Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. 2024/2025 *************** பழமைக்கு பிரியாவிடையும் புதுமைக்கு வரவேற்பும் இன்றிரவு 12 மணிக்கு! இழப்புகள், ஏற்றங்கள் துக்கங்கள், மகிழ்சிகள் வேதனைகள், சாதனைகள் வெறுப்புகள், வெற்றிகள எல்லாமே இரண்டறக் கலந்து எமக்குத் தந்தாய். அத்தோடு.. உலகச் சண்டைகளும் இயற்கையழிவுகளும் பொருளாதார சிக்கல்களும் தந்து.. பொறுமையிழக்க வைத்தாய். இத்துடன் முடிந்தது என்றுதான் இருந்தோம் உனது கோரப் பற்களால்-தென் கொறியா விமானத்தை தீயிட்டுக் கொளுத்தி 179 அப்பாவி உயிகளை தின்றுவிட்டுச் செல்கிறாயே இது நியாயமா? நீயே சொல். அவர்களின் துக்கத்தில் மூழ்கி உன்னை அனுப்பி வைக்…

  2. “செங்காந்தள்” [அந்தாதிக் கவிதை] "செங்காந்தள் முகிழ்விடும் நம் தேசமே தேசம் எமக்கு ஈன்ற மாவீரர்களே மாவீரர்களே எங்கள் நிலத்தின் தெய்வமே தெய்வமே உங்களுக்கு தீபம் ஏற்றுகிறோம் ஏற்றிய சுடரில் உங்களைக் காண்கிறோம்! காண்கிறோம் நேர் உரிமைப் போராட்டத்தை போராட்டம் காட்டிய உங்கள் வீரத்தை வீரத்தில் நீங்கள் உரைத்த நீதியை நீதி நிலைநாட்டிடச் செய்த தியாகத்தை தியாகம் விதைத்த பூமியே செங்காந்தள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  3. "மாட்டு வண்டியிலே பாட்டு வந்ததடி........" "மாட்டு வண்டியிலே பாட்டு வந்ததடி தொட்டு உறவாட கேட்டு நிக்கிறேன்டி" "மொட்டு மலருதையா மெட்டு போடுதையா பொட்டு வைக்கத் தட்டு தேடுதையா" "நாட்டுப் பாடலில் நயமாகப் பாடுகிறேன்டி காட்டு வழியிலே விறகு பொறுக்கப்போறவளே" "வாட்டும் வெயில் உனக்குப் புரியாதாடா கட்டு விறகை வந்து சுமக்கமாட்டாயோ" "வெட்டிப் பேச்சில் வெகுளி காட்டுறாயடி குட்டைப் பாவாடையில் என்னை ஆட்டுபவளே" "கேட்காத இனிமை காதில் தருபவனே வாட்டாத நிலவு நானென்று தெரியாதோ" "ஒட்டி உடையில் பெண்மை சொல்லுபவளே கட்டி அணைக்க நெஞ்சம் துடிக்குதடி" "நாட்டி வளர்த்த காதல் எல்லாம் கூட்டிக் குழைத்து உனக்குத் தரவாடா" "…

  4. வருடச் செய்முறை ------------------------------ முப்பது கிலோ கோழி இருபது கிலோ மீன் பதினைந்து கிலோ ஆடு இவற்றை கழுவி துண்டு துண்டாக்கி கறியாக்கவும் ஒரு பகுதியை பொரிக்கவும் 50 கிலோ அரிசி இதை சோறாக்கவும் பத்து கிலோ பருப்பு போதும் இதைவிடக் குறைய கத்தரிக்காய் வாழைக்காய் பயற்றங்காய் போன்றன இவற்றில் பொரித்த குழம்பு பொரிக்காத குழம்பு பால்கறி இப்படி எல்லாம் வைக்கவும் தேவையான அளவு பாகற்காய் பொரிக்கவும் மிளகாய் பொரிக்கவும் வடகம் பொரிக்கவும் வாழைக்காய் பொரிக்கவும் அப்பளம் பொரிக்கவும் ஊறுகாய் வாங்கவும் தயிர் வாங்கவும் நல்ல நாட்களில் வடை சுடவும் பாயாசம் வைக…

      • Like
      • Haha
    • 11 replies
    • 608 views
  5. Started by kandiah Thillaivinayagalingam,

    "குறள் 1163" "இளமை பருவம் அழகு கூட்ட இச்சை கொண்டு மனது ஏங்க இளைஞன் ஒருவன் நட்பு வேண்ட இணக்கம் சொல்லி காதல் வளர்த்தேன்!" "இதலை அவன் கை வருட இயைந்து நானும் விட்டுக் கொடுக்க இன்பம் தூய்த்து இருவரும் மகிழ இதழ் கொஞ்சி மனையாள் என்றான்!" "இதயம் இரண்டும் ஒன்று சேர இமைகள் நான்கும் மூடாமல் இருக்க இரத்த உறவுகள் சம்மதம் தர இல்லத்து முன்றலில் தாலி கட்டினான்!" "இடம் தேடி பொருள் சேர்க்க இரவு பகலாய் தனிய விட்டு இரக்கம் அற்ற காமம் சூழ இரதம் ஏறி பிரிந்து விட்டான்!" "இமயவன் ஆலய காவடி போல இச்சை வெட்கம் இர…

  6. ஆதியும் அந்தமும் கவிதை [துன்பம் / பிரிவில்லையே] "துன்பம் ஒன்றும் புதிது எனக்கல்ல இன்பம் என்றும் நிலைத்ததும் அல்ல! விண்ணில் பறந்தது நிலத்துக்கு விழும் மண்ணில் முளைத்தது மேகம் நோக்கும்!" "காதல் கொண்டேன் அவளை நம்பி மோதல் தந்து பிரிந்து போனாள் சாதல் தேடி குதித்தும் பார்த்தேன் நோதல் தந்தும் உயிர் பிரிவில்லையே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  7. Started by kandiah Thillaivinayagalingam,

    "விதை" "விதை விதைத்தவன் வினை அறுப்பான் விளைச்சல் தந்தால் பொருள் ஈட்டுவான் வித்து மடிந்தால் விம்மி அழுவான்!" "வாழ்வும் சாவும் மனித வயலில் தாழ்வும் உயர்வும் வளரும் பக்குவத்தில் விதைப்பு சரியாகட்டும் இதயம் செழிக்கட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  8. ஹைக்கூ கவிதைகள்: "துயிலுமில்லம்", "தமிழர் பாரம்பரியம்" & "காட்சிக்கேற்ற" "துயிலுமில்லம்" "கார்த்திகை திங்கள் தீபங்கள் ஏற்றி வழிபடுவோம் துயிலும் இல்லங்கள்" அல்லது "துயிலுமில்லம் ஆலயமே தீபங்கள் ஏற்றி வழிபடுவோம் இன்று கார்த்திகை " [எடுத்துக்காட்டு: மாவீரர்களின் நினைவுகள் கண்களைக் கலங்க வைக்கின்றன சிதைக்கப்பட்ட கல்லறைகள் - முல்லை நிரோயன்] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................... …

  9. "திருக்குறள்" [அந்தாதிக் கவிதை] & "ஊடல்" [அந்தாதிக் கவிதை] "திருக்குறள் சொல்லாதது ஒன்றும் இல்லை இல்லை என்போருக்குப் 'பொருள்' கூறி கூறிய தொடர்ச்சியாக 'அறம்' உரைத்து உரைக்கும் தொனியில் 'இன்பம்' சேர்த்து சேர்த்து கோர்த்து 'ஈரடி'யாய் சிறப்பித்து சிறப்பித்து தமிழுக்குத் தந்தான் திருக்குறள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ....................................................................... "ஊடல்" [அந்தாதிக் கவிதை] "ஊடல் இருந்தால் வரும் கூடல் கூடல் வந்தால் சுரக்கும் இன்பம் இன்பம் எல்லை மீறினால் துன்பம் துன்பம் உனக்கு புகட்டுவது அறிவு!" "அறிவு கொண்டு சிறப்பித்தல்…

  10. "சிந்தை சிதறுதடி" "சிந்தை சிதறுதடி மயானம் அழைக்குதடி உந்தன் காலடி வணங்கத் துடிக்குதடி! நிந்தை பேசா உன்னையும் கெடுத்தானே விந்தை உலகமடா கொடியவன் பூமியடா கந்தைத் துணியுடன் வீசிச் சென்றானே!" "தீந்தை விழியால் என்னை மயக்கியவள் சாந்தை பூசி பெட்டிக்குள் போறாளே! வேந்தையும் ஏழையும் ஒன்றே என்றவள் சுந்தரத் தமிழில் கொஞ்சிக் குலாவியவள் சந்திர ஒளியில் தீபமாய் ஒளிர்கிறாளே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  11. "நெஞ்சம் பாடும் வீரவணக்கம்" "நெஞ்சம் பாடும் வீரவணக்கம் இன்றோ வஞ்சம் செய்து மாண்டவர்கள் இவர்களோ கொஞ்சும் மழலையின் தலையும் சிதறியது கெஞ்சும் மங்கையின் கற்பும் பறந்தது தஞ்சம் புகுந்த அப்பாவிகள் எங்கேயோ?" "மஞ்சம் தேடிய போராட்டம் இதுவல்ல குஞ்சும் குழந்தைகளின் எதிர்காலம் நோக்கி விஞ்சும் அடக்குமுறையைத் தட்டிக் கேட்க மிஞ்சும் அநீதி கண்டு கொதித்தெழுந்த நெஞ்சு நிமிர்த்திய தியாகிகள் தெய்வங்களே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  12. உயிரோடு கரைதின்ற கடல்..! ************************************* கண் இமைக்குள் உனை வைத்தே! காலம் எல்லாம் வாழ்ந்தோம் கடல் எங்கள் தாயென்றே- உன்கால் ஓரம் கிடந்தோம். அலை கரத்தால் எம் உடலை அன்போடு தொடுவாய்…. அதை எடுத்து எம் நெஞ்சின் ஆழத்தில் புதைப்போம். உனை விட்டு ஒரு நாளும் ஊர் தள்ளி போகோம். உன் வாழ்வில் எம் வாழ்வை ஒன்றாகக் கலந்தோம். ஓர் இரவில் உன் உயரம் ஓங்கியது ஏனோ? உயிர் குடிக்க உந்தனுக்கு தூண்டியது யாரோ? தாயே தன் பிள்ளைகளின் தலை கொய்யலாமோ? தடை உடைத்து மதம் பிடித்து- எம்தடம் அழிக்கலாமோ? உன் மீது நாம் கொண்ட உயிர் பாசம் எங்கே? …

  13. "சிந்தை சிதறுதடி" [1] "சிந்தை சிதறுதடி மயானம் அழைக்குதடி உந்தன் காலடி வணங்கத் துடிக்குதடி! நிந்தை பேசா உன்னையும் கெடுத்தானே விந்தை உலகமடா கொடியவன் பூமியடா கந்தைத் துணியுடன் வீசிச் சென்றானே!" "தீந்தை விழியால் என்னை மயக்கியவள் சாந்தை பூசி பெட்டிக்குள் போறாளே! வேந்தையும் ஏழையும் ஒன்றே என்றவள் சுந்தரத் தமிழில் கொஞ்சிக் குலாவியவள் சந்திர ஒளியில் தீபமாய் ஒளிர்கிறாளே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  14. "மாற்ற மொன்றே மாறாதது" "மலைகள் உயரும் சிகரம் கவிழும் விதைகள் முளைக்கும் பூக்கள் வாடும் இன்று இருந்தவன் நாளை இல்லை காலம் காட்டும் உண்மை இதுவே!" "மழை பெய்யுது மண்ணை அரிக்குது பனி பொழியுது உயிர்களை முடக்குது வெயில் அடிக்குது நிலத்தை உலர்த்துது பருவம் செதுக்கும் செயல் இவையே!" "ஆறுகள் பாயும் ஓட்டம் வேறுவேறே சிற்றலை மோதும் வடிவம் பலபலவே காற்று வானம் எல்லாம் மாறுமே மாற்ற மொன்றே மாறாதது என்றுமே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  15. ஊதாரி ஊடகங்கள் ************************ எங்கு பார்த்தாலும் வலையொளித்தளங்கள் எதையெடுத்தாலும் எம்நாட்டுச் செய்திகள். உழைப்புக்காக ஊடக தர்மத்தை-சிலர் விலைக்கு விற்கும் வேடதாரிகள். தலைப்பில் மட்டும் உழைப்பை தேடுவார்-உள்ளே தரமில்லா செய்தியால் மடையராக்குவார் ஒருவரை உயர்வாய் ஓங்கியே கத்துவார் ஒருசில நாட்களில் ஏறியும் மிதிப்பார். செய்திகள் பற்றி கவலையே இல்லை சேரும் பணம்தான் அவர்களின் எல்லை ஆளுக்கொரு கமறா கிடைத்தால் அனைவரும் ஊடக அறிஞராய் நினைப்பார். ஏழை மக்களின் படங்களைக் காட்டி எல்லோர் மனதிலும் நெருடலை மூட்டி புலம்பெயர் பணத்தை தன்வசப்படுத்தும்-சில போக்கிரியர்களும் இணையத்தில்…

  16. "உயிர்களையும் நேசித்து நம்பியவர்களையும் நேசிப்போம்!" "உயிர்களையும் நேசித்து நம்பியவர்களையும் நேசிப்போம்! பயிர்களையும் வளர்த்து பட்டினியையும் ஒழிப்போம் துயரங்களையும் போக்கி எல்லோரையும் மகிழ்விப்போம் புயலும் மழையும் எம்மைத் தாக்கினாலும் அயலவர் அவலங்களை துடைத்து எறிவோம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  17. Started by kandiah Thillaivinayagalingam,

    "வானம்" "மேகங்கள் நகரும் வீதி கொண்டு மோகங்கள் தரும் வண்ணம் நீயே! தாகங்கள் தீர்க்கும் மழையைப் பொழிந்து சோகங்கள் துடைக்கும் கருணை வள்ளலே! போகங்கள் போக்கும் நிலவைத் தாங்கி தேகங்கள் வெப்பம் குறைக்கும் வானே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  18. "கனவுகள் ஊஞ்சலாடும் கார்த்திகைத் திங்களிது" "கனவுகள் ஊஞ்சலாடும் கார்த்திகைத் திங்களிது மனதில் வலிதரும் நடுகல் பூசையிது! மானத்தை விலைபேசா வீரனின் நாளிது இனத்தின் விடுதலை ஒன்றின் நினைவிது!" "குணத்தில் குன்றான இளைஞர்கள் உறங்கும் உணர்வில் அலையாடும் கல்லறை இது! நாணம் கொண்ட மங்கையரும் துணையாக காணத் துடித்த விடுதலையின் மண்ணிது!" "வானத்தில் வாழும் தெய்வங்கள் தொழ கானம் பாடும் மக்களின் உள்ளமிது! சினம் கொண்ட உரிமை மறுத்த அனல் கக்கும் மனிதனின் களமிது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  19. "அடக்கம் தடுக்க ஆசை நடக்க" "அடக்கம் தடுக்க - ஆசை நடக்க அச்சம் எச்சரிக்க - அழகு இழுக்க அடங்கா நெஞ்சம் - பொங்கி வழிய அணங்கே உன்னுடன் - நான் வரவா?" "ஆடை கொஞ்சம் - காற்றில் ஆட ஆபரணம் உடலில் - மின்னி ஒளிர ஆழம் தெரியா - சுந்தரி கவர்ச்சி ஆட்டிப் படைக்குது - என் உள்ளத்தை?" "இமைகளில் சிக்கி - என்னையே இழந்து இளையாள் இடையின் - வனப்பில் மயங்கி இருண்ட மேகஞ்ச்சுற்றிய - சுருண்டு கூந்தலிற்குள் இமைப் பொழுதில் - ஏன் வஞ்சித்தாய்?" "ஈரமான பூவே - இளமை பூவையே ஈகை ஒன்று - எனக்குத் தருவாயா ஈவு இரக்கம் - கொண்ட விறலியே ஈடிகை எடுத்து - உன்னை வரையவா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  20. ஒரு படைவீரர் இப்படி தன் நிலையைச் சொல்லியிருந்தார். இது அவரின் வார்த்தைகளே........... கொடுங்கோலின் கடைசிப் படைவீரன் ------------------------------------------------------------- என்னுடன் இருந்தவர்கள் என்னவானார்கள் என்று எனக்குத் தெரியாது சிலர் அந்தப் பக்கமாக போனார்கள் சிலர் இந்தப் பக்கமாக போனார்கள் நான் பிரதான தெருவுக்கு போக விரும்பினேன் அங்கிருந்து எந்த ஊருக்கும் போகலாம் பின்னர் என்னை யாருக்கும் தெரியாது அதன் பின் எனக்கு கவலையும் இல்லை ஒரு ஊருக்கு போனேன் பின்னர் இன்னொரு ஊருக்கு போனேன் எங்கும் மக்கள் கூட்டங்களாக கூடியிருந்தனர் அவர்கள் எல்லோரும் ஓடி விட்டனர் என்றனர் அழுத…

  21. "நீயின்றி நானில்லை" "நீயின்றி நானில்லை எதோ புலம்புகிறான் நீலவானின் கீழ் உணர்ச்சியில் உளறுகிறான் நீங்காத காதலென்று அவளுக்கு உறுதிகொடுத்து நீதியாய் நடப்பேனென்று சபதமும் செய்கிறான்!" "நீரின்றி உலகில்லை அவளின்றி அன்பில்லை நீலக்கண்ணீர் வடிக்கிறான் நாடகம் ஆடுகிறான் நீலகண்டன் நானென்று நஞ்சு கக்குகிறான் நீச்சல் அடிக்கிறான் ஆசை முடியுமட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  22. "காதல் ஈன்ற இன்பம் மகிழ்ச்சியே!" "புரிந்துணர்வில் புதிய பரிமாணம் கண்டு புத்தம்புது வாழ்வைக் கூடி அமைத்து புதுமை படைக்கும் எண்ணம் கொண்ட புதுமணத் தம்பதிகள் இல்லம் சொர்க்கமே!" "காரணம் தெரிந்து சொற்களை அளந்து காலம் அறிந்து மனம் ஒன்றி காமம் கலந்த பாசம் தரும் காதல் ஈன்ற இன்பம் மகிழ்ச்சியே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  23. "நிலவில் முகம் பார்த்து" "மஞ்சள் நிலவில் முகம் பார்த்து கொஞ்சும் மொழியில் இனிமை கண்டு நெஞ்சம் நிறைந்த காதல் கொண்டு மஞ்சம் காண மணம் முடித்து தஞ்சம் அடைந்தேன் அவள் மடியில்!" "மதியின் அழகு மனதைக் கவர விதியின் பயனில் அவளும் சேர புதிய மலராய் மகிழ்ச்சி மலர பதியாய் என்னை உவந்து ஏற்க கைதி ஆனேன் பாசக் கூண்டில்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  24. "பார்வைத் தீண்டலில் பாவையும் மலர்ந்தேன்" "பார்வைத் தீண்டலில் பாவையும் மலர்ந்தேன் ஆர்வம் கொண்டு ஆவலாய் பார்த்தேன் கர்வம் தொலைத்த கருணை கண்டேன் மார்பில் என் மாயவனை ஏற்றினேன்!" "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் கண்களின் பேச்சில் கன்னியும் கலங்கினாள் மண்ணின் வாசனையில் மலர்ந்த அவனை பண்பின் மகள் பல்லாண்டு வாழ்கவென்றாள்!" "விழிகளின் நடனத்தில் வித்தைகள் கண்டு மொழியின் அழகில் மொத்தத்தையும் கேட்டு ஆழியின் அலையாய் ஆடி ஓய்ந்து எழில் கொழிக்கும் என்னவனுடன் சேர்ந்தேன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  25. "தமிழ்மொழிப் பற்று" [அந்தாதிக் கவிதை] "தமிழ்மொழிப் பற்று ஓங்கட்டும் வளரட்டும் வளரும் குழந்தைகள் தமிழில் கதைக்கட்டும் கதைக்கும் ஒவ்வொன்றும் உண்மையைப் பேசட்டும் பேசும் போது நிதானம் இருக்கட்டும்!" "இருக்கும் நிலையை ஆராய்ந்து செயல்படட்டும் செயல்படும் அத்தனையும் நன்மை கொடுக்கட்டும் கொடுக்கும் இதயம் எவருக்கும் வேண்டும் வேண்டும் பொழுது எல்லோரையும் நினைக்கட்டும்!" "நினைக்கும் எதுவும் உண்மையைச் சொல்லட்டும் சொல்லும் செயலும் ஒன்றாய் மலரட்டும் மலரும் ஒற்றுமை இணைக்கட்டும் எல்லோரையும் எல்லோருக்கும் ஓங்கட்டும் தமிழ்மொழிப் பற்று!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.