• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

About This Club

தமிழ், தமிழகம் பற்றியவை, ரசித்தவை !

 1. What's new in this club
 2. பராக்... பராக்... நம்ம... மதுரை, ராஜவன்னியன்... களத்தில், இறங்கி விட்டார்.
 3. நானும் ரெண்டு நாளா தூக்கமில்லாமல் இந்த பாடல் வரிகளுக்கான பொருளை தேடுகிறேன்..! தெளிவில்லை..உங்களுக்கு ஏதேனும்..?
 4. இன்று உச்சாநீதிமன்ற தீர்ப்பால் தமிழகத்தில் நாளை முதல் "கொரானா டான்ஸ்"..!
 5. அபுதாபிக்கு சொந்தமான எதிகாட்(Etihad) ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் 380 விமானம் தயாரிக்கும் இந்தக் காணொளி...! விமானத்தின் ஒவ்வொரு பாகங்களும் பல்வேறு பகுதிகளிலிருந்து குறிப்பிட்ட தொழிற்சாலைக்கு கொண்டுவந்து பொருத்தி முழு விமானமாக வெளிவந்து பறந்து செல்வதை விபரித்திருப்பது மிக அருமை.. யாழ்க் களத்தில் துலூஸ் அருகே வசிப்பவர், இந்த ஏர்பஸ் இன்டஸ்ட்ரீஸ் பற்றி அதிகம் தெரிந்திருந்தால் விளக்கலாமே..?
 6. அடுத்திருப்பது துபை எமிரேட்ஸ் ஏர்பஸ் 380யுடன் ஜெட்மேன்களின் சாகசம்..!
 7. "ரயிலோடுது, யாழ் ரயிலோடுது.." எப்படி "மயிலோடுது.. வான் மயிலோடுது.." என மருவியது என மலைக்கிறீர்களா..? எல்லாம் 'உல்டா' தான்..! பால்ய வயதில் கிராமத்து தெருக்களில் கோலி, கிட்டிப்புல் விளையாட்டுகளை விளையாடும்பொழுது ஆகாயத்தில் சத்தத்துடன் பறக்கும் விமானத்தை பார்த்து அதிசயிப்பது வழக்கம். பெரியாளானதும் 'ஒரு நாளாவது விமானத்தில் பறந்துவிட வேண்டும்' என்பது கனவாகவே இருந்தது. காலசுற்றலில் அக்கனவு பலமுறை நிறைவேறிவிட்டது.. ஏர்பஸ் 380 யில் சிலறை பறந்தாச்சு, கெலிகாப்டரில் சிலமுறை.. ஆனால் கன்கார்டில் பறக்க முடியவில்லை.. இந்த விமான ஈர்ப்பு சிறுவயதிலேயே ஆழமாக பதிந்துவிட்டதால், விமான தொழிற் நுட்பங்களை ஆர்வத்துடன் யுடுயூபிலும், இணைய குறிப்புகளிலும் சிரத்தையாக பார்த்து ரசிப்பதுண்டு.. அப்படி பார்த்து ரசித்த சில காணொளிகளை பகிர்கிறேன்..! முதலில் நம்ம 'ஈழ்ஸ்' வசிக்கும் ஊரில்..!! ஒரே சமயத்தில் இரு விமானங்கள் தரையிறங்கும் (Parallel landing) அதிசயம்..!
 8. அமெரிக்கா 100 வருடம் டாலரை உறிஞ்சி எடுத்துவிட்டு 2014 இல்த் தான் பனாமாவிடம் கொடுத்துள்ளனர்.
 9. சுவெஸ் கால்வாய் இதே மாதிரி இல்லாவிட்டாலும் ஆபிரிக்க கண்டத்தை சுற்றி போகிற நாட்களையும் செலவையும் குறைக்கிறது.
 10. நான் இந்தக் கால்வாயின் பல காணொளிகளை பார்த்துள்ளேன். மிக 'த்ரில்லிங்'கான பயண அனுபவமாகவே இருக்கும். கரையிலிருந்து 5 கி.மீ தொலைவில் நங்கூரமிட்ட கப்பலில் ஒருநாள் முழுவதும் தங்கியிருக்கிறேன். காலடியில் பூமி சுத்துவது போன்ற உணர்வுகளால் எனக்கு தலை சுத்தலும், வாந்தியும் வருவதுபோல இருந்ததால் மறுநாள் "போதும்டா சாமி ..!"என கரைக்கு திரும்பிவிட்டேன். சிலருக்கு கப்பல் பயணம் ஒத்துக்கொள்ளாது என நினைக்கிறேன். நன்றி, ஈழப்பிரியன்.
 11. வன்னியரே கப்பலில் வேலை செய்த காலங்களில் இந்தக் கால்வாய்களில் பல தடவை பயணித்திருக்கிறேன். அந்த அனுபவத்தை நேரே பார்ப்பதற்கு மிகவும் கொடுத்து வைத்தவன்.கப்பல் வாழ்வுக்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
 12. காணொளியில் விளக்கம் புரிந்திருக்குமென எண்ணுகிறேன். இக்கால்வாய் மட்டும் சாத்தியப்படாவிட்டால், நியுயார்க்கிலிருந்து, ஈழப்பிரியன் இருக்கும் சான்ஃப்ரான்சிஸ்க்கோவிற்கு கப்பலில் முழு தென் அமெரிக்க கண்டத்தையும் சுற்றிச் செல்ல இருபது நாட்களுக்கு மேல் பயண நேரம் பிடிக்கும். இதற்கான பொருட்செலவு, நேர விரயம், கடலில் அபாயங்கள் மிக அதிகமாக இருக்கும். பிரான்ஸ் நாட்டு பொறியாளர்களால் 1881ல் ஆரம்பித்த இத்திட்டம் 1894ல் பாதியில் கைவிடப்பட, இந்த திட்டத்தை, பின்னர் அமெரிக்க பொறியாளர்களால்1904ல் மறுபடியும் முன்னெடுத்து தொடங்கப்பட்டு 1914ல் முடிவுற்று கப்பல் போக்குவரத்து பாவனைக்கு திறக்கப்பட்டது. பனாமா கால்வாய் மூலம் கப்பல் போக்குவரத்தால் ஈட்டும் வருமானம் பனாமா நாட்டின் பொருளாதாரதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
 13. இந்த காணொளியில் முன்று உயர நிலைகளிலுள்ள தொட்டி போன்ற அமைப்பில் தண்ணீரை நிரப்பி கப்பலை உயர்த்தி கடத்தி ஏரியில் விட்டு, பின்னர் ஏரியின் பரப்பு முடிந்ததும் மறுபுறம் கடலில் கப்பலை விட தண்ணீர் தொட்டி அமைப்புகளில் உயரத்தை கீழிறக்கி கடத்துவதை காணலாம்.
 14. அமெரிக்காவின் கீழே, அட்லாண்டிக் கடல்-பசிபிக் கடல் இரண்டுக்குமிடையே அமைந்துள்ள பனாமா நாட்டில் கட்டப்பட்டுள்ள இந்த பனாமா கால்வாய் பொறியாளர்களின் சாதனைக்கு ஒரு எடுத்துக்காட்டு. சுற்றுவழி கடல்பாதையை தவிர்க்க, நாட்டின் குறுக்கே கடல்மட்டத்திலிருந்து 85 அடி உயரத்தில் அமைந்துள்ள மலையின் ஏரியின் இருபுறமும் மிகுந்த உயிர்பலி, சிரமங்களுக்கிடையே கால்வாய்கள் வெட்டி மூன்று தொட்டி போன்ற நிலைகளில் தண்ணீர் நிரப்பி, கப்பல்களை உயர்த்தி ஓடவிட்டு மறுபுறம் கடத்தும் தொழிற்நுட்பம் வியக்கத்தக்கது.. காணொளியை பார்த்தால் எளிதாக புரியும்..!
 15. படத்தின் ஆரம்பமே பதற்றத்துடன்ஆரம்பித்தது. பாத்திர அறிமுகங்கள் அதிரடியாக இருந்தது. விஜயபாஸ்கர் "என்ட்ரி" செம மாஸ். அடுத்து, அடுத்து அறிமுகமான பீலா, தப்லிக் எல்லாம் டெம்போவை கூட்டியது. அப்புறம் கோயம்பேடு காய்கறி சந்தையில் கொரானாவை இலவச இணைப்பாக கொடுத்து....கதை பாதியில் முடியாமல் பார்த்துக் கொண்ட பட குழுவினரை பாராட்டியே ஆக வேண்டும். படம் நெடுகிலும் டைரக்டர் செம மாஸ் காட்டிக்கொண்டே இருந்தார். போலிசின் துரத்தல்களும், விளாசல்களும் ட்ரோன் "ஷாட்களும்" பார்வையாளர்களை சீட்டின் நுனியில் அமரவைத்தது. டிவி விவாதங்களும் புள்ளி விபரங்களும் திகில் கிளப்பின.கடைசியில் அதே போலீசாரை சாராய கடையில் வாட்ச்மேனாக போட்டது காமெடியின் உச்ச கட்டம். இடைவேளையின் போது நல்ல ட்விஸ்டு வைப்பார் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தபோது, டாஸ்மாக் சீனை வைத்து படத்தின் டெம்போவை குறைத்து விட்டார். தயாரிப்பாளர் பைனான்ஸ் பிரச்சனையால் படத்தை எப்படி நகர்த்துவது என்று தெரியாமல் குழம்பி போய்விட்டது நன்றாக தெரிகிறது. நாளாக நாளாக, படத்தை எப்படியாவது முடிக்கவேண்டும் என்று.., அவரே குழம்பி போய் கதையை நகர்த்துகிறார். படத்தின் கிளைமாக்ஸ் என்ன என்று தெரியாமல் பார்வையாளர்கள் உள்ளேயும் இருக்கமுடியாமல், வெளியேயும் போக முடியாமல் தவிப்பது தவிர்க்க முடியாதது ஆகி விட்டது. மொத்தத்தில் 50 நாட்கள் ஓடிய படம் ...சாராய பிஸினஸ் செய்யலைனா....தமிழ் நாடே நடு தெருவில் நிற்கும் என்பதையும் அப்படி ஒரு பிச்சைகார தனமா நாட்டை வைத்துள்ளார்கள் என்பதையும்.. மக்களுக்கு உணர்த்தியது..! - படித்ததில் ரசித்தது.
 16. நல்ல செய்தி... இதுதான், தமிழக மக்களின்.. உயிருக்கு பாதுகாப்பானது. இப்ப... தி.மு.க. தலைவர் ஸ்ராலின், சாராய ஆலை நடத்திக் கொண்டு இருக்கும்... ரி. ஆர். பாலு. போன்றவர்கள், நேற்று.. மதுக்கடைகளை திறக்காதே.. என்று, போராட்டம் நடத்தியதியற்கு.. கிடைத்த வெற்றி..... என்று, ஒரு பக்கத்தால், கிளம்பி வருவார்கள். அதனையும்... நாம், சகித்துத் தான்... ஆக வேண்டும்.
 17. நீதிமன்ற நிபந்தனைகள் மீறல்: டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு. நீதிமன்ற நிபந்தனைகள் பின்பற்றப்படாததால் டாஸ்மாக்(TASMAC) மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது என்றும், ஆன்லைனில் விற்று டோர் டெலிவரி செய்யலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மே 7-ம் தேதி முதல் மதுக்கடைகளைத் திறக்க அனுமதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மே 6-ல் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் 'தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும், ஒருவருக்கு ஒரு பாட்டில் மட்டுமே வழங்க வேண்டும், மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் ஒருவருக்கு மது வழங்க வேண்டும். அதற்கு மதுபானம் வாங்குபவரின் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்' என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தது. 'அவை மீறப்படும் பட்சத்தில் கடைகளை மூட உத்தரவிட நேரிடும்..!' எனவும் எச்சரித்து அனுமதி அளித்தது. இந்நிலையில் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், அதுவரை நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிடக் கோரியும் மக்கள் நீதி மய்யக் கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளரும், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான மௌரியா வழக்குத் தொடர்ந்தார். அவரது மனுவில், “மதுபானத்துக்காக குடிமகன்கள் அண்டை மாநிலங்களுக்குச் செல்லக் கூடும் என்பதால் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதாக அரசு கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. ஊரடங்கு அமலில் உள்ளபோது அனுமதியின்றி அண்டை மாநிலங்களுக்குச் செல்பவர்களைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை. கரோனா பரவாமல் தடுக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் எனக் கூறி வரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மதுவை விற்க அனுமதிப்பது நோய் பாதிப்பை அதிகரிக்கும்'' என்று குறிப்பிட்டார். இந்த மனு நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா ஆஜராகி வாதிட்டார். நேற்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு முறையாகப் பின்பற்றப்படவில்லை. மே 6-ம் தேதி அன்று நீதிமன்ற உத்தரவில் தனி மனித இடைவெளி, கூட்டம் சேரக்கூடாது, 5 பேருக்கு மேல் நிற்கக்கூடாது என்ற உத்தரவு மீறப்பட்டதாகக் கூறினார். அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் கார்த்திக் ராஜா தாக்கல் செய்தார். மேலும் அவர் வாதிடுகையில், ''தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. கூட்டம் அதிகமாகக் கூடியது. தனி மனித இடைவெளி கடைப்பிடிக்க முடியாதபோது மதுபானம் அத்தியாவசியப் பொருட்களின் கீழ் வராத நிலையில் எப்படி அனுமதிக்கப்படுகிறது. குற்றச்செயல்கள் அதிகம் நடக்கின்றது. காய்கறி மளிகைப்பொருட்கள் ஆன்லைனில் விநியோகிப்பது போல் மதுபானங்களை விநியோகிக்கலாம்'' என்றார். ஆன்லைனில் 2 பாட்டில்களுக்கு மேல் கொடுக்கக்கூடாது, பில் தரவேண்டும். ஆதார் எண் அவசியம், தனி மனித இடைவெளி, கும்பல் சேரக்கூடாது, இவை மீறப்பட்டால் கடைகளை அடைக்கும்படி உத்தரவிட நேரிடும் என்று நீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது சுட்டிக்காட்டப்பட்டது. அதேபோல வழக்கறிஞர் ஜி. ராஜேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் தற்போது டாஸ்மாக் கடைகள் திறந்து இருப்பதால் தனிமனித இடைவேளை பின்பற்றவில்லை எனவே ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார் குன்றத்தூர் சேர்ந்த வழக்கறிஞர் திலீபன் தாக்கல் செய்த வழக்கில் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் இதே போல சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளை மூட கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்கிலும் வழக்கிலும் மதுக்கடைகளை திறக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அமர்வு நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படக்கூடாது என்றும், ஆன்லைன் மூலம் டோர் டெலிவரி செய்யலாம் என்றும் டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை மே.14-க்கு ஒத்திவைத்தது. இதனால் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது. தமிழ் இந்து
 18. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு : உயர் நீதிமன்றம் தமிழகத்தில் 'பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட' சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..! 'டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை' என தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், 'தனிநபர்களுக்கு மட்டும் மது விற்கப்படும். இணையவழியில் விற்பனை செய்ய முடியாது. அதே நேரத்தில் மது விற்பனையின்போது பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படும்' என்று தமிழக அரசு கூறியிருந்தது. இதைத் தொடர்ந்து, 'டாஸ்மாக் கடைகள் திறப்பதற்குத் தடையில்லை' என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேசமயம், 'கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்' என்று நிபந்தனைகள் விதித்திருந்தது. இந்நிலையில், 'உயர்நீதிமன்ற நிபந்தனைகள் முறையாக பின்பற்றப்படவில்லை' என்று தொடரப்பட்ட வழக்கில், 'தமிழகத்தில் திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூட' சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், 'மே 17 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது' என்றும் 'ஆன்லைனில் மட்டும் மது விற்பனையைத் தொடரலாம்' என்றும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தினமணி
 19. தமிழர்கள் நாங்கள் ஒருநாளல்ல இருநாளல்ல பல நூறு வருடங்களாக அரசை இழந்து, உரிமையை இழந்து, மரபுவழி மாறி அடிமைகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் நாங்கள் ஐரோப்பியருக்கு அடிமைகளாக வாழ்ந்துகொண்டிருந்தோம். பெரும் போற்றுதலுக்கு உரியவனாக விளங்கும் தமிழ் அரசன், ராச ராச சோழன்கூட தமிழ்மரபைத் தொடரமுடியாது ஆரியகலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டு வாழும் துர்ப்பாக்கியத்திற்கு உள்ளானவனே. இந்த வரலாற்றின் ஊடாகவே உங்கள் விரக்தியையும் நான் நோக்குகிறேன்.
 20. அப்படியானால் 1800 காலப்பகுதியில் கொலரா போன்ற கொள்ளை நோய்கள் வந்து எமது தாயகத்தில் பெருமளவு மக்கள் இறக்க என்ன காரணம்? போலியோவால் பெருமளவு சிறு குழந்தைகள் பாதிக்கப்பட்டதற்கு என்ன காரணம்? அப்போது எமது தாயகத்தில் இயற்கைக்கு விரோதமாக மக்கள் வாழ்ந்தார்களா? இரண்டாவது பகுதி உங்களது பதிலில் பூமி தாய், சக்தி என்பதெல்லாம் வெறும் வெட்டிப் பெருமைகள் மட்டுமே. இங்கு எனது பெண்பிள்ளை தனியே இரவு கடைசித் தொடரூந்தில் பல முறை பாதுகாப்பாக வீடு திரும்பி உள்ளார். நீங்கள் கூறும் தாயாக சக்தியாக பெண்களை வழிபடும் நாடுகளில் எனது பெண் பிள்ளையை தனியே செல்ல ஒரு நாள் கூட விட முடியாத நிலை தான் அங்கு நிலவுகிறது. ஆகவே தாயாக மதிக்கிறோம் சக்தியாக மதிக்கிறோம் என்று வெறுமனே புலுடா விடுவதை நிறுத்தி சக மனிதராக நண்பியாக நினைத்தாலே போதும்.
 21.