துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
351 topics in this forum
-
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க கனடா வாழவைப்போம் அமைப்பு கனடாவில் வாழும் புலம் பெயர் தமிழ் உறவுகளின் கருணை உள்ளங்களுடன் இணைத்து மாற்றுவலுவுள்ள போரினால் பாதிக்கப்பட்ட பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உதவி வருகின்றது. கனடாவாழவைப்போம் அமைப்பின் உதவியின் மூலம் ஏராளமான உறவுகள் வாழ்வின் ஆதாரத்தை பெற்றுக் கொண்டுள்ளன. இந்த உதவிகளின் தொடர்ச்சியாக 2015ம் ஆண்டின் கிளிநொச்சியில் முதல் உதவி வழங்கலாக கனடாவாழ் புலம் பெயர் உறவுகளான பாகிதா சங்கரலிங்கம் பொ.குணதாசன் பயஸ் மரியதாஸன்(ம.ஜெபக்சன் ம.றொசான்) ஆகிய கருணையுள்ளங்களின் மூலம் முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்று குடும்பமாக இருப்பவர்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி கருதி கற்றல் உபகரணங்…
-
- 0 replies
- 443 views
-
-
-
இலங்கைத்தீவிலே குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களிலே பல நெடுங் காலமாக தமிழர்கள் மீது நன்கு திட்டமிட்டு அரச படைகளாளும், ஏனைய சமூகத்தினராலும் நாங்கள் அடக்கப்பட்டு எமது சகோதரர்களையும், சகோதரிகளையும் இழந்தவர்களாக இந்த நாட்டிலே வாழமுடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் எமது உறவுகளுக்காக கனடாவில் இருக்கும் வாழவைப்போம் அமைப்பு வாழ்வாதார உதவித்திட்டங்களை எமது பகுதிகளில் நடைமுறைப்படுத்தி வருகின்றது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் கூறினார். நேற்று நாவிதன்வெளி பிரதேசத்தில் நடைபெற்ற வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்விலும் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்விலும், மாணவர்களுக்கான கொப்பிகள் வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார். கனடாவில் இருக்கும் வாழவைப்போம் அமைப்பானது வாழ்வாதார உதவிகளுக்க…
-
- 0 replies
- 702 views
-
-
France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் + பாராளுமன்ற உறுப்பினர் யோகேசுவரன் = அவசர வெள்ள நிவாரண உதவி (மட்டக்கிளப்பு) 24ந்திகதி மட்டக்கிளப்பிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் திரு. S. YEHESWARAN அவர்கள் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சின் தலைவருக்கு நேரடியாக தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு மட்டக்கிளப்பின் தற்போதைய வெள்ள நிலையை எடுத்துக்கூறி அவசர நிதியுதவியைக்கேட்டார். புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சினால் வேறு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் போதும் .... உடனடியாக நிர்வாக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து வெள்ளத்தால் ஏற்பட்ட அவசரநிலை என்பதாலும் கோரிக்கையை வைத்தவர் அந்த மக்களால் தெரிவு செய்ப்பட்டவர் தாயக மக்களுடன் அல்லும் பகலும் …
-
- 3 replies
- 907 views
-
-
Friday, December 26, 20140 comments (பத்ரா) வெள்ள நிவாரண நடவடிக்கைகளை கிழக்கு மாகாணசiபையும் மேற் கொள்ளவேண்டும் என வழியுருத்தி கிழக்கு மாகாணசபையின் எதிர்க் கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி அவர்கள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் பிரதம செயலாளர் உற்பட அணைத்து மாகாண சபை அமைச்சர்களுக்கும் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார் அக்கடிதம் பின்வருமாறு அமைகிறது. கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக கிழக்கு மாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் பல கிராமங்கள் வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளன. வீடுகள் வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளதினால் மக்கள் பாடசாலைகள், கோவில்கள் போன்ற பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். திருக்கோணமலை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளிலு…
-
- 0 replies
- 463 views
-
-
எதிர்வரும் நாட்களை தென் தமிழீழத்தில் தொடர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான துயர் துடைக்கும் நாட்களாக மாற்றுவோம். தென் தமிழீழத்தில் பல பகுதிகள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளன. குறிப்பாக திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான எம் உறவுகள் எவ்வித உதவிகளும் இன்றி தவிக்கின்றார்கள். குடியிருப்புக்களை விட்டுப் பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளார்கள். சுமார் ஏழு இலட்சம் மக்கள் நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டமே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. உணவு மருந்து சுகாதாரப் பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கான அவசர மனிதாபிமான நிவாரண உதவியினை உடனடிய…
-
- 0 replies
- 401 views
-
-
வணக்கம், NOWWOW (புதிய சந்தர்ப்பக்கள்) அறக்கொடை நிறுவனத்தின் சுயம் தற்தொழிற் திட்டம், அதன் முன்னேற்றம் பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இத்திட்டம் 2013ம் ஆண்டு கார்த்திகை மாதம் ஆரம்பிக்கப்பட்டது. நலிவுற்ற இளம் விதவைகளின் வாழ்வாரதார மீட்பு முயற்சியாக யாழ் சிவில் சமூகத்தினதும் யாழ் கத்தோலிக்க இளைஞர் பேரவையினதும் மதச்சார்பற்ற முன்னெடுப்பாக அமைந்த ஒரு திட்டம். இது இளம் பெண்களை கூட்டுறவு முயற்சிகளாக ஒன்று திரட்டி சுயதொழில் வர்த்தகத்தில் ஈடுபட வைப்பது. எனினும் இம்முயற்சிக்குத் தடைக்கல்லாக அமைந்திருப்பது அவர்களுடைய அனுபவமின்மையேயாகும். புதிய சந்தர்ப்பங்களானது, உணவுப்பொருட்களைத் தயாரித்துப் பைகளிலடைத்துச் சந்தைப்படுத்தும் முயற்சியில் இந்தப் பெண்களுக…
-
- 1 reply
- 930 views
-
-
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய ஆலோசனை சபை உறுப்பினர்களுள் ஒருவரான திரு.கைலாசநாதன் (குழந்தை) அவர்கள், தான் பணிபுரியும் பேர்ன் நகரிலுள்ள சிலோவா வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் (Stifftung Klinik SILOAH Worb Str-316 3073GUMLIGEN) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில் விடுத்த வேண்டுகோளுக்கமைய, சிலோவா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் திரு. கைலாசநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்ட வைத்தியசாலை தேவைக்கான ஒரு தொகை பொருட்கள், புங்குடுதீவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே. பேர்ன், சிலோவா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் கையளிக்கப்பட்ட வைத்தியர்கள் பயன்படுத்தும் உடைகள், சத்திர சிகிச்சைக்குப் பயன்படும் உடைகள், மற்றும் நோயாளிகள் பயன…
-
- 1 reply
- 578 views
-
-
வன்னியில் ஓர் தனித்துவ இசைத்தேர்வு கிளிநொச்சி மாவட்ட மாகாண தேன்சிட்டு இசைவிருது 2014 முன்னோடி குரல் தேர்வு 13.12.2014 அன்று கிளிநொச்சி ப்ரண்ட்ஸ் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. யோ.புரட்சி நிகழ்ச்சியை தொகுக்க, பரந்தாமன் கவின்கலைக் கல்லூரி இயக்குனர் சவுந்தரராஜா நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார். திறன்மிகு கிளிநொச்சி மாவட்ட பாடகர்கள் நிகழ்வை கலந்து சிறப்பித்தனர். வசந்தம் பண்பலை நிகழ்ச்சி முகாமையாளர் திரு கிருபா, அறிவிப்பாளர் பிரதாப் ஆகியோரும் கலந்துகொண்டனர். நடுவர்கள் :- காலாவித்தகர் இரா. சிவராமன் , இசையமைப்பாளர் இ.தேவகுமார் , சங்கீத ஆசிரியை ஜெயந்தி ஆகியோரின் பங்களிப்பானது நிகழ்வை மேலும் சிறப்பித்திருந்தது. போட்டி மூன்று சுற்றுக்களாக நடைபெற்றது. மூன்றாம் சுற்றில் பக்க வாத…
-
- 0 replies
- 618 views
-
-
ஒக்டோபர் 29ம் திகதி நடைபெற்ற கொஸ்லந்தை மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான நிதியை திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியினர் வழங்கினர். மீரியபெத்த தமிழ் வித்தியாலயம் ஸ்ரீ கணேசா தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசலைகளைச் சேர்ந்த 61 மாணவர்களுக்கு 4 இலட்சத்துக்கு மேற்பட்ட நிதி அவர்களது எதிர்கால கல்வித் தேவைகளுக்காக பகிர்ந்து வழங்கப்பட்டது. கடந்த 8ம் திகதி கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் திருகோணமலை மாவட்ட தமிழரசுக்கட்சியின் தலைவருமாகிய திரு.சி.தண்டாயுதபாணி, மாகாண சபை உறுப்பினர்கள் திரு.மு.நாகேஸ்வரன், திரு.ஜெ.ஜெனார்த்தனன் ஆகியோரும், தமிழரசுக்கட்சியின் மூதூர் தொகுதித் தலைவர் திரு.க.திருச்செல்வம், சேருவில் தொகுதித் தலைவர் திரு.க.…
-
- 0 replies
- 475 views
-
-
'கனடியத் தமிழர் தேசிய அவை- NCCT' கனடா வாழ் தமிழ் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டு, சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்டு கனடிய மண்ணில் பல்வேறு பணிகளை கனடா வாழ் தமிழ் மக்களுக்கும் தமிழீழ தாயக மக்களுக்கும் ஆற்றி வருகின்றது. குறிப்பாக தமிழர்களின் மறுக்கப்பட்ட நீதியை வென்றெடுக்க சனநாயக ரீதியாக பெரும் பணியை செய்வதோடு 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை யுத்தத்தின் கோர வடுவால் பாரிய அளவில் பாதிக்கப்பட்ட தமிழீழ தாயக மக்களை அவல வாழ்வில் இருந்து மீட்டு மீண்டும் மறுவாழ்வு கொடுத்து வாழவைக்கும் பணியையும் 'மண்வாசனை' திட்டத்தினூடாக இந்த மண்ணில் இருந்து ஆற்றி வருகின்றது. முற்று முழுதாக தாயக மக்களின் துயர் துடைப்பை மையப்படுத்திய பணிகளை மட்டுமே கொண்டதாக கனடிய தமிழர் தே…
-
- 1 reply
- 460 views
-
-
நமது தேசம் சிறீலங்கா இனவெறி அரசின் கொடூரத்தால் துயர் சூழ்ந்து நிற்கின்றது . அவர்கள் பொழிந்த நச்சு குண்டுகளால் எமது மக்களின் உயிர்கள் உடைமைகள் அழிக்கப்பட்டு பிறந்த மண்ணிலேயே அகதிகளாக தகர குடிசைக்குள் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது . வீடிழந்து வாழ்விழந்து அங்கமிழந்து துயர்சுழியில் சிக்கி துயரத்தின் விரிவின் உச்சியிலே வாழும் எம் மக்களை இயற்கை அனர்த்தமும் அழிப்பதாகவே உள்ளது . நாட்டில் சீரற்ற காலநிலையால் தொடரும் அடைமழை காரணமாக எமது தேசத்தில் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளது.அத்தோடு மலையகத்தில் தொடரும் மண்சரிவுக்கு மக்கள் பலியாகின்றனர். ஆயிரக்கணக்கான எம் உறவுகள் எவ் வித உதவிகளும் இன்றி தவிக்கின்றார்கள் . சிறப்பாக குழந்தைகள் பால்மா பற்ற…
-
- 0 replies
- 520 views
-
-
ஆனந்தபுரம் நிலத்திற்கு மரங்கள் தேவை. மட்டக்களப்பு ஆனந்தபுரம் கிராமத்தின் குடியேறியுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் மீள வாழ்வுக்கான பணிகளை நேசக்கரம் அமைப்பின் உப அமைப்பான தேன்சிட்டு அமைப்பானது முன்னெடுத்து வருகிறது. இக்கிராமத்திற்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் குளாய்கிணறுகள் அமைக்கப்பட்டு மக்களின் தண்ணீர் தேவையானது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் தேவையை நிறைவு செய்ய புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பின் நிதியுதவியில்12 குளாய்கிணறுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தின் புவியில் அமைவுக்கேற்ற வகையிலான பயன்தரு மரங்கள் நாட்டுவதற்கான உதவிகளை வேண்டுகிறோம். முதலில் குடும்பமொன்றுக்கு 10 தென்னைமரங்களை வழங்க விரும்புகிறோம். ஒரு தென்னங்கன்ற…
-
- 1 reply
- 997 views
-
-
France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் + நேசக்கரம் = 35 குடும்பங்களுக்கான குடிநீர் வசதி அன்பார்ந்த உறவுகளே 35 குடும்பங்களுக்கான குடிநீர் வசதி அவசரமாகத்தேவை என யாழ்களத்தில் நேசக்கரத்தின் பொறுப்பாளர் சாந்திக்கா அவர்களால் கோரப்பட்ட கோரிக்கையை France புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் செயலாளர் Saspanithi SUPPIAH மற்றும் பொருளாளர் Logeswaran KANDASAMY ஆகியோரது கவனத்துக்கு கொண்டுவந்திருந்தேன். செயலாளர் சாந்தியக்காவினுடன் பேச்சுக்களை நடாத்தி அதற்கான பத்திரங்களை தயார் செய்தபடியிருக்க பொருளாளர் தனது வீட்டில் இதைப்பார்த்தபடி இருந்தபோது அதைக்கவனித்த அவரது மகன் Logeswaran சந்துரு (பட்டதாரி - கணக்காளர்) மக்களுக்கு தண்ணீர் தானே நானே செய்கின்றேன் எ…
-
- 50 replies
- 6k views
-
-
நேசக்கரம் மாதாந்த கணக்கறிக்கை ஒவ்வொரு மாதமும் நேசக்கரம் இணையத்தில் தரவேற்றும் சம நேரத்தில் இப்பகுதியிலும் பதிவு செய்யப்படும். தைமாதம் கணக்கறிக்கை கணக்கறிக்கையை கீழ்வரும் இணைப்பில் அழுத்தி பாருங்கள். January2014 கணக்கறிக்கை பெப்ரவரி 2014 கணக்கறிக்கை பெப்ரவரி 2014 PDF வடிவில். கீழ்வரும் இணைப்பில் அழுத்தி கணக்கறிக்கையை பாருங்கள். feb_2014
-
- 19 replies
- 2k views
-
-
அமரர் தில்லையம்பலம் பாலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவும் அன்னதான நிகழ்வும். யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 4ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் பாலசிங்கம் அவர்கள் 05-09-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னாரின் 31ம் நாள் நினைவுநாளை முன்னிட்டு அன்னாரின் புதல்வி திருமதி பாலகௌரி சிவலிங்கம் (டென்மார்க்) குடும்பத்தினர் அன்னதானம் வழங்க முன்வந்து நேசக்கரம் அமைப்பிடம் ஆயிரம் டெனிஸ்குறோணர்களை வழங்கியிருந்தார்கள். அமரர் தில்லையம்பலம் பாலசிங்கம் அவர்களின் 31ம் நினைவுநாளன்று மட்டக்களப்பில் நேசக்கரம் அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்ட அன்னதானம் வழங்கும் நிகழ்வில் 120இற்கும் மேற்பட்ட சிறுவ…
-
- 1 reply
- 560 views
-
-
‘தேன்சிட்டு இசைவிருது 2014′ முல்லைத்தீவு மாவட்ட முடிவுகள். தேன்சிட்டு இசை விருதுக்கான முல்லைத்தீவு மாவட்ட பாடகர்களுக்கான குரல் தேர்வு 16.09.2014 அன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. நேசக்கரம் அமைப்பின் அனுசரணையில் தேன்சிட்டு உளவள அமைப்பின் திட்டமிடல் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியை யோ.புரட்சி அவர்கள் நெறியாள்கை செய்தார். மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் நூறு வரையான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பார்வையாளர்களும் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் திரு.இ.பிரதாபன் அவர்கள் ஆசியுரை கூறி சுடறேற்றினார். பிரதேச செயலக முக்கிய அதிகாரிகளும், வண பிதா ரோய் அவர்களும் கலந்து நிகழ்வைச் சிறப்பித்துக் …
-
- 1 reply
- 672 views
-
-
‘தேன்சிட்டு இசைவிருது 2014′ மட்டக்களப்பு மாவட்ட முடிவுகள். எமது கலைஞர்களின் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் நேசக்கரம் உப அமைப்பான தேன்சிட்டு உளவள அமைப்பின் திட்டமிடல் ஏற்பாட்டில் மாவட்டம் தோறும் ‘தேன்சிட்டு இசைவிருது 2014′ தேர்வு நடைபெற்று வருகிறது. 02.08.2014அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது தேர்வு இடம்பெற்றது. இந்நிகழ்வானது தேன்சிட்டு உளவள அமைப்பின் திட்டமிடல் அனுசரணையுடன் ஏறாவூர்பற்று பிரதேச கலாசார பேரவையின் ஏற்பாட்டிலும் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் நாட்டாரியல் பாடல் தேர்வு போட்டியில் நூற்றிற்கு மேற்பட்ட கலைஞர்கள் கலந்து சிறப்பித்தனர். வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் கோவில் முன்றலில் நடைபெற்ற இந்நிகழ்வினை பிரதேச செயலாளர் உதயசிறீதர் அவர்கள் தலைமையேற்றிர…
-
- 0 replies
- 927 views
-
-
தேன்சிட்டு உளவள அமைப்பின் போசாக்கு உணவுத்திட்டம். தேன்சிட்டு உளவள அமைப்பின் போசாக்கு உணவுத்திட்டத்தின் கீழ் 23.09.2014 அன்று தன்னாமுனை கிராமத்தில் வாழும் போசாக்கு குறைந்த குழந்தைகளில் 41 குழந்தைகளுக்கான போசாக்குணவு வழங்கலும் கருத்தரங்கும் நடைபெற்றது. வறுமையும் போரின் தாக்கங்களும் ஆரோக்கியம் குறைந்த குழந்தைகளைக் கொண்ட கிராமங்களின் தேன்சிட்டு உளவள அமைப்பின் பணிகள் பல இடங்களிலும் நடைபெற்று வருகிறது. மாதம் ஒருமுறை பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று அம்மக்களின் குறைகள் தேவைகளை கேட்டறிந்து செற்படும் திட்டத்தில் தேன்சிட்டு உளவள அமைப்பின் பிரதிநிதிகள் தொடர்ந்து செயற்பட்டு வருகிறார்கள். புரட்டாதி மாதம் மாளைய தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவிலிருந்து கருணையாளர் ஒருவர்…
-
- 0 replies
- 551 views
-
-
France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் அரச சார்பற்ற நிறுவனமான சர்வோதயம் ஊடாக மட்டும் இதுவரை செய்தவை.... செயல் செயல் செயல்.......... இது போதாது தொடரும்.................
-
- 0 replies
- 808 views
-
-
285€ உதவினால் ஒரு குடும்பத்தின் வாழ்வு முன்னேறும். 17வருடங்கள் போராட்ட வாழ்வு. போராளியையே திருமணம் செய்து கொண்டான் பிள்ளைகள் 2. அவன் பங்கேற்ற களங்களில் பலமுறை காயமுற்று உடலில் எறிகணைத்துகள்கள் கலந்து அந்த வலிகளோடு வாழும் ஒரு முன்னாள் போராளி. எல்லா விடயங்களிலும் அவன் ஒரு முன்னுதாரணம். இதைச் செய்யென்றால் இதற்கு மேலும் தனது வலுவை வழங்கி வேலைகளை முடிக்கும் கடமையுணர்வாளன். இறுதியுத்தத்தில் எல்லாம் இழந்து போனபின்னரும் அவனது குடும்பத்தின் முயற்சியில் உயிர் பிழைத்தவன். சிறை புனர்வாழ்வு என எல்லாத் துயரங்களையும் அனுபவித்தான். சிறையிலிருந்து ஊர் திரும்பியவனுக்கு அடுத்த வேளையைக் கொண்டு செல்ல ஆதரவற்ற நிலமை. அன்றாட வாழ்வை குழந்தைகளின் பசிபோக்க முடிந்தவரை கிடைக்கிற தொழில்கள் யா…
-
- 7 replies
- 1.3k views
-
-
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அரைக்கும் ஆலைகள் நிறுவுதல். போரால் பாதிக்கப்பட்டு மீள எழுந்து கொண்டிருக்கும் முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டங்களில் ஊனமுற்றவர்கள், போர் விதவைகளை உள்வாங்கி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் எமது அமைப்பானது செயற்படத் தொடங்கியுள்ளது. மிளகாய்த்தூள், மாவகைகள், கோப்பித்தூள் உள்ளிட்ட அன்றாட பயன் பொருட்களை அரைத்துப் பொதி செய்து விற்பனை செய்யக்கூடிய சந்தை வாய்ப்பை எங்களது உற்பத்திக் குழுவினர் ஏற்படுத்தக் காத்திருக்கின்றனர். முதலாவதாக புதுக்குடியிருப்பு பகுதியை அண்டிய இடத்தில் முதலாவது அரைக்கும் ஆலையை நிறுவவுள்ளோம். இத்திட்டத்திற்கு 4லட்சரூபாய்கள் தேவைப்படுகிறது. (அண்ணளவாக 2300€) புடிப்படியாக இம்முயற்சியின் வெற்றி வேலைவாய்ப்பை…
-
- 3 replies
- 764 views
-
-
மாற்றுத்திறனாளியான முன்னாள் போராளிக்கு உதவி. போரில் காயமுற்று மாற்றுத்திறனாளியான முன்னாள் போராளியொருவர் வாழ்வாதார உதவியினை வேண்டுகிறார். 3பெண் குழந்தைகளின் தந்தையான வன்னிப் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் குறித்த போராளி வாழும் பகுதியில் பலசரக்குக்கடையொன்றினை நடாத்துவதற்கு 50ஆயிரம் ரூபா உதவியினை வேண்டுகிறார். உயர்தரம் கற்கும் தனது மகளின் கல்விக்கான செலவு , மற்றைய பிள்ளைகளின் கல்வி அத்தியாவசிய அன்றாட தேவைகளை நிறைவேற்ற அவலப்படும் மாற்றுத்திறனாளியான இவரால் வெளியில் சென்று வேலைகள் தேடக்கூடிய நிலமை இல்லை. இக்குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவைப்படும் 50000ரூபா(அண்ணளவாக 300€)உதவியை வழங்கி தொழில் வாய்ப்பை வழங்க விரும்பும் கருணையாளர்கள் கீழ்வரும் விபரங்களில் தொடர்பு கொள்ளு…
-
- 2 replies
- 880 views
-
-
செயல் செயல் செயல்............ புங்குடுதீவில் மக்கள் இல்லை அங்கு எல்லாமே அழிந்து போய்க்கிடக்கின்றது என்பவர்களுக்கும் ஒரு பகுதிக்கு செய்கின்றோம் என்பவர்களுக்கும் சமர்ப்பணம்..... (இந்த சந்திப்புக்காக எம்மவர்கள் சென்றபோது மிகவும் பயங்கர காய்ச்சல் அப்பகுதியில் பரவியிருந்ததால் பிள்ளைகளின் வரவு குறைவாக இருந்ததை அந்தந்த பாடசாலை ஆசிரியைகள் வீடியோவில் சொல்லியுள்ளார்கள்)
-
- 1 reply
- 573 views
-
-
எட்டுலட்சரூபாய் உதவிகளை வழங்கிய கனடிய நண்பர்கள் றவி, சுரேஷ். நேசக்கரம் சமூகப்பணிகளில் இணைந்து கடந்த ஒருவருட காலத்தில் றவி, சுரேஷ்(கனடா) நண்பர்கள் இருவரும் இணைந்து இதுவரையில் எமக்கு 800000.00ரூபா (எட்டுலட்சரூபாய்கள்) உதவியுள்ளார்கள். போரால்பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதார கல்வி மேம்பாட்டுக்கான தங்கள் உதவிகளை வழங்கி தாயகத்திற்கான பணிகளில் தங்களையும் இணைத்து எம்மோடு தொடர்ந்து வரும் நண்பர்கள் றவி , சுNhஷ் ஆகியோருக்கு எங்களது இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நேரில் ஆளையாள் அறிந்தவர்களே குற்றம் குறை பழி தீர்த்தல் என சுயநலத்தோடு நேசக்கரம் மீது அள்ளியெறிந்த சேற்றுக்குள்ளிருந்து மீள எழும் நம்பிக்கையைத் தந்த நண்பர் றவி அவர்களும் அவரது நண்பர் சுரேஸ் இருவரையும் …
-
- 3 replies
- 808 views
-