். பெரும்பகுதியினர் ஏன் சிறுபான்மைக்குக் கட்டுப்பட வேண்டும்? ராணுவம், போலீஸ், மூலதனம் மீதான அச்சத்தினாலா? இவை நிபந்தனைக்குட்பட்டவை. நிபந்தனைக்குட்படாத ஒன்றுதான் மக்களைக் கட்டுப்படுத்துகிறது - அதுவே ‘விதிவிலக்குகள் அற்றவர்களாக இருக்கிறோம், அவர்கள் விதிவிலக்கால் இருக்கிறோம்' எனும் நிஜம். இந்த விதிவிலக்கே உடனடியாக நம்மைப் பணிய வைக்கிறது. இந்த விதிவிலக்கின் மொழியே பாலியல் நாட்டம் / வன்முறை. கடவுளும் பணமும் இந்த விதிவிலக்கின் இலக்குகள். பணத்துக்கும் பாலியல் கட்டுப்பாட்டுக்குமான இந்த உறவு வினோதமாகவும் அதே சமயம் உண்மையாகவும் இருக்கிறது - பணம் அதிகரிக்க அதிகரிக்க பாலியல் கட்டுப்பாடுகள் விலகிக் கொண்டே வருகின்றன. அது குறையக் குறைய கட்டுப்பாடுகளும் அதிகாரிக்கின்றன. பணமே இல்லாவிட்டாலும் பரவாயில்லை எனும்படிக்கு வறுமை தீவிரமாகும்போதும் பாலியல் கட்டுப்பாடுகள் காணாமல் போகின்றன. இதனால்தான் எப்ஸ்டைன் போன்றோரின் வீழ்ச்சியை நாம் அருவருப்புடன் காண்கிறோம், ஆனால் மனதுக்குள் கொண்டாடுகிறோம். அவர்கள் அனுபவிக்கும் விதிவிலக்கின் திளைப்பு நம்மை உலுக்குகிறது. நாம் வன்முறையை அஞ்சும் அளவுக்கு அதை நேசிக்கவும் அதற்காக ஏங்கவும் செய்கிறோம். வன்முறையின் விளிம்பிலே ஒவ்வொரு கணமும் நின்றுகொண்டிருக்கிறோம் என்பதை நவீன மனிதர்களின் உடல்மொழி, சைகைகளைக் காண்கையில் தோன்றுகிறது (பாலியல் வன்முறையும் இதற்குள் வரும்). இந்த ‘விளிம்பு நிலை’ ஒரு தவிப்பு நிலை. இங்கிருந்து நாம் எப்ஸ்டைனைப் பார்க்கிறோம். மனிதர்கள் விலங்குகள் என்றோ அதனாலே அவர்கள் வன்முறையால் செலுத்தப்படுகிறார்கள் என்றோ நான் சொல்ல மாட்டேன். பணம் எனும் அரூபமான அதிகாரமே வன்முறையை உருவாக்குகிறது என நம்புகிறேன். கடவுளுக்கும் இத்தகைய சக்தி உண்டு. ஏனென்றால் இரண்டுமே விதிவிலக்கைத் தோற்றுவிக்கின்றன. இதைப் புரிந்துகொள்ள நீங்கள் கடவுளை மையமிட்ட மதங்களின் புராணக் கதைகளைப் பாருங்கள். அவற்றில் தொடர்ந்து கடவுளுக்கும் அறத்துக்குமான முரண்பாடு பேசப்பட்டிருக்கும். கடவுள் ஏன் இப்படிக் கொடூரமாக இருக்கிறார் எனக் கேட்டுவிட்டு அதற்கு ஒரு விளக்கம் அளிப்பார்கள். அது கடவுளை விதிவிலக்கானவராக்கும். பக்தி என்பதே இந்த ‘கொடூரத்தைக்’ காதலிப்பதுதான். மெல்லமெல்ல நாம் விவசாயத்தைக் கண்டுபிடிக்கிறோம், வேளாண் சமூகமாகிறோம், நிலத்தையும் அதில் பணிசெய்வோரையும் குழந்தைகளையும் நம் ‘தனிச்சொத்து’ எனும் புரிதலுக்கு வருகிறோம். வன்முறை அனைவரையும் அனைத்தையும் கட்டுப்படுத்தும் விதிவிலக்காக மாறியது இக்காலத்திலாகத்தான் இருக்க வேண்டும். அப்போதும் ஒன்று கூடாது என்றும், அதற்கு விதிவிலக்கு உண்டு எனும் இருமை இருந்திருக்கிறது. நிலத்தின் அடிப்படையிலான வளம், தங்கமாகவும் பணமாகவும் மன்னர்கள் காலத்தில் மாறுகிறது. இப்போது விதிவிலக்கை நாம் நீதி, அறம் ஆகியன குறித்த விவாதங்களால் வடிவமைத்தோம். விதிவிலக்கை எப்போது மீறலாம், எப்போது கூடாது என்பதில் வரும் சச்சரவே மகாபாரதப் போரும், விதிவிலக்கே ஆன்ம ஆற்றல் எனும் கோட்பாடே கீதைப் பேருரையும் ஆகின்றன. அதன் பின்னர் காலனிய காலம் வருகிறது, அதைத் தொடர்ந்து நவீன சமூகங்கள் தோன்றுகின்றன. நவீன பணம் வணிக வர்க்கத்தை சமூகத்தின் உச்சத்திற்கு கொண்டு வர மக்கள் அனைவரும் அதை நோக்கிப் போக விரும்புகிறார்கள். இந்த இச்சையை வடிவமைக்க நாம் ஜனநாயக அமைப்பை உருவாக்குகிறோம். அடிப்படையில் அசமத்துவத்தை உருவாக்குகிற பொருளாதார அமைப்புக்குள் நியாயமான போட்டியும், சம வாய்ப்புகளும் உள்ளதாக ஒரு கதையாடலை உருவாக்குகிறோம். முதலில் நிலமும் உழைக்கிறவரின் உடலும் யார் கட்டுக்குள் இருக்கிறதோ அவரே ஒருவித மிதமான விதிவிலக்கை அனுபவித்தார். அதன்பிறகு மன்னரும் மதமும் அந்த இடத்தை எடுத்துக் கொள்ள, மன்னருக்கும் பூசாரிக்கும் விதிவிலக்கு கிடைக்கிறது. அவர்கள் குற்றம் செய்யலாம், தண்டனை இல்லை, அவர்கள் பிறரது குற்றங்களைத் தண்டிக்கலாம் (சாதி எனும் விதிவிலக்கை நேரடியாக நிர்வகிக்கும் சமூகவியல் அமைப்பும் தோன்ற்கிறது). அறம் இன்னும் சிக்கலாகிறது. அவர்களைத் தொடர்ந்து காலனியம் நேரடியாக உடல் மீது அதிகாரம் கொள்ளும் விதிவிலக்கையும் அடிமை விற்பனையையும் அறிமுகப்படுத்துகிறது. நவீன ஜனநாயக உலகில் வணிகச் சமூகங்களும் ஆளும் வர்க்கமும் பணத்தைக் கொண்டு விதிவிலக்கை உருவாக்கி முற்று முழுதான அதிகாரத்தைக் கட்டமைத்தனர். இப்படித்தான் கடவுளின் அதிகாரத்தை நாம் செல்வத்துக்குக் கொடுத்தோம். கடவுளைப் போன்றே அறத்தைக் கடந்த ஒரு மீ-இருப்பாக பணம் மாறியது. பணத்தை முழுமையாகக் கைக்கொண்டவர்கள் கடவுளாக உணர்ந்தார்கள். இந்த காலகட்டங்களில் பாலுறவு ஒரு சாதாரணமான செயல் எனும் இடத்தில் இருந்து சமூகத்தை வரையறுக்கும் அச்சமாக மாறுகிறது. அது நிலத்திலும் மனித உடல்களிலும் மன்னரின் செங்கோலிலும் வேதநூல்களிலும் காலனிய வர்த்தக நியதிகளிலும் நவீனப் பொருளாதார பரிவர்த்தனைகளிலும் புகுந்து விளையாடுகிறது. அது பாலுறுப்புகளைக் கடந்த ஒரு மகத்தான ஆற்றலாகிறது. அது இன்பத்தைத் தள்ளிப் போடுதல் அல்ல, அது அச்சத்தை விளைவிப்பதாகிறது. இந்த அச்சத்தைத் தக்க வைக்கும் நோக்கிலேயே பாலியல் ஒழுக்கம் கொண்டு வரப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என நினைக்கிறேன். ஆக, நவீன முற்போக்கு தாராளவாதிகள் நம்புவது இவ்விசயத்தில் தவறு: பாலியல் வன்முறையைச் சட்டத்தினாலோ சமத்துவத்தாலோ ஒழிக்க இயலாது. சட்டமும் சமத்துவமும் ஒரு குறிப்பிட்ட வகையான வர்க்கங்களை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தவே உதவும் (அதாவது நம்மைப் போன்றவர்களை). அதுவும் நமக்குள் செல்வம் மீதான ஆசை நெருப்பாகக் கிளர்ந்தபடி இருக்கிறது. இதை நாம் பால் உடல்களில் நிகழ்த்திப் பார்க்கிறோம். ஆண்கள் பெண்களை விட வலுவானவர்கள் என்பதால் அவர்கள் பலாத்காரங்களில் அதிகமாக ஈடுபட்டு பல கொலைகளையும் செய்கிறார்கள். பாலியலின் இன்பமே உடல் அல்ல, உடலைப் மூலதனமாக மாற்றுவதுதான். ஆதிக்கப் பாலியல் இன்பம் உடலை வருத்தி மூலதனத்தைக் கைப்பற்றும் விருப்பம்தான். அதனாலே மனம் பிறழ்ந்தவர்கள், குற்றங்களால் தாம் விடுதலையானதாக உணர்ந்தவர்கள் பாலியல் குற்றங்களில் மிகக் கொடூரமாக ஈடுபடுகிறார்கள். பலாத்காரம் செய்து ரயிலில் இருந்து வீசி எறிகிறார்கள். அவர்களிடம் விதிவிலக்கின் அதிகாரம் உடனடியாக வந்து விடுகிறது. ஆனால் அரைகுறையாக, அவர்கள் மீறுவதே அதிகாரம், அந்த அதிகாரமே தனக்குள்ள விதிவிலக்கு என்று மட்டும் ஏதோ ஒரு கணத்தில் குழப்பமாகப் புரிந்து கொள்கிறார்கள். பலவீனமான யாரைக் கண்டாலும் அதை முயல்கிறார்கள், அழிக்கிறார்கள். அவர்களிடம் மிதமிஞ்சிய செல்வம் இருந்தால், பலவீனமானவர்களை அவர்களுடைய எதிர்ப்பின்றி பணத்தால் மீறுவதே அதிகாரம் எனும் புரிதல் வந்தால், அவர்கள் எப்ஸ்டைன்களாகி விடுவார்கள். மக்களைச் செலுத்துவது விதிவிலக்கின் எரிமலை. அதன் நெருப்புப் பிழம்பு வழிந்தபடித்தான் இருக்கிறது. மக்கள் இந்த எரிமலையைச் சுற்றி நின்று அச்சத்திலும் பரவசத்திலும் நடுங்குவார்கள். நாம் இதைக் குறித்துப் பேச வேண்டும். https://www.writerabilash.in/2026/02/blog-post_3.html
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிம்பாவே சூப்பர்8க்கு வந்தது பாராட்ட தக்கது ஆனால் வெஸ்சின்டிஸ் அணியிடம் படு தோல்வி................ சிம்பாவே இந்தியா கூட சென்னை மைதானத்தில் விளையாட போகினம் சென்னை மைதானம் மட்டையடி வீரர்களுக்கு சாதகமான மைதானம்.................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை அடிச்ச குறைஞ்ச ஸ்கோரை சிம்பாவே தான்டி விட்டது.................
-
செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை
செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள். அவர்களுடைய லட்சியம் செய்யறிவைக் கொண்டு வேலைகளை எந்திர முழுதியக்கம் (automate) செய்வது. இதனால் பல பணிகள் வேகமாக நடந்து முடியும் என்பதைவிட செலவில்லாமல் செய்ய முடியும் என்பதே அவர்கள் செய்யறிவைச் சந்தைப்படுத்த நிறுவனங்களிடம் நீட்டிய கேரட். கடந்த ஈராண்டுகளில் பல கார்ப்பரட் தலைவர்கள் செய்யறிவினால் மிகப்பெரிய வேலை இழப்பு வரும் என எச்சரித்தது இந்நோக்கில்தான். வேலையளிக்கும் நிறுவனங்களும் இதை நம்பினர். அவர்களுக்கு தமது ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, லாபத்தைப் பெருக்கவும், ஏற்கனவே உள்ளவர்களை அச்சுறுத்தி அதிக வேலை வாங்கவும் இந்தப் பீதி உதவியது. இப்போது வேலையிழந்தவர்கள் சந்தையில் பெருகி விட்டார்கள் என்றும், அவர்கள் ஏற்படுத்துகிற மிகையால் ஒரு செயற்கையான போட்டி நிலவுகிறது என்றும், நேர்முகத்தின்போது உங்கள் வேலையை செய்யறிவே செய்துவிடும், நீங்கள் அதை நிர்வகித்தால் போதும், உங்களுக்கு எதற்கு இவ்வளவு சம்பளம் என்று சொல்லி மனிதவளத்துறையினர் ஊதியத்தைக் குறைத்து பேரம் பேசுவதாகவும் இந்த செய்தித் தொகுப்பில் சொல்கிறார்கள். அதாவது இது ஒரு செயற்கையாக உண்டுபண்ணப்பட்ட பிரச்சினை - செய்யறிவினால் நிறுவனங்களுக்கு நட்டமே அதிகம், அவர்கள் மனித ஊழியர்களிடம் திரும்பவே விரும்புகிறார்கள், ஆனால் இப்போதைக்கு விட்டுப்பிடிக்கலாம், ஊதியத்தைக் குறைக்கலாம் எனக் கருதுகிறார்கள். இப்போது தானியங்கி செய்யறிவு (agentic AI) வந்து நம் பணிகளை அதுவே கேட்காமலே எடுத்துச் செய்யும், நம் நிகழ்ச்சி நிரலைத் திட்டமிடும், ஆவணங்களை உருவாக்கித் தொகுக்கும், நாம் அதை நிர்வகித்தால் மட்டும்போதும் என்கிறார்கள். ஆனால் இதுவும் வெற்று விளம்பரம்தானோ எனத் தோன்றுகிறது. செய்யறிவின் உண்மையான 'ஆற்றலை' நாமே நம் அன்றாடப் பணிகளில் காண்கிறோம் - அது வந்தபோது அதனால் பல புத்தகங்களை நொடிகளில் எழுத முடியும், இனி எழுத்தாளர்கள் தேவையிருக்க மாட்டார்கள் என்றார்கள். அதுவே சமூகவலைதளங்களில் எழுதும் என்றார்கள். திரைக்கதை எழுதும் என்றார்கள். இதையெல்லாம் செய்கிறதுதான் - ஆனால் தரமாக இல்லை. மாணவர்கள் இதைப் பயன்படுத்தி சமர்ப்பிக்கும் கட்டுரைகள் மேம்போக்காக, அர்த்தமற்று உள்ளன. இதனால் செய்யறிவு என்றாலே தரக்குறைவு எனும் எண்ணம் ஏற்பட்டுவிட்டது. என் மாணவர் ஒருவர் செய்யறிவைக் கொண்டு ஏகப்பட்ட நூல்களைக் கிண்டிலில் வெளியிட்டுச் சம்பாதிக்கப் போவதாகச் சொன்னார். நான் அவரிடம் தரமின்மையை உள்ளடக்கத்தால் ஈடுகட்ட முடியாது, அத்தகைய பண்டங்கள் மதிப்பிழக்கும் என்றேன். அவ்வாறே நடந்தது. அவர் விரைவில் சோர்வடைந்தார். என்னதான் மின்நூல், பதிப்பு நூல் சந்தையில் செய்யறிவு பங்காற்றினாலும் அதனால் தரமான வெற்றிகரமான நூல்களை உருவாக்கி பெஸ்ட் செல்லர்களாக முடியவில்லை. செய்யறிவு ஏற்கனவே உள்ளதைத் திருடி அதைப் போலச் செய்கிறது. அதனால் புதிய கருத்துக்களை, கற்பனையை உருவாக்க முடிவதில்லை. அது ஒரு மேம்பட்ட நகல் எந்திரம். தான் எதிலிருந்து நகலெடுத்தோம், திருடினோம் என்பதையும் அது ஒப்புக்கொள்வதோ மேற்கோள் காட்டுவதோ இல்லை. இது இன்னொரு அறம்சார்ந்த பிரச்சினை. நியாயமாக செய்யறிவு நிறுவனங்கள் தாம் 'பயிற்சிக்காக' திருடுகிற தரவுகள், நூல்களுக்கான ராயல்டியைக் கொடுக்க வேண்டும். ஆனால் டயாய்க்கின்றன. இப்போதைக்கு (இலக்கியம் போன்ற சிக்கல்கள் இல்லாத) நேரடியான எளிய மொழிபெயர்ப்புகள், விளம்பர வசனங்கள், உரையாடல், குறிச்சொல் உருவாக்கம், மொழிப்பயிற்சிக்கு அது உதவுகிறது. நான் புக்காவஸ்கியின் நாவலை (Pulp) வாசித்துக் கொண்டிருக்கும்போது அதில் திடீரென ஒரு பாத்திரம் வந்தது. அப்பாத்திரம் நாவலில் மற்றொரு இடத்தில் ஒரே ஒருமுறை வந்த நினைவு. ஆனால் எங்கு எதற்காக என மறந்துவிட்டது. செய்யறிவிடம் கேட்டேன். அது ரொம்ப இலக்கியத்தனமான பதில் சொன்னது. ஆனால் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் இல்லை. வகுப்பில் ஒன்றுமே தெரியாத மக்கு மாணவர்கள் இட்டுக்கட்டி பதில் சொல்வார்களே அப்படி ஒரு எதிர்வினை. ஏனென்றால் அப்புத்தகத்தின் தரவுகள் அதனிடம் இல்லை. என்னிடம் பி.டி.எப் இருந்தால் நான் கணநேரத்தில் கண்டுபிடித்திருப்பேன். இதனிடம் கேட்டால் இப்படி விளையாடுகிறதே என எரிச்சலாகியது. செய்யறிவின் முக்கியமான பிரச்சினை அது தனக்கு ஒன்று தெரியாது என்று ஒப்புக்கொள்ளாது என்பது. அதனாலே அதன் நம்பகத்தன்மை போய்விடுகிறது. இந்த லட்சணத்தில் இனி ஆசிரியர்களே தேவையில்லை, செய்யறிவே அப்பணியைச் செய்யும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். இன்றும் சில கல்வி நிறுவனங்களில் அதை நம்புகிறார்கள். இப்படி இட்டுக்கட்டும் ஒரு மென்பொருளிடம் மாணவர்களை ஒப்படைத்தால் அதனால் நேரும் குழப்பங்களுக்கு யார் பொறுப்பு? செய்யறிவு நம் காலத்தின் பிளாஸ்டிக் ஆகிவிட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் ஆரம்பத்தில் சந்தைக்கு வந்தபோதும் இத்தகைய மிகை எதிர்பார்ப்பும் பிரமிப்பும் இருந்தது. இன்று அது தரமின்மைக்கான குறியீடு. செய்யறிவு வளராது என்று நான் நினைக்கவில்லை. இப்போதுள்ள செய்யறிவு வேலைக்கு ஆகாது. அது அதன் முழுப்பரிமாணங்களை அடைய நேரடியாகத் தரவுகளை உள்வாங்கும், 24*7 உலகைக் கண்காணிக்கும் ஆற்றல் அதற்கு வேண்டும். தான் உள்வாங்கும் தகவல்களைப் பரிசீலித்து சுயமாக முடிவெடுக்க இயல வேண்டும். அதுவரை அதனால் சின்னச் சின்ன வேலைகளை மட்டுமே பண்ண முடியும். நமது வேலைகள் பாதுகாப்பாக உள்ளன. https://www.writerabilash.in/2026/02/blog-post_59.html செய்யறிவு = செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்களுக்கு நன்றி, ரசோதரன். 🙂
-
இரணைதீவில் சட்டவிரோத கடலட்டைகள் மீட்பு : 10 பேர் கடற்படையினரால் கைது!
இரணைதீவில் சட்டவிரோத கடலட்டைகள் மீட்பு : 10 பேர் கடற்படையினரால் கைது! 23 Feb, 2026 | 06:29 PM கிளிநொச்சி, இரணைதீவு கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு கடலட்டைகளை பிடித்த 10 பேரை கடற்படையினர் இன்று திங்கட்கிழமை (23) கைது செய்துள்ளனர். இரணைதீவு மேற்கு கடற்பரப்பில் கடற்படையினர் இன்று அதிகாலை முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மூன்று டிங்கி படகுகள் சோதனையிடப்பட்டன. இதன்போது சட்டவிரோத முறையில் பிடிப்பட்ட 1,232 கடலட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 29 முதல் 54 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள் அனைவரும் மன்னார் - பள்ளமுனை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடலட்டைகளுடன் மூன்று டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத சுழியோடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/239396
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதுக்கு முதல் நடந்த போட்டிகளில் உந்த மைதானத்தில் ரன்ஸ் பெரிசா அடிக்க வில்லை இன்று வெஸ்சின்டீஸ் வீரர்கள் ரன்ஸ் வேட்டை நடத்தி விட்டினம்......................
-
பிரித்தானியாவில் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு: உரை ரத்து குறித்து நாமல் அறிக்கை
டயஸ்போரா சவால்களுக்கு மத்தியிலும் நாமல் லண்டன் பயணம்: அரசாங்கத்தின் ஊழல்களை அம்பலப்படுத்தினார் இந்திக அனுருத்த 23 Feb, 2026 | 04:39 PM நாமல் ராஜபக்ஷவின் இங்கிலாந்து விஜயத்தின் போது ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் திட்டமிடப்பட்டிருந்த உரைகள், அங்குள்ள தமிழ் மாணவர் அமைப்புகளின் அழுத்தம் காரணமாக ரத்து செய்யப்பட்டமையானது இலங்கைக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார். இன்றைய தினம் பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், நாமல் ராஜபக்ஷ சவால்களுக்கு அஞ்சாத ஒரு இளைஞர் என்றும், எதிர்ப்புகள் எழும் என்று தெரிந்தே அந்தத் தரப்பினருடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களைக் கேட்டறியும் நோக்கில் அவர் அங்கு சென்றார் என்றும் குறிப்பிட்டார். இத்தகைய எதிர்ப்புக்கள் எமது தரப்புக்கு புதியவை அல்ல என்றும், இதனை விமர்சிக்கும் 'சுத்திகரிப்புப் படையினர்' முதலில் தங்களது அரசாங்கத்தின் தவறுகளைச் சரிசெய்ய வேண்டும் என்றும் அவர் சாடினார். தற்போதைய அரசாங்கம் குறித்துக் கடுமையாக விமர்சித்த அவர், ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அடிமட்டம் முதல் அமைச்சரவை வரை பாரிய ஊழல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தினார். அண்மையில் மீரிகம பிரதேச சபை தவிசாளர், மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணப் பொருட்களைத் தனது அறையில் பதுக்கி வைத்திருந்தமை அம்பலமாகியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் இன்று தொழில்துறையினர் மற்றும் தொழில் வல்லுநர்கள் பாரிய அநீதிக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவித்தார். பழைய விநியோகஸ்தர்களை நீக்கிவிட்டு அரசாங்கத்தின் நெருங்கிய சகாக்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதால், தற்போது நிர்மாணிக்கப்படும் வீதிகள் தரமற்று இருப்பதாகவும் அவை குழிவிழுந்து காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தரமற்ற நிலக்கரி கொள்முதல் விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், 159 பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து இந்த மோசடியைப் பாதுகாப்பதாகத் தெரிவித்தார். தரம் குறைந்த நிலக்கரியை விலைக் குறைவு என்ற போர்வையில் இறக்கிக் கொண்டுவருவது மின் உற்பத்தி நிலையத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் உணரவில்லை என்றும், இந்தத் தவறை மறைக்க முயல்வோர் எதிர்காலத்தில் சிறை செல்வதைத் தவிர்க்க முடியாது என்றும் அவர் எச்சரித்தார். அரசாங்கத்திற்கு நிதி வழங்கிய பெரும் வர்த்தகர்களின் பிடியில் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை சிக்கியுள்ளதால், அரிசி மாஃபியா மற்றும் கொள்கலன் மோசடிகளைத் தடுக்க முடியாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதை உணர்ந்துள்ளதால், தங்களுக்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பத்தில் அவசரமாகக் கொள்ளையடிக்க ஆரம்பித்துள்ளதாகவும், இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து கிராம மட்டத்திலிருந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். ஊழல் தடுப்பு ஆணைக்குழு மற்றும் சிஐடி ஆகியன தற்போதைய அமைச்சர்களின் ஊழல்கள் தொடர்பிலும் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/239392
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இது நான் விளையாட்டு தொடங்க முதல் எழுதின பதிவு குரு ஹா ஹா................பார்த்திங்களா ஜக்கம்மா சொல்லி அடிப்பா ஹா ஹா😄😛...................