வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
622 topics in this forum
-
அமெரிக்காவின் முன்னனி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, சீனாவில் அமைக்கப்பட்டு வரும் பிரமாண்ட ஆலையின் முதல் பிரிவில் சோதனை முறையிலான உற்பத்தியை தொடங்கியுள்ளது. ஷாங்காய் நகரில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் டெஸ்லா வாகன உற்பத்தி ஆலை 3 பிரிவுகளாக கட்டப்பட்டு வருகிறது. மிக பிரமாண்டமாக கட்டப்படும் ஆலையின் முழு பணிகளும் 2021ம் ஆண்டு இறுதியில் நிறைவடையும் என கூறப்படுகிறது. இதில் முதல் பிரிவில் திட்டமிட்டதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக சோதனை முறையில் வாகன உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. வாகன உதிரி பாகங்கள், பெயிண்ட உள்ளிட்ட அனைத்தும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள 3 பிரிவுகளிலும் பணிகள் முடிந்து, வாகன தயாரிப்பு முழுவீச்சில் தொடங்கும்பட்சத்த…
-
- 0 replies
- 282 views
-
-
நம் கைகளிலுள்ள பணம் தொடர்பில் அறிவோமா? அனுதினன் சுதந்திரநாதன் இவ்வுலகில் பணமானது பல்வேறு வகை பெயர்களுடன் பல்வேறு பரிணாமங்களில் பலமில்லியன் பேர்களின் கைகளில் கொட்டிக் கிடக்கிறது. அவற்றில் எவை எல்லாம் பரிமாற்றத்துக்கு உகந்தவை ? எவை எல்லாம் சட்டச் சிக்கல் நிறைந்தவை? என்பது தொடர்பில் சிறிதாவது நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான், நம் கைகளில் உள்ள பணம் கறை படிந்ததா? இல்லையா? என்பதை உணர்ந்து செயற்பட முடியும். இன்றைய நிலையில், நாம் பணத்தைக் கொண்டு எதனை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலைக்கு வந்துவிட்டோம். அந்தளவு தூரத்துக்கு மக்களின் பணத்தேவையும் பணம் மீதான மதிப்பும் அதிகரித்து விட்டது என்றே சொல்ல வேண்டும். சாதாரணமாக பணமானது சேவை வழங்கல், உற்பத…
-
- 0 replies
- 292 views
-
-
சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான காக்னிசண்ட் டெக்னாலாஜி சொல்யூஷன்ஸ், 2020க்குள் உலகளவில் சுமார் 7,000 பேரை பணியில் இருந்து விலக்கவுள்ளதாக வெளியான தகவல் சென்னையில் உள்ள ஐ.டி ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களின் உள்ளடக்கத்தைக் கண்காணித்து அவற்றில் உள்ள இன, மத, மொழி ரீதியான வன்முறைக்கு வித்திடக்கூடிய கருத்துகளை நீக்குவது, தனிநபர்களின் அந்தரங்க உரிமைகளை மீறும் வகையிலான பதிவுகளை நீக்குவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் 'கண்டெண்ட் மாடரேஷன்' துறையில் இருந்து விலக உள்ளதாகவும், அடுத்து வரும் காலாண்டுகளில் மூத்த நிலையில் உள்ள 7,000 ஊழியர்கள் படிப்படியாக பணியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்த…
-
- 0 replies
- 611 views
-
-
தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ஆயிரத்து 580 கோடி ரூபாயை ஜெர்மனி ஒதுக்கீடு செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், டெல்லியில் வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். நகர்ப்புறங்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமைப் போக்குவரத்திற்காக, இந்தியாவும் ஜெர்மனியும் கூட்டாக இணைந்து செயல்படுவதாகக் குறிப்பிட்டார். இதற்காக 1 பில்லியன் டாலர்கள் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க 200 மில்லியன் யூரோக்கள் அதாவது ஆயிரத்து 580 கோடி ரூபாயை ஜெர்மனி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித…
-
- 0 replies
- 634 views
-
-
அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற ஃபிட்பிட் (Fitbit) நிறுவனத்தை சுமார் 14 ஆயிரத்து 840 கோடி ரூபாய்க்கு (2.1 billion dollars) கூகுள் விலைக்கு வாங்கியுள்ளது. ஃபிட்பிட் நிறுவனத்தின் கைகடிகாரம் போன்று காட்சியளிக்கும் உடல்நிலை கண்காணிப்பு சாதனங்கள் மிகவும் புகழ்பெற்றதாகும். ஏற்கெனவே இத்தகைய சாதன விற்பனையில் அதிக கவனம் செலுத்தி வந்த கூகுள், ஃபாசில் (Fossil ) நிறுவனத்திடம் இருந்து ஸ்மார்ட்வாட்ச் தொழில்நுட்பத்தை 282 கோடி ரூபாய்க்கு அண்மையில் விலைக்கு வாங்கியது. இதைத் தொடர்ந்து, இச்சாதனை விற்பனையில் புகழ்பெற்ற ஃபிட்பிட் நிறுவனத்தை கூகுள் விலைக்கு வாங்கியுள்ளது. வலைதளத்தில் இதுகுறித்த அறிவிப்பை கூகுளின் கிளை நிறுவனங்களில் ஒன்றான கூகுள் எஸ்விபி (Google SVP ) வெளியிட…
-
- 0 replies
- 361 views
-
-
உலகின் சிறந்த தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் முதல் பத்து இடங்களுக்குள் தேர்வாகியுள்ளனர். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் பொது மேலாண்மை இதழான, ஹார்வர்டு பிஸினஸ் ரிவ்யூ, 2019ஆம் ஆண்டின் சிறந்த 100 தலைமை செயல் அதிகாரிகளின் பட்டியலை தயார் செய்து வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்களில் ஆய்வு செய்து வெளியாகியுள்ள இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் முதல் பத்து இடங்களுக்குள் தேர்வாகியுள்ளனர். அந்த வகையில், அடோப் நிறுவனத்தை சேர்ந்த சாந்தனு நாராயண் 6ஆவது இடமும், மாஸ்டர்கார்டு நிறுவனத்தை சேர்ந்த அஜய் பங்கா 7ஆவது இடமும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தை சேர்ந்த சத்ய நாதெல்லா, 9ஆவது இடமும் பிடித்துள்ளனர். அமெரிக்க தொழில்நு…
-
- 2 replies
- 424 views
-
-
#1: கந்தசாமி திருக்குமார் புலம்பெயர் தமிழனின் சாதனை வாழ்க்கை. தனது மண்ணையும் மக்களையும் கூறும் பெருந்தன்மை. … 18 வருடங்களாக நியூயோர்க்கில் தோசை- சிறு வண்டியில்பணமாக வென்மோவா(Venmo) என கேட்பது இவரின் மாற்றங்களுக்கு மாறும் வெற்றியை காட்டுகின்றது. மனைவியுடனும் மக்களுடனும் புலம்பெயர்ந்தவர். இன்று மகள் ஒரு மிக செல்வாக்கான கொலம்பியா பல்கலைக்கழகத்தில், பொருளாதாரத்தில் இரண்டு பட்டங்கள் பெற்றுள்ளார்.
-
- 19 replies
- 4.2k views
-
-
சியாடெல்: அமேசானின் நிறுவனரும் அதன் செயல் அதிகாரியுமான (சிஇஓ) ஜெப் பிஜோஸ், உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை இழக்கிறார். பணக்காரர் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் பில்கேட்ஸ். ஆன்லைன் வர்த்தகத்தில் பிரபலமான அமேசான் நிறுவனத்தின் காலாண்டு நிதி நிலை அறிக்கை வெளியானது. இதில், அதனுடைய வருவாய் குறைந்துள்ளது. இதனால், பங்குகள் முதலீட்டில் சுமார் 7 பில்லியன் டாலர் (ரூ.49,619 கோடி) இழந்துள்ளார். கடந்த வியாழனன்று பிற்பகல் பங்குச்சந்தை வர்த்தகத்தில் அமேசானின் பங்குகள் விலை 7 சதவீதம் அளவுக்கு சரிந்தன. இதனால் அதன் நிறுவனர் ஜெப் பிஜோஸின் சொத்து மதிப்பு 103.9 பில்லியன் டாலராகக் குறைந்தது. (ரூ.7,36,500 கோடி) அதேவேளையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸின் …
-
- 0 replies
- 668 views
-
-
ஜெர்மனியை சேர்ந்த தனியார் நிறுவனம் ஏர் டாக்சியை மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. விமானத்தை போல் இறக்கை, 36 மின்மோட்டார்கள் மற்றும் பேட்டரி உதவியுடன் இயங்கும் வகையில் லிலியம் என்ற நிறுவனம் 5 பேர் அமர்ந்து செல்லக்கூடிய ஏர் டாக்ஸியை உருவாக்கியிருந்தது. ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டதும், நேரே மேலே எழும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏர் டாக்ஸி, மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வானில் பறந்து சோதனை முயற்சியில் வெற்றிப்பெற்றுள்ளது. இதையடுத்து அதே மாடல் ஏர் டாக்ஸியை உருவாக்கி, 2025ம் ஆண்டுக்குள் வணிக ரீதியிலான சேவையை தொடங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை எட்டும் நோக்கிலும், தடையில்லா சான்று பெறவும் …
-
- 0 replies
- 417 views
-
-
மேக்ஸ் ஜெட் ரக விமானங்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் போயிங் நிறுவனம் மேலும் பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பை சந்திக்க நேரிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. போயிங் நிறுவனத்தின் தயாரிப்பான 737 MAX ரக விமானங்களை பல்வேறு விமான போக்குவரத்து நிறுவனங்கள் வாங்கி பயன்படுத்தி வந்த நிலையில், 2 விமானங்கள் விபத்தில் சிக்கி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தின. இதனால் போயிங் நிறுவனத்திற்கு கெட்ட பெயர் ஏற்பட்டதோடு, அதன் விளைவாக பெரும் இழப்பையும் சந்தித்தது. இந்நிலையில், சோதனையின்போதே மேக்ஸ் ரக விமானங்களின் இயக்கத்தில் பிரச்சனைகள் இருந்தது, இரு போயிங் ஊழியர்கள் தகவல் பரிமாற்றத்தின் மூலம் தெரியவந்திருப்பதாக செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக போயிங் நிறுவன பங்குகள் 5.7 சதவீதம் அளவுக்கு ச…
-
- 0 replies
- 477 views
-
-
2024இல் அமெரிக்காவை பின்தள்ளும் இந்திய பொருளாதார வளர்ச்சி 2024ஆம் ஆண்டு உலக அளவில் வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் முதல் 20 நாடுகளின் பட்டியலை சர்வதேச நாணய நிதியம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்காவை பின்தள்ளி, இந்தியா முன்னேறும் என கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் வெளியீட்டில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு உலக அளவில் வளர்ச்சி என்பது குறைவாகவே இருக்கும். பொருளாதாரமும் மந்தமாகவே இருக்கும். இந்த ஆண்டு உலக அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் வளர்ச்சியில் 3 சதவீதம் சரிவு ஏற்படலாம். இது உலகின் 90 சதவீதம் பகுதியை பாதிக்கும். வளர்ச்சி விகித பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் என்றாலும், சர்வதேச பொருளாதார வளர்ச்சியின் சரிவு க…
-
- 0 replies
- 442 views
-
-
பாரீசில் நடைபெறும் சர்வதேச நிதி கண்காணிப்பு கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் விதிக்கப்பட்டுள்ள சாம்பல் நிற பட்டியலில் இருந்து அந்நாடு அடர் சாம்பல் நிறப் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. அடர் நீலம் என்பது பாகிஸ்தானுக்கு நிலைமையில் முன்னேற்றம் காண்பதற்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பாகும். இதனால் பாகிஸ்தானுக்கு உலக வங்கி, ஐ.எம்.எப். ஐரோப்பிய யூனியன் போன்றவை நிதியளிக்க மறுக்கலாம். இதையடுத்து கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்பட்டால் அதற்கு சர்வதேச அளவில் நிதி பெற முடியாத நெருக்கடி உருவாகும். தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தீவிரவாதிகளை கைது செய்யவும் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய நிதி ஆதாரங்களைத் தடு…
-
- 0 replies
- 426 views
-
-
Tuesday, October 15, 2019 - 6:00am இலங்கையில் புதிதாக 5000 தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் பிரான்சின் நிதி நிறுவனமான AFD நிறுவனம் இலங்கை வங்கிக்கு 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நுண் கடன் நிதி உதவியை வழங்கியுள்ளது. இது தொடர்பான உடன்படிக்கை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு தொழில் தொடர்பான அனுபவங்களை வழங்குவதுடன் துறையின் வளர்ச்சிக்கும் முயற்சியாளர்கள் நிதியை பெற்றுக்கொள்வதில் எதிர் நோக்குகின்ற சிரமங்களை தீர்க்கும் வகையில் இந்த முதலீடு மேற்கொள்ளப்படுவதாக இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 261 views
-
-
பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஆபத்து இந்தியாவுக்கு உலக வங்கி எச்சரிக்கை: வங்கதேசம், நேபாளத்தை விட பின்தங்கியதாக அறிக்கை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 6 சதவீதமாக குறைத்து மதிப்பீடு செய்துள்ள உலக வங்கி, இந்திய பொருளாதாரத்துக்கு பெரும் ஆபத்து உள்ளது என எச்சரித்துள்ளது. வங்கதேசம், நேபாளத்தை விடவும் இந்தியா பின்தங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் பலவற்றிலும் பொருளாதார மந்தநிலை காணப்படுகிறது. இந்த பாதிப்பு இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5.8 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்திருந்தது. ஆனால், இந்த வளர்ச்சி உண்மையில் 5 சத…
-
- 1 reply
- 479 views
-
-
அமெரிக்காவை பின்தள்ளி முன்னேறிய சிங்கப்பூர் ஒரு நாடு பொருளாதார ரீதியில் முன்னேற அதன் ' போட்டித்திறன் ' ஒரு கணிப்பாக பார்க்கப்படுகின்றது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் அமெரிக்க இந்த விடயத்தில் முன்னேறி இருந்தது. தனது தேசிய மொத்த உற்பத்தி திறனில் (GDP) அதிக வீதத்தை தேசிய ஆராய்ச்சியில் செலவிடுகின்றது. ஆனால், இன்னொரு காரணியான போட்டித்திறனில் சிங்கையூர் அமெரிக்காவை பின்தள்ளி முன்னேறி உள்ளது.
-
- 1 reply
- 419 views
-
-
2019-ம் ஆண்டு இந்தியாவின் செல்வந்தர்களுக்கு சவாலான காலம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஃபோர்ப்பஸின் 2019 வியாபார அதிபர்களின் மொத்த செல்வத்தில் 8 சதவீதம் குறைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர்கள் வறுமையை குறைக்க உதவிகிறார்கள். அவர்கள் மரியாதை மற்றும் ஊக்கத்திற்கும் தகுதியானவர்கள் என்று கூறியிருந்தார். ஃபோர்பஸ் இந்திய பணக்கார பட்டியல் 2019 ல் தொழிலதிபர் கெளதம் அதானி 8 இடங்கள் தாண்டி 15.7 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இரண்டாவது பணக்கார இந்தியராக திகழ்ந்தார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது 51.4 பில்லியன் டாலர்களை தக்க வைத்து முதல் பணக்கார இந்தியராக பட்டியலில் உள்ளார். அசோக் லேலண்ட் உர…
-
- 0 replies
- 352 views
-
-
சீனாவுக்கும் தமிழகத்திற்கும் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தகம் இருந்ததாக இன்று நடைபெற்ற சந்திப்பின்போது மோடி தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஜி. ஜின்பிங் - இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் முறைசாரா சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையை அடுத்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. நேற்று மாலை 5 மணிக்கு அர்ஜுனன் தபசு பகுதிக்கு வந்த சீன ஜனாதிபதியை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் இருவரும் உரையாடியபடி அங்குள்ள சுற்றுலாப் பகுதிகளை பார்த்து ரசித்தனர். கலைநிகழ்ச்சிகளை யும் கண்டுகளித்தனர். பின்னர் இரவு 7.30 மணி அளவில் அங்கேயே சீன ஜனாதிபதி ஜின்பிங்குக்கு இரவு விருந்து விழங்கப்பட்டது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரம…
-
- 1 reply
- 376 views
-
-
"தோமஸ் குக்கின்" அனைத்துக் கிளைகளையும் ஹேய்ஸ் ட்ராவல்ஸ் திறக்கவுள்ளது தோமஸ் குக் நிறுவனத்தின் 555 கிளைகளும் ஹேய்ஸ் ட்ராவல் நிறுவனத்தால் வாங்கப்படவுள்ளன. அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் இருந்து தோமஸ் குக்கின் அனைத்துக் கிளைகளும் ஹேய்ஸ் ட்ராவல் நிறுவனத்தால் வாங்கப்படவுள்ளன. கடந்த மாதம் தோமஸ் குக் நிறுவனம் நிதிநிலைமையால் இயங்கமுடியாமல் மூடப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றிய 2,500 பணியாளர்களும் வேலையை இழந்திருந்தனர். சன்டர்லான்டைத் தளமாகக் கொண்ட ஹேய்ஸ் ட்ராவல் நிறுவனத்தின் நிர்வாகத்தில் அனைத்துக் கிளைகளும் உடனடியாகத் திறக்கப்படும் என்று அதன் தலைவர் ஐரீன் ஹேய்ஸ் (Irene Hays) தெரிவித்துள்ளார். ஏற்கனவே தோமஸ் குக் நிறுவனத்தின் 600 பணியாளர்களுக்கு…
-
- 0 replies
- 334 views
-
-
தீபாவளிக்காக புத்தாடை, செல்போன் உள்ளிட்ட பல வகை நுகர்வோர் பொருட்களை இந்திய மக்கள் வாங்கி குவித்ததில், வெறும் ஆறு நாட்களில்(செப்29-அக்4) ஆன்லைன் சந்தையில் ரூ.19,000 கோடிக்கு பொருள்கள் விற்பனையாகி உள்ளன என ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் கூறுகின்றன. கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் பொருளாதார சரிவு ஏற்பட்ட காரணத்தால் மக்களின் வாங்கும் திறன் குறைந்துவிட்டது என கூறப்பட்ட நிலையில் ரூ.19,000 கோடிக்கு பொருள்களை வாங்க பணம் எங்கிருந்து வந்தது என சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன. இந்தியா பொருளாதார சரிவில் இருந்து மீண்டுவிட்டதா? பண்டிகை காலத்தில் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துவிட்டதா என கேள்விகள் எழுகின்றன. சென்னையை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஆனந்த்…
-
- 1 reply
- 511 views
-
-
'இத்தாலி எடுத்த முடிவு' கணிசமான அளவுக்குச் செலவைக் குறைக்க இரு அவைகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்திருக்கிறது இத்தாலி. இதற்குச் சாதகமாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். படத்தின் காப்புரிமை EPA இத்தாலி கீழ் அவையில் இப்போது 600 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை 400ஆகக் குறைகிறது. அதுபோல செனட்டர்கள் எண்ணிக்கை 315லிருந்து 200ஆகக் குறையும். இதனை தம் தேர்தல் வாக்குறுதியாகக் கூறி இருந்தது ஃபைவ் ஸ்டார் இயக்கம். இது இப்போது ஆளுங்கட்சி கூட்டணியில் முக்கிய அங்கன் வகிக்கிறது. இதன் மூலமாக அடுத்த பத்து ஆண்டுகளில் ஒரு பில்லியன் ஈரோ பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்கிறது அக்கட்சி. ஆனால்,…
-
- 0 replies
- 690 views
-
-
எமர்ஜென்ஸி ஃபண்டு நிதியை, ஒரே நாளில் உருவாக்குவது என்பது கஷ்டமான காரியம். ஆனால், குறிப்பிட்ட ஆண்டுகளில் சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்தால் சேமிக்க முடியும். இன்றைய சூழலில், வேலையிழப்பு பிரச்னைதான் முதன்மையான பேச்சாக இருக்கிறது. ஏனெனில், நம் நாட்டின் பொருளாதார மந்த நிலையால் யாருக்கு எப்போது வேலை போகும் என்றே சொல்ல முடியாத சூழ்நிலை. சம்பளத்தை மட்டுமே நம்பி பல லட்சம் குடும்பங்கள் இங்கே இயங்கிக்கொண்டிருக்கும்போது, திடீர் வேலையிழப்பு அந்தக் குடும்பங்களைத் திக்குமுக்காடச் செய்துவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை. அதுமட்டுமில்லாமல், உடல்நலம் சரியில்லாமல் போவது, விபத்தில் சிக்கி சில மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டிய நிலை ஏற்படுவது போன்ற அவசரச் செலவுகள்…
-
- 0 replies
- 291 views
-
-
கிளர்ந்தெளும் தென்கிழக்காசியாவின் இணையப் பொருளாதாரம் உலகில் அதிகம் ‘இணைக்கப்பட்டவர்கள்’ தென்னாசிய மக்கள் தென்கிழக்காசியாவின் இணையப் பொருளாதாரம் கூகிள் மற்றும் சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான ரெமாசெக் (Temasek), பெய்ன்அண்ட் கோ (Bain & Co) ஆகியவற்றின் அறிக்கையின்படி, இணையம் தென்னாசிய பிராந்தியத்தின் பொருளாதாரத்தை அதி வேகமாக மாற்றி வருகிறது என அறியப்படுகிறது. சிங்கப்பூர், கோலாலம்பூர், பாங்கொக், மனிலா, ஜாகர்த்தா என்று எந்த நகரங்களிலுமுள்ள மெற்றோ ரயில்களை எடுத்தாலும் கைகளில் மொபைல்களைத் துளாவிக்கொண்டிருக்காத மனிதர்களைக் காண்பதரிது. வலையுலகம் அந்தளவுக்கு வாழ்வெங்கும் பரிணமித்திருக்கிறது. தென்னாசியர்களே இன் று உலகத்தில் அதிகம் இணைக்க…
-
- 0 replies
- 316 views
-
-
ஐரோப்பிய பொருட்களுக்கு வரி விதிக்க அமெரிக்காவுக்கு அனுமதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் 7.6 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரி விதிக்க அமெரிக்காவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலக வர்த்தக அமைப்பினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போயிங் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசாங்கம் சட்டவிரோதமான முறையில் மானியம் வழங்கி வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தி வந்தது. அதேபோன்று எயார் பஸ் ஏரோ நொட்டிக்ஸ் நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் மானியம் வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தி வருகின்றது. இதற்கு பதிலடியாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்கா தொடர்ந்தும் எச்சரிக…
-
- 0 replies
- 320 views
-
-
படத்தின் காப்புரிமை C.Umapathi Image caption தேனீர் தயாரிக்கிறார் சுப்ரமணியன். அடுப்பில் கொதிக்கும் பாலில் ஆவி பறக்கிறது. காற்றில் தேனீரின் மனம் கமழ்கிறது. சிறு நகர தேனீர்க் கடைகளுக்கே உரிய முறையில் முந்தைய நாள் தூக்கத்தை முகத்தில் மிச்சம் வைத்துக் கொண்டு ஒரு கூட்டம் தேனீரை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. விழுப்புரம் மந்தக்கரையில் இருக்கிறது அந்த தேனீர்க் கடை. மக்கள் கூடுகிற பழைய நகரின் பிரபலமான திடல் அது. தாள லயத்துக்கு ஆடுகிற நடனக் கலைஞரைப் போல தேனீரை ஆற்றிக்கொண்டிருக்கிறார் பெரியவர் சுப்ரமணியன். ராவணன் தேனீர்க் கடைக்கு இதோ புதிதாக ஒரு வாடிக்கையாளர் வருகிறார். "ஐயா உங்களுக்கு குளம்பியா, தேனீரா," கனீரெனக் கேட்கிறார் சுப்ரமணியன். …
-
- 0 replies
- 260 views
-
-
(இராஜதுரை ஹஷான்) நாட்டின் நிதி நிலவரம் தொடர்பில் தன்னுடன் நேரடி விவாதத்திற்கு வருமாறு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார். கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் யாவும் பயனற்றதாகவே காணப்படுகின்றது. தங்களின் அதிகாரத்தையும், ஆட்சி பெருமைகளையும் தக்கவைத்துக் கொள்வதற்காகவே பாரிய தேசிய நிதி செலவிடப்பட்டு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த அபிவிருத்திகள் ஏதும் தேசிய வருமானத்தை ஈட்டும் விதமாக அமையவில்லை என்றும் அவர் சுட்டிகாட்டினார். நல்லாட்சி அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ள அரச முறை கடன்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மங்கள சமரவீர கடந்த வாரம் வெளியிட்ட ஊடக அறிக்கை தொடர்பில…
-
- 0 replies
- 258 views
-