Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துளித் துளியாய்

தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.

தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.

  1. வாழ்வாதார உதவி பெற்றுக்கொண்ட 14குடும்பங்கள். எமது உப அமைப்பான அரவணைப்பின் வழிகாட்டலில் 2013 யூன் மாதம் குசேலன்மலை (கரடியன்குளம்) கிராமத்தில் கல்வி , சமூக வலுவூட்டல் பணியை ஆரம்பித்திருந்தோம். இங்கு வாழும் 27 குடும்பங்களினதும் குழந்தைகளுக்கான கல்வியூட்டலில் குழந்தைகள் நிறைந்த பயனைப் பெற்றுள்ளனர். 27 குடும்பங்களைக் கொண்ட குசேலன்மலை (கரடியன்குளம்) கிராமத்தில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட 14 குடும்பங்களுக்கான சுயதொழிலுக்கான வலைகள் , மீன்பெட்டி, தராசு,தங்கூசி, நூல்கட்டை, தூண்டில் போன்ற பொருட்கள் 17.07.2014 அன்று வழங்கப்பட்டது. அரவணைப்பு அமைப்பின் தலைவர் அருணா தலைமையில் நடைபெற்ற பொருட்கள் வழங்கும் நிகழ்வில் அதிதிகளாக ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேசசெயலாளர் உதயசிறீதர் , குசேலன்ம…

  2. யுத்தத்தின் விளைவுகளால் தனது கால் ஒன்றினை இழந்து மற்றைய காலும் செயலிழந்து போகும் நிலையில் வாழ்வாதாரத்திற்காக துடிக்கும் முன்னால் பெண் போராளி. தந்தை நோய்வாய்பட்ட நிலையில் தாயும் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டு உள்ளதால் தனது வாழ்வாதாரத்திற்காக வேலை தேடி அலைந்தும் கால்கள் இல்லை என்ற காரணத்தினால் வேலை ஏதும் கிடைக்காத நிலையில் போராடும் இளம் பெண். உதவும் நல் உள்ளம் கொண்டோரே உதவிக்கரங்கள் கொடுத்திடுங்கள். தொலைபேசி இலக்கம்; 0773256776 வங்கி கணக்கு இலக்கம் கிஸ்ணபிள்ளை துரைசிங்கம் 70580467 இலங்கை வங்கி கிளிநொச்சி இலங்கை - See more at: http://www.canadamirror.com/canada/30236.html#sthash.X2GQDnnv.dpuf

    • 0 replies
    • 675 views
  3. 35குடும்பங்களுக்கான குடிநீர் வசதி அவசரம் தேவை. செங்கலடி பிரதேச செயலர் பிரிவு வந்தாறு மூலை மேற்கு கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் வாழும் 35குடும்பங்களுக்கான குடிநீர் வசதி மற்றும் வாழ்வாதார உதவிகள் தேவைப்படுகிறது. கட்டாய நிலப்பறிப்பை தடுக்கும் நோக்கில் இந்தப் பகுதியில் உள்ள தமிழ்ப்பற்றாளர்களினால் உருவாக்கப்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் தற்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட காணிகள் அற்ற 35 குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள். மேற்படி கிராமத்தில் குடியேறியுள்ள குடும்பங்களுக்கான அடிப்படைத் தேவைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. குடிநீர் வசதிகள் கூட இல்லாத நிலமையில் வாழும் இக்குடும்பங்களுக்கு குளாய்கிணறுகளை அமைத்துக் கொடுப்பதன் மூலம் குடிதண்ணீரை அவர்கள் …

    • 19 replies
    • 1.5k views
  4. பெண்கள் தலைமை தாங்கும் 53 குடும்பங்களுக்கான வலுவூட்டல் மேம்பாடு. மட்டக்களப்பு முறுத்தானை கிராமத்தில் 241 குடும்பங்களைக் கொண்ட 855பேர் வாழ்கின்றனர். போர் நடைபெற்ற காலங்களில் இக்கிராமமும் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகிய கிராமம். மெல்ல மெல்லத் தனது இயல்பை மீளப்பெற விரும்பும் இக்கிராமமானது அனைத்து வசதிகளாலும் மிகவும் பின் தங்கிய கிராமமாகும். கல்வி , சுகாதாரம் , உட்பட சமூகப்பிறள்வுகளும் நிறைந்த இடமாகக் காணப்படுகிறது. வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களையே கொண்ட இக்கிராமத்தின் கல்வி , பொருளாதாரம் ஆகியவற்றை உயர்த்த வேண்டிய தேவையை உணர்கிறோம். ஊருக்குள் கிடைக்கும் வளங்களை சரியான முறையில் பயன்படுத்தி முன்னேற்றமடையக் கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எனினும் வழிநடத்தல…

  5. வணக்கம் வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்;ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அண்மைக்காலமாக இவரது நடவடிக்கைகள் மற்றும் தூரநோக்கம் கொண்ட திட்டங்கள் அவற்றை செயலாக்கும் திறன் போன்றவற்றை பார்த்து கேட்டு வருகின்றோம். ஏன் நாம் (புலம் பெயர் மக்கள் அமைப்புக்கள் கழகங்கள் சங்கங்கள்....) இவருடன் தொடர்புகளை ஏற்படுத்தி அபிவிருத்திக்கும் தாயக வளர்ச்சிக்கும் உதவ முன்வரக்கூடாது. முக்கியமாக புலிகளது போராட்டத்தை விமர்சித்துக்கொண்டு எதுவுமே இதுவரை செய்யாது வேடிக்கை பார்ப்போர் ஏன் இவருடனும் இணைந்து வேலை செய்ய பின்னிற்கின்றனர்....????????

  6. சாவின் வாசலில் துடிக்கும் உயிர் காக்க நேசக்கரம் தருவீர். சாவின் நாளை எப்போதும் சந்திக்கத் தயாராகினாள் அக்கா. தன்னை மட்டுமே நம்பிய தன்னைத் தவிர யாருமேயில்லாத கணவனைத் தவிக்க விட்டுவிட்டுப் போகவும் மனமில்லை. ஆனால் இனி உயிர்வாழும் விதியை பணமே தீர்மானிக்கும் நிலமையில் வேறு வழிகள் ஏதுமற்றுப் போனது. ஏழரைலட்ச ரூபாய் கட்டினால் அக்காவின் உயிரை மீளத் தரமுடியுமென்றார்கள் பணத்தை மட்டுமே நேசிக்கும் மனிதத்தை மறந்தவர்கள். அடுத்தவேளை உணவிற்கே யாராவது ஏதாவது கொடுத்தால் மட்டுமே உணவென்று வாழும் அக்காவிடமும் அக்காவின் கணவரிடமும் லட்சங்களைச் சேர்க்கும் வலுவேதுமில்லை. இனி விதியே எல்லாம் அப்படித்தான் அக்கா போனமாதம் யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்; திரும்பினாள். தனது வலிகளை அவளையே உலகாய் ந…

    • 9 replies
    • 1.6k views
  7. சாகும் நிலையில் வாழத் துடிக்கும் முன்னாள் போராளி! உதவுமா தமிழினம்… நான் வறுமையில் சாகும் நிலையில் உள்ளேன் கழுத்திற்கு கீழ் உணர்வற்று இருக்கும் முன்னாள் போராளிக்கு நேரடியாக உதவ முன்வாருங்கள் பூநகரியில் வனாந்திரத்தில் தனது வாழ்வை மீட்கப் போராடும் முன்னால் போராளி யூட்யெசீலன். யுத்தத்தின் கோர தாண்டவத்தினால் பாதிக்கப்பட்டு கழுத்தின் கீழ் உள்ள பாகங்கள் அனைத்தும் இயங்க முடியாத நிலையில் படுக்கையில் உயிர்வாழப் போராடும் அவல நிலை. ஏ.சி அறையில் இருக்க வேண்டிய நிலையில் சிறு கொட்டகையில் வெப்பத்தின் சூட்டினைத் தாங்கமுடியாது நீரில் நனைத்து துணியினை உடலில் போட்டு உதவிக்கு எவரும் இன்றி பாடசாலை செல்லும் மாணவனின் தயவில் தனது வாழ்வை நடாத்தும் நிலமை. உதவும் நல்ல உள்ளம் கொண்டோரே ந…

  8. இன்று நாம் புலத்திலிருந்த படி பல உதவிகளை தாயகத்தினை நோக்கிச் செய்கிறோம். அப்படிச் செய்யப்படும் உதவிகள் அணைத்தும் பெரும்பாலும் அன்றாட வாழ்க்கயை கொண்டு நடாத்துவதற்குரிய (சுயதொழில் சார்ந்த) உதவிகளாக, அல்லது கல்வி சம்மந்தப்பட்ட ஊக்கங்களாக‌ அமைகின்றன. இவை மிகவும் இன்றியமையாதவை, காலத்தின் தேவை அறிந்து செய்யப்படும் உதவிகள், தாயகத்தினை நோக்கி இவ்வாறான உதவிகளை செய்கிறவர்கள் என்றுமே போற்றுதற்குரியவர்கள். எனினும் நாம் தாயக மக்களின் தூர‌ நோக்கில், அவர்களின் வளமான ,உறுதியான எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்டு ஒரு வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும். அப்படி நாம் முன்னெடுக்க வேண்டியவற்றில் (எனது அனுபவத்தில்) நான் சிறப்பாகக் கருதுவது " பட்டதாரிகளை உருவாக்குவது". ஒவ்வொரு வருடமும் A/L …

  9. ஒரு குடும்பத்திற்கு 115€ உதவினால் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம். 2013 ஆனி மாதம் 8ம் திகதியிலிருந்து மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட குசேலன்மலை(கரடியனாறு) கிராமத்தின் குழந்தைகளுக்கான கல்வியை வழங்கும் நோக்கில் எம்மால் ஆரம்பிக்கப்பட்ட கற்பித்தல் செயற்பாடானத ஒருவருடத்தை நிறைவு செய்து கொண்டுள்ளது. எமது கற்பித்தல் செயற்பாட்டில் மேற்படி கிராமத்தில் வாழும் 27குடும்பங்களிலிருந்தும் பிள்ளைகள் தொடர்ந்து பங்கேற்று அடைவுமட்டத்தில் முன்னேற்றம் கண்டுள்ளனர். இம்மாணவர்களின் குடும்பங்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களாகும். இவர்களது பிரதான தொழில் மீன்பிடி , விவசாயம் ஆகும். இவர்களால் பிடிக்கப்படும் மீனை சந்தைப்படுத்தவோ தொழிலுக்கான வலைகள…

    • 3 replies
    • 1.1k views
  10. அவனுக்கு இடுப்பின் கீழ் உணர்வற்று போனது 2009 இறுதி யுத்தத்தின் போது. ஒரு போராளியாய் தனது கடைசி நாட்களை களத்தில் செலவளித்த போதில் காலம் முழுவதும் மற்றவர்களுக்கு பாரமாகிவிடுவேனென்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. இறுதியாய் இராணுவத்திடம் சரணடைந்தவர்களுடன் அவனும் சரணடைந்தான். தடுப்பு மருத்துவமனையென்று 2011வரையும் அங்குமிங்கும் அலைவு. 2012இல் அவர்களை பராமரித்த மருத்துவமனையும் எல்லோரையும் வீடுகளுக்கு அனுப்பியது. அப்போதுதான் தனது அடுத்த கட்டத்தின் பயங்கரத்தை உணரத் தொடங்கினான். ஊனமில்லாது சுகதேகியாக இருந்திருப்பின் அக்காக்களுக்கும் அவன் இராசகுமாரனாக இருந்திருப்பான். ஆனால் நாட்டுக்காக போனவன் ஊனமாகி வீடு திரும்பிய போது யாரும் அவனை விரும்பியேற்கவில்லை. அன்பை எதிர்பார்த்து போன அக்…

    • 4 replies
    • 1.4k views
  11. 34மாணவர்களுக்கான புத்தகப்பைகள் பாதணிகள் தேவை. மன்னார் மாவட்டம் மடுவலயத்திற்கு உட்பட்ட மினுக்கன் ஆரம்பப் பாடசாலையில் தரம் 1முதல் 5வரையான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இவ்வகுப்புகளில் மொத்தம் 34மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இப்பிரதேசம் வசதிகளைக் கொண்டிராத தன்னிறைவற்ற பிரதேசமாகும். கல்வி கற்கும் மாணவர்களின் குடும்ப வாழ்வாதார நிலமையும் வறுமைக்கோட்டின் கீழ்தான் இருக்கிறது. மினுக்கன் பாடசாலையும் மிகவும் வசதிகள் குறைந்த பாடசாலையாகவே காணப்படுகிறது. இங்கு 1முதல்5வரையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பாதணிகள் புத்கப்பைகள் கூட இல்லாமலேயே பாடசாலை செல்கின்றனர். இப்பிள்ளைகளுக்குத் தேவையான பாதணிகள் , புத்தகப்பைகளை வழங்குமாறு குறித்த பாடசாலையின் அதிபர் விண்ணப்பித்துள்ளார்…

    • 7 replies
    • 1.2k views
  12. முல்லைத்தீவு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கால்நடை விவசாய அபிவிருத்திக்கு பணம் உதவல். இந்த ஆரம்பத்தில், நவ்வவ் இன்று இந்த உயர்நிலை அடைவதற்கு காரணமாக இருந்த உங்களின் குறைவில்லாத கொடைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். நவ்வவ் கடந்த சில ஆண்டுகளாக கூடக் கூட திறனுடனான சிக்கலான முன்னெடுப்புகளை எடுத்துவருவதை நீங்கள் எல்லோரும் அறிந்திருக்கிறீர்கள். எங்கள் அமைப்பின் பிரகாரத்தில் உள்ளடங்கத்தக்கதாக, குடும்பங்களை மீளக் கட்டமைப்பதுடன் தொழில் வாய்ப்பையும் பெற்றுத்தரத்தக்க முழுமையான முன்னேற்றமாக அமைந்த கட்டைபறிச்சான் கமத்தொழில் முன்னேற்ற முயற்சியின் ஆச்சரியமான பெரு வெற்றி எமது திறன் வலு கூடிய முன்னெடுப்புக்களின் ஒரு உதாரணம். எங்களின் இலக…

  13. மரணத்தின் வாசலை நெருங்கியிருக்கும் வீரத்தாய் (இது கதையில்லை) ஈழவிடுதலை வரலாறு எத்தனையோ வீரத்தாய்களையும் அவர்களது வீரக்குழந்தைகளின் வரலாறுகளையும் சேமித்து வைத்திருக்கிறது. ஈழக்கனவு கலைந்ததாய் நம்பப்படுகிற இந்நாட்களிலும் இன்னும் அந்தக் கனவின் நனவுக்காய் வாழ்கிற ஆயிரமாயிரம் அம்மாக்களின் வரிசையில் தனது பிள்ளைகளை தமிழீழக்கனவுக்காய் ஈந்த அம்மா பெயரைப்போல அழகான அம்மா. தனது குடும்பத்தின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளென 10 உறுப்பினர்கள் வரை நாட்டுக்குத் தந்த வீரத்தாய். வயது 90ஐத் தாண்டும். கண்பார்வையும் குறைந்து காதும் கொஞ்சம் கேட்காது. ஆனால் குரலை வைத்தும் நிழலை வைத்தும் ஆட்களை அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய திறனை இன்னும் இழக்கவில்லை. இன்றும் இடையறாத மாவீரர் நினைவும் அந்த…

    • 1 reply
    • 854 views
  14. சின்னச் சின்ன உதவிகள் தேவை (பணம் அல்ல) நீங்களும் வருவியளோ ? நேசக்கரம் , மற்றும் கைவினைப்படைப்பாளிகள் நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பு அல்லாத உதவிகள் செய்வதற்கான ஆர்வமுள்ளவர்கள் தேவைப்படுகின்றனர். வாரத்தில் 2மணித்தியாலம் ஒதுக்கி இந்தப் பணியில் உதவிட உறவுகளை வரவேற்கிறோம். தேவைப்படும் உதவிகள் :- 1) செய்திகள் தொகுப்பு. 2) கணக்கறிக்கை தயாரித்தல். 3) மாதாந்த தொகுப்பறிக்கை தயாரித்தல். 4) தமிழில் எழுதப்படும் செய்திகள் அறிக்கைகளை ஆங்கிலம் , டொச் மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்தல். 5) ஊடகங்களில் வெளிவரும் பாதிக்கப்பட்டோரின் விபரங்களை தொகுத்தல். 6) நீங்கள் அறியும் பெண்கள் மீதான வன்முறைகள் தகவல்களை தொகுத்தல். 7) புதிய திட்டமிடல்கள் செயற்பாடுகளுக்கு உங்கள் தரப்பு ஆலோசனைகள் திட…

    • 1 reply
    • 860 views
  15. 2011 – 2014 வரையான கடன் உதவித்திட்டத்தின் தொகுப்பறிக்கை. சிறு சிறு துளியாக பாதிக்கப்பட்டவர்களின் துணையாக எழுந்த நேசக்கரமானது 2011 யூலைமாதம்; கடன் வழங்கும் திட்டமொன்றை ஆரம்பித்திருந்தது. இதுவொரு பரீட்சார்த்த முயற்சியாக செயற்படுத்த திட்டமிட்டோம். புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்படும் நிதியை மீள செலுத்தக் கூடியவர்களிடமிருந்து மீளப்பெறுவதெனவும் முடிவெடுக்கப்பட்டது. இதன் பிரகாரம் வழங்கும் உதவிகளை கடன் அடிப்படையில் வழங்கி மீளப்பெறும் நிதியை சுழற்சி முறையில் அடுத்தடுத்தவர்களுக்கு பயன்படுத்தலாம் எனவும் திட்டமிடப்பட்டது. கட்டம் 1. திருமுறிகண்டியில் மீள்குடியேறிய குடும்பங்களில் 4குடும்பங்களை தெரிவு செய்து தலா ஒரு குடும்பத்திற்கு 30ஆயிரம் ரூபா அடிப்படையில் 120000ரூபா(ஒருலட்சத்த…

    • 2 replies
    • 623 views
  16. 2014ஜனவரியிலிருந்து மே மாதம் வரையிலான முகவர் வியாபார கணக்கறிக்கை. BY ADMIN IN கணக்கறிக்கை எமது முகவர் வியாபாரத்தின் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.எமது முதலீட்டாளர்களில் ஒருவரான சபேசன் அவர்களின் இலாபமானது அவரால் எமக்கு தரப்பட்ட வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்படுகிறது. மற்றும் தேன்சிட்டு உளவள அமைப்பின் கல்விச் செயற்பாட்டிற்கு கனடாவைச் சேர்ந்த றவி ,சுரேஷ் நண்பர்களின் உதவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதர முதலீட்டாளர்களின் இலாபத்தின் மூலம் கடந்த 5மாதங்களில் எமது வியாபாரத்தின் இலாபத்திலிருந்து போரால் பாதிக்கப்பட்ட 2குடும்பங்களுக்கு சுயதொழில் முயற்சிக்கு உதவியுள்ளோம். கடந்த 5மாதங்களில் மொத்தம் தொழிலாளர் கொடுப்பனவு வாகனம் யாவும் கொடுத்து எமக்கு கிடைத்த மொத்த இல…

    • 0 replies
    • 510 views
  17. “தேன்சிட்டு” ஆயுர்வேத மருத்துவ குறுநிலம் உருவாக்கம். அருகிவரும் தமிழ் பாரம்பரிய சித்த வைத்தியத்தை மேம்படுத்திப் பேணும் நோக்கிலும் ஆங்கில வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத (வாதம், அஸ்மா , நீழிழிவு…..போன்ற) நோய்களைக் குணப்படுத்தும் நோக்கிலும் தமிழ் மாணவர்களுக்கு சித்த வைத்தியப் பயற்சியை வழங்கும் நோக்கிலும் எம்மால் உருவாக்கப்படும் தேன்சிட்டு குறுநிலத்தில் அரிய வகை 500மூலிகைச் செடிகளைப் பயிரிடும் முயற்சிகளை மேற்கொள்கிறோம். இதன் மூலம் ஆயுர்வேத வைத்திய நிலையத்தையும் உருவாக்கிக் கொள்வதன் மூலம் எமது மருத்துவத்துறையை விருத்தி செய்யக்கூடிய வாய்ப்பினையும் உருவாக்க முடியும். முழுமையாக அழிந்து வரும் தமிழ் ஆயுர்வேத சித்த வைத்தியத்தினை எமது மக்கள் சரியான வகையில் பெற்றுக் கொள்ளும…

    • 19 replies
    • 3.2k views
  18. சீமெந்துக்கல் உற்பத்தி 3மாத முன்னேற்ற அறிக்கையும் பயன்களும். எமது கைவினைப்படைப்பாளிகள் நிறுவனத்தின் சீமேந்துக்கல் உற்பத்தியானது 2013ஆவணிதாம் தொடக்கம் நடைபெற்று வந்துள்ளது. தற்போது மழைகாலம் ஆகையால் உற்பத்தியாலையை மூடியுள்ளோம். மீண்டும் மாசி மாதம் இயங்க ஆரம்பிக்கும்.இதுவரையில் எமது உற்பத்தியில் கிடைத்த இலாபம் முன்னேற்ற போன்ற விபரங்களை கீழே தருகிறோம். முதலீடு – 379000.00ரூபா ஆவணி மாதம் பங்குதாரருக்கான இலாபம் :- 37925.74ரூபா. கற்களை கொள்வனவு செய்த மக்களுக்கான இலாபம் :- 79606.05ரூபா. தொழிலார்களுக்கான சம்பளம் :- 309094.46ரூபா. 3மாதங்களில் போட்ட முதலீட்டைவிட அதிகளவு பயன் கிடைத்துள்ளது. இம்முயற்சியில் தங்களது ஆதரவுகளை வழங்கிய முதலீட்டாளர்களான :- 1) கஜீபன் (கனடா) …

    • 2 replies
    • 912 views
  19. சுவிஸ் பபிக்கோன் தமிழர் ஒன்றியத்தினர் வழங்கிய உதவிக்கு நன்றிகள். போரால் பாதிப்புற்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவு பற்று கோட்டத்தில் 32 பாடசாலைகள் இயங்குகின்றது. இப்பிரதேசமானது வளங்கள் குறைந்த மிகவும் பின் தங்கிய பிரதேசமாகும். இப்பாடசாலைகளில் கற்கும் மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்தும் முகமாக நேசக்கரம் அமைப்பானது பலவகையிலான உதவிகளை வழங்கி வருகிறது. இப்பகுதிகளில் வாழும் மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் மழை , வெயில் காலங்களில் மாணவர்கள் பாவிப்பதற்கான குடைகளை சுவிஸ் பபிக்கோன் தமிழர் ஒன்றியத்தினருக்கு முன்வந்து வழங்கியுள்ளனர். எம்மால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கற்கும் பாடசாலைகளில் ஒன்றான ஆணைகட்டியவெளி நாமகள் வித்தியாலத்தில் கற்கும் மாணவர்களுக்கு சுவிஸ் ப…

    • 2 replies
    • 679 views
  20. நோக்கம் போரால் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடும் தமிழர்களுக்கான வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல். ஏழை மாணவர்களுக்கு கல்வி அளித்தல். ஊக்கம் சிறு சிறு முதலீடுகள் மூலம் தொழில் முயற்சிகளை, வியாபாரங்களை ஆரம்பித்தல். கிடைக்கும் வருமானத்தின் மூலம் ஏழை மாணவர்களுக்கான கல்விக்கு உதவுதல். ஆக்கம் செயற்றிட்டங்களை விரிவுபடுத்தி, சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கி, எம் மக்களை பொருளாதார ரீதியில், கல்வியில் தன்னிறைவு நிலையை எட்டி வலுவடையச் செய்தல். வியாபாரத்தில் இணையும் பங்குதாரருக்கான உரிமைகளும் நிபந்தனைகளும். BY ADMIN IN 1) முதலீட்டாளர் எமது சமூகப்பணிகளில் இணைந்திருக்க முடியும். அதாவது நாம் முன்னெடுக்கும் சமூகப்பணிகளில் தங்களது உதவிகளை வழங்குவதன் மூலம் இணைந…

    • 0 replies
    • 610 views
  21. உயிர் கொல்லும் புற்றுநோயிலிருந்து வாழத் துடிக்கும் 22 வயது இளைஞனின் கதை. 13.06.1991 உலகின் மகிழ்ச்சிகளை அனுபவிக்கப் பிறந்த அவனது பிறப்பு மர்மமானது. ஓவ்வொரு பிள்ளையும் விரும்பும் அம்மாவின் மடிவாசம் அப்பாவின் தோழ்வாசம் எதையும் அவன் அனுபவிக்காதவன். பெற்றவர்களை அவன் காணவேயில்லை. உறவென்று சொல்லி உரிமை கொண்டாட யாருமில்லாத சிசுவாகவே தனித்துப் போனான். அவனை வளர்த்தவர்களும் பாலக வயதிலேயே ஏனோ கைவிட்டு விட்டார்கள். யாரில்லாது போனாலென்ன 'புனிதபூமி' இருக்கிறது என அவனை புனிதபூமியே தத்தெடுத்துக் கொண்டது. புனிதபூமியின் குழந்தையாகி மீண்டது அவனது மகிழ்ச்சிக்காலம். உறவில்லை உறவினர்கள் இல்லையென்று அழுத பிஞ்சு மனசில் ஆயிரக்கணக்கான உறவுகளின் அணைப்பையும் ஆற்றுதலையும் புனிதபூமி கொடு…

    • 1 reply
    • 656 views
  22. 2014 க.பொ.த.சாதாரணதரம் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான உதவி. 2014 க.பொ.த.சாதாரணதரம் தோற்றும் போரால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களிற்கான நேசக்கரம் மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் 6மாத பயிற்சி வகுப்புகளை நடாத்தவுள்ளோம். விஞ்ஞானம், இயந்திரவியல் துறைகளுக்கான மாணவர்களை அதிகரிக்கும் வகையில் எம்மால் நடத்தப்பட்டு வரும் பயிற்சி வகுப்புகளில் கடந்த வருடமும் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வருடம் அனைத்துப் பாடங்களுக்குமான பயிற்சிகளை வழங்கவுள்ளோம். இம்மாணவர்களுக்கான இலவச கற்றல் பயிற்சி வகுப்புகளை எமது மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தினர் கிராமங்கள் தோறும் செயற்படுத்தி வருகின்றனர். இவ்வருடம் முதல் குறைந்தது ஆறுமாத காலம் பயிற்சி வகுப்புகளை நடாத்துவதென தீர்ம…

    • 7 replies
    • 814 views
  23. தொழில் செய்ய விரும்பும் போராளிக்கான உதவி ஓரு முன்னாள் போராளி. காலொன்றை இழந்தவர். 3பிள்ளைகளின் தந்தை. மனைவி இருதய நோய் பாதிப்புக்கு உள்ளானவர். நீண்டகாலம் சிறையில் இருந்து விடுதலையானவர்.வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கிக்கடன் எடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் வங்கிக்கடன் எடுக்க முடியாது எல்லா முயற்சிகளும் தோற்றுப்போனது. தற்போது வியாபாரம் ஒன்றைச் செய்வதற்காக உதவி கோரியுள்ளார். 50ஆயிரம் ரூபா(அண்ணளவாக 285€) உதவினால் தன்னால் வியாபாரத்தை மேற்கொள்ள ஆதரவாக இருக்குமென உதவி கோரியுள்ளார். இவருக்கான உதவியை உறவுகளிடமிருந்து எதிர்பார்க்கிறோம். 18வருட போராட்ட வாழ்வில் எல்லாவற்றையும் இழந்து எதுவுமற்றுப் போன இக்குடும்பத்துக்கு உதவுங்கள். நேரடியாகவே உங்கள் உதவியை வழங்க …

    • 1 reply
    • 667 views
  24. அனந்தியின் உதவித் திட்டங்கள்: காணாமல் போனோர் – சரணடைந்தோர் நலன் பேணல். (Disappeared – contaminator care.) முன்னாள் போரளிகளின் நலன் பேணல் (care of the former Poralikal). பெண்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டங்கள் (Livelihood support programs for women) நலிவுற்ற குடும்பங்களின் நலன் பேணல் ( Care of indigent families). மேற்குறிப்பிட்ட திட்டங்களை நடைமுறைபடுத்த உங்கள் உதவியை வேண்டி நிற்கிறோம்!! ==================================================================

  25. ‘சிறுவர் போசாக்கு வாரம்’ 100 குழந்தைகளை உள்வாங்கும் திட்டம். போசாக்கு மாதத்தினை முன்னிட்டு போசாக்கு குறைந்த சிறுவர்கள் (இத்திட்டத்தில் உள்வாங்கப்படும் சிறுவர்கள் ஒரு வயது முதல் 5வயது வரையானவர்கள்) , தாய்மார்களுக்குமான சத்துணவு வழங்கலினை மேற்கொள்ளும் திட்டத்தினை தேன்சிட்டு உளவள அமைப்பானது பரிந்துரை செய்துள்ளது. இத்திட்டத்தில் 2வாரகாலத்திற்கான போசாக்கு உணவுத் திட்டத்தின் கீழ் வறுமையால் நல்லுணவு கிடைக்காத போசாக்கு குறைபாடுள்ள குழந்தைகள் 100பேரைத் இத்திட்டத்திற்காக தெரிவு செய்யவுள்ளோம். வடகிழக்கில் இரு இடங்களில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படும் குழந்தைகளுக்கான 2வாரத்திற்கான 2நேர உணவு மற்றும் மாலைநேர சிற்றூண்டிகளும் வழங்கி விழிப்பணர்வு வாரமாக அனுட்டிக…

    • 0 replies
    • 784 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.