இலக்கியமும் இசையும்
இலக்கிய கட்டுரைகள் | நேர்காணல்கள் | கர்நாடக இசை | நவீன இசை
இலக்கியமும் இசையும் பகுதியில் இலக்கிய கட்டுரைகள், நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை சம்பந்தமான தரமானதும் அவசியமானதுமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இலக்கியக் கட்டுரைகள், படைப்பாளிகளின் நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை பற்றிய தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
206 topics in this forum
-
“ஈழத்து இலக்கியவெளியில் காத்திரமான இலக்கிய மரபு இருந்ததில்லை.“ எனச்சொல்பவர்கள் யார் ..?நேர்காணல் -லெ முருகபூபதி உலகமகாயுத்த காலங்களில் வெடிக்காத, மண்ணில் ஆழப்புதையுண்ட குண்டுகளை வெடிக்கச்செய்வதும் அல்லது வலுவிழக்கசெய்வதும் அவ்வப்பொழுது நாம் பத்திரிகைகளில் படிக்கின்ற விடயங்கள். அது போலவே ஒரு நிகழ்வில் எழுத்தாளர் ஜெயமோகன் சொல்லிய கருத்தொன்று சரியாக மாதம் ஆறைக் கடந்த நிலையில், ஈழத்துக்கவிஞர் கோ நாதன் அந்த உரையினை சமூக வலைத்தளங்களில் பகிர, ஜெயமோகனது கருத்துக்கு எதிராக சமுமுகவலைத்தளங்கள் அனல்கக்கின. ஆனால் அவரது உரையினைக் கூட்டிக்கழித்து விட்டு உரையின் மையச்சரடைப் பார்த்தல் அவர் சொல்ல வந்த கருத்தில் தவறுகள் இருப்பதாகத் தெரியவில்லை. முப்பதாண்டுகளுக்கு மேலாக…
-
- 0 replies
- 917 views
-
-
புத்தகக் கண்காட்சி, இலக்கியக்கூட்டங்களுக்குச் செல்வது அன்புள்ள ஜெ சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் செல்வது என் வழக்கம். நான் அதிகமாக நூல்களை வாங்குவதில்லை. என் பணச்சிக்கல் அப்படி. ஆனால் ஆண்டுதோறும் சிறிதாக நூல்களை வாங்கிக்கொண்டுதான் இருக்கிறேன். பெரும்பாலும் நூலகங்களை நம்பியே நூல்களை வாங்கிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய கேள்வி என்னவென்றால் நூல்களை வாங்குவதற்காகத்தான் புத்தகக் கண்காட்சிக்குச் செல்லவேண்டுமா? என்னை புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதற்காக பலர் கேலியும் கிண்டலும் செய்வதுண்டு. இவர்களில் பலர் கதை கவிதைகள் எழுதுபவர்கள். என்னைப்போன்றவர்கள் செல்வதனால்தான் அங்கே நெரிசல் என்று சொல்வார்கள். “புக்கை எல்லாம் முறைச்சுப் பாத்துட்டு வந்திட்டியா?”என்று கேலிசெ…
-
- 0 replies
- 681 views
-
-
சீனக்கவிதைகள் குறித்த விரிவான உரை ஒன்றை மொழிபெயர்ப்பாளர் ரெட் பைன் நிகழ்த்தியிருக்கிறார். இவரது இயற்பெயர் பில் போர்ட்டர். (Bill Porter/Red Pine,) அமெரிக்கரான இவர் ஜென் குருவாகச் செயல்பட்டு வருகிறார். இவரது உரை தற்போது இணையத்தில் காணக்கிடைக்கிறது. பண்டைய சீனக்கவிதைகள் மற்றும் ஞானநூல்களின் மொழிபெயர்ப்பாளரான இவர் வரலாற்றில் சீனக்கவிதைகளின் இடம் குறித்த சிறந்த அறிமுகத்தைத் தருகிறார். Burton Watson மொழியாக்கம் செய்த சீனக்கவிதைகளை வாசித்திருக்கிறேன். அவரது தொடர்ச்சியை போலவே ரெட் பைனும் செயல்படுகிறார். இந்த உரையில் சீனவரலாற்றுக்கும் கவிதை மரபுக்குமான தொடர்பு, சீனாவில் விவசாயிகள் எவ்வாறு கவிஞர்களைக் கொண்டாடினார்கள். கவிஞர்களுக்கான நினைவிடத்தை உருவாக்கினார்கள். ஆயிரம…
-
- 0 replies
- 1k views
-
-
படம் : மீனவ நண்பன் இசை : M.S.விஸ்வநாதன் பாடியவர் : K.J.யேசுதாஸ், வாணி ஜெயராம் வரிகள் : முத்துலிங்கம் தங்கத்தில் முகமெடுத்து, சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து காமன் போல வந்திருக்கும் வடிவோ அந்த தேவ லோக மன்னவனும் நீயோ வண்ண ரதம் போலவே தென்றல் நடை காட்டவா புள்ளி மான் போலவே துள்ளி நான் ஓடவா வண்ண ரதமாகினால் அதில் சிலை நானன்றோ புள்ளி மான் தேடும் கலை மானும் நானல்லவோ அசைந்து தவழ்ந்து அருகில் நெருங்கு அமுதாகவே ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ நீ மாலை நேர பொன் மஞ்சள்…
-
- 0 replies
- 749 views
-
-
எழுத்தாளர் ஜெயமோகனின் ஆனந்தவிகடன் பேட்டி jeyamohanMay 31, 2025 எது உங்களை தொடர்ந்து எழுதவைக்குது? அந்த தூண்டுதல் என்னன்னு சொல்ல முடியுமா? அடிப்படையிலே அந்தத் தூண்டுதல் ஒண்ணுதான். ஆனா ஒவ்வொரு வயசிலேயும் அதை வேற வேறயா புரிஞ்சுக்கறோம்.சின்னப்பையனா இருந்தப்ப நான் என்னை இந்த உலகுக்கு நிரூபிக்கணும்கிறதுக்காக எழுதினேன். அப்றம் புகழ், அடையாளம் எல்லாத்துக்காகவும் எழுதினேன். இந்த வயசிலே ஒரே காரணத்துக்காகத்தான், செயலிலே உள்ள இன்பத்துக்காகவும் நிறைவுக்காகவும். உண்மையிலே இதுதான் அடிப்படையான காரணம். இந்த உலகத்திலே இருக்கிற எல்லாமே செயல்வடிவா இருக்கு. செயலற்றிருக்குதுன்னு நமக்கு தோணுற கல்லு, மலை எல்லாமே செயல்வடிவாத்தான் இருக்கு. செயலிலேதான் நம்மோட நிறைவு இருக்கமுடியும். நமக்குன்னு ஒரு…
-
- 0 replies
- 219 views
-
-
இலக்கியம் பலி கேட்கிறதா என்ன? jeyamohanDecember 8, 2024 அன்புள்ள ஜெயமோகன், நான் நண்பர் * வுடன் வந்து உங்களைச் சந்தித்ததை நினைவுகூர்வீர்கள் என நம்புகிறேன். அவர் இலக்கியத்திற்காக வாழ்ந்த ஒரு களப்பலி. அவர் நடத்திய சிற்றிதழை அன்று கொண்டுவந்து உங்களுக்கு அளித்தோம். குமரிமாவட்ட இலக்கியத்தில்கூட இன்று அவரை நினைவுகூர்பவர்கள் இல்லை. இன்று அவர் இல்லை. அவர் இலக்கியத்தால் கொல்லப்பட்டார் என்றே நான் நம்புகிறேன். அவரைப் பற்றி நீங்கள் பதிவுசெய்யவேண்டும் என்று விரும்புகிறேன். இலக்கியவாதிகள் அவரைப்பற்றி ஏன் பேசுவதே இல்லை? க அன்புள்ள க, உங்கள் நீண்ட கடிதத்தைச் சுருக்கியிருக்கிறேன். அக்கடிதத்தில் பெரும்பகுதி இலக்கியவாதிகள் பற்றிய வசைகள், ஏளனங்கள். இலக்கியவாதிகள் …
-
- 0 replies
- 383 views
-
-
அச்சமும், தப்பியோடும் விருப்பும் மரியாதைக்குரியது : சயந்தன் அனோஜன் பாலகிருஷ்ணன் கேள்வி: ஆறாவடு வெளியாகி சில வருடங்கள் கழித்து, ஆதிரை வெளியாகியது. அதன் பின்னர் கணிசமான காலம் கழித்து அசேரா, மீண்டும் நீண்ட காலம் கடந்து ‘திசை ஒன்பது’ வெளியாகிறது. நாவல்கள் எழுதப்படுவதற்கு இடையிலான பருவங்கள் அதிகமாகவே உங்களுக்கு இருக்கின்றன. இந்த இடைப்பட்ட காலங்கள் உங்களுக்கு எவ்வாறு கழியும், என்ன வகையான தொந்தரவுகளை எதிர்கொள்வீர்கள் ஒரு எழுத்தாளராக? பதில்: நாவல்கள் மட்டுமல்ல, பொதுவாக நான் எழுதுவதே அதிக கால இடைவெளியைக் கொண்டிருக்கிறது. கடைசியாக பூரணம் சிறுகதையை 2019இல் எழுதிய பிறகு இன்னொரு சிறுகதையை இன்னமும் எழுதவில்லை. நாவல்களுக்கிடையிலும் கிட்டத்தட்ட 5 ஆண்டுகால இடைவெளி உண்டு. இடைப்பட்ட காலங்க…
-
- 0 replies
- 121 views
-
-
நேர்காணல்-லறீனா, நேர்கண்டவர் - கோமகன் “அடுத்தவர் நமக்கான களங்களை, வெளிகளை உருவாக்கித் தரும்வரை காத்துக்கொண்டு இருக்காமல், பெண்கள் தமது அறிவையும் ஆற்றல்களையும் மேம்படுத்திக் கொண்டு, அவற்றைச் சமூகமயப்படுத்துவதற்கான வெளியைத் தாமே கட்டமைத்துக்கொள்ள முன்வர வேண்டும்”. லறீனா 000000000000000000000000 வணக்கம் வாசகர்களே , இந்த வருட ஆரம்பத்தில் தாயகத்தில் இடம்பெற்ற வேண்டத்தகாத சம்பவங்களினால் தமிழ் முஸ்லிம் உறவுகள் முறுகல் நிலையையும் இரு சமூகங்களுக்கு இடையே பாரிய இடைவெளியைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் கண்டு ஒரு இலக்கியனாக மிகவும் கவலையும் அயர்ச்சியும் கொண்டிருந்தேன். இருபக்கத்திற்கும் பொதுவான விடயங்கள் கலந்துரையாடல்கள் மூலம் பொதுவெளிக்கு கொண்டுவ…
-
- 0 replies
- 766 views
-
-
ஹான் காங் – இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஜெகதீஷ் குமார் அக்டோபர் 10, 2024 No Comments தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்குக்கு 2024- ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவிலிருந்து இந்த விருதைப் பெறும் முதல் எழுத்தாளர் இவர். ஹான் காங் தன் நாட்டினரால் ஆற்றல் வாய்ந்த தொலை நோக்குப் பார்வையாளர் என்று கொண்டாடப்படுபவர். வரலாற்றுத் துயரை துணிவுடன் எதிர்கொள்ளும், மனித வாழ்வின் பலவீனங்களை வெளிப்படுத்தும், அவரது கவித்துவமிக்கதும் தீவிரமானதுமான உரைநடைக்காக ஹான் காங்குக்கு இந்த விருது அளிக்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. நோபல் கமிட்டியின் தலைவரான ஆண்டர்ஸ் ஓல்சன், தன் அறிக்கையில், “…
-
- 0 replies
- 13.5k views
-
-
நிகரற்ற படைப்பாளிகளில் ஒருவர் – ம.நவீன் மலேசிய எழுத்தாளரும் வல்லினம் இதழ் நிறுவனருமான ம.நவீனுக்குக் கனடா, தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2018க்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்தில் கடந்த 14 ஆண்டுகளாக காத்திரமான செயல்பாடுகளால் தொடர்ந்து பங்காற்றி வரும் நவீனுக்கு ஜூன் 9 இல் கனடா டொரோன்டோவில் அமைந்துள்ள Grand Cinnamon Convention Centre -இல் இந்தச் சிறப்பு விருது (1000 கனடியன் டாலர்) அளிக்கப்படவுள்ளதாக இலக்கியத் தோட்டத்தின் அறிவிப்பு தெரிவித்தது. தமிழ் உலகின் மதிப்புமிக்க இயல் விருதை வழங்கி வரும் கனடா தமிழ் இலக்கியத்தோட்டத்தின் இந்தச் சிறப்பு விருது இலக்கியத் துறையில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.…
-
- 0 replies
- 890 views
-
-
பா. அகிலனின் அரசியல் மொழி சேரன் பா. அகிலன் கவிதைகள் கீதா சுகுமாரன் மொழிபெயர்ப்பில் ‘Then There Were No Witnesses’ எனும் தலைப்பில் இருமொழிப் பதிப்பாகவும் கூடவே அகிலனின் ‘அம்மை’ கவிதைத் தொகுப்பும் ஜுன்17 அன்று கனடாவில் வெளியிடப்பட்டது. நிகழ்வில் Then There Were No Witnesses பற்றி நாவலாசிரியர் ஷியாம் செல்வதுரை ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிய மொழிகளில் எழுதும் கவிஞர் இந்திரன் அமிர்தநாயகம், கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான நீத்ரா ரொட்ரிகோ, நூலை வெளியிட்ட மவ்ந்ன்ஸி பதிப்பகம் சார்பில் எழுத்தாளர் நூர்ஜஹான் அஸீஸ் ஆகியோர் ஆங்கிலத்தில் உரையாற்றினர். ‘அம்மை’ தொகுப்பைப் பற்றியும் அகிலனின் இதர கவிதைகள் பற்றியும் எஸ்.கே. விக்கினேஸ்வரன் தமிழில் உரையாற்றினார். இந்திரன் …
-
- 0 replies
- 1.5k views
-
-
நேர்காணல்: கிழக்கில் நிகழ்வது ஒருவகைப் பங்காளிச் சண்டை தான் — சோமிதரன் ; நேர்கண்டவர் : அகர முதல்வன் May 10, 2020 கிழக்கில் நிகழ்வது ஒருவகைப் பங்காளிச் சண்டை தான் — சோமிதரன் சோமிதரன்.ஈழத்தின் ஊடகவியலாளர்.சிங்கள இனவெறி அரசினால் தீக்கிரையாக்கப்பட்ட யாழ்ப்பாண பொது நூலகம் குறித்து இவர் இயக்கிய “எரியும் நினைவுகள்” என்ற ஆவணப்படத்தின் மூலம் வெகுவாக அறியப்பட்டவர். பல ஆவணப்படங்களை இயக்கிய இவர் இப்போது திரைப்படம் ஒன்றை இயக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார். ஈழத்தில் கவிஞர்கள் அதிகம், எழுத்தாளர்களுக்கும் குறைவில்லை. ஆனால் உங்கள் துறையான ஆவணப்பட இயக்கம் சார்ந்து செயற்படுவதற்கு செயற்பாட்டாளர்கள் பெரியளவில் முன் வருவதில்லை. எப்படி ஆவணப்படங்களை உருவாக்க வேண்டுமென …
-
- 0 replies
- 839 views
-
-
அதே கம்பீரம், அதே ஆளுமை... சாகாவரம் பெற்ற குரல் உங்களுக்கு SPB ஸார் . We miss you!!! 🙏
-
- 0 replies
- 574 views
-
-
-
- 0 replies
- 754 views
-
-
இது இசையைப்பற்றி தெரியாதவர்களுக்கு கொஞ்சம் யோசிக்க செய்யலாம். ஆனால் இசை புரிந்தவர்களுக்கு ரொம்பவும் பிரமிப்பாக இருக்கலாம். குறைந்த பட்சம் 25 ஆவது நிமிடத்திலிருந்து பாருங்கள். நன்றி.
-
- 0 replies
- 556 views
- 1 follower
-
-
நவீன இலக்கியத்தை எப்படி வாசிப்பது? by ஸ்ரீதர் ரங்கராஜ் • March 1, 2025 தீவிர இலக்கியம் அதன் வாசகர்களிடமிருந்து வெறும் நுகர்வைக் காட்டிலும் அதிகமாகக் கோரக்கூடியது — அதற்கு ஈடுபாடு, பொருள்கொள்ளுதல், சிக்கலான தன்மையுடன் ஊடாடும் விருப்பம் தேவை. நேரியல் முறையிலான கதைசொல்லல் மற்றும் உடனடி நுகர்வை வளர்க்கும் வெகுஜனப் புனைகதைகளைப் போலல்லாமல் தீவிர இலக்கியம் அடுக்குகள், பலபொருள்படும் தன்மை கொண்டது, பெரும்பாலும் எளிமையான புரிதலுக்கு மறுமுனையில் இருப்பது எனலாம். தீவிர இலக்கிய வாசிப்பின் உண்மையான மகிழ்ச்சி புறவயமான நுகர்வு அனுபவத்திலிருந்து அல்லாமல் அதன் உள்ளார்ந்த பொருளைக் கண்டறிவதில், கட்டமைப்பை ரசிப்பதில், கருப்பொருள்கள் குறித்து விவாதிக்கும் செயலில் பங்கேற்பதன் மூலம் வருகிறது. த…
-
- 0 replies
- 208 views
-
-
லண்டன் தமிழ் இலக்கியக் குழுமம் அன்புள்ள ஜெ, இங்கிலாந்தில் வசிக்கும் , தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் உள்ள நண்பர்கள் இணைந்து ‘லண்டன் தமிழ் இலக்கிய குழுமம் ‘ என்ற அமைப்பை ஜுன் ஒன்றாம் தேதி தொடங்குகிறோம். இந்த அமைப்பின் நோக்கம் வாசிப்பில் ஆர்வமிருக்கும் நண்பர்கள் ஆர்வம் உள்ள மற்ற நண்பர்களுடன் கலந்துரையாட வாய்ப்புகளை ஏற்படுத்துவதும், சில புத்தகங்களை தேர்ந்தெடுத்து அவற்றை பற்றிய உரையாடல்கள் மற்றும் விமர்சன கூட்டங்களை ஒருங்கிணைப்பதுமாகும். தொடக்க விழாவன்று விமர்சனம் மற்றும் கலந்துரையாடலுக்கு லண்டனில் வசிக்கும் மூன்று எழுத்தாளர்களின் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவை: சிறுகதை தொகுப்பு அனோஜன் பாலகிருஷ்ணன் – பச்சை நரம்பு சிவா…
-
- 0 replies
- 925 views
-
-
ஷோபாசக்தியின் சமகாலச் சிறுகதைகளை முன்வைத்து – அனோஜன் பாலகிருஷ்ணன் July 12, 2019 நான் எப்போதுமே நேரடியாக அரசியல் பேசுபவன். சிறுவயதிலிருந்தே அரசியல் இயக்கங்களோடு என்னைப் பிணைத்து வைத்திருந்தவன். இப்போது இயக்கங்கள் சார்ந்து இயங்காத போதும் தோழர்கள் குழாமோடு தொடர்ந்து அரசியலில் தீவிர அக்கறை செலுத்துகிறவன். அது குறித்து சதா சிந்திக்கிறவன், விவாதிக்கிறவன். அதிலிருந்து தான் கலை, இலக்கியம் மீதான எனது பார்வையை நான் உருவாக்கிக் கொள்கிறேன். “என்னுடைய கதைகள் சற்றே பெரிய அரசியல் துண்டுப் பிரசுரங்கள்” – ஷோபாசக்தி ஈழ இலக்கியம் என்று ஆரம்பித்தாலே இரண்டு பெயர்களைத் தவிர்க்கவே இயலாது. முதன்மைப் படைப்பாளிகள் வரிசையில் அவர்களுக்கான இடம் எப்போதும் உண்டு. ஒருவர்…
-
- 0 replies
- 916 views
-
-
புதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா பதாகைJuly 10, 2018 நரோபா பிறப்பு /படிப்பு/ குடும்பம் பற்றி ? என்னுடைய மிகச்சிறிய வயதுகள் இடப்பெயர்விலேயே வளர்ந்தன.எறிகணைகள் வீழ்ந்து வெடிப்பதும், உலங்குவானூர்திகள் மேலிருந்து சுடுவதும்தான் எனது சிறியவயதின் நினைவுகளாக அடர்ந்து நிற்கிறது. நான் முதன்முறையாக ஒரு தொகையான சனங்களின் பிணங்களை இடப்பெயர்வு ஒன்றில் நடந்துகொண்டே பார்த்தேன். அந்த இடத்தைவிட்டு அம்மா என்னை மிகவேகமாக இழுத்துக்கொண்டு ஓடினாள். அம்மா முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் களத்தில் என்னை எந்த திசைக்கு இழுத்துக் கொண்டு ஓடினாலும் எங்கும் பிணங்களே நிறைந்திருந்தன. இந்த இரண்டு சம்பவங்களுக்கு இடையேதான் என்னுடைய பள்ளிக்கூட வாழ்வும் இருக்கிறது.…
-
- 0 replies
- 862 views
-
-
மஹாகவியின் கிராமம் ஜூன் 27, 2021 –எம்.ஏ.நுஃமான் இக்கட்டுரை செங்கதிரோனை ஆசிரியராக் கொண்டு கொழும்பு தமிழ் சங்க மாதாந்த ஏடாக வெளிவந்த ‘ஓலை’ சஞ்சிகையின் 17வது இதழில் (2003) வெளிவந்தது. மஹாகவியின் 50 வது நினைவு தினத்தையொட்டி (ஜுன் 20) இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது. மஹாகவியின் பெரும்பாலான கவிதைகள் யாழ்ப்பாணக் கிராமிய வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை. கிராமியத்தை மஹாகவிபோல் தமிழ்க் கவிதையில் கொண்டுவந்த பிறிதொரு கவிஞன் இல்லை எனலாம். இந்த வகையில் இவருக்கு அண்மையில் நிற்கக்கூடியவர் நீலாவணன் ஒருவர்தான். ஆனால், கிராமியத்தைப் பொறுத்தவரை அளவிலும் தன்மையிலும் மஹாகவி அவரை மிஞ்சி நிற்கிறார். மஹாகவியின் முக்கியமான பெரும்பாலான கவிதைகளில் யாழ்ப்பாணக் கிராமப்புற வாழ…
-
- 0 replies
- 933 views
-
-
நெருங்கின பொருள் : வெற்றிராஜா ‘வேண்டுவன’ என தலைப்பிட்டு, பாரதியின் கையெழுத்தில், ‘மனதில் உறுதி வேண்டும்’ என்று துவங்கும் பாடல், கைபேசியில் ஒரு செய்தியாக வந்து இருளில் ஒளிர்ந்தது. மகாகவியின் கையெழுத்தும், சொற்களை பிரித்து பிரித்து அவர் எழுதியிருந்த விதமும் வசீகரிக்க, வரிகளை உச்சரித்து வாசிக்கையில் அது ஒரு கானமாகவே மனதுள் ரீங்கரித்தது. கவிதைக்குள் சறுக்கி சுழன்று ஊஞ்சலாடிய மனம், ”நெருங்கின பொருள்” என்ற வாக்கியத்தில் மீண்டும் மீண்டும் சென்றமர்ந்தது. ”நெருங்கின பொருள் கைப் பட வேண்டும்”. இந்த வாக்கியம் ஒரு ஆப்த வாக்கியமோ? என்ன சொல்ல வருகிறார் பாரதி? பொம்மையை விரும்பும் குழந்தையாய், பணத்தை விழைகின்ற வியாபாரியாய், உன்னதத்தை தேடும் கலைஞர்களாய், நாம் விரும்பும் பொருள் ஒன்…
-
- 0 replies
- 1k views
-
-
பிரமிள் இளங்கோ-டிசே 1. ஈழத்திலக்கியம் என வரும்போது தொடர்ந்து வாசிக்கவும் உரையாடவும் வேண்டியவர்களென நான் மு.தளையசிங்கத்தையும் (மு.த), எஸ்.பொன்னுத்துரையையும் (எஸ்.பொ) முன்மொழிந்து வருகின்றவன் . இவர்கள் இருவரையும் விட இன்னொருவரையும் இதில் சேர்க்கலாமோ, விடலாமோ என்கின்ற தயக்கங்கள் எப்போதும் எனக்குண்டு. அது தருமு சிவராம் என்கின்ற பிரமிள். 57 வயதுகள் வரை வாழ்ந்த பிரமிளின் 30 வருடங்கள் இலங்கையிலே கழிந்திருக்கின்றன என வரும்போது அவரை நம்மவராகவே கொள்ளமுடியும். ஒருவகையில் பார்த்தால் அவருடைய மேதமை அவருடைய 20களிலேயே - நிகழ்ந்துமிருக்கின்றது. பிறகான காலங்களில் அவர் அதை விரித்து எடுத்துச் சென்றதையே நாம் எளிதாகப் பார்க்கமுடியும். பிரமிள், அவரின் 20களின் தொடக்கத்…
-
- 0 replies
- 1k views
-
-
சுய கண்டடைதல் : கல்பற்றா நாராயணன் தமிழில் : அழகிய மணவாளன் “கண்ணாடி மிக அதிகமான பதிப்புகள் வெளிவந்த பெஸ்ட் செல்லர் ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதிகள் கொண்ட என்றென்றைக்குமாக வாசிக்கப்படும் நூல் பைபிளைவிட அதிகமாக ஸ்தோத்திரம் செய்யப்பட்ட புனிதமான நூல்.“ (நிழலை கைப்பற்றுதல் – கல்பற்றா நாராயணன்) கண்ணாடிக்கு பச்சைத்தண்ணீரின் நிறம். பிரதிபலித்தல் என்ற ஒரே ஒரு நோக்கத்திற்காக மீண்டும் மீண்டும் உருவாக்கப்படும் நீலநிற நீர்த்தேக்கம் (Now I am a lake mirror- Sylvia Plath). நார்ஸிஸஸ் தன் நீர்ப்பிம்பத்தால் ஈர்க்கப்பட்டு மூழ்கி மறைந்த தடாகம் ஒவ்வொருமுறை நான் கண்ணாடி பார்க்கும்போதும் எழுந்துவருகிறது. மனிதர்கள் அதில் நீந்த…
-
- 0 replies
- 418 views
-
-
ஜெயமோகனின் “பத்துலட்சம் காலடிகள்” சிறுகதையை வாசிப்பது எப்படி?- ராஜன் குறை April 30, 2020 - ராஜன் குறை · இலக்கியம் ஓளசேப்பச்சன் கதாபாத்திரம் ரொம்ப குடிக்கிறது. தொடர்ந்து ஏப்பம் விடுகிறது. பலரையும் ஏசுகிறது. யாரையும் பேசவிடாமல் அதுவே பேசிக்கொண்டிருக்கிறது. இதுபோன்ற பாத்திரங்களை ஜெயமோகன் கொஞ்சம் கட்டுக்குள் வைக்க வேண்டும். கதை சொல்லியையும் அந்த பாத்திரத்திற்கு எதிரே உட்கார வைத்த பிறகு சும்மா ஏப்பம் விடுவதை எண்ணிக்கொண்டிருந்தால் சரியாக வராது. ஒளசேப்பச்சனின் அபத்தமான கருத்துக்களை மறுத்து ரெண்டு வார்த்தை பேச வேண்டும். ஒளசேப்பச்சன் உளறுவதையெல்லாம் குறிப்பெடுத்து பதிவுசெய்வதற்கா கதைசொல்லி மற்ற பாத்திரங்களுடன் உட்கார்ந்திருக்கிறான்.…
-
- 0 replies
- 617 views
-
-
சிங்கப்பூர் - மலேசியா பயணம் தமிழ் முரசு நாளிதழ் மற்றும் சிங்கப்பூர் கலை மன்றம் இணைந்து நடத்தும் ஒருநாள் அறிவியல் புனைவு - வரலாற்று புனைவு பயிலரங்கிற்காக என்னை அழைத்திருந்தார்கள். சிங்கப்பூரோ தஞ்சாவூரோ எங்கு சென்றாலும் உரிய தயாரிப்புடன் செல்ல வேண்டும் என்பது என் நிலைப்பாடு. அறிவியல் புனைவு, வரலாற்று புனைவு தொடர்பாக இரண்டு மாதங்கள் தொடர்ந்து வாசித்து என்னை தயார் செய்து கொண்டேன். வழக்கமாக செல்லும் ஊட்டி கூட்டத்திற்கு கூட இந்தமுறை செல்லவில்லை. வெளிநாட்டிற்கு தனியாக பயணிப்பது இதுவே முதல்முறை எனும் பதட்டம் வேறு லேசாக பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டது. மே எட்டாம் தேதி நள்ளிரவு திருச்சியில் இருந்து புறப்பட்டு ஒன்பதாம் தேதி காலை சிங்கப்பூர் செ…
-
- 0 replies
- 1.7k views
-