துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
350 topics in this forum
-
மதுரன் (டுபாய்) - 138,50€
-
- 1 reply
- 1.4k views
-
-
ஒவ்வொரு மாத்துக்கான கணக்கறிக்கையும் ஒவ்வொரு மாதமும் 5ம் திகதிக்குள் வெளியிடப்படும். பெப்ரவரி 2011இற்கான கணக்கறிக்கை. கணக்கறிக்கை PDFவடிவில் இணைத்துள்ளோம். உதவும் உறவுகளுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்.
-
- 0 replies
- 804 views
-
-
-
நேசக்கரம் அமைப்பினூடாக தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளிற்கு உதவிய மற்றும் உதவிக்கொண்டிருக்கும் உலகெங்கும் வாழும் அனைத்து அன்பான உள்ளங்களிற்கும் முதல் வணக்கங்களையும் நன்றிகளையும் நேசக்கரம் தெரிவித்துக்கொள்வதோடு, எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்ளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சிறுதுளி பெரு வெள்ளம் என்பதற்கமைய உலகெங்கும்சிறுகச் சிறுகச் சேகரித்த உதவிகளை நேசக்கரம் அமைப்பு ஒருக்கிணைத்து எமது மக்களிற்காக பெருமளவில் கொண்டு சென்று சேர்த்துள்ளது. நேசக்கரத்தின் அடிப்படைத்திட்டங்களான :- 1)பெற்றோரை இழந்த அடிப்படைக் கல்வி வசதிகளற்ற குழந்தைகளின் கல்வி வசதிகள் மற்றும் சத்துணவு திட்ட அடிப்படையில் இந்த ஆண்டு பயனடைந்த மொத்தம் 1970 மாணவர்கள். 2)வசதியற்ற உயர்கல்வி மற்றும…
-
- 0 replies
- 779 views
-
-
டிசம்பர் 2010 கணக்கறிக்கையும் பயன்பெற்றோரின் விபரங்களும். கீழுள்ள இணைப்பில் இணைத்துள்ளோம். 01.12.10 – 31.12.10 வரையான கணக்கறிக்கை.
-
- 0 replies
- 920 views
-
-
01.12.10 அன்று கிளிநொச்சி மாவட்டம் கனகபுரம் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் தாய் தந்தையரை இழந்து அடிப்படை வசதிகளற்ற 15மாணவ மாணவியர்களுக்கான மாதாந்த பண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாணவருக்கு 3000ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது. 15மாணவர்களுக்குமாக மொத்தம் 45000ரூபா வழங்கப்பட்டுள்ளது. மற்றும் ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவு மற்றும் உடுப்பு வகைகள் உட்பட இலங்கைரூபா இரண்டு லட்ச ரூபா பெறுமதிக்குரிய கொடுப்பனவினை நேசக்கரம் அங்கத்தவர் ஒருவர் நேரடியாகச் சென்று வழங்கியுள்ளார். இவற்றோடு எட்டுக்குடும்பங்களிற்கான சுய தொழில் ஊக்குவிப்பு உதவிகளாக 370000 ரூபா வழங்கப்பட்டது. சுயதொழில் ஊக்குவிப்பு உதவியைப் பெற்றவர்கள் யாவரும்…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 13 replies
- 3.1k views
-
-
நவம்பர் மாதம் கணக்கறிக்கை. நேசக்கரம் நவம்பர் மாதம் உதவிகள் உதவிகள் பெற்ற பயனாளிகளின் பயன்பாடுகள் அடங்கிய முழுமையான அறிக்கையை பாருங்கள். கணக்கறிக்கையை பார்வையிட மேலுள்ள இணைப்பில் அழுத்துங்கள்.
-
- 5 replies
- 1.2k views
-
-
வாசிக்க இந்த இணைப்பில் அழுத்துங்கள். ஒக்ரோபர் மாதம் கணக்கறிக்கை.
-
- 0 replies
- 861 views
-
-
01.12.10 கரும்பு - 14.06€ 02.12.10 சுஜி பிரித்தானியா - 33,18€ 02.12.10 தமிழன் கனடா - 72,97€ 03.12.10 அகூதா - 35,05€ 07.12.10 வாசகன் - 156,61€ 07.12.12 சுவி 20,00€ 08.12.10 தமிழன் கனடா - 72,87€ 08.12.10 அகூதா - 27,79€ 08.12.10 இளைஞன் - 30,00€ 12.12.10 காரணிகன் - 95,75€ 12.12.10 kathirs - 106,82€ 18.12.10 தமிழன் கனடா - 351,38€ 16.12.10 இளைஞன் 150,00€ 23.12.10 தமிழன் கனடா 147,38€ 23.12.10 கிருபன் - 50,00€
-
- 11 replies
- 1.5k views
-
-
நவம்பர் மாதம் உதவியோர் விபரம் கரும்பு - 14,06€ கந்தப்பு - 68,43 € யாழ்கவி - 68,43 € தமிழன் - 65,86€ விசுகு - 200,00€ 08.11.10 கயந்தி - 50,00€ 10.11.10 - குமாரசாமி - 35,00€ 17.11.10 வாசகன் - 73,22€ 17.11.10 ஜீவா - 150,00€ 18.11.10 தமிழன் கனடா - 70,49€ 18.11.10 இசைக்கலைஞன் - 140,50€ 19.11.10 காரணிகன் - 71,72€ 19.11.10 ஊரவன் - 134,89€ 21.11.10 கிருபன் - 50,00€ 23.11.10 அகூதா - 101,14€ 28.11.10 நிழலி - 48,66€ 29.11.10 பிரித்தானியாவிலிருந்து பூரணி - 244,55€ 30.11.10 ஐீவா - 165,00€ தமிழன் கனடா - 100கனடியடொலர்கள்.(65,83€) அகூதா - 20000இலங்கை ரூபா இணையவன் - 50,66€
-
- 26 replies
- 2.9k views
-
-
ஜீவா அனுப்பிய 175€ இசைக்கலைஞன் - 53,06€ தப்பிலி - 38,89€ ஆகியோரின் பங்களிப்பு இந்த இணைப்பில் http://www.yarl.com/forum3/index.php?showtopic=75836 உதவி கோரியுள்ள குடும்பத்துக்கு அனுப்புகிறேன். தமிழன் (இவர் ஒரு தமிழகத்து உறவு) 66,57 € இந்த இணைப்பில் உள்ள http://www.yarl.com/forum3/index.php?showtopic=75908 குடும்பத்துக்கு மாதாந்த உதவியாக 100கனேடிய டொலர்களை உதவ முன்வந்து முதலாவது கொடுப்பனவை அனுப்பியிருக்கிறார். உரிய குடும்பத்திற்கு வங்கிக்கணக்கு எதுவும் இல்லாமையால் முதல் கட்ட உதவி நேசக்கரம் வங்கியூடாக அனுப்பப்படுகிறது. அடுத்த முறையிலிருந்து இந்த உதவி நேரடியாக தமிழன் அவர்கள் செய்யவுள்ளார். இக்குடும்பம் ஓரளவு வளமைக்குத் திரும்பியதும் அவர்களுக்கான சுயதொழில் வேல…
-
- 5 replies
- 1.4k views
-
-
ஆடி,ஆவணி,புரட்டாதி கணக்கறிக்கை PDF வடிவில். இந்த இணைப்பில் அழுத்தி கணக்கு விபரங்களை பார்வையிடலாம். நேசக்கரம் தன்னார்வத் தொண்டு அமைப்பின் உதவித் திட்டங்களினால் மூன்றாம் காலாண்டில் பயனடைந்தோரது விபரங்கள் , மற்றும் உதவியோரது விபரங்கள். 1)கல்விகற்கும் பாடசாலை மாணவர்கள் , பயனடைந்தோர் 765 மாணவர்கள். பயனடைந்த பாடசாலைகள் :- கனகபுரம் பாடசாலை (13மாணவர்கள்) , ஊற்றுப்புலம் அ.த.க (220மாணவர்கள்) , கிளிநொச்சி கனிஸ்ரா மகாவித்தியாலம் (6மாணவர்கள்). 239மாணவர்கள் பாடசாலைகள் ஊடாகவும் 136மாணவர்கள் வெளியிலிருந்தும் உதவிகள் பெறுகின்றனர். வழங்கப்பட்ட உதவிகள் கல்வி உபகரணங்கள் உடைகள் சத்துணவு மற்றும் வாழ்வாதார கற்றலுக்கான பண உதவிகள் என்பன வழங்கப்பட்டுள்ளன. வவுனியாவில் ஏ.எ…
-
- 6 replies
- 1.6k views
-
-
17.09.10 அன்று கிளிநொச்சி கனகபுரம் மகாவித்தியாலயத்தில் கல்விகற்கும் 13பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான முதற்கட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது. சுதாகரன் கோபிகா , விஜயகுமார் மதுசா ,வைகுந்தவாசம் வாசுகி, தேவசிகாமணி வக்சாயினி, மகாதேவன் மோகனன், சுப்பிரமணியம் சுகந்தினி, பிரான்சிஸ் றைசன், அழகுதேவன் தமிழ்ச்செல்வி, ஜெகராசா குணாளன் ஜெகராசா கலைமகள், வில்வராசா குகேந்தினி, செல்வகுமார் சங்கீதா, மகாதேவன் துசாந்தி ஆகிய 13 மாணவர்களுக்கு ஆளுக்கு தலா இலங்கை ரூபா 1500ரூபா (ஆயிரத்து ஐந்நூறுரூபா) பணமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது மாணவர்களின் மாதாந்த கல்விக்கான உதவியாக வழங்கப்பட்டுள்ளது. இம்மாணவர்களுக்கான பண உதவியை நேசக்கரம் தொடர்பாளர்களில் ஒருவரான தீபச்செல்வன் அவர்கள் மாணவர்கள் பெற்…
-
- 0 replies
- 986 views
-
-
கிளிநொச்சி செல்வாநகர் குடியிருப்பில் வாழ்கின்ற 10குடும்பங்களுக்கான உதவிகள் 14.09.10 அன்று வழங்கப்பட்டுள்ளது. இயற்கை அனர்த்தங்களாலும் போரினாலும் பாதிக்கப்பட்ட மேற்படி குடும்பங்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்புக்கான உதவிகளும் பிள்ளைகளின் கல்விக்கான உதவிகளும் வழங்கப்பட்டது. இக்குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் அங்கவீனர்களாகவும் போரில் பிள்ளைகளை கணவர்களை இழந்தவர்களாகவும் மற்றும் தடுப்புமுகாமிலிருந்து வெளிவந்தவர்களாகவும் இருக்கின்றனர். இன்னும் தங்கள் உடல்களில் சன்னங்கள் எறிகணைத்துண்டுகளையும் சுமந்து கொண்டிருக்கும் இவர்களை நம்பிக்கைகொடுத்துப் புதுப்பிக்கும் உதவியாக இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கூரைகள் அற்ற வீடுகளில் தறப்பாள்களோடு வாழ்கின்ற இம்மக்கள் தங்களுக்கான தெ…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஆடி மாதம் நேசக்கரத்திற்கான யாழ் இணைய உறுப்பினர்களின் பங்களிப்பு சுவியண்ணா 20 யுரோக்கள்
-
- 14 replies
- 1.8k views
-
-
நேசக்கரம் இரண்டாம் காலாண்டிற்கான (சித்திரை,வைகாசி,ஆனி) மாதங்களிற்கான கணக்கறிக்கை. நேசக்கரம் அமைப்பினால் உதவித் திட்டங்களினால் இரண்டாம் காலாண்டில் பயனடைந்தோரது விபரங்கள் , மற்றும் உதவியோரது விபரங்கள். நேசக்கரம் 2010 சித்திரை,வைகாசி,ஆனி வரையான காலாண்டு கணக்கறிக்கையினைப் பார்க்க இங்கு அழுத்துங்கள் 1)கல்விகற்கும் மாணவர்கள் , பயனடைந்தோர் 137 மாணவர்கள் வழங்கப்பட்ட உதவிகள் கல்வி உபகரணங்கள் உடைகள் சீருடைகள் சப்பாத்துக்கள் சத்துணவு என்பன வழங்கப்பட்ட பாடசாலைகள். மணற்காடு அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை , பருத்தித் துறை வேலாயுதம் மகா வித்தியாலயம் , வவுனியா காமினி மகாவித்தியாலயம். 2)குடும்பத்தில் தாய் தந்தை இருவரையும் இழந்த சிறார்கள் பயனடைவோர…
-
- 2 replies
- 1.1k views
-
-
எல்லாவற்றையும் இழந்து தங்கள் உயிர்களையும் மிஞ்சிய கல்வியையும் நம்பி புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வெளிவந்து கற்கைக்குச் சென்றுள்ள 30 மாணவர்களுக்கான உதவிகளை நேசக்கரம் உலகத்தமிழர்களிடம் கோருகிறது. இந்த மாணவர்கள் உடலாலும் மனதாலும் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இவர்களது குறிப்பிட்ட காலக்கற்கைக்கான உதவிகளை வழங்குமிடத்து அவர்களது எதிர்காலத்தை ஒளிபெறச் செய்யலாம். உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள். மாணவர்களுடைய விபரங்களைத் தந்துதவுவோம். நீங்கள் நேரடியாகவே மாணவர்களுடன் தொடர்புகளைப் பேணி உதவிகளை வழங்கலாம். உதவிகோரும் 36 மாணவர்களின் விபரங்கள் 1) சுரேஸ்கண்ணா கோபாலராசன் கலைப்பீடம் 1ம் வருடம் 2) …
-
- 1 reply
- 1.1k views
-
-
இன்றைய குரலுக்குரியவள் ஒரு மாவீரனின் மனைவி. ஒரு தளபதியாய் எத்தனையோ வெற்றிகளுக்கெல்லாம் வேராக இருந்த ஒரு மாவீரனினுடன் வாழ்ந்த வாழ்வின் இனிமைகளையும் அவனை இழந்த துயரின் வலிகளையும் பகிர்கிறாள். இந்தப் பெண்ணின் துயரங்கள் ஆயிரமாயிரம் தமிழ்ப்பெண்களின் கண்ணீரின் கதைகளாக வருகிறது. வெற்றிகளை மட்டுமே கேட்ட காதுகளிற்கு இத்தகைய கண்ணீரின் கனம் புரியாமலேயே இருந்திருப்பதை உணர்கின்ற தருணங்களில் இந்த இழப்புகள் பிரிவுகளுக்காக நாமென்ன செய்தோமென்ற கேள்வியே மிஞ்சிக்கிடக்கிறது. வாழ்வும் மரணமும் இயற்கையின் தீர்வாகிற போதே மனிதம் எத்தனை தவித்துப்போகிறது. ஆனால் எங்கள் மண்ணிலும் எங்கள் மனிதர்களிலும் வாழ்வு துயராலேயே தின்னப்பட்டிருக்கிறது. இதோ ஒரு மாவீரனின் மனைவி பேசுகிறாள். இவளது கண்ணீரின் ஊடா…
-
- 1 reply
- 988 views
-
-
இந்தக் குரலுக்குரியவளுக்கு உறவு என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. ஒருவருடத் திருமண வாழ்வில் கிடைத்த இரண்டரை வயதுப் பெண்குழந்தைதான் இவளது நம்பிக்கை. குழந்தை பிறந்து 31வது நாள் இவனது கணவனைத் துப்பாக்கிகள் வவுனியா நகருக்குள் தின்றுபோட்டது. தொழிலுக்குப் போனவன் பிள்ளையின் 31ம் நாள் கொண்டாட்டத்திற்கு பணத்தோடு வருவானென்று காத்திருந்தவளுக்கு அவளது காதல் கணவன் இறந்து போனானென்ற செய்திதான் வந்தது. 2007.10.03 ம்திகதி பிறந்த தனது குழந்தைக்காக பணத்தோடு வருவேனென்றவன் 2007.11.03 அன்று இறந்து போனானென்றது இதயத்தில் இடியையல்ல இவளது வாழ்வில் மாறாத துயராயே முடிந்து போனது. தன் குழந்தை தனது எதிர்காலம் எதையுமே எண்ணிப்பார்க்க முடியாத சூனியத்தில் தொலைந்து போனாள். கிளிநொச்சியிலிருந்து …
-
- 1 reply
- 1.2k views
-
-
முரளி - 02.05.10 அன்று பேபால் ஊடாக 14,06 EUR கிடைத்தது. சஜீவன் - 13.05.10 அன்று பேபால் ஊடாக 32,91 EUR கிடைத்தது. நெல்லையன் - 23.05.10 அன்று பேபால் ஊடாக 195,85 EUR கிடைத்தது. இந்த உதவியானது ஒரு மாவீரரின் 3வயதுக் குழந்தையின் மருத்துவத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இணையவன் - 26.05.10 அன்று பேபால் ஊடாக 48,70 EUR கிடைத்தது. முரளி - 31.05.10 அன்று பேபால் ஊடாக 14,06 EUR கிடைத்தது.(இம்மாதத்துக்கான முரளியின் பங்களிப்பு பல்கலைக்கழகமாணவர்களின் உதவிக்காக பயன்படுத்தப்படுகிறது) கயந்தி - 28.04.10 அன்று நேசக்கரம் வங்கியூடாக 50€ கிடைத்தது. (இம்மாதத்துக்கான கயந்தியின் உதவியும் பல்கலைக்கழக மாணவர் உதவிக்காக பயன்படுத்தப்படுகிறது) முக்கிய குறிப்பு - யாழ் இணைய கருத்தாளர்க…
-
- 1 reply
- 993 views
-
-
தங்கள் உறவுகளையும் உடைமைளையும் இழந்து போய் இனிவரும் காலங்களில் தங்கள் கல்வியை மட்டுமே நம்பி அதனைக்கொண்டு தாங்கள் புதியதொரு வாழ்வினை கட்டியமைக்க முடியுமென்கிற இறுதி நம்பிக்கையுடன் மனக்காயங்கள் உடற்காயங்கள் என்று அத்தனையும் தாங்கியபடி பல்கலைக்கழகம் சென்று கொண்டிருக்கும் பல மாணவர்களில் அவசர உதவி கோருவோர் 11 பெயரின் விபரங்கள் நேசக்கரம் ஊடக உறுதிப்படுத்தப்பட்டு இங்கு இணைக்கிறோம்.. ஒரு பல்கலைக்கழக மாணவனிற்கான மாதாந்த உதவிக்தொகையாக நேசக்கரம் இலங்கை ரூபாய் 5ஆயிரம் நிர்ணயித்துள்ளது.(36 யுரோக்கள்) உதவ விரும்பும் உள்ளங்கள் நேசக்கரத்துடன் தொடர்பு கொண்டால் உங்கள் உதவிகள் நேரடியாகவே மாணவர்களை சென்றடைவதற்கான அவர்களது வங்கிஇலக்கம் விலாசம் போன்றவற்றை தந்துதவி வழிவகைகளை ஏற்படுத்திதரலாம். …
-
- 5 replies
- 1k views
-
-
உறவுகளிற்கு உதவுங்கள் உறுப்பினராகுங்கள் நேசக்கரம் அமைப்பு என்பது சுமார் மூன்று ஆண்டு களிற்கு முன்னர் யாழ் இணையத்தில் சில நண்பர்களால் இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு உதவி அமைம்பாகும். இந்த அமைப்பின் நோக்கம் தாயகத்தில் யுத்தத்தினால் பாதிக்கபட்ட எமது உறவுகளிற்கான உதவிகளை வழங்குதல்..அவற்றில் 1) போரினால் உறவுகளை இழந்த பின்னைகளை பராமரித்தல் மற்றும் அவர்களிற்கான கல்வி உதவிகளை வழங்குதல். 2)குடும்பத் தலைவரை இழந்து பொருளாதார வசதிகள் இன்றி தவிக்கும் பெண்களிற்கான சுய வேலைவாய்ப்பத் திட்டங்களை உருவாக்கிக் கொடுத்தல் 3)யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உடல் அவயவங்களை இழந்தோரிற்கான வைத்திய உதவிகளை வழங்குதல். 4)பண வசதியின்றி உயர்கல்வியை தொடர முடியாது போயுள்ள மாணவர்களிற்குஉயர் …
-
- 3 replies
- 1.4k views
-
-
நேசக்கரங்களை நீட்டுங்கள் யாழ்கள உறவுகளே. வணக்கம் யாழ்கள உறவுகளே தாயகத்தில் எங்கள் உறவுகளிற்கு உதவுவதற்காக யாழில் ஏற்படுத்தப்பட்ட அமைப்புத்தான் நேசக்கரம் என்கிற அமைப்பு. இதனூடாக யாழ்கள உறவுகளின் உதவிகளுடன் தாயகத்தில் பல உதவித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.அதன் விபரங்களை நேசக்கரம் அமைப்பின் இணையத்தளத்தினில் இன்றும் பார்க்கலாம்.இந்த அமைப்பிற்காக பலநாடுகளிலும் இருந்த யாழ்கள உறுப்பினர்கள் தொர்ச்சியாக தங்கள் பங்களிப்பினை வழங்கியிருந்தனர்..ஆனால் கடந்தவரும் ஈழத்தமிழரின் வரலாற்றில் தாயகத்தில் ஏற்பட்ட மிக மோசமான நிகழ்வுகளால் உலகத்தமிழர்கள் அனைவரிற்கும் ஏற்பட்ட மனச்சோர்வு விரக்கதி என்கிற பாதிப்புகள் போலவே யாழ்கள உறவுகளும் பாதிக்கப்பட்டதால் நேசக்கரத்தின் உதவித் திட்டத்தில் இணைந்த…
-
- 94 replies
- 10.3k views
-
-
தாயக ஏதிலிகள் நலன் பேணும் அமைப்பின் புதுத் திட்டம் அறிமுகம் திகதி: 03.02.2010 // தமிழீழம் உலகெங்கும் வாழும் எம் இனிய தேசத்து உறவுகளே! கோண்டாவில், யாழ்ப்பாணம், (பெப்ரவரி 01, 2010) - தாயக ஏதிலிகள் நலன் பேணும் அமைப்பு, இன்றைய கால சூழலுக்கு தகுந்தவாறு மீள் உருவாக்கம் பெற்று, "உதவி" எனும் பெயரில் ஒரு புதிய திட்டத்துடன் மீண்டும் எம்மவர் மத்தியில் எமது உறவுகளுக்கான பணியினை ஆரம்பித்துள்ளது. நாலாங்கட்ட ஈழ யுத்தத்தின் கொடூரங்களும் அதனால் ஏற்பட்ட பின் விளைவுகளும் அனைவரும் அறிந்த விடயமே. சொல்லவெண்ணா துயரங்களுக்குள் ஆழ்த்தப்பட்ட எம் இனிய உறவுகளுக்கு ஏழு மாத காலங்கள் ஆன பின்பும் கூட நாளாந்த வாழ்க்கையே ஒரு பெரும் கேள்விக்குறியாக உள்ளது. தமது இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளா …
-
- 0 replies
- 941 views
-