துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
350 topics in this forum
-
நீங்கள் படித்த நூல்களை எங்கள் மாணவர்களுக்குத் தாருங்கள். வெளிநாடுகளில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் அல்லது பல்கலைக்கழகப் படிப்பை முடித்த மாணவர்கள் தாங்கள் படித்த பழைய நூல்களை (ஆங்கில நூல்கள்) தாயகத்தில் பல்கலைக்கழகப் படிப்பை தொடங்கியிருக்கும் மாணவர்களுக்கு தந்துதவுங்கள். மருத்துவம், எந்திரவியல் துறைகள் தொடர்பான நூல்கள் எமது மாணவர்களுக்கு தேவைப்படுகிறது. புதிய நூல்களை வாங்கிப்படிக்கும் வசதி பல மாணவர்களிடம் இல்லை. எனவே உங்களது பாடநூல்களை இம்மாவணவர்களுக்கு வழங்கியுதவுங்கள். நீங்கள் வழங்கும் நூல்கள் சுழற்சி முறையில் மாணவர்கள் பயன்படுத்தி பயனடைவார்கள். நூல்களை வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள். Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418 nesakkaram@gma…
-
- 0 replies
- 456 views
-
-
சரியானவர்களை உங்கள் உதவிகள் சென்றடைய வேண்டுமா ? இச்செய்தியை படியுங்கள். எமது மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் கற்பித்தலில் பயனடைந்து சிறப்பான புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுள் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 10மாணவர்களை இவ்வருட எமது உதவித்திட்டத்தின் கீழ் உள்வாங்கியுள்ளோம். இம்மாணவர்கள் அனைவரும் விஞ்ஞான , இயந்திரவியல் பீடங்களுக்குத் தெரியவாகியுள்ளார்கள். எமது கல்வித்திட்டத்தில் மருத்துவ , இயந்திரவியல் துறைகளுக்கான தமிழ் மாணவர்களை அதிகரிக்கும் வகையில் கடந்த வருடம் (2013)முதல் உதவி வருகிறோம். கடந்த வருடம் அதிகளவிலான மாணவர்களுக்கு உதவ வேண்டியிருந்தும் 11மாணவர்களுக்கு மட்டுமே எமது உதவித்திட்டத்தின் கீழ் உதவ முடிந்தது. காரணம் அதிகளவிலான உதவிகள் கிடைக…
-
- 8 replies
- 1k views
-
-
2014 க.பொ.த.சாதாரணதரம் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான உதவி. 2014 க.பொ.த.சாதாரணதரம் தோற்றும் போரால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களிற்கான நேசக்கரம் மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் 6மாத பயிற்சி வகுப்புகளை நடாத்தவுள்ளோம். விஞ்ஞானம், இயந்திரவியல் துறைகளுக்கான மாணவர்களை அதிகரிக்கும் வகையில் எம்மால் நடத்தப்பட்டு வரும் பயிற்சி வகுப்புகளில் கடந்த வருடமும் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வருடம் அனைத்துப் பாடங்களுக்குமான பயிற்சிகளை வழங்கவுள்ளோம். இம்மாணவர்களுக்கான இலவச கற்றல் பயிற்சி வகுப்புகளை எமது மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தினர் கிராமங்கள் தோறும் செயற்படுத்தி வருகின்றனர். இவ்வருடம் முதல் குறைந்தது ஆறுமாத காலம் பயிற்சி வகுப்புகளை நடாத்துவதென தீர்ம…
-
- 7 replies
- 816 views
-
-
ஆயிரம் ரூபாவிற்கு விற்கப்படும் தமிழ் குழந்தைகள் 3வயதுப் பெண்குழந்தையை ஆயிரம் ரூபாவிற்கு விற்க ஒரு தமிழ்த்தாய் மட்டக்களப்பு காத்தான்குடி சந்தையில் பேரம் பேசிக்கொண்டிருந்தாள். அந்தக் குழந்தையை காப்பாற்றிக் கொண்டு வந்து தந்த தமிழனுக்கு முதலில் நன்றிகள். 19.01.2014அன்று நேசக்கரம் அமைப்பானது டென்மார்க் அன்னை அறக்கட்டளை அமைப்பின் நிதியாதரவில் குசேலன்மலை (கரடியனாறு) மாணவர்களுடனான பொங்கல் விழாவினைச் செய்திருந்தது. வளமையான வரவிலிருந்து 2பிள்ளைகள் அதிகமாயிருந்தார்கள். 2பிள்ளைகளின் வரவுக்கான காரணத்தை விசாரித்ததில் ஒரு பெண்குழந்தைக்கு நடந்த அவலம் தெரியவந்தது. குசேலன்மலை (கரடியன்குளம்) கிராமத்தில் பணத்திற்காக பல குழந்தைகள் விற்கப்பட்ட விடயமும் வெளிச்சத்துக்கு வந்தது. அது மட்டுமன்…
-
- 1 reply
- 853 views
-
-
அனந்தியின் உதவித் திட்டங்கள்: காணாமல் போனோர் – சரணடைந்தோர் நலன் பேணல். (Disappeared – contaminator care.) முன்னாள் போரளிகளின் நலன் பேணல் (care of the former Poralikal). பெண்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டங்கள் (Livelihood support programs for women) நலிவுற்ற குடும்பங்களின் நலன் பேணல் ( Care of indigent families). மேற்குறிப்பிட்ட திட்டங்களை நடைமுறைபடுத்த உங்கள் உதவியை வேண்டி நிற்கிறோம்!! ==================================================================
-
- 6 replies
- 1.3k views
-
-
டென்மார்க் அன்னை அறக்கட்டளை ஆதரவில் நேசக்கரம் 2014 பொங்கல் விழா. 19.01.2014 அன்று மட்டக்களப்பு குசேலன்மலை மாணவர்கள் 42பேருடனும் எமது உறுப்பினர்களும் இணைந்து பொங்கல் விழாவினைக் கொண்டாடியுள்ளனர். மிகவும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட போரால் பாதிப்புற்ற மேற்படி கிராமத்தின் 27குடும்பங்களைச் சேர்ந்த 42 பிள்ளைகளுக்கான கற்பித்தல் செயற்பாடானது நேசக்கரம் அமைப்பின் உப அமைப்புகளில் ஒன்றான அரவணைப்பு அமைப்பின் கவனிப்பின் கீழ் இயங்கி வந்தது. இவ்வருடம் தேன்சிட்டு உளவள அமைப்பின் சிறப்புக் கவனிப்பினுள் உள்வாங்கப்பட்டுள்ளதோடு இனிவரும் காலங்களில் குசேலன்மலை பிள்ளைகளின் உளவள கல்வி மேம்பாட்டின் முழுமையான கவனிப்பையும் தேன்சிட்டு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இக்கிராமத்து மாணவர்கள் 42பேருக…
-
- 4 replies
- 953 views
-
-
ஒட்டுசுட்டான் சின்னச் சாளம்பன் ஈஸ்வரன் வித்தியாலய மாணவர்கள் அடிப்படை வசதிகளின்றி , தகரக் கொட்டகைக்குள் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர். இது பற்றிய பிரதேச மக்களின் தகவலையடுத்து வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று மேற்படி நிலைமையை உறுதிப்படுத்தினார். அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில் , தரம் 5 வரை , சுமார் 65 மாணவர்கள் கல்வி கற்கும் ஈஸ்வரன் வித்தியாலயத்தின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அங்கு சென்று நிலைமையை நேரில் அவதானித்ததுடன் அப்பாடசாலை அதிபரையும் சந்தித்து குறைகளின் தரவுகளைக் கேட்டறிந்தேன். அப்பாடசாலையானது பழைய தகரங்களால் அமைக்கப்பட்டுள்ளது. கூரையில் பல இடங்களில் துளைகள் காணப்படுவதால், மழை பெய்யும் போது , கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. கா…
-
- 1 reply
- 447 views
-
-
http://nesakkaram.org/ta/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2013/ தேன்சிட்டு உளவள அமைப்பு 2013 முன்னேற்ற அறிக்கை. 2013ம் ஆண்டு ஆவணி முதலாம் திகதி நேசக்கரத்தின் உப அமைப்புகளில் ஒன்றாக தேன்சிட்டு உளவள அமைப்பினை ஆரம்பித்திருந்தோம். போருக்குப் பின்னர் அதிகரித்துள்ள தற்கொலைகள் , சமூகச்சீர்கேடுகள் , மன அழுத்தப் பாதிப்பு என பல்வகையில் பாதிக்கப்பட்டவர்களின் உளவள ஆரோக்கியத்தை மேம்படுத்தலை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட இவ்வமைப்பினால் 50இற்கும் மேற்பட்ட பாலர்கள் பயனடைந்துள்ளார்கள். 01.08.2013 அன்று அம்பாறையில் 2 கிராமங்க…
-
- 1 reply
- 551 views
-
-
நேசக்கரம் மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் முதல் வெற்றி. பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மருத்துவ , இயந்திரபீட மாணவர்களின் நிர்வாக வழிநடத்தலில் உருவாக்கப்பட்ட எமது உப அமைப்பான மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் சிறந்த வழிகாட்டலில் 2013 ஆண்டு க.பொ.த.சாதாரணதரம் தோற்றிய மாணவர்களிற்கான கணித விஞ்ஞான பாடங்களுக்கான பயிற்சி வகுப்புக்களை ஒரு மாதம் வரையில் 4 நிலையங்களில் நடாத்தியிருந்தோம். போரால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு பகுதியில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட கரடியனாறு , உன்னிச்சை, புல்லுமலை, கோப்பாவெளி, உறுகாமம், கித்துள், இலுப்பட்டிசேனை, கரடியனாறு, பன்குடாவெளி, கோரகல்லிமடு, சந்திவெளி, கிரான், கறுவாக்கேணி, முதலைக்குடா,முனைக்காடு, மகிழடித்தீவு ஆகிய பகுதிகளை உள்ளடக்கி 4…
-
- 0 replies
- 582 views
-
-
கனடாவில் உள்ள வாழவைப்போம் அமைப்பினரால் புதுக்குடியிருப்பு கைவேலிப் பிரதேசத்தைச் சேர்ந்த போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ஐயாயிரம் ரூபா வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை கைவேலி கணேச வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் வீ.கனகசுந்தரம் கலந்துகொண்டு இந்த கொடுப்பனவை வழங்கிவைத்தார். இதில் குறித்த பிரதேசசத்தைச் சேர்ந்த 12 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=101447&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 640 views
-
-
கிளிநொச்சி திருநகரில் உயிரிழந்த சிறுவன் நிதர்சனின் குடும்பத்திற்கு லண்டன் புலம்பெயர் அமைப்பினால் ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. லண்டன் வாழ் தாயக தமிழர்களால் நடாத்தப்படும் ர்நளொழர ஐளளாiசெலர கராத்தே கல்லூரியின் பிரதான பயிற்சியாளர் றென்சி கந்தையா இரவீந்திரன் அவர்களால் வழங்கப்பட்ட உதவித் தொகையை வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் குறித்த சிறுவனின் தாயிடம் நேரில் சென்று கையளித்துள்ளார். http://www.onlineuthayan.com/News_More.php?id=466692573313820907
-
- 0 replies
- 626 views
-
-
நேசக்கரம் கடந்து வந்த 5ஆண்டு பயணம் மீள்பார்வையும் 5ஆண்டு கணக்கறிக்கையும். 2009 யுத்த முடிவின் பின்னர் பதிவு செய்யப்பட்ட உதவியமைப்பாக நேசக்கரம் இயங்கி வருகிறது. எமது அமைப்பானது கடந்த 5வருடங்களில் புலம்பெயர் உறவுகளின் உதவிகளைப் பெற்றும் நேரடியான குடும்ப இணைப்பு , மாணவர்கள் இணைப்பு மூலம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து தாயகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. போரின் பின்னரான மக்களின் தேவைகள் , உளவள ஆற்றுப்படுத்தல்கள் , மீள் கட்டுமானங்கள் உட்பட தேவைகள் அதிகமாகவே இருக்கிறது. யானைப்பசிக்கு எங்கள் உதவிகளானது சோளப்பொரியாகவே இருந்திருக்கிறது. எனினும் எங்களால் முடிந்தவரை உதவிகளைக் கொண்டு சேர்த்திருக்கிறோம். தொடர்ந்து பணத்தை மட்டும் வழங்கிக் கொண்டிருத்தல் என்பது சமூக மாற்றத்தைய…
-
- 10 replies
- 1.2k views
-
-
ஊனமுற்ற தங்கராசா ரமேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவி ஊனமுற்ற தங்கராசா ரமேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவிக்கான தங்கராசாவின் நன்றிக்கடிதம். இவ்வுதவியை முன் வந்து வழங்கிய பிரித்தானியா நிவேதா அவர்களுக்கு மிக்க நன்றிகள். குறித்த உறவால் கடிதம் எழுதும் திறன் இல்லாமையால் பிறிதொரு நபர் எழுதிக் கொடுத்த கடிதத்தில் ரமேஷ் அவர்கள் ஒப்பமிட்டுத் தந்துள்ளார். தொடர்புபட்ட செய்தி இணைப்பு :- http://nesakkaram.org/ta/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0/ http://nesakkaram.org/ta/%E0%AE%8A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%…
-
- 0 replies
- 481 views
-
-
கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவான M.அரியராஜா என்பவர் தனது 60 வது பிறந்ததினத்தில் வன்னியில் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு உதவுவதன் மூலம் கொண்டாடினார். கண் ஒன்றை இழந்த பெண் ஒருவருக்கு கை கொடுக்கும் வகையில் ரூபா ஒரு இலட்சம் வழங்கியுள்ளார். இந் நிதியினை பெறுப்பேற்ற வலிவடக்கு பிரதேசசபை துணைத்தவிசாளர் ச. சஜீவன் அவர்கள் அப் பணத்தினை குறித்த பெண்ணிடம் கையளித்துள்ளார். பிறந்த நாட்களை நட்சத்திர விடுதிகளில் கொண்டாடி வரும் மக்கள் மத்தியில் திரு M. அரியராஜாவின் இச் செயற்பாடு வரவேற்கத் தக்கது. ஏனைய புலம்பெயர் உறவுகளும் யுத்தால் பாதிக்கபட்ட தமது மக்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் உதவ முன்வரவேண்டும். போரினால் அவயங்களை இழந்த எம்மவர்களுக்கு புலம் பெயர் உறவுகள் கைகொட…
-
- 2 replies
- 582 views
-
-
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை மன்னார் மாவட்டத்தின் பிரபல வர்த்தகர் இருதயநாதன் சாள்ஸ் தொடர்ந்தும் வழங்கி வருகின்றார் . - மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மீள் குடியேற்றக் கிராமங்களான சன்னார் , ஈச்சளவக்கை , பெரிய மடு ஆகிய மூன்று கிராமங்களுக்கும் கடந்த 30 ஆம் திகதி விஜயம் செய்த பிரபல வர்த்தகர் இருதயநாதன் சாள்ஸ் சுமார் 500 மாணவர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் பெறுமதி வய்ந்த பாடசாலை உபகரணங்களை பங்கீடு செய்து வழங்கி வைத்தார் . இந்த நிலையில் நேற்று முந்தினம் மன்னார் நூறு வீட்டுத்திட்டம் மற்றும் மன்னார் முப்பது வீட்டுத்திட்டம் ஆகிய கிராமங்களுக்குச் சென்ற வர்த்தகர் இருதயநாதன் சாள்ஸ் சுமார் 50…
-
- 2 replies
- 626 views
-
-
பளை வீமன்காமம் பகுதியைச் சேர்ந்த நூற்றி இருபத்துநான்கு முன்பள்ளி மற்றும் தரம் ஒன்று முதல் ஐந்து வரையான வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் 13.30 மணியளவில் பளை வீமன் காமமம் கிராம அலுவலர் பிரிவு கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் லயன்ஸ் எஸ் . சுந்தரேஸ்வரன் தலைமையில் நடை பெற்றது . மானிப்பாய் நகர லயன்ஸ் கழகம் கிராம அபிவிருத்தி சங்கத்துடன் இனைந்து மேற்க்கொண்ட இந்நடவடிக்கைக்கான நிதியை சுவிஸ் நாட்டில் இருந்து வந்த லயன்ஸ் எஸ் . மகேந்திரன் மற்றும் அவருடைய பாரியார் திருமதி ம . விஜயகுமாரி வழங்கி இருந்தார்கள் . மங்கள விளக்கினை லயன்ஸ் பிராந்திய ஆலோசகர் லயன்ஸ் வைத்தியகலாநிதி வி . தியாகராசா மாகாண பிரதி செயலாளர் லயன்ஸ் …
-
- 0 replies
- 548 views
-
-
மாணவர்களுக்கான ஓவியப்போட்டி தாண்டியடி அரசினர் தமிழ்கலவன் பாடசாலை கட்டடச் சுற்று மதில் சுவர்களில் விழிப்பூட்டல் ஓவியங்கள் வரைவதற்கு வர்ணங்கள் தேவைப்படுகிறது. இப்பாடசாலையில் கற்கும் மாணவர்களின் கைவண்ணத்தில் அமையப்பெறும் இவ் ஓவியங்களில் சிறந்த ஓவியங்களுக்கான பரிசில்களை வழங்கி மாணவர்களை ஊக்குவிப்பதோடு நேசக்கரத்தின் மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்துடன் இணைந்து இது போன்ற மாணவர்களுக்கான வழிகாட்டலையும் தொடர்ச்சியாக வழங்கி ஊக்குவிப்பதே எமது நோக்கமாகும். இவ் ஓவியங்களை வரைவதற்கு தேவையான வர்ணங்கள் தூரிகைகள் கொள்வனவு செய்ய25ஆயிரம் ரூபா (150€) தேவைப்படுகிறது. இவ்வுதவியை வழங்கி மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கான ஆதரவினை புலம்பெயர் கருணையாளர்களிடம் வேண்டி நிற்கிறோம். உதவ விரும்புவோர் த…
-
- 0 replies
- 488 views
-
-
போரில் பெற்றோரை இழந்த மடுவலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் தேவை. ------------------------------------------------------------------------------------------------------- போரில் தாயை அல்லது தந்தையை அல்லது தாய்தந்தை இரவரையும் இழந்த மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மடு வலயத்தில் உள்ள 16 பாடசாலைகளின் கல்வி கற்கும் 251 மாணவ மாணவியர்களுக்கான கற்றல் உபகரணங்களான கொப்பிகள் , எழுதுகருவிகள் ஆகியவயை தேவைப்படுகிறது. இம்மாணவர்கள் உறவினர்களின் பாதுகாப்பிலும் பலர் வயதான அம்மம்மா , அப்பம்மா ஆகியோருடனும் வாழ்ந்து வருகின்றனர். போரின் காயங்களிலிருந்து மீள எழுகிற மடு வலயத்தில் வாழும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி அவர்களது கல்வியை மேம்படுத்த புலம்பெயர் தமிழர…
-
- 0 replies
- 402 views
-
-
தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நன்கொடையாளர்கள் கவனத்துக்கு. இயற்றை அனர்த்த வேளைகளில் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழும் மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கும் நிறுவனங்கள் , நன்கொடையாளர்களால் வழங்கப்படும் உலருணவு நிவாரணப் பொருட்களை எமது நிறுவனம் மூலம் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் கிடைக்கும் இலாபமானது நேசக்கரம் சமூக வேலைத்திடங்களுக்கு வழங்கப்படுவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கான வேலை வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். உதாரணமாக :- அரிசி 10கிலோ(கல் மண் நீக்கப்பட்ட சுத்தமான அரிசி) – 670ரூபா (கடைவிலை) எம்மால் போக்குவரத்துச் செலவோடு 620ரூபாவிற்கு வழங்க முடியும். மீன்ரின் – 220ரூபா (கடைவிலை) எம்மால் போக்குவரத்துச் செலவோடு 180ரூபாவிற்கு வழங்…
-
- 0 replies
- 714 views
-
-
இரண்டாம் இணைப்பு.தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரனின் அலுவலகத்தில் பதிவுசெய்தால் புலம்பெயர்ந்து வாழுகின்ற உறவிகளிடமிருந்து வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற பரபரப்புத் தகவலொன்று சமூகவலைத் தளமான ' பேஸ்புக் ' வாயிலாக பரப்பப்பட்டுவருவதால் போராளிகளும் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் குழப்பமடைந்துள்ளனர் . புலம்பெயர்ந்து வாழுகின்றவர்களின் உதவிகளை குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் அலுவகத்தின் ஊடாக மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அதற்கான பதிவுகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் இந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது . அத்துடன் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கும் ம…
-
- 2 replies
- 763 views
-
-
சீமெந்துக்கல் உற்பத்தி 3மாத முன்னேற்ற அறிக்கையும் பயன்களும். எமது கைவினைப்படைப்பாளிகள் நிறுவனத்தின் சீமேந்துக்கல் உற்பத்தியானது 2013ஆவணிதாம் தொடக்கம் நடைபெற்று வந்துள்ளது. தற்போது மழைகாலம் ஆகையால் உற்பத்தியாலையை மூடியுள்ளோம். மீண்டும் மாசி மாதம் இயங்க ஆரம்பிக்கும்.இதுவரையில் எமது உற்பத்தியில் கிடைத்த இலாபம் முன்னேற்ற போன்ற விபரங்களை கீழே தருகிறோம். முதலீடு – 379000.00ரூபா ஆவணி மாதம் பங்குதாரருக்கான இலாபம் :- 37925.74ரூபா. கற்களை கொள்வனவு செய்த மக்களுக்கான இலாபம் :- 79606.05ரூபா. தொழிலார்களுக்கான சம்பளம் :- 309094.46ரூபா. 3மாதங்களில் போட்ட முதலீட்டைவிட அதிகளவு பயன் கிடைத்துள்ளது. இம்முயற்சியில் தங்களது ஆதரவுகளை வழங்கிய முதலீட்டாளர்களான :- 1) கஜீபன் (கனடா) …
-
- 2 replies
- 918 views
-
-
பத்தாயிரம் அப்பியாசக்கொப்பிகள், எழுதுகருவிகள் தேவை. நேசம் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் 2014ம் ஆண்டு பாடசாலை செல்வதற்கு கற்றல் உபகரணங்கள் இல்லாது கற்க வசதியற்ற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு ஏழை மாணவர்களுக்கான இலவச கொப்பி மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்க முடிவு செய்துள்ளோம். இதன் முதல் கட்டமாக 10ஆயிரம் கொப்பிகள் எழுதுகருவிகள் வழங்க உத்தேசித்துள்ளோம். இவ்வுதவியானது வடகிழக்கு மாகாணங்களில் வாடும் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மாணவர்களுக்கே வழங்கவுள்ளோம். 10ஆயிரம் கொப்பிகளுக்கு தேவையான உதவி – 525000.00ரூபா எழுதுகருவிகள் – 150000.00ரூபா மொத்தம் – 675000.00ரூபா (3900€) உதவ விரும்புவோர் தொடர்புகளுக்கு :- Paypal Account – nesakkaram@g…
-
- 0 replies
- 505 views
-
-
பிறேம் குமார், "கம்பிகளின் மொழி" எனும் கவிதைத் தொகுப்பு மூலம் வல்வையில் கலைஞராக அறிமுகமானவர். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி. தற்பொழுது மிகவும் மோசமாக விழுப்புண் அடைந்திருக்கும் நிலையிலும் கூட, தொடர்ந்து கலைஞன் வடிவில் சமூக சேவை தொடர்ந்து முனைபவர், சாதனைகள் செய்யத் துடிப்பவர். திரு. பிறேம் குமார் அகில இலங்கை ரீதியில் துப்பாக்கி சுடும் போட்டியில் முதலாவது இடத்தினை பெற்றிருந்ததும், எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பரா ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது சாதனைக்கு நிதி உதவி கோரி எம்மூடாக வல்வை மக்களிடமும், புலம் பெயர் வல்வை மக்களிடம் சிறு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இதனுடன் சம்பந்தப்ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
சர்வதேச எயிட்ஸ் தினம் விழிப்பூட்டல் பேரணி தமிழர் பிரதேசங்களில் தற்போது வெளிநாட்டவர் சுற்றுலாச் செல்லல் அதிகரித்துவருகிறது. இத்தோடு எயிட்ஸ் நோயின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. அது மட்டுமின்றி போரால் பாதிக்கப்பட்டவர்களையும் பொருளாதார வசதியுள்ளவர்கள் தவறாக வழிகளில் பயன்படுத்தி வருவதும் அதிகரித்துள்ள நிலமையில் பல குழந்தைகளை இளம் வயதினைரை எயிட்ஸ் அபாயத்தை எமது தழிழ்ச் சமூகமும் பெற்றுள்ளது. இன்றைய சர்வதேச எயிட்ஸ் தினத்தை விழிப்பூட்டல் நாளாக ஏற்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் மேற்படி பேரணியை ஒழுங்கமைத்திருந்தது. நேசக்கரம் பிறைட் பூயூச்சர் அமைப்பின் நாவலர் பாலர் பாடசாலையும் இணைந்து பேரணியில் எமது ஆதரவினையும் வழங்கியிருந்தது. இப்பேரணியில் …
-
- 3 replies
- 757 views
-
-
ஒருலட்சரூபா முதலீட்டிற்கு மாதம் 5000முதல் 7500ரூபா இலாபத்தைத் தருவோம். எமது கைவினைப்படைப்பாளிகள்(HMC) நிறுவனமானது பெரிய வியாபாரா நிறுவனங்களின் விநியோக முகவராக இணைந்து தொழில் புரியக்கூடிய வாய்ப்பினைப் பெற்றுள்ளது. இத்தொழிலில் முதலீடு செய்ய விரும்புவோரையும் வரவேற்கிறோம். உங்கள் முதலீடு மூலம் வேலைவாய்ப்பை வழங்குவதோடு உங்கள் முதலீட்டுக்கான இலாபமும் வழங்கப்படும். விநியோக முகவர் மாவட்டம் மட்டக்களப்பு வங்கி உத்தரவாதம் 1000000.00 (பத்துலட்சரூபா) இப்பணம் குறித்த நிறுவனத்திற்கு வழங்கத் தேவையில்லை. எங்களது வங்கியில் வைப்பிலிட்டுக் காட்ட வேண்டும். சுழற்சி முறையில் வியாபார நிறுவனங்களுக்கு வழங்கும் பொருட்களுக்கு ஏற்ப தேவைகளுக்கு நாங்களே பணத்தைக் கையாள்வோம். மொத்…
-
- 9 replies
- 2.4k views
-