Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. "குடையின் கீழ் தாயும் மகனும்" [படக் கவிதை] "குடையின் கீழ் தாயும் மகனும் எடுபிடி வேலையில் சிறு ஓய்வு! குட்டிச் சிறுவன் பசி தீர்க்கிறான் நனைந்த ஆடை வலியைக் காட்டுது வருடித் தாய் கருணை பொழிகிறாள்!" "செங்கல்லும் சுத்தியலும் அருகில் கிடக்குது அங்கங்கள் படும் பாட்டைக் குறிக்குது! தங்கமான மனசு வேதனைப் படுகுது குங்குமப் பொட்டு அழிந்து போயிட்டு மங்கலான வாழ்வை ஒளியேற்றத் துடிக்குது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  2. "நீயில்லா நானும் நீலமில்லா வானம்" "நீயில்லா நானும் நீலமில்லா வானம் நீரில்லா ஆறு மீனில்லா ஓடை வேரில்லா மரம் பட்டு விழும் ஊரில்லா இடம் காடாய் மாறுமே!" "காதல் கொண்ட என் பெண்ணே மோதல் தவிர்த்து அருகில் வந்திடு சாதல் கூட இன்பம் தருமே கூதல் காய மடியைத் தந்தால்!" "ஊடல் ஒன்றும் புதுமை இல்லை கூடல் உன்னுடன் வரும் என்றால் தேடல் கொண்டு மனம் வாடுது விடலைப் பருவம் உன்னை நாடுது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  3. "வானுயர்ந்த கற்பனைகள்" "வானுயர்ந்த கற்பனைகள் மனதில் ஓங்கட்டும் மண்ணுயிர் எங்கும் கருணை பொழியட்டும் வாட்டமற்ற செயல்கள் உலகைத் தழுவட்டும் கூட்டம்போடும் ஆடம்பரம் ஒழிந்து போகட்டும் விண்ணில் தோன்றும் வானவில் போல் கண்ணில் காணும் கனவு ஒளிரட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  4. ஏமாந்த கடிகாரம் ----------------------------- கையில் கட்டுவதெல்லாம் கடிகாரமே என்னும் பழைய ஒரு பிறவி நான் கடிகாரம் ஒன்றும் இருந்ததும் இல்லை எந்த வேளையிலும் இரவலாகவும் கட்டினதும் இல்லை மாமனார் கொடுத்த ஒன்று தங்கம் போல தகதகத்தது கல்யாணம் முடிந்த அன்றே கழட்டி வைத்தேன் இப்ப அது எங்கேயோ மாமாவிற்கு கடைசிக் காலத்தில் இதுவும் ஒரு கவலை ராத்திரி ஆழ்ந்த தூக்கம் இல்லை என்கின்றான் ஒருவன் எப்படி என்றால் அவனின் கடிகாரம் சொன்னது என்கின்றான் விளையாட்டின் நடுவிலேயே அய்யோ........... இதயம் எக்கச்சக்கமாக துடித்து விட்டது என்று அலறுகின்றான் இன்னொருவன் அதுவும் கடிகாரம் தான் சொன்ன…

  5. “பூநகரி மாடு கட்டிப் பூவரசங்குளம் ஏரு பூட்டி..” “பூநகரி மாடு கட்டிப் பூவரசங்குளம் ஏரு பூட்டி இளந்தாரி வயலைக் கிளற ஆடிப்பட்டம் தேடி விதைக்க காணி ஏங்கும் பயிர்கள் முளைக்க கூடிக் குலாவி மகிழ்வாக இருக்க பூத்து குலுங்கும் வாழ்வு தந்தானே!" "பத்தாது காணாது இனி இல்லையே மெய்யாச் சொல்லுகிறேன் கேளடா கதிரையில் காய்பவன் நாமல்ல கடுதாசியில் திட்டம்போடும் சோம்பேறி வேண்டாம் பெட்டை பெடியன் வெளிக்கிட்டு வெள்ளாமைசெய்ய கெதியாய் பூக்கும் வன்னி மண்ணே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  6. "இடையது கொடியாய் இளமையது பொங்க" "இடையது கொடியாய் இளமையது பொங்க நடையது அன்னமாய் நயனம் இமைத்து உடையது ஜொலிக்க உச்சாகம் தந்து சடையது அலைபாய சஞ்சலம் தந்தவளே!" "அழகில் மயிலாய் அன்பில் தாயாய் ஆனந்தத் தேனாய் ஆசைக்கு நாயகியாய் வானின் தேவதையாய் வாழ்க்கைக்கு துணையாய் தன்னையே தந்து தந்திரமாய் பறித்தவளே!" "பணிந்து உன்னை பலவாறு காட்டி பண்பின் திறனை பலவாறு விளக்கி பருவ எழிலை பலவாறு வீசி பந்தத்தை ஏற்படுத்தி பத்தினியாய் வந்தவளே!" "என்னை அறிந்து எல்லா…

  7. “முதுமையின் அரவணைப்பு” “முதுமையின் அரவணைப்பு தனிமையைப் போக்கும் பதுமையுடன் விளையாடும் மழலைப் போலவே! பெதுமை பருவத்தில் மகிழ்ச்சி காணும் புதுமை செய்யும் குழந்தை போன்றே!" "பாளையாம் செத்தும் பாலனாம் செத்தும் காளையாம் செத்தும் இளமை செத்தும் மூப்பும் ஆகியும் மூலையில் ஒதுக்கியும் தனித்து விட்ட கொடூரம் எனோ?" "பொன்னேர் மேனி அழகு இழந்து நன்னெடுங் கூந்தல் நரை விழுந்தாலும் மாறாத அன்பு நிலைத்து நிற்க வயதான மக்களைத் தழுவ வேண்டும்!" "இளமை நீங்கி உடலும் மெலிய தளர்ச்சி பெற்று கோலிற் சாய களைப்பு கொண்ட உள்ளம் ஆற பாசம் கொடுக்கும் கைகள் தேவை!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  8. "இடிமுழக்கம்" [அந்தாதிக் கவிதை] "இடிமுழக்கம் வானில் பெரிதாய் கேட்கும் கேட்கும் சத்தமோ மின்னலின் எதிரொலி! எதிரொலியின் பின்னே எதோ இருக்கும் இருக்கும் அதுவோ நல்லதாய் அமையட்டும்! அமையும் எதுவும் குழப்பத்தில் முடிந்தால் முடியும் அதுவோ ஒரு இடிமுழக்கம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  9. "கற்றதை ஏற்றுக் கடமையை ஆற்று....!" "கற்றதை ஏற்றுக் கடமையை ஆற்று ஏற்றதை எடுத்து மக்களுக்கு வழங்கு மற்றதை தவிர்த்து தூக்கி எறிந்து சுற்றத்தை மதித்து நட்பை வளர்த்து குற்றத்தைக் கண்டால் நீதி நிறுத்தி மாற்றத்தை வேண்டி நடந்து செல்!" அறிவு கொண்ட கொள்கை வழியில் அலசி ஆராந்து முடிவு எடுத்து அன்பு பாயும் மக்களையும் சேர்த்து அச்சம் இல்லா சமூகம் அமைத்து அடிமை ஒழித்த வரலாற்றை தனதாக்கி அக்கினிப் பிழம்பாய் எழுந்தால் என்ன?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  10. Started by kandiah Thillaivinayagalingam,

    "குமிழி" "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வைக் கனவு கண்டான்!" "நீர்க்கோல வாழ்வை நச்சி அவன் நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென பொய் சொன்னான்!" "பிறந்தவர் சாதல் நிச்சியம் என்றாலும் பிணம் என்றே இறுதியில் அழைத்தாலும் பித்தனாக உலக நீதிகளை மதிக்காமல் பிதற்றித் திரிகிறான் அதட்டி வாழ்கிறான்!" "கருப்பையில் பிறந்து மண்ணோடு சேர்பவன் கடுகு அளவும் இரக்கம் இன்றி கண்ணியமான வாழ்வு …

  11. "விழியற்ற தராசு" "விழியற்ற தராசு நீதி தராது அழிவுற்ற சமூகத்துக்கு விடை கொடுக்காது! வலியற்ற வாழ்க்கை உண்மை அறியாது நலிவுற்ற மக்கள் கவலை புரியாது!" "உறவற்ற குடும்பம் நிம்மதி அடையாது இரவற்ற உலகம் தூக்கம் கொள்ளாது! திறனற்ற செயல் வெற்றி சூட்டாது உரமற்ற பயிர் பலன் தராது!" "ஈரமற்ற உள்ளம் கருணை காட்டாது தரமற்ற செயல் நன்மை ஈட்டாது! நிறைவற்ற நட்பு அன்பைக் கொட்டாது சிறகற்ற பறவை காற்றில் பறக்காது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  12. "நீரின்றி உலகில்லை நீயின்றி நானில்லை" "நீரின்றி உலகில்லை நீயின்றி நானில்லை நீலக்கண்ணீர் வடிக்கிறான் நீலவானின் கீழே! நீங்காத காதலென்று அவளும் நம்பி நீதியாய் நடப்பானென்று மகிழ்வில் மிதந்தாள்!" "அன்பு பேச்சில் மனத்தைத் தொலைத்து அச்சம் மடம் நாணம் மறந்து அன்னை ஈன்ற உடல் முழுவதையும் அழகு கொட்டிட அவனுக்கு கொடுத்தாள்!" "அமைதியான ஓடத்தில் ஆசைகளும் தீர அம்புலி தன்னை மேகத்தால் மறைக்க அந்தரத்தில் விட்டுவிட்டு எங்கோ போனான் அணங்கு அவளோ நீருடன் சங்கமித்தாள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]

  13. நம்பிக்கை ஒளி தெரிகிறது! ******************************** பேய்களையெல்லாம் ஓடக் கலைத்து பெருந்துயரனைத்தும் தீயில் கொளுத்தி புதுமுக வரவால் பொங்குது மண்றம் பொறுப்போம் விரைவில் விடியுமெம் தேசம். குடு குடு கிளடுகள் கதிரையில் இல்லை குடும்ப ஆட்சியும் கோட்டையில் இல்லை கொள்ளையும் திருட்டும் வரப்போவதில்லை கோயிலும் மசூதிக்கும் அழிவேதுமில்லை. இனங்களைப் பிரிக்கும் தந்தரமில்லை இளையோர் நெஞ்சில் வஞ்சகமில்லை எனிவரும் காலம் பஞ்சமுமில்லை எல்லோர் மனத்துக்கும் துன்பமுமிலை. தமிழர் தரப்பிலே ஒற்றுமையில்லை தனித் தனி சுயநலம் தேவையுமில்லை-சிலர் போரின் அவலத்தை புரிந்ததேயில்லை போன கதிரயை மறப்பதேயில்லை. தெற்கைப் போலவே திடமாய் நீ சேரு தென்றலாய் மண…

  14. அந்தாதிக் கவிதை / "நல்லதே நடக்கும்" "நல்லதே நடக்கும் நன்மை செய்வோம் செய்வது எதுவும் பெருமை கூட்டட்டும் கூட்டுவதும் கழிப்பதும் இயற்கையின் விளையாட்டு விளையாடல் இல்லையேல் வாழ்வு இனிக்காது இனிப்பது எதிலும் கவனம் எடுத்திடு!" "எடுத்த அடியை பின்னோக்கி வைக்காதே வைக்காதா தீர்வால் நேரத்தை வீணாக்காதே வீணாக்கும் எதுவுமே திரும்பி வராதே வராததை மறந்து செய்திடு நல்லது நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  15. குப்பையிலிருந்து குப்பை --------------------------------------- நல்ல எழுத்தா........... அதை யார் வாசிப்பார்கள் ஏதாவது கேளிக்கையாக இருந்தால் சொல் என்றோம் முடிவு: இன்றைய எழுத்து எதுவும் நாளை நிற்காது. கலைப் படமா.................. இருக்கிற பிரச்சனை போதாதா ஜனரஞ்சகமா ஏதாவது வந்தால் சொல் என்றோம் முடிவு: வந்தது கங்குவா. அரசியல்வாதியா............ அவர் நல்ல பகிடி ஆளும் பார்க்க நல்லா இருக்கின்றார் அவரே பிரதிநிதி என்றோம் முடிவு: எல்லாமே பகிடி எதுவுமே வெற்றி இல்லை. கருத்துச் சொல்கின்றாயா......... அதெல்லாம் போதும் ஏதாவது சிரிக்க சிரிக்க இருந்தால் சொல் என்றோம் …

  16. "விழிகள் மீனோ மொழிகள் தேனோ" "விழிகள் மீனோ மொழிகள் தேனோ பற்கள் முத்தோ இமைகள் சிப்பியோ கழுத்து சங்கோ மார்பு குடமோ முகம் நிலவோ நெற்றி பிறையோ யான் அறியேன் அழகு மங்கையே உன்னைக் காண இதயம் துடிக்குதே உலகம் கூட எனக்கு வெறுக்குதே கண்ணே கரும்பே அருகில் வருவாயோ?" "புருவம் வில்லோ நடை அன்னமோ கூந்தல் அறலோ இடை உடுக்கையோ சாயல் மயிலோ மூக்கு குமிழாம்பூவோ தோள் மூங்கிலோ விரல் காந்தள்மலரோ வாலிப்பதை தூண்டி வலையில் வீழ்த்திட்டாயே ஆழ்ந்த ஆசையில் விண்ணில் பறக்கிறேனே இனிய இசையும் இடியாய் கேட்குதே மானே மடமகளே நெருங்கி அணைக்காயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  17. "அன்பின் வடிவே அழைப்பது புரியாதா?" "அன்பின் வடிவே அழைப்பது புரியாதா பண்பின் இருப்பிடமே பழகியது தெரியாதா அன்ன நடையாளே அருகினில் வருவாயா சின்ன இடையாளே சினம் மறவாயா மண்ணின் வாசனை அள்ளி வீசுபவளே வண்ணப் பூந்தென்றலே தோள் சாயவா?" "உண்மையை உணர்ந்து உள்ளம் தாராயா கன்னக் குழிக்குள் என்னை வீழ்த்தாயா மின்னல் வேகத்தில் தோன்றி மறைபவளே எண்ணம் எல்லாம் என்றும் நீதானே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  18. "உடற்பயிற்சி..." / தன்முனைக் கவிதை "உடற்பயிற்சி மிகினும் குறையினும் உடம்பு பாதிக்குமே! உள்ளம் சீராகி தெளிவுபெறுவதும் உண்மை நன்மையே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  19. குறள்மொழி இன்பம் / ★யாம்◆ வேண்டும்◆ கௌவை★ / குறள் 1150 "வம்பு பேசும் என் ஊரே வசனம் அறிந்து அளவாய் பேசு வண்டுகள் மொய்க்கும் மலர் நானல்ல வசவி ஆக என்னை நினைக்காதே!" "வட்டம் போட்டு குந்தி இருந்து வஞ்சம் இன்றி கதை பரப்பி வதுகை ஆக என்னை மாற்ற வரிந்து கட்டிய அலருக்கு நன்றி!" "வயல் வெளியில் என்னை சந்திக்க வனப்பு மிக்க என் காதலன் வருவான் என்னை துணை ஆக்க வருந்த வேண்டாம் வாழ்த்துங்கள் அப்பொழுது!" "வளமான வாழ்வு எமக்கு அம…

  20. மூடிய என் முகம் -------------------------- என் முகமூடியை எப்போதும் நான் இறுகப் போட்டிருக்கின்றேன் அறிவு தெரிந்த அந்த நாளில் இருந்து வீட்டில் பாடசாலையில் வெளியில் வேலையில் இந்த முகமூடி எனக்கு அணியப்பட்டது நானும் இதை விரும்பி ஏற்றேன் ஆகக் குறைந்த ஒரு அடையாள மறுப்பு கூட காட்டாமல் போகுமிடம் எங்கும் இருக்குமிடம் எங்கும் கதைக்கும் இடம் எங்கும் இதை இறுக்கிக் காக்கின்றேன் இப்பொழுதெல்லாம் சில தனிமைகளில் அதை விலக்கி பார்க்கும் போது பரிதாபப்படுகின்றேன் எனக்காக தனி ஆளும…

      • Like
      • Thanks
    • 4 replies
    • 503 views
  21. அந்தாதிக் கவிதை / “தன்மானம்” "தன்மானம் தழைக்க தற்சார்பு ஓங்கும் ஓங்கிய எண்ணம் மனதில் பதியும் பதிந்த பெருமிதம் துணிவு தரும் தருவது எதையும் தெரிந்து எடுப்போம் எடுத்த கொள்கையில் திடமாய் நிற்போம்!" "நிற்கும் ஒன்றில் வளர்ச்சி இருக்கும் இருக்கும் ஒன்றை பேசுதல் சிறக்கும் சிறக்கும் கருத்து எதிலும் உதவும் உதவும் வாய்ப்புக்கள் தூக்கி ஏற்றிடும் ஏற்றிடும் ஏணியாய் நிற்பதே தன்மானம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  22. பூச்சிய மாற்றம் --------------------------- வீட்டுக் கதவினூடு வெளியேறியதும் இன்னொரு நாடு வருகின்றது எத்தனை தடவைகள் கதவைத் திறந்து நான் போய் வந்தாலும் அது பழக்கமில்லாத இடமாகவே இருக்கின்றது அதனூடு என் நாட்டிற்கு போய் என்னவர்களுடன் நான் வட்டமாக இருக்கின்றேன் விளையாடுகின்றேன் சிரிக்கின்றேன் சில வேளைகளில் நாங்கள் சேர்ந்து அழுவதும் உண்டு மீண்டும் அதே பாதையில் அந்த நாட்டை கடந்து வீட்டின் கதவை திறந்து உள்ளே வந்ததும் இது தான் என் இடம் என்று மீண்டும் நிமிர்கின்றேன் வீட்டினுள் இருந்து மாற்றம் ஒன்றே மாறாதது மாறுங்கள் மாறுங்கள் என்று எழுதிக் குவிக்கின்றேன் …

      • Haha
      • Like
      • Thanks
    • 9 replies
    • 746 views
  23. "வாராயோ வான்மதியே" "வாராயோ வான்மதியே கண்டாயோ என்னவளை தீராத காதலில் வருந்துவது தெரியாதோ? தாராயோ நிம்மதி உன்னிடம் கேட்கிறேனே மாறாத அன்பில் இன்னும் அலைகிறேனே ஆறாத காயங்களின் வலியில் தவிக்கிறேனே பாராயோ என்னைக் கருணை காட்டாயோ?" "வெண்ணிலாவின் ஒளியிலே அவளைத் தேடுகிறேனே கண்கள் இரண்டும் சோர்வு அடைகிறதே மண்ணின் வாழ்வை முடிக்கும் முன்பே பெண்ணே மன்னித்து என்னை அணைக்காயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  24. புல்லை வெட்டுங்கோ ---------------------------------- நாலு நாள் ஆகிவிட்டது ஒவ்வொரு குழாயின் கீழும் அண்டா குண்டா என்று வைத்து தேனும் பாலும் இனி வீடு தேடி வரும் என்றனர் வைத்த அண்டாவும் குண்டாவும் அப்படியே காத்து வாங்கிக் கொண்டு காத்துக் கிடக்கின்றன தேன் எப்ப வரும் பால் எப்ப வரும் என்று கொஞ்சம் முன்னரே சொன்னால் தனி தனியே பிடித்து வீடு முழுக்க வைத்துக் கொள்வேன் எட்டு வருடம் முந்தியும் வரும் வரும் என்றீர்கள் வரவே இல்லை கடைசி மட்டும் பின்னர் நீங்கள் போய் விட்டீர்கள் இப்ப வந்து விட்டீர்கள் இந்த தடவை என்றாலும் ஓட விடுங்கள் பாலையும் தேனையும் …

  25. மண்டியிடும் மன்னர்கள் ------------------------------------- இரண்டு சிறு குழந்தைகளுடன் இருவர் நாங்கள் இந்த வீட்டிற்கு அநேக வருடங்களின் முன்னொரு நாள் குடி வந்தோம் பன்னிரண்டு வீடுகள் உள்ள தெருவில் பதினொரு மன்னர்கள் குடி இருந்தனர் சில மன்னர்கள் பேசினர் சிலர் வெறும் புன்னகை மட்டும் சிலர் எங்களைக் காணவேயில்லை அடைமழை நாளென்றில் கடும் காற்றில் என் முன் நின்ற பெரும் மரம் காற்றின் முன் மண்டியிட மறுத்து முறிந்து விழுந்தது மன்னர்கள் ஓடி வந்தனர் அவர்கள் வீடுகளுக்கும் சேதமில்லை என் வீட்டிற்கும் சேத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.