கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
783 topics in this forum
-
"நீயில்லா நானும் நீலமில்லா வானம்" "நீயில்லா நானும் நீலமில்லா வானம் நீரில்லா ஆறு மீனில்லா ஓடை வேரில்லா மரம் பட்டு விழும் ஊரில்லா இடம் காடாய் மாறுமே!" "காதல் கொண்ட என் பெண்ணே மோதல் தவிர்த்து அருகில் வந்திடு சாதல் கூட இன்பம் தருமே கூதல் காய மடியைத் தந்தால்!" "ஊடல் ஒன்றும் புதுமை இல்லை கூடல் உன்னுடன் வரும் என்றால் தேடல் கொண்டு மனம் வாடுது விடலைப் பருவம் உன்னை நாடுது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 292 views
-
-
"பேராசை" "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும். ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன். நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நி…
-
- 0 replies
- 840 views
-
-
குறளோடு கவிபாடு / "குறள் 1175" "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் கண்களும் பேசின காதலையும் தந்தன வண்ண உடலின் கவர்ச்சி ஈர்த்தன ஆண்மை கண்டு அவளும் நெருங்கினாள் கண்ட கோலம் காமம் கொடுத்தன!" "பெண்ணின் அழகில் மயங்கி நின்றவனோ எண்ணம் எல்லாம் அவளே என்றவனோ கண்ணீர் தந்து உறவு மறந்து அண்டம் எங்கோ பிரிந்து போனானே கண்ணனை நினைத்து துயிலும் மறந்தேனே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 1.1k views
-
-
"வண்ணங் கொண்ட வெண்ணிலவே" "வண்ணங் கொண்ட வெண்ணிலவே வாராயோ கண்கள் இரண்டும் காணத் துடிக்குதே! மண்ணின் வாசனை உடையில் தெரியுதே பண்பின் இருப்பிடமே வாழ்த்தி வணங்குகிறேன்!" "அன்ன நடையில் மனத்தைக் கவர்ந்தவளே சின்ன இடையில் கலக்கம் தந்தவளே! என்னை மறந்து உலகம் துறந்து உன்னை அடைய விரும்பியது எனோ?" "ஏராளம் பூவையரை நான் முகர்ந்தாலும் ஏமாற்றம் இல்லா நடத்தை கொண்டவளே! ஏற்றவள் எனக்கு நீயென நான் ஏதேதோ எண்ணி ஏங்குவது ஏன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 412 views
-
-
"படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது" / "The corpse that oppose the 'Genocide' is asking" "வாருங்கள், வந்து கை கொடுங்கள்- இமைகள் மூடி பல நாளாச்சு மூடுங்கள், மூடி கண்ணை கட்டுங்கள்- வரிசையாய் வருங்கள் பல சடலங்கள் தாருங்கள் தீர்வை, தந்து கவலை தீருங்கள்- கேள்விகள் கேட்டு என்னை வதைக்கின்றன நாக்கை அறுத்தனன் நாதி யற்றவன்- நங்கை இவள் உண்மை உரைத்ததால் முலையை சீவினான் கொடூர படையோன்- வஞ்சி இவள் காமம் சுரக்காததால் கண்களுக்குள் புதையாத இவர்களை தருகிறேன்- அப்பாவிகளை ஒன்று ஒன்றாய் புதைக்க வரிசையில் வரிந்து வருகினம் பல்லாயிரம்- இடையில்…
-
- 0 replies
- 524 views
-
-
-
- 0 replies
- 2k views
-
-
"திருக்குறள்" [அந்தாதிக் கவிதை] & "ஊடல்" [அந்தாதிக் கவிதை] "திருக்குறள் சொல்லாதது ஒன்றும் இல்லை இல்லை என்போருக்குப் 'பொருள்' கூறி கூறிய தொடர்ச்சியாக 'அறம்' உரைத்து உரைக்கும் தொனியில் 'இன்பம்' சேர்த்து சேர்த்து கோர்த்து 'ஈரடி'யாய் சிறப்பித்து சிறப்பித்து தமிழுக்குத் தந்தான் திருக்குறள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ....................................................................... "ஊடல்" [அந்தாதிக் கவிதை] "ஊடல் இருந்தால் வரும் கூடல் கூடல் வந்தால் சுரக்கும் இன்பம் இன்பம் எல்லை மீறினால் துன்பம் துன்பம் உனக்கு புகட்டுவது அறிவு!" "அறிவு கொண்டு சிறப்பித்தல்…
-
- 0 replies
- 431 views
-
-
ஹைக்கூ கவிதைகள்: "துயிலுமில்லம்", "தமிழர் பாரம்பரியம்" & "காட்சிக்கேற்ற" "துயிலுமில்லம்" "கார்த்திகை திங்கள் தீபங்கள் ஏற்றி வழிபடுவோம் துயிலும் இல்லங்கள்" அல்லது "துயிலுமில்லம் ஆலயமே தீபங்கள் ஏற்றி வழிபடுவோம் இன்று கார்த்திகை " [எடுத்துக்காட்டு: மாவீரர்களின் நினைவுகள் கண்களைக் கலங்க வைக்கின்றன சிதைக்கப்பட்ட கல்லறைகள் - முல்லை நிரோயன்] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................... …
-
- 0 replies
- 431 views
-
-
"நிலவுக்குள் நீயடி..!" "நிலவுக்குள் நீயடி நினைவில் நிறைந்தவளே நிம்மதி தேடி உன்னைத் தேடுகிறேன் முழுமதியே வருவாயோ அருகில்?" "கண்ணுக்குள் புதைந்த சித்திரமே மண்ணில் வாழும் இவனுக்கு பண்பு சொல்லாயோ காதல் பொழியாயோ?" "திங்கள் முகத்தில் திலகம் பதிக்க வரவா நான் தித்திக்கும் இளமை காதல் தேடுது கண்ணே மார்பைத் தழுவவா?" "நெஞ்சம் மகிழுதடி மஞ்சம் அழைக்குதடி வஞ்சகம் வேண்டாம் பெண்ணே கொஞ்சம் கருணை என்னிடம் காட்டினால் என்னடி?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 287 views
-
-
with Public ஏப்ரல் 2, உலக சிறுவர் புத்தக தினம் புத்தகங்கள் சிறார்களின் தனி உலகம் புத்தகங்கள் முடிவில்லா வசீகரம் எல்லையற்ற பேரானந்தம் புத்தகங்கள் கிடைத்தற்கரிய பொக்கிஷம் புத்தகங்கள் ஆர்வமுள்ள சிறாருக்கு அளவற்ற மகிழ்ச்சி தரும் புத்தகங்கள் …
-
- 0 replies
- 387 views
-
-
மாறுமா? *********** தேர்தல் திருவிழாக் காலமிது-தன் தேவைக்கு வாக்குறுதி மழை கொட்டும் நேரமிது. வாசலுக்கு வந்துநிற்கும் வருங்கால.. தலைவர்களைப் பாருங்கள் வாக்குறுதிப் பொட்டலத்தை வாங்கிப்பிரியுங்கள்-உள்ளே தேன் இருக்கும் தினைமா இருகும் தித்திகும் பண்டங்கள் நிறைந்திருக்கும்-தமிழ் தேவைகள் அனைத்தும் நிவர்த்தி செய்வதாய்-பல திட்டங்கள் எம்முன்னே கொட்டிக் கிடக்கும். வாக்குதனை வாங்கிப்போனபின்னோ? உங்களிடம்வெறும் வாய் மட்டுமேயிருக்கும். பசியிருக்கும் கியூவிருக்கும் பட்டினியே தொடர்திருக்கும் அரசமரத்தடியில் புத்தர் சிலையிருக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
"நீயின்றி நானில்லை" "நீயின்றி நானில்லை எதோ புலம்புகிறான் நீலவானின் கீழ் உணர்ச்சியில் உளறுகிறான் நீங்காத காதலென்று அவளுக்கு உறுதிகொடுத்து நீதியாய் நடப்பேனென்று சபதமும் செய்கிறான்!" "நீரின்றி உலகில்லை அவளின்றி அன்பில்லை நீலக்கண்ணீர் வடிக்கிறான் நாடகம் ஆடுகிறான் நீலகண்டன் நானென்று நஞ்சு கக்குகிறான் நீச்சல் அடிக்கிறான் ஆசை முடியுமட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 456 views
-
-
"முதல் - முடிவு கவிதை" / முதல்- தர்மம் & முடிவு- தலை காக்கும் "தர்மம் வகுத்த வழியில் நின்று கர்வம் மறந்து ஆசை துறந்து ஆர்வம் கொண்டு முனைப்புக் காட்டி அர்த்தம் உள்ள உதவி செய்யின் ஊர் வாழ்த்தும் உலகம் போற்றும்!" "தாய் தந்தை இருவரையும் மதித்து வாய்மை என்னும் பண்பு கொண்டு ஆய்ந்து அறிந்து நிதானம் தவறாமல் மெய்யாக மனிதம் போற்றி வாழ்ந்தால் செய்த நன்மை தலை காக்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 546 views
-
-
"பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்" "தூங்கையிலே உன் சிந்தனை வந்து தூதுவிட்டு என்னிடம் உன்னை அழைக்க தூண்டில் போட்டு இதயத்தை பறிக்க தூரிகை எடுத்து கவிதை வடிக்கிறேன் !" "வில் புருவமும் கயல் கண்களும் விரிந்த இதழும் சங்குக் கழுத்தும் விந்தை காட்டும் உடல் எழிலும் வியந்து நான் வரிகளில் எழுதுகிறேன் !" "மினுங்காத வைரத்தை மினுங்க வைக்க மிருதுவான கையை கோர்த்து பிடிக்க மிதலை பொழியும் அழகில் மயங்கிட மிகுந்த ஆசையுடன் உன்னை நாடுகிறேன் !" "உன்னழகை ரசிக்க வரம் கேட்டு உன்னுடலை அணைக்க தவம் இருந்து உன்சுகம் நாடி நான் வந்து உன் முணு…
-
- 0 replies
- 376 views
-
-
"வீழ்ந்தாலும் வித்தாகிடு!" "வீழ்ந்தாலும் வித்தாகிடு மீண்டும் முளைத்திடு வீரம் நிறைந்த தமிழன் நீயடா! வீசும் காற்றின் பக்கம் சாயாதே வீறு கொண்டு எழுந்து நில்லடா!" "தோல்வி கண்டு மனதில் குழம்பாதே தோழன் இருக்கிறான் துணை தர! தோரணம் கட்டி பின்னால் போகாதே தோண்டிப் பார் அவனின் நடத்தையை!" "மாண்டாலும் உன் நோக்கம் வாழனும் மாரி வெள்ளமாய் பரவி ஓடனும்! மானம் கொண்ட தலைமுறை பிறக்கனும் மாட்சிமை கொண்ட மரபு ஓங்கனும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 1.5k views
-
-
தேசம் சுமந்தவர்கள்-பா.உதயன்- I am building this bridge for him!” உலகத்தின் இருள் இன்னும் மறையவில்லை மானிடத்தின் அழகிய வாழ்வை எல்லாம் ஏதோ ஒன்று பறித்து செல்கிறது .தங்கள் இறுதிக் கால வாழ்வை அமைதியாக களிக்க வேண்டிய காலத்தில் எதிர்பாராதவகையில் முதியவர்களை பறித்து எடுத்துப் போகிறது இருள் சூழ்ந்த காலம் ஒன்று.இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்காக இந்த நகரங்களை தங்கள் தோள்களால் சுமந்து எழுப்பியவர்கள்.இதை நினைக்கும் பொழுது எல்லாம் அமெரிக்க கவிஞர் Will Allen Dromgoole எழுதிய (The Bridge Builder )பாலம் கட்டும் முதியவர் என்ற கவிதை நினைவுக்கு வருகிறது .ஒரு முதியவர் எந்த வலிகளையும் பார்க்காமல் பாலத்தை கட்டிக்கொண்டு இருக்க அதன் வழியால் சென்றவர் அவரை பார்த்து ஏ முதியவரே நீ இந்த உல…
-
- 0 replies
- 864 views
-
-
உறவுகள் உறவுகள் இருந்தனர் ஒரு காலம் ஒற்றுமை இருந்தது பலகாலம் கூடியே வாழ்ந்தனர் ஒரு கூட்டில் குலைந்து இப்போ போயினர் சில காலம் அன்புடன் இருந்தனர் ஒரு காலம் அப்பன் அம்மை சொல் படி நடந்தனர் ஆயிரம் சண்டைகள் பிடித்தனர் ஒரு காலம் அடுத்த நாள் மறந்தே சிரித்தனர் இரவின் நிலவில் கதை பேசி கதையில் கனவுகள் கண்டு வந்தோம் இருப்பதை பகிர்ந்து உண்டு வந்தோம் இல்லாது இருந்தும் சிரித்து இருந்தோம் கருப்பையில் விதைத்தது விஷம் இல்லை நாம் உண்டது ஒன்றும் நஞ்சு இல்லை இரத்தத்தில் இருப்பது ஒரு வேர் தான் இது தான் விதி என அறியாயோ வாழ்வுகள் இருப்பது சில காலம் வருவதும் போவதும் ஒரு காலம் உறவுகள் என்பது தொடர் காலம் இதை நீ உணர்வாய்…
-
- 0 replies
- 1.1k views
-
-
புத்தகப்பையுக்குள் போதையா! ************************ புனிதம் நிறைந்த கல்விச்சாலைக்குள் போதை வஸ்துக்கள் புகுந்ததாம்-நாளை புவியையாழும் மாணவச்செல்வங்கள் போரின்றியே உடல்கள் நொருங்குதாம். கல்வியை கல்லறையாக்கின்ற கயவர்கள் காரியம் அங்கு நடக்குதாம்-பாலுக்கு காவலிருப்பதும் பூனைகளா?வென கான்போர் மனமெல்லாம் துடிக்குதாம். போதையைப் புகுத்தி போதனை கெடுக்கும்-அந்த போக்கிரிக்கூட்டத்தை அழிப்போம்-நாளை சாதனை செய்யும் மாணவச் செல்வங்கள்-கழிவில் சறுக்கி விழுவதை தடுப்போம். உண்ண உணவின்றி தவிக்கும் நிலை கண்டும் உணரவில்லையா மாணவ,இளையோரே! எண்ணிப்பாருங்கள் இன் நிலை நீடித்தால் எனியும் சுடுகாடாய் ஈழ…
-
- 0 replies
- 559 views
-
-
"பூவாசம் வீசுதே" "பூவாசம் வீசுதே நீலக் கருங்குயிலே பூத்து குலுங்குதே புன்னகை உன்னிலே! பூவையர் கண்களும் உன்னை நாடுதே பூரண சந்திரனும் வெட்கித் தலைகுனியுதே!" "மஞ்சள் ஆடையில் செக்கச் சிவந்தவளே மருண்ட விழியால் பூரிப்பு தாராயே! மகிழ்ச்சி பொங்குதே இடுப்புச் சிறுத்தவளே மடவரல் இடையை கூந்தலும் வருடுதே!" "மனம் மயக்கும் அழகு மலர்களே மணம் வீசி இதயத்தை தொடுகிறாயே! மங்கையின் கையில் ஏன்தான் போனாய் மந்திர மொழியால் உன்னை ஏமாத்துகிறாளே!" "பக்குவமாக இருந்து பூவை முகர்ந்து பல்வரிசைக் காட்டி சித்தம் கலக்குகிறாளே! பவளக் கொடியாளே உதட்டு அழகியே பல்லாயிரம் பூக்களும் உனக்கு நிகரில்லையே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தி…
-
- 0 replies
- 863 views
-
-
"களிப்பும் கடலானதே துளிப்பா காதலிலே" "களிப்பும் கடலானதே துளிப்பா காதலிலே ஒளிரும் அன்பிலே துள்ளுதே கவர்ச்சி எளிய நடையும் அன்னநடை ஆகுமே துளி துளியாய் கொட்டும் மழையிலே!" "கள்ளி இவளின் இடை அழகில் அள்ளி வீசுது கொள்ளை இன்பம் உள்ளம் நாடுது கட்டி அணைக்க வெள்ளம் போல பாசம் பொங்குதே!" "விழிகள் இரண்டும் எதோ பேசுது ஆழி முத்துக்களும் ஈர்ப்பு இழக்குது தோழியாக்க மனது எனோ துடிக்குது அழியாத உறவு இது ஒன்றே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 273 views
-
-
"மண்ணைப் போல யாரு மில்லையே !" & "முதுமையும் இளமையும்" "மண்ணைப் போல யாரு மில்லையே !" "மண்ணைப் போல யாரும் இல்லையே மறந்து இன்று இப்படி சொல்லுகிறாய்! மண்ணும் பெண்ணும் வாழ்வின் சுவாசமே தாய்மை பண்பினை போற்றிடும் தெய்வங்களே!" "மண் இருந்தால் மரம் வளரும் மரம் வளர்ந்தால் நாடு செழிக்கும்! மங்கை இருந்தால் மழலை தவழும் மழலை மலர்ந்தால் உலகம் பிழைக்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................. "முதுமையும் இளமையும்" "காவோலை விழ க…
-
- 0 replies
- 735 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
"உடற்பயிற்சி..." / தன்முனைக் கவிதை "உடற்பயிற்சி மிகினும் குறையினும் உடம்பு பாதிக்குமே! உள்ளம் சீராகி தெளிவுபெறுவதும் உண்மை நன்மையே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 835 views
-
-
2004 ம் ஆண்டின் இயற்கையின் கோரத்தாண்டவம் சுணாமியாக அடித்து எம் உறவுகளை பறிகொடுத்த 16 ஆண்டுகளின் நினவாக..அன்று எனது மனத்துயரத்தை கவிதையாய் எழுதிப் படித்திருந்தேன் அன்றைய ஆறாக் கவலையை இன்றும் உங்களுடன் ..பசுவூர்க்கோபி https://www.youtube.com/user/PasuvoorkGobi
-
- 0 replies
- 824 views
-
-
'மாற்றம் மாறாதது' "காதல் தந்த பார்வையும் மங்கும் காமம் தந்த உடலும் கூனும் காடுகள் அழிந்து நகரங்கள் தோன்றும் காலம் மாறினாலும் மாற்றம் மாறாதது" "காலியான குளமும் நிரம்பி வடியும் காசுகள் தொலைந்து வறுமை வாட்டும் காவலர்கள் கூட கொள்ளை அடிப்பர் காலம் மாறினாலும் மாற்றம் மாறாதது" "உற்சாகம் தரும் வெற்றியும் தோல்வியாகும் அற்புதமான உடலும் கருகிப் போகும் முற்றத்து துளசியும் வெறிச் சோடும் மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது" "ஏற்றமும் இறக்கமும் மனதை மாற்றும் ஒற்றுமை குலைத்து பகையைக் கூட்டும் குற்றம் இழைத்தவனும் அரசன் ஆவான் மாற்றம்…
-
- 0 replies
- 342 views
-