அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3262 topics in this forum
-
மனிதன் வாழத் தக்கதாக, பூமி போலவே பரிணமிக்கிறதா இந்த புறக்கோள்? கோவை விஞ்ஞானி புதிய கண்டுபிடிப்பு பட மூலாதாரம்,University of Geneva/NCCR PlanetS/Thibaut Roger படக்குறிப்பு,WASP-107 நட்சத்திரம் மற்றும் WASP-107b புறக்கோளின் சித்தரிப்பு ஓவியம் கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் விண்வெளியில் உள்ள பல கோடி நட்சத்திரங்களில் ஒன்று WASP-107. அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்புவிசையில் கட்டுண்டு, அதைச் சுற்றி வந்துகொண்டிருக்கும் கோள்களில் ஒன்றுதான் WASP-107b. இந்தப் புறக்கோளில் தமிழக விஞ்ஞானி ஒருவர், பூமியின் இயற்கை வரலாற்றில் நிகழ்ந்ததை ஒத்த ஓர் அதிசய நிகழ்வு நடப்பதைச் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். தமிழ்நாட்டின் கோவையைச் சேர்ந்தவரும் கனடாவின் மெக்கில் பல…
-
- 0 replies
- 138 views
- 1 follower
-
-
நிலவுக்கு உங்கள் பெயரையும் அனுப்ப அரிய வாய்ப்பு Jan 19, 2026 - 03:08 PM அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA, தமது அடுத்தகட்ட நிலவு பயணமான 'ஆர்ட்டெமிஸ் II' திட்டத்தில் பொதுமக்களையும் ஒரு அங்கமாக மாற்றும் வகையில் ஒரு சுவாரஸ்யமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் விண்ணில் ஏவப்பட உள்ள இந்த விண்கலத்தில், உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் பெயர்களை நிலவுக்கு அனுப்ப நாசா அழைப்பு விடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்களின் பெயர்கள் அனைத்தும் ஒரு சிறிய SD கார்டில் சேமிக்கப்பட்டு, 'ஓரியன்' (Orion) விண்கலத்தின் மூலம் நிலவுக்கு கொண்டு செல்லப்படும். இதில் பங்கேற்கும் நபர்களுக்கு ஒரு நினைவுப் பொருளாக, அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட 'டிஜ…
-
- 0 replies
- 99 views
- 1 follower
-
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவசரமாக பூமிக்குத் திரும்பிய வீரர்கள்! - காரணம் இதுதான் 16 Jan, 2026 | 02:32 PM சர்வதே விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் 4 விண்வெளி வீரர்களும் நேற்று வியாழக்கிழமை (15) அதிகாலை அவசர அழைப்பின் பேரில் பூமிக்குத் திரும்பியதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதே விண்வெளி நிலையத்தில் தங்கி, ஆய்வுகளை மேற்கொண்ட விண்வெளி வீரர்களில் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவருக்கு அவசர சிகிச்சை வழங்கவேண்டிய தேவை காணப்படுவதால் விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. க்ரூ -11 (Crew-11) என்ற விண்வெளிப் பயணத் திட்டத்தின் கீழ் ஜெனா கார்ட்மேன் (Zena Cardman), மைக் பின்கே (Mike Fincke) ஆகிய இரண்டு அம…
-
- 0 replies
- 111 views
- 1 follower
-
-
பொங்கல் இந்த ஆண்டு ஜனவரி 15க்கு மாறியது ஏன்? அறிவியல் பின்னணி பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் க.சுபகுணம் பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டு பொங்கல் தினம் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால், 1940களில் இருந்து 2000களின் தொடக்கம் வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்தோர் ஜனவரி 14ஆம் தேதியையே பொங்கல் தினமாகக் கொண்டாடியதாகக் கூறுகிறார் இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். நிபுணர்களின் கூற்றுப்படி பொங்கல், சங்கராந்தி ஆகியவை அனுசரிக்கப்படும் தேதி மாறிக் கொண்டே வந்துள்ளது. சமீபத்தில், ஜோதிட நிபுணரான வேதாஞ்சனம் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஜனவரி 13ஆம் தேதியன்று வெளியிட்ட பதிவில், "மகர சங்கராந்தி அடுத்த 69 ஆண்டுக…
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
பிரபஞ்சத்தின் முடிவு பற்றி 'விசித்திரமான' இருண்ட ஆற்றலின் ஆய்வு என்ன சொல்கிறது? பட மூலாதாரம்,KPNO/NOIRLab படக்குறிப்பு,அரிசோனா பாலைவனத்தில் உள்ள ஒரு தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் இறுதி விதியைத் கண்டுபிடிப்பதற்காக தொலைதூர நட்சத்திர மண்டலங்களை கண்காணித்து வருகிறது. கட்டுரை தகவல் பல்லப் கோஷ் பிபிசி 30 டிசம்பர் 2025 இருண்ட ஆற்றல் (டார்க் எனர்ஜி) என்று அழைக்கப்படும் ஒரு மர்மமான விசை, காலம் மற்றும் விண்வெளி குறித்த நமது தற்போதைய புரிதலுக்கு சவால் விடும் வகையில் மாறிக்கொண்டிருக்கலாம் என்ற சமீபத்திய சான்றுகள் குறித்த சர்ச்சை வளர்ந்து வருகிறது. பிரபஞ்சம், தொடர்ந்து விரிவடைவதற்குப் பதிலாக நட்சத்திர மண்டலங்கள் ஈர்ப்பு விசையினால் மீண்டும் ஒன்றாக இழுக்கப்பட்டு வானியலாளர்கள் பெருஞ் சிதைவ…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
ஆப்பிள் ஐபோன் iPhone பயனர்கள் உடனடியாக தங்கள் சாதனங்களின் மென்பொருளை புதுப்பிக்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் அவசர பாதுகாப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. மிக தீவிரமான இரண்டு மென்பொருள் பாதுகாப்புக் குறைகள் (software vulnerabilities) கண்டறியப்பட்டுள்ளதுடன், அவை “மிகவும் நுணுக்கமான” சைபர் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.ஐபோன் பயனர்கள் இந்த வாரம் வெளியிடப்பட்ட பாதுகாப்பு அறிவிப்பில், Safari உலாவி மற்றும் iOS இயங்குதளத்தில் இயங்கும் அனைத்து மூன்றாம் தரப்பு உலாவிகளுக்கும் அடிப்படையாக உள்ள WebKit என்ற உலாவி இயந்திரத்தை இந்த குறைகள் பாதிப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. இந்த பாதுகாப்பு குறைகளை பயன்படுத்தி, ஒரு பாதிக்கப்பட்ட இணையதளத்தை பயனர் பார்வை…
-
- 0 replies
- 284 views
-
-
பிரபஞ்சம் அதன் முடிவை நோக்கிச் செல்கிறதா? விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நட்சத்திரங்களின் இறுதிக்கட்ட நிலை அவற்றின் நிறையைப் பொறுத்தே அமையும் கட்டுரை தகவல் பெர்னாண்டோ டூர்டே பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் எதுவும் நிலையானது அல்ல... நமது பிரபஞ்சம் கூட. கடந்த இருபது ஆண்டுகளாக, விண்வெளி ஆய்வாளர்கள் இந்தப் பிரபஞ்சம் தனது முக்கிய காலகட்டத்தை கடந்துவிட்டதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்து வருகின்றனர். புதிய நட்சத்திரங்கள் பிறப்பது படிப்படியாகக் குறைந்து வருவது அதில் ஒரு முக்கியமான அடையாளம். இதன் பொருள் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் தீர்ந்துவிட்டன என்பதல்ல. இதில் ஒரு செப்டில்லியன் - அதாவது ஒன்றுக்குப் பின் 24 பூஜ்ஜியங்களை கொண்ட எண்ண…
-
-
- 3 replies
- 351 views
- 1 follower
-
-
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பாகுபலி ரொக்கெட் Published By: Digital Desk 2 24 Dec, 2025 | 11:54 AM இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) இன்று புதன்கிழமை (24) அமெரிக்காவின் ASD தொலை தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான புளூபேர்ட்-6 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. இந்த செயற்கைக்கோளின் பிரதான நோக்கம், விண்வெளியிலிருந்து நேரடியாக ஸ்மார்ட் தொலைபேசிகளுக்கு அதிவேக இணைய சேவையை வழங்குவதாகும். இதன் மூலம் தொலைபேசி சிக்னல் கோபுரங்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகள் போன்ற இடங்களிலும் 5ஜி வேகத்தில் இணையம், வீடியோ அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளைப் பெற முடியும். புளூபேர்ட்-6 செயற்கைக்கோள் 6,100 கிலோகிராம் எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள்…
-
- 0 replies
- 175 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ESO/O. HAINAUT படக்குறிப்பு, 3I/Atlas என்பது இதுவரை காணப்படாத மிகப் பழமையான வால்மீனாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கட்டுரை தகவல் ஜார்ஜினா ரென்னார்ட் அறிவியல் & காலநிலை செய்தியாளர் 17 ஜூலை 2025, 11:40 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த வாரம் வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மர்மமான வால்மீன், இதுவரை காணப்பட்ட மிகப் பழமையான வால்மீனாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 3I/Atlas என்று பெயரிடப்பட்ட இது, நமது சொந்த சூரிய குடும்பத்தைவிட மூன்று பில்லியன் ஆண்டுகள் (300 கோடி ஆண்டுகள்) பழமையானதாக இருக்கலாம் என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகக் குழு தெரிவிக்கிறது. நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால் இருந்து வரும் ஒரு பொருளை வ…
-
- 1 reply
- 222 views
- 1 follower
-
-
"பத்து சூரியன் அளவுக்கு திறன்" - விண்வெளியில் இருந்து பூமிக்கு சூரிய ஆற்றலை அனுப்பும் கனவுத்திட்டம் பட மூலாதாரம்,Star Catcher கட்டுரை தகவல் ஜோனாதன் ஓ'கல்லகன் 13 டிசம்பர் 2025 சூரிய ஆற்றலை விண்வெளியில் சேகரித்து பூமிக்கு கதிர்வீச்சாக அனுப்பும் திட்டம் பல ஆண்டுகாலமாக இருக்கும் ஒரு யோசனை. இப்போது உலகெங்கும் உள்ள பல நிறுவனங்கள் இதை உண்மையாக்க முடியும் என்று உறுதியாகக் கூறுகின்றன. கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு அமெரிக்க கால்பந்து மைதானத்தில் ஒரு வித்தியாசமான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு மைதானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை ஒளிக்கதிர்கள் அனுப்பப்பட்டன. சில நிமிடங்கள் நீடித்த அந்த ஒளிக்கற்றைகள், ஜாக்சன்வில்லே ஜாகுவார்ஸ் மைதானத்தின் ஒரு பக…
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
3 கோடி சூரியன்களுக்கு நிகரான பிரமாண்ட கருந்துளை வெடிப்பு - விஞ்ஞானிகள் கண்டது என்ன? பட மூலாதாரம், European Space Agency (ESA) படக்குறிப்பு, என்.ஜி.சி 3783 எனப்படும் விண்மீன் மண்டலத்தில் உள்ள கருந்துளையில் நிகழும் ஆற்றல் வெடிப்பைக் காட்டும் விவரிக்கும் கலைப் படைப்பு 52 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு பிரமாண்ட கருந்துளையில் இருந்து வெளிப்பட்ட, இதற்கு முன் பார்த்திராத அளவிலான பெரும் ஆற்றல் வெடிப்பை, வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் கருந்துளை 3 கோடி சூரியன்களுக்கு நிகரான அளவைக் கொண்டது. திடீரென ஒரு பிரகாசமான எக்ஸ்ரே ஒளி வெடித்துச் சிதறியதையும், வெளிப்பட்ட உடனே அந்த ஒளி மிக வேகமாகப் பலவீனமடைந்ததையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அந்த எக்ஸ்ரே ஒளி மங்கிய பிறகு, கருந்துளை…
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி ஸ்பெயினில் படம் பிடிக்கப்பட்ட சூப்பர் மூன் கட்டுரை தகவல் த.வி. வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் டிசம்பர் 4, 2025 சூப்பர் முழு நிலா "சூப்பர் மூன்" என்பது ஒரு மெய்யான வானியல் நிகழ்வு அல்ல. நிலவு பூமிக்கு அருகில் இருக்கும்போது ஏற்படும் முழு நிலாவை குறிக்க பொதுவெளியில் பயன்படுத்தப்படும் கருத்து மட்டுமே. ஆண்டின் கடைசி முழு நிலா, டிசம்பர் 4, 2025 அன்று, ஒரு 'சூப்பர் முழு நிலா'வாக (Supermoon) நிகழும். டிசம்பர் 5ஆம் தேதி காலை 04:45 மணிக்கு சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரே கோட்டில் வரிசையாக வரும்போது, நிலவு பூமியிலிருந்து வெறும் 3,57,219 கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே இருக்கும…
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
சாதனை படைக்க விண்வெளி சென்ற சீனர்கள் - கிரிக்கெட் பந்து அளவு குப்பையால் அடுத்தடுத்த சிக்கல் பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் த. வி.வெங்கடேசுவரன் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவுக்குச் சொந்தமான தியான்கொங் விண்வெளி நிலையத்தில் உள்ள மூன்று விண்வெளி வீரர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்களை மீட்பதற்கான விண்கலம் இன்று (நவம்பர் 25) விண்ணில் ஏவப்பட உள்ளது. ஏப்ரல் 24, 2025-ஆம் தேதி, சீனாவின் சென்சோ-20 விண்கலத்தில், சென் தோங் தலைமையில், வாங் ஜீ மற்றும் சென் ஜோங்ருய் ஆகியோர் அடங்கிய மூவர் குழு, சீனாவின் தியான்கொங் விண்வெளி நிலையத்தை அடைந்தது. சுமார் 200 நாட்களுக்கு மேல் விண்வெளியில் தங்கி ஆய்வு செய்து சாதனை படைப்பது இவர்களின் நோக்கமாக இர…
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Intl Gemini Observatory/NOIRLab/NSF/Aura/Shadow the Scientist; Processing: J Miller, M Rodriguez, TA Rector, M Zamani கட்டுரை தகவல் எலன் சாங் பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இது ஒரு வால் நட்சத்திரம் (comet) என்பதை கிட்டத்தட்ட அனைத்து விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இது, வேற்றுக்கிரகவாசிகளின் வருகை மற்றும் மனிதகுலத்தின் முடிவு பற்றிய ஊகங்கள் பரவுவதைத் தடுக்கவில்லை. 3I/அட்லஸ் என்பது நமது சூரிய குடும்பத்திற்கு வெளியில் இருந்து (interstellar object) வந்து நமது வானத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது பொருள் ஆகும். எனவே அதன் பெயர் "3I" எனத் தொடங்குகிறது. நமக்குத் தெரிந்த பெரும்பாலான வால் நட்சத்திரத்தைப் போலல்லாமல், இது சூரியனைச் சுற்றி …
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
இங்கிலாந்தில் AI யால் உருவாக்கப்படும் படங்களை கண்டறிய புதிய நடவடிக்கை! இங்கிலாந்தில் AI-யால் உருவாக்கப்படும் துஷ்பிரயோரயோகங்களை சமாளிக்க இங்கிலாந்தின் புதிய சட்ட மூலம் உதவும் என கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது. அதன்படி, AI மாதிரிகள் மூலம் உருவாக்கப்படும் போலி படங்களை அவை போலி என உறுதிப்படுத்துவதற்கும் அவற்றைச் சரிபார்ப்பதற்கும் இந்த புதிய விதிகள் உதவும் என கூறப்படுகிறது. AI-யால் உருவாக்கப்பட்ட விடயங்களை பயன்படுத்தும் குழந்தைகளை நிகழ்நிலையில் பாதுகாக்க இந்த முன்மொழியப்பட்ட சட்டமூலம் உதவுவதாக கூறப்படுகிறது. இதேவேளை, Internet Watch Foundation இன்டர்நெட் வாட்ச் ஃபவுண்டேஷன் (IWF) போன்ற நிறுவனங்களும், AI டெவலப்பர்களும், சட்டத்தை மீறாமல் அத்தகைய உள்ளடக்கத்தை அவதானித்து அதனை சோதனை …
-
- 0 replies
- 267 views
-
-
பட மூலாதாரம், X/@isro படக்குறிப்பு, இந்தியாவிலிருந்து அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் சாரதா வி பிபிசி தமிழ் 3 நவம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய மண்ணிலிருந்து, இது வரையிலான அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இதனை சாத்தியமாக்கியது LVM3-M5 ராக்கெட். இது'பாகுபலி' ராக்கெட் என்று பரவலாக அழைக்கப்படுகிறது. இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. இந்த ராக்கெட் ஞாயிறன்று 4410 கிலோ எடை கொண்ட செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது. அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இதுவரை வேறு நாடுகளை சார்ந்திருக்க வேண்டியிருந…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Riya Dhage படக்குறிப்பு, ஒரு செல் உயிரியான ஈஸ்ட் பூஞ்சைகளால் செவ்வாய் கோளில்கூட பிழைத்திருக்க முடியும் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 1 நவம்பர் 2025, 05:02 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரெட், பீர் போன்ற உணவுப் பொருள்களில் பயன்படுத்தப்படும் நுரைமம் அல்லது நொதி என அழைக்கப்படும் ஈஸ்ட் என்ற பூஞ்சையால் செவ்வாய் கோளில்கூட சாகாமல் உயிர் பிழைத்திருக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஒரு செல் உயிரியான ஈஸ்ட், பூமி தவிர்த்துப் பிற கோள்களில் உயிர்கள் எவ்வாறு பிழைத்திருக்க முடியும் என்பதற்கான தடயங்களைக் கொண்டுள்ளதாக, இந்திய அறிவியல் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக…
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
Lemon வால் நட்சத்திரத்தை இலங்கையர்களும் காணும் வாய்ப்பு! ‘Lemon’ என்றும் அழைக்கப்படும் ‘C/2025 A6’ வால் நட்சத்திரத்தை தற்போது மாலை வானில் இலங்கையர்களும் காண முடியும் என்று விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார். சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர், மாலை 6.30 மணி முதல் சுமார் 30 தொடக்கம் 45 நிமிடங்கள் வரை இந்த வால் நட்சத்திரம் அடிவானத்திற்கு அருகில் தெரியும். மழை இல்லாத தெளிவான மாலை நேரங்களில் இலங்கையின் மேற்கு கடற்கரையிலிருந்து இந்த வால் நட்சத்திரத்தை எளிதாகக் காணலாம் என்றும் அவர் மேலும் கூறினார். 2025 ஜனவரி மாதம் அமெரிக்காவில் உள்ள மவுண்ட் லெமன் ஆய்வகத்தில் இந்த இந்த வால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டமையினால் அதற்கு Lemon என்று பெயரிடப்பட்டுள்…
-
- 0 replies
- 149 views
-
-
மனிதன் 3 லட்சம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் எதிர்காலத்தில் தடயமே கிடைக்காதா? பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மனிதர்களான நாம் நீண்ட காலமாகப் கடந்த காலத்தைப் பற்றி ஆராய்வதில் ஆர்வம் கொண்டிருக்கிறோம். பூமியின் 4.5 பில்லியன் ஆண்டுகால வரலாற்றின் நினைவுச் சின்னங்களாக இருக்கும் எண்ணற்ற தொல்லுயிர் எச்சங்களை நாம் மண்ணிலிருந்து தோண்டியெடுத்துள்ளோம். நாம் தோன்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பு பண்டைய இனங்கள் எவ்வாறு வாழ்ந்தன என்பதற்கான குறிப்புகளை இவை நமக்கு வழங்குகின்றன. ஆனால், நாம் அழிந்துபோய், பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு புத்திசாலித்தனமான இனம் தோன்றினால் – நாம் இருந்தோம் என்பதை எப்போதாவது அவர்கள் அறிந்துகொள்வார்களா? அல்லது நமது நாகரிகம் எப்படி இருந்த…
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், VCG via Getty Images 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் ஓரியானிட் விண்கல் பொழிவு இந்த ஆண்டும் விரைவில் வருகிறது. அப்போது இரவு வானம் ஒளிரும், இதனை உலகம் முழுவதும் காணலாம் என்று நாசா தெரிவித்துள்ளது. "ஆண்டின் மிக அழகான விண்கல் மழைகளில் ஒன்று" என்று நாசா இந்த விண்கல் பொழிவை வர்ணிக்கிறது. இந்த விண்கல் பொழிவு இந்த ஆண்டு அக்டோபர் 2 முதல் நவம்பர் 12 வரை ஏற்படும். நாசாவின் கூற்றுப்படி, அக்டோபர் 22 இரவு முதல் அடுத்த நாள் அதிகாலை வரையிலான நேரத்தில் இது உச்சத்தை எட்டும். பட மூலாதாரம், Anadolu Agency via Getty Images ஓரியானிட் விண்கல் பொழிவு என்றால் என்ன? ஓரியானிடுகள் விநாடிக்கு சுமார் 41 மைல் வேகத்தில் பயணிக்கும் விண்கற்கள் ஆகும். ஓரியன் விண்மீன் குழு…
-
- 0 replies
- 134 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Erica Bass/ Rogel Cancer Center/ Michigan Medicine கட்டுரை தகவல் ஜேமி டச்சார்ம் 20 அக்டோபர் 2025, 06:48 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மனித உடலில் உள்ளுறுப்புகளை அறிய மருத்துவர்களுக்கு உதவுவதற்காக நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் அல்ட்ராசவுண்ட், இப்போது அதிக அதிர்வெண் கொண்ட குவிக்கப்பட்ட ஒலி அலைகள் (focused high frequency sound waves) மூலம் புற்றுநோய் கட்டிகளை அழிக்கும் புதிய வழிகளை வழங்குகிறது. முனைவர் பட்ட மாணவராக இருந்தபோது ஜென் ஸு (Zhen Xu) தனது ஆய்வக நண்பர்களை எரிச்சலூட்டி இருக்காவிட்டால், கல்லீரல் புற்றுநோய்க்கான ஒரு அற்புதமான சிகிச்சையைக் கண்டுபிடித்திருக்க மாட்டார். 2000-களின் முற்பகுதியில் அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்…
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
குவாண்டம் கணினி: கணக்கீட்டின் எதிர்கால புரட்சி! தெரிஞ்சுக்கணும், புரிஞ்சுக்கணும்! கலைமதி சிவகுரு நம்மால் பயன்படுத்தப்படும் கணினிகள் பொதுவாக Bit அடிப்படையில் இயங்குகின்றன. ஒரு பிட் என்றால் 0 அல்லது 1 என்ற இரண்டு நிலைகளில் மட்டுமே இருக்கும். ஆனால், குவாண்டம் கணினி என்பது க்யூபிட் (Qubit) அடிப்படையில் செயல்படுகிறது. க்யூபிட் என்பது ஒரே நேரத்தில் 0வும் 1வும் இருக்க முடியும் (இதற்கு Superposition என்கிறார்கள்). மேலும், இரண்டு க்யூபிட்கள் இடையே வினோதமான Entanglement எனும் தொடர்பு இருக்கும். இதனால் அவை ஒரே நேரத்தில் பெரும் அளவிலான கணக்கீடுகளை செய்யும். இதுவே குவாண்டம் கணினியை, சாதாரண கணினியை விட ஆயிரம் மடங்கு சக்திவாய்ந்ததாக மாற்றுகிறது. எப்படி செயல்படுகிறது? Superposition – ஒர…
-
- 3 replies
- 312 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ESA/EUCLID/EUCLID CONSORTIUM/NASA; ESA/GAIA/DPA படக்குறிப்பு, பிரபஞ்சத்தின் நீள்வட்ட வடிவம் எழுதியவர்,ஆசிரியர் குழு பதவி,பிபிசி முண்டோ ‘யூக்ளிட் விண்வெளி தொலைநோக்கி’ மூலம் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் உருவாக்கப்பட்ட பிரபஞ்சத்தின் முப்பரிணாம வரைபடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வரைபடம் 10 கோடி நட்சத்திரங்களையும் விண்மீன் திரள்களையும் காட்டுகிறது. இந்த யூக்ளிட் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியது ஐரோப்பிய விண்வெளி முகமை (இ.எஸ்.ஏ). இப்போது அந்த அமைப்பு இந்தப் படங்களை வெளியிட்டுள்ளது. 1,000 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன் திரள்கள் மற்றும் நட்சத்திரங்களைக் கவனிப்பது தொடர்பாக, யூக்ளிட் தொலைநோக…
-
- 1 reply
- 622 views
- 1 follower
-
-
15 Oct, 2025 | 09:23 AM ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான ஸ்டார்ஷிப் (Starship) ரொக்கெட், 11-ஆவது முறையாக விண்ணில் ஏவி சோதிக்கப்பட்ட நிலையில், அது தனது பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்பேஸ் (Starbase) ஏவுதளத்திலிருந்து குறித்த ரொக்கெட் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட ரொக்கெட், பூமியை வெற்றிகரமாகச் சுற்றி வந்தது. அதன் பின்னர், முந்தைய சோதனைகளைப் போலவே, போலியான செயற்கைக்கோள்களை (Dummy Satellites) விண்ணில் செலுத்தியது. இறுதியாக, ரொக்கெட் மீண்டும் பூமிக்குத் திரும்பி, ஏவுதளத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. 123 மீற்றர் உயரம் கொண்ட இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட், உலகின் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த ரொக்கெட்டாகக் கருதப்…
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Getty Images 9 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச விண்வெளித் துறையின் ஒரு பெரிய மாநாடு ஏப்ரல் 2025-இல் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஸ்பிரிங்ஸ் நகரில் நடந்தது. இந்தத் துறையில் அமெரிக்கா ஏற்கனவே ஒரு பெரிய சக்தியாக கருதப்படுகிறது. இப்போது சீனாவும் அதிநவீன செயற்கைக்கோள்களுடன் ஒரு வலுவான சக்தியாக உருவெடுத்து வருகிறது. தற்போது விண்வெளியில் செயற்கைக்கோள்களை அழிக்கக்கூடிய ஆயுதங்களை சீனா சோதித்து வருகிறது. அதேபோல் ரஷ்யாவும் இதனை முயற்சித்துள்ளது. மாநாட்டில் முக்கிய உரையாற்றியவர்களில் அமெரிக்க விண்வெளிப் படை தளபதி ஜெனரல் ஸ்டீபன் வைட்டிங் ஒருவராக இருந்தார். விண்வெளியும் இப்போது போரின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று அவர் கூறினார். ஆனால்…
-
- 1 reply
- 310 views
- 1 follower
-