வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
ஒரு காலத்தில் இன்ஜினீயரிங் என்பது இளைஞர்களின் கனவாகவும், அவர்களுக்கு மரியாதையையும் சம்பளத்தையும் அள்ளித்தரும் படிப்பாகவும் பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது இன்ஜினீயரிங் படித்தவர்களுக்கு சமூகத்திலும் கம்பெனிகளிலும் 'மவுசு' குறைந்திருக்கிறது. எலெக்ட்ரிக்கல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் படித்த கரூரைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர், கரூர் பேருந்துநிலையம் அருகில் உள்ள கடையில் டீ ஆத்துகிறார். பிரபல கம்பெனிகளில் பணிபுரிந்த அவருக்கு, மாதம்தோறும் 15,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைக்காமல் போக, தன் தந்தை நடத்தி வந்த, டீ மற்றும் கூல்ட்ரிங்ஸ் கடையைப் பொறுப்பேற்று திறம்பட நடத்தி வருகிறார். அவரைச் சந்தித்தோம். அட்டகாசமான ஒரு டீ கொடுத…
-
- 0 replies
- 899 views
-
-
இலங்கையில் இன்றுவரை பெரும்பான்மை மக்கள் மின்சார வசதி இன்றி வாழுகிறார்கள். மின்சாரம் சகல மக்களுக்கும் கிடைத்தால் அவர்களின் வாழ்க்கை தரம் உயரும். இந்த நாட்டில் பெரும்பாலான மின்சாரம் நீர்வலுவை கொண்டே பிறப்பிக்கின்றது. ஆனால், நீரோ அருகிவருகின்றது. எமது மக்களுக்கு மாற்று மின்சார வழிகளை தருவது அவரக்ளின் பொருளாதார வலுவை உயர்த்தும் ================================================ இலங்கை மின்சார சபை அதிகாரிகள், மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன இணைந்து இலங்கை மின்சார சபைக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இதுவரையில் வருடாந்தம் 80 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மின்சாரத்தை பயன்படுத்துபர்களின் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. …
-
- 6 replies
- 752 views
-
-
70,000 கார்களை மீளப்பெறுகிறது வொல்வோ நிறுவனம் வொல்வோ கார்களில் தீப்பிடிக்கக்கூடிய ஆபத்து இருப்பதனால் பிரித்தானியாவில் 70,000 கார்களை மீளப்பெறுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. தொழில்நுட்பத் தவறு காரணமாக, அரை மில்லியனுக்கும் அதிகமான டீசல் வாகனங்கள் உலக அளவில் மீளப்பெறப்படுவதாக வொல்வோ நிறுவனம் தெரிவித்துள்ளது. சுவீடன் கார் உற்பத்தி நிறுவனமான வொல்வோ தெரிவிக்கையில்; மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் இயந்திரத்தின் பிளாஸ்ரிக் பகுதி உருகி சிதைந்துவிடும் என்றும் சிலவேளைகளில் தீப்பிடிக்கக்கூடிய ஆபத்து உள்ளது என்றும் கூறியுள்ளது. இந்த பிரச்சினையானது கடந்த ஐந்து ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட சில கார்களில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் பாதிக்கப்பட்ட வாடிக்கையா…
-
- 0 replies
- 277 views
-
-
டிஸ்னி நிறுவனத்துக்குப் போட்டியாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை, குறைந்துகொண்டே வருகிறது. ஒரு தொழிலில் போட்டியே இல்லையென்றால், அதுவும் அது கலைத் துறையாக இருந்தால், அங்கே படைப்பாற்றல் குறையத்தானே செய்யும்?! Walt Disney Company எந்தவொரு வணிகமும் ஒரு தனி முதலாளியின் கையில் இருந்தால், அந்த வணிகம் சார்ந்த அத்தனை முடிவுகளும் அந்த முதலாளியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். அவர் வைப்பதுதான் சட்டம், அவர் நிர்ணயம் செய்வதுதான் விலை, அவர் ஏற்படுத்துவதே அந்தப் பொருள் அல்லது சேவைக்கான தேவை என்றாகிவிடும். இன்றைய சூழலில் வணிகமயமாக்கப்படும் கலைகளுக்கும் இது பொருந்தும். குறிப்பாக, கோடிகள் புரளும் திரைத்துறைக்குப் பொருந்தும். கலைத்துறையில் தனி முதலாளியின் ஆதிக்…
-
- 0 replies
- 411 views
-
-
இலங்கையில் தளம் அமைக்கிறது சீனாவின் இன்னுமொரு நிறுவனம்! சினோபெக் எனப்படும் சீனாவின் பெற்றோலிய மற்றும் இரசாயனவியல் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் நிறுவனமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த நிறுவனம் Fuel Oil Sri Lanka Co Ltd என்ற பெயரில் அம்பாந்தோட்டையில் செயற்படவுள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் ஊடாக கப்பல்கள் மற்றும் மின்உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் பிரதான கடல்வழிப் பாதையில் செல்லும் கப்பல்களுக்கு, எரிபொருள் விநியோகங்களை மேற்கொள்வதே எமது முக்கிய நோக்கமென சினோபெக் தெரிவித்துள்ளது. பிராந்திய நலன்களுக்காக இலங்கையை குறிவைத்து செயற்படுவதாதக விமர்சிக்கப்படும் ம…
-
- 0 replies
- 647 views
-
-
இரண்டாவது காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மிகக் குறைந்த வேகத்தில் செல்கிறது. 1990களுக்குப் பிறகு சீனாவில் பொருளாதார வளர்ச்சி வேகம் இவ்வளவு குறைவாக இருப்பது இப்போதுதான் என்பதை அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் சீனாவின் பொருளாதாரம் கடந்த ஆண்டைவிட 6.2 சதவீதம் வளர்ந்துள்ளது. வளர்ச்சியைத் தூண்டும் வகையில் செலவீடுகளை ஊக்குவித்து, வரிக் குறைப்புகளையும் அறிமுகப்படுத்தியது சீனா. அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் சீனாவின் வணிக நலன்களையும், வளர்ச்சியையும் பாதித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 6.4 சதவீதமாக இருந்த சீனாவின் வளர்ச்சி அடுத்த காலாண்டில் வேகம் குறைந்து 6.2 ஆகியிருக்கிறது. இந்த புள…
-
- 1 reply
- 439 views
-
-
அமேசான் தள்ளுபடி விற்பனை அமேசான் தனது வருடாந்தர தள்ளுபடி விற்பனையை தொடங்கி உள்ள இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான அமேசான் ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ஜெர்மனியில் 2000 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் உள்ள ஊழியர்கள் ஆறு மணி நேர போராட்டத்திற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அமேசான் தொழிற்சங்கம் கூறுகிறது. அதிக பணி சுமைதான் இந்த வேலை நிறுத்தத்திற்கு காரணமென்று கூறப்படுகிறது. https://www.bbc.com/tamil/global-48999296
-
- 0 replies
- 217 views
-
-
நாட்டின் பொருளாதாரமானது 4 முதல் 6 வீதத்திற்கு இடைப்பட்ட ஸ்திரமான மட்டத்தில் இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். இதேநேரம், தற்போது வட்டி வீதங்களும் குறைந்திருப்பதைக் அவதானிக்க முடிவதாகவும், அதற்கமைய வைப்புகள் மற்றும் கடன் மீதான வட்டி வீதத்தை குறைக்குமாறும் வர்த்தக வங்கிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் சுற்றுலா விருந்தகங்களில் கூடுதலான சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதனால் நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்கும் நோக்கில் மத்திய வங்…
-
- 3 replies
- 1.4k views
-
-
பெய்ஜிங், (சின்ஹுவா), ஷங்காயிலுள்ள அமெரிக்க வர்த்தக சபையின் (American Chamber of Commerce - AmCham Shanghai) தலைவரான கெர் கிப்ஸுக்கு சீனாவில் அமெரிக்க வர்த்தகம் தொடர்பில் சகலதும் தெரியும். 'சீனாவில் அமெரிக்க வர்த்தகத்தின் குரல்' என்று பிரபல்யமான 'அம்ஷேம் ஷங்காய் ' பெரும்பாலும் ஷங்காயில் இயங்குகின்ற 1500 அமெரிக்க கம்பனிகளிலிருந்து 3000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. உறவுகளைக் கட்டியெழுப்பும் வாய்ப்புக்களை வழங்குவதன் மூலமாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை பலப்படுத்துவதை அது நோக்கமாகக் கொண்டிருக்கிறது. "ஒட்டுமொத்தமாக, அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் சீனாவில் மிகவும் நன்றாக செயற்பட்…
-
- 0 replies
- 213 views
-
-
ஐரோப்பாவையும், சீனாவையும் இணைக்கும் 2000 கிலோமீற்றர் நீளம் கொண்ட நெடுவீதியை நிர்மாணிப்பதற்கு ரஷ்யா அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஐரோப்பிய எல்லையில் இருந்து ரஷ்யா, கசகஸ்தான் எல்லை ஊடாக சீனா வரையில் இந்த பாதை நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிக்கான ரஷ்யாவின் பிரதமர் டிமிட்ரி மெட்விடேவ் அனுமதி வழங்கியுள்ளார். அரச மற்றும் தனியார் கூட்டு வேலைத்திட்டமாக இந்த பாதை நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்காக 9.4 பில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதை நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர், சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான பிரதான சரக்கு பரிமாற்று பாதையாக அமையும் என்று கூறப்படுகிறது http://www.hirunews.lk/tamil/220004/ஐ…
-
- 1 reply
- 531 views
-
-
ஆசிய அபிவிருத்தி வழங்கி கடந்த ஆண்டு இலங்கைக்கு 540.91 மில்லியன் டொலர்களை பல்வேறு வழிகளில் நிதியாக வழங்கியுள்ளது. இது 2017ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 13.6 சதவீதம் அல்லது 86.33 மில்லியன் டொலர்கள் குறைவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு 627.30 மில்லியன் டொலர்கள் நிதியாக வழங்கப்பட்டுள்ளன. அரசத்துறை மற்றும் அரச சார்பற்ற துறை ஆகிய இரண்டு வழிகளிலும் இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அரச துறைக்காக வழங்கப்பட்ட 505.97 மில்லியன் டொலர்கள் என்பதும், 2017ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 121.33 மில்லியன் டொலர்கள் குறைவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.hirunews.lk/tamil/business/220005/இலங்கைக்கு-540-91-மில…
-
- 0 replies
- 368 views
-
-
அமெரிக்காவின் மன்ஹட்டானில் இருந்து ஜான் எஃப் கென்னடி விமான நிலையம் வரையான வாடகை ஹெலிகாப்டர் சேவையை பிரபல வாடகை கார் நிறுவனமான Uber நிறுவனம் தொடங்கியுள்ளது. மன்ஹட்டான் நகரில் இருந்து ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்துக்கு இயக்கப்படும் இந்த ஹெலிகாப்டர் 8 நிமிடங்களில் சென்றடையும். ஒரு முறை பயணத்துக்கு 200 முதல் 250 டாலர் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு ஸ்டாப்பிலிருந்து அருகிலிருக்கும் இன்னொரு ஸ்டாப்பிற்கு செல்ல இந்திய மதிப்பில் 14 ஆயிரம் ரூபாய் ஆகும். தற்போது காரில் அந்தத் தொலைவைக் கடக்க குறைந்தது ஒரு மணி நேரம் ஆகிறது. சில சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் 2 மணி நேரம் கூட ஆகிறது. ஆனால் ஹெலிகாப்டரில் சில நிமிடங்களில் பறந்துவிடலாம். நியூயார்க்கில் வாட…
-
- 0 replies
- 341 views
-
-
அண்மைய காலத்தில், இலங்கையில் வளர்ச்சியடைந்து வரும் புத்தம்புதிய வணிகமாக, இலத்திரனியல் வணிகங்கள் மாறியுள்ளது. பாரம்பரிய வணிகங்கள் கூட, தமது வணிகச் செயற்பாடுகளுடன் இலத்திரனியல் முறை வணிகச் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து செல்லவேண்டிய தேவையை, இந்த அபரீதமான இலத்திரனியல் துறையிலான வளர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, புத்தாக்க முயற்சியாளர்களின் அதீத வரவுக்கும் அவர்களது வெற்றிக்கும், இந்த இலத்திரனியல் வணிக முறைமை இன்றியமையாதவொன்றாக மாறியுள்ளது. அதுமட்டுமல்லாது, நிதியியல் ரீதியான பெரும்பாலான வணிகச் செலவீனங்களை, இந்த இலத்திரனியல் வணிகம் குறைத்துள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கும் வணிகர்களுக்குமிடையிலான இடைத்தரகர்களைக் குறைப்பதிலும், இந்த இலத்திரனியல் வணிகம் பெரும்பங்காற்றி வருகின…
-
- 0 replies
- 1k views
-
-
உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் எம்.எஸ்.சி. குல்சன் தனது முதல் பயணத்தை திங்கட்கிழமை அன்று தொடங்கியுள்ளது. சீனாவின் தியான்ஜின் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இந்த கப்பல் வடமேற்கு ஐரோப்பா நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளது. கொரியா குடியரசின் சாம்சங் குழுமத்தின் கப்பல் கட்டுமான நிறுவனமான சாம்சங் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் இந்த கப்பலை கட்டியுள்ளது. 399.9 மீட்டர் நீளமும் 61.5 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பலில் 224,986.4 டன் எடை கொண்ட சுமைகளை ஏற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=14912
-
- 0 replies
- 303 views
-
-
ஜேர்மன் வங்கி ஒன்று 18,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளநிலையில், அதிகம் பாதிக்கப்பட இருப்பவர்கள் பிரித்தானியர்கள் என செய்திவெளியாகியுள்ளது. ஜேர்மனியின் ஃப்ராங்க்பர்ட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வங்கியானDeutsche Bank, தனது ஊழியர்களில் 18,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. 2022க்குள் 18,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள Deutsche Bank, தனது வணிக பிரிவான முதலீட்டு வங்கிப்பிரிவை மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன் மூலம் நிலையான வருவாயை பெறமுடியும் என்றும் அறிவித்துள்ளது. ஒரு புறம் நிலையான வருமானம் பெறுவதற்காக நல்ல கார்பரேட் முதலீட்டாளர்களை பெறத்திட்டமிட்டுள்ள அதே நேரத்தில், அனாவசிய செலவுகளை குறைக்கவும் த…
-
- 0 replies
- 495 views
-
-
அமேசான் நிறுவனத்தை தொடங்கிய போது, அதன் நிறுவனர்களுக்கே அந்த நிறுவனம் குறித்து நம்பிக்கை இல்லை. ஜெஃப் 1999ம் ஆண்டு, "அமேசான். காம் நிறுவனம் வெற்றிகரமான நிறுவனமாக இருக்குமென எந்த உத்தரவாதமும் இல்லை. நாங்கள் செய்ய முயல்வது சிக்கலான ஒரு விஷயம்." என்று கூறி இருக்கிறார். அதுவும் நிறுவனம் தொடங்கி 5 ஆண்டுகளுக்கு பிறகு. அமேசான் நிறுவனம் தொடங்கி இந்த ஆண்டோடு 25 ஆண்டுகள் ஆகின்றன. உலகத்தின் மதிப்புமிக்க நிறுவனங்களில் இப்போது அதுவும் ஒன்று. உலக பணக்காரர்களின் ஜெஃபும் ஒருவர். ஒரு ஆன்லைன் புத்தக விற்பனை நிறுவனமாக தொடங்கப்பட்ட நிறுவனம் இந்தளவுக்கு சாதித்தது எப்படி? அமேசான் நிறுவனத்தின் வணிகம், அதன் பொருளாதாரம் நம்மை வியக்க வைக்கிறது. கடந்தாண்டு அந்த நிறுவனத்தின் …
-
- 0 replies
- 394 views
-
-
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வணிக உடன்பாடு குறித்தான பேச்சுவார்த்தையொன்று, அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வணிக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுக்கும் சீனாவின் துணை வணிக அமைச்சர் வாங் ஷோ வென்னுக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது. அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வணிக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, கடந்த வாரம் சீனாவுக்கு உத்தியோகப்பூர் விஜயத்தை மேற்கொண்ட போதே, இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வணிக உடன்பாடு குறித்து பேச்சுக்களை மீள ஆரம்பிப்பது, இருதரப்பு வணிக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டள்ளது. அத்துடன், சீனாவுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை ஊக்குவிப்பது, முக்க…
-
- 0 replies
- 368 views
-
-
இந்தோனீசியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய இரு விமான விபத்துகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 100 மில்லியன் டாலர் இழப்பீடு அறிவித்துள்ளது போயிங் விமான நிறுவனம். அந்நிறுவனம் தயாரித்த 737 மேக்ஸ் ரக விமானங்கள் அடுத்தடுத்து இரு விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 346. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் படிப்பு மற்றும் மற்ற செலவுகளுக்கு அளிக்கப்படும் என்று போயிங் தெரிவித்துள்ளது. ஆனால், இதனை ஏற்க பாதிக்கப்பட்டவர்கள் மறுத்துள்ளனர். இந்த இரு விமான விபத்துகளை தொடர்ந்து 737 மேக்ஸ் ரக விமானங்கள் இயக்குவது உலகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/global-48863709
-
- 0 replies
- 238 views
-
-
காகித ஆலையின் கண்ணீர்க் கதை! கிழக்கு மக்களின் தீராத ஏக்கம்! மூவாயிரம் குடும்பங்களை வாழ வைத்த வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலையை மீள இயங்க வைக்கும் அத்தனை முயற்சிகளும் தோல்வி! ஆலையின் இயந்திரங்கள் ஜேர்மனியின் உறுதியான தயாரிப்புகள். அவை மிக நீண்ட கால உத்தரவாதம் கொண்டவை. அவற்றை புனரமைத்து மீண்டும் ஆலை இயங்கத் தொடங்கினால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது உறுதி மூவின மக்களையும் வாழ வைத்த பெருமையைக் கொண்ட வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை தற்போது சீரழிந்து போன நிலையில் உள்ளதால்…
-
- 0 replies
- 2k views
-
-
தற்போது இலங்கையில் நடைமுறையிலுள்ள மிகவும் முக்கிய வரிகளில் ‘பெறுமதி சேர் வரி’ (VAT) முதலிடத்தினைப் பெறுகின்றது. VAT என்றால் பொருட்கள் மற்றும் சேவைகளின் உள்நாட்டு நுகர்வின் மீது விதிக்கப்படும் வரியாகும். இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், இலங்கையின் சட்ட ரீதியான எல்லைகளுக்குள் வழங்கப்படுகின்ற பொருட்கள் மற்றும் சேவைகள் என்பன இவ்வரி விடயத்திற்கு உள்ளாகின்றன. இது பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலியில் ஒவ்வொரு நிலையிலும் அதிகரித்த பெறுமதியின் மீது விதிக்கப்படும் ஓர் பல்நிலை வரியாகும். இந்த வரியானது, பொருட்கள் மற்றும் சேவைகளின் இறுதி பயன்பாட்டாளரினால் பொறுப்பேற்கப்படுகின்றது. இது ஒரு மறைமுக வரியாகும். இறுதிப் பயன்பாட்டாளரின…
-
- 0 replies
- 349 views
-
-
வர்த்தகப் போரொன்றை சீனா விரும்பவில்லை. ஆனால் தேவையேற்படுமானால் அத்தகையதொரு போருக்கு சீனா அஞ்சவுமில்லை. அதை நடத்தத் தயாராக இருக்கிறது என்று கொழும்பிலுள்ள சீனாத்தூதுவர் செங் சூவேயுவான் எச்சரிக்கை செய்திருக்கிறார். கொழும்பு சீனத்தூதரகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் சீனத்தூதுவர் அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளால் முன்னெடுக்கட்டுள்ள வர்த்தகப் போரில் சீனா அதன் சட்டபூர்வமானதும், நியாயபூர்வமானதுமான உரிமைகளையும், நலன்களையும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். 'ஜனாதிபதி சி ஜின்பிங் உறுதியாகக் கூறியிருப்பதைப் போன்று சீனாவும், அமெரிக்காவும் வர்த்தகத்தையும், பொருளாதாரப் பிரச்சினைகளையும் சமத்துவமானதொரு அடிப்படையிலேயே கையாள வேண்டும் என…
-
- 0 replies
- 538 views
-
-
கடந்த சில வருடங்களாக உலகை, மெய்நிகர் நாணயங்கள் (Crypto Currencies) ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கின்றன. மெய்நிகர் நாணயங்களின் வரலாறானது, Bitcoin எனப்படும் முதல் மெய்நிகர் நாணயத்தின் அறிமுகத்துடனேயே ஆரம்பிக்கின்றது. Bitcoin, உண்மையில் ஒரு தொழில்நுட்பமாகப் பார்க்கப்படவேண்டிய போதிலும் எந்தவொரு தங்குதடையுமின்றி, எந்தவோர் அரசாங்கத்தின் அழுத்தங்களுமின்றி, பணப் பரிவர்த்தனையை, மிகப் பாதுகாப்பாக, மிக விரைவாக, சந்தையின் கேள்வி-நிரம்பல் ஆகியவற்றின் அடிப்படையில் இலகுபடுத்தும் தொழில்நுட்பமாக அமைந்ததன் விளைவாக, Bitcoin, தற்போது நடைமுறையிலுள்ள பணக் கொடுக்கல் வாங்கல்களுக்கு மாற்றீடாகப் பார்க்கப்படுகிறது. இந்த வரிசையின் அடிப்படையில், பல்வேறு மெய்நிகர் நாணயங்கள், சந்தையில் அறிமுக…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 மாநாடு துவங்கியது. கூட்டத்தில் பங்கேற்க வந்த தலைவர்களை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வரவேற்றார். தொடர்ந்து தலைவர்கள் கூட்டாக போட்டோ எடுத்து கொண்டனர். இதன் பின் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் டிரம்ப் பேசுகையில், 5ஜி நெட்வோர்க் சேவையில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இது நமது பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கு முக்கியம். டிஜிட்டல் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கும் தகவல் கட்டுப்பாடு மற்றும் கொள்கைகளுக்கு அமெரிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் என்றார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2308268 20களின் குழு (Group of Twenty) அல்லது சுருக்கமாக ஜி-20, அல்லது 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத…
-
- 1 reply
- 429 views
-
-
இலங்கை மின்சார சபை 100,000 மில்லியன் ரூபாய் நட்டத்தில் இயங்குவதாக, மின்சக்தி அமைச்சர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார். அதிக விலைக்கு மின் உற்பத்தி செய்யப்படுவதால், மின்சார சபை இவ்வாறு நட்டத்தில் இயங்குவதாக, அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபை இன்று 100,000 மில்லியன் ரூபாய் நட்டத்தை அடைந்துள்ளதாகவும் இந்த நிலைமையை மாற்றி, இந்த 100,000 மில்லியன் ரூபாய் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு, சுயதொழிலை ஊக்குவிக்க முடியும் என தெரிவித்துள்ளார். எனினும் நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் இதற்கு முன்னர் எடுத்த தீர்மானங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாமையின் பி…
-
- 2 replies
- 753 views
-
-
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் நடப்பதால் தொழில் நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன. இந்நிலையில், இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்கவும் தொழிலை தொடர்ந்து நடத்தவும் வசதியாக சீனாவில் இருந்து பல தொழில் நிறுவனங்கள் வெளியேற திட்டமிட்டுள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களுக்கு பல்வேறு வர்த்தகச் சலுகைகள், ஊக்கத் தொகைகள் கொடுத்து இங்கு தொழில் தொடங்க வருமாறு அழைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.நிதி சலுகைகள், ஊக்கத் தொகை மற்றும் வியட்நாம் அளிப்பது போல் வரி விடுமுறை காலம் போன்றவற்றை அளித்து தொழில் நிறுவனங்களை கவர்ந்து இழுக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரானிக்ஸ், நுகர்வோர் வீட்டு உபயோகப் ப…
-
- 0 replies
- 395 views
-