- Open Club
- 57 members
- Rules
ரசித்தவை

72 topics in this forum
-
-
வழி சொல்லுங்க..! விஜய் ஆலுக்காஸ் போய் நகை வாங்கச் சொல்லுறாரு... அர்ஜுன் ராம்ராஜ் பனியன் வாங்கச் சொல்லுறாரு... கார்த்தி ப்ரூ காபி குடிக்கச் சொல்லுறாரு... த்ரிஷா மேடம் ஏதோ ஒரு ஆயின்ட்மெண்ட் வாங்கச் சொல்லுது... சூர்யா சிம் கார்டு வாங்கச் சொல்லுறாரு... அசின் தாயி மிராண்டா குடிக்கச் சொல்லுது... பிரபு அண்ணன் கல்யாண் போய் நகை வாங்கச் சொல்லுறாரு... விக்ரம் அண்ணன் மணப்புரம் போய் நகை அடகு வைக்கச் சொல்லுறாரு... ஏங்க நாங்க தெரியாமத்தான் கேக்குறோம்... எல்லாரும் செலவு செய்யத் தான் யோசனை சொல்லுறீங்களே ஒழிய, யாராவது ஒரு ஆள், இப்படித்தாங்க சம்பாரிக்கனுமுன்னு வழி சொல்லுறிங்களா? முதலில் காச…
-
- 0 replies
- 417 views
-
-
1967ல் வெளிவந்த இந்தப் பாடலின் எடுப்பில் மிக அருமையான ஹம்மிங்.. இன்றும் காதில் ரீங்காரமிடுவது இசையமைப்பாளர் எம்.எஸ்.வியின் வெற்றி எனலாம்.. 'ஆபேரி' ராகத்தில் அமைந்த இந்த பாடலை, கீழே இணைத்துள்ள காணொளியில் திருமண வாத்தியக் குழு நன்றாக வாசித்துள்ளார்களென எண்ணுகிறேன். கேட்டுப் பாருங்களேன்..! 😍 ஒப்பீடுக்கு அந்த அட்டகாசமான, மிக இனிமையான பாடல்..😍
-
- 0 replies
- 802 views
- 1 follower
-
-
உழவன் மகன்(1987) திரைப்படத்தில் வரும் இந்தப் பாடல்..! இந்த காணொளியில் பாடும் மொத்த குழுவினரும் நன்றாக பாடியிருந்தாலும், பாடகரின் உடல்மொழி செம காமெடி.. பார்த்தால் புரியும்..!
-
- 0 replies
- 899 views
- 1 follower
-
-
"ரோட்ல.. பஸ்ல.. தியேட்டர்ல.. எங்கே போனாலும், ஒங்க இம்சை, தாங்க முடியலைடா..!" இன்று 'K டிவி'யில் இந்த நகைச்சுவை காட்சியை பார்த்ததில் புன்னகைத்தேன்..! அருமையான நகைச்சுவையை உருவாக்கியவருக்கு பாராட்டுக்கள்..!!
-
- 0 replies
- 502 views
-
-
இன்று(15-01-2020) மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் கெத்துக்காட்டி, வீரர்களை கலங்கடித்த காளை..! ரசிக்கத்தக்க காணொளி..!!
-
- 0 replies
- 401 views
- 1 follower
-
-
எப்பொழுது இந்த பாடலை கேட்டாலும் மனமும், மேனியும், நிச்சயம் குளிர்ச்சியை உணரும்..
-
- 0 replies
- 349 views
- 1 follower
-
-
“சார் ! இந்த ரோடு தாம்பரம் போகுங்களா ?" வார்த்தை பாதியும், வறுமை மீதியுமாய் வந்து சேர்ந்த வார்த்தைகள் சட்டென என்னை திரும்பி பார்க்க வைத்தது, கெச்சலான தேகம், உழைத்து உழைத்தே உள்ளே போன கண்கள், அடி பைப்புகளில் துவைத்து கட்டியே அழுக்கேறிய வேட்டி சட்டை, கையில் ஒரு பிளாஸ்டிக் பை சகிதம் ஒரு பெரியவர் நின்றிருந்தார். மறுபடியும் ஒரு முறை கேட்டார், "தம்பி இந்த ரோடு தாம்பரம் போவுமுங்களா ?” “ஐயா, இது கோயம்பேடு ரோடு, ரைட் சைடு போகுது பாருங்க, அதான் கிண்டி, தாம்பரம் ரோடு, எதித்தாப்ல போய் நில்லுங்க, தாம்பரம் பஸ் வரும் ! " சரி என தலையாட்டிவிட்டு, எதிர்புற ரோட்டில் நுழைந்து, பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் கிண்டியை நோக்கி விறு விறு வென நடக்க துவங்கினார், "அய்யா ! அடுத்த பஸ்ஸ்டாப் ர…
-
- 0 replies
- 659 views
-
-
பின்னிரவில் ஏகாந்தமாய் அமரும் சந்தர்ப்பங்களில், மெல்லிய விளக்கொளியில் பழைய பாடல்களை கேட்பதுண்டு.. ! வார இறுதியான நேற்றிரவு, அப்படி கேட்ட பாடல்களில் கீழ்க்கண்ட பாடல்களை ரசிக்க முடிந்தது..! மிக்ககுறைந்த இசைக்கருவிகளோடு சிரத்தையாய் பழைய பாடல்களை இசைத்து, நம் மனக்கண் முன்னே ரசித்த அக்கால படத்தின் பிம்பங்களை நிழலாடவிட்டுள்ளனர் இந்த குழுவினர்.. ** பழைய பாடல்களை ரசிப்பவர்களுக்கு மட்டுமே இப்பதிவு, பொறுமையாக ரசிக்கவும்.. "தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும் கண்கள் உறங்கிடுமா..?" "எனை ஆளும் மேரி மாதா... துணை நீயே மேரி மாதா...!"
-
- 0 replies
- 439 views
-
-
வெகு எளிமையாக, அருமையாக இந்த விளம்பரத்தை உருவாக்கியுள்ளனர்.. அந்த வீடியோ கலைஞருக்கு ஒரு சபாஷ்!
-
- 0 replies
- 575 views
-
-
குக்கிராமத்தில் பிறந்து, பெரிய நகரங்களின் முகமறியாது வளர்ந்து, பதின்ம வயதில் 70 களில் சென்னைக்கு முதன் முறையாக தனியாக சென்று ஓரிரு நாட்கள் தங்க நேரிட்டது. சென்னையை பற்றி பலரும் சொன்னது, படங்களில், செய்திகளில் படித்தது என அனைத்தும் ஞாபகத்தில் வந்து மிகுந்த முன்னெச்சரிக்கையாக இருக்க மனம் தூண்டியது. ஆட்டோவில், மாநகரப் பேருந்துகளில் செல்லும்போது அடிக்கடி பர்ஸை தொட்டுப்பார்த்துக்கொள்வது வழக்கம்.. நகரப் பகுதிகளைப் பற்றி தெரியாததால் 6 மணிக்கெல்லாம் உறவினரின் வீட்டுக்கு திரும்பிவிடுவதும் வழக்கம். அதேமாதிரி இக்காணொளியில் வரும் பெண்ணின் சென்னையை பற்றிய மனநிலையை திரையில் பார்த்தவுடன், என் பழைய இளமைக்கால நினைவுகள்..புன்முறுவல்கள்.. ரொம்பவும் ரசிக்கும்படியாக திரைமயமாக…
-
- 0 replies
- 457 views
-
-
தகவல் தொழிற்நுட்பம் அதிவேகத்தில் முன்னேறியவுடன் பல விடயங்களை உடனுக்குடன் நேரலையாக கையடக்க கருவிகளில் பார்த்து அறியக்கூடியதாக உள்ளது. முன்பெல்லாம் எமக்கு ஈழத்து கலைஞர்கள் யாரென்றே தெரியாது. இலங்கை வானொலியில், அல்லது தமிழ் நாட்டில் வரும் ஊடக துணுக்குகளில் மட்டுமே அறியக்கூடியதாக இருந்த ஈழத்து கலைஞர்களின் முகம், தற்பொழுது பலரும் பார்த்து அறியக்கூடியதாக உள்ளது. அவ்வகையில் முன்பு காட்பெர்டில்(Hot Bird) வந்துகொண்டிருந்த "படலைக்கு படலை" காணொளியை சில வருடங்களுக்கு முன் பார்த்து வந்தேன். அத்தொடரில் கவர்ந்த கலைஞர்களான 'சிறீதரன் மாணிக்கம்' மற்றும் 'பாஸ்கி' ஆகியோரின் இயல்பான ஈழத்து தமிழில் நகைச்சுவை ரொம்ப பிடிக்கும். அந்த கலைஞரின் நேர்முக பேட்டியை இன்று ரசித்து பார்த்தே…
-
- 0 replies
- 361 views
-
-
'நீட்'ட நான் வச்சுக்கிறேன்.. 'சீட்'ட நீ வச்சுக்கோ..!
-
- 0 replies
- 397 views
-
-
இன்று தற்செயலாக இந்தக் கவிதையை யாழ்க் களத்தில் பார்க்க நேர்ந்தது. இதை ரசிகை என்ற அம்மணி பதிந்திருந்தார். என்னைக் கவர்ந்திருந்ததால் மீள் பதிவு இது..! ரசிகைக்கு நன்றி. அன்னை ஒரு பிறவி தருவாள் அடுத்தடுத்து பல பிறவி.... உன் மேல் ஆசை கொண்டவள் தருவாள். மண்ணில் தன் வாழ்வு முடியும் வரை உன்னை சுத்தி சுத்தியே வந்து.. உனக்கு முன்னமே தான் சாக நினைப்பாள் தன்னை உனக்கு தந்தவளை... தரணியே நீதான் என்று வழ்பவளை.. தருணம் கிடைக்கும் போதெல்லாம் நாய் பேய் என்று நாக்கிழந்து பேசும் மனிதா ஒரு வேளை அவளுக்கு முதலாய் உன் ஆவி பிரிந்தால் உண்மையாய் உனக்காய் அழ உலகில் ஒருத்தி அவள் மட்டுமே இருப்பா…
-
- 0 replies
- 875 views
- 1 follower
-
-
மீன்கொடி பறந்தபாண்டிய நாட்டின்வான்புகழ் மதுரைஎங்கள் ஊர் ! வேப்பம்பூ எங்கள் பூ வீரம்தான் எங்கள் வாழ்வு வெற்றி ஒன்றே எங்கள் உயிர் ! இறைவன் என்றாலும் குற்றம் குற்றமே என்று நின்ற ஊர் எங்கள் மதுரை ! அபலை என்றாலும் நீதி கிடைக்கும் என்று நிறுவிய கண்ணகியின் காதை நிகழ்ந்த நகர் எங்கள் மதுரை ! வேலை சரியாகச் செய்யவில்லைஎன்றால் சொக்கன் என்றாலும் சாட்டைச் சொடுக்கு கொடுப்போம் நாங்கள்! உலகப் பொது மறை திருக்குறளை உரசிச் சரிபார்த்த சான்றோர் சங்கம் எங்களூர் தமிழ்ச் சங்கம் ! நீதிக்குத் தலை கொடுத்த நெடுஞ்செழியன் ஆண்ட மதுரை எங்கள் மதுரை ! முத்துடைத்து எங்கள் நாடு முகம் சுழிக்கா விருந்து படைக்கும் பெயருடைத்து மல்லிகை வாசமாய் மணம் ப…
-
- 0 replies
- 474 views
-
-
இதர் ஆவோ...! தமிழ் நாட்டில் அந்நியநாட்டு மொழியாம் 'இந்தி'யை திணிக்க முயலுகையில், நம் பார்போற்றிய கான்ராக்டர் "நேசமணி", இந்தி சொல்லித்தரும் பாங்கை இங்கே பார்க்கலாம்..!
-
- 0 replies
- 800 views
-
-
சில மாதங்களுக்கு முன் கிளிநொச்சி சந்தையில் படமாக்கப்பட்ட நாட்டுப்புற பாடல் காணொளியை பார்த்தது முதல் அடுத்து ஏதாவது ஈழத்து மண் வாசனையுடன் கிராமிய பாடல் எதுவும் இணையத்தில் உள்ளதா..? என தேடியபோது கிடைத்தது கீழேயுள்ள பாடல். பால்ய வயதில் கிராமத்து வயல்களில், ஓடைகளில் தோழர்களுடன் சட்டையில்லாமல் விளையாடிய எனது அனுபவம்.. கனாக் காலங்கள்..! இப்பொழுது கிராமத்திற்கு சென்றால் ஏக்கத்துடன் நினைத்துக் கொள்வதுண்டு. அக்காலத்தை இரைமீட்டிய பாடல் இது..!
-
- 0 replies
- 615 views
-
-
இரைமீட்டல்.. பொறியியற் கல்லூரியின் இறுதியில் படிக்கும்பொழுது... காலை ஏழே முக்கால் மணி வாக்கில் மாயவரத்திலிருந்து வரும் புகைரத வண்டி, சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று பல்கலைக்கழக மாணவர்களை இறக்கிவிட்டுச் செல்லும்.. அடுத்த சில நொடிகளில் கடலூரிலிருந்து வந்து நிற்கும் மாணவர்களின் ரயில்.. ரயில் நிலையத்தின் எல்லையிலேயே எம் பொறியியற் கல்லூரி அமைந்துள்ளது. காலை 08:10 க்கு கல்லூரி வகுப்புகள் ஆரம்பிக்கும்.. ஆனால் நாங்கள் 07:30 மணிக்குள் விடுதியின் உணவகத்தில் உணவருந்திவிட்டு, விடுதியின் வாசலில் 07:50 மணிக்கு சரியாக வந்து அமர்ந்துவிடுவோம்..! அப்புறமென்ன..? கல்லூரி மாணவ, மாணவிகள் பட்டாளம், பல்கலைக்கழகத்தை நோக்கி வண்ண வண்ண மாணவியரோடு ஊர்வலமாக செல்லும்.. It'…
-
- 0 replies
- 1.3k views
-
-
வேலை களைப்பிற்கிடையே நேற்று பார்த்து ரசித்த பாடல்.. பொடுசுகளின் குரலும், உடல் பாவங்களும் அசத்தல்..!! 💯 இறுதியாக இந்த பாடல் வரிகள்.. "கட்டுப்பாட்ட மீறாமே.. சட்ட திட்டம் மாறமே.. காத்திருக்க வேணும், கொஞ்ச காலம் வரையில் பிறகு கல்யாணம் ஆகிவிட்டால், ஏது தடை? ஏது தடை? மாமா மாமா மாமா..!" ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்.. ஒல்டு ஈஸ் கோல்ட்..! 😍
-
- 0 replies
- 348 views
-
-
வாட்ஸ் அப்பில் வந்த அருமையான செய்தி: ஐந்து மாநிலங்களின் கழிவுகளை சுமந்தாலும் கங்கைதான் புனித நதி, காவிரி அல்ல! ஐவரைக் கலந்தாலும் பாஞ்சாலிதான் பத்தினி, கண்ணகி அல்ல! பல மொழிகள் கலந்திருந்தாலும் இந்தியும், சமற்கிருதமும்தான் உயர்ந்தவை, தமிழ் அல்ல! உலகின் முதல் மாந்தனாக இல்லாத போதும் ஆரியனே உயர்ந்தவன், தமிழன் அல்ல! மனித வாழ்வியலுக்கான உலகப் பொதுமறையாக போற்றப்பட்டாலும் மகாபாரத, இராமாயண புராணப் புரட்டுகளே உயர்ந்தவை, திருக்குறளோ, சங்க இலக்கியங்களோ அல்ல! எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ஆரிய இந்துத்துவா கழிசடைகள் ஆளும் இந்தியாவின் பார்வை இதுதான்! இது மாறாது, தமிழினம் இதை உணர்ந்துள்ளது! ஆகையால்தான் தமிழ்த்தேச விடுதலையே தமிழ்த்தேசியம் என்று இறுதி செய்துள்ளது ந…
-
- 0 replies
- 382 views
-
-
ஏறக்குறைய 47 வருடங்களுக்கு முன் சொந்த கிராமத்தை விட்டு கல்லூரி வாசலை தொட்ட நேரம் வந்த இந்தப்படம் "அலைகள்" (1973). அதிகம் கவனத்தை பெறாவிட்டாலும், இதில் இடம்பெற்ற இந்தப் பாடல் தமிழகத்திலும், ஈழத்திலும் மிகப் பிரபலமானது.. களைப்புடன் வீடு தேடி வந்து படுக்கையில் விழும்போது, இம்மாதிரி பாடல்களே மனதிற்கு அருமருந்து..! தமிழில் கர்நாடக நடிகர், விஷ்ணுவர்த்தன்(நடிகை பாரதியின் கணவர்) நடித்த முதல் படம் என நினைக்கிறேன். பாடகர் ஜெயச்சந்திரனின் இனிமையான குரலில், பொன்னென்ன பூவென்ன கண்ணே..! உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே.. ஒரு கல்யாண பெண்ணாக உன்னை, புவி காணாமல் போகாது பெண்ணே..!
-
- 0 replies
- 868 views
- 1 follower
-
-
என் இதயத்தில் தாக்குதல்.. இந்தோனிசியாவின் பாப் பாடகி 'சிட்டா சிட்டட்டா'வின் பாடலுக்கு நடனமாடும் குழந்தைகள்..! So cute..
-
- 0 replies
- 389 views
-