Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. தெருவோர வியாபாரிகள், சில ஓட்டல் ஊழியர்கள் சீனாவின் டாங்யாங் நகரில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பக்கட்களுடன் அலைகின்றனர். எல்லாம்.. சின்ன பசங்களின் சிறுநீரை பிடித்து செல்வதற்குதான். அந்த சிறுநீரில் முட்டைகளை வேகவைத்து தெருவோரங்களில் விற்கின்றனர். உடல்நலத்துக்கு மிகவும் நல்லது என்று கூறுவதால், விற்பனை அமோகமாக நடக்கிறது. சீனாவின் ஜிஜியாங் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ளது டாங்யாங் நகரம். மிகவும் பிரபலமான நகரம். இங்குள்ள தொடக்க பள்ளிகளில் ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமிகள் படிக்கின்றனர். பள்ளி முடியும் நேரத்தில் குழந்தைகளை அழைத்து செல்ல பெற்றோர் கும்பலாக காத்திருக்கின்றனர். அவர்களுடன் தெருவோர வியாபாரிகளும் காத்திருக்கின்றனர். பள்ளி டாய்லெட்டில் வைத்துள்ள பக்கெட்…

  2. புது வருடம் 02 - 04 - 2012 பொதுவாக தைமாதம் முதாலம் திகதியே ஆங்கில புதுவருடமாக பார்க்கப்படுகின்றது. தமிழர்கள் தை மாதம் 14 ஆம் திகதியை இல்லை சித்திரை 14 ஆம் திகதியை புதுவருடமாக பார்க்கின்றோம். ஆனால், வர்த்தக ரீதியில் 02 -04 -2012 அன்றே புதுவருடமாக பார்க்கப்படுகின்றது. அன்று நாலாவது காலாண்டு முடிவடைந்தது. நிறுவனங்கள் தமது கணக்குப்புத்தகத்தை மூடி புதிய ஆண்டினை திறக்கின்றன. பல நிறுவனங்கள் தமக்குள் உள்ள பொருளாதார நிலைமைகள் காரணமாக பலரை இன்றுடன் வேலையால் நிறுத்தியுள்ளன. அதேவேளை பல நிறுவனங்கள் பலரை புதிதாக வேலைக்கு அன்று அமர்த்தவுள்ளன.

    • 0 replies
    • 462 views
  3. தற்போது லண்டனில் உள்ள பிரசன்ன டீ சில்வா இலங்கைக்கு தப்பியோடும் நிலை தோன்றியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இன்று மாலை பிரித்தானிய நேரம் 7.00 மணிக்கு சனல் 4 தொலைக்காட்சி இது தொடர்பான செய்தி ஒன்றை ஒளிபரப்ப உள்ளது. தற்சமயம் இலங்கையின் சிறப்புத் தூதுவராக பிரித்தானியாவில் தங்கியுள்ள பிரசன்ன டி சில்வாவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு இலங்கையில் பிரசன்ன டீ சில்வா இராணுவ அதிகாரியாகக் கடமையாற்றியவேளை அவர் இன அழிப்பில் ஈடுபட்டார் என்றும் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளைச் செய்தார் என்றும் அவர்மேல் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஊர்ஜிதமற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில், இதனை விசாரிக்க பிரித்தானியப் பொலிசார் ஒத்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.…

    • 2 replies
    • 547 views
  4. யாழ்.கொக்குவில் கலட்டி சந்திப் பகுதியில் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த முகாம் காணியினுள் இராணுவத்தினரால் புத்தர் கோவில் நீண்டகாலமாக அமைக்கப்பட்டிருந்தமை தற்போது அம்பலமாகியிருக்கின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சமாதான காலப் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களைக் கண்காணிப்பதற்காக யாழ்.பல்கலைக்கழக விடுதிகளை அண்மித்த குறித்த பகுதியில் இராணுவத்தினரால் நிரந்தர முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் அருகாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட அப்பக்கடை பல்கலைக்கழக மாணவர்களால் அடித்துச் சேதமாக்கப்பட்டிருந்தமையும் தெரிந்ததே. இந் நிலையில் சில நாட்களுக்கு முன்னர் குறித்த இராணுவ முகாமின் ஒருபகுதிக்காணியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியிருக்கின்றனர். இராணுவத்தினர் வெளியேறியதை அ…

  5. கிழக்கு மாகாணத்தில் உள்ள வறிய மக்களை மேம்படுத்துவதற்காக முன்வந்துள்ள அரசசார்பற்ற நிறுவனங்களை, அச்சுறுத்தி, கிழக்கின் முக்கிய அரசியல்வாதி மற்றும் அவரது சகாக்கள் கோடிக்கணக்கில் கப்பம் கோரி வருவதால், அந்த நிறுவனங்கள் தமது பணிகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தமக்கு கப்பம் கொடுக்கவில்லை என்றால், கிழக்கில், எந்த பொது வேலைத்திட்டங்களையும் செய்ய அனுமதிக்க போவதில்லை என கூறி, குறித்த அரசியல்வாதியின் சகாக்கள், அரசசார்பற்ற நிறுவனங்களை அச்சுறுத்தி வருகின்றனர். மட்டக்களப்பில் உள்ள அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் அலுவலகத்துடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புக்கொள்ளும் சம்பந்தப்பட்ட அரசியல்வாதியின் சகாக்கள், கப்பம் கோரி அச்சுறுத்தல் விடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. …

  6. நிலையான அமைதியை எட்டுவதற்கு சிறிலங்கா அரசுக்கு கடுமையான சமிக்ஞை ஒன்றை அனைத்துலக சமூகத்துடன் இணைந்து அமெரிக்கா அனுப்பியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடர் பற்றி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் நேற்று வொசிங்டனில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிறிலங்கா, ஈரான், யேமன், லிபியா, சிரியா, பர்மா உள்ளிட்ட நாடுகள் தொடர்பான கருத்துகளை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் சிறிலங்கா தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது- “உண்மையான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் மூலமே நிலையான அமைதியை எட்டமுடியும் என்ற கடுமையான சமிக்ஞை ஒன்றை சிறிலங்கா அரசுக்கு அனைத்துல…

  7. ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்திருந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்தத் தீர்மானத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமல், உள்ளார்ந்த அர்த்தங்களை உணர்ந்து கொள்ளாமல் தாம் அனுபவித்த அவலங்களுக்கான நியாயம் கிடைக்கவேண்டும், கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புக்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் மகிழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நிச்சயமாக ஜ.நாவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் தமிழர்கள் அனுபவித்த அவலங்களுக்கு ஒரு சிறிய ஆறுதலைக்கூட பெற்றுக் கொடுத்திருக்கவில்லை. உண்மையாகவும் வெளிப்படையாகவும் சொல்லப்போனால் தமிழர்களுடைய பெயரைச் சொல்லியே சர்வதேச சதிகாரர்களால் தமிழர்கள் மௌனிகளாக்கப்பட்டிருக்கின்றார்கள். இதற்கு தமிழர்களின் பிரதிநிதிகள் தா…

  8. ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சிறீலங்காவிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி என்றும் அதைவிட, இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தந்ததன் ஊடாக ஈழத்தமிழர்களுக்கு இந்தியா நம்பிக்கையூட்டும் வகையில் வெளிப்படையாகச் செயல்பட்டிருப்பதாக’வும் ஊடகங்களில் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இந்தத் தீர்மானத்தை இறுதிவரை ஏற்றுக்கொள்ள மறுத்த இந்தியா, இறுதிநாளன்று இதனை வரவேற்றதுடன் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் வாக்களித்தது. எப்போதும் சிறீலங்காவைக் காப்பற்ற மட்டுமே முனைகின்ற இந்தியா, இம்முறை கைவிடும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டபோதும், சிறீலங்காவை அடித்துக் காப்பாற்றியது என்பதே உண்மை. அமெ…

  9. பொதுவாக நம்மூர்களில் தான் இப்படி கொடூரமான தண்டனைகளை வழங்கும் அப்பாக்கள் இருக்கிறார்கள். ஆனால் மேலை நாடுகளிலும் இவ்வாறு இருக்கின்றார்கள் என்பது தான் ஆச்சரியத்தைத் தருகின்றது. தனது மகனின் கழுத்தில் சங்கிலியால் போட்டு பிணைத்து ஆமைப் பூட்டுப் போட்டு பூட்டி வைத்த தகப்பன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலைக்குச் செல்லாமல் கட் அடித்து விட்டு கொம்பியூட்டர் கேம் விளையாடிய தனது 13 வயதேயான மகனை சங்கிலியால் கட்டி வைத்து தண்டனை கொடுத்துள்ளார் குறித்த கோபக்காரத் தந்தை. கம்போடியாவில் தான் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு மணிநேரங்களுக்கும் மேலாக தண்டனையை அனுபவித்த சிறுவனை அயலவர்கள் பொலிஸாரின் உதவியுடன் மீட்டனர். பொலிஸார் குறித்த சிறுவனின் கழுத்தில் இருந்த ஆமைப்பூட…

    • 6 replies
    • 614 views
  10. ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ நேற்று (26) பிற்பகல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு தகாத வார்த்தைகளினால் திட்டியதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனையடுத்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனது அமைச்சின் இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாகத் தெரியவருகிறது. இந்த விவகாரம் குறித்து எமதுக்குக் கிடைத்தத் தகவல்களை முழுமையாக தருகிறோம். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் மில்கோ நிறுவனத்தின் தலைவராக ரொஹான் விக்ரமசிங்க என்பவரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவே நியமித்துள்ளார். எனினும், அண்மைக்காலமாக இந்த நிறுவனம் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்து வந்த நிலையில் எவ்வரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஜனாதிபதியின் பாரியாருக்க…

  11. வாழ்நாளில் ஒரு முறையே நிகழக் கூடிய அரிதான நிகழ்வு எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி ஏற்படவுள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் ஜூன் 6ம் திகதி வெள்ளிக் கிரகம் ஊட றுத்து செல்லவுள்ளது. வானியலில் மிக அரிதாக நிகழும் இது இந்த நூற்றாண்டில் கடைசி முறையாக ஏற்படவுள்ளது. இதன் படி இவ்வாறான ஒரு நிகழ்வை மீண்டும் பார்க்க ஒரு நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டி வரும். எதிர்வரும் ஜூன் 6ஆம் திக திக்கு பின்னர் 2117 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் திகதி யிலேயே வெள்ளிக் கிரகம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் செல்லவுள்ளது. எனினும் இதற்கு முன்னர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி இவ்வாறு நிகழ்ந்துள்ளது. இதன்போது வெள்ளிக்கிரகம் சூரியனின் மேற்பரப்பில் சிறு புள்ளியாக தோற்றம் பெறும் ஒரு சில மணி நேரங…

  12. காரைதீவில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 120 வது ஜனன தின நிகழ்வு முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 120 வது ஜனன தினத்தையொட்டி அவர் பிறந்த காரைதீவு மண்ணில் பல நிகழ்வுகள் நடைபெற்றன. இன்று செவ்வாய்க்கிழமை காலை காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் பிரதி அதிபர் எஸ்.இலங்கநாதன் தலைமையில் விபுலானந்தவிழா நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட காரைதீவு விபுலானந்த பணிமன்றத் தலைவர் வி.ரி.சகாதேவராஜா, பிரதி அதிபர் இலங்கநாதன், உதவி அதிபர்களான எம்.சுந்தரராஜன், வி.அருட்குமரன், மாணவர் தலைவர்கள் ஆகியோர் சுவாமியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து உரையாற்றுவதையும், ஆசிரியை வாணி சசிகுமார் உரையாற்றுவதையும் மாணவர்களையும் படங்களில் காணலாம். …

  13. தமிழக மீனவர்களுக்கு எதிராக தமிழீழ மீனவர்களை பயன்படுத்தும் சிங்கள பேரினவாதம் தமிழக மீனவர்கள் இலங்கைப் பிரதேசத்திற்குள் அத்துமீறி மீன் பிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டே சிங்கள பேரினவாதம் 500 மேற்பட்ட தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்றது. தமிழக மீனவர்களுக்கு இதுவரை எதுவித நீதியும் வழங்கப்படவில்லை. மறுபுறம் தமிழீழ மீனவர்களை தமிழக மீனவர்களுக்கு எதிராக களம் இறக்குகின்றது சிங்கள பேரினவாதம். தமிழீழ மீனவர்களுக்கு தமிழக மீனவர்களால் ஏற்படக்கூடிய ஒரு எல்லைதாண்டிய மீன்பிடி என்பதை விட சிங்கள பேரினவாதம் தமிழீழ மீனவர்களுக்கு போட்டிருக்கும் தடைகள் ஏராளம். தமிழீழ மக்களின் பகுதிகளில் மீன் பிடிக்க தமிழர்களுக்கு தடைவிதித்து, சிங்கள மீனவர்களை மீன் பிடிக்க மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கின…

  14. சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த புரட்சியாளர் யார் என்று கேட்டால், பெரும்பாலானவர்கள் சே குவேரா என்பார்கள். பலர் லெனினையும் ஸ்டாலினையும் குறிப்பிடுவார்கள். பலருக்கு மா சே துங் பிடிக்கும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவை எதிர்த்து அரசை நடத்தி வரும் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் இந்தப் பட்டியலில் நிரந்தரமான இடமுண்டு. தமிழர்களுக்காக உலகமெங்கும் குரல் கொடுப்பவர்களில் பலர் தங்களைப் புரட்சியாளர்களாக முன்னிறுத்திக் கொள்வதற்கு இவர்களில் ஒருவரைத்தான் இன்று வரைக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களில் பலருக்கு இவர்கள்தான் முன்னோடிக் கதாநாயகர்கள். தமிழக அரசியலிலும் இவர்களுக்கு முக்கியப் பங்குண்டு. இப்படி உணர்வுப்பூர்வமாக இணைந்திருந்த தமிழர்களையும் அவர்களுக்காக…

    • 1 reply
    • 388 views
  15. முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தி முடிக்கப்பட்ட தமிழின சங்காரம் தொடர்பாக ஜெனிவா ஐ.நா. மன்றத்தில் அமெரிக்கா முன்மொழிந்த குற்றப் பிரேரணை சிங்கள தேசத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் குற்றப் பிரேரணை தொடர்பான அறிவித்தல் வெளியானதைத் தொடர்ந்து, சிங்கள ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட அத்தனை பிரயத்தனங்களும் அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலகினால் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. ஈழத் தமிழர்களது அவல வாழ்வுக்கு இந்தத் தீர்மானத்தால் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்து விடாது என்றாலும், ஒரு சிறு நம்பிக்கைக் கீற்று தென்படுவதை யாரும் நிராகரித்து விட முடியாது. அமெரிக்காவின் குற்றப் பிரேரணையை முறியடிக்க சிங்கள ஆட்சியாளர்கள் அத்தனை பிரயத்தனப்பட்டார்கள் என்பதிலிருந்தே அவ…

  16. ஒருவருக்கு கோபம் வந்தால் பச்சை தண்ணீர் குடிக்கச்சொல்வார்கள். இல்லையென்றால் 10 இல் இருந்து 1 வரை மறு வளமாக எண்ணி ஆத்திரத்தை அடக்கச் சொல்வார்கள். சிறி லங்கா என்னும் தேசத்தில் வாழும் சிங்கள இனத்தில் பிறந்த ஒரு சிலர் மிகவும் வினோதமான முறையில் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்துவார்ளாம். அண்மையில் அந்நாட்டில் இடம்பெற்ற போர்ர்க்குற்றங்களை விசாரணை செய்து பொறுப்புக் கூறவேண்டும் என்று அமெரிக்கா, ஐநா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றியது. இதனால் கோபம் கொண்ட சிங்கள ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க நாட்டு அதிபர் ஒபாமாவையும், அந்நாட்டு வெளியுறவு அமைச்ச்ர் ஹிலாரி கிளின்ரனையும் நிர்வாணம் என்று தலைநகரில் சுவொரொட்டி, அவமதித்து தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்கள். …

    • 3 replies
    • 693 views
  17. இதை படித்த பிறகு தமிழன் என்ற பெருமையில் உடம்பு சிலிர்த்து போகும். அதிக நீளம் என கருதி நம் வரலாறை தெரிந்து கொள்ளாமல் பயணித்து விடாதீர்கள். தமிழ் இனத்தின் வீரம் பற்றி அறிய நாம் மன்னர் காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டியதில்லை. சமகாலத்தில் வாழ்ந்த நம் தமிழ் இன மக்கள் பங்கெடுத்த நேதாஜி அவர்களின் இந்திய தேசிய ராணுவம் ஒரு சான்றே போதுமானது... இந்திய விடுதலைக்காக நேதாஜி மலேயாவிலும் பர்மாவிலும் செயல்பட்டார். அவருக்கு உதவியாக அங்கிருந்த தமிழ் இன மக்கள் முழுமையாக செயல்பட்டனர் "இந்தியா விடுதலைப் பெற்றால்தான் ஆசியாவில் மற்ற நாடுகள் உடனே விடுதலை அடைய முடியும்" என்று நேதாஜி அறைக்கூவல் விடுத்தார். அந்த அறைக்கூவல் நம் வீர இனத்தின் காதுகளில் விழ, தமிழ்நாட்டிலும் மலாய…

  18. ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களால் சுயமாக தயாரிக்கப்பட்டு உலகத்தை ஏமாற்ற வழங்கப்பட்ட Lessons Learnt and Reconciliation Commission.(LLRC) அறிக்கையில், பரிந்துரைக்கப்பட்ட வேலைத்திட்டத்தை, நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்ற அமெரிக்க அரசின் தீர்மானம், மார்ச் 22, 2012 அன்று ஜெனீவா ஐநா சபையின் மனித உரிமை ஆணையத்தின் 19வது கூட்டத்தொடரின்போது வாக்கெடுப்புக்குவந்து. 24 நாடுகள் பெரும்பான்மை ஆதரவாக வாக்களித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இலங்கை அரசு தனது சுத்துமாத்து வசதிக்கேற்றவாறு தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றும் மனப்பாங்குடன் தயாரிக்கவில்லை என்பது தீர்மானத்தின்போது இடம்பெற்ற முரண்பாடுகளிலிருந்து தெரிகிறது. ஒப்பந்தங்களையும் ஆணைக்கு…

  19. தமிழீழ விடுதலைப் போரட்டம் உலகின் கண்களுக்கு கொண்டு செல்லப்பட்டு நீண்ட காலங்கள் சென்றுள்ள போதிலும் தற்போதுதான் எமது போராட்டம் உலகின் பார்வையில் நியாயம் மிக்கதாக மாறியுள்ளது. இந்த நியாயத் தன்மையை சர்வதேசம் எவ்வாறு பயன்படுத்த போகின்றது என்பதே தமிழ் மக்களின் கேள்வியாக உள்ளது. ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமானதில் இருந்து கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இறுதியாக இடம்பெற்ற வன்னி யுத்தத்தில் மட்டும் ஒரு இலட்சம் வரையான தமிழ் மக்களை எமது தாயகம் இழந்திருக்கின்றது. இந்த இழப்பினை நாம் வெறும் வார்த்தையாக எடுத்துக்கொள்ள முடியாது. எமது இனத்தை அழிப்பதற்கான நீண்டகால முயற்சியாகவே தமிழர் தாயகத்தில் இந்த அழிவு அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. ஒ…

  20. தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பை ஆதரிக்கக் கோரிய மனு பிளேக், கிளின்டனிடம் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கையளித்தது செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2012 14:23 நியூயார்க் (மார்ச் 27, 2012). ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு பிரதிநிதிகள், பிளேக்கின் அழைப்பை ஏற்று கடந்த பெப்ரவரி 29இல் பிளேக்கையும் வேறு பல அமெரிக்க இராஜாங்க உத்தியோகத்தர்களையும் வோஷிங்டனில் சந்தித்தனர். அங்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு இலங்கைய...ில் துயருறும் தமிழ் மக்களைப் பற்றி கதைத்தனர். ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு 31,000 மேற்பட்ட கையொப்பங்கள் அடங்கிய, தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பை ஆதரிக்கக் கோரிய மனு ஒன்றை பிளேக்கிடம் கையளித்தனர். இன்னுமொரு பிரதி மனுவை கிளின்டனிடம் கொடுக்கும்படி பிளேக்கிடம் கொடுத்தனர். அதைப…

  21. சென்னை: இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் வீடுகள் பட்டியல் கணக்கெடுக்கும் பணி கடந்த 2010ம் ஆண்டு தொடங்கியது. தமிழகத்தில் இந்தப் பணியில் சுமார் 1.20 லட்சம் பேர் ஈடுபட்டனர். இந்தக் கணக்கெடுப்பு முடிவடைந்ததையடுத்து இன்று அது தொடர்பான அறிக்கை வெளியிட்டப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறையின் தமிழ்நாடு மாநில இயக்குனர் கோபாலகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட, மாநில திட்டக்குழு துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர் பெற்றுக் கொண்டார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் இப்போது 1 கோடியே 85 லட்சம் குடும்பங்கள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் 1.42 கோடி குடும்பங்கள் இருந்தன. …

  22. Started by Nellaiyan,

    Three men have been found guilty of a gang-related shooting that left a five-year-old girl paralysed. Nathaniel Grant, Kazeem Kolawole and Anthony McCalla were convicted by a jury at the Old Bailey of causing grievous bodily harm to Thusha Kamaleswaran. She was gunned down as she played in her aunt's shop in south London in March last year. A bullet hit her in the chest and passed through her spine, leaving her wheelchair-bound for life. Film from several cameras played in court showed Thusha, in a pink dress, dancing along the shop's aisle as the intended victim and another shopper rushed by her. She was then seen slumped on the floor. Shopp…

    • 0 replies
    • 491 views
  23. உலகின் முதல் மனிதன் மேற்கு ஆசியாவில் தான் தோன்றினான்‘ என, இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இதுநாள் வரையில், கடந்த இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ சேப்பியன் என்ற இனத்தில் இருந்துதான் நவீன மனிதன் தோன்றினான் என்றும், முதன்முதலில் ஆப்ரிக்காவில் தோன்றிய இந்த ஹோமோ சேப்பியன் இனத்தவர் படிப்படியாக, ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இதர ஆசியப் பகுதிகள் நோக்கி இடம் பெயர்ந்தனர் எனவும், வரலாற்று அறிஞர்களால் நம்பப்பட்டு வந்தது. சமீபத்தில், இஸ்ரேல் நாட்டில் உள்ள பென்-குரியான் விமான நிலையம் அருகில் இருக்கும் குகை ஒன்றில் (குசேம்), அந்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிமனிதனின் உடல் படிவங்களை கண…

  24. முள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை சமூக வடிவமைப்பாளர்கள் அமைப்பினர் [The Social Architects -TSA]* கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். [சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 'போர் வலயமற்ற' பகுதியில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்களைப் பராமரிக்கும் விடுதியைச் சேர்ந்த சில எண்ணிக்கையான சிறார்களை பராமரிக்கும் பணியில் இராசதுரை ஈடுபட்டிருந்தார்.] அவர் கூறுகிறார், நாங்கள் கிளிநொச்சியை விட்டு இடம்பெயர்த்தப்படுவதற்கு முன்னர் தேவாலய வளாகத்தில் நான் ஆறு பதுங்குகுழிகளை அமைத்திருந்தேன். இதேபோல் வன்னி முழுவதிலும் பல பதுங்குகுழிகளை நாங்கள் அமைத்திருந்தோம்.…

  25. அமெரிக்கா முன்னின்று உழைத்து வெற்றி பெறச் செய்திருக்கும் ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானம் பற்றிச் சொல்வதற்கு ஒரு முக்கிய அம்சம் இருக்கிறது. அதை உலகத் தமிழினம் ஒன்றால் மாத்திரம் உணர முடியும். மேற்கூறிய தீர்மானம் பெறுமதியுள்ளதோ இல்லையோ, அதனால் ஈழத் தமிழர்களுக்கு நன்மைகள் கிட்டுமோ கிட்டாதோ அவற்றை ஒரு பக்கம் ஒதுக்கி விட்டு இன்னொரு விடயத்திற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். இலங்கை அரசிற்கு எல்லா வகையிலும் அனுசரணையாக இருந்து வரும் இந்திய மத்திய அரசை தமிழகத் தமிழர்கள் ஒருமித்த குரலில் திசை மாற்றியிருக்கிறார்கள். இது தெற்கு ஆசிய வரலாற்றில் மிகப் பெரியதொரு மாற்றமாக அமைகிறது. இறுதி வரை இலங்கைக்கு சார்பாக வாக்களிக்கும் நோக்குடன் தான் இந்திய மத்திய அரசு இருந்திருக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.