Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சசிகலாவின் கணவர் கவலைக்கிடம்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சசிகலாவின் கணவரான நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்டது தொடர்பாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு லண்டனைச் சேர்ந்த பிரபல கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் முகம்மது ரீலா சென்னை வந்துள்ளதாகவும், ஓரிரு நாட்களுக்குள் கல்லீரல் மாற்று அறுவகை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடராஜனினுக்கு சிறுநீரக பாதிப்பு மற்றும் நுரையீரல் அடைப்பு இருந்ததால் அவர் தீவிர சிக…

  2. ”ஸ்டாலின் - எச்.ராஜா சந்திப்பில் மனசு என்ன பேசிக் கொள்ளும்? " - கேள்வி எழுப்பிய அரசியல் விமர்சகர் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு தமிழக அரசியல் களம் தலைகீழான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.தி.மு.க-வுக்கு அ.தி.மு.க தான் எதிர்க்கட்சி என்பதைவிட, தற்போது பி.ஜே.பிதான் எதிர்க்கட்சியாக உருவாகியுள்ளது. அண்மை காலமாக அ.தி.மு.க., தி.மு.க-வைச் சேர்ந்த தலைவர்கள் பரஸ்பரம் விமர்சித்துக் கொள்வதை விட , தி.மு.க தலைவர்களும் பி.ஜே.பி தலைவர்களும் ஒருவருக்கு ஒருவர் கடுமையான விமர்சனங்களை அள்ளி வீசி வருகின்றனர். இந்த நிலையில் பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் எச்.ராஜா தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் அவர்களைச் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் களத்தில் கவனம் பெற்ற…

  3. ‛இனியும் இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது': நள்ளிரவில் ஜெ., நினைவிடத்தில் தீபா சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., நினைவிடத்தில், எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவையின் நிறுவனர் தீபா, அவரது கணவன் மாதவன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். நள்ளிரவு சுமார் 12.20 மணியளவில் மரியாதை செலுத்திய தீபா, பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: அ.தி.மு.க.,வை காக்க வேண்டும் என்பதே என் லட்சியம். காவல்துறையின் கட்டுப்பாட்டில் தற்போது தமிழகம் செயல்பட்டு வருகிறது. மக்களுக்காகவே என் அரசியல் செயல்பாடுகள் இருக்கும். நீட் தேர்வை தமிழக மீனவர்கள் மீது திணிக்கக்கூடாது. …

  4. ‘அடுத்து தினகரன்தான்!’ டெல்லி சிக்னலுக்காக காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில், சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவியைப் பறித்துவிட்டோம். அடுத்து, தினகரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் ஆலோசித்துவருகிறது. டெல்லி கிரீன் சிக்னலுக்குக் காத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியுடன், ஓ.பன்னீர்செல்வம் அணி ஒன்றிணைந்தது. அதன்பிறகு, பொதுக்குழுக் கூட்டத்தை நடத்திய எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், சசிகலாவின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவியைப் பறித்ததோடு, கட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் தீர்மானங்களை நி…

    • 5 replies
    • 579 views
  5. நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த மாணவி அனிதா தற்கொலை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, தூக்கிலிட்டு தற்கொலைசெய்துகொண்டார். பிளஸ்டூ தேர்வில் 1176 மதிப்பெண் எடுத்திருந்தும் தமக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காது என்ற காரணதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக உறவினர்கள் கு…

  6. இரட்டை இலை சின்னம் யாருக்கு?- தேர்தல் ஆணையம் அக்.31க்குள் இறுதி முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு உயர் நீதிமன்ற மதுரை கிளை | கோப்புப் படம். இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து தேர்தல் ஆணையம் அக்.31க்குள் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''அதிமுகவின் அதிகாரபூர்வ சின்னமாக 45 ஆண்டுகளாக இருந்து வரும் இரட்டை இலையை அக்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக தேர்தல் ஆணையம் முடக்கியது. அதிமுக நிர்வாகக் குழு தேர்தல் நடத்தி அதில் வெற்றி பெறும் அணியிடம் இரட்…

  7. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிபிஐ தன்னிடம் விசாரிக்க வேண்டுமே தவிர தன் மகன் கார்த்தி சிதம்பரத்தை துன்புறுத்தக் கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். வியாழக்கிழமையன்று கார்த்தி சிதம்பரத்தை நேரில் ஆஜராகி ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணையை எதிர்கொள்ள சிபிஐ அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர் அனைவரையும் விடுவித்து விசாரணையையே முடிக்குமாறு உத்தரவிட்டிருந்ததையடுத்து கார்த்தி சிதம்பரம் ஆஜராக மறுத்து விட்டார். ஆனால் இது உண்மையல்ல விசாரணை இன்னும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது என்று சிபிஐ தரப்பில் கார்த்தி சிதம்பரம் கூற்றை மறுத்தனர். “சிபிஐ என்னையே விசாரிக்க வேண்டுமே தவ…

  8. ரிசார்ட்டில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ-க்கள் குறித்து கமல் கடும் விமர்சனம் தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள், தற்போது கர்நாடகாவில் இருக்கும் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார். ஜாக்டோ - ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களுக்கு, போராட்ட நாள்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இன்று நீதிமன்றமும் தடையை மீறி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துவது குறித்து தங்களது கண்டனத்தைப் பதிவுசெய்தனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இதுகுறித்து தனது ட்விட்…

  9. செப். 20 வரை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உயர் நீதிமன்றம் தடை! செப்டம்பர் 20-ம் தேதி வரை பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்ததைத் தொடர்ந்து 19 எம்.எல்.ஏ-க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருந்துவருகின்றனர். எனவே, சபாநாயகரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களைத் தகுதி நீக்கம் செய்வதற்கு எடப்பாடி அணி முயற்சி செய்துவருகிறது. எனவே, சபாநாயகர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் வழக்கு தொடர்ந்தனர். அதுதொடர்பான வழக்கு…

  10. பெங்களூரு சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை தொடர்கிறதா? - கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி மறுப்பு சசிகலா | கோப்புப் படம் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு விதிமுறையை மீறி, தொடர்ந்து சிறப்பு சலுகை வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா, ‘சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு அறை, சிறப்பு உணவு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படு…

  11. நடிகர் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து கமல்ஹாசன் விமர்சித்து வருகிறார். தினந்தோறும் நடக்கும் சமூக பிரச்சனைகளுக்கு எதிராக டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டு வரும் கமல் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திருந்தார். இந்நிலையில் தசரா தினத்தன்று தனது தனிக்கட்சியின் பெயரை கமல் வெளியிட உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. உள்ளாட்சி தேர்தலை கமலின் நற்பணி இயக்கத்தினரை களமிறக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தசரா அல்லது கமலின் பிறந்த நாளான நவம்பர் 7-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருக்கும் என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாக பரவி வருகின்றன. http://www.seith…

  12. கர்நாடகா விடுதியில் குவிந்த தமிழக போலீஸார்! கர்நாடகா, குடகு பகுதியில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்கியிருக்கும் விடுதியில் தமிழக போலீஸார் சென்றுள்ளனர். கோவை பதிவு எண் கொண்ட தமிழக காவல்துறை வண்டிகள் விடுதிக்குச் சென்றுள்ளன. ஆட்சிக்கு எதிராக தினகரன் தரப்பு போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் எம்.எல்.ஏ-க்கள் விடுதியில் தமிழக போலீஸ் குவிந்துள்ளது. அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக தினகரன் தரப்பும் எதிர்க்கட்சியினரும் போர்க்கொடி தூக்கிவரும் சூழ்நிலையில், அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க-வின் தற்காலிகப் பொதுச்செயல…

  13. 100 ஆவது விபத்தை கேக் வெட்டி கொண்டாடிய தமிழக மக்கள் தமிழகத்தில் இராமேஸ்வரம் தீவையும் மண்டபம் நிலப்பரப்பையும் இணைக்கும் பாம்பன் பாலம் ரோட்டில் இது வரை 100 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதை அப் பகுதி மக்கள் கேக் வெட்டி வித்தியாசமான முறையில் நினைவு கூர்ந்துள்ளனர். 1988 ஆம் ஆண்டு ஒக்டோம்பர் மாதம் 2 ஆம் திகதி பாம்பன் பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது. பாம்பன் பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து, எதுவித பிரச்சினைகளுமில்லாது நடைப்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் குறித்த பாலத்தை புனரமைக்கும் விதமாக கடந்த ஜுன் மாதம் 2.6 ரூபா கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை துறையால் வழு வழுப்பு தார் பாதை போடப்பட்டது. புனருத்தாபன பணிகளுக்குப் பின்ன…

  14. அ.தி.மு.க பொதுக்குழு: முதல்வர், துணை முதல்வர் வருகை - 14 தீர்மானங்கள் இடம்பெறுவதாக தகவல் தமிழக அரசியலின் பரபரப்பான சூழலில் அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை: அ.தி.மு.க அம்மா மற்றும் புரட்சித்தலைவி அம்மா அணிகள் இணைந்த பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. …

  15. நீட் தேர்வு: அடித்தட்டு மாணவர்களுக்கான 'Acid Test' ! | Socio Talk நீட் தேர்வு Selection அல்லது Elimination'க்காக வைக்கப்பட்ட தேர்வா? சி.பி.எஸ்.சி பாடப்பிரிவை ஸ்டேட் போர்டு மாணவர்கள் எழுத வைத்தால் எப்படி வெற்றிப்பெறுவார்கள்? தீடீர் நீட் தேர்வு என்ற அறிவிப்பால் பல மாணவர்களின் கனவு கலைந்தது. நிர்மலா சீதாராமன், எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர் ஆகியோர் நீட் தேர்வு முடிவுக்கு வரும் என்று கூறிவிட்டு, இறுதியில் கை விரித்தனர். இவை அனைத்தும்தான் அனிதாவின் உயிரை பறித்தது.

  16. பெரும்பான்மையை நிரூபிக்கும் விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் தி.மு.க புதிய மனு சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. சார்பில் ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து தி.மு.க. சார்பில் 2 முறை மனு அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆளுநரைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவை 22 எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றுவிட்டதால், …

  17. 'ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் பணியில் இறங்கிவிட்டேன்' - பொதுக்குழுவுக்கு எதிராக கொந்தளித்த தினகரன் அ.தி.மு.க பொதுக்குழு குறித்து தினகரன் இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ பொதுக்குழு என்ற பெயரில் அவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களைப் பார்த்தேன். நான் ஏற்கெனவே சொன்னதுபோல, கட்சியின் பொதுக்குழுவை பொதுச் செயலாளர்தான் கூட்ட முடியும். அவர் பணியாற்ற முடியாததால், துணை பொதுச் செயலாளர் நான்தான் கூட்ட முடியும். அவர்கள் கூட்டி இருப்பது பொதுக்குழுவே அல்ல. அவர்கள் எந்தத் தீர்மானம் நிறைவேற்றினாலும் அது சட்டப்படி செல்லாது என நேற்றே நீதிமன்றம் சொல்லிவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டால்தான் இவர்கள் தீர்மானம் செல்லும். இவர்களைப் பதவியில் வைத்…

  18. பெரும்பான்மையை நிரூபிக்க தயாராகும் பழனிசாமி அரசு: விரைவில் ஆளுநர் உத்தரவிட வாய்ப்பு? எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல், அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு வாபஸ் உள்ளிட்ட சிக்கல்களுக்கிடையில் விரைவில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு ஆளுநர் உத்தரவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பின், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர் முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரைச் சந்தித்து கடிதம் அளித்துள்ளனர். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின் றனர். சமீபத்தில் தினகரன் தலைமையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை எம்எல்ஏக்கள், எம…

  19. அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை..! எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடும் பொதுக்குழு கூட்டத்துக்கு பெங்களூரு மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முன்னதாக, இதுதொடர்பாக மாலை 7.15 மணிக்குத் தீர்ப்பளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க பொதுக்குழு நாளை சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுக்குழுக்கு தடைகோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த வழக்கு நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என்று தெரிவித்தார். மேலும் எம்.எல்.ஏ வெற்றிவேலுக்கு ஒரு லட்ச ரூபாய் அபரா…

  20. திருச்செந்தூரில் பொன்னாரைச் சந்தித்து கருணாஸ் வைத்த கோரிக்கை திருச்செந்தூரில், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை திருவாடானைத் தொகுதி எம்.எல்.ஏ., கருணாஸ், தனியாகச் சந்தித்து 15 நிமிடங்கள் வரை ரகசியமாகப் பேசியது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. பொன்.ராதாகிருஷ்ணன், நிதித்துறை இணை அமைச்சராகக் கூடுதல் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூருக்கு வந்தார். கோயில் வளாகத்திலுள்ள விருந்தினர் மாளிகையில், கட்சியினரின் வரவேற்புக்குப் பிறகு, கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு, நாகர்கோயிலுக்குப் புறப்படத் தயாராகும் நேரத்தில், திருச்செந்தூரில் நடந்த ஒரு திருமணவிழாவில் கலந்துகொண்ட பிறகு, ஓய்வ…

  21. சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பில்லை: பொதுக் குழுவுக்கு தயாராகும் பழனிசாமி அணி - உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி அதிமுகவில் முதல்வர் பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சிறப்பு அழைப்பாளர்கள் இன்றி பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது. அதிமுகவில் தற்போது முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து, அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை வரும் 12-ம் தேதி கூட்டுவதாக அறிவித்துள்ளனர். அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பர் 28-ம் தேதி பொதுக்குழு கூடியது. அப…

  22. 'வீரத்தின் உச்சகட்டம் அஹிம்சை... அதன் விதை பயமிலாக் கேள்வி' - கமல் ட்வீட் பிக் பாஸ் நிகழ்ச்சி, அ.தி.மு.க அமைச்சர்களுடன் மோதல், ட்விட்டர் கருத்துகள் என்று கமல் தற்போது செம ஆக்டிவாக இருக்கிறார். சமூக பிரச்னைகள் குறித்து தொடர்ந்து ட்விட்டர் மூலமாக கருத்து தெரிவித்து வருகிறார். இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு கேரள முதல்வர் பினராயி விஜயனை கமல் சந்தித்தார். தமிழகத்தையே சோகத்தில் மூழ்கடித்துள்ள அனிதாவின் மரணம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, “இந்த சட்டதை உருவாக்கியது நாம்தான். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தவறென்றால் மாற்றிக்கொள்ளுங்கள். ஆனால், அதை அவமானம் செய்வதும், தவறாகப் பேசுவதும் கூடாது. விவாதங்கள் மூலம் மாற்ற…

  23. அ.தி.மு.க-வை இயக்குகிறதா பி.ஜே.பி ? உண்மை உணர்த்தும் 18 'பரபர' சம்பவங்கள்! #Vikatan Exclusive ‘‘தமிழக அரசின் ரிமோட் கன்ட்ரோல் தற்போது பி.ஜே.பி-யிடம் இருக்கிறது.’’ ‘‘மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் அ.தி.மு.க அரசு இயங்குகிறது.’’ "தனக்கு சலாம் போடும், தலையாட்டும் பொம்மைகளுக்காக அ.தி.மு.க-வை மறைமுகமாக ஆட்டிவைக்கிறது பி.ஜே.பி.’’ - தமிழக அரசியலில் இப்போது நடக்கும் அத்தனை அக்கப்போர்களுக்கும் பின்னால் வைக்கப்படும் விமர்சனங்கள்தான் இவை! ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி அணிகள் இணைந்தபோது, ‘‘டெல்லியிலிருந்து கதை, வசனம், இயக்கம் நடக்கிறது. அதற்கு ஏற்றபடி ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அ.…

  24. தினகரனுக்கு ஸ்டாலின் அனுப்பிய மெசேஜ்..! #VikatanExclusive இன்று அணி அணியாகப் பிரிந்துள்ள அ.தி.மு.க-வுக்குள், பிரதான அணியாக இருக்கும் டி.டி.வி. தினகரன், சமீபத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வேகமானதாகவும், தீர்க்கமானதாகவும் உள்ளது. தனக்குள்ள செல்வாக்கை உணர்த்துவதற்காக, மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்திய அவர், தற்போது பொதுப்பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். நீட் தேர்வால் மருத்துவ இடம்கிடைக்காமல் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, "மாணவி அனிதா பிளஸ்-2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்ற போதிலும், நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்காததல், தற்கொலை செய்…

  25. மிஸ்டர் கழுகு: உட்கட்சி விவகாரம் என்று நான் சொல்லவே இல்லை! தினகரனிடம் பல்டி அடித்த கவர்னர் இரண்டு நாள்கள் இரவு பகலாக தினகரனின் பெசன்ட் நகர் வீட்டை வட்டமடித்த கழுகார், தூக்கமில்லாமல் சிவந்த கண்களுடன் அலுவலகம் வந்தார். திடீரென போனில் அழைப்பு வர, ‘‘ஒரு மணி நேரத்தில் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிய கழுகார், சொன்னதுபோலவே வந்தார். ‘‘ஒன்றுமில்லை... கவர்னரை தினகரன் சந்தித்த நேரத்தில் கிண்டி கவர்னர் மாளிகையை வட்டமடித்துவிட்டு வந்தேன்’’ என்றார். ‘‘தினகரனின் ஆட்டம் வேகம் பிடித்துள்ளதே?” ‘‘கடந்த வாரம் முழுவதும் தினகரன் தீவிர ஆலோசனையில் இருந்தார். தனக்கு நெருக்கமானவர்களையும், சட்ட வல்லுநர்களையும் அழைத்து பல விஷயங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.