Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவு

மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.

  1. பிரபல தாயகப் பாடகர் இசைக் கலைமணி திரு. குலசிங்கம் அவர்கள் மறைவு (உலகத் தமிழினத்தின் ஒளிவிளக்கு, மலர்தூவ வாருங்கள் போன்ற பாடல்களைப் பாடியவர்) யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் என்னுடன் இசை பயின்ற நண்பன் திரு. குலசிங்கம் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் கவலையும் அடைகிறேன். மிகவும் இனிய குரல்வளம் கொண்டவர்¸ பழகிட இனிமையான ஒரு கலைஞர். மறக்கமுடியாத சில தாயகப் பாடல்களின் குரலுக்கு சொந்தக்காரர். அவரது குரலின் இனிமையும் காத்திரமும் இன்றும், என்றும் தமிழரின் மனங்களில் நிறைந்திருக்கும். https://www.tamilarul.net/2019/11/Kulasingam.html

  2. உண்மையில் இன்றைய நாளில் மகத்தானவனின் பிறந்த நாளில் தமிழினத்தின் மகத்தானவனை மகத்தானவனின் ஆலயத்தில் ஈவு இரக்கமில்லாதவர்களால் அழிக்கப்பட்ட இந்த நாளை எம் வாழ்வில் என்றும் மறக்க முடியாது ..................இவர் இறைவனுக்கு ,கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ்ந்தார் ,,,,,,,,,,வீர வணக்கம் ஐயா

  3. இறுதிவரை போரிட்டு நிதானமாக கட்டளைகளை வழங்கியபடி தமிழீழ மண்ணை முத்தமிட்ட லெப்.கேணல் விடுதலை 15.11.2007 அன்று படையினருடனான ஏற்பட்ட நேரடி மோதலில் இறுதிவரை போரிட்டு நிதானமாக கட்டளைகளை வழங்கியபடி தமிழீழ மண்ணை முத்தமிட்ட லெப்.கேணல் விடுதலை லெப்.கேணல் ஐெரோமினி/விடுதலை தங்கராசா வினீதா. யாழ்மாவட்டம். முன்னாள் கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி. மாலதிபடையணி தாக்குதல் தளபதி. 1990 களில் இணைந்த ஐெரோமினி தனது ஆரம்ப இராணுவப்பயிற்சியை மணலாற்றில் முடித்தவள் .தொடர்ந்து மேலதிக இராணுவப் பயிற்சியை கிளாலியில் உள்ள மகளிரனி பயிற்சிப் பாசறையில் முடித்த ஐெரோமினி.தொடர்ந்து தொலைத்தொடர்பு சம்பந்தமான பயிற்சிகளையும் முடித்து மகளிர் பட…

  4. மாவீரர் நாள். கார்த்திகை27 ************************ தென்றலாய்,தேமாங்காய் ஈழ தேசத்தின் சுவாசமதாய் உயிர் விதைத்து,உணர்வளித்து உலக முகப் பரப்பில் தமிழீழம் எனப் பொட்டுவைத்த உங்கள் தியாகத்தின் உயிர்நட்ட கோயில்களை என்றும் மறப்போமா? கார்த்திகை மலர் நடுவே கல்லறை தொட்டிலாகும் நீங்கள்.. கண்களைத் திறக்கும் போது தமிழ் ஈழ.. தாயவள் கையணைக்கும் அவளுயிர் காக்க நீங்கள் ஆகுதியானவர்கள்-மீண்டும் அவள் மடி பிறக்கையிலே ஆனந்தமாயிரங்கள். “வீர வணக்கம்” -பசுவூர்க்கோபி-

  5. அமைதியான ஆளுமை, ஆர்ப்பாட்டமற்ற ஆற்றல் - லெப். கேணல் சித்தார்த்தன்.! மட்டக்களப்பபு மாவட்டத்தின் விடுதலைப்புலிகளின் தளப்பகுதி. அடிப்படைப் பயிற்சி முகாம் ஒன்று நிறைவடைந்து புதிய போராளிகள் பல்வேறு முகாம்களுக்கும் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர். அத்தகைய வேளைகளில் இயல்பாகக் காணப்படும் புத்துணர்வும், கலகலப்பும் அவர்களின் முகங்களில் வெளிப்படையாகவே தெரிந்தது. ஆயினும் எமது முகாமிற்கு வரவிருந்த புதிய போராளிகள் அநேகரின் முகங்களில் ஒருவகையான கலக்கத்தை அவதானிக்க முடிந்தது. காரணத்தை ஊகிப்பது அவ்வளவு கடினமல்ல. படைத்துறைப் பயிற்சிப் பிரிவாக செயற்பட இம் முகாம் சற்று வேறுபாடானதுதான். மிகக் கடுமையான விதிமுறைகளுக்கும், விசித்திரமான தண்டனைகளுக்கும் பெயர் பெற்றது. அதேவேளை ஆற்…

  6. பதுங்குகுழி நீ உறங்குமிடம்… நவம்பர் 25, 2020/தேசக்காற்று/வழித்தடங்கள்/0 கருத்து பதுங்குகுழி நீ உறங்குமிடம்… தலை நிமிரமுடியாமல் எதிரி ஏவிய எறிகணைகளால் காடு அதிர்ந்து குலுங்கிக் கொண்டிருந்தது. ஒன்று வெடித்த நொடிப் பொழுதுக்குள் அடுத்தது, அடுத்தது என இடைவிடாதபடி சில ஒரே இடத்திலும் சில தூரப்போயும் வெடித்துச் சிதறின. பச்சைமரங்கள் வெம்மையுடன் அவிந்து கருகிய மணம் அப்பிரதேசமெங்கும் நிறைந்தது. பசுமையாகப் படர்;ந்திருந்த புற்கள் கருகியும், கருகிய புற்களின் மேல் சுழலாய் எழுந்த புகை மண்டலத்தின் கரிபடர்ந்தும் அவ்விடம் சுடுகாடுபோலக் கிடந்தது. முறிந்த மரங்கள் ஒரு புறம். எறிகணைத் துண்டுகளாற் குத்திக் கிழிக்கப்பட்ட பச்சை மரங்கள் இன்னொரு புறமாக அவ்விடம் கொடூர…

  7. லெப். கேணல் மகேந்தி போராளி என்பதற்கு மேலாக, “விடுதலைப் போராட்ட ஞானி” Last updated Jun 9, 2020 மகேந்தி வீரச்சாவடைந்துவிட்ட செய்தி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமாதான காலப்பகுதியில் ஒரு வழமையான பகல்ப்பொழுதில் எம்மை வந்தடைந்தது. செய்தி உண்மையா? பொய்யா? என்ற ஆதங்கத்துடன் உறுதிப்படுத்த முற்பட்ட வேளையில், இல்லை அது உண்மைதான் என்ற கசப்பான யதார்த்தம் உறுதிப்படுத்தப்பட்டு வந்துவிட்டது. மகேந்தி எமது போராட்ட வரலாற்றில் வித்தியாசமானவன். பல்லாயிரம் பேர் போராடிய இந்த மண்ணில், பல்லாயிரம் வீரர்கள் வீரச்சாவடைந்துவிட்ட இந்த மண்ணில், விடுதலைப் போரில், அவர்கள் எல்லோருடனும் பொதுவான இணைப்பில் இணைத்துப்பார்த்துவிட முடியாத அளவிற்கு மகேந்தி வித்தியாசமானவன். மக்கள…

  8. நெஞ்சைவிட்டு அகலாத நினைவுகளில் என்றும் முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி.! Last updated Jun 9, 2020 எந்த விடயத்திலும் கண்டபடி அலட்டிக்கொள்ளாத அமைதியான போராளி. அவளுக்குள்ளே கனன்று கொண்டிருந்த எரிமலையைப் பற்றியோ, உள்மனப் போராட்டங்களையோ, ஆழ்ந்து ஊறுகின்ற மென்மையைப் பற்றியோ நாங்கள் உணர்ந்ததில்லை. எல்லாவற்றையும் தனக்குள் பூட்டிவைத்தது போன்ற அமைதி. தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்கின்ற பண்பு. தான் நெருங்கிப் பழகுகின்ற ஒரு சில போராளிகளுக்கும் மட்டுமே தன்னைப்பற்றி வெளிப்படுத்திய சில தருணங்கள். அவற்றுக்குள்ளே அவளது உறுதியையும் வேகத்தையும் மிகுந்த துணிச்சலையும் மட்டும் அறிந்துகொண்டோம். அதுதான் அவளைக் கரும்புலியாச் சாதிக்கவைத்ததோ. யாழினியின் அக்கா 2ம்.…

  9. மன்னார் களமுனையின் அடம்பன் பகுதி. ''KP 02'' எனக் குறிக்கப்பட்ட காவலரண் பகுதியில் எதிரியின் தாக்குதல் முன்னகர்வொன்று திடீரென ஆரம்பிக்கிறது. 'ராங்கி' மற்றும் கடுமையான எறிகணைச் சூட்டாதரவு என்பவற்றுடன் அந்த முன்னகர்வு ஆரம்பமாகிறது. ஒரு குளத்தின் மண்தடுப்பணையில் அமைக்கப்பட்டிருந்த அந்தக் காப்பரண் எமக்கு முக்கியமானதொன்று. அந்தக் காப்பரண் விடுபட்டால் அந்தப் பகுதியையே நாம் இழக்க வேண்டிவரும். நிலைமைகள் கட்டளைப் பீடத்திற்கு அறிவிக்கப்படுகிறது. சூட்டாதரவு, மீள்வலுவூட்டல் நடவடிக்கைகளுக்குத் தேவையான கால அவகாசம்வரை தாக்குப் பிடிக்க உடனடி ஆதரவு அவசியமாகிறது. ''KP 02' இற்கு உடனே இரும்பை அனுப்புங்கோ," என்று கட்டளைப்பீடத்தில் இருந்த கேணல் கீதன் மாஸ்ரரிடமிருந்து பகுதிப்பொறுப்பாளருக்கு தகவல்…

  10. சிவகுமாரன் - ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகர்த்தா முத்துக்குமார் தியாகி சிவகுமாரன் தனது உடலையும் உயிரையும் தமிழ் மண்ணிற்குக் கொடையாக்கி 41 வருடங்களாகின்றன. அவன் தொடங்கி வைத்த ஆயுதப் போராட்டம் விருட்சமாக வளர்ந்து வந்த நிலையில் பிராந்திய, சர்வதேச வல்லரசுகளின் உதவியுடன் அதுவும் அழிக்கப்பட்டுவிட்டது. ஆயுதப் போராட்டம் தான் அழிக்கப்பட்டதே தவிர தமிழ்த் தேசிய அரசியல் அழிக்கப்படவில்லை. அது ஆழ வேரூன்றிய மரம். இன்று இதனையும் அழிப்பதற்கு அகரீதியாகவும் புறரீதியாகவும் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இந்நிலையில் தியாகி சிவகுமாரன் பற்றிய மீளாய்வு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பதற்கு பெரிதும் உதவக்கூடியதாக இருக்கும். சிவகுமாரனின் பங்களிப்பு பற்றிய மீளாய்வுக்கு தமிழ் மக்களின் அரசியல்…

  11. மாவீரர் நினைவுகள் - உதிரம் கொடுத்து உயிர்காத்தவன் - மித்யா கானவி கப்டன் மணிமாறன்(சிலம்பரசன்) பூ விரியும் ஓசையைவிட மென்மையானது அவனது மனம். எத்தனை சவால்களைக் கடந்து இந்தப் போராட்ட வாழ்வில் வழி நெடுக நடந்திருப்பான். எத்தனை இரவுகள் தூக்கங்களைத் தொலைத்து காயமடைந்த தோழர்களின் காயத்திற்கு மருந்திடுவது மட்டுமன்றி கூடவே ஒரு தாயாகி, கண்ணீர் துடைத்து தலைகோதி, ஆறுதல் தந்திருப்பான். கப்டன் மணிமாறன் (சிலம்பரசன்) நாங்கள் அவனை மணி என்று தான் அழைப்போம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப்பகுதியின் எல்லா நுழைவாயிலிலும் முட்டி மோதி யாழ் கண்டி நெடுஞ்சாலையை கைப்பற்றி வன்னியின் பூகோள ஒருமைப்பாட்டை சிதைத்து போராட்டத்தை கூறுபோடுவதற்காக தொடங்கப்பட்ட இராணுவ …

  12. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில், எந்தவிதமான படைக்கலங்களெனினும் அவற்றின் இயங்குநிலைகள் தடைப்பட்டுப் போகும் வேளைகளில் அவற்றை மறுசீரமைத்து, பூச்சியவழுத் திருத்தம் செய்து, நேர்த்தியான சுடுநிலைக்குக் கொண்டுவரும் சிறந்த போரியல் ஆசானாகவும் எமது விடுதலை இயக்கத்தின் மிகச்சிறந்த முதல்தரக் குறிச் சூட்டாளராகவும் பெருந் தளபதிகளில் ஒருவராகவும் விளங்கியவர் பிரிகேடியர் கடாபி அவர்கள். (மேலதிக குறிப்புகளுக்கு இந்த இணைப்புக்குச் செல்லவும்) அதேபோல், எமது விடுதலை இயக்கத்தின் கடற்புலிகள் அணியில் எந்தவொரு வெளியிணைப்பு இயந்திரமும் இயங்குநிலைத்தடை ஏற்படும்போது, அதனைத் திருத்தம் செய்து, மறுபடியும் இயங்குநிலைக்குக் கொண்டுவரும் வகையில் மிகத் திறமையான வெளியிணைப்பு இயந்திரப் பொறியியலாளனாகச் செயற்ப…

  13. பிரிகேடியர் சொர்ணம் - உதிக்கும் திசையில் உதித்த ஆதவன் இரத்தினம் கவிமகன் தமிழீழத்தின் தலைநகரில் தொடங்கிய 5 ஆம் கட்ட ஈழ யுத்தம் மணலாறு காட்டிடை மேவிய தளபதி பிரிகேடியர் சொர்ணம் தமிழீழத்தின் தலைநகரில் தொடங்கிய 5 ஆம் கட்ட ஈழ யுத்தம் மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் என்று விரிந்து மணலாறு மண்ணிலும் தரித்து நின்ற காலம் அது. அந்தக் காலத்தின் ஒரு நாளில் தாயக தேசத்தை மூடி நின்ற வானம் இருண்டு போய்க் கிடக்கிறது. வானத்திற்கு வெளிச்சமூட்ட முனைந்து தோற்றுப் போன நிலையில் தன்னை முகில் கூட்டங்களுக்குள் மறைத்து மறைத்து எட்டிப் பார்க்கிறது தேய்பிறை. அந்த அழகை ரசித்தபடி நிற்கிறார்கள் சோதியா படையணியின் பெண் போராளிகள். அவர்களின் கரங்கள் திடமாக பற்றி இருந்த துப்பாக்…

  14. புனித இலட்சியப் பிரவாகத்தில் பயணித்து, தமிழீழக்கனவுடன் வித்தாகிய ஆயிரமாயிரம் மாவீரர்களின் வரிசையில் துயில்கொள்ளும் ஒருவன் கப்டன் வாணன். தனது கண்முன்னால் தனக்கும் தனது சமூகத்திற்கும் நிகழ்ந்த அவலங்களின் சாட்சியாக, இந்த இழிநிலை வாழ்க்கை எமக்கு வேண்டாம், எமது சந்ததிக்கும் வேண்டாம் என்ற தெளிவில் பரிணமித்தவன். அந்த அவலங்களின் எதிர்வினையாக, விடுதலை ஒன்றுதான் தீர்வு என முடிவெடுத்துப் பயணித்த போராளி, அதற்காக தன்னை உரமாக்கிய அவனது இருபதாவது நினைவுநாள் இன்று. சுதந்திரப் போராட்டத்தின் பங்கெடுப்பு என்பது ஈர்ப்பு, கவர்ச்சியின் சமன்பாடல்ல. அது சமூகம் மீதான அக்கறையின் வெளிப்பாடாக, இனத்தின் மீதான அடக்குமுறைச் சம்பவங்களின் தொடர்வினையாக, பாதிப்பின் வெளிப்பாடாக உருவாகின்றது. அது வாழ்வி…

  15. தமிழீழ தேசத்தையும், தேசியத்தலைவரையும் நேசித்த "நம்பர் வண்" கரும்புலி லெப். கேணல் பூட்டோ.! இந்தியப் படைகளும் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்து உணர்வாளர்களை வேட்டையாடிக் கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பகுதியில் யூலியனின் தந்தை இந்தியப் படைகளால் கைது செய்யப்பட்டார். பள்ளிக்குள் புகுந்த படையினர் யூலியனைக் காட்டித்தரும் படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். அன்று பள்ளிக்குச் செல்லாத யூலியன் தப்பித்துக்கொள்கிறான். உடனடியாக முஸ்லிம் குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன் மறைமுகமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கிருக்கும் நகைக் கடையொன்றில் தற்காலிகமாகப் பணிக்கு அமர்த்தப்படுகின்றான். முதல் நாள் கடைக்குச் செல்கிறான். அங்கிருக்கும் நாற்காலி அமர்…

  16. 13ம் ஆண்டு நினைவு நாள் இன்று ( 2006ம் ஆண்டு செஞ்சோலை பிள்ளைக‌ள் மீதான‌ விமான‌ தாக்குத‌லில் ப‌லியான‌ பிஞ்சுக‌ளுக்கு க‌ண்ணீர் அஞ்ச‌லி 😓 அந்த‌ நாளை எப்ப‌டி ம‌ற‌ப்ப‌து , ம‌ன‌ம் க‌ல‌ங்கின‌ நாள் அது 😓

  17. (மூன்று நாட்கள் தொடர்ந்த பெரும் சமரில் விடுதலைப்புலிகளின் முதன்மை தளபதிகள், கட்டளைதளபதிகள், தாக்குதல் தளபதிகள், மகளிர் படையணி தளபதிகள் என 700 இற்கும் மேற்பட்ட போராளிகளின் இரத்தத்தில் தமிழர் தேசம் சிவந்த நாட்கள் அவை.. ) வரலாற்று நாயகர்களில் வரலாறுகள் என்றும் எங்களுடன்! புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் அக்கினி சமரில் வீரவரலாறான எங்கள்அங்கினி குஞ்சுகளை நச்சுக்குண்டுகள் கொண்டு இனஅழிப்பினை அழித்த சிங்கள இனவெறியாளர்களின் இனக்கொடூரங்கள் இன்னும் ஓய்ந்துவிடவில்லை அக்கினிகுஞ்சுகளை இன்றும் எங்கள் மனங்களில் இறுக பற்றுகின்றோம...

  18. 1987 ஆம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டிருந்த காலத்தில்இ இவன் யாழ்ப்பாணம் வந்திருந்தான். அதுதான் யாழ்ப்பாணத்திற்கான இறுதிப் பயணம் என்று உணர்ந்திருந்தானோ என்னவோ? உறவினர்கள்இ நண்பர்கள் என்று ஒருவரது வீட்டினையும் தவறவிடவில்லை இவன். அப்போது, பொதுவாக எல்லாத் தாய்மாருக்கும் இருக்கும் எதிர் பார்ப்பே இருந்தது, இவனது அன்னைக்கும். எனக்கு கொள்ளி வைக்கிற கடமை இருக்கடா உனக்கு' என்றார். இவன் அமைதியாகச் சிரித்தான். 'ஏன் வேறை ஆரும் கொள்ளி வைச்சா இந்தக் கட்டை எரியாதோ'? பயணமாகிவிட்டான் மட்டக்களப்புக்கு. ஏனெனில் இந்தியப் படையுடன் போர்தொடங்கிவிட்டது. இனி யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்க முடியாது. மட்டக்களப்பு இவனை எதிர்பார்க்கிறது. அங்கு இவன் சென்ற நாளிலிருந்து, வீரச்சாவெய்திய நாளிற்கு …

  19. மாவீரர் நாள்மரபாகி வந்த கதை November 25, 2020 வைமன் வீதியில் அமைந்திருந்த ஈழநாதம் நாளிதழின் பணிமனைக்கு ஒருமுறை பொ.பாலசுந்தரம் பிள்ளை (பின்னாளில் யாழ்.பல்கலைக்கழக துணை வேந்தராக விளங்கியவர்), வந்திருந்தார். இந்நாளிதழின் ஆசிரியர் பொ.ஜெயராஜைச் சந்தித்த அவர் நாள்தோறும் வெளிவந்த நினைவு­கூருகின்றோம்` என்ற தலைப்பிலான விளம்பரம் பற்றிக் குறிப்பிட்டார். முன்­னைய ஆண்டுகளில் இதே நாளில் வீரச்சாவெய் திய மாவீரர்களின் பெயர்,முகவரி, சம்பவம் முதலான விடயங்கள் அந்தந்த நாளிதழில் வெளிவந்­துகொண்டிருந்தன. அத்துடன் இலங்கைத்­தீவில் தமிழராகப் பிறந்ததனால் சிங்களக்காடையர், படையினர் முதலானோரால் கொல்லப்பட்டோர் பற்றிய விபரங்களும் வெளி­யாகின. இதில் இரண்டாவது விடயம் குறித்தே பேராசிரியர…

  20. மேஜர் சுமி டிசம்பர் 8, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து வரலாற்று நாயகி மேஜர் சுமி / இசையரசி நாடு இருளுமுன்பே காடு இருட்டிவிட்டது; ஆளையாள் தெரியாத கும் இருட்டில் தான் அந்த இடத்திற்கு சுமி அக்காவுடன் நானும் மதிப்பிரியாவும் களமருத்துவப் பொருட்களுடன் போய்ச்சேர்ந்தோம். வழமையாக களமருத்துவத்தில், உபமெடிசின் (sub medicine) நிலையை அமைப்பதென்றால் அந்தப்பகுதி பொறுப்பாளர்களுடனும் ஏனைய கொம்பனிப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான இடத்தை தெரிவு செய்து, சண்டைப்படையணிகள் நிலையெடுக்கும் நேரத்திற்குள் எமக்கான மருத்துவ நிலைகளையும் அமைத்து விடுவோம். ஆனால் இன்று அப்படிச் செய்ய காலம் இடம் தரவில்லை. வவுனியாவிலிருந்து புறப்பட்ட வெற்றி …

  21. உலகெங்கும் தமிழர்களால் உணர்வுபூர்வமாக இன்றைய "யூலை-5 கரும்புலிகள் நாள்" நினைவுகூரப்படுகின்றது. இந்த வேளை, இதுவரை வெளிவராத ஒரு கரும்புலி மாவீரரைப் பற்றிய சிறு குறிப்பை இங்கே பதிவுசெய்கிறேன். சமராய்வுப் பிரிவில் கடமையாற்றிக்கொண்டிருந்த போது 2009 ஆம் ஆண்டு தை மாதமளவில் கரும்புலியாகத் தன்னை இணைத்துக்கொண்டு, ஏறக்குறைய ஒரு மாதத்துக்குள்ளேயே ஒரு வெற்றிகரமான கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு "லெப்ரினன்ட் கேணல் தேனிசை" ஆகத் தன்னை வெடித்து, 23 எதிரிப் படைகளைக் கொன்றொழித்து, தரைக் கரும்புலி மாவீரராக எங்கள் இனத்துக்காகத் தன்னைக் கொடையாக்கிய ஒரு அற்புதமான போராளி தேனிசை. ஆண்டு 2002 அளவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டவர். விடுதலைப் புலிகளின் "#படைய_அறிவியற்_கல…

  22. “நான் வயதானவன்,என்னால இந்தச் சமூகத்துக்கு இனி பலன் ஏதும் இல்லை.” என்னை விட்டிட்டு சின்னப் பிள்ளைகளைக் காப்பாத்துங்கோ” 26/01/2009 அன்று காயமடைந்து உடையார்கட்டு இடப்பெயர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது திருமிகு வே.பாலகுமார் அவர்களின் திருவாய் உதிர்த்த வசனங்கள் இவை! கையிலும் பழுவிலும் அவருக்குக் காயம் ஏற்பட்டிருந்தது. கையில் என்பு முறிவினால் ( compound fracture of forearm bone) ஏற்பட்ட கடுமையான வேதனையையும் தாண்டி தெளிவாக கதைத்துக் கொண்டிருந்தார் அந்தப் பெரிய மனிதர். அவர் அப்படிச் சொல்லிவிட்டார் என்பதற்காக விட்டுவிடமுடியுமா? குன்றாத விடுதலை வேட்கை கொண்ட பெருமதிப்புக்குரியவரை Dr.குயின்ரஷ் ஜீவன் இமானுவேல், Dr.வாமன் தருமரட்ணம் ஆகியோர…

  23. தமிழீழ மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவமானி சத்திர சிகிச்சைமானி கற்கை நெறியினை நிறைவு செய்தவர்.

யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசான் துரைராஜா அவர்கள் பணியாற்றிய காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பணிப்புக்கு இணங்க யாழ் மருத்துவபீடத்தின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களினால் தமிழீழ மருத்துவக் கல்லூரி நீர்வேலியில் ஆரம்பிக்கப்பட்டது. சத்திரசிகிச்சைமானி மருத்துவமானி (Bachelor of Medicine & Bachelor of Surgery) மற்றும் உதவி மருத்துவர்களிற்கான (Assistant Medical Practitioner)கற்கை நெறிகள் என இரண்டு கற்கை நெறிகள் இங்கே பலரும் அறியாத வகையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதில் கிருபா அவர்கள் சத்திரசிகிச்சைமானி மருத்துவமானி(MBBS) கற்கையைத் தொடர்ந்தார். …

  24. குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று! AdminOctober 5, 2021 இலங்கை இந்திய கூட்டுச்சதியை முறியடிக்கபலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல்குமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 34ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். யாழ். மாவட்ட தளபதி லெப்.கேணல் குமரப்பா (பாலசுந்தரம் இரத்தினபாலன் – வல்வெட்டித்துறை,யாழ்ப்பாணம்.) திருமலை மாவட்ட தளபதி லெப்.கேணல் புலேந்திரன் (குணநாயகம் தருமராசா – பாலையூற்று,திருகோணமலை.) மேஜர் அப்துல்லா (கணபதிப்பிள்ளை நகுலகுமார் –சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.) கப்டன் பழனி (பாலசுப்பிரமணியம் யோகேந்திரராசா– வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.) கப்டன் கரன் (வைத்திலிங்கம் மனோகரன் –சுண்டுக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.