செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7082 topics in this forum
-
Published By: Digital Desk 3 29 Aug, 2025 | 01:39 PM கென்யாவில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவர் யானையின் தும்பிக்கையில் பியரை ஊற்றி அருந்தக் கொடுக்கும் வீடியோகளை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், இது தொடர்பில் சமூக ஊடகங்களில் சர்ச்சை வெடித்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த சுற்றுலா பயணி வனவிலங்கு சரணாலயத்தில் பிரபலமான 'டஸ்கர்' (Tusker) பியரை குடித்துவிட்டு, மீதமுள்ளதை யானைக்குக் கொடுப்பது போல் படமாக்கப்பட்டு "தந்தம் உள்ள நண்பனுடன் ஒரு டஸ்கர் பியர்," என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இதனை அவதானித்த கென்யர்கள் எதிர்ப்பை வெளியிட்டதை தொடர்ந்து அந்த பதிவு அவரது கணக்கிலிருந்து நீக்கப்பட்டது. பிபிசி இந்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து, அதன் உண்மை தன்மையை …
-
- 0 replies
- 102 views
- 1 follower
-
-
அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு, ரைசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடிதம், வெள்ளை மாளிகைக்கு சென்றடைவதற்கு முன்பாகவே, உளவுத்துறை அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டுள்ளது. கனடாவில் இருந்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக உளவுத்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், டிரம்பை குறிவைத்து கடிதம் அனுப்பப்பட்டதா? என்ற கோணத்தில் உளவுத்துறை விசாரணையை முன்னெடுத்து…
-
- 0 replies
- 277 views
-
-
இந்தியரின் வேலை வாய்ப்பை `பறித்த' சதாம் ஹுசைன்! பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தூக்கு தண்டனை வழங்கப்பட்ட பின்னரும், இராக்கின் மறைந்த முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன், இந்தியர் ஒருவரின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். படத்தின் காப்புரிமைAP 25 ஆண்டுகளுக்கு முன்னால், இராக்கின் சர்வாதிகாரியாக இருந்த சதாம் ஹுசைனின் பெயரை தனக்கு சூட்டிய அவருடைய தாத்தாவை இந்தியாவை சோந்த இந்த கடல் பொறியியலாளர் குறைசொல்ல விரும்பவில்லை. ஆனால், தன்னுடைய பெயர் ஹுசைன் என்று உச்சரிக்கப்படாமல், ஹுசேன் என்று சற்றே மாறுபட்டு ஒலித்தாலும், சுமார் 40 முறை ஒரு வேலை மறுக்கப்பட்ட பின்னர், பணி வழங்குவோர் தனக்கு வேலை வழங்க விரும்பவில்லை என்ற முடிவுக்கு அவ…
-
- 0 replies
- 201 views
-
-
பிரிட்டன் வனமகன்: செல்போன் இல்லை, ஃபேஸ்புக் இல்லை - 40 ஆண்டு காட்டு வாழ்கை அனுபவங்கள் ஸ்டீவன் ப்ரோக்கிள்ஹர்ஸ்ட் பிபிசி ஸ்காட்லாந்து நியூஸ் 14 நவம்பர் 2021, 02:07 GMT பட மூலாதாரம்,URUNA PRODUCTIONS படக்குறிப்பு, கென் ஸ்மித் ஏறக்குறைய 40 ஆண்டுகளாக கென் ஸ்மித் பிறரைப் போல இயல்பான வாழ்க்கையைத் தவிர்த்துவிட்டு, ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் உள்ள ஒரு தொலைதூர லோச்சின் கரையில் கையால் செய்யப்பட்ட மரத்தடி அறையில் மின்சாரம் அல்லது குழாய் நீர் வசதியின்றி வாழ்கிறார். "இது ஒரு நல்ல வாழ்க்கை," என்று கூறும் கென், "எல்லோரும் இப்படி செய்ய விரும்புகிறார்கள், ஆனால் யா…
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
ஆன்மீக ஆலோசனை வழங்கிய பெண்ணை 3ஆவது முறையாக திருமணம் முடித்தார் இம்ரான் கான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பாகிஸ்தான் "தெஹ்ரீக் ஈ இன்சாப்" கட்சி தலைவரான இம்ரான் கான் 3ஆவது முறையாக திருமணம் செய்து கொண்டார். அணியின் கப்டனாக இம்ரான் கான் இருந்த போது கடந்த 1992ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தன் வசப்படுத்திக் கொண்டது. கிரிக்கெட்டில் இருந்து விலகிய பின் பாகிஸ்தான் "தெஹ்ரீக் ஈ இன்சாப்" என்ற தனி கட்சியை தொடங்கி வழிநடத்தி வருகிறார் கான். இங்கிலாந்து நாட்டு கோடீஸ்வரரின் மகளான ஜெமிமா கோல்ட்ஸ்மித் மற்றும் இம்ரான் கான் திருமணம் 1995ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 9 வருட திருமண வாழ்க்கைக…
-
- 0 replies
- 197 views
-
-
கூகுள் நிறுவனத்தையே திணற வைத்த "கங்ணம் ஸ்டைல் பாடல் தென் கொரிய பாடகர் ஷையின் கங்ணம் ஸ்டைல் பாடல் கூகுள் நிறுவனத்தைகூட திணற வைத்துள்ளது. 2012 ஆம் ஆண்டு வெளியான இப்பாடல் உலகம் முழுவதையும் ஒரு கலக்கு கலக்கிய பிரசித்தமான பாடல் என்பது தெரியும். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் உட்பட பல வி.வி.ஐ.பிகளும் இந்த குதிரை நடனப் ஸ்டைல் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இந்நிலையில் இணைய உலகமே இப்பாடலை கையாள்வதற்கு தயார் நிலையில் இல்லாதிருந்த தகவல் இவ்வாரம் வெளியாகியுள்ளது. யூ ரியூப் இணையத்தளத்தில் இப்பாடலை பார்க்கப்பட்ட தடவைகளின் எண்ணிக்கை இவ்வாரம் 215 கோடியாக அதிகரித்தது. இது ஏறத்தாழ உலக ச…
-
- 0 replies
- 514 views
-
-
இயந்திர துப்பாக்கியின் மீது ஏறி அமர்ந்து ஈராக்கில் உள்ள பாலைவனத்தில் குண்டுமழை பொழியச்செய்யும் ஆறு வயது சிறுமி 400 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றதாக மார்தட்டிக் கொள்ளும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. https://www.youtube.com/watch?v=r2N-bQURIiM துப்பாக்கியின் மீது அமர்ந்திருக்கும் குர்திஷ் இனத்தை சேர்ந்த அந்த சிறுமியை தாங்கிப் பிடித்திருக்கும் நபர் ‘கொல்லு.., கொல்லு..,’ என்று இந்த வீடியோ காட்சியில் கூச்சலிட, சரம்சரமாய் இயந்திர துப்பாக்கியில் இருந்து குண்டுகளை அவள் பொழிந்துத் தள்ளுகிறாள். https://www.youtube.com/watch?v=SzLxrmlvsqg இதுவரை எத்தனை தீவிரவாதிகளை நீ கொன்றிருப்பாய்? என்று அவளுடன் இருக்கும் நபர் கேட்கும்போது நான்கு விரல்களையும் மேலே உயர்த்த…
-
- 0 replies
- 347 views
-
-
சமைத்து உண்ண ஆசைப்படும் சிம்பன்சிகள்: ஆய்வில் வெளியானது அபூர்வ தகவல் [ வியாழக்கிழமை, 04 யூன் 2015, 07:18.51 மு.ப GMT ] விலங்கு இராச்சியத்தில் உள்ள பல்வேறு வகையான குரங்குகளின் சிம்பன்சிக்களே மனிதனை மிகவும் ஒத்ததாக காணப்படுகின்றது. இவ் ஒற்றுமையானது உருவத்தில் மட்டுமல்லாது செயற்பாடு மற்றும் சிந்தனைத் திறனிலும் மனிதனை ஒத்ததாகவே இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இதற்கு சான்றாக சிம்பன்சிகள் தமக்கு தேவையான உணவை தாமே சமைத்து உண்ண விரும்புவதாக அவ் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வில் ஈடுபட்டவர்கள் சிம்பன்சிகளிடம் சமைக்கும் சாதனங்களையும், துண்டு துண்டாக வெட்டப்பட்டு சமைத்த தக்காளிப் பழங்களையும் வழங்கியுள்ளனர். ஆனால் ஏற்கணவே சமைக்கப்பட்ட…
-
- 0 replies
- 456 views
-
-
பசுபிக் பகுதியில் நாள்தோறும் பொங்கிக்கொண்டிருக்கும் எரிமலைக்குள் இளைஞர் ஒருவர் கம்பீரமாக இறங்கி சாதனை படைத்த சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Sam Cossman என்ற ஆய்வாளர் ஒருவர் தனிக்குழு ஒன்றை உருவாக்கி எரிமலை குறித்து ஆய்வு செய்ய நவீன சாதனங்களுடன் பசுபிக் பகுதியில் உள்ள Ambrym என்ற தீவுக்குச் சென்றுள்ளார். மலைப்பகுதியில் அமைந்துள்ள Marum என்ற எரிமலைக்குள் இறங்கி ஆராய்ச்சி செய்வது தான் இந்தக் குழுவின் திட்டம். இது தொடர்பான வீடியோவில், சுமார் +1,600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் லாவா குழம்புகளை கக்கிக் கொண்டிருக்கும் எரிமலையின் விளிம்பிற்குச் சென்ற அந்த ஆராய்ச்சியாளார், தனது உடலில் வெப்பத்தைத் தாங்கிக்கொள்ளும் பாதுகாப்பு உடைகளை உடுத்திக்கொண்டு எர…
-
- 0 replies
- 324 views
-
-
''ஹப்பி பேர்த்டே ...'' பாடலுக்கு காப்புரிமக் கட்டுப்பாடு கிடையாது bbc ''ஹப்பி பேர்த்டே ...'' பாடலுக்கு காப்புரிமக் கட்டுப்பாடு கிடையாது ''ஹப்பி பேர்த்டே டூ யூ'' என்ற பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் வரிகளை இனி எவரும் காப்புரிமத்தால் தடுத்து வைக்க முடியாது என்று அமெரிக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டிருக்கிறது. ''ஹப்பி பேர்த்டே டூ யூ'' என்ற ஆங்கில மொழியின் மிகவும் பிரபலமான பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் வரிகளை இனி எவரும் காப்புரிமத்தால் தடுத்து வைக்க முடியாது என்று அமெரிக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டிருக்கிறது. இன்னுமொரு நிறுவனத்திடம் இருந்து இந்தப் பாடலை தாம் 1998இல் வாங்கியதாக வார்னர் சப்பல் மியூசிக் நிறுவனம் வாதிடுகிறது. ஆனால், அந்தப் பாடலை பியானோவில் வாசிக்கும் ஒரு குறி…
-
- 0 replies
- 392 views
-
-
ரஷ்ய (Russia) நீதிமன்றம் வரலாறு காணாத அபராத தொகையை கூகுள் (Google) நிறுவனத்திற்கு எதிராக விதித்து தீர்ப்பளித்துள்ளது. கூகுளின் தாய் நிறுவனமான Alphabet மூலம் 17 ரஷ்ய ஊடக நிறுவனங்களின் உள்ளடக்கங்கள் கட்டுப்படுத்தப்படுவதாக தெரிவித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு ரஷ்ய ஊடக நிறுவனங்களின் உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது. அமெரிக்க டொலர் இதற்கிணங்க அபராதத் தொகையாக 20 டெசிலியன் அமெரிக்க டொலர் ($20,000,000,000,000,000,000,000,000,000,000,000) விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த அபராதத் தொகையின் மதிப்பு 110 ட்ரில்லியன் டொலருக்கும் அதிகமாகும். அத்த…
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் இப்புராதன நகரத்தின் வேர்கள் எங்கெங்கோ ஓடிமறைந்துள்ளன. இன்றுள்ள இந்நகரம் எழுப்பப்படும் முன்பே எரிக்கப்பட்டது. எரிக்கப்படுவதற்கு முன்பே சிறப்பாக எழுப்பப்பட்டிருக்கிறது. இதன் வேர் நெருப்புக்கும் சாம்பலுக்கும் இடையில் ஊடுருவிக் கிடக்கிறது. அழிவைச் சுற்றிச் சுற்றியே பின்னிக் கிடக்கிறது. ஆனாலும் அழியாமல் இருக்கிறது. - சு.வெங்கடேசன், காவல்கோட்டம் . காவல்கோட்டம் குறித்து பதிவெழுதவே மலைப்பாக உள்ளது. மதுரை குறித்த நாவல் எனும்போது ஒவ்வொரு பகுதியுமே எனக்கு முக்கியமாகத் தோன்றுகிறது. எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் பட்டியலில் காவல்கோட்டத்துக்குத் தனியிடம் உண்டு. பாண்டியர்களிலிருந்து இன்று வரை எத்தனையோ பேர் மதுரையை ஆண்டார்கள். மதுரையை …
-
- 0 replies
- 1.6k views
-
-
சென்னை:கழுத்தைப் பிடித்து நெரித்து, தூங்க விடாமல் செய்யும் கெட்ட ஆவியை, சிறையில் அடைக்க வேண்டும் என, ஒருவர் கொடுத்த புகாரால், போலீசார் பெரும் கலக்கத்தில் உள்ளனர். இந்த புகார் தொடர்பாக, விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு, ஆவி பிடிக்கும் வேலையும் நடக்கிறது. கண்ணுக்கு முன்னாடி ஓடுகிறவனையே பிடிக்க முடியவில்லை. இவன் காற்றை பிடிக்க சொல்கிறானே என, போலீசார் புலம்புகின்றனர். வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு, 45 வயதுள்ளவர் வந்தார். சுற்றும் முற்றும் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தவரிடம், வரவேற்பு பணியில் இருந்த பெண் போலீஸ் விசாரித்தார். அவர் கொண்டு வந்த புகாரை படித்து, மனதுக்குள்ளேயே சிரித்து விட்டு, சப்-இன்ஸ்பெக்டரை பாருங்கள் என, அனுப்பினார். வந்தவர், போலீஸ்காரரிடம் புகார்…
-
- 0 replies
- 952 views
-
-
கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால்.... சுட்ட வடை, ரூ. 26,600க்கு ஏலம் போனது. திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிபராசக்தி கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூரம் திருவிழாவில் கொதிக்கும் எண்ணெயில் இருந்து வெறும் கைகளால் வடை சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்வாறு சுடப்பட்ட 7 வடைகள் ரூ. 26 ஆயிரத்திற்கு ஏலம் போனது. திருவண்ணாமலை மாவட்டம், கேளூர் அடுத்த துரிஞ்சிகுப்பத்தில் ஆதிபராசக்தி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் 3ம் வெள்ளியன்று ஆடிபூரத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று 16ம் ஆண்டு திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஞ்சள் குடம் சமர்ப்பணம் செய்யப்பட்டது.தொடர்…
-
- 0 replies
- 476 views
-
-
தூங்கிக் கொண்டே மணிக்கு 150 கி.மீ வேகத்தில் கார் ஓட்டிய இளைஞர் மீது வழக்கு! அல்பர்டாவில் தூங்கிக் கொண்டே மணிக்கு 150 கி.மீ வேகத்தில் கார் ஓட்டிய இளைஞர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. பகுதியளவு தானாக இயங்கக்கூடிய டெஸ்லா கார் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்க, அதில் இருந்த ஓட்டுநரும் சக பயணியும் தூங்கியதாக பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரின் முன் இருக்கைகள் இரண்டும், முழுவதுமாக சரிந்திருந்து, அதில் ஓட்டுநரும், சக பயணியும், நல்ல உறக்கத்தில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். டெல்ஸா மாடல் எஸ் ரக காரை பொலிஸார் கண்டறிந்தபோது, அந்த கார் மணிக்கு 140-150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்க…
-
- 0 replies
- 332 views
-
-
கார் விற்பனையாளர் வீட்டின் முன் நிர்வாணப் போராட்டம் ; பெண் எடுத்த அதிரடி முடிவு பிரேசிலில் பழுதடைந்த காரை ஏமாற்றி விற்றமையால் கோபமடைந்த பெண்ணொருவர் கார் விற்பனையாளர் வீட்டின் முன்பு நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டார். பிரேசிலில் சாண்டா கேட்ரீனா பகுதியைச் சேர்ந்த கார் விற்பனையாளர் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கார் ஒன்றை விற்பனை செய்துள்ளார்.குறித்த கார் வாங்கிய 2 நாட்களிலே பழுதடைந்து நின்று நிலையில், கார் திருத்துனரை அழைத்து காரை சோதனை செய்யும்படி கேட்டுள்ளார். காரை சோதனை செய்த கார் திருத்துனர், காரின் வெளிப்புறம் மட்டும் புதியதாக உள்ளதாகவும், உள்ளே இருக்கும் இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தும் பழைய பழுதடைந்த பொருட…
-
- 0 replies
- 207 views
-
-
அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் "இயேசுவின்" உருவத்தை கண்டதாகக் கூறும் தம்பதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கர்ப்பமாக இருக்கும்போது எடுக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் படத்தில் இயேசு கிறிஸ்துவை பார்க்க முடிவதாக ஒரு அமெரிக்க தம்பதியினர் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைFACEBOOK அந்த ஸ்கேன் படத்தின் இடது ஓரத்தில் முள்முடி கிரிடத்தோடு, நீண்ட அங்கி அணிந்திருக்கும் ஒருவ…
-
- 0 replies
- 208 views
-
-
புத்தூர் பகுதியை சேர்ந்த 59 வயதான குகபிரகாசம் மற்றும் அவரது மனைவியான 55 வயதான சுகுணா ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். வீட்டில் உள்ள நீர் தொட்டியில் மனைவி நீர் அள்ளும் போது மின்சாரம் தாக்கியதாகவும், அவரை காப்பாற்ற முயன்ற வேளை கணவனும் மின்சார தாக்குதலுக்கு இலக்காகியதில் உயிரிழந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ் புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு | Virakesari.lk
-
- 0 replies
- 229 views
-
-
மன்னார் வைத்தியசாலையின்... நோயாளர் விடுதியில், கத்திக்குத்து – ஒருவர் கைது! மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து பலத்த காயத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சைப் பெற்று வந்த மன்னார் நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த நபர் மீது இவ்வாறு கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1286780
-
- 0 replies
- 195 views
-
-
மகளை கொன்று இருதயத்தை கடவுளுக்கு படைத்த தாய்: இங்கிலாந்தில் சம்பவம் வீரகேசரி இணையம் 12/20/2010 2:06:47 PM தாய் ஒருவர் மகளை கொன்று இருதயத்தை கடவுளுக்கு படைத்த சம்பவம் இங்கிலாந்தில் நடைபெற்றுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஜெரோம் நெக்னே. அவரது மனைவி ஷாய்னா பரூச்சி (35) சோமாலியாவை சேர்ந்த இவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். இவர்களுக்கு 3 பிள்ளைகள் இருந்தனர். இந்த நிலையில் 4 வயது மகளை திடீரென காணவில்லை. இதற்கிடையே அவரது வீட்டு சமையலறையில் இருந்து ரத்தத் தோய்ந்த மிக நீள மான கத்தியை அவரது ஏனைய குழந்தைகள் கண்டெடுத்தனர். இது குறித்து தாயார் பரூச்சியிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் தனது 4 வயது மகளை கொலை செய்தது தெரியவந்தது. மே…
-
- 0 replies
- 451 views
-
-
யானைகளும் மனிதர்களைப் போல குறும்புத்தனம் செய்யக்கூடியவை என்பது, இந்த வீடியோவைப் பார்த்தால் புரியும்.
-
- 0 replies
- 174 views
- 1 follower
-
-
QR இல்லாமல் பெற்றோல் அடிக்க கோரி நாவற்குழி எரிபொருள் நிரப்பு ஊழியர் மீது வாள் வெட்டு! QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என கூறிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பெற்றோல் அடிக்குமாறு கோரியுள்ளனர். ஊழியர் QR குறியீட்டை கேட்ட போது, QR இல்லாமல் அடிக்குமாறு கூறியுள்ளனர். அதற்கு ஊழியர் மறுப்பு தெரிவித்த போது, ஊழியருடன் முரண்பட்டு, தமது உடைமையில் மறைத்து வைத…
-
- 0 replies
- 143 views
-
-
மெக்சிகோவில் உள்ள மாண்டேரி பகுதியில் சுற்றுலா பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உள்ளது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஜிப்லைனில் சாகச பயணம் செய்து மகிழ்வார்கள். இந்நிலையில் கடந்த 25ஆம் திகதி அங்கு சுற்றுலா சென்றவர்களில் 6 வயது சிறுவன் ஒருவன் ஜிப்லைனில் சாகச பயணத்தை மேற்கொண்டான். அப்போது எதிர்பாராத விதமாக கம்பி அறுந்து சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தான். அதிர்ஷ்டவசமாக பூங்காவில் இருந்த செயற்கை குளத்தில் அந்த சிறுவன் விழுந்தான். உடனே அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் நீச்சல் குளத்துக்குள் குதித்து சிறுவனை காப்பாற்றினார். இதில் சிறுவன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினான். எனினும் அவனுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அந்த சி…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
டிக்டொக் காதல் விபரீதம் : மனைவியை விபசாரத்தில் தள்ள முயற்சி? டிக்டொக் காதல் மனைவியை விபசாரத்தில் தள்ள முற்பட்டதால், மனைவி தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த வருடம் டிக்டொக் ஊடாக சீதுவை பகுதியை சேர்ந்த இளைஞனுடன் காதல் வசப்பட்டுள்ளார். அந்நிலையில் , பாடசாலை கல்வியை கைவிட்டு , வீட்டை விட்டு வெளியேறி சீதுவைக்கு சென்று காதலனை திருமணம் முடித்துள்ளார். திருமணமாகி சில வாரங்களில், சீதுவைச் சேர்ந்த குறித்த இளைஞன் தனது காதல் மனைவியை பணத்துக்காக விபசாரத்தில் தள்ள முயன்றுள்ளார். அதனை அடுத்து மாணவி அங்கிருந்து தப்பித்து யாழ்ப்பாணம் திரும்பி பெற்றோருடன் வ…
-
- 0 replies
- 499 views
-
-
இசுரேல் பாலஸ்தீன பிரச்னையை தீர்க்க ஒவ்வொரு அமெரிக்க அதிபரும் முயன்று வந்தனர். ஆனால், இன்றைய அதிபரும் அவரது மத்திய கிழக்கு ஆலோசகரான அவரது மருமகனும் ஒரு பண - பொருளாதார உதவி ஊடாக சமாதானத்தை கொண்டுவர ஒரு பிரேரணையை முன்வைத்துள்ளனர். பத்து வருடத்திற்கு ஐம்பது பில்லியன்கள் அமரிக்க டாலர்கள் முதலீடாகவும், உதவியாகவும் மற்றும் குறைந்த வட்டியும் கொண்டதாகவும், இது அண்டை நாடுகளான எகிப்து ,ஜோர்தான் மற்றும் லெபனானுக்கும் சேர்த்தே உதவும். ஆனால், பாஸ்தீன ஆலோசகர்கள் முதலில் நில ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட்டல் வேண்டும் என கூறி உள்ளனர், White House proposing $50 billion package to boost Palestinian economy -- if there is peace The White House is proposing a $50 bi…
-
- 0 replies
- 719 views
-