தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
’நடக்கட்டும் பொதுவாக்கெடுப்பு; மலர்க தமிழ் ஈழம்’ ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் முழங்கிய வைகோ! ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திப் பேசினார். ஜெனிவாவில் மனித உரிமைக் கவுன்சிலின் 36-வது அமர்வு செப்டம்பர் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், உலக நாடுகள் அனைத்திலும் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜெனிவா சென்றுள்ளார் ம.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் வைகோ. ஜெனிவா க…
-
- 0 replies
- 396 views
-
-
முதலில் ராஜ்நாத் சிங் அடுத்து ஜனாதிபதி... வித்யாசாகர் ராவின் டெல்லி மூவ்! டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஜனாதிபதியை அவர் சந்திக்க உள்ளார். தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணிகள் இணைந்தபோதும், அதிகாரத்துக்கான சண்டைகள் ஓயவில்லை. கடந்த மாதம் ஆளுநரைச் சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கடிதம் அளித்தனர். மேலும், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று, அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனிட…
-
- 1 reply
- 448 views
-
-
18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம்! சபாநாயகர் அதிரடி நடவடிக்கை டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக, தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்திருந்தனர். அவர்களில் ஜக்கையன் தவிர, 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில் விரிவான செய்தி. http://www.vikatan.com/news/tamilnadu/102569-18-mlas-supporting-ttv-dinakaran-is-disqualified-by-speaker.html
-
- 13 replies
- 2.3k views
-
-
19 தொகுதிகளில் தேர்தல் முதல்வர் திடீர் முடிவு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை தகுதி நீக்கம் செய்து விட்டு, ஆர்.கே.நகருடன் சேர்ந்து, 19 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து, முதல்வர் பழனிசாமி, சட்ட நிபுணர்களுடன் ஆலோனை நடத்தியதாக தகவல் கசிந்துள்ளது. 'முதல்வர் பழனிசாமிக்கு அளிக்கும் ஆதரவை திரும்ப பெறுகிறோம்' என, கவர்னரிடம் கடிதம் கொடுத்த, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 19 பேருக்கு விளக்கம் கேட்டு, சட்டசபை சபாநாயகர் தனபால், 'நோட்டீஸ்' அனுப்பினார். இதில், ஜக்கையன் மட்டும் பதில் அளித்தார்; அத்துடன், முதல்வர் அணிக்கும் மாறினார். ஆனால், ம…
-
- 0 replies
- 625 views
-
-
ஜெ., சிகிச்சை போட்டோ வெளியிட தினகரன் திட்டம் 'ஜெயலலிதா மரணத்திற்கு, சசிகலா குடும்பமே காரணம்' என, அமைச்சர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டி வரும் நிலையில், சிசிச்சை தொடர்பான போட்டோக்களை வெளியிட தினகரன் திட்டமிட்டுள்ளார். அ.தி.மு.க.,வின் இரு அணிகள் இணைந்த பின், தினகரன் மீது, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சரமாரியாக குற்றம் சாட்டி வருகின்றனர். செப்., 15ல், வடசென்னையில் நடந்த பொது கூட்டத்தில், 'தினகரன், மாமியார் வீட்டிற்கு செல்வார்' என, முதல்வர் பழனிசாமி ஆவேசமாக பேசினார். அவரைத் தொடர்ந்து, 'தினகரன் கதை, இன்னும் மூன்று நாட்களில் முடியும்' என, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார். '…
-
- 1 reply
- 590 views
-
-
சசி சிறையில், 'ரெய்டு' ஏன்? பரபரப்பு தகவல் அம்பலம் பெங்களூரு: சசிகலா அடைக்கப்பட்டுள்ள, பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில், முறைகேடுகள் தொடர்ந்ததால் தான், 'ரெய்டு' நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, கர்நாடக மாநிலம்,பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்று, போலீஸ் உயர் அதிகாரிகள், சசிகலாவுக்கு, சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்ததாக, ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா, பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறிஇருந்தார். இது தொடர்பாக, உயர்மட்ட விசாரணையும் நடக்கிறது. சசிகலாவுக்கு வ…
-
- 0 replies
- 468 views
-
-
சசிகலாவின் சிறை சொகுசு வாழ்க்கையை வெளிப்படுத்திய டிஐஜி ரூபாவுக்கு ஜனாதிபதி விருது:- பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாக முறைப்பாடு தெவித்த டிஐஜி ரூபாவுக்கு கர்நாடக அரசு ஜனாதிபதி விருது வழங்கி கெளரவித்துள்ளது. பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு யோகா செய்வதற்கு, சமைப்பதற்கு, பார்க்க வருபவர்களை சந்திப்பதற்கு என தனி அறைகள், சிறப்புச் சாப்பாடு, உள்ளிட்ட பல சலுகை அளிக்கபப்ட்டதாக டிஐஜி ரூபா ஆதாரங்களுடன் குற்றம்சாட்டினார். அதுகுறித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டார். இது, தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனையடுத்து, சசிகலாவுக்கு விதிகளை மீறி வழங்கப்பட்ட ச…
-
- 1 reply
- 423 views
-
-
முன் குறிப்பு இக்கட்டுரை மிகப்பெரியது எனவே, உங்களுக்கு நேரம் இருக்கும் போது அவசரப்படாமல் பொறுமையாகப் படியுங்கள். கூடுமானவரை முழுவதும் படிக்க முயற்சி செய்யுங்கள். வேண்டுகோள் மாற்று எண்ணம் கொண்டுள்ளவர்களைக் கோபப்படுத்துவது என்னுடைய எண்ணமல்ல. இந்தித் திணிப்பால் ஏற்படும் இழப்புகளை அபாயங்களை எடுத்துக் கூறுவது மட்டுமே! ஏற்கனவே, இந்தித் திணிப்பு குறித்து எழுதி இருக்கிறேன். இதில் கூறப்பட்ட சில கருத்துகள் திரும்ப வரலாம், அவை கூற நினைக்கும் கருத்துக்களுக்கு வலு சேர்க்கவே. Read: இந்தித் திணிப்பும் மொழி அழிப்பும் இந்தியாவின் அலுவல் மொழிகள் ஆங்கிலமும் இந்தியும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ அலுவலக மொழிகளாக உள்ளது. எனவே, அனைத்து இடங்களிலும் இவை இரண்ட…
-
- 3 replies
- 2.7k views
-
-
முதல்வர் பழனிசாமி அரசு, மெஜாரிட்டியை நிரூபிக்க, இந்த வாரம் சட்டசபை கூடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து முடிவு செய்ய, கவர்னர் வித்யாசாகர் ராவ், நாளை சென்னை வருகிறார். பலப்பரீட்சையை சந்திக்க, ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தயாராகி வருகின்றன. தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர், ஆகஸ்ட், 22ல், கவர்னரை நேரில் சந்தித்து, முதல்வருக்கு அளித்து வரும் ஆதரவை, வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். இதனால், முதல்வருக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சட்டசபையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என, எதிர்க்கட்சிகளும், கவர்னரை சந்தித்து வலியுறுத்தின. …
-
- 0 replies
- 439 views
-
-
ஆட்சி கவிழ்ப்பு முயற்சியால் அமைச்சர்கள் ஆவேசம்: முதல்வர் பழனிசாமி - தினகரன் மோதல் உச்சகட்டம் - சிறைக்கு செல்வீர்கள் என ஒருவருக்கு ஒருவர் பகிரங்க மிரட்டல் டிடிவி தினகரன் சிறைக்குச் செல்வார் என முதல்வர் பழனிசாமியும், முதல்வரும் அமைச்சர்களும் சிறைக்கு செல்வார்கள் என டிடிவி தினகரனும் மாறி மாறி எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், இரு தரப்புக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அதிமுகவில் 21 எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து, ஆட்சியை கலைப்பேன் என்று தினகரன் பேசி வருகிறார். நீதிமன்றத்திலும் தினகரன் தரப்பில் வழக்குகள் உள்ளன. இது மட்டுமின்றி, ஆளுநர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பெ…
-
- 0 replies
- 296 views
-
-
'அக்டோபரில் பொதுக்குழு!' - எடப்பாடி பழனிசாமிக்கு சிறையிலிருந்து 'ரெட் அலெர்ட்' #VikatanExclusive அ.தி.மு.க அம்மா அணி சார்பில், அக்டோபரில் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த முடிவுசெய்துள்ளார் சசிகலா. அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 'செக்' வைக்க சசிகலா ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து, கடந்த 12-ம் தேதி பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தினர். அதில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 8--வது தீர்மானத்தில், சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனம் ரத்து செய்யப்படுவதாகவும் அவரால் நியமிக்கப்பட்ட, நீக்கப்பட்டவ…
-
- 0 replies
- 387 views
-
-
”ஸ்டாலின் - எச்.ராஜா சந்திப்பில் மனசு என்ன பேசிக் கொள்ளும்? " - கேள்வி எழுப்பிய அரசியல் விமர்சகர் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு தமிழக அரசியல் களம் தலைகீழான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.தி.மு.க-வுக்கு அ.தி.மு.க தான் எதிர்க்கட்சி என்பதைவிட, தற்போது பி.ஜே.பிதான் எதிர்க்கட்சியாக உருவாகியுள்ளது. அண்மை காலமாக அ.தி.மு.க., தி.மு.க-வைச் சேர்ந்த தலைவர்கள் பரஸ்பரம் விமர்சித்துக் கொள்வதை விட , தி.மு.க தலைவர்களும் பி.ஜே.பி தலைவர்களும் ஒருவருக்கு ஒருவர் கடுமையான விமர்சனங்களை அள்ளி வீசி வருகின்றனர். இந்த நிலையில் பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் எச்.ராஜா தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் அவர்களைச் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் களத்தில் கவனம் பெற்ற…
-
- 0 replies
- 507 views
-
-
‛இனியும் இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது': நள்ளிரவில் ஜெ., நினைவிடத்தில் தீபா சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., நினைவிடத்தில், எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவையின் நிறுவனர் தீபா, அவரது கணவன் மாதவன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். நள்ளிரவு சுமார் 12.20 மணியளவில் மரியாதை செலுத்திய தீபா, பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: அ.தி.மு.க.,வை காக்க வேண்டும் என்பதே என் லட்சியம். காவல்துறையின் கட்டுப்பாட்டில் தற்போது தமிழகம் செயல்பட்டு வருகிறது. மக்களுக்காகவே என் அரசியல் செயல்பாடுகள் இருக்கும். நீட் தேர்வை தமிழக மீனவர்கள் மீது திணிக்கக்கூடாது. …
-
- 0 replies
- 364 views
-
-
இரட்டை இலை சின்னம் யாருக்கு?- தேர்தல் ஆணையம் அக்.31க்குள் இறுதி முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு உயர் நீதிமன்ற மதுரை கிளை | கோப்புப் படம். இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து தேர்தல் ஆணையம் அக்.31க்குள் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''அதிமுகவின் அதிகாரபூர்வ சின்னமாக 45 ஆண்டுகளாக இருந்து வரும் இரட்டை இலையை அக்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக தேர்தல் ஆணையம் முடக்கியது. அதிமுக நிர்வாகக் குழு தேர்தல் நடத்தி அதில் வெற்றி பெறும் அணியிடம் இரட்…
-
- 0 replies
- 358 views
-
-
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிபிஐ தன்னிடம் விசாரிக்க வேண்டுமே தவிர தன் மகன் கார்த்தி சிதம்பரத்தை துன்புறுத்தக் கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். வியாழக்கிழமையன்று கார்த்தி சிதம்பரத்தை நேரில் ஆஜராகி ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணையை எதிர்கொள்ள சிபிஐ அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர் அனைவரையும் விடுவித்து விசாரணையையே முடிக்குமாறு உத்தரவிட்டிருந்ததையடுத்து கார்த்தி சிதம்பரம் ஆஜராக மறுத்து விட்டார். ஆனால் இது உண்மையல்ல விசாரணை இன்னும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது என்று சிபிஐ தரப்பில் கார்த்தி சிதம்பரம் கூற்றை மறுத்தனர். “சிபிஐ என்னையே விசாரிக்க வேண்டுமே தவ…
-
- 0 replies
- 323 views
-
-
ரிசார்ட்டில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ-க்கள் குறித்து கமல் கடும் விமர்சனம் தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள், தற்போது கர்நாடகாவில் இருக்கும் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார். ஜாக்டோ - ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களுக்கு, போராட்ட நாள்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இன்று நீதிமன்றமும் தடையை மீறி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துவது குறித்து தங்களது கண்டனத்தைப் பதிவுசெய்தனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இதுகுறித்து தனது ட்விட்…
-
- 0 replies
- 380 views
-
-
புதுக் கட்சி தொடங்குவது குறித்து கமல் அதிரடி அறிவிப்பு! சமீப காலமாக தமிழக அரசியல் குறித்து தொடர் கருத்துகள் கூறி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். அவர் சில நாள்களுக்கு முன்னர் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தார். அப்போது, 'கேரள முதல்வரிடம் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினேன்' என்று வெளிப்படையாகவே அறிவித்தார். சீக்கிரமே கமல் தீவிர அரசியலில் களமிறங்குவார் என்று ஆருடம் சொல்லப்பட்டது. இந்நிலையில், ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கமல்ஹாசன், 'தனிக்கட்சி தொடங்குவது குறித்து மிகவும் தீவிரமாக யோசித்து வருவதாக' கூறியுள்ளார். அந்தப் பேட்டியில் மேலும், 'நான் தனிக்கட்சி தொடங்குவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவது உ…
-
- 11 replies
- 1.6k views
-
-
செப். 20 வரை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உயர் நீதிமன்றம் தடை! செப்டம்பர் 20-ம் தேதி வரை பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்ததைத் தொடர்ந்து 19 எம்.எல்.ஏ-க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருந்துவருகின்றனர். எனவே, சபாநாயகரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களைத் தகுதி நீக்கம் செய்வதற்கு எடப்பாடி அணி முயற்சி செய்துவருகிறது. எனவே, சபாநாயகர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் வழக்கு தொடர்ந்தனர். அதுதொடர்பான வழக்கு…
-
- 0 replies
- 326 views
-
-
பெங்களூரு சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை தொடர்கிறதா? - கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி மறுப்பு சசிகலா | கோப்புப் படம் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு விதிமுறையை மீறி, தொடர்ந்து சிறப்பு சலுகை வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா, ‘சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு அறை, சிறப்பு உணவு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படு…
-
- 0 replies
- 489 views
-
-
நடிகர் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து கமல்ஹாசன் விமர்சித்து வருகிறார். தினந்தோறும் நடக்கும் சமூக பிரச்சனைகளுக்கு எதிராக டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டு வரும் கமல் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திருந்தார். இந்நிலையில் தசரா தினத்தன்று தனது தனிக்கட்சியின் பெயரை கமல் வெளியிட உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. உள்ளாட்சி தேர்தலை கமலின் நற்பணி இயக்கத்தினரை களமிறக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தசரா அல்லது கமலின் பிறந்த நாளான நவம்பர் 7-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருக்கும் என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாக பரவி வருகின்றன. http://www.seith…
-
- 0 replies
- 639 views
-
-
100 ஆவது விபத்தை கேக் வெட்டி கொண்டாடிய தமிழக மக்கள் தமிழகத்தில் இராமேஸ்வரம் தீவையும் மண்டபம் நிலப்பரப்பையும் இணைக்கும் பாம்பன் பாலம் ரோட்டில் இது வரை 100 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதை அப் பகுதி மக்கள் கேக் வெட்டி வித்தியாசமான முறையில் நினைவு கூர்ந்துள்ளனர். 1988 ஆம் ஆண்டு ஒக்டோம்பர் மாதம் 2 ஆம் திகதி பாம்பன் பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது. பாம்பன் பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து, எதுவித பிரச்சினைகளுமில்லாது நடைப்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் குறித்த பாலத்தை புனரமைக்கும் விதமாக கடந்த ஜுன் மாதம் 2.6 ரூபா கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை துறையால் வழு வழுப்பு தார் பாதை போடப்பட்டது. புனருத்தாபன பணிகளுக்குப் பின்ன…
-
- 0 replies
- 583 views
-
-
‘அடுத்து தினகரன்தான்!’ டெல்லி சிக்னலுக்காக காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில், சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவியைப் பறித்துவிட்டோம். அடுத்து, தினகரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் ஆலோசித்துவருகிறது. டெல்லி கிரீன் சிக்னலுக்குக் காத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியுடன், ஓ.பன்னீர்செல்வம் அணி ஒன்றிணைந்தது. அதன்பிறகு, பொதுக்குழுக் கூட்டத்தை நடத்திய எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், சசிகலாவின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவியைப் பறித்ததோடு, கட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் தீர்மானங்களை நி…
-
- 5 replies
- 574 views
-
-
நீட் தேர்வு: அடித்தட்டு மாணவர்களுக்கான 'Acid Test' ! | Socio Talk நீட் தேர்வு Selection அல்லது Elimination'க்காக வைக்கப்பட்ட தேர்வா? சி.பி.எஸ்.சி பாடப்பிரிவை ஸ்டேட் போர்டு மாணவர்கள் எழுத வைத்தால் எப்படி வெற்றிப்பெறுவார்கள்? தீடீர் நீட் தேர்வு என்ற அறிவிப்பால் பல மாணவர்களின் கனவு கலைந்தது. நிர்மலா சீதாராமன், எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர் ஆகியோர் நீட் தேர்வு முடிவுக்கு வரும் என்று கூறிவிட்டு, இறுதியில் கை விரித்தனர். இவை அனைத்தும்தான் அனிதாவின் உயிரை பறித்தது.
-
- 0 replies
- 716 views
-
-
கர்நாடகா விடுதியில் குவிந்த தமிழக போலீஸார்! கர்நாடகா, குடகு பகுதியில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்கியிருக்கும் விடுதியில் தமிழக போலீஸார் சென்றுள்ளனர். கோவை பதிவு எண் கொண்ட தமிழக காவல்துறை வண்டிகள் விடுதிக்குச் சென்றுள்ளன. ஆட்சிக்கு எதிராக தினகரன் தரப்பு போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் எம்.எல்.ஏ-க்கள் விடுதியில் தமிழக போலீஸ் குவிந்துள்ளது. அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக தினகரன் தரப்பும் எதிர்க்கட்சியினரும் போர்க்கொடி தூக்கிவரும் சூழ்நிலையில், அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க-வின் தற்காலிகப் பொதுச்செயல…
-
- 3 replies
- 742 views
-
-
பெரும்பான்மையை நிரூபிக்கும் விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் தி.மு.க புதிய மனு சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. சார்பில் ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து தி.மு.க. சார்பில் 2 முறை மனு அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆளுநரைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவை 22 எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றுவிட்டதால், …
-
- 0 replies
- 612 views
-